“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, September 6, 2023

சித்தர்கள் ஆட்சி - 121: இடைக்காடர் , அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - ராசியில் இருந்து ஜாதகத்தில் சனி பகவான் கோச்சாரத்தில்

 



சித்தன் அருள் - 1343 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தமுனி!

17/3/2023 அன்று இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: காளிகாம்பாள் சக்தி பீடம் பாவாகட் காளிகா தேவி கோயில்  குஜராத். 

ஆதி அந்தம் இல்லாதவனை அம்மையையுமே அப்பனையுமே பணிந்து பரப்புகின்றேன் இடையன்!!!!!!! 

நிமித்தம் நிமித்தம் காட்டி. மனிதனால் எதையுமே செய்ய முடியவில்லை.... எதையுமே செய்ய முடியவில்லை!!!!

ஏன் ?என்பதால் ஆனாலும் கிரகங்களை பற்றியும் கூட அவை செய்யும் !!!!!இவை செய்யும்!!!! இன்னும் சனியவன் வந்து விட்டால் கண்டங்கள்!!! கஷ்டங்கள்!!! இன்னும் இன்னும் ஏராளம் !!!!என்று மனிதனுக்குள் பயம்தான் ஏற்படுகின்றது!!!!

ஏன்? தெரியாமலே கேட்கின்றேன்!!! 

நீதி நேர்மை தவறாமை!!! பொய் சொல்லாமை...!!! பொறாமை குணம் இல்லாமல் பிற உயிர்களை கொல்லாமை..ஆக இருந்தால் ஏன்? நீ பயப்பட வேண்டும் ???மனிதா!!!!!!

சிறிது யோசித்துக் கொள்!!!!

அனைவரும் சொல்கின்றார்கள் நிச்சயம் எதை என்று அறிய அறிய """"""ஏழரையன் !!!!!! (சனி பகவான்) வந்து விட்டான்!!!! வந்துவிட்டான் கஷ்டங்கள்!!! கஷ்டங்கள்!!! என்று!?!!

ஆனால் நீ சரியாக இருந்தால் கஷ்டங்கள் நிச்சயம் வராது மனிதா!!!!!

 புரிந்துகொள் இதனை!!!!!

நிச்சயம் எதனை என்று கூட ஆனாலும் மக்கள் எதை எதை என்று அறிந்து அறிந்து இதனை ஏற்கனவே இவை என்று ஓர் உரையில் ஒரு ஞானி தெரிவித்து விட்டான் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்!!!!

(இடைக்காடர் சித்த முனி மனிதர்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் ஒன்றாம் இடம் தொட்டு பன்னிரண்டாம் இடம் வரை கோச்சாரத்தில் மாறி மாறி வருகின்ற பொழுது மனிதர்கள் அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த வாக்கில் தெளிவாக குறிப்பிடுகின்றார்)

நிச்சயம் ஆனாலும் அறிந்து அறிந்து பின் ஒன்றும் அதாவது ஒன்றாம் இடமும் இரண்டாம் இடமும் சனியவனுக்கு நல்லதில்லையாம்!!!!!!!!!?!!!!!!

ஆனாலும் இதை மக்கள் பரப்புகின்றனர்!!!!!

ஆனாலும் மூன்றில் வந்து விட்டால் யோகங்களாம்!!!!!!!!?!!!!!!

எப்படி சனியவன் கொடுப்பான்??????

மூன்றில் வந்து விட்டால் யோகங்கள் எதை என்று அறிந்து அறிந்து !!!!





ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்திய பிரம்ம ரிஷி பாதம் காப்பு
இடைக்காடர் சித்த முனி மனிதர்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் ஒன்றாம் இடம் தொட்டு பன்னிரண்டாம் இடம் வரை கோச்சாரத்தில் மாறி மாறி வருகின்ற பொழுது மனிதர்கள் அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த வாக்கில் தெளிவாக குறிப்பிடுகின்றார்
ஜாதகத்தில் சனி பகவான் கோச்சாரத்தில்இடைக்காடர் சித்தர் அருள் அறிவுரை வாக்கு
1 ஆம் இடம் / ராசிசனிபகவான் ஜாதகத்தில் 1வீட்டில் இருக்கும் போது

ஒன்றில் நின்று விட்டால் ஒன்றிற்கு உரியவன் தந்தையானவனே அதாவது உன்னை ஈன்றெடுத்தானே எதை என்று அறிய அறிய தந்தையானவனே!!!!

