“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, February 12, 2026

சித்தர்கள் ஆட்சி - 598 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 7

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 7 (நிறைவு பகுதி)


நாள் : 7/02/2026 (சனிக்கிழமை) 

இடம் : ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயம், சாய் சரணாலயம், கொட்டாஞ்சேனை, கொழும்பு.

அகில இலங்கை அகஸ்திய மன்றம்.



இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை வாக்கு - சிவராத்திரி ரகசியங்கள் -  பகுதி 7 (நிறைவு பகுதி)



இவ் தொடர் வாக்கின் அனைத்து பகுதிகள் தொகுப்பு :- 

சித்தர்கள் ஆட்சி - 592 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 1

சித்தர்கள் ஆட்சி - 593 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 2

சித்தர்கள் ஆட்சி - 594 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 3

சித்தர்கள் ஆட்சி - 595 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 4

சித்தர்கள் ஆட்சி - 596 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 5

சித்தர்கள் ஆட்சி - 597 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 6

சித்தர்கள் ஆட்சி - 598 :-  சிவராத்திரி ரகசியங்கள் - பகுதி 7


====================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

====================================


=============================================

# அனைத்து புத்தகங்கள் நலமாகத்தான் எழுதி வைத்தார்கள் அன்று.

=============================================


குருநாதர் :- நல்விதமாக எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறெல்லாம் நிச்சயம் இருந்தால் பின் மனிதன் வாழ்ந்து விடுவானே என்று, பின் வரக்கூடிய நேரத்தில் எல்லாம் புத்தகங்கள் பின் எது என்று கூட எழுதி வைத்தார்கள் அன்று நலமாகத்தான். 


=============================================

# கெட்ட எண்ணத்தால் மனிதன்  மாற்றி அமைத்து விட்டான்.

=============================================


குருநாதர் :-  ஆனாலும் பின் மனிதன் நிச்சயம் கெட்ட எண்ணத்தால் மாற்றி அமைத்து விட்டான் அவ்வளவுதான். 



=========================================

# இறைவனை உண்மைகளை மாற்றி எழுதிய மூடர்கள்.

=========================================


குருநாதர் :- ஏனென்றால் இறைவனை பிடித்துக் கொண்டால் நன்றாக வாழ்ந்து விடுவான் மனிதன் என்பதெல்லாம் தெரியும். இதனால் நிச்சயம் சில மூடர்கள் இப்படி செய்துவிட்டனர், நிச்சயம் தன்னில் கூட மறைத்து வைத்தனர் உண்மைகளை கூட. இறைவன் இல்லை என்று கலியுகத்தில் சொல்ல வேண்டும் அல்லவா?


குருநாதர் :-  தாயே நிச்சயம் தன்னில் கூட ஞானிகளே வந்தார்கள். ஆனால் ஞானிகளே மனிதன் பின் பொய் என்று சொன்னார்கள். இதைவிட என்ன சான்று இருக்கின்றது?


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள்  :- ( "அம்மா, இப்போ இயேசுவை எடுத்துக்கோங்க, அவர் என்ன பண்ணாரு? நபிகள் நாயகம் என்ன பண்ணாரு? அவங்க எல்லாரையும் இந்த உலகம் எவ்வளவு தூற்றுச்சு! ஜீசஸைக் கல்லால் அடிச்சாங்க, சிலுவையைச் சுமக்க வச்சாங்க... இப்படி என்னென்னவோ கொடுமை பண்ணாங்க. ஞானிகளுக்கே இந்த நிலைமைன்னா, அவங்க கஷ்டப்பட்டு எழுதி வச்ச புத்தகங்களை மட்டும் விட்டு வைப்பாங்களா? அந்தப் புத்தகங்களை என்னென்ன பாடு படுத்தியிருப்பாங்க? அதான் இப்போ சொல்ல வராங்க, அவங்களுக்கே அந்த கதின்னா, அவங்க நூல்களுக்கு என்னென்னவோ நடந்திருக்கும்னு தான் சொல்றாங்க!" )

=====================================

# சிவராத்திரி ரகசியங்கள் - பூசையை ஆரம்பிக்கும் முன்னர்  முதலில் இராவணேஸ்வரர் போற்றி சொல்லி ஆரம்பிக்க வேண்டும்.

=====================================

# ஈசனை நேரடியாக வணங்குவதை விட , அடியார்களை நிச்சயம் வணங்கி வந்தாலே வெற்றி நிச்சயம். 

=====================================



குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அனைவரும் நிச்சயம் யான் சொன்னேன். நல்விதமாக சிவராத்திரி என்று நிச்சயம் தன்னில் கூட பின் ராவணன் நினைத்து நிச்சயம் தன்னில் கூட முதலில். ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட பின் ஈசனுக்கு நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது நேரடியாக பின் வணங்குவதை விட, தன் அடியார்களை நிச்சயம் வணங்கி வந்தாலே வெற்றி நிச்சயம். 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஈசனுக்கு என்ன பிடிக்குமா?


அடியவர் :- ராவணனை வணங்கினாலே போதும்ங்கிறது.



சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசனுக்கு ,  அவருக்கு என்ன பிடிக்குமா? ஈசன் அவரை வணங்குவது தான் பிடிக்காது. முதல்ல அவர் அடியார்கள். அதுல முதல் யாரு?


அடியவர் :- ராவணன் தான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ராவணன் தான் வருவார். 


========================================

# தர்ம தேவன் சனீஸ்வரனை வென்றவர் இராவணேஸ்வரனே.

# சனி தேவனை வெல்ல வேண்டும் என்றால் ராவணேஸ்வரனே உதவி செய்வான். 

========================================



குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட சனீஸ்வரனை வென்றவன் ராவணனை. இதனால் அனைவருக்கும் வாழ்க்கையில் கஷ்டங்கள். ஆனால் சனி தேவனை வெல்ல வேண்டும் என்றால் ராவணேஸ்வரனே உதவி செய்வான். 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த உலகத்துல சனி தேவனை சனி பகவானை யார் வென்றது?


