இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2
நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : திருகேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை
Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99
அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம், இலங்கை இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.
சித்தர்கள் ஆட்சி - 580 :- பகுதி 1 https://siththarkalatchi.blogspot.com/2026/02/580.html சித்தர்கள் ஆட்சி - 581 :- பகுதி 2 https://siththarkalatchi.blogspot.com/2026/02/581.html சித்தர்கள் ஆட்சி - 582 :- பகுதி 3 https://siththarkalatchi.blogspot.com/2026/02/582.html சித்தர்கள் ஆட்சி - 583 :- பகுதி 4 https://siththarkalatchi.blogspot.com/2026/02/583.html சித்தர்கள் ஆட்சி - 584 :- பகுதி 5 https://siththarkalatchi.blogspot.com/2026/02/584.html சித்தர்கள் ஆட்சி - 585 :- பகுதி 6 https://siththarkalatchi.blogspot.com/2026/02/585.html சித்தர்கள் ஆட்சி - 586 :- பகுதி 7 https://siththarkalatchi.blogspot.com/2026/02/586.html சித்தர்கள் ஆட்சி - 587 :- பகுதி 8 https://siththanarul.blogspot.com/2026/02/2102-8.html சித்தர்கள் ஆட்சி - 588 :- பகுதி 9 https://siththarkalatchi.blogspot.com/2026/02/588.html சித்தர்கள் ஆட்சி - 589 :- பகுதி 10 https://siththarkalatchi.blogspot.com/2026/02/589.html சித்தர்கள் ஆட்சி - 590 :- பகுதி 11 (நிறைவு பகுதி) https://siththarkalatchi.blogspot.com/2026/02/590.html
========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
========================================
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி
குருநாதர் :- அப்பனே அவை அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எடுத்து எடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் சிறிதே. அப்பனே அவையும் எடுத்துவிட்டால் தேசம் அழிந்துவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (அந்தப் புனிதமான சுராகல் துண்டுகளை ஏற்கனவே பலர் கண்டெடுத்து விற்றுவிட்டதால், அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த ஆன்மீக ஆற்றலும் (Power) வெகுவாகக் குறைந்துவிட்டது. தேசத்தைப் பாதுகாக்கும் அரணாக இருந்த அந்தப் தெய்வீகக் கற்களின் சக்தி தேய்ந்து கொண்டே வருகிறது. இன்னும் எஞ்சியிருக்கும் ஒரு சில துகள்களையும் மனிதர்கள் தங்கள் பேராசையினால் எடுத்துவிட்டால், அந்த இடத்தின் பாதுகாப்பு முற்றிலுமாக நீங்கிவிடும். அவ்வாறு அந்த ஆற்றல் முழுமையாக அற்றுப்போகும் நிலையில், தேசத்திற்குப் பெரும் அழிவு ஏற்படும் என்ற அபாயத்தை அகத்திய மாமுனிவர் எச்சரிக்கையாக விடுக்கிறார்.)
குருநாதர் :- அப்பனே இவை தன் பின் மனிதனுக்கு தெரியாமல், அப்பனே அதை செய், இதை செய் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, யான் காப்பாற்றுகின்றேன். எல்லாம், அப்பனே என்று, அப்பனே மனிதன், அப்பனே பின் சொல்லிக்கொண்டே இருப்பானப்பா.