அத் தந்தையானவனுக்கு மதிப்புக்கள் கொடுத்தால் தான் எதை என்று அறிந்து அறிந்து அதனால் சில புண்ணியங்கள் !!!
ராசியில் இருந்து 2 ஆம் இடம்சனிபகவான் ஜாதகத்தில் 2 ம் வீட்டில் இருக்கும் போது

இதில் இரண்டாம் இடமும் கூட தரித்திரங்கள் உண்டாகுமாம்!!!!! மனிதர்கள் சொல்கின்றார்கள்!!!!

ஆனால் இரண்டாம் இடத்தை எதை என்று அறிந்து அறிந்து எவை என்று புரிய புரிய இரண்டும் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட இன்னும் எவை என்று புரியாமலே தாயவளை குறிக்கக் கூடியது!!!! ஆனாலும் ஈன்றெடுத்த தாயும் தந்தையுமே முதன்மையானவர்கள் !!!! இதை அறிந்து அறிந்து மனித பிறப்பில் இதை நன்குணர்ந்து அவர்களுக்கு மதிப்பு கொடுத்தால் தான் மூன்றில் எதை என்று அறிந்து அறிந்து சனீஸ்வரன் கொடுப்பானே தவிர!!!! நிச்சயம் பின் எவை என்று அறிய அறிய மூன்றில் வந்தாலும் கஷ்டங்கள் தான் ஏற்படும் என்பது உறுதி!!!!!!

அறிந்து அறிந்து நிச்சயம் ஒன்றில் எவை என்று அறிய அறிய முதல் அதாவது எவை என்று பின் முதலாம் வீடு எதை என்று அறிந்து அறிந்து சந்திரனுக்கே!!!!!!

ஆனாலும் இவை என்று அறியாத அளவிற்கும் கூட என்னென்ன தேவைகள் பின் அதாவது நிச்சயமாய் பின் எவை என்று கூட மாமிசத்தை உட்கொள்ளக் கூடாது!!!! இப்படி ஜீவகாருண்யாத்தை கடைப்பிடித்தால் சூரியனுக்கு மிகவும் பிடிக்கும்!!!

இரண்டாவதாக வந்தால் நிச்சயம் அனைத்து உயிர்களும் கூட அம்மா என்று அழைக்கின்றது அதனையும் கூட கொன்று சாப்பிட்டார்கள் எதை என்று அறிய மானிட ஜென்மங்கள்!!!

இதனால் மூன்றினில் நிச்சயம் அதாவது சனிபகவான் ஒன்றும் செய்ய மாட்டான்!!!

ஒன்று இரண்டு இதில் என்ன செய்ய வேண்டும் என்பதை யான் தெரிவித்து விட்டேன்!!!!

( சனிபகவான் ஜாதக கட்டத்தில் ஒன்றாம் இடம் இரண்டாம் இடத்தில் வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து விட்டார்)

அன்னை தந்தையரை வணங்குதல் எதையென்று குருவை வணங்குதல்!!!! எதை என்று கூட பின் பழமையை கடைப்பிடித்தல்!!! பாசம் பொழிதல் இவையெல்லாம் இருந்தால் மூன்றில் வந்தால் சனியவன் நிச்சயம் நல்லதை செய்வான் அதை தவிர்த்து விட்டு ஒன்று இரண்டு நீங்கள் தவறு செய்தீர்களானால் மூன்றில் நிச்சயம் தவறுதான் நடைபெறும் !!! ஆனால் சில மனிதர்கள் மூன்றில் வந்து விட்டதே எந்தனுக்கு சனியவன் ஒன்றும் செய்யவில்லையே எதை என்று அறிய அறிய !!!!

""""""நீ செய்தால் தான் சனியவனும் சரியாக செய்வான்!!!!!!!!!

நீயே சரியில்லை!!!!

அப்படி எதை என்று அறிய அறிய ஆனாலும் கொடுப்பான்!!!!! சரி பார்ப்போம்!! என்று!!!

ஆனால் எதை என்று அறிய அறிய பின் மூன்றினில் பின் தைரியமாக எதை என்று அறிய அறிய இறைவனிடத்தில் சேருதல் இறைவனை பிரார்த்தித்தல்!!!