அடியவர் :- ராவணனே வென்றார்.


சுவடி ஓதும் மைந்தன் :- ராவணன் மட்டும்தான்.


====================================

# அனைத்து கிரகங்களையும் வென்றவர் - இராவணேஸ்வரர் 

====================================


குருநாதர் :- ஏன் நிச்சயம் தன்னில் கூட அனைத்து கிரகங்களும் வென்றவன் ராவணன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் சொல்லப்போனால் எல்லா கிரகங்களையும் வென்றவர் . 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அவையும் பின் நிச்சயம் எப்படி வென்றான் என்று நிச்சயம் யாம் அறிவோம். அதையும் கூட சொல்லலாமா என்று ராவணனிடத்தில் முறையிட்டே யான் சொல்வேன்.


===================================

# சிவராத்திரி அன்று கட்டாயம் இராவணேஸ்வரரை  போற்றி போற்றி  துதிக்க வேண்டும். பலமுறை துதிக்க வேண்டும். 

==================================



குருநாதர் :-  இதனால் நல் பண்புகள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் ராவணனைப் பற்றி பின் எது என்று கூற , சிவராத்திரி என்று நிச்சயம் தன்னில் கூற , பின் பரிபூரணமாக பின் என்னென்ன எது எது எது பின் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துவிட்டு வாருங்கள். இன்பம் காணுங்கள் நிச்சயம் தன்னில் கூட. 


===================================

#  உண்மை நிலையை அறிந்து விட்டால் வெற்றி உங்களுக்கும் வரும். 

===================================


குருநாதர் :-  இதனால் எது என்று புரிய அதனால் தெரிந்து கொண்டு தெரிந்து கொண்டு.


குருநாதர் :-  ஆனால் மக்களே இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் தன்னில் கூட பணத்திற்காகவே நிச்சயம் தன்னில் கூட எது என்றது மனம் செம்மையாகவே நிச்சயம் தன்னில் இருக்க இதை நிச்சயம் தன்னில் கூட. ஆனால் உண்மை நிலை யாரும் அறிவதே இல்லை. உண்மை நிலையை அறிந்துவிட்டால் வெற்றி உங்களுக்கும் வரும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்போ எல்லாருக்கும் ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்தணும். இந்தச் சிவராத்திரின்னா என்ன? இது எதனால நடக்குது? இதுக்கெல்லாம் யாரு காரணம்? இதோட 'ரூட் காஸ்' (Root Cause) யாருன்னு பார்த்தா... அதுவும் நம்ம இராவணேஸ்வரன் தான்! அவரால தான் இது எல்லாமே நடக்குதுங்கிற உண்மையை இப்போ எல்லாருக்கும் புரிய வைக்கணும்!")


===========================================

# சிவராத்திரி அன்று கைகளில் நிச்சயம்  (வில்வ) இலைகள் இருந்தாலே போதுமானது

# (வில்வ) இலைகள் பிரபஞ்ச சக்திகளை உங்களுக்கு  ஈர்த்து கொடுக்கும்

===========================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட சிவராத்திரி அன்று பின் கைகளில் நிச்சயம் தன்னில் கூட பின் எது என்று புரிய சொல்லிவிட்டேன். பின் (வில்வ) இலைகள் இருந்தாலே போதுமானது. நிச்சயம் தன்னில் கூட சக்திகள் ஈர்த்து கொடுக்கும் பிரபஞ்ச சக்தி.


அடியவர் :- வில்வ இலைகள் இருந்தாலே போதும்.


சுவடி ஓதும் மைந்தன் :- கையில வில்வ இலைகள் இருந்து இருந்தாலே போதும். 


============================================

# கைகளில் வில்வ இலைகளை வைத்துக் கொண்டு, திருவாசகத்தை அனைத்து பதிகங்களையும்  படித்தாலே நிச்சயம் ஞானம் பிறந்துவிடும்.

============================================



குருநாதர் :-  நிச்சயம் தன்னில் உள்ள கைகளில்  நிச்சயம் தன்னில் கூட அவ் வில்வ இலைகளை வைத்துக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட பின் திருவாசகத்தை அனைத்து பதிகங்களையும் படித்தாலே நிச்சயம் தன்னில் ஞானம் பிறந்துவிடும். 


=====================================

# தீராத நோய் தீர்க்கும் திருநீறு மற்றும் வில்வ சிகிச்சை முறை

=====================================



குருநாதர் :-   அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் சில பின் எது என்று அறிய அப்படியே பின் விபூதியும் நிச்சயம் தன்னில் கூட எடுத்து வந்து, இல்லத்தில் நிச்சயம் அனுதினமும் பின் அதாவது பின் இரவுதோறும் நிச்சயம் பின் உள்ளங்கையில் நிச்சயம் தன்னில் கூட சில பின் விபூதிகளையும் கூட நிச்சயம் தன்னில் கூட, சில சில பின் அதாவது இலைகளையும் கூட, அதாவது வில்வ இலைகளையும் கூட, வைத்து பின் முழுவதுமாக பின் சிவனைப் போற்றி போற்றி பின் ராவணனை நினைத்து நிச்சயம் தன்னில் கூட, பல பின் நிச்சயம் நால்வர்களை கூட, இன்னும் பின் நாயன்மார்களையும் இன்னும் கூட பின் நினைத்து நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் திருவாசகத்தை அனைத்து பதிகங்களையும் மீண்டும் சொல்கின்றேன் படித்து பின் அத் திரு இலைகளை கையிலே வைத்துக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட பின் நாள்தோறும் நிச்சயம் தன்னில் சிறிது சிறிதாக இல்லத்தில் நிச்சயம் வைத்து சிறிது சிறிதாக இரவினிலே உட்கொண்டு வந்தாலே பல நோய்கள் தீரும் அப்பா. தீரும் அம்மையே.


