“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, February 24, 2026

சித்தர்கள் ஆட்சி - 571 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ஞானமலை முருகன் கோவில் வாக்கு!. (பானவரம் கோவிந்தச்சேரி. ராணிப்பேட்டை மாவட்டம்.)

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


23/2/2026 மாசி மாதம் கிருத்திகை அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: ஞானமலை முருகன் கோவில்.பானவரம் கோவிந்தச்சேரி. ராணிப்பேட்டை மாவட்டம்.



======================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
======================================

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.

அப்பனே, நலங்களாக அப்பனே, இன்னும் விசேஷ ஸ்தலங்களும் இங்கு இருக்கின்றது.

அப்பனே, அவை பற்றியும் கூட. அப்பனே, வருங்காலத்தில் யான் எடுத்துரைப்பேன்.

அப்பனே, இன்னும் அப்பனே, பல அப்பனே, வழிகளில் கூட, பின் புதிதாக எதை என்று அறிய.

ஆனாலும் அவையெல்லாம் பழையதே. 


=====================================
# 1. பூமியின் அடியில் புதைந்துள்ள ரகசியங்கள்: மனித குலத்தை காக்க மறைத்து வைக்கப்பட்ட ஆற்றல்கள்!
=====================================

ஆனாலும் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஈசன் எதை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவ்வாறாக பல வழியில் கூட, சில சில அப்பனே, பின் இறை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின், பின் அடியில் புதைந்துள்ளதப்பா. 

ஏன்?, எதற்கு? என்று சொன்னால், அப்பனே, அவை தன் அப்பனே, பின் நிச்சயம் அன்றைய மனிதர்கள், இவையெல்லாம் இருந்தால் மனிதன் பிழைத்துக் கொள்வான் என்பதற்கு நிச்சயம் தன்னில் கூட.

அதாவது சக்தி மிகுந்ததெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் புதைத்து விட்டனர், என்பேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே, கலியுகத்தில் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

அதாவது தர்மம் தலைக்கீழாக போய்க்கொண்டிருக்கின்றது என்று.

நிச்சயம் அவையெல்லாம், அப்பனே, மேலே வந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று அறிய, அப்பனே, பின் தர்மம், அப்பனே, பின் நிச்சயம் தலை மேல் மேல் எழும்புமப்பா.


அதனால்தான் அப்பனே, இத்தனை இத்தனை எதை என்று புரிய, அப்பனே.

========================================
# 2. கலியுகத்தின் சாபம்: தங்கள் கஷ்டங்களுக்கு இறைவனைப் பழிதூற்றும் மனிதர்கள்!
========================================

ஏன்,? எதற்கு? கலியுகத்தில், அப்பனே, பின் இறைவன், அப்பனே, தவறானவன் என்ற எண்ணம், அப்பனே, மனதில், அப்பனே, பின் ஏற்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

ஆனாலும் அப்பனே, உண்மை நிலை, அப்பனே, பின் புரியாமல் மனிதன், அப்பனே, அதாவது வருங்காலத்தில், அப்பனே, பின் நோய்களோடும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கஷ்டங்களோடும் பின்னி வாழ்வான் என்பேன் அப்பனே.

ஆனாலும் ஏன்?, எதற்கு? இவ்வாறாக வாழ்கின்றோம்? என்று தெரியாமல், நிச்சயம் தெரியாமலே வாழ்ந்திடுவான் என்பேன் அப்பனே.

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, இதனால் அப்பனே, பின் தான் தான் செய்த தவறு என்னவென்று?? யோசிக்க மாட்டானப்பா.

இவ்வாறு பின் நிச்சயம் இறைவன் மேலே பழி போடுவானப்பா.

பின் அவ்வாறாக, பின் படைத்தவன் மேலே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பழிகள் பின் போடுகின்ற பொழுது, அதுதான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் நன்றி கெட்ட நிச்சயம். அதாவது நம்பிக்கை துரோகம்.

அவ்வாறு நம்பிக்கை துரோகம், அப்பனே, யாருக்கு? செய்கிறார்கள் மனிதர்கள் என்றால், இறைவனுக்கே செய்கின்றார்கள் என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே, நிச்சயம் பல வழிகளில் கூட, அப்பனே, எதை என்று கூற மனிதன் வாழ்வானா,???? அவனைச் சார்ந்தவனும், அப்பனே, எப்படி?? நிச்சயம் தன்னில் கூட!!

இறைவனுக்கு, அப்பனே, பின் நம்பிக்கை துரோகம் எது என்று அறிய, அப்பனே.

ஆனாலும் இறைவன், அப்பனே, அமைதியாக தான். அதாவது ஆற்றல், நிச்சயம் தன்னில் கூட. அவ்வாற்றல், அதாவது நிச்சயம் இங்கு, பின் அறிவியல் வழியாகவே.

