“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, February 12, 2026

சித்தர்கள் ஆட்சி - 595 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 4

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.





அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 4


நாள் : 7/02/2026 (சனிக்கிழமை) 

இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாஞ்சேனை, கொழும்பு.

அகில இலங்கை அகஸ்திய மன்றம்.



இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


இவ் தொடர் வாக்கின் அனைத்து பகுதிகள் தொகுப்பு :- 

சித்தர்கள் ஆட்சி - 592 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 1

சித்தர்கள் ஆட்சி - 593 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 2

சித்தர்கள் ஆட்சி - 594 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 3

சித்தர்கள் ஆட்சி - 595 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 4

சித்தர்கள் ஆட்சி - 596 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 5

சித்தர்கள் ஆட்சி - 597 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 6

சித்தர்கள் ஆட்சி - 598 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 7


====================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

====================================


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 4



குருநாதர் :- அப்பனே, நல் அருள்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனைப் பின்  அவன் தன் அப்பனை நிச்சயம் தன்னில் கூட பாசமிகு அப்பனைப் பின்  முருகனை அப்பனே, ஒரு முறை அப்பனே பாடு. 



பாடகர் :- ( முருகப்பெருமான் பாடல் பாடினார்கள்) 


===========================================

# உண்மைகள் தெரிந்து , தெளிவு பெற்று வாழ்ந்தால் மட்டுமே இறையருளும்  கிட்டும்.  அதனால் நன்மைகளும் நடைபெறும். 

===========================================


குருநாதர் :-  அப்பனே, அம்மையே, அறிந்தும் கூட, இதனால் பல விஷயங்கள் உண்டு இவ்வுலகத்தில். அவையெல்லாம் தெளிவு பெற்று, பின் நிச்சயம் வாழ்ந்தால் மட்டுமே இறையருளும்  கிட்டும்.  அதனால் நன்மைகளும் நடைபெறும். 


குருநாதர் :-  அப்படி இல்லை என்றால், நிச்சயம் தன்னில் கூட இறையருளும் கிட்டாது. நன்மைகளும் கிட்டாது. துன்பத்துடனே வாழவல்லான் பின் நிச்சயம் மனிதன். 


===============================================

# பல ஞானிகள் தவம் இயற்றி இத்தேசத்தை காப்பாற்றி, தர்மத்தை மீட்டெடுத்தனர். 

===============================================


குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில், அதாவது பின் முன்னுரைத்தபடியே, பின் பல, பின் ஞானிகள் நிச்சயம் தன்னில் கூட தவம் இயற்றி , தவம் இயற்றி இத்தேசத்தை காப்பாற்றி, நிச்சயம் தன்னில் கூட பின் தர்மத்தை பின் மீட்டெடுத்தனர். 


குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அத் தர்மத்தின் தலைகீழாக சென்று கொண்டிருக்கின்ற பொழுது, நிச்சயம் ஒவ்வொரு ஞானியும் யான் தட்டி எழுப்ப வேண்டும். நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  மக்கள் எவ்வாறு கீழ்நிலையாக சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று. 


குருநாதர் :-   நிச்சயம் அவ்வாறாக, பின் நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு ஞானியும் பற்றி எடுத்துரைத்து, அவ் ஞானியும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிந்தும் கூட, பின் ஆற்றலையும் கூட சரி முறையாக இவ்வுலகத்திற்கு பயன்படுத்தினால், நிச்சயம் பின், அதாவது பின் அழிவுகள் காக்கப்படலாம். நிச்சயம் தன்னில் கூட மனிதனும், அதாவது பல ஜீவராசிகளும் காக்கப்படலாம். 