=====================================

வாக்கு சுருக்கம் :- சிவராத்திரி நன்னாளன்று பிரபஞ்சத்தின் பேராற்றலை (Cosmic Energy) ஈர்க்கும் சக்தி வில்வ இலைகளுக்கு உண்டு. அன்று ஒருவரது உள்ளங்கையில் வில்வ இலைகளை வைத்துக்கொண்டு, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் அனைத்துப் பதிகங்களையும் முழுமையாகப் பாராயணம் செய்வதன் மூலம் ஒருவருக்கு மெய்ஞானம் பிறக்கும்.

இதே வழிமுறையை தினசரி ஒரு மருத்துவ முறையாகவும் (Spiritual Healing) மேற்கொள்ளலாம். ஒவ்வொரு நாள் இரவும் உங்கள் இல்லத்தில், சிறிதளவு திருநீற்றையும் (விபூதி) ஒரு சில வில்வ இலைகளையும் உள்ளங்கையில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சிவபெருமானைப் போற்றித் துதித்து, மகா சிவபக்தனான இராவணேஸ்வரனை மனதார நினைத்து, சமயக் குரவர் நால்வர் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களையும் வணங்க வேண்டும்.

இந்த நிலையில் திருவாசகப் பதிகங்களை முழுமையாக ஓதி முடித்த பின், அந்த உள்ளங்கையில் இருந்த விபூதியையும் வில்வ இலைகளையும் (இறை சக்தியைத் தன்னுள் ஈர்த்தவை) சிறிதளவு எடுத்து உட்கொண்டு வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், உடலில் உள்ள தீராத நோய்கள் அனைத்தும் இறைவனின் அருளால் நிச்சயம் குணமாகும்.

=======================================



அடியவர் :- போதும். வில்வ இலை. வில்வ இலை. சிவலிங்கம். லைட் ஃபுல்லா. திருவாசகம். 


அடியவர் 2 :-  இது மூணு போதும். வேற எதுவுமே வேண்டாம். வில்வ இலை. சிவலிங்கம். திருவாசகம். நீங்க எந்த லாங்குவேஜ்ல வேணாலும் பாடுங்க. எது வேணாலும் பிடிச்சா வேணா பாடிட்டு போங்க.


அடியவர் 3 :-  சிவராத்திரி என்று திருவாசகம் பாடினாவே, விபூதி நாலு விபூதியும் கையில வச்சுக்கிட்டு இது பண்ணிக்கிட்டு விபூதி வில்வ இலை வாழ்க்கையை ரொம்ப சிம்பிளாக்கிட்டார் தாத்தா. 


==================================

# ருத்ராட்ச மகிமை மற்றும் மனிதனின் அறியாமை குறித்த விழிப்புணர்வு

==================================


==================================

# வெறும் கண் விழிப்பு மட்டும் சிவராத்திரி ஆகாது என்பதுதான்  உண்மை

==================================



குருநாதர் :-  அது மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் ருத்ராட்சையும் கையிலே வைத்துக்கொண்டு பின் ருத்ராட்சையை நிச்சயம் பின் பின் நாள்தோறும் நிச்சயம் தன்னில் நீரில் கூட பின் இரவு ஊற வைத்து நிச்சயம் தன்னில் கூட பின் அதிகாலையில் நிச்சயம் தன்னில் கூட அவ்வளவு சக்திகள் நிச்சயம் உங்களுக்கும் வரும். இன்னும் ஞானங்கள் தெரியவில்லை மனிதனுக்கு ஏதோ சிவராத்திரியா… முழித்துக் கொள்வோம் என்றெல்லாம் இருக்கின்றான் முட்டாள் மனிதன்.


============================================

# வாக்கு சுருக்கம் :- வில்வம் மற்றும் விபூதி வழிபாட்டுடன், ருத்ராட்சத்தையும் முறையாகப் பயன்படுத்துவது அளப்பரிய பலன்களைத் தரும். ஒரு ருத்ராட்சத்தை நாள்தோறும் இரவு வேளையில் தூய்மையான நீரில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலையில் அந்த நீரை அருந்துவதுடன் ருத்ராட்சத்தைத் தரித்துக்கொள்வதன் மூலம் உடலுக்கும் மனதிற்கும் மகா சக்திகள் வந்து சேரும்.


இருப்பினும், இன்றைய மனிதன் சிவராத்திரியின் உண்மையான தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளாமல், வெறும் உறக்கத்தைத் தவிர்த்து விழித்திருப்பது மட்டுமே சிவராத்திரி என்று எண்ணி அறியாமையில் இருக்கின்றான். சிவராத்திரி என்பது வெறும் உடல் சார்ந்த விழிப்புணர்வு மட்டுமல்ல; அது ருத்ராட்சம், வில்வம் போன்ற இறைச் சாதனங்கள் மற்றும் திருவாசகப் பாராயணம் மூலம் பிரபஞ்சத்தின் பேராற்றலைத் தன்னுள் ஈர்த்து, ஞானத்தைப் பெறும் உன்னதமான வழிபாடாகும். இந்த ரகசியங்களை அறியாமல் சடங்குகளில் மட்டும் மூழ்கியிருக்கும் மனிதன், உண்மையான இறை சக்தியை அடையத் தவறுகிறான்.