அதாவது ஒன்று இரண்டு மூன்று இவை தன் குரு எவை என்று அறிய அறிய இக் குருவை சரியாக பயன்படுத்திக்கொண்டு எதை என்று அறிய அறிய பின் நல் முறையாகவே வந்தால் எதை என்று அறியாது பின் ஆனாலும் இவை ஒன்றும் இரண்டும் சரியாக பயன்படுத்திவிட்டு
ராசியில் இருந்து 3 ஆம் இடம்மூன்றாவது நீ சரியாக பயன்படுத்தவில்லை என்றால் ஆனாலும் நிச்சயம் சனியவன் ஏதாவது ஒரு ஆறுமாதங்களில் அதாவது எவை என்று அறிய அறிய கொடுப்பான்!!!!!!

அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பின் நான்கில் நுழையான்!!!!!!! எதை என்று அறிய அறிய ஆனாலும் அங்கேயும் சில சந்தர்ப்பங்கள் கொடுப்பான் எதை என்று அறிய அறிய!!!!
ராசியில் இருந்து 4 ஆம் இடம்அம்மைக்கு உதவி செய் அதாவது பெற்றெடுத்த தாய்க்கு உதவி செய்!!! என்று நான்காம் இடத்தில் வந்து !!!!

ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து பின்பு எவை என்று அறிய பின் திட்டி தீர்ப்பான் தாயவளை கூட!!!!!!

ஆனால் ஏதும் இயலாத அதாவது கை கால் ஊனம் எதை என்று அறிய அறிய இவர்களுக்கும் உதவிகள் செய்தல்!!!!! இயலாதவருக்கு அப்பகுதியில் உதவிகள் செய்தால் நிச்சயம் நான்கிலும் கூட நன்மைகள் செய்வான்!!

அப்படி இல்லை என்றால் கண்டம் ஏற்படுத்தி விடுவான்!!!!

இதுதான் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து புரிந்து கொண்டாயா???

நான்கில் வந்துவிட்டால் எதை என்று அறிந்து அறிந்து கண்டம் கண்டம் என்று சொல்கின்றார்கள் அப்பனே அனைத்தும் உன்னிடத்தில் இருந்து கொண்டு சனியவனை குறை சொல்லக்கூடாது அப்பனே!!!

சனியவனை பற்றியும் யான் நன்கு அறிவேன்!!!!

அவை மட்டுமில்லாமல் எதை என்று அறிந்து அறிந்து இவ் நான்கிலும் கூட நீ சரியாக பயன்படுத்திக் கொண்டால் மாதா!!! பிதா!! குரு!! தெய்வம்!!!!
எதை என்று அறிய அறிய ஏற்கனவே ஞானி சொல்லி விட்டான் அனைவரும் இதை உணர்ந்ததே!!!!!
ராசியில் இருந்து 5 ஆம் இடம்இதை நீ சரியாக பயன்படுத்தி விட்டால் ஐந்தில் எவை என்று சனியவன் வரும்பொழுது எப்படி எல்லாம் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பதை கற்பிப்பான்!!!
ராசியில் இருந்து 6 ஆம் இடம்எதை என்று அறிந்து அறிந்து அப்படி எல்லாம் செய்துவிட்டால் பின்பு ஆறில் நுழைவான் அனைத்தும் கொடுப்பான் எதை என்று அறிய அறிய!!!

எவை என்று புரியப் புரிய இப்படியே எதை என்று கூட ஆறில் வரும் பொழுது அனைத்தும் வாரி வழங்குவான் எதை என்று கூட அப்படி எதை என்று அறிய அறிய பின் ஐந்தில் எவை என்று கூட எதை என்று பின் நிமித்தம் காட்டி அனைத்தும் உரைத்து வந்து ஆறில் பார்ப்பான்!!!

என்னதான் செய்கின்றான்??? பின் அனைத்தும் கொடுப்போம் எதை என்று அறிந்து அறிந்து எதை என்று இவந்தனே!!!!!! வைத்துக் கொள்கின்றானா!!!!!!???

பின்பு அனைவருக்கும் மேல்நோக்கி பின் அனைத்தும் தருகின்றானா என்று எல்லாம் பார்ப்பான்!!!!( சனிபகவான் ஆறாம் இடத்திற்கு வந்து அனைத்தும் கொடுத்துவிட்டு தானம் தர்மம் செய்கின்றார்களா என்று பார்ப்பார்)

அப்படி இல்லை என்றால் பின் ஏழில் வருவான் பிரச்சனைகளை ஏற்படுத்துவான்!!!
ராசியில் இருந்து 7 ஆம் இடம்அப்படி இல்லை என்றால் பின் ஏழில் வருவான் பிரச்சனைகளை ஏற்படுத்துவான்!!!

