“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, June 9, 2022

சித்தர்கள் ஆட்சி - 64 : அகத்திய மஹரிஷி வாக்கு - இன்பம், துன்பம்

 



அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!



அகத்திய மஹரிஷி அடியவர் ஒருவருக்கு வாசித்த நாடி வாக்கில் உள்ள பொது நாடி வாக்கு. 


அம்மையே இது கலியுகம் என்பேன். அம்மையே இங்கு பின்கெட்டவைகளுக்குத்தான் பின் சக்திகள் அதிகம் என்பேன் அம்மையே. அதையும் யாங்கள் நீக்குவோம் அம்மையே வரும் வரும் காலங்களில் சித்தர்கள் அனைவரும் சேரந்து அம்மையே. 


ஒவ்வொரு விசயத்தையும் யாங்கள் பார்த்துக்கொண்டே இருப்போம் அம்மையே. 


ஆனாலும் மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும் ஒன்றை மட்டும். அம்மையே இன்பம் துன்பம் இவை எல்லாம் மனிதன் பிறக்கும்போதே வருகின்றது என்பேன் அம்மையே. 


ஆனாலும் இன்பம் வரும் பொழுது அம்மையே துன்பமும் வரும் என்று நினைத்துக்கொள்ள வேண்டும் அம்மையே. இன்பம் இல்லாமல், துன்பம் இல்லாமல் இவ்வுலகத்தை யாரும் கடக்க முடியாது என்பேன். ஆனாலும் இன்பம் துன்பம் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் போது துன்பத்திலும் இறைவனை நினைத்துக்கொண்டால் அம்மையே துன்பம் அதி விரைவில் போய்விடும் என்பேன். இன்பமாகவே வரும் என்பேன். 


அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடன்உறை பொதிகை வேந்தன் அகத்திய மஹரிஷி திருவடிகள் போற்றி போற்றி போற்றி!


——நாடி உரை முற்றே ——