=========================================
# ஏன் ஒரு ஞானி ஜீவசமாதி அடைகின்றார்?
=========================================
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது இதனாலதான், அப்பனே பல ஞானிகள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்கு ஒன்றும் பின் ஆகாமல் இருக்க, அப்பனே பல உயர் பண்புகளை அப்பனே, அதாவது பல உயர் சொற்களை சொல்லி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட சக்திகளை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அங்கங்க அப்பனே பின் நிச்சயம் சக்திகளை ஏற்று, அங்கங்கே தானாகவே இங்கு அழியும் வரும் என்பதெல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட உடம்பை எல்லாம் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, பின் இரும்பாக்கி, அப்பனே அங்கங்கும் புதைத்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, உயிர் மட்டும் அப்பனே பின் பறந்தோடியது.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (பெரிய ஞானிகள் பலரும் மனித உடல் என்பது அழியக்கூடியது என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, யோக தியானத்தின் மூலமாகத் தங்கள் உடலின் அணுக்களை ஒரு 'இரும்பு' போன்ற உறுதிமிக்க ஆற்றலாக மாற்றிக்கொண்டனர். அவ்வாறு ஆன்மீக சக்தியால் மாற்றப்பட்ட தங்கள் உடல்களை, அவர்கள் அந்த மண்ணிலேயே சமாதி நிலையில் (புதைத்து) நிலை நிறுத்தினர். உயிர் பிரிந்த பின்னரும், அந்த உடல்கள் அங்கேயே இருந்து ஒரு வலிமையான காந்த அதிர்வை (Vibration) அந்தத் தேசம் முழுவதும் பரப்பிக் கொண்டே இருக்கும். அந்தத் தெய்வீக அதிர்வுகள் மூலமாக உலகை பாதுகாப்பதே அந்த ஞானிகளின் ரகசியமாகும்.")
குருநாதர் :- அப்பனே இதேபோல அப்பனே பின் இயேசுவும், அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே நபிகள் நாயகம், அப்ப நிச்சயம் தன்னில் கூட இன்னும், அப்பனே புத்தரும், அப்பனே பின் பல பிறவிகளை , அப்பனே பின் எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக மக்களுக்காக, அப்பனே பின் படையெடுத்து, படையெடுத்து வந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட உடம்பை வைத்து, அப்பனே மக்களை பின் நிச்சயம் தன்னில் மக்கள் பின் நிச்சயம் பின் அதாவது அறிந்தும் கூட, அப்பனே மக்கள் நன்றாக இருக்கட்டும் என்று, அப்பனே நிச்சயம் பின் உயிர் மட்டும் மாறி மாறி, அப்பனே ஆனாலும் இன்றைய காலகட்டத்தில், அப்பனே நிச்சயம் தன்னில் மக்கள், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் உண்மை நிலையை தெரிந்து கொள்ள முடியவில்லையே.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (மகா ஞானிகள் பலரும் ஏன் இங்கு வந்தார்கள் என்பதன் உண்மையான நோக்கம் மக்களைக் காப்பதே ஆகும். தர்மம் அழியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தாங்கள் சொன்ன நற்போதனைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் தங்கள் உடல்களையே இந்த மண்ணில் அர்ப்பணித்தனர். ஒரு ஞானி உயிருடன் இருக்கும்போது சொல்வதை விட, அவர் சமாதி நிலையை அடைந்த பிறகு, அந்த இடத்தில் பதிவாகியுள்ள அவரது உடல் மற்றும் ஆன்மாவின் அதிர்வுகள் மக்களுக்கு அதிக ஈர்ப்பையும் நம்பிக்கையையும் தருகின்றன. அந்தப் புனித உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளிப்படும் ஆற்றல், அவர்கள் அன்று சொன்ன நல்ல கருத்துக்களை மக்கள் இன்றும் கேட்டு நடப்பதற்கு ஒரு தூண்டுகோலாக அமைகிறது. சுருக்கமாகச் சொன்னால், மக்கள் தர்மத்தை விட்டு விலகாமல் இருக்கவே ஞானிகள் தங்கள் உடல்களை இங்கே நிலைநிறுத்திச் சென்றுள்ளனர்.)
=================================================
# இரும்பாக மாற்றிய ஜீவசமாதி உடலால் தான் , மனிதன் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
=================================================
குருநாதர் :- ஆனாலும் அத்தர்மத்தை கூட மனிதன் பயன்படுத்தவில்லை, பயன்படுத்துவதில்லை. இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் உடம்பிற்கு உயிர் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கின்றது. இதனால்தான் மனிதன் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி என்ன சொல்றாரு? அந்த உடம்புக்கு என்ன இருக்குதாம்? பலம் இருக்குது. இன்னும் ஏன்னா அது மாதிரி வந்து உடம்பை வந்து ரணகளமாக்கி இரும்பு மாதிரி ஆக்கி என்ன பண்ணிருக்காங்க? வந்து புதைச்சிட்டாங்க. சக்தி நல்லா கடைபிடிச்சுக்கோங்கடா, வாழ்ந்துக்கோங்கன்னு சொல்லிட்டு இன்னும் அது வந்து என்ன இருக்குது? உயிர் போல இருக்கு. ஜீவ சமாதியே இருக்காங்க.