============================================



==================================

# வெறும் கண் விழிப்பு மட்டும் சிவராத்திரி ஆகாது என்பதுதான்  உண்மை

==================================


சுவடி ஓதும் மைந்தன் :- ("சிவராத்திரினா முழிச்சிருக்கணும்னு தான் எல்லாருக்கும் தெரியுது. ஆனா, முழிச்சுட்டு என்ன பண்ணனும்னு தெரியலையே! இதையெல்லாம் (வில்வம், திருவாசகம், ருத்ராட்சம்) செய்யாம, வெறுமனே முழிச்சுட்டு இருந்தா ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனா நம்ம ஆளுங்க என்ன பண்றாங்க? சிவராத்திரி அன்னைக்கு தூங்காம இருக்கணும்ங்கிறதுக்காக டிவில டிராமாவை போட்டுப் பாக்குறது, மத்தவங்ககிட்ட உட்கார்ந்து கதை பேசுறது, அப்புறம் நல்லாச் சாப்பிடுறதுன்னு நேரத்தை வீணாக்குறாங்க. இப்படிப் பண்றதுல என்ன புண்ணியம் இருக்கு? வெறும் கண்விழிப்பு மட்டும் சிவராத்திரி ஆகாதுங்கிறதுதான் உண்மை!")


======================================

# விமானத்தை முதலில் கண்டுபிடித்தவர் - இராவணேஸ்வரர் 

======================================


குருநாதர் :-  தன் தாயை நிச்சயம் முதலில் பின் திருகோணமலையிலே நிச்சயம் தன்னில் கூட பின் காப்பாற்றினான். இதனால் அங்கிருந்தே நிச்சயம் எது என்று அறிய பின் விமானத்தில் வரப்பான் பின் ராவணனை விமானத்தை நிச்சயம் ராவணனையே கண்டுபிடித்தான். பின் ராவணனையே சாரும் விமானம் பின் எவையது முதலில் சென்றவன் பின் நிச்சயம் தன்னில் கூட விமானத்தில் முதல் பின் கண்டுபிடித்து சென்றவன் ராவணனே.




அடியவர் :- ("ரைட் பிரதர்ஸ் (Wright Brothers) எல்லாம் கிடையாதுப்பா! முதல்ல பிளைட்டை (Flight) கண்டுபிடிச்சது யாரு? நம்ம ராவணன் தான். அவரு பிளைட்டை எங்கிருந்து எடுப்பாரு தெரியுமா? சிவராத்திரி அன்னைக்கு திருகோணமலையில இருந்துதான் எடுப்பாரு. அவரோட முதல் 'ஸ்டார்ட்' (Start) அங்கதான் இருக்கும். திருகோணமலை தான் அவருக்கு ரொம்பப் பிடிச்சமான தளம். அதனாலதான் சொல்றேன், எல்லா மக்களும் திருகோணமலைக்குப் போகணும். இப்போ இங்க காலையில இருந்து வந்திருக்கீங்களே, நீங்க எல்லாரும் கூட அங்கதான் போகணும். ஏன்னா, அங்க போனாதான் அந்த உண்மையான சக்தியும் பலனும் உங்களுக்குக் கிடைக்கும்!")


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அப்பனே எங்கிருந்தாலும் வருவான் அப்பா (இராவணன்) விமானத்தில். 



====================================

# “அ” எதனை குறிக்கும்?  “ஆ” எதனை குறிக்கும்? 

====================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட “அ” எதனை குறிக்கும்?  “ஆ” எதனை குறிக்கும்? 


சுவடி ஓதும் மைந்தன் :- “அ”  எதை குறிக்கும்? ஆ எதனை குறிக்கும்? 


குருநாதர் :-  நிச்சயம் முதலில் இவை இரண்டுமே ஒன்றுதான். பின் சிறு வேறுபாடு இறைவனே  குறிக்கும். அகர முதல எழுத்தெல்லாம் முதல். 


========================

# “இ” எதனை குறிக்கும்? 

========================


குருநாதர் :- அடுத்து “இ” எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இன்பத்தை எதை என்று புரிய எழுதியுள்ளான் அல்லவா நிச்சயம் தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :- “இ”  என்ன குறிக்கும்?  அ  வும் இறைவன் தான். ஆ வும் இறைவன் தான். ஈ என்ன? அடுத்து இன்பபத்தப்பட்ட இன்பம். 


குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனை அடுத்து “இ”ராவணேஸ்வரனை நிச்சயம் தன்னில் கூட.  ( ‘இ’ராவணேஸ்வரன்)


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனாலதான் என்ன பண்ணாரு? இராவணேசன். இராவணேஸ்வரன். இ-ராவணேஸ்வரன். அதான் “ஈ” அடுத்து ?


========================

#  “ஈ” எதனை குறிக்கும்? 

========================


குருநாதர் :-   நிச்சயம் எவை என்று அறிய பின்பு பின் இவன் கண்டுபிடிப்பது பின் ஈகை ஆயிற்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து இவன் சொல்லித் தந்ததுதான் ஈகை.  “ஈ” -  ஈகை என்றால் என்ன? கொடுக்கிறது. தர்மம் செய்றது. தர்மம் செய்றது. 


========================

#  “உ, ஊ” எதனை குறிக்கும்? 

========================


குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் எவை என்று புரிய “ஊது” எவை என்று நிச்சயம் தன்னில் கூட பின் மற்றவர்களுக்காக பின் அனைத்தும் பின் தியாகம் செய். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு உயிரெழுத்துக்களுடைய அர்த்தம் சொல்றாங்க. ஊதுறது எங்க இருக்கும்? 


அடியவர் :- அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே. முதலில்  அ , ஆ இறைவனை பத்தி. 


அடுத்து “இ”  இராவணேஸ்வரர். 