======================================

# இலங்கையில் பல ரகசியங்கள் உள்ளன. அவையெல்லாம் குருநாதர் இனிமேல் எடுத்துரைக்கப் போகின்றார்கள். 

====================================== 


குருநாதர் :-   இதனால்தான் பின் எங்களுக்கு அனைத்தும் ஒன்றே. அதனால்தான் இத்தேசத்திலிருந்து நிச்சயம் பல விஷயங்கள் இருக்கின்றது. பின் எங்கெங்கு பல விஷயங்கள் இருக்கின்றதோ, அங்கு நிச்சயம் எதை என்று புரிய, பின் சொன்னால்தான் நிச்சயம் சக்திகள் அதிகம் என்றெல்லாம். இதனால்தான் பல, பின் மன்னாதி மன்னர்களும், நிச்சயம் தேவாதி, பின் அதாவது தேவர்களும் இந்திரர்களும் கூட இத்தேசத்தை ஏன் தேடி வந்தார்கள் என்பவையெல்லாம் நிச்சயம் யான் எடுத்துரைக்கப் போகின்றேன்.



சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள் :-  (உண்மை நிலை தெரியாம எதையும் செய்யுறது எக்ஸாம்ல படிக்காம போய் ஃபெயில் ஆகுற மாதிரி; அதனால அகத்தியர் சொல்றபடி தெளிவா புரிஞ்சுக்கிட்டு இறைவனை வணங்குனா மட்டும்தான் வாழ்க்கையில பாஸ் பண்ண முடியும். இப்போ தர்மம் தலைகீழா போயிட்டு இருக்கறதால, இந்த உலகத்தை சரி பண்ணி காக்கணுமுன்னா சித்தர்களும் ஞானிகளும் வர்றது ரொம்ப கட்டாயம். நம்ம மூடநம்பிக்கையில இருக்காம உண்மையை தெரிஞ்சுக்கிட்டு வாழ்ந்தா மட்டும்தான் துன்பம் இல்லாம ஜெயிச்சு தர்மத்தை நிலைநாட்ட முடியும்.)


====================================

# இராவணேஸ்வரன் பலம், பெருமை  - தன் தாய் ஈசானரால் காக்கப்பட்டதும், அவர் சிரிப்பினால் உலகம் வேகமாக சுற்ற ஆரம்பித்தது.

====================================


குருநாதர் :-  இதனைத்தன் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட, அழகாக தன் அன்னை பின் நிச்சயம் தன்னில் கூட, பின் காத்திட்டானே ஈசன் என்று பலமாக பின் சிரித்தான் (இராவணேஸ்வரன்). நிச்சயம் தன்னில் கூட உலகம் நிச்சயம் தன்னில் கூட வேகமாக பின் இயங்கியது. நிச்சயம் தன்னில் கூட அங்கும் இங்கும் கூட நிச்சயம் தன்னில் கூட தெளிவு பெற்று பின் மக்கள் வாழ்ந்தனர். நிச்சயம் பின் எதை என்று புரிய. இவையெல்லாம் இராவணனையே சாரும். 


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள் :-  (இராவணன் தன் அம்மாவுக்கு உடம்பு சரியானது தெரிஞ்சதும் அடிச்ச சிரிப்புல, இந்த உலகத்தோட இயக்கமே இன்னும் வேகமா துரிதமா சுத்த ஆரம்பிச்சுடுச்சு. அப்படி உலகம் ஸ்பீடா இயங்க ஆரம்பிச்சதும், மக்கள் எல்லாரும் ரொம்ப குஷியாவும் சந்தோஷமாவும் நல்லபடியா வாழ ஆரம்பிச்சாங்க.)


===================================

பூமியின் வேகம் குறைந்தால் மக்கள் மனதில் தெளிவு பிறக்காது. இல்லத்தில் பல சச்சரவுகள், சண்டைகள் நிச்சயம்

====================================


குருநாதர் :- இதனால்  தான் உலகத்தை கூட சிறிது சிறிதாக வேகம் பின் குறைந்து குறைந்து. ஆனாலும் எதை என்று இவ்வாறாக குறைந்து, குறைந்து கொண்டே வந்தால், பின் நிச்சயம் மக்கள் மனதில் தெளிவு பிறக்காது. இல்லத்தில் பல சச்சரவுகள், சண்டைகள் நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது எதை எவை என்று எவற்றிற்காக வாழ்கின்றோம் என்று தெரியாமலே வாழ்வார்கள். 