=========================================
# ஒரு ஞானி நிச்சயம் , ஒரே மாதத்திலே லட்சம் முறை உடம்பை எடுக்கலாம்.
=========================================
குருநாதர் :- அப்பனே ஒரு ஞானி, அப்பனே பின் நிச்சயம் லட்சம் முறை, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அதாவது பின் உடம்பை எடுக்கலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ஞானி வந்து லட்சம், ஒரு லட்சம், ஒரு லட்சம் உடம்பை எடுத்து பறந்து, பறந்து, பறந்து.
குருநாதர் :- அப்பனே இவை தன் ஒரே மாதத்திலே என்பேன் யான்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு மாதத்துல, ஐயா, புரியுதுங்களா? ஒரு மாதத்துல வந்து உடம்பை வச்சிட்டு அடுத்து இன்னொரு உடம்பு எடுப்பார்.
குருநாதர் :- அப்பனே இதற்கு எவை என்று அறிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறெல்லாம் அப்பனே பின் உண்மை நிலை தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
==============================================
# கேதுவின் ஆதிக்கம் திருக்கேதீஸ்வரம் இங்குதான் அதிகம் உள்ளது.
==============================================
குருநாதர் :- இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், புரிந்தும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில், அப்பனே இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட நடைபெறும். அதாவது நிச்சயம் தன்னில் கூட கேதுவின் ஆதிக்கம், அப்ப நிச்சயம் தன்னில் கூட இங்குதான் அதிகம் உள்ளது என்பேன் அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கேதுவின் ஆதிக்கம் என்ன இருக்குதாம்? இந்த கோயில்ல கூட இருக்கு. இந்த கோயில்ல தான் இங்கதான் அதிகமா இருக்குதாம். அதனோட ரேயஸ் , கேதுவோட ரேடியேஷன் என்ன இருக்குதாம்? உலகத்துல இங்கதான் இருக்குது.
============================================
# கலியுகத்தில் கேதுவாவன் பலமடைந்து கொண்டே வந்தால், மனிதன் பொய்யை உண்மையாக்குவான். உண்மையை பொய்யாக்குவான். மனிதன் பைத்தியம் போல் திரிவான். கேது சரியாக இருந்தால்தான் சரியான சிந்தனையே வரும்.
============================================
குருநாதர் :- அப்பனே ஆனால் கலியுகத்தில் நிச்சயம் பின் அதாவது கேதுவாவன், நிச்சயம் தன்னில் கூட பலமடைந்து கொண்டே வந்தால், நிச்சயம் பின் அதாவது உண்மை நிலை என்னவென்று தெரியாது. பின் அதாவது பொய் எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பொய்யை உண்மையாக்குவான். பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது உண்மையை பொய்யாக்குவான். மனிதன் பைத்தியம் போல் திரிவான். எது உண்மை, எது என்று தெரியாமல். அதாவது கேது சரியாக இருந்தால்தான் சரியாகவே பின் எண்ண முடியும். அப்படி இல்லை என்றால் பைத்திய நிலை பின் ஆகிவிடுவார்கள்.
குருநாதர் :- நிச்சயம் இல்லத்திலே இப்பொழுதெல்லாம் இதுபோல்தான் நடந்து கொண்டிருக்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- வீட்ல இதுபோல தான் சண்டை போட்டு இருக்காங்க.