அதுக்கப்புறம் “ஈ” ஈகை பிறருக்கு கொடுத்து உதவுதல். 


அதுக்கப்புறம் ஊது. ஓகேங்களா? ஊது. 


========================

#   “எ” எதனை குறிக்கும்? 

========================


குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட “எ” எதனை குறிக்கின்றது என்பதை நிச்சயம் நீங்கள் சொல்ல வேண்டும்.


சுவடி ஓதும் மைந்தன் :- “எ” எதனை குறிக்கின்றது?


அடியவர் :- எண்ணம்.


குருநாதர் :-   நிச்சயம் எவை இருந்தால் பின் இருந்தால் நிச்சயம் தன்னில் கூட ‘எ’ண்ணம் போல் வாழ்க்கை என்கிறார்களே. 


=====================================

# அகத்திய மாமுனிவர் தமிழ் எழுத்துக்களை ஏன் வடிவமைத்தார் ?

=====================================


குருநாதர் :-   நிச்சயம் தன்னில் கூட நல்லெண்ணமாக குறிக்கின்றது. நிச்சயம் தன்னில் கூட.  இவையெல்லாம் பின் ஏன் வடித்தேன் என்பவை எல்லாம் நிச்சயம் எது என்று புரிய இன்னும் பின் தமிழ் எழுத்துக்களின் சிறப்புகள் பற்றி எல்லாம் சொல்கின்றேன். 


=====================================

# தமிழ் எழுத்துக்கள் - இலங்கை இங்கிருந்து தான் தொடங்கியது. 

=====================================


குருநாதர் :-   தமிழ் எழுத்துக்கள் இங்கிருந்து தான் தொடங்கியது. 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே தமிழ் எழுத்துக்கள் எங்கிருந்து தொடங்கியது? தமிழ்நாட்டுல இல்ல. தமிழ்நாட்டுல இல்ல. சொரங்கமா இருக்கு. எட்டி எடுக்குறாரு. அப்ப அந்த தமிழ் எழுத்துக்கள் என்பவையும் இங்கிருந்து தான் ஆரம்பிக்குது.


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் உரையாடல்  :- ("இந்த உலகத்துக்கே இங்கிருந்துதான் ஆரம்பம், இதான் 'பேஸ்' (Base)! இங்க வச்சு ஒரு அடி அடிச்சா, அது உலகத்துல இருக்குற எல்லா நாட்டையும் தாக்கும்னு ஐயா ஏற்கனவே சொல்லிட்டாரு. உண்மையைச் சொல்லப்போனா ஸ்ரீலங்காதான் இந்த உலகத்துக்கே மையம். அங்க ஒரு பிரச்சனைன்னா, மொத்த உலகமே ஆட்டம் கண்டுடும். தமிழ், கூட்டுப் பிரார்த்தனைன்னு எதை எடுத்துக்கிட்டாலும் அதுக்கு ஸ்ரீலங்காதான் அடிப்படை. ஆனா, இங்க இருக்குற மக்கள் எதை வச்சு திங்க் (Think) பண்றாங்கன்னு எனக்குத் தெரியல. உண்மையான தமிழ் எங்க இருக்குன்னே தெரியாத அளவுக்கு நிலைமை இருக்கு. இப்போ நாம எல்லாரும் வேலையை விட்டுட்டாவது ஸ்ரீலங்காவுக்கு 'ரீ-லொகேட்' (Relocate) ஆகிப் போகணும் போல இருக்கு. அங்க இருக்குற திருகோணமலைக்கு நாம போயே ஆகணும், ஏன்னா அங்கதான் எல்லாம் தொடங்குது!" )


========================

# “ஓ” எதனை குறிக்கும்? 

======================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது “ஓ” நிச்சயம் தன்னில் கூட, அடுத்து பின் அதாவது, அப்பொழுதுதான் இறைவனைப் பற்றி ஓதுதலே வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவனைப் பற்றி ஓதுதல். இறைவனைப் பற்றி எப்ப ஓத வேண்டும்? இறைவனைப் பற்றி  எப்ப நம்ம படிக்க வேண்டும்? எல்லா எண்ணம் சரியா இருக்கணும். எல்லாமே இருக்கணும். அப்பதான் இறைவனைப் பற்றி ஓத வேண்டும். )


சுவடி ஓதும் மைந்தன் :-அப்புறம் என்ன வருது? 


========================

# “எதனை குறிக்கும்? 

========================


குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட “ஔ”வில் பல மந்திரங்கள் எது என்று புரிய நிச்சயம் எவை என்று கூற.


========================

# “ஃ ” எதனை குறிக்கும்? 

========================


குருநாதர் :-  பின் “ஃ” அக்கும் முடிந்து விடுகின்றது. வாழ்க்கை நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு வாழ்க்கை முடிய வேண்டுமே தவிர நிச்சயம் தன்னில் கூட.



அடியவர் :- ( இவ் எழுத்துக்களை மீண்டும் அங்கு தொகுத்து வழங்கினார் )


இறைவனைப் பற்றி அ  ஆ அதான் ரெண்டுமே ஆண்டவனை குறிக்குது. 

இ இராவணேஸ்வரரை குறிக்குது மூணாவது 

நாலாவது ஈ ஈகை தர்மத்தை படித்து குறிக்குது. 

அதுக்கப்புறம் உ. ஊதணும். அதாவது ஊது.  அந்த முறை நம்ம பிறருக்கு செய்யறதுக்காக அப்படின்றாரு. 

அப்புறம் “எ” எண்ணங்கள். எண்ணங்களை ஏற்றமா வச்சுக்கணும். ஏ 

அதுக்கப்புறம் தான் இறைவனைப் பற்றி ஓதணும். 

