“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, January 25, 2022

சித்தர்கள் ஆட்சி - 45 : ஆதி ஈசன் திருவிளையாடல் கதை ( 25-01 2022 செவ்வாய்க்கிழமை)


 

25-01-2022   செவ்வாய்க்கிழமை அன்று நடந்த எம்பெருமான் ஆதி ஈசன் 

திருவிளையாடல்கருணை அதன் கதை


குருநாதர் அகத்திய மஹரிஷி அருளால் திருவாசகம் எளிய உரை எழுத 

ஆரம்பித்தபோதுஅடியேனுக்கு ஒரு கேள்வி எழுத்ததுஎம்பெருமான் ஈசனின் 

நிகழ்காலத் திருவிளையாடல்கள்பொதுவில் ஏன் வெளியே தெரியவில்லை

என்று


உடன் அடியேன் எனது நண்பரிடம் கேட்டேன்இதற்க்கு அவர் அளித்த பதில்:- 


திருவிளையாடல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஆனால் அதை 

நம்புவதற்க்கு  மனிதர்கள் தயாராக இல்லை என்று


உண்மைதான்இவ்வுலக மாய வலையில் சிக்கிய மனிதன் இறைவனே நேரில் வந்தாலும் சந்தேகம்கொள்வது இந்த கலிகாலத்தின் இயல்பு நிகழ்வே ஆகும்


சரி அது போகட்டும்இன்று நடந்த எம்பெருமான் உலகை ஆளும் 

உண்மைப்பொருள் ஈசன் மறைந்து நின்று அருளியதிருவிளையாடல் 

கருணையை விளக்கமாக நன்றியுடன் பார்ப்போம்.


எனது நண்பர் இன்று ( 25-01-2022)  உறவினர் இல்லத்திற்க்கு இரவு நேரம் சென்று உள்ளார்நள்ளிரவு 

ஆகிவிட்டதால் அவர் உறவினர்கள் ஒரு சிவாலய  கும்பாபிஷேக திருப்பணியில்பயன்படுத்திய சிவலிங்கம் சிலையை அமர வைத்த யாரும் இதுவரை பயன்படுத்தாத தலையணை ஒன்றை நண்பருக்கு அளித்து உறங்கச்சொல்லி உள்ளனர்நன்கு அருள் கூரந்து கவனிக்கவும்அந்த அருள் மகிமை நிறைந்த தலையணையை யாரும் பயன்படுத்தவில்லைஅந்த உண்ணதமகிமையுடன் அடியேன் நண்பருக்கு அளித்தனர் அவர் உளவினர்கள்இதுவே நம் 

தமிழர்கள்  விருந்தோம்பலுக்கு மிகச்சிறந்த உதாரணம்.


நண்பர் நன்றியோடு அதன்மீது உறங்க ஆரம்பித்தார்நிறக்கஅவருடன் அடியேன் தொடர்புகொண்டு ஒரு வாரத்திற்க்கு  மேல் ஆகிவிட்டதுசமீபத்தில் 4 மாதங்களுக்கு முன்னர் அவர் தந்தைஇறைவன் அடி சேர்ந்தார் அவர் உறவினர் 

இல்லத்திற்க்கு சென்றது அடியேனுக்கு தெரியாது


அதே நேரம் குருநாதர் அகத்திய மஹரிஷி அருளிய திருவாசக உரை தட்டச்சு வேலையில்ஈடுபட்டிருந்தேன்தீடீர் என குருநாதர் அகத்திய மஹரிஷி அருளால்ஈசனின் மாபெரும்கருணையால் ஒரு சிந்தனை உள்ளத்துல் வீறு 

கொண்டு எழுந்ததுஏன் தற்க்காலத்தில்  இந்த பொல்லாத கிருமி நோய்த்தொற்றால் ( கொரோணா ) உயிர் நீத்தவர்கள் ஆத்மா சாந்திஅடைய திருவாசகத்தில் உள்ள முதல் பதிகமான சிவபுராணத்தை அனைவருக்கும் 

பகிர்ந்துபடிக்க சொல்லக்கூடாதுஎன்ற சிந்தனை எழுந்ததுஇந்த வழக்கம் முன்பு இருந்தது கலியின்வேகத்தில் 

காலப்போக்கில் மறைந்துவிட்டது இந்த பழக்கம்



உடனேயே ஒரு குறும் செய்தி தட்டச்சு செய்ய ஆரம்பித்து 

திருவாசகம் மூலம் ஈசன் கருணைகொண்டு அளிக்கும் 

சிவலோக பதவி ( ஆத்மா சாந்தி முக்தி அடைதல் ) குறித்து 

அனைவருக்கும்குரு அருளால் பகிர வைக்கும் ஒரு கருவியாக ஆகிப்போனேன்.


அந்த குறும் செய்தி உங்களின் பார்வைக்கு கீழே 

கொடுக்கப்பட்டு உள்ளது.


இப்போது ஈசனின் அருள் திருவிளையாடல் கருணைக்கு 

வருவோம்.