====================================
# ஸ்ரீ ராமபிரான் அறிந்த , திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்த ரகசியங்கள்
====================================
(அடியவர்கள் இந்த வாக்கினை மேலும் படிக்கும் முன்னர் கூகிள் மேப் மூலம் - “பாலாவி தீர்த்த குளம் , திருகேதீஸ்வரம்” இன்று தேடி இவ் தீர்த்தம் அதனை தெரிந்து கொண்டு இவ் வாக்கினை படிக்கச் நன்று)
பாலாவி தீர்த்த குளம் - https://maps.app.goo.gl/xiYsJnArwkoa1Bm3A
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் அறிந்தும், அறிந்தும் நிச்சயம் ஞானியான பின் ராமன் இதை நிச்சயம் அறிந்தான். இதனால் நிச்சயம் தன்னில் கூட இதனால் பல்வேறு வழிகளில் நிச்சயம் பின் இங்கு எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் அவன் அறிந்தும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பல வழிகளிலும் கூட நிச்சயம் தன்னில் கூட இங்கு இருக்கும் பின் நீரினை பல அதாவது உலகத்திற்கே எடுத்துச் செல்வோம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் பாடுபட்டான்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (ஐயா, ஒரு ஞானியாக விளங்கிய ஸ்ரீ ராமர், இந்த இடத்திலுள்ள தண்ணீரில் இருக்கும் தெய்வீக அதிர்வலைகளை (Vibration) உணர்ந்து, அதனைப் போற்றிப் பாதுகாக்கப் பாடுபட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் தீர்த்தத்தின் மகிமையை உணர்ந்த அவர், இங்கிருக்கும் பாலாவி குளத்தின் புனித நீரை அனைத்துத் திருக்கோயில்களுக்கும் கொண்டு சென்று தீர்த்த தரிசனமாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்; அதன் மூலம் அந்தத் தீர்த்தத்தின் சக்தி எல்லா இடங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது.)
குருநாதர் :- எதை எவை என்று புரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம். அதனால் நிச்சயம் தன்னில் கூட பின் மனதை எவை என்று புரிய நிச்சயம் தன்னில் இவ்வாறு பின் அழுக்குகளாக நினைக்கும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் கேது சேகரித்து, இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக பின் ஒவ்வொரு பின் திருத்தலத்திற்கும் ஒவ்வொரு சக்தி உள்ளது என்பதற்கு நிச்சயம் பின் இவ்வாறு இங்கு நீரினை பின் திருத்தலத்தின் அருகே விட்டுவிட்டால், நிச்சயம் பின் வந்து பின் அதாவது பின் நீராடினாலும் அறிந்தினாலும் நிச்சயம் சில சில பைத்தியங்கள் தெளிவாக என்பது பின் நிச்சயம் தன்னில் கூட ராமனுக்கு, தெரியும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (புனிதமான இந்த ஆலயத்தின் பாலாவி தீர்த்தம் , குளத்தின் நீரை எடுத்து மற்ற ஆலயங்களின் தீர்த்தங்களோடு இணைப்பதன் மூலம் ஒரு பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை உணர்ந்த ராமர், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவ்வாறு இந்தத் தீர்த்தத்தைக் கலந்து அந்த நீரைக் குடிக்கும்போது, மனிதர்களுக்கு ஏற்படும் மனக்குழப்பங்கள், அதீத மன அழுத்தம் (Stress) மற்றும் திடீர் மாற்றங்களினால் வரும் 'பைத்தியம்' போன்ற நிலைகள் நீங்கித் தெளிவு பிறக்கும் என்பது அவரது ஆழமான நம்பிக்கையாக இருந்தது. அதாவது, மனதை வாட்டும் குழப்பங்களுக்கும் ஸ்ட்ரெஸ்ஸிற்கும் ஒரு மருந்தாக இந்தத் தீர்த்தக் கலப்பு அமையும் என்பதை அவர் உணர்த்தினார்.)