“ஃ ” அக்குல வாழ்கை 



சுவடி ஓதும் மைந்தன்:-  இந்த இந்த தமிழ் இங்க இருந்து தொடங்குனதுன்றாரு. 


குருநாதர் :-  அப்பனே பின்புதான் அப்பனே பின் அதாவது “கா”லில் தொடங்கும். அப்பா உள் கடவுள் அப்பனே பின் கா எழுத்துக்களில் 


அடியவர் :-  அப்பா 


சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்து மெய்யெழுத்து. அடுத்து மெய்யெழுத்து வராரு. அப்பதான் இதெல்லாம் இருந்தாதான் கடவுள் கால தொடங்குது. கா இக்கு உள்ளு இட்டு. 


குருநாதர் :-  அப்பனே இதைப்பற்றி தெளிவை இப்பொழுது அனைத்தும் படித்துக் கொண்டு வரட்டும். அப்பனே சிறப்பாக அதைப்பற்றி மற்றொரு வாக்கில் நான் எடுத்துரைக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன்:-  ("அப்போ 'கா' (க)-வுல தான் முதல்ல எல்லாம் தொடங்குது! ஏன்னா, நீங்க அந்த 'அ, ஆ, க, ங, ச' வரிசையில இருந்து வந்தாதான் கடவுளைப் பத்தித் தெரிஞ்சுக்க முடியும். 'க'டவுள் - அதுலயே 'உள்' இருக்கு, 'கட' இருக்கு. இதுக்கெல்லாம் நீங்க அந்த அடிப்படையான எழுத்துக்களை ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் (1st Standard) படிக்கிற மாதிரி முதல்ல இருந்து படிக்கணும். இதைப் பத்தி அவரு ஒரு இடத்துல சொல்லுவாரு. ஆனா அது எந்த இடம்னு நமக்குத் தெரியாது. ஏன்னா, அவரு (அகத்தியரோ அல்லது இறைவனோ) என்ன விரும்புறாரோ, அந்த இடத்துலதான் அதைச் சொல்லுவாரு. அவரு நினைச்சாதான் அந்த ரகசியம் நமக்கு வெளிப்படும்!" )


=========================

# “க” எதனை குறிக்கும்? 

=========================



குருநாதர் :-  எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாகவும் எடுத்துக்கொள்ளலாம். முதல் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின் கணபதியே அனைவரும் தொழுகின்றார்கள் அல்லவா? “க” 


அப்ப கணபதி முதல்ல ஏன் சொல்றாரு? கா கணபதி 


குருநாதர் :-  நிச்சயம் இன்னும் எது என்று அறிய சொல்லப்போனால் இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றது. 


==================================

# அடுத்து வருவது சிவராத்திரி. அனைவரும் சிறப்பாக கொண்டாடுங்கள்.

==================================

# எப்படி கொண்டாடுவது என்பதை யான் தெரிவித்து விட்டேன் அழகாக. 

==================================



குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் ஒவ்வொன்றாக புரிய வைத்தால்தான் நிச்சயம் தன்னில் கூட இதனால் அடுத்து வருவது சிவராத்திரி. அனைவரும் சிறப்பாக கொண்டாடுங்கள். எப்படி கொண்டாடுவதும் என்பதை நான் தெரிவித்து விட்டேன் அழகாக. 


======================================

# மனிதன் வருங்காலத்தில்  சிவராத்திரியை அதிகமாக கொண்டாடப் போகின்றான். இது சத்தியம். 

=====================================


குருநாதர் :-  ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட அதிகமாக பின் வருங்காலத்தில் நிச்சயம் தன்னில் கூட ஏனென்றால் இராவணேஸ்வரனை நான் இழுத்துவிட்டேன். இதனால் மனிதன் சிவராத்திரியை அதிகமாக கொண்டாடப் போகின்றான். இது சத்தியம். 


அடியவர்கள் :- ( மகிழ்ச்சியின் உச்சம் , கை தட்டல்கள் )


=====================================

# வருங்காலத்தில்  சிவராத்திரியோட மகிமை உலகத்துக்கே தெரியப்போகுது

=====================================


சுவடி ஓதும் மைந்தன்:-  ( "அப்போ அவருக்குப் பிடிச்சது என்ன? அதனாலதான் நான் இந்த இடத்துல நம்ம இராவணேஸ்வரனை இழுத்துவிட்டேன். இனி வர்ற காலத்துல பாருங்க, இந்தச் சிவராத்திரிங்கிறது இப்போ இருக்குற மாதிரி இல்லாம, இன்னும் ரொம்ப ரொம்பப் பெருசா போகப்போகுது! உலகமே வியக்குற அளவுக்கு அவ்வளவு விமர்சையா இதைக் கொண்டாடப் போறாங்க. இப்போ இருக்குறதை விட இன்னும் பல மடங்கு பிரம்மாண்டமா, அங்கங்க விசேஷமா இந்த விழா களைகட்டப் போகுது. சிவராத்திரியோட மகிமை உலகத்துக்கே தெரியப்போகுது!" )


===================================

# சகா வரம் பெற்ற இராவணேஸ்வரர் 

=================================== 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட எவர் தடுத்தாலும் உண்டு ஏற்றங்கள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. பின் இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் சாகா வரத்தை பின் பெற்றவன் இராவணன். நிச்சயம் தன்னில் கூட அதன் மூலம் பின் எதை என்று கூற எதனை வென்றான் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எது என்று புரிய. 


====================================

# இலங்கையை காத்தருளும் இராவணேஸ்வரர் 

====================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இத்தேசத்தையும் காத்தருளுகின்றான் அவனே.  இதனால் அவனைப் பற்றி சொல்லவே வேண்டும் இங்கு. 