சிவலிங்கம் அமர்ந்த ஈசன் அருள் நிறைந்த இதுவரை யாரும் பயண்படுத்தாத தலையணையில்நண்பர் சிவ நன்றியோடு 

தலை வைத்து உறங்க ஆரம்பித்த அதே நேரம் , எனது வாட்ஸ்அப்  மொபைல் செய்தி அங்கு அவரின் கவணத்தை ஈரத்ததுஉடனே அவர் திருவாசகம் சிவபுராணசெய்தியை படிக்க 

ஆரம்பித்துள்ளார்உடனே எங்கள் இருவருக்கும் அழைபேசி 

உரையாடல்  ஆரம்பம் ஆனதுநண்பர் 

கும்பாபிஷேகத்திறக்காக சிவலிங்கம் வைத்த 

தலையணையை பற்றிஅடியேனிடம் கூறினார்அதேநேரம் 

அதாவது ஈசன் அருளினால் திருவாசகம் சிவபுராணம் 

உயிர்நீத்தோர் குடும்பத்தினர் படிக்கவேண்டும் என்ற 

சிந்தனை அடியேனுக்கு விதைத்த ஈசன்கருனையை 

நினைத்து இருவரும் ஆச்சரியப்பட்டுப்போனோம்பேச்சே 

வரவில்லை


இங்கு கவனிக்க வேண்டியது:-


  1. நண்பர் உறங்கச்செல்லும் போது அவருக்கு வந்த பல வாட்ஸ்அப் மொபைல் செய்திகளைஒதுக்கிவிட்டு அடியேன் செய்தியை மட்டும் ஏன் பாரக்க வேண்டும்?
  2. அடியேனுக்கு அந்த நேரத்தில் ஏன் அனைவருக்கும் செய்தி அனுப்ப வேண்டும் என்ற எண்ணம்உருவானது?
  3. பலருக்கும் பகிர்ந்த செய்தியை அவருக்கு மட்டும் நடு இரவு வேளையில் சொல்ல வேண்டும்என்ற உந்துதல் என் என்னுள் வந்தது?
  4. அவர் அந்த ஈசன் அருள் நிறைந்த தலையணை மீது தலை வைத்து உறங்க ஆரம்பித்த உடன்ஏன் அடியேன் செய்தியை அனுப்பவேண்டும்?
  5. சிவலிங்கம் வைத்ததால் தலையணையில் அருள் செறிந்து இருந்ததற்க்கு அடையாளமாகஅந்த அருள் உண்மையை வெளியில் கொண்டுவர அதை முதலில் பயண்படுத்தியவர் ஏன்எனது நண்பராக இருக்க வேண்டும்?


ஈசன் மட்டுமே அறிந்த ரகசியம்அதுவே உண்மைஅந்த 

ரகசிய மகிமை பொதுப்படையாகவெளிப்படும் திருவாசகம் அதில் உள்ள சிவபுராணம் அதன் சில பாடல் வரிகள் உங்கள்சிந்தனைக்கு இங்கு அளிக்கப்பட்டுள்ளது


சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை

முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் 


அடியேனுக்கு குருநாதர் அகத்திய மஹரிஷி நாடியில் இட்ட 

வாக்கு :- 


அப்பனே நல்விதமாகபலநபர்களை இறைபலத்தை எவ்வாறு என்பதற்க்கு இறை பலத்திறக்குகொண்டுவாபோதுமானது.

சில உண்மைகளை கொடுத்து இறைவன் இருக்கின்றான் என்பதை தெரிவி போதுமானது


அடியேனுக்கு குருநாதர் இட்ட வாக்கின்படி இந்த உண்மை நிகழ்வை உங்களுடன் பகிர்வதில்ஆணந்தம் கொள்கின்றேன்


————————————

அந்த குறும் செய்தி 👇


*அகத்தீசன் பாதம் காப்பு*

*ஆதி ஈசன் பாதம் காப்பு*



ஆதி தமிழகத்தில் உயிர் நீத்தார்கள் இல்லத்தில் சிவபுராணம் ஓதும் பழக்கம் இருந்து வந்ததுகலியின் வேகத்தில் இஃது காலப்போக்கில் மறைந்து விட்டது


ரமண மகரிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில்அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார்அன்று இரவே அவரது அன்னை முக்திஅடைந்தார்.


எனவே தறப்போது நடக்கும் பிரளய காலத்தில் நீத்தவர்கள் இல்லத்தில் அவர்களுக்காக மற்றும்அவர்கள் போல் கொரோனா பிரளயத்தில் உயிர் நீத்தவர்கள் சிவ பதவி அடைய திருவாசகத்தில்உள்ள முதல் பதிகமான சிவபுராணம் ஓதி வர நண்மை உண்டாகும்


இந்த தகவலை உங்கள் நெருங்கின உறவுனர்களுக்கும் நண்பர்களுக்கும் பகிரவும்அவர்கள்இல்லத்தில் நீத்தார் நலனுக்காக இந்த பாடலை தினம் ஓதச்சொல்லவும்


மேலும் உலக நண்மைக்காகவும் இந்த பதிகத்தை தினம் தோறும் படிப்பது மிக நல்லது


👇👇👇👇👇👇👇👇👇


https://siththargalaatchi.blogspot.com/2022/01/36-01.html?m=0












No comments:

Post a Comment