அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!
29-6-2022 அகத்திய மஹரிஷி அடியவர் நாடி வாக்கில் உள்ள பொது நாடி வாக்கு.
(1) எப்போது சித்தர்கள் தரிசனம் கிட்டும்? என்ற அடியவர்களின் மனதில் எழும் கேள்விக்கு ஒரு அடியவர் குழுவிறக்கு படித்தபோது நாடியில் வந்த வாக்கு
அகத்திய மஹரிஷி வாக்கு:-
அப்பனே நிச்சயம் சித்தர்களை எவ்வாறு நாடி வருவார்கள் என்றால் அப்பனே நிச்சயம் பின் ஏழு பிறவிகள் தீர்மானிக்கப்படுகின்றது. ஆனாலும் இவைதன் உணர ஆறு பிறவிகள் கடந்தால்தான் அப்பனே ஏழாவது பிறவியில் சித்தர்கள் நேரில் கானும் பாக்கியம் கிட்டும் என்பேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
(2) எப்போது சித்தர்கள் வழிபாட்டில்/பாதையில் இருந்து மனிதன் விலகுவான்? என்ற அடியவர்களின் மனதில் எழும் கேள்விக்கு ஒரு அடியவர் குழுவிறக்கு படித்தபோது நாடியில் வந்த வாக்கு
அகத்திய மஹரிஷி வாக்கு:-
ஆனாலும் அப்பனே பின் அப்பனே பின் பிறவிகள் சிறிது அப்பனே பின் சிறிது சிறிதாக நான்கு, ஐந்து இவைதன் ஆறு இப்படி வந்தால் பின் நம்புவார்கள் சித்தர்களை. ஆனாலும் மறந்து விடுவார்கள் எளிதில். அது நடக்கும் இது நடக்கும் என்றெல்லாம் மாயையில் சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து பின் ஏழாவது பிறவியில் தான் என்னை வந்து அடைய முடியும் என்பேன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!!!
No comments:
Post a Comment