எதை என்று அறிந்து அறிந்து பார்த்தீர்களா எதை என்று அறிய அறிய நீ என்னென்ன செய்கின்றாயோ அதனைத்தான் பின் எவை என்று அறிய அறிய பின் ஏழில் வரும் பொழுது எவை என்று அறிய அறிய நிச்சயம் மணங்களை(திருமணம்) செய்வான்!!!!

ஏனென்றால் ஆறு வீடுகளையும் கூட சரியாக கவனித்து வந்தால் நிச்சயம் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய நிச்சயம் 7ல் மணத்தை( திருமணம்) அதாவது உயர்ந்த இடத்தில் எவை என்று அறிய அறிய நிச்சயம் இறைவன் அருளால் எவை என்று அறியாமலே வரும்!!!!

அதை விட்டுவிட்டு சென்று விட்டால் நிச்சயம் மனைவியே உந்தனுக்கு எமனாக மாறிவிடுவாள்!!!!

தெரிந்து கொண்டீர்களா!?!!

எவை என்று அறிய அறிய இப்படியாகி விட்டு எதை என்று அறிய பின் எவை என்று அறிய எட்டுக்குள் வரும் பொழுது நிச்சயம் தரித்திரம் அப்பா!!!!
குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு!!!!!!
ராசியில் இருந்து 8 ஆம் இடம்தரித்திரம் இவை எதை என்று அறிய அறிய பிரிவுகள் சண்டைகள்!!!! சச்சரவுகள்!!!! அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

எதை என்று கூட அகத்தியன் கூட......... உரைக்கின்றேன் எதை என்று அறிய அறிய அப்பனே இடைக்காடனும் எவை என்று அறிந்து அறிந்து சொல்லிட்டான் அப்பனே!!! யானும் எவை என்று கூட சிறிது சொல்கின்றேன் அப்பனே!!!

எவை என்று எவை என்று புரிய புரிய அப்பனே நல்விதமாகவே மாற்றங்கள் ஏற்படுவதற்கு அப்பனே எட்டு எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அஷ்ட திக்குகளிலும் கூட எவை செய்ய வேண்டும் என்பதை சரியாக ஒருவன் பயன்படுத்திவிட்டால் அப்பனே அவந்தன் எவை என்று கூட.... பின் சனியவன் நவ ஒன்பதாம் வீட்டிற்கு வந்து விடுவான் அப்பனே!!!!

(மனிதர்கள் சனிபகவான் ஜாதகத்தில் 8ம் இடத்தில் கோச்சாரத்தில் வரும் பொழுது எட்டு திசைகளிலும் தன் தாராள குணத்துடன் தேடி தேடி நன்மைகளை உதவிகளை செய்ய வேண்டும்)
ராசியில் இருந்து 9 ஆம் இடம்இப்படி செய்தால் அப்பனே சனியவன் அனைத்து நலன்களையும் தந்து விடுவான் அப்பனே!!!!! இறை தரிசனத்தையும் காண வைப்பான் என்பேன் சனியவன் எவை என்று அறிய அறிய அப்பனே!!!!

அதனால் எட்டிலும் கூட நீங்கள் தகுதிகள் இல்லை அப்பா!!!!!

அப்படி இருக்க அப்பனே 9 இல் நுழையும் பொழுது எப்படித்தான்????? இறைவன் தரிசனம் காட்டுவான் ????அப்பனே!?!!!!!!

எவை என்று அறிய அறிய ஆனால் அப்பனே!!! ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பான் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய இவந்தன் ஒன்பதில் எதை என்று அறிய அறிய பின்பு பார்ப்போம்!!!! இறையாசிகள் கொடுக்கச் செய்வோம் என்று எதை என்று அறிந்து அறிந்து கொடுப்பான் அப்பனே!!!! சனியவனும் கூட!!!!!!!

ஆனால் எவை என்று கூட பத்தில் எவை என்று கூட இருக்கும் பொழுது எதை என்று தெரியாமலே அப்பனே மீண்டும் எவை என்று அறிய அறிய அப்பனே கர்ம வினைக்கு ஏற்பவே எவை என்று அறிய அறிய நீ ஒன்பதுதனில் அப்பனே நவ வீட்டில் நன்மைகளாக எதை எதை செய்கின்றாயோ அதை பிரதிபலிப்பாக நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய
ராசியில் இருந்து 10 ஆம் இடம்அப்பனே பின் பத்தில் வருவான் சனியவன்!!!!