====================================

# பூமியின் வேகம் கூட்ட , ஞானிகள் அவசியம் மனம் மகிழ்வடைய வேண்டும். அதற்கு தர்மம் காக்கப்பட வேண்டும்.

====================================


குருநாதர் :-  நிச்சயம் வேகத்தில் இயக்கப்பட வேண்டும். பின் அவ்வாறாக நீங்கள் தர்மத்தை பின் கடைபிடித்தால் மட்டுமே ஞானிகள் வந்து மீண்டும் பின் அதாவது புவி தன்னில் கூட எதை என்று ஒரு ஆற்றலோடு வந்து அவை தன் வேகமாக இயங்கும். அப்படி இல்லை என்றால் நிச்சயம் குறைந்து குறைந்து நிச்சயம் கஷ்டத்தோடு கண்ணீரோடு வாழத்தான் வேண்டியது.



சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள் :-  (பூமியோட சுழற்சி வேகம் குறைஞ்சுட்டே வர்றதாலதான் இன்னைக்கு வீட்ல சண்டை சச்சரவு, கஷ்டம், மனக்குழப்பம்னு பல பிரச்சனைகள் வருது. இந்த இயக்கத்தை திரும்பவும் வேகப்படுத்தி உலகத்தை உருப்பட வைக்கணும்னா தர்மம் செஞ்சு ஞானிகளை வரவழைக்கணும். அப்படி ஞானிகள் வந்து தர்மத்தை நிலைநாட்டினா மட்டும்தான் இந்த உலகம் காப்பாற்றப்படும், இல்லன்னா சண்டை சச்சரவுகளாலேயே அழிஞ்சிடும்.)



குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அதனால்தான் எதை என்று அறிய அறிய  பல கோடி ஞானிகள் இங்கே நிச்சயம் இன்னும் தவம் இயற்றி கொண்டுதான் இருக்கின்றார்கள். அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வுலகம் எதை என்று கூட பின் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது. நிச்சயம் தன்னில் கூட .


======================================

# ஈசனின் திருவிளையாடலில் ஒன்று - இராவணேஸ்வரன் மூலம் சிவராத்திரியை உலகிற்கு வெளிகொண்டுவந்தது - மக்கள் நன்மை அடைய.

=====================================


குருநாதர் :-  ஆனாலும் அறிந்தும் இதனால் பின் இராவணன் எதை எழுதி அறிய, எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் சிவராத்திரி உருவாக்கினான். அறிந்தும் எதை என்று கூறப்பின். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதை யார் உருவாக்கியது? இராவணன் தான். 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இதுவும் பின் ஈசனின் திருவிளையாடலில் ஒன்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- இதும் வந்து ஈசனின் திருவிளையாடலில் ஒன்று. 


==================================

# இப்பொழுதும் ஈசன் திருவிளையாடல்கள் நடத்திக் கொண்டுதான் வருகின்றார்.

===================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட உண்மையான பக்தி உள்ளவர்களுக்கெல்லாம் நிச்சயம் பின் இப்பொழுதும் ஈசன் திருவிளையாடல்கள் நடத்திக் கொண்டுதான் வருகின்றான். ஆனால் மனிதன் என்னவோ நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு கஷ்டமாக வந்துவிட்டால் ஓடோடி சென்று விடுகின்றான். பின் இவ்வாறு ஆகிவிட்டதே என்று இதனால் இறைவனும் இவன் தன் அதாவது படைத்தலும் வீணாக போய்விட்டது என்று எண்ணி பின் அவனுக்கும் நல்லது செய்வதில்லை. நிச்சயம் தன்னில் கூட இதனால் கஷ்டத்தோடு பின்னி வாழ்ந்து நிச்சயம் தன்னில் கூட மீண்டும் பிறந்து பிறந்து என்ன லாபம்?