=========================================

# இராவணேஸ்வரரின் மற்றொரு பெயர் - “சிங்கன்” 

=========================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் எவ என்று அறிய அறிய பின் இவனுக்கு மற்றொரு பெயர் பின் எவ என்று கூறுவேன். சிங்கன் என்று. 


சுவடி ஓதும் மைந்தன்:-   ( இராவணேஸ்வரரின் மற்றொரு பெயர்  என்ன? சிங்கம். சிங்கம். சிங்கம். சிங்கம். சிங்கம். சிங்களேஸ்வரன். சிங்களேஸ்வரன். சிங்களே. சிங்க. சிங்கம். சிங்கனேஸ்வரன். சிங்கனேஸ்வரன். அய்யா , புரியுதுங்களா? )


=========================================

# அனைத்தும்  சிறிது சிறிதாக புரிய வைத்தால் தான் நன்மை உண்டு.

=========================================


குருநாதர் :-  எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட இன்னும் ஞானங்கள் நிச்சயம் தன்னில் கூட பெற்று உங்களுக்கு சிறிது சிறிதாக புரிய வைத்தால் தான் நன்மை உண்டு. அனைத்தும் ஒரு எழுத்தில் பின் சொல்லிவிட்டால் பின் குழப்பங்களாக நீங்களே குழப்பிக் கொண்டு பின் மறு மற்றொருவர் மற்றொருவர் பேசிக் கொள்வீர்கள். என்ன என்ன என்றெல்லாம்? 


சுவடி ஓதும் மைந்தன்:-  ( "உங்களுக்கு எல்லாத்தையும் மொத்தமாச் சொன்னா புரியாது, அதனாலதான் கொஞ்சம் கொஞ்சமா எடுத்துச் சொன்னா மட்டும்தான் மண்டையில ஏறும். ஏன்னா, நீங்க வெளிய போகும்போது 'என்னடா இவரு இப்படிச் சொல்றாரு, அப்படிச் சொல்றாரு'ன்னு ஒருத்தருக்கு ஒருத்தர் குசு குசுன்னு பேசிக்கிட்டு குழம்பிடுவீங்க. அந்தத் தெளிவு இல்லாம போயிடக் கூடாதுல்ல? அதனால, எந்த விஷயத்தை எப்பச் சொல்லணுமோ, அப்ப அவரு கரெக்டா வரிசையா வந்து சொல்லுவாரு. இப்போதைக்கு மெதுமெதுவாத் தான் அந்த மர்ம முடிச்சுகளை அவுத்து விடுறாரு!" )

====================================

# யான் தேர்ந்தெடுப்பது அனைவரும் கஷ்டப்பட்டு இருபவர்களையே 

====================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இதனால் யான் தேர்ந்தெடுப்பது அனைவரும் பின் எவ்வாறு கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு இருப்பீர்கள் என்றவர்கள் எல்லாம், நிச்சயம் என் அருகிலேயே அமர்த்தித்தான் நிச்சயம் யான் செப்புவேன். 


சுவடி ஓதும் மைந்தன்:-  நான் யாரை இருந்து தேர்ந்தெடுக்கிறேன்னா ரொம்ப அடிபட்டு நூடுல்ஸ் ஆனவங்க பாரு. அவங்கதான் என் பக்கத்துல உட்கார வச்சு அவங்களுக்கு சொல்லுவேன். 


அடியவர் :- நீங்க எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான். அதனால கஷ்டப்பட்டு இருக்கீங்க. 


=========================================

#  சிறிதளாவது ஞானங்கள் இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும்

=========================================


குருநாதர் :-  நிச்சயம் சிறிதளாவது ஞானங்கள் இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும் அதனால்தான். 


========================================

# ஞானிகளின்  வாழ்க்கை கேட்பது பன்மடங்கு புண்ணியம் தரும்.

========================================


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனை பின் வணங்குவது ஒருமுறை. நிச்சயம் தன்னில் கூட அவர்களை நிச்சயம் இவ்வாறெல்லாம் ஞானிகளின் பின் வாழ்க்கை அதாவது கேட்பது பன்மடங்கு புண்ணியம் தரும். 


குருநாதர் :-  நிச்சயம் உங்கள் அனைவருக்கும் தேவையானது மெதுமெதுவாக கிடைக்கப்பெறும். இராவணேஸ்வரனே கொடுப்பான். 


அடியவர் :- வந்திருக்கிற எல்லாருக்கும் கேட்டதெல்லாம் கிடைக்கும். இராவணன் தான் கொடுப்பாருன்றாரு. அதே மாதிரி கேட்டாலே புண்ணியம். 


===================================

# சீரடி சாய்பாபா பற்றி சிறப்பான வைக்கும் காத்துக் கொண்டிருக்கின்றது.

===================================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட ஏதோ பின்னாலே அமர்ந்து கொண்டிருக்கின்றானே. அவனைப் பற்றி சிறப்பான வைக்கும் காத்துக் கொண்டிருக்கின்றது. நிச்சயம் சொல்வேன். அவனையும் வரவழைக்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட இருக்கின்றான். அமைதியாக இருக்கின்றான். அவ்வளவுதான். சேவைகள் செய்யட்டும். 


