“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, September 3, 2023

சித்தர்கள் ஆட்சி - 116 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு

 




குருநாதர் அகத்திய பெருமான் தம் திருவாய் மலர்ந்து ஓதிமலையின் சிறப்பு குறித்து ஓதிய  பா!!!! 


சங்கரனுக்குசரவணகுகன் ஓதிய கிரி !!!!!


சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் தலைவிதி மாறிய கிரி !!!


சபலங்கள்,சலனங்கள் விட்டு ஓடிடும் கிரி !!!


சிறப்பில்லா முன்வினை ஊழ்பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி !!!


சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி !!!


சிறப்போ,சிறப்பில்லையோ,பேதம் பார்க்கா வாழ்க்கையை ஏற்க வைக்கும் கிரி !!!


சப்த கன்னியர்கள்,அன்னையோடு,அன்னை அருளால் அருளும் கிரி !!!


 செப்புங்கால்,

பஞ்சமும் அடங்கபஞ்சவதனத்தோன் அருளும் கிரி !!!


சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் அருளால் இருந்திட்டாலும்,குன்றுக்கெல்லாம் உயர்குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி !!!


அன்னையோடு,ஐயன் அமர்ந்து அன்றும்,இன்றும்,என்றும் அருளும் கிரி !!!


நீறு வேறுநாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு,

நீறு பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி !!!


கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள் ஓதினாலும்,

கட்டிய மனைவி ஓதுகிறாளே என்று தாய் ஓதினாலும்,

உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதை ஓதினாலும்

மாந்த குரு சிஷ்யனுக்கு ஓதினாலும்

அனைத்திலும் பேதமுண்டு!!!

.சுயநல நோக்குண்டு !!


பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக !!!

ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக,

நேத்திரத்தில் கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க,!!!

அறுவதனமும் ஐவதனமாகி,

எழு பிறப்பும் எட்டென விரட்டி,

உபயவினையும் இல்லாது ஒழித்து,

சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து,

அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி

ஒருமுகமாய்திருமுகமாய்ஒரு நினைவாய் மாந்தன் வாழ அருளும் கிரி.!!!!


ஞானத்தை நல்கும் கிரி !!!


அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி !!!


பேதத்தை நீக்கும் கிரி !!!


வேதத்தை உணர்த்தும் கிரி !!!


சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி !!!


நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி !!!


வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி !!!


எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி !!!


கர்ம நிலைகளை மாற்றும் கிரி !!!


அக உளைச்சல் ஒழிக்கும் கிரி !!!


பேதம் காட்டாத வேத கிரி !!!


ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி !!!


இளையவன் திருவடி பாதம் படிந்த கிரி !!!


அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி !!!


ஐயனோடு இன்று அனைவரும் இருக்கும் கிரி !!!


ஓதும் கிரி !!!! அது ஓதிய கிரி !!!


பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி !!!


ஓம் நமகுமாராய !


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!