சுவடி ஓதும் மைந்தன் :- (ஈசன் இராவணனுக்கு எவ்வளவோ சோதனைகளைக் கொடுத்தும், அவன் அதையெல்லாம் தாங்கிக்கிட்டதுனாலதான் கடைசியில அவங்க அம்மாவைக் காப்பாத்திக் கொடுத்தாரு. இப்போ இருக்கிற கலியுகத்துலயும் ஈசன் அப்படி வாரி வழங்கத் தயாரா இருந்தாலும், மக்கள் ஒரு சின்ன கஷ்டம் வந்தாலே பயந்து ஓடிப் போயிடுறாங்க. இப்படி மனசுல தைரியமே இல்லாம வலுவில்லாம இருந்தா ஈசன் எப்படி உதவி செய்வாரு, அதனால எல்லாரும் இராவணன் மாதிரி மன உறுதியோடும் பலத்தோடும் இருக்கணும்னு குருநாதர் சொல்றாரு.)



குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இராவணன் சாதாரணப்பட்டவன் இல்லை நிச்சயம் தன்னில் கூட. இதனால் நிச்சயம் பின் வருத்தங்கள் பட்டு பட்டு உடம்பை இரும்பாக்கி நிச்சயம் தன்னில் கூட பின் ஈசனைக் கண்டான். ஆனால் மனிதனோ உடனடியாக அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்றானோ, பின் இதைவிட நிச்சயம் பின் எவை என்று கூற முட்டாளாக இவ்வுலகத்தில் யாரும் இல்லை. என் ஜீவராசியும் இல்லை மனிதனைத் தவிர.



சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள் :-  (இராவணன் தன் அம்மாவை உயிர்ப்பிக்க கைலாய மலையையே பெயர்த்தெடுத்தும், சுராக்கல்லை உடைச்சு லிங்கத்தை எடுக்கவும் எவ்வளவு கடுமையான முயற்சிகளை செஞ்சாருன்னு பார்க்கணும்; அப்படி உழைச்சதுனால தான் ஈசனோட அருளே அவருக்கு கிடைச்சது. ஆனா இப்போ இருக்கிற மனுஷங்க எந்த கஷ்டமும் படாம, ஒரு சின்ன முயற்சியும் செய்யாம எல்லாமே உடனே நல்லபடியா நடக்கணும், அருள் கிடைக்கணும்னு நினைக்கிறாங்க; ஆனா எதுவுமே செய்யாம எப்படி அருள் கிடைக்கும்னு குருநாதர் கேட்கிறாரு.)


குருநாதர் :-  மனிதன் எவ்வாறு இங்கு யான் முட்டாள் என்று சொல்கின்றேன் என்றால், நிச்சயம் பின் கல்வி கற்பதற்கு சில ஆண்டுகள், பின் வேலைக்கு செல்வதற்கு சில ஆண்டுகள், திருமணம் செய்வதற்கு சில ஆண்டுகள், பின் குழந்தை பிறப்பதற்கும் சில ஆண்டுகள். ஆனால் ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றான். 


===================================

# மனிதர்கள் ஏமாறுவது , இறைவனின் விளையாட்டு - பாடம் கற்றுக் கொடுக்க…

===================================


குருநாதர் :-  ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இறைவனே ஏமாற்றுகின்றான். உடனடியாக நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் நடந்திட வேண்டும் என்று இதனால் இறைவன் நிச்சயம் தன்னில் என்ன செய்வான்? அதனால் (ஒரு) மனிதனை பின் அனுப்பி உடனடியாக கிடைக்க வேண்டுமா? அவனை ஏமாற்றிவிட்டு வா என்று நிச்சயம் பின் இறைவனும் மனிதனையும் அனுப்புகின்றான். போதுமா? இதனால்தான் நீங்கள் ஏமாந்து நிச்சயம் தன்னில் கூட.


