“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, September 10, 2023

சித்தர்கள் ஆட்சி - 131 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 


( பாவங்கள குறைவதை எப்படி உணர்வது எப்படி? என உணரத்தும் அற்ப்புத அருள் வாக்கு )

“பாவங்கள் குறைந்தாலும், அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும் கூட பெருங்காயப் பேழைபோல் அதன் நறுமணம் தாக்கிக் கொண்டேதான் இருக்கும். இருந்தாலும், பாவம் கூடுமானவரை குறைந்திருகின்றது, மிக மிக சிறிய அளவுதான் இருக்கிறது என்றால், தன்முனைப்பும், அகங்காரமும் இல்லாமல் போய்விடும். "நான் யார்?, நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன்? என் வலிமை என்ன? என்னுடைய செல்வம் என்ன? என் பதவி என்ன? என் செல்வாக்கு என்ன? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான்?" என்பது போன்ற எண்ணங்களெல்லாம், மெல்ல மெல்ல விலகிவிடும். மனம் அமைதியை விரும்பும். கூடுமானவரை தனிமை விரும்பும். புரிதல் இல்லாத மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிவிட்டு போகட்டும். அவன் விதி, அவன் அவ்வாறு நடந்து கொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம், என்ற ரீதியில் தான் மனித மனம் இருக்கும். இவன் எதிரி, இவன் நண்பன் என்கிற நிலை எல்லாம் கடந்து போகுமப்பா. எனவே, பாவங்கள் குறைய, அதை அனுபவத்திலே மனம் உணரும்."