அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
நாங்கள் கூறுகின்ற சூட்ச்சுமத்தை யாரும் புரிந்துகொள்ளவே இல்லை. ஒரு மனிதன் தன் தேவையை மறந்துவிட்டு, பிறருக்கு சேவையையும், பொதுநலத் தொண்டையும் செய்யத் துவங்கும்போழுதே, அவன் தேவையை இறைவன் கவனிக்கத் தொடங்கிவிடுவார் என்பதே சூட்ச்சுமம். எனவே, தன்னைத்தான், தனக்குத்தான், தன் குடும்பத்தைத்தான், பார்ப்பதை விட்டுவிட்டு, தான் , தான், தான், தான் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இறைவனைத்தான், இறைவனின் கருணையைத்தான், இறையின் அன்பைத்தான், இறையின் பெருமையைத்தான், இறையின் அருளைத்தான், இறையின் பெரும்தன்மையைத்தான் புரிந்துகொண்டால், இந்தத் "தான்" ஓடிவிடும், இந்தத் "தான்" ஓடிவிட்டால், அந்தத் "தான்" தன்னால் வந்துவிடும். அந்தத் "தான்" வந்துவிட்டால், எந்தத்"தானும்" மனிதனுக்குத் தேவை இல்லை.
(இதே கருத்தை வெளிப்படுத்தும் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த மற்றொரு வாக்கு உங்கள் பார்வைக்கு)
அப்பனே இங்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அப்பனே!!!!....
"""""'தான் மட்டும் வாழ வேண்டும் தன் சொந்த பந்தங்கள் வாழ வேண்டும் என்று நினைக்க கூடாது அப்பனே!!!!!!!
அங்கு அப்பனே!!!!!
வாருங்கள் (என்று அழைத்து) பின் முதலில் அவந்தனுக்கு கொடுத்து பின் யார் ஒருவன் இருக்கிறானோ!!!!! அவன் தானப்பா!!!!! மனிதன்.
(விருந்துகளில் யாராவது இயலாதவருக்கு வரவழைத்து அன்னத்தை முதலில் அளிப்பவர்)
ஆனால் அப்படிப்பட்ட மனிதன் எங்கு?????????! இருக்கின்றானப்பா?????????
அப்பனே இவை போன்று அப்பனே எதை என்று அறிய அறிய சொல்லிக்கொடுத்திருக்கின்றேன் அப்பனே!!!!!!!!! (நமக்கு)
பிள்ளைகளுக்கு சொல்வதைப்போலே யான் ஒவ்வொரு வாக்கிலும் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே!!!!
தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!
அங்கு மனது எங்கு???? போய்விட்டதப்பா?????? (இரங்கும் மனது)
அவ் (திரு) மணத்தில் எதை என்று கூட எத்தனை பேர்கள்????????? ஒருவனுக்காவது அந்த மனது இல்லையப்பா.
அதனால் அப்பனே பின் பிள்ளையோன் தலை குனிந்து இப்படியெல்லாம் இருக்கின்றார்களே!!!!!!! மனிதர்கள்!!!!
இவர்களுக்கு கொடுத்தாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று திரும்பி பின் போய்விட்டான் அப்பனே!!!
அப்பனே பார்த்துக் கொண்டீர்களா அப்பனே!!!!
No comments:
Post a Comment