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர்கள் :-  (படிக்கிறது, கல்யாணம், வேலைன்னு எல்லாத்துக்கும் ஒரு காலம் இருக்கு; அது அது அந்தந்த நேரத்துலதான் நடக்கும். ஆனா மனுஷன் விதிப்படியே எல்லாம் உடனே நடக்கணும்னு அவசரப்படுறதுனால, கடவுளே ஏமாத்துறதுக்குன்னு சில ஆட்களை அனுப்பி விட்டுறாரு. "நான் அதைச் செய்றேன், இதைச் செய்றேன்"னு சொல்லி இருக்கிறதெல்லாம் புடுங்கிட்டு போற மாதிரி ஆளுங்ககிட்ட ஏமாந்துட்டு, கடைசியில கடவுள் இல்லையேன்னு ரோடு ரோடா அலைஞ்சு வருத்தப்பட வேண்டியதுதான் மிஞ்சும்னு குருநாதர் சொல்றாரு.)


==========================

# யாருக்கு ஆயுள் கூடும்?

==========================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கையில், நிச்சயம் தன்னில் கூட யார் ஒருவன் பொறுக்க, அதாவது நிச்சயம் தெரிந்திருக்கின்றானோ, அவன் நிச்சயம் ஆயுள் நீட்டிக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :- பொறுமை, பொறுமை அவசியம். யார் ஒருத்தர் வந்து வாழ்க்கையில பொறுமையா இருந்தா எல்லாம் நடக்கும். அவரோட ஆயுள் என்ன ஆகும்? நீட்டிக்கும்.


=====================================

# உடனடியாக அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் சாவும் உடனடியாக வந்துவிடும். 

=====================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட உடனடியாக அனைத்தும் கிடைக்க வேண்டும், கிடைக்க வேண்டும் என்று எண்ணினால், நிச்சயம் தன்னில் கூட சாவும் பின் உடனடியாக வந்துவிடும். 


சுவடி ஓதும் மைந்தன் :- (மனுஷன் எதுக்கெடுத்தாலும் எனக்கு உடனே நடக்கணும், இப்பவே நடக்கணும்னு அவசரப்படுறான்; ஆனா அப்படி எல்லாத்துலயும் வேகம் காட்டுனா, அதுக்கு பின்னாடியே சாவும் கூடவே சீக்கிரமா வந்துடும்னு புரிஞ்சுக்கணும். எப்படின்னா, எல்லாத்துக்கும் ஒரு காலநேரம் இருக்கிறப்ப நாம மட்டும் ரொம்ப அவசரப்பட்டா, அதுவே நமக்கான முடிவையும் வேகமா கூட்டிட்டு வந்துடும்னு குருநாதர் எச்சரிக்கிறாரு.)


குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின், அதாவது இவ்வுலகத்தில் உள்ள அனைவரும் நிச்சயம் இறைவன் இயக்கத்தில் இருக்கின்றீர்கள். இதனால் பின் நீங்கள் விரும்பியதை பின் நடந்தேறுமா என்றால், நிச்சயம் சத்தியம் இல்லை. 



சுவடி ஓதும் மைந்தன் :- ( இன்னைக்கு எல்லாமே இறைவனோட கண்ட்ரோல்ல தான் இருக்கு, நாம எல்லாரும் அவரோட இயக்கத்துல தான் இயங்குறோம். கடவுளோட கட்டளை இல்லாம இந்த உலகத்துல யாருக்கும் எதுவுமே நிச்சயமா நடக்காது; இறைவன் எதை விரும்புறாரோ அது மட்டும்தான் நடக்கும், நடக்கும், கண்டிப்பா நடக்கும்னு குருநாதர் உறுதியா சொல்றாரு.)


குருநாதர் :-  நிச்சயம் அதற்கும் நீங்கள் தகுதி படைத்தவராக இருக்க வேண்டும். அவ்வாறு தகுதி படைத்தவராக இருந்தால் மட்டுமே உன்னை நிச்சயம் தன்னில் கூட தேர்ந்தெடுத்து, பின் நிச்சயம் தன்னில் உனக்கு என்ன தேவையோ அதை தருவான்.