======================================
# ஸ்ரீ ராமர் - அனுமானுக்கு இட்ட மகத்தான கட்டளை
======================================
குருநாதர் :- இதனை எவை என்று புரிய இதனால் நிச்சயம் பின் அதாவது அனுமானும் அளித்து நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் பின் நிச்சயம் அதாவது இங்குதான் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், புரிந்தும் மூலஸ்தானம்,, மூலமே இருக்கின்றது. இவை தன் எடுத்து நிச்சயம் பின் பாய்ச்சிக என்றெல்லாம். இதனால் நிச்சயம் தன்னில் கூட அங்கும் இங்கும் எதை என்று புரிய? பின் பின் அனுமானாலும் கூட அறிந்தும், புரிந்தும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (ஸ்ரீ ராமர் இந்தச் சேவையைச் செய்வதற்காக அனுமனை அழைத்து, அந்தப் புனித நீரை பல்வேறு திருத்தலங்களுக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இந்தத் தீர்த்தத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, பல இடங்களுக்கு இதனைக் கொண்டு போய் சேர்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். இவ்வாறு புனித நீரை மற்றவர்களும் பாவித்து நலம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அந்தத் தீர்த்தத்தைப் பல ஊர்களுக்குக் கொண்டு செல்லும் முயற்சியை ராமர் முன்னெடுத்தார்.)
==========================================
# ஸ்ரீ ராம பக்த ஹனுமானின் சிந்தனைகள்
==========================================
குருநாதர் :- அவை எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரியாமல் இருந்தாலும், நிச்சயம் தன்னில் கூட இவை போன்று ஆனாலும், பின் அனுமான் நிச்சயம் ஆனாலும், நிச்சயம் பின் அதாவது எவை என்று அறிய பின் அதாவது பின் கலியுகத்தில் கலியுகம் தொடங்கும். நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் மனிதன் அழித்து விடுவான். இதனால் ஓரிடத்திற்கு நிச்சயம் தன்னில் கூட பின் வரட்டும். எதை என்று புரிய என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( ஸ்ரீ ராமரின் கட்டளையை ஏற்றுக்கொண்டாலும், வரப்போகும் கலியுகத்தின் தன்மையை நினைத்து அனுமன் தனது தயக்கத்தை வெளிப்படுத்தினார். "இப்படி எல்லாம் செய்ய முடியாது" என்று கூறிய அனுமன், கலியுகத்தில் பாவங்கள் அதிகரிக்கும் என்றும், மனிதர்களின் செயல்களில் தூய்மையின்மை (அழுக்குகள்) நிறைந்திருக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். அத்தகைய சூழலில் மனிதர்களின் கைகளில் அதிகாரம் இருக்கும்போது, புனிதமான இந்த பாலாவி தீர்த்தத்தின் தன்மையைப் பேணுவதும், யாரும் தொட முடியாத அளவுக்கு அதன் புனிதத்தைக் காப்பதும் சாத்தியமற்றதாகிவிடும் என்ற யதார்த்தமான கவலையை அவர் முன்வைத்தார். )
========================================
# கலியுகத்தில் - மறைக்கப்பட்ட ராமாயண காவியத்தின் ஒரு உண்மை சம்பவம்
========================================
குருநாதர் :- ஆனாலும் அறிந்தும், புரிந்தும் எப்படியாவது நிச்சயம் தன்னில் எடுத்துச் செல்வோம் என்பவை எல்லாம் நிச்சயம் எதற்கு எதை என்று கூட முழு முயற்சியோடு ஆனாலும் இவை தன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எடுத்துச் சென்றான். ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், புரிந்தும் கூட.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (கலியுகத்தின் சவால்கள் மற்றும் அனுமனின் தயக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும், எப்படியாவது இந்தத் தீர்த்தத்தைப் பல இடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ராமர் உறுதியாக இருந்தார். அந்தப் புனித நீரின் நன்மைகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அவர் தொடர்ந்து விடாமுயற்சி செய்து, அந்தத் தீர்த்தத்தை வெற்றிகரமாகப் பல இடங்களுக்கு எடுத்துச் சென்றும் இருக்கிறார். )
குருநாதர் :- ஆனாலும் இவை தன் நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் மறைத்துப் படவிட்டது.
சுவடி ஓதும் மைந்தன் :- இது வந்து கலியுகத்தில் என்ன ஆச்சு? மறைக்கப்பட்டது.
குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட மனிதனால் நிச்சயம் பின் சரியாக சிந்தனை இல்லாமல் தான் வாழ முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாங்க? இது வந்து மறைச்சு போச்சு எல்லாம். ஆனா இருக்குது அங்கங்க நீர் நிலைகள் எல்லாம் இருக்குது. வந்து ஆனா என்ன பண்ணிட்டாங்க? இது வந்து மறைச்சிட்டாங்க.
