“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, September 17, 2023

சித்தர்கள் ஆட்சி - 154 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-


"உலகியல் ரீதியான வெற்றி ஒரு மனிதனுக்கு இல்லையென்றால் அத்தனை எளிதாக விட்டுவிடுகிறானா? போராடிப் போராடி, அது வேண்டுமென்று அதன் பின்னால் செல்வது போல, நல்ல காரியங்களை, நல்ல அறச்செயல்களை, நல்ல தர்மங்களை தொடர்ந்து செய்ய, விதியே, ஒரு மனிதனுக்கு தவறாக எழுதப்பட்டிருந்தாலும், (அதாவது, அவன் இந்தப் பிறவியில் தவறே செய்து வாழவேண்டும் என்று இருந்தாலும்) கூட, அந்த விதி மெல்ல மெல்ல மாறத்துவங்கும். இஹுதொப்ப, ஒருவன் பருக வேண்டிய மோரிலே சிறிதளவு உப்பை சேர்க்கலாம். தவறுதலாக அதிக அளவு உப்பை சேர்த்துவிட்டால், "இல்லை இல்லை! இதை குடிக்க முடியவில்லை. உப்பின் சுவைதான் தூக்கலாக இருக்கிறது.  என்ன செய்வது என்று தெரியவில்லை! எனவே இதில் உள்ள உப்பை மட்டும் பிரித்துத் தா! என்றால், அது கடினம். அதற்க்கு பதிலாக என்ன செய்யலாம். இன்னும் சிறிதளவு மோரை ஊற்றி, உப்பின் அளவை அதன் மூலம் குறைக்கலாம். எனவே, ஏற்கனவே செய்த பாபங்களின் அளவை ஒரு மனிதன் பிறப்பிலிருந்து பிரிப்பது கடினம். ஆனால் மேலும், மேலும் புண்ணியத்தை சேர்க்க, பாவங்களின் அளவு குறையும், என்பதை  புரிந்து கொண்டிட வேண்டும். அதற்குத்தான் ஜீவ அருள் ஓலையிலே புண்ணியம், புண்ணியம், புண்ணியம், புண்ணியம் என்று ஒவ்வொரு மனிதனையும் அறச் செயல் செய்ய நாங்கள் தூண்டிக் கொண்டே இருக்கிறோம். ஏன் என்றால், இந்த புண்ணியத்தின் அளவு அதிகமாக, அதிகமாக, கரிக்கின்ற உப்பைப் போன்ற பாபங்களின் அளவு சரி விகிதமாகிவிடும் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்."

No comments:

Post a Comment