சுவடி ஓதும் மைந்தன் :- அது மட்டும் இல்ல, நீங்க தகுதியானவரா இருக்கணும். அந்த தகுதி இருந்தால் மட்டும்தான் உங்களை தேர்ந்தெடுத்து, எத்தனை கோடி மக்கள் இருக்காங்க, வந்து உங்களை தேர்ந்தெடுத்து இறைவன் என்ன பண்ணுவாரு? உங்களுக்கு தேவையானதை செய்வார். 


=============================

# அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற இயலும் …ஆனால் …

=============================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட கல்விசாலையில் கூட பல பல வகை கூட வகுப்பு தன்னில் கூட. ஆனால் ஒருவன் மட்டுமே நிச்சயம் பின், அதாவது முதல் வகுப்பில் பின் தேர்ச்சி பெறுகின்றான். ஆனால் அந்த அனைவரும், ஆனாலும் அனைவருக்கும் பின் இறைவன் சரியான அறிவைத்தான் கொடுத்து அனுப்புகின்றான். ஆனாலும் சரியாக அறிவை பின் மனிதன் பயன்படுத்தியதாக சரித்திரம் இல்லை இவ்வுலகத்தில். 



சுவடி ஓதும் மைந்தன் :-  (இறைவன் எல்லாருக்கும் சமமான அறிவைத்தான் கொடுத்து அனுப்பியிருக்காரு, ஆனா அந்த அறிவைச் சரியா பயன்படுத்துற ஒருத்தன் மட்டும் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்துத் தேர்ச்சி பெறறான்; மத்தவங்க அதைச் சரியா பயன்படுத்தாததுனால ஃபெயில் ஆகிடுறாங்க. அந்தப் பையன் மட்டும் ஜெயிக்கக் காரணம் தன் அறிவை அழகா, சரியான வழியில உபயோகிச்சதுதான்; அதே மாதிரி நீங்களும் உங்க அறிவைச் சரியா பயன்படுத்த ஆரம்பிச்சீங்கன்னா, கண்டிப்பா வாழ்க்கையில வெற்றி பெறலாம்னு குருநாதர் சொல்றாரு.)


===================================

# உங்களுக்கு வரும் கஷ்டங்கள் ரகசியங்கள் 

===================================


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு அறிவை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் மீண்டும் அவ்வகுப்பிலே நிச்சயம் பின் தோல்வி அடைந்து மீண்டும் படித்து வா என்றெல்லாம். இதையே, இதே போலத்தான் நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கையில் ஒரு கஷ்டத்தை வைத்தால் பின் ஏதோ உணர்வதற்காகவே அக்கஷ்டங்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். அதில் பின் தேர்ச்சி பெற்றுவிட்டால் நிச்சயம் தன்னில் கூட மறு, பின் நிச்சயம் தன்னில் கூட பின் மறு, நிச்சயம் பின் அழைத்துச் சென்று சந்தோஷத்தை கொடுப்பான் இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா? நமக்கு கிடைக்கக்கூடிய கஷ்டங்களுமா இருக்கட்டும், பிறவியா இருக்கட்டும், அந்த நம்ம அந்த தகுதி இல்லாததுனாலதான் அந்த தகுதி இருந்தா நமக்கு கஷ்டங்களும் இருக்காது, பிறவியும் இருக்காது. இறைவன் போட்டுப்பாரு, அந்த தகுதி வர்ற வரைக்கும் பிறவி நீண்டு கொண்டே இருக்கும், கஷ்டங்கள் நீண்டு கொண்டே இருக்கும். 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட தாயவளும் , நிச்சயம் தன்னில் கூட, அதாவது நிச்சயம், அதாவது இராவணனும் கூட, நிச்சயம் தன்னில் கூட யான் இருக்கும் வரை தாயும் உயிரோடு இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட


குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட ஒரே இரவிவினிலே , நிச்சயம் தன்னில் கூட சம அளவு, நிச்சயம் தன்னில் கூட பின் வில்வ இலையையும், இன்னும் துளசி இலைகளும், இன்னும் கூட எதை என்று கூற  அரிசியும் கூட, நிச்சயம் தன்னில் கூட பின் எடுத்து வந்து, நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தில் உள்ள, நிச்சயம் தன்னில் கூட எங்கெங்கு சிவ ஆலயங்கள் பின் இருக்கின்றதோ, நிச்சயம் அங்கங்கு, நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது பின் மூலிகைகளான பானங்களையும், நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது அன்னத்தையும் அளித்தால் ஒரே இரவில், நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் பின் முடிவுக்கு வந்துவிடும். நிச்சயம் தன்னில் கூட விதியும் மாறும். நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது நீ இருக்கும் வரை உன் தாயும் இருப்பாள் என்று, நிச்சயம் தன்னில் கூட பின் கோனை எவை என்றது பின் கோணம் ஈஸ்வரத்திலே (ஈசன் அளித்த வரம்).


====================================

வாக்கு சுருக்கம் :- இராவணன் தன் தாய் நீண்ட காலம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக வேண்டியபோது, திருக்கோணேஸ்வரத்தில் ஒரு வழிமுறை அருளப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு சிவராத்திரியும் ஒரே இரவிற்குள் சம அளவு வில்வம், துளசி மற்றும் அரிசி ஆகியவற்றைச் சேகரித்து, இவ்வுலகில் உள்ள சிவ ஆலயங்கள் அனைத்திலும் அந்த மூலிகைப் பானத்தையும் அன்னத்தையும் அர்ப்பணித்து வழிபட்டால், எத்தகைய விதியும் மாறும் என்றும், அதுவரை மரணத்தை வென்று தாய் உயிரோடு இருப்பாள் என்றும் ஆசி வழங்கப்பட்டது.

===================================


===================================

# ஒவ்வொரு சிவராத்திரியும் …இவ்வாறு செய்து கொண்டுதான் இருக்கின்றார்…

===================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இதேபோல், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட இதனால் பின் இராவணன் ஒவ்வொரு சிவராத்திரியும் நிச்சயம் தன்னில் கூட உலகத்தில் பின் இவ்வாறு செய்து கொண்டுதான் இருக்கின்றான்.  இன்னும் கூட தெரியாமல். 


சுவடி ஓதும் மைந்தன் :- (இராவணன் இப்போ கூட தன் அம்மாவுக்காக அந்தப் பணிகளைத் தொடர்ந்து செஞ்சுகிட்டு தான் இருக்காரு; அவர் இன்னும் பூசை செஞ்சுகிட்டு தான் இருக்கிறாருங்கிற உண்மை நிலையை குருநாதர் இங்கே தெளிவுபடுத்துறாரு. அம்மா மேல இருக்கிற பக்தியாலயும், ஈசன் மேல இருக்கிற நம்பிக்கையாலயும் அந்தத் தொண்டு இன்னும் தொடர்ந்து நடந்துகிட்டே தான் இருக்கு.)


குருநாதர் :-  அதேபோல் நீங்களும் கூட நிச்சயம் தன்னில் கூட செய்தால், நிச்சயம் தன்னில் கூட உடம்பில் உள்ள வியாதிகள் நிச்சயம் குணமாகும். சிவராத்திரி என்று நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட ஈசனையே  நினைத்து, நிச்சயம் தன்னில் வில்வ இலைகளை பின் எதை என்று பின் லிங்கத்தில் இட்டுவிட்டு, நிச்சயம் தன்னில் கூட பின் அவ்வாறு பின் மூலிகை பானங்களையும் உட்கொண்டு, பின் நிச்சயம் தன்னில் மூலிகை பின் உணவுகளை உட்கொண்டு வந்தால், நிச்சயம் தன்னில் கூட ஆயுள் பின் நீட்டிக்கும். 