எவை என்று கூட பின் ஒன்பதில் எதுவும் செய்யவில்லை என்றால் பத்தில் கூட ஒன்றும் செய்ய மாட்டான் அப்பனே!!!!!!

பின் ஏன்??? என்னிடத்தில் வேலை இல்லை என்று கேட்கின்றீர்கள்!!! அப்பனே பணம் இல்லையென்று கேட்கின்றீர்கள்???? அப்பனே!!!!

(குருநாதரிடம் ஜீவநாடியில் வாக்குகள் கேட்கும் போதும் பிராத்தனை செய்யும் போதும்... வேலை வேண்டும் !!! பணங்கள் வேண்டும் என வேண்டுவதை இங்கு குறிப்பிடுகின்றார்)

எதை என்று கூட அதாவது ஒன்பதாவது இடத்தில் அப்பனே எவை என்று அறிந்து அறிந்து நீ எதுவும் செய்யவில்லை என்பேன். அப்பனே!!!

அதனால் எதை என்று அறிய அறிய பத்தில் வரும் பொழுது அனைத்தையும் இழப்பாய்!!!! என்பேன் அப்பனே!!!!!!

இவை என்று அறிய அறிய அப்பனே நீ எவை என்று கூட நவ வீட்டில் வரும் பொழுது மற்றவர்களுக்கு பல வழிகளிலும் உதவிகள் செய்தல் அன்னம் அளித்தல் எதை என்று கூட இயலாதவர்களுக்கெல்லாம் உதவிகள் செய்தால் அப்பனே பத்தும் சரியாக இருக்கும் அப்பனே!!!!!!!
ராசியில் இருந்து 11 ஆம் இடம்பதினொன்றில் கூட உயர்ந்த ஸ்தானத்தை எவை என்று கூட நீ ஒன்பதில் செய்தாயோ... அதை எவை என்று கூட அனைத்தும் அப்பனே வட்டியாகவே உந்தனுக்கு எவை என்று கூட 11ல் வரும்பொழுது நிச்சயம் பின் சனியவன் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே 11-ல் சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை எதை செய்ய வேண்டும் 11ல் இருக்கும் பொழுது போட்டி பொறாமைகள் இருக்கக் கூடாது எவை என்று அறிய அறிய பிறருக்கு உதவுதல் அப்பனே எதை என்று அறிய அறிய எதை என்று புரியாமல் அப்பனே ஆனாலும் இதன் தன்மைகளும் கூட பிற உயிர்களை கொல்லாமல் இருத்தல்!!!! அப்பனே அனைவரையும் சமமாக எண்ணுதல் இப்படி இருந்தால்
ராசியில் இருந்து 12 ஆம் இடம்அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து உந்தனுக்கு 12 ல் வரும் பொழுது அப்பனே எதை என்று கூட பின் எதை என்று எவை என்று அறியும் பொழுது பின் இறைவனிடத்தில் எப்படி எல்லாம் ரகசியங்கள் என்று கற்பித்து மோட்சகதியை அளித்து விடுவான் என்பேன் அப்பனே சனியவன்!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் ஆனால் மனிதனுக்கு எவை எடுத்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே சொல்ல எவை என்று புரிய புரிய அப்பனே தெரியவே இல்லை என்பேன் அப்பனே!!!!!!!

எதையென்று அறிய அறிய அப்பனே இடைக்காடன் சொல்லி எதை என்று அறிய தொடங்கி விட்டான்!!!!!!

யானும் எதை என்று அறிய அறிய முடித்தும் விட்டேன் அப்பனே நலன்கள்!!!



எதையென்று அறிய அறிய அதனால் உங்களிடத்திலே குறைகளை வைத்துக்கொண்டு அப்பனே எதை என்று கூட சனியவன் வந்து விட்டால் !?!!!!!!!""""""""""

பரிகாரங்கள் எதை என்று கூட ஒன்றும் நடக்காதப்பா!!!!!!!!!!?!!!

அப்பனே யான் சொல்லியதை எவை என்று அறிய அறிய தான் இடையன் சொல்வதை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே!!!!!!!! வெற்றிகள் நிச்சயம் அப்பனே!!!


இதனால் குறைகள் இல்லை நல் முறைகளாக இன்னொரு தலத்திலும் கூட மற்றொரு வாக்கும் நிச்சயம் இடையன் உரைப்பான் யானும் வந்து உரைப்பேன் அப்பனே நலன்கள்!!!! ஆசிகள் !!!!

=========================================================

No comments:

Post a Comment