“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, January 6, 2022

சித்தர்கள் ஆட்சி - 37 : திருவாசகம் எனும் தேன்








அகத்திய மஹரிஷி பாதம் காப்பு 

திருவாசகத் தேன் :- 


தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்.


தேன் தன்னில் வைத்த பொருட்களைக் கெடாமல் காக்கும் தன்மை கொண்டது. திருவாதவூர் வண்டு திருப்பெருந்துறை சென்று குருமணியாக  வந்த இறைவனின் பாதமலரிலிருந்து எடுத்த தேன் திருவாசகம். அதுவும் நம்மை (ஆன்மாவை) தன்னுள்ளிருத்தி பக்குவப் படுத்தி கெடாமல் கரை சேர்க்கும். இந்த வாதவூர் வண்டும் தேன் பருகச் சென்று தேனே ஆகிவிட்டது.


அதை நம் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார் திருக்களிற்றுப்படியார் நூலில் (சித்தாந்த சாத்திர நூல்) 

பின் வருமாறு பாடுகிறார்


பாய்பரியோன் தந்த பரமானந் தப்பயனைத்

தூய வாய்மலராற் சொற் செய்து-மாயக்

கருவாதை யாம்அறியா வாறுசெய்தான் கண்டாய்

திருவாத வூர் ஆளுந்தேன்.


நூலும் தேன்! நூலாசிரியரும் தேன்!. திருவாசகத் தேன்! தந்தவரைத் தேன் என்று சிறப்பிக்கிறார். தித்திக்கும் தேனல்லவா?. அதுவும் திருவாசக நூலில் 51 இடங்களில் தேன் என்று சொல்கிறார். அதுவும் சிவபுராணம் தொடங்கி அச்சோப்பதிகம் வரை 51 பனுவல் தேன்!. என்ன ஆச்சரியம் பாருங்கள்!!.


01. தேன் ஊறி நின்று                சிவபுராணம் -அடி 47

02. தேனார் அமுதே                  சிவபுராணம் -அடி 63

03. தேனமர் சோலை                 கீர்த்திதிருஅகவல் -அடி 73

04. சுவைதருகோல்தேன்             திருஅண்டப்பகுதி -அடி 157

05. இன்தேன் பாய்த்தி                திருஅண்டப்பகுதி -அடி 173

06. கருணை வான்தேன்              திருஅண்டப்பகுதி -அடி 180

07. தேன்ஏயும் மலர்க்கொன்றை              திருச்சதகம் -12

08. தேனொடு பால்கட்டி                             திருச்சதகம் -36

09. தேனைஆன்நெய்யை                          திருச்சதகம் -38

10. தேன் நிலாவிய திருஅருள்               திருச்சதகம் -40

11. தேனே அமுதே                                      திருச்சதகம் -55

12. தேனைப் பாலை                                    திருச்சதகம் -58

13. தேனே அமுதே                                      திருச்சதகம் -85

14. தேனே அமுதே                                      திருச்சதகம் -90

15. அகம்நெக அள்ளூறுதேன்               திருச்சதகம் -98

16. தேனையும் பாலையும்                     நீத்தல் விண்ணப்பம் -21

17. கொழுந்தேன்                                        நீத்தல் விண்ணப்பம் -36

18. பால் ஊறுதேன்                                    திருவெம்பாவை -5

19. தேன் வந்தமுதின்                              திருஅம்மானை -4

20. கருணைத்தேன் காட்டி                      திருஅம்மானை -6

21. தேன் பாய                                               திருஅம்மானை -13

22. தேனையும் பாலையும்                    திருஅம்மானை -14

23. தேனாய் அமுதமுமாய்                    திருஅம்மானை -16

24. தேனார் மலர்க்கொன்றை                திருஅம்மானை -16

25. நந்தாத் தேனைப்                                திருப்பொற்சுண்ணம் -15

26. தேனக மாமலர்                திருப்பொற்சுண்ணம் -17

27 தேனார் கமலமே                                திருக்கோத்தும்பி  -2

28. தேன்உண்ணாதே                               திருக்கோத்தும்பி  -3

29. ஆனந்தத்தேன் சொரியும்               திருக்கோத்தும்பி  -3

30. தேனுந்து சேவடிக்கே                      திருக்கோத்தும்பி  -15

31 தேன்புக்க தண்பணை                   திருச்சாழல் -14

32.  ஆனந்தத் தேனிருந்த                       திருப்பூவல்லி -2

33. தேனாடு கொன்றை                        திருப்பூவல்லி -5

34. தேனுடனாம்                                       திருப்பூவல்லி -11

35.  தேன் தங்கித் தித்தித்து                திருப்பொன்னூசல்  -2

36. தேன்பழச் சோலை                         குயிற்பத்து  -4

37.   தேன்புரையுஞ்                                 திருத்தசாங்கம் -6

38. கோற்றேன் மொழி                         திருத்தசாங்கம் -7

39.  களிதரு தேனே                               திருப்பள்ளியெழுச்சி -9

40 சிந்தைஎழுந்ததோர் தேனே     கோயில் திருப்பதிகம் -8

41. தழங்கருந்தேன்                             அடைக்கலப்பத்து -10

42. தேனைப் பாலை                            புணர்ச்சிப்பத்து  -4

43. மருந்தே பெருந்தேன்                   புணர்ச்சிப்பத்து  -9

44. தேனார் சடைமுடியான்             உயிருண்ணிப்பத்து  -2

45. கோற்றேன் எனக்கென்                உயிருண்ணிப்பத்து  -8

46. தேன்பாய்மலர்                                 உயிருண்ணிப்பத்து  -10

47. தேனினைச் சொரிந்து                  பிடித்தப்பத்து -9

48. தேனாய் இன்னமுதமுமாய்     திருஏசறவு  -10

49. கருணைத் தேன்பருகி                குலாப்பத்து -5

50. தேன் உந்து செந்தீ                       திருவெண்பா -1

51. உகுபெருந்தேன்                             பண்டாய நான்மறை -2

திருச்சிற்றம்பலம்

 



No comments:

Post a Comment