“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, June 30, 2022

சித்தர்கள் ஆட்சி - 66 : சித்தர்கள் தரிசனம் எப்போது கிட்டும்?


 


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!



29-6-2022 அகத்திய மஹரிஷி அடியவர்  நாடி வாக்கில் உள்ள பொது நாடி வாக்கு. 


(1) எப்போது சித்தர்கள் தரிசனம் கிட்டும்?  என்ற அடியவர்களின் மனதில் எழும் கேள்விக்கு ஒரு அடியவர் குழுவிறக்கு படித்தபோது நாடியில் வந்த வாக்கு 


அகத்திய மஹரிஷி வாக்கு:-


அப்பனே நிச்சயம் சித்தர்களை எவ்வாறு நாடி வருவார்கள் என்றால் அப்பனே நிச்சயம் பின் ஏழு பிறவிகள் தீர்மானிக்கப்படுகின்றது. ஆனாலும் இவைதன் உணர ஆறு பிறவிகள் கடந்தால்தான் அப்பனே ஏழாவது பிறவியில் சித்தர்கள் நேரில் கானும் பாக்கியம் கிட்டும் என்பேன். 


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


(2) எப்போது சித்தர்கள் வழிபாட்டில்/பாதையில் இருந்து மனிதன் விலகுவான்?  என்ற அடியவர்களின் மனதில் எழும் கேள்விக்கு ஒரு அடியவர் குழுவிறக்கு படித்தபோது நாடியில் வந்த வாக்கு 


அகத்திய மஹரிஷி வாக்கு:-


ஆனாலும் அப்பனே பின் அப்பனே பின் பிறவிகள் சிறிது அப்பனே பின் சிறிது சிறிதாக நான்கு, ஐந்து இவைதன் ஆறு இப்படி வந்தால் பின் நம்புவார்கள் சித்தர்களை. ஆனாலும் மறந்து விடுவார்கள் எளிதில். அது நடக்கும் இது நடக்கும் என்றெல்லாம் மாயையில் சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து பின் ஏழாவது பிறவியில் தான் என்னை வந்து அடைய முடியும் என்பேன். 


🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!!!