சுவடி ஓதும் மைந்தன்:-  ("நானே இவரை (சாய்பாபா ) முன்னாடி கூட்டிட்டு வருவேன். ஒரு காலத்துல மக்களுக்கு அவரு என்னவெல்லாம் பண்ணாரு? ஆனா ஒரு கட்டத்துல அமைதி ஆயிட்டாரு. இப்போ திருப்பியும் வந்து, எல்லாத்தையும் செய்யச் சொல்லி, மக்களுக்கு உண்மையைச் சொல்லி, 'இவரை வணங்குங்க, நீங்க எல்லா நன்மையும் பெறுவீங்க'ன்னு இவரைப் பத்தியே நான் சொல்லப்போறேன். இவரு சாதாரணமானவர் கிடையாது, நிறைய ஞானங்களைப் பெற்றவரு! இவரோட அந்தப் பெரிய அறிவையும், சக்தியையும் பத்தி நான் இனிமே நிறையச் சொல்லப்போறேன்!" )


===============================

# நிச்சயம் தலை நிமிரும் தர்மம்.

===============================


குருநாதர் :-  நிச்சயம் இத்தனை நிச்சயம் எவ்வாறெல்லாம் உலகத்தை காக்க ஞானிகள் நிச்சயம் பின் வந்தார்களோ அவர்களை நிச்சயம் பற்றி எடுத்துரைத்து, மீண்டும் வரவழைத்து விடுவேன். கவலையில் வேண்டாம். நிச்சயம் தலை நிமிரும் தர்மம்.


சுவடி ஓதும் மைந்தன்:-  ஞானிகள் எல்லாம் வந்துட்டா. தர்மம் எல்லா ஞானிகள் திருப்பியும் வந்துட்டா. எல்லாத்துக்கும் சொல்லிட்டா என்ன ஆகும்? தர்மம் தலை நிமிரும். 


================================

# கலியுகத்தில் தர்மம் தலை குனிய யாங்கள் விடப்போவதில்லை.

================================



குருநாதர் :-  கலியுகத்தில் கட்டாயம் பின் தலை குனிவே தர்மம் என்பது விதி. ஆனாலும் யாங்கள் விடப்போவதில்லை அது 


சுவடி ஓதும் மைந்தன்:-  கலியுகத்தில் தர்மம் என்ன ஆகணும்? தலை குனியும். தலை குனியும் தான் ஆகணும். ஆனால் நாங்க விடமாட்டோம். சித்தர்கள் நாங்க விடமாட்டோம். மாற்றி அமைப்போம். 


அடியவர் :- நாங்கள் மாற்றி அமைப்போம். 


==========================================

# இன்னும் இராவணேஸ்வரரின் வாழ்க்கை குறித்து வாக்குகள் உண்டு 

==========================================


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது எது என்று புரிய பின் எவ என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட இன்னும் பின் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். சித்தர்கள் ஆசிகள். நிச்சயம் பின் இராவணனை பற்றியும் இத்தேசத்தில் அழகாக எடுத்துரைத்து நிச்சயம் தன்னில் கூட இன்னும் ஞானங்களைக் காண மீண்டும் பின் வாக்குகள் செப்புவேன் நலமாக.


=============================================

# அனைவருமே சிவராத்திரி வாக்குகள் செல்லட்டும். 

=============================================


குருநாதர் :- இதனால் அனைவருமே சிவராத்திரி அன்று வாக்குகள் செல்லட்டும். 


=============================================

# சிவராத்திரி வாக்கை நிச்சயம் யானே  எடுத்துச் சென்று விடுவேன்.

=============================================





குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட யானே  எடுத்துச் சென்று விடுவேன். 


=========================================

# சிவராத்திரி அன்று இராவணனுடனே யானும் வருவேன் விமானத்தில். 

=========================================



குருநாதர் :-   நிச்சயம் தன்னில் அழகாக இதனால் அனைவருக்குமே நிச்சயம் எவை என்று கூற பின் இராவணனுடனே யானும் வருவேன். நிச்சயம் விமானத்தில். 


சுவடி ஓதும் மைந்தன்:-  ("இப்போ ராவணனைப் பத்திப் பேச ஆரம்பிச்ச உடனே, அவரே ரொம்ப குஷி ஆயிட்டாரு! 'அப்ப நானும் இராவணன் விமானத்துல வர்றேன்'னு அவரே சொல்லுறாரு. அகத்தியர் என்ன சொன்னாருன்னா, 'இனிமே திருகோணமலையில மகாசிவராத்திரி மகா சிறப்பா நடக்கணும்'னு சொன்னாரு. அங்க மக்கள் போகப் போக அந்த விசேஷம் இன்னும் பெருசா நடக்கும். இதை யாரு நடத்துவாரு தெரியுமா? இராவணன் அவரேதான் நடத்துவாரு! அங்கிருந்து ஆரம்பிச்சு, ஒரு செகண்ட்ல வேலையை முடிச்சுட்டு அடுத்த இடத்துக்குப் போயிட்டே இருப்பாரு. ஒரே நைட்ல (Night) இந்த உலகத்தையே தன்னோட விமானத்துல சுத்தி வந்துடுவாரு. நாம என்னவோ ரைட் சகோதரர்கள் தான் பிளைட்ட கண்டுபிடிச்சாங்கன்னு படிச்சிட்டு இருக்கோம், ஆனா பிளைட்ட  அதுக்கெல்லாம் மூலாதாரமே நம்ம ராவணேஸ்வரன் தான்!")


நலமாக  அப்பனே, நலன்களாக ஆசிகள். அப்பனே, நிச்சயம் மற்றொரு மற்றொரு வாக்குகள் கூட சிறப்பாக செப்புகின்றேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற, எம்முடைய ஆசிகள் லோபாமுத்திரையோடு அனைவருக்குமே ஆசிகள். ஆசிகள், அப்பனே. 


ஆசிகள்! 


ஆசிகள்! 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 7.2.2026 அன்று கொட்டாஞ்சேனை கொழும்பில் நடந்த ஞானியர்கள் போற்றி  கூட்டு பிரார்த்தனை,  சிவராத்திரி ரகசியங்கள் வாக்குகள் நிறைவு அடைந்தது )


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.