============================================
# எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டாலும் ஏன் தோல்விகள் உண்டாகின்றது ?
============================================
குருநாதர் :- எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் அறிந்தும், புரிந்தும் இவை தன் நிச்சயம் பின் புரியாமலும், பின் இயங்கி எதை என்று தெரியாமலும் மனிதன் எவ்வளவு பின் அதாவது முயற்சிகள் மேற்கொண்டாலும் ஏன் தோல்விகள் எதை என்று புரிய இக் கலியுகத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் வந்து வாழ்வதற்கு பெரிய முயற்சிகள் எல்லாம் பண்ணி இருக்காங்க. வந்து ஆனால் அனைத்தும் தோல்வியே முடிவு போன்றது.
குருநாதர் :- ஏன் எதற்கு நிச்சயம் தன்னில் கூட பின் நிறைந்துவிட்டது. நிச்சயம் தன்னில் கூட பின் ராகுவும் பின் எதை என்று புரிய? கேதுவும் நிச்சயம் தன்னில் கூட பின் அழுக்குகள்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஏனென்றால் ராகுவும் கேதுவும் அழுக்காயிட்டாங்க. அந்த கிரகமானது என்ன ஆயிடுச்சு? வந்து அழுக்காகி, அழுக்காயிடுச்சு.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இதனால் எதை என்று புரிய? இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுதோ எதை என்று புரிய? பின் கேதுவானவன் பின் ஒருமுறை இதை எது என்று பின் அழுக்குகளோடு இங்கு வந்து நிச்சயம் தன்னில் கூட தன் அழுக்கினை பின் நிச்சயம் தன்னிலே போக்கிக் கொண்டான். மீண்டும் பின் போக்குவதற்கு வழிகளும் இல்லை. நிச்சயம் தன்னில் கூட பின் அப்படியே நிற்கின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- இதுல கேதுவானவர் என்ன பண்றாரு?
அடியவர் :- இங்க வந்து குளிச்சிருக்காரு.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த வந்து குளிச்சிக்கிறாரு. ஆனால் சுத்தமாயிட்டாரு. ஆனா இப்பொழுது என்ன?
அடியவர் :- மறுபடியும் அழுக்காகி…
சுவடி ஓதும் மைந்தன் :- மறுபடியும் அழுக்காகி, ஃபுல்லா அழுக்காயிடுச்சு. அப்படியே நிக்கிறார்.
குருநாதர் :- நிச்சயம் இவ்வாறாக பின் அதாவது நிச்சயம் பின் கேதுவான் பின் வந்தாலும் நிச்சயம் மக்கள் பல கோடி மக்கள் அழிவார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணுவார்? வந்து அப்படி வந்து திருப்பியே வந்து ஞானம் அவர் வந்து இது வந்து இது பண்ணாலும் என்ன பண்ணுவாங்களாம்? பல கோடி மக்கள் அழிவார்கள்.
குருநாதர் :- ஆனால் நிச்சயம் தன்னில் கூட இதை இறைவன் தான் தீர்மானிக்க வேண்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து கேதுவானவர், கேது கிரகத்தை சுத்தப்படுத்துவது யார்? இறைவன் தான் தீர்மானிக்கணும்.
குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட இறைவன், பின் எவை என்று அறிய, பின் என்ன? எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் வந்து என்ன சொல்ல? ஏது சொல்ல?
குருநாதர் :- இதனால் மனிதன் திருந்தினால் மட்டுமே நிச்சயம் நல்லெண்ணத்தோடு உயர்ந்த பின் சிந்தனையோடு பின் வாழ்ந்தால் மட்டுமே மீண்டும் கேதுவின் பின் நிச்சயம் பின் அழுக்கானது எது என்று அறிய? நிச்சயம் தன்னில் கூட இதனால் உயர்ந்த எண்ணங்களை மனிதன் வளர்த்துக் கொண்டாலே நிச்சயம் தன்னில் கூட படிப்படியாக நிச்சயம் குறைந்துவிடும். இதனால்தான் இவை தான் நிச்சயம் தன்னில் கூட பின் பலபல ஞானிகள் வந்து வந்து பின் நிச்சயம் நல்லதே சொல்லிட்டு சென்றார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (இந்த நிலையில், மறைந்து போன அந்தப் புனிதத்தை மீட்டெடுக்க நம்மை நாமே சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நாம் புறத்தூய்மையுடன் மட்டுமின்றி, அகத்தூய்மையோடு நம் எண்ணங்களைச் சீராகவும் நல்லதாகவும் வைத்துக்கொண்டால் மட்டுமே கேதுவின் ஆதிக்கம் நம்மைச் சுத்தப்படுத்தி நல்வழிப்படுத்தும். அவ்வாறு எண்ணங்களில் தெளிவும் தூய்மையும் இருப்பவர்கள் மட்டுமே வாழ்வில் மேன்மையடைந்து நல்லபடியாக வாழ்வார்கள்; மாறாக, எண்ணங்கள் சிதறித் தூய்மையற்று இருப்பவர்கள் வாழ்வில் மீளமுடியாத கஷ்டங்களையும் துயரங்களையும் மீண்டும் மீண்டும் சந்திக்க நேரிடும்.)
குருநாதர் :- இவை தன் நிச்சயம் கேது கிரகம் பின் அதாவது நிச்சயம் அழுக்குகள் ஆக ஆக மனிதனுக்கு பின் நிம்மதிகள் கெட்டுப்போய்விடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப கேது கிரகம் இன்னும் அழுக்கு ஆக ஆக என்ன ஆகும்? மனுஷனுக்கு பிரச்சனை, பிரச்சனை, நிம்மதியா இருக்க மாட்டான். நிம்மதிவே இருக்க முடியாது மனுஷனால.
குருநாதர் :- நிச்சயம் எதை யோசிக்கின்றானோ அதை பின் நிச்சயம் அதற்கு தகுந்தார் போல் நடக்காது. மாறுபட்டதாகவே நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப நீங்க யோசிக்கிறீங்களா? நல்லதே செய்யணும்னு சொல்லிட்டு ஆனா என்ன நடக்கும்?
அடியவர் :- ஆப்போசிட்ல நடக்கும்.
அடியவர் 2 :- செய்ய முடியாது.
சுவடி ஓதும் மைந்தன் :- செய்ய முடியாது, செய்ய முடியாது.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதெல்லாம் இதனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக பின் இவையெல்லாம் நிச்சயம் பின் ஞானிகள் தெரிந்து வைத்திருந்தனர். அதனால்தான் பின் மனிதன் அழியக்கூடாது என்பதற்கு பல விஷயங்களில் கூட நிச்சயம் தன்னில் கூட ஞானிகள் எடுத்துரைத்தனர். ஆனாலும் அவையும் பின்பற்றவில்லையே.
சுவடி ஓதும் மைந்தன் :- இதனால்தான் பல விஷயங்களை ஞானிகள் மனிதர்களுக்கு எடுத்துச் சொன்னாங்க. அந்த விஷயத்தையும் பின்பற்றவில்லை.
குருநாதர் :- நிச்சயம் இன்னும் பின் அழுக்குகள் அதிகமானால் நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் மனிதனே உலகத்தைப் பின் அழித்து விடுவான்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது யான் பெரியவன், யான்தான் பெரியவன், நீ சிறியவன். எதை எதை என்று அறிய? நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாங்க?
அடியவர் :- நீ பெருசா, நான் பெருசா,
சுவடி ஓதும் மைந்தன் :- நான் பெருசா, நீ பெருசா, நான் பெருசு, நீ பெருசுன்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாங்க? அதிகார சண்டை. அதிகார சண்டை வந்துரும்ன்றாரு.
================================================
# மனிதன் கண்டுபிடித்து ஒளித்து வைத்திருக்கின்றான்…
================================================
குருநாதர் :- இப்பொழுதே மனிதன் அனைத்தும் கண்டுபிடித்து மறைவாக ஒளித்து வைத்துள்ளான். அவையெல்லாம் வெடித்தால் நிச்சயம் பின் முடிந்துவிடும்.
=================================================
# இறைவன் பூமியின் சூட்டினை அதிகப்படுத்திக் கொண்டே ….
=================================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இன்னும் எதை என்று அறிய பின் வர வர நிச்சயம் தன்னில் இறைவன் கூட நிச்சயம் எவை என்று அறிய நிச்சயம் பின் சூடினை பின் பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றான். அது சூட்டினால் நிச்சயம் அவை தன் கூட பின் நிச்சயம் வெடித்துப் போகும் அபாயம் வந்து கொண்டே இருக்கின்றது. அப்பொழுது மனிதன் நிச்சயம் அனைத்தும் தெரிந்து வைத்து என்ன பயன்? எவை பின் உண்மை நிலையில் தெரியாமல்.
==============================================
# நல்லதே நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் நல்லதே நடக்கும்.
==============================================
குருநாதர் :- எதை என்று புரிய இறைவன் நிச்சயம் தன்னில் கூட நல்ல எண்ணங்களுக்கு நல்லதே செய்வான் நிச்சயம் தன்னில் கூட.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் நல்ல மனசோடு இருக்கிறவங்களுக்கு நல்ல எண்ணங்கள் வருவதற்கு என்ன செய்வார்? எப்பவுமே நல்லதே தான் செய்வார்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் நிச்சயம் பின் நல்லதே நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் நல்லதே பின் நிச்சயம் நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால நல்லதே நினைச்சுக்கிட்டு இருந்தால் நிச்சயமாக நல்லதுதான் நடக்கும்.
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தீயவே நினைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் தீயவை நிச்சயம் நடக்கும். ஆனால் நிச்சயம் எவை என்று அறிய
சுவடி ஓதும் மைந்தன் :- நம்ம என்ன தீயவை நினைச்சுக்கொண்டே இருந்தால், தீயவை தான் நடக்கும்.
============================================
# மனிதன் செய்யும் அனைத்து செயல்களும் , முதலில் ராகு கேதுக்களுக்கு சென்று , பின்னர் வானில் உள்ள இறைவனின் நெருப்பு பிழம்பிற்கு சென்றுவிடும். இவ் பிழம்பு ரகசியங்களை அறிய பின்வரும் பதிவை படிக்கவும்.
============================================
சித்தன் அருள் - 2092
https://siththanarul.blogspot.com/2026/02/2092-2612026-7.html
============================================
குருநாதர் :- இதனால் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் அறிந்தும், புரிந்தும் கூட இதனால் பல சம்பந்தங்கள் இவ்வுலகத்திற்கு உண்டு. மனிதனாலே நிச்சயம் தன்னில் கூட இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய அதிகரிக்கின்றது. இதனால் நிச்சயம் தன்னில் கூட தாங்கள் தாங்கள் செய்யும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட வேலைகள், நிச்சயம் தன்னில் கூட இவ் ராகு கேதுக்களிடம் எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட பின் சென்று நிச்சயம் பின் இவை தன் நிரம்பியவுடன் நிச்சயம் பின் சொன்னேனேம், பின் அதாவது, பின் அதாவது நெருப்பு பிளம்பிற்கு சென்றுவிடும்.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (நமது எண்ணங்களும் நினைவுகளும் உச்சக்கட்டத்தை எட்டும் போது அவை எவ்வாறு மாற்றமடைகின்றன என்பதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை. குறிப்பாக, ராகு-கேது நிலைகளில் நினைவாற்றல் (Memory) அதன் அதிகபட்ச எல்லையைத் தொடுவதாகவும், அந்த பதிவுகள் முழுமை அடையும் போது அவை 'இறைவனின் நெருப்பு பிழம்பு' எனும் தத்துவத்திற்குள் ஐக்கியமாகும். இந்த நெருப்பைத் தான் இறைவன், திருவண்ணாமலை கூட்டுப்பிரார்தனையில் (சித்தன் அருள் - 2092) இவ் ரகசியம் உரைக்கப்பட்டது. நினைவாற்றல் எனும் நிலை முடிந்ததும், எல்லாம் அந்தப் பேரொளியில் முடிவடைகிறது.)
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்….. )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.