அப்பனே, அவ்வாற்றலானது மிகுந்த பலத்துடனே, அப்பனே, பின் நிச்சயம் யார் ஒருவன், பின் சொல்கின்றானோ??, அவனிடத்தில் யாரெல்லாம் இருக்கின்றார்களோ??, அவ்வாற்றல் அவனை அழித்துவிடும்.


இதுதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய, அப்பனே.

இதனால் எதை என்று அறிய, அப்பனே. எதை நினைக்கின்றீர்களோ, அதாவது எத்தனை முறை, அப்பனே, எங்கெங்கு? சொன்னேன், நீங்கள் எதை, பின் நிச்சயம் நல்லதாகவே நினைத்தால், நல்லதாகவே நடக்கும்.

அனைவருக்குமே தெரியும். தீயவையாக நினைத்தால், தீயவையாகவே நடக்கும் என்பது அனைவருக்குமே தெரியும், அப்பனே.

கலியுகத்தில் மனிதன் இப்படித்தான் யோசிப்பானப்பா.

இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

ஆனாலும், அப்பனே, நிச்சயம் இதை நிச்சயம் அறிந்தான். எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கந்தன்.

=======================================
# 3. பேச்சும் செவித்திறனும் இழந்த அருணகிரிநாதர்: 'ஞானகிரியே' என அழைத்த மாயக் குரல்!
=======================================

அறிந்தும் அறிந்தும் கூட. இதனால், அப்பனே, சில ரகசியங்களை இப்பொழுது சொல்லப் போகின்றேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!!

அண்ணாமலைக்கு அருணகிரி நிச்சயம் தன்னில் கூட, பின் முடியவில்லை. வாய் பேச முடியவில்லை.

ஆனாலும், நிச்சயம், பின் அருணகிரியோடு நிச்சயம், அதாவது, பின், அதாவது, அருணகிரிக்கு, பின் காதுகளும், பின் கேட்காது என்பது, பின் நிச்சயம் தன்னில் கூட.

இதனால், பின் பலமாக, நிச்சயம் தன்னில் எதை என்று அறிந்தும் கூட, பின், அதாவது, அருணகிரியே!!!!!!...(வானில் இருந்து அசரீரியாக) என்று நிச்சயம் தன்னில் கூட, பின். 


ஆனாலும், பின் அப்பொழுதுதான், அதாவது, கேட்டது, நிச்சயம் யாரோ? எதை என்று புரிய.

அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் அழைக்கின்றார்களே என்று.
இதுநாள் வரை, அதாவது, அண்ணாமலையில் தான், 

பின் எதை என்று அறிய, பின் அருணகிரி, அருணகிரி என்று அழைத்தது. 

(வானில் இருந்து அசரீரி)

எதை என்று புரிய. ஆனாலும், நிச்சயம் யார் ?? அழைக்கப் போகின்றார்கள்???,

அதாவது, நம் குழந்தையே என்று.

அறிந்தும் முருகனே என்று.

ஆனாலும், பின் மீண்டும், பின் வந்துவிட்டது அல்லவா,!!!

எதை  என்று அறிய என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.

அதனால், பின் ஆனந்தப்பட்டான் அருணகிரியே.

அதாவது, பின் நிச்சயம் இவ்வாறாக காலங்கள் கடந்து, காலங்கள் கடந்து, பின் ஞானங்கள் பெற்று, நிச்சயம் உன்னால் ஏதுவுமே செய்ய முடியவில்லையே, பின் ஞானகிரியே!!! என்றெல்லாம்,

 நிச்சயம் மீண்டும், பின் அருணகிரியாக, நிச்சயம், பின், அதாவது, ஞானகிரியே என்றெல்லாம் முருகன்.

(அதாவது அருணகிரிநாதருக்கு ஞானகிரி என்று பெயர் சூட்டி முருகன் அசரீதியாக அழைத்தார் முருகனால் அருணகிரிநாதருக்கு ஞானகிரி என்ற பெயர் இங்கு சூட்டப்பட்டது)


ஆனாலும், சத்தம் மட்டும் கேட்கின்றது!!!. 

ஆனால் ஆள் எங்கு??? என்று தெரியவில்லை.

இதனால் எதை என்று புரிய. ஆனாலும், நிச்சயம், பின், அதாவது, ஞானகிரி, உனக்கு என்ன வேண்டும்!????? என்று சத்தம். 

(அசரீரியாக முருகன்)

ஆனாலும் அருணகிரி, நிச்சயம் அறிந்தும் கூட. ஆனாலும், ...

(. முருகா.. உந்தன் தரிசனம் வேண்டும் என்று )

கண்களால் உன்னை பார்க்க வேண்டும் என்பதுதான். 

அப்படி என்றால்,..(முருகனின் பதில்) நிச்சயம், பின், அதாவது, இப்பொழுது அழைத்தேன் அல்லவா,

பின் நிச்சயம், பின் என்னை தேடி வா!! என்று.


ஆனாலும், இவ்வாறாக எதை என்று அறிந்தும் கூட.