===================================

வாக்கு சுருக்கம் :- இராவணன் தன் தாய்க்காகச் செய்தது போலவே, நீங்களும் சிவராத்திரி நன்நாளில் ஈசனை முழுமையாக நினைத்து, லிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அதோடு, குறிப்பிட்ட மூலிகைப் பானங்களையும் உணவுகளையும் உட்கொண்டு வந்தால், உடலில் உள்ள தீராத வியாதிகள் அனைத்தும் குணமாகும் என்பதுடன், ஆயுள் நீட்டிக்கும் என்பதும் உறுதி.

====================================


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் சிவராத்திரி கொண்டார்கள் தெரியுதுங்களா? அதனால வந்து ஆயுள் நீட்டிக்கும். 


=====================================

# நீங்கள் செய்ய வேண்டியது - சிவராத்திரி அன்று 

=====================================


குருநாதர் :-  அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட அன்றைய தினத்தில் தான், நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய, நிச்சயம் அலைகள் அதிகமாக இருக்கும். நிச்சயம் தன்னில் கூட. பின் ஏன், எதற்கு, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட இதனால், நிச்சயம் ஏன் பின் இராவணன், நிச்சயம் தன்னில் தூக்கி பின் வீசினான். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் வில்வ இலைகளை. ஏன் ஆடியது? நிச்சயம் தன்னில் எதற்கும் கூட பன்மடங்கு. 


குருநாதர் :-  இதனால், நிச்சயம் தன்னில் கூட அன்றைய தினத்திலே, நிச்சயம் தன்னில் கூட சக்திகள் அதிகமாகும். எவ்வாறு என்பதெல்லாம் எங்கு, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இன்னும் கூட. 


எதை என்று அறிய சற்று, அதாவது ஒவ்வொரு எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட பின் வருடத்திற்கு , பின் நிச்சயம் பின் ஐந்து அல்லது ஆறு முறை, நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது பூமி ஆனது சுழலும் வேகம் குறைவு  நிச்சயம் தன்னில் கூட. 


பின், அதாவது ஆறு ஆறு அறிந்தும் புரிந்தும் கூட, பின் எதை என்று கூற,  ஐந்து ஐந்து முதல் ஆறு, நிச்சயம் தன்னில் கூட ஐந்து முதல் ஆறு, நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, எதை என்று அறிந்து கூட. 


இதனால் பின் ஒரு நாள், நிச்சயம் தன்னில் கூட இவ்வேகம் அதிகரிக்கும் பொழுது, நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு அன்று வேண்டிக்கொள்வது, நிச்சயம் நடக்கும். 


அதுமட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட அன்று, நிச்சயம் தன்னில் கூட வெறும் பின், அதாவது பின் வயிற்று தன்னில் கூட, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் பின் உட்கொண்டால், நிச்சயம் தன்னில் கூட பூமியின் பின் வேகம் அன்று பின் அதிகமாக இருக்கும். நிச்சயம் தன்னில் கூட இதனால் உடனடியாக கிடைத்த பின், அதாவது பின் எவை என்று வேண்டியவனை, நிச்சயம் கிடைக்கும். 


=====================================

வாக்கு சுருக்கம் :  சிவராத்திரி போன்ற விசேஷமான தினங்களில் பிரபஞ்ச அலைகளின் வீரியம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு முறை பூமியின் சுழற்சி வேகம் குறையும் போது, ஒரு குறிப்பிட்ட நாளில் அவ்வேகம் மீண்டும் அதிகரிக்கும். அந்தச் சமயத்தில் வெறும் வயிற்றில் மூலிகைகளை உட்கொண்டு இறைவனை வேண்டினால், வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறும். இதனாலேயே இராவணன் வில்வ இலைகளைக் கொண்டு வழிபட்டார்; அந்தச் சக்தியானது பன்மடங்கு பலனைத் தரவல்லது. பூமியின் வேகம் அதிகரிக்கும் அந்த உன்னத நேரத்தில் நாம் வைக்கும் கோரிக்கைகள் விதியையே மாற்றும் வல்லமை கொண்டவை.

======================================





(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை,  சிவராத்திரி ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.