=============================================
# 4. மலைகளில் நடந்த கண்ணாமூச்சி: முருகனைத் தேடி அலைந்த அருணகிரியின் தேடல்!
=============================================


இதனால் அங்கிருந்து, அதாவது, பின் ஞானகிரி!!, ஞானகிரி!! ஞானகிரி!!(அசரீரியாக) என்றெல்லாம் சத்தம் கேட்டது.


பின் அருணகிரி, அதாவது, எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, பின், அதாவது, மாற்றி எது என்று புரிய.


ஆனாலும், இவ்வாறாகவே, நிச்சயம், அதாவது, ஒரு மலைக்குச் சென்றால், நிச்சயம் தன்னில் கூட, அதாவது, பின் பர்வதமலை,!!!!  நிச்சயம், அதாவது, அருணகிரி ஏறினான்.

(ஞானமலை சுற்றி வள்ளிமலை திருத்தணி மலை ரத்தினகிரி சிறுவாபுரி என முருகனுடைய மலை திருத்தலங்கள் நிறைய இருக்கின்றன)


நிச்சயம் அங்கு, பின் கேட்டதென்று அருகில்.

ஆனாலும், அங்கும் கேட்கவில்லை. இறங்கி, இன்னும் இன்னும் பல மலையில் கூட அப்படியே,!!!!!

நிச்சயம் தன்னில் கூட, கடைசியில் எதை என்று உணர்ந்து, நிச்சயம் தன்னில் கூட, பின் இங்கு எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, (ஞான மலையில்)

இவ்வாறாக, பின் வந்த அறிந்தது எதை என்று புரிய. இதனால், பின், அதாவது, பின் சப்த ஸ்தலங்களும் கூட இங்குதான் உள்ளது. 

===========================================
(சப்த ரிஷிகள் திருத்தலங்கள் ஷடாரண்ய ஷேத்திரங்கள் மேலும் விபரங்களுக்கு சித்தன் அருள் வன்னி வேடு அகத்தீஸ்வரர் ஆலய வாக்கு  1164 மற்றும் சித்தன் அருள் 1181 அன்புடன் அகத்தியர் சப்தரிஷி கோயில்கள் பதிவினை படித்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள்)
============================================


அங்கெல்லாம் சென்று, நிச்சயம், பின் தேடினான். 

ஆனாலும், நிச்சயம் இவ் சத்தம், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் கேட்க எவை என்று புரிய. இதனால், கடைசியில், நிச்சயம் மெது மெதுவாக, பின் காதுகளை எதை என்று புரிந்தும் கூட, எதை என்று அறிந்தும் கூட, அனைத்தும் நிச்சயம் அறிந்ததே அவ் பக்தன். 

அதாவது, அருணகிரி, பின் எவ்வளவு? ஞானங்கள், அதாவது, பின் பேச முடியாமலும், பின் காதுகள் கேட்காமலும், இன்னும் கூட எதை என்று அறிய அறிய, அவ்வளவு ஞானங்கள்!!

யார்?, எதை என்று புரிய. நிச்சயம் அவ்வாறு ஒரு பக்தனுக்கே என்றால், நிச்சயம் இப்பொழுது கலியுகத்தில் எவ்வாறு என்பதெல்லாம்.

இதனால், பின் இங்கு எதை என்று அறிந்தும் கூட, இங்கு சரியாக சத்தம் கேட்டது.
நிச்சயம் தன்னில் கூட, 

பின் இங்கு மீண்டும், பின் ஞானகிரியே என்று, 

பின் ஆனாலும், பின், அதாவது, பலமாக சிரித்தான். நிச்சயம் ஞானகிரியே,!!

அதாவது, ஞானகிரி என்பவன், பின் அருணகிரியையே, யான் இங்கு குறிக்கின்றேன்.

அதாவது, பலமாக, பின் நிச்சயம் சத்தமிட்டான். நிச்சயம் தன்னில் கூட, பின் அருணகிரி. 

ஆனால், பின் முருகனோ!?, ஏன்?? அருணகிரி, ஞானகிரியே,!!!! அனைத்தும், பின் அறிந்தும் கூட, பின் எதை என்று அறிய, ஏன்? பலமாக, நிச்சயம் தன்னில் சிரிக்கின்றாய், எதை என்று அறிய என்பதை எல்லாம். 

ஆனாலும், நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் யான் உணர்ந்து விட்டேன்.


 நிச்சயம் இங்கேதான் இருக்கின்றாய் நீ!!! என்று.


ஆனாலும், அப்படியா, எதை என்று கூற இருப்பினும், நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட, பின், அதாவது, பின் நன்றாக!!!! யான் எங்கே இருக்கின்றேன் என்று கண்டுபிடி என்று.


ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட தேடினான், தேடினான் முருகனை. 

பின் மீண்டும் ஞானகிரி, ஞானகிரி என்று.




=================================================
# 5. 150 மைல் பயணம்: கூன், குருடு போன்ற நோய்களைத் தீர்க்கும் மாயப் பாடல்கள்!
=================================================

ஆனாலும், முருகா, விளையாட்டு போதும். என்னவென்று ஏது அறிந்தும். நிச்சயம் எவ்வாறு, அதாவது, விளையாட்டு போதும், விளையாட்டு போதும். எங்கிருந்தால், எங்கிருந்து, எதுவரை, பின் அலைவது என்றெல்லாம்.


அதனால்தான், பின் இங்கும், அதாவது, இங்கிருந்து இன்னும் பல வகையிலும் கூட, மேற்கு, இன்னும் தெற்கு, கிழக்கு, வடக்கு, இன்னும் வடகிழக்கு, இவ்வென்று, பின் சரியாக, பின் 150, 150, பின் மைல், பின் தொலைவில் கூட, நிச்சயம் பல ஆலயங்களை அலைந்துதான், கடைசியில் இங்கு எதை என்று புரிய, பின் வந்தான்.

=======================================
# 6. பரம ரகசியம் - “இங்கு இருக்கும் திருத்தலங்கள் அவ்வளவு பலம் பெற்றவை”
=======================================

இவையெல்லாம், அதனால்தான், இங்கு இருக்கும் திருத்தலங்கள் அவ்வளவு பலம் பெற்றவை. பின் மனிதருக்கு தெரியவில்லை. 

இவ் ஆலயங்களுக்கு சுற்றினாலே மனிதனுக்கு ஞானம் அழகாக பிறந்துவிடும்

ஆனாலும், நிச்சயம், பின் அறிந்தும் கூட, அதற்கும் புண்ணியங்கள் வேண்டும்.

அப்புண்ணியங்கள் எப்பொழுது?, நிச்சயம், எங்கு பெற்றுக் கொள்வது??? என்பதெல்லாம் மனிதனுக்கு தெரியாமல் போய்க்கொண்டிருக்கின்றது. 

இதனால்தான், எப்படியோ, எதை என்று அறிந்தும் கூட, யாரோ ஒருவனால், நிச்சயம், தன்னில் கூட வரவழைத்து, இப் புண்ணியங்களை எதை என்று ஒரு எப்படியோ? யாங்கள் கொடுத்து, நிச்சயம், தன்னில் கூட வழிநடத்தி விட்டால், நிச்சயம், பின் ஞானங்கள் பிறந்துவிடும்.


இதனால் இங்கு ஞானத்திற்கு, பின் அதிபதியே அறிந்தும் புரிந்தும் கூட, பின் சரியாகவே கந்தன் எதை என்றும் தெரிவித்து, எவை என்று புரிய.

மீண்டும், பின் இங்கேயே, நிச்சயம், பின் ஞானகிரி, ஞானகிரி என்றெல்லாம், நிச்சயம் அழகாக,!!!


அதாவது, நிச்சயம், முருகா, போதும், விளையாட்டு, எங்கெல்லாம்? அலைந்தேன்.


ஆனாலும், அதாவது, அறிந்தும் கூட, அருணகிரி, பின் ஒவ்வொரு இடத்திலும், அதாவது, சென்ற இடங்கள் எல்லாம், நிச்சயம், பாடலை பாடினான். ஒவ்வொரு பாடலும்.

ஆனாலும், பின் அதை, நிச்சயம், தன்னை கூட அங்கு பாடிய பொழுது, நிச்சயம், இவ் பாடலை பாடினாலே, நிச்சயம், அனைத்து திறமைகளுக்கும் மனிதனுக்கு வந்துவிடும். மனிதனுக்கு வந்துவிடும்.

கூன் குருடு, இன்னும் எதை என்று அறிய அறிய மனிதனுக்குள்ள நோய்கள், நிச்சயம், ஒவ்வொரு இடத்திலும் பாடி, பின், நிச்சயம், தன்னில் கூட அழகாக. 


==========================================
# 7. திருப்புகழ் ரகசியங்கள் - “அப்பாடல்களையும் நிச்சயம் மனிதனுக்கு  தெரிவிப்பேன்”
=========================================

ஆனாலும், அப்பாடல்கள் எங்கே?? என்றெல்லாம்.

ஆனாலும், அடுத்தடுத்து யான் அப்பாடல்களையும், நிச்சயம், மனிதனுக்கு தெரிவிப்பேன். அறிந்தும் இன்னும் கூட தெளிவுபட, தெளிவுபடுத்தி.

ஏனென்றால் உண்மை நிலைகளை மனிதனுக்கு இக்கலியுகத்தில் தெரியாமல் போகும். உண்மை நிலை தெரியாமல் மனிதன் அழிவான்.

இதனால்தான் நிச்சயம் உண்மை நிலை பின் தெளிக!! என்று. 

நிச்சயம் அதாவது இவ்வுலகத்தை பின் எதை என்று எத்தனை? பேர் ஆளப் போகின்றார்கள். நிச்சயம் அதாவது 10 பேர்களா?? 20 பேர்களா??? எதை என்று அறிய.

ஆனால் ஒருவன் தான் ஆள வேண்டும். அதனால்தான் நிச்சயம் அவ் ஒருவன் நிச்சயம் எதை என்று புரிய. பின் பலமடங்கு பின் இறை ஆசிகள் பெற வேண்டும். இறை ஆசிகள் பெற்று இரும்பு போல் ஆக ஆக வேண்டும். அப்பொழுதுதான் நிச்சயம் யாராலும் எப்பொழுதும் ஒன்றும் செய்ய முடியாது.

இதனால் தான் இக்கலியுகத்தில் இவ்வாறு போராடிக் கொண்டிருக்கின்றோம். 

அவ்வாறு இல்லையென்றால் நிச்சயம் இத்தேசம் நிச்சயம் தானாகவே நிச்சயம் மனிதனால் அழிவுகள் ஏற்படுவது உறுதி உறுதி.

அதனால் தான் நிச்சயம் எதை என்று அறிய நல் மக்களை காக்க வேண்டும். அதாவது முருகா என்று அன்புடன் இருக்கின்றான். 

பின் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றான். நமசிவாய என்று சொல்கின்றான். கஷ்டங்கள் பல பட்டுக் கொண்டிருக்கின்றான். இறைவனே கதி என்று பின் நிச்சயம் இருப்பவன் பல கஷ்டங்களை பட்டுக் கொண்டிருக்கின்றான்!!!

யாராவது?? இதை யோசித்தார்களா???? என்றால் நிச்சயம் இல்லை.

===========================================
# 8. பக்குவங்கள் ஏற்பட்டால்தான் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நிலை வந்துவிடும்.
===========================================

ஏன்? எதற்கு? அதாவது நிச்சயம் எதை என்பது சில பக்குவங்கள் ஏற்பட்டு நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பின் அதாவது பக்குவங்கள் ஏற்பட்டால்தான் மற்றவர்களுக்கு உதவி செய்யும் நிலை வந்துவிடும்.

அதனால்தான் ஆனால் அதனுள்ளே அதற்குள்ளே பின் இறைவன் எதுவும் பின் தரமாட்டான் என்று நிச்சயம் தன்னில் கூட பின் எதை எதையோ செய்து விடுகின்றான். 

இதனால் மனிதன் செய்வது தனக்கே குற்றமாக!?!?!?!?
!நிச்சயம் தன்னில் கூட!!! 

மனிதன் வருகின்றான். பின் ஏன்? இவ்வளவு கஷ்டங்கள் என்று!!

ஆனாலும் எதனால்? பின் கஷ்டங்கள் என்று யோசிப்பதே இல்லை. 

ஆனாலும் நிச்சயம் 

அதற்கு முன்பு அவன் என்ன செய்தான்??? பின் எப்படி நடந்து கொண்டான்???? என்று யோசித்தால்!?!? அதற்கு பதில்தான் இப்பொழுது வருகின்றது என்று நிச்சயம் மனிதன் எப்பொழுதும் அதாவது மனிதன் எப்பொழுதும் தம் தவறை நிச்சயம் ஒத்துக்கொள்வதே இல்லை.

இதனால்தான் பின் இறைவனும் கூட நிச்சயம் தண்டனை அதாவது தன் தவறை உணரும் வரை அடிக்கின்றான். அடி அடி என்று!!!

இதனால் தன் தவறை உணர்ந்து விட்டால் பின் செய்தோம் அதற்காகத்தான் தண்டனை என்று.

==========================================
# 9. அவ் ஞானநிலை பெறுவதே இத் திருத்தலம்
==========================================

அதனால் இவையோடு இதுதான் ஞானங்கள். இவ் ஞானநிலை எப்பொழுது?? எப்பொழுது??? மனிதன் நிச்சயம் பெறுகின்றான்??? என்றால் அதற்கும் புண்ணியங்கள் வேண்டும்.

அவ் ஞானநிலை பெறுவதே இத் திருத்தலம் என்பேன் அப்பனே. பின் நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன்.


இதனால் பல வழியில் கூட மீண்டும் அருணகிரி அறிந்தும் முருகா!! முருகா! பின் உன்னை நினைத்தே நிச்சயம் எவ்வாறு? அதாவது என் குழந்தை அறிந்தும் கூட நீயே. 

இதனால் பின் வழிகள் காட்டும் பின் அதாவது பின் குழந்தையிடம் விளையாடிவிட்டேன். ஆனால் என்னால் முடியாது முருகா!!! நிச்சயம் தன்னில் என்று என்றெல்லாம்.

==============================================
# 10. பெருங்கல்லை நகர்த்திய விந்தை: மனித மனங்களை மாற்ற முருகன் நடத்திய திருவிளையாடல்!
==============================================

ஆனாலும் ஒரு குரல் மீண்டும் நிச்சயம் அறிந்தும் எதை என்று கூற எவை என்றும் அறிந்தும் கூற இன்னும் ஞான தத்துவங்கள்.

அதனால் நிச்சயம் நீ அமைதியாக தியானம் செய். அதாவது இங்கு நிச்சயம் தன்னில் கூட!! அறிந்தும் ஒரு பெரிய கல் இருக்கின்றது அல்லவா.

நிச்சயம் அதை நகர்த்து முதலில்!!! உன்னால் முடிந்தால் என்று!!!

முருகா!!! இவையெல்லாம் ஏன்? எதற்கு? எதை என்று அறிய.

நிச்சயம் தன்னில் கூட இவை தன் நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது அழகாக நிச்சயம் தன்னில் கூட நகர்த்தினான்.

இதனால் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய. பின் அக் கல்லை பின் எதனாலும் எப்பொழுதாலும் நிச்சயம் தன்னில் கூட பின் நிச்சயம் பின் நகர்த்தவும் முடியாது என்றெல்லாம்.

பின் ஆனாலும் அருணகிரி நிச்சயம் நகர்த்தியது. அதனால் நிச்சயம் பின் முருகன் அதாவது பின் இவ்வுலகம் இருக்கும் வரை நிச்சயம் தன்னில் கூட பின் அக்கல்லும் மறையாது.


நிச்சயம் பின் நீயும் மறைய மாட்டாய். உன் புகழும் மறைய மாட்டாய் என்றெல்லாம்.

அருணகிரி 
போதும்!!! நிறுத்து முருகா. இவையெல்லாம் யார்?? கேட்டது என்றெல்லாம்.

ஏன் இக் கல்லை பின் நிச்சயம் நகர்த்தினாய்?? என்று. 

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஏன்? நகர்த்தச் சொன்னேன் என்றால் நிச்சயம் கலியுகத்தில் மனிதன் அறிந்து கூட இப்படியே இருந்தால் இன்னும் அநியாயங்கள் அக்கிரமங்கள் நடக்கும் என்பதை எல்லாம். 

ஆனாலும் சிறிது நகர்த்தி விட்டால் சிறிது மனம் மாறுவான்.

அவ்வளவுதான்!!


சிறிது. பின் மனம் மாறினாலே நிச்சயம் நீங்கள் அதாவது சித்தர்கள் வந்து அனைவரும் பார்த்துக் கொள்வார்கள் என்று தான்!!!!

அருணகிரி:-  முருகா. உன்னுடைய கருணை!! கருணையே!!!

மீண்டும் பின் உன்னை பார்க்கத்தான் வேண்டும் என்று.

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அதாவது பின் அதாவது ஒரு சத்தம். பின் ஞானகிரியே!!! மீண்டும் அண்ணாமலைக்கு வா என்று!!!

அருணகிரி:- முருகா.!!!! நீ இங்கேதான் இருக்கின்றாய் என்று!!!

இல்லை என்று முருகன் சிரித்தபடியே. 

பின் அதாவது பிள்ளை என்ன? ஏது? என்று அறிய.


ஆனாலும் மீண்டும் பின் அதாவது அண்ணாமலைக்கு.

ஆனாலும் பின் முருகன் இங்குதான் இருக்கின்றான் என்று அருணகிரிக்கு தெரியும். 

ஆனால் தன் பிள்ளை பாசத்தோடு நிச்சயம் அண்ணாமலைக்கே (அழைப்பு) என்றெல்லாம்.

ஆனாலும் அங்கு அருணகிரி சென்று எதை என்று புரிந்தும் பின் ஈசனிடத்தில் அதாவது நிச்சயம் தன்னில் அறிந்தும் கூட பின் எதை என்று புரிய.


ஆனாலும் நிச்சயம் பின் இப்பொழுது செல்கின்றேன். நிச்சயம் அறிந்தும் கூட அங்கேயே என் பலத்தை பின் நிச்சயம் நட வேண்டும். அறிந்தும் கூட அதற்கு ஒரு பின் உத்தரவு கொடு. பின் அதாவது தந்தையும் நிச்சயம் மகனும் இப்படியே எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் கூட !!

அதாவது நிச்சயம் பின் நீங்களும் தந்தையும் நீங்களும் எனக்கு தந்தையே!!! என் பிள்ளை என் பிள்ளையே!!! என்றெல்லாம் அருணகிரி. 


ஆனாலும் நிச்சயம் பார்வதி தேவியோ!? நிச்சயம் பின் அருணகிரியே!!!! உனக்கு எவ்வளவு ஏது?? என்றெல்லாம் நகைத்தாள். 

இப்படி எல்லாம் என்றெல்லாம். இதனால் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் அதாவது பின் எப்பொழுது எதை என்று அறிய.

===================================================
# 11. சிந்தாமல் கொண்டு செல்ல வேண்டும்: ஈசன் அளித்த புனித தீர்த்தமும், முருகனைக் கண்டறியும் சோதனையும்!
===================================================


அதாவது பின் உன்னுடன் முருகன் விளையாடுகின்றான்.

ஈசன் அதாவது பின் ஈசன் பின் கேட்டான். அருணகிரி!!!....... முருகன் உன்னுடன் விளையாடுகின்றான். பின் நிச்சயம் தன்னில் கூட அலைகழிப்பிக்கின்றான். 
ஆனாலும் அவன் விளையாட்டுப் பிள்ளையே.

ஆனாலும் உன்னை அறிவான்.   

அதனால் நிச்சயம் எதை என்று அறிந்தும் கூட நிச்சயம் பின் அதாவது யான் ஒரு தீர்த்தத்தை தருகின்றேன். அதை நிச்சயம் பின் கொட்டாமல் பின் எடுத்துச் செல்.

பின் நிச்சயம் அறிந்து கூட பின் ஆனால் ஓரிடத்தில் நிச்சயம் அனைத்தும் கீழே விழுந்துவிடும். அங்குதான் முருகன் இருக்கின்றான்.

நீ எதை என்று அறிய (அறிந்து கொள்ளலாம்) என்றெல்லாம்.

ஆனாலும் முருகன் கூட பின் தந்தை சொல்லிவிட்டானா??!? என்று !!!!!


எதை என்று புரிய. கண்ணாம்பூச்சி போல் அதாவது கண்ணாம்பூச்சி ஆட்டம் என்று சொல்கின்றார்களே. அதுபோலத்தான் எதை என்று அறிய. நிச்சயம் தன்னில் எதை என்று புரிய.

இதனால் அழகாக பின் ஈசனும் பின் அருணகிரியிடம் நிச்சயம் வருகின்ற பொழுதே பல வழிகளில் கூட பின் சொட்டு சொட்டாக சிந்தியது.

அவையெல்லாம் நிச்சயம் இப்பொழுது எவை என்று புரிய. பல திருத்தலங்கள் பாடல் பெற்ற திருத்தலங்கள் தான். நிச்சயம் தன்னில் கூட !!

அங்கெல்லாம் சென்றால் நிச்சயம் தன்னில் எவ்வாறு பின் நீர் விழுகின்றதோ. அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் பாவங்கள் மறையும். 


பின் அதனையும் கூட பின் அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் அங்கிருந்து இங்கு (ஞான மலைக்கு ) எவ்வாறு? நிச்சயம் வந்தான் என்பவை எல்லாம். நிச்சயம் நீங்களே அதை உணர வேண்டும்.

நிச்சயம் எப்படி எல்லாம் பின் வளைந்து திரிந்து அதாவது நிச்சயம் சிறிது இப்படி சிறிது அப்படி என்றெல்லாம். 

ஆனாலும் கடைசியில் பின் வருகின்ற பொழுதே பின் நிச்சயம் பின் அனைத்தும் (தீர்த்தம் முழுவதும்) சொட்டிவிட்டது. இங்கு வந்து பார்த்தால் ஒன்றுமில்லை.

மீண்டும் பின் ஐயயோ!!!!!.... பின் இல்லையே!!! என்று மீண்டும் கூட !!

சரியாக பின் மீண்டும் அதாவது ஈசனிடத்திற்கு சென்றான். 

அதாவது அருணகிரிக்கு. அருணகிரி என்றால் நிச்சயம் அண்ணாமலையே அறிந்தும்.

ஈசனே!!! நிச்சயம் தன்னில் நீ கொடுத்த பின் அதாவது இரு கைகளாலும் நிச்சயம் பின் ஏந்திச் சென்றேன். அங்கங்கு சொட்டியது. 

பின் அதாவது நிச்சயம் மீண்டும் ஒரு தடவை  கொடுங்களேன். எதை என்றறிய ஞானப்பிள்ளையை யான் பார்க்க வேண்டும். நிச்சயம் பாசத்தோடு இருக்கின்றேன் என்று. 


ஈசனாரும்  அருணகிரியே அப்படி கொடுக்க முடியாது.


ஆனாலும் நிச்சயம் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய. 


ஆனாலும் அப்பொழுது யான் பார்க்கவே (முருகனை) முடியாதா????????.

எந்தனுக்கு வயதும் பின் ஆகிக்கொண்டே இருக்கின்றது என்று.


ஆனாலும் நிச்சயம் ஈசன் எப்படி?? வயதாகிக் கொண்டே போகின்றது???. எவ்வளவு வயதானாலும் நீ இளைஞன் இளைஞனே.

இதனால் எத்தனை பின் நிச்சயம் பின் எவை என்று ஒரு உலகம் அழியும் வரை நீ ஒரே பின் அறிந்தும் கூட பின் வயதானாலும் பின் நிச்சயம் தன்னில் கூட நீ எப்பொழுதும் இளைஞனே என்று அறிந்தும் கூட.


இதனால் மீண்டும் (தீர்த்தம் ) யான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று. 


============================================
# 12. மயில் வடிவில் வந்த பார்வதி தேவி: தீர்த்தம் கீழே சிந்தியதும் நேரில் தோன்றிய முருகன்!
============================================




அறிந்தும் கூட மீண்டும் பின் அதாவது கொடு!!! என்றெல்லாம். நிச்சயம் தன்னில் கூட !!


ஈசனாரும் சரி.!!...

ஒரு தடவை பின் விட்டுவிட்டாய்.
பின் நிச்சயம் தருவேன் என்று.  


ஆனாலும் சரியாக நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று புரிய எடுத்து வந்தான். பின் அருணகிரியே இங்கு.

ஆனாலும் பின்  சட்டென்று நிச்சயம் பார்வதி தேவியும் நிச்சயம் மனம் மகிழ்ந்து இன்னும்  இனியும் பின் முருகன் பின் விளையாடித்தான் போகின்றான் என்று மயில் வடிவில் பார்வதி தேவி வந்து தட்டிவிட்டாள் இங்கு!!

(அருணகிரியார் கையில் இருக்கும் தீர்த்தத்தை)


நிச்சயம் தன்னில் கூட பின் ஆனாலும் புரிந்து கொண்டான்.

பின் அப்படியே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது கீழே பின் சிந்தியது நீர்.

நிச்சயம் இங்குதான் முருகா!! முருகா!!! கண்டுபிடித்து விட்டேன் என்று.

ஆனாலும் பின் முருகனும் நீ கண்டுபிடிக்கவில்லை!!!!

என் தாய் தந்தையைத்தான் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் இப்படி செய் என்று!!!

பின் மயில் வந்ததும் என் தாயே உனக்காக அதனால்தான் நிச்சயம் தந்தையும் உனக்காக எவ்வளவு?? பாசங்கள் வைத்திருக்கின்றார்களே.


நிச்சயம் எதை என்று அறிய அப்படியே எழுந்து நின்றான் முருகன். பின் உனக்கு என்ன? வேண்டும்?? என்று.

பின் கெட்டியாக பிடித்துக் கொண்டான் முருகன்.

இவ்வளவு பின் பாசங்கள் வைத்திருக்கின்றாயே. உனக்கு என்ன வேண்டும்?? என்று.


ஆனாலும் முருகா!!! நிச்சயம் பின் அதாவது உன் தந்தை பின் பாசத்தோடு பின் நீர் கொடுத்தான்.

=================================================
# 13. தனக்காக கேட்காமல் மக்களுக்காக கேட்ட வரம்: கலியுக நோய்களை தீர்க்கும் அருணகிரியின் தியாகம்!
=================================================

பின் இரு கைகளாலும் எடுத்து வந்தேன். நிச்சயம் பின் அது எங்கெங்கு?? சொட்டியது. 

அங்கெல்லாம் நிச்சயம் பின் வருவோருக்கெல்லாம் தன் கவலைகள் தீர்க்க வேண்டும். 

பாவத்தை தீர்த்து புண்ணியத்தை அதிகமாக்கி கலியுகத்தில் அனைத்து பின் நலன்களையும் அதுமட்டுமில்லாமல், நிச்சயம் பின் எண்ணற்ற பாடல்களையும் பின் வருங்காலத்தில் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஏனைய பின் அதாவது தேவாரங்களும் இன்னும் எதை எதை என்றெல்லாம் அவையெல்லாம் ஓதிட்டு வந்து நிச்சயம் தன்னில் கூட கடைசியில் இங்கு பின் வந்தாலே நிச்சயம் பாவங்கள் தீர்க்கப்பட வேண்டும். 

அதாவது கலியுகத்தில் மனிதர்களுக்கு நோய் நொடிகள் அதிகமாகும். 

அப்பொழுதெல்லாம் பின் அவ் ஆலயங்களுக்கு  நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட சென்று இங்கு வந்து அமர்ந்து நிச்சயம் தியானம் செய்தால் பின் பன்மடங்கு அவர்களுக்கு உயர்வுகள் அதாவது நோய் நொடிகள் இல்லாமல் வாழ்க்கை உயர வேண்டும் என்றெல்லாம் என்றெல்லாம்!!!!



நிச்சயம் முருகனும் கூட பின் அருணகிரியே!!! எவ்வாறு?? பின் அதாவது உந்தனக்காக எதுவும் கேட்கவில்லையே என்று!!!!

அருணகிரி , நிச்சயம் தன்னில் முருகா!!!! மக்கள் பின் கலியுகத்தில் எப்படித்தான் வாழப்போகின்றார்கள்???

அதற்காகத்தான் இப்படி உன்னிடத்தில் கேட்கின்றேன் என்று.

முருகனும் இதனால் நிச்சயம் தன்னில் அப்படியே ஆகட்டும். உன் விருப்பம் படியே ஆகட்டும் என்று. 

இதனால் பல பல நிச்சயம் தன்னில் கூட பின் புலவர்கள் அதாவது நிச்சயம் தன்னுடைய ஞானம் அதாவது திருவண்ணாமலையில் நிச்சயம் தன்னில் கூட.

ஈசனை நினைத்தோருக்கெல்லாம் ஈசன் நிச்சயம் தன்னில் கூட முருகனிடத்திற்கு பின் செல். அங்கு ஞானங்கள் கிட்டும் அனைத்தும் பார்க்கலாம் என்று இங்கு அனுப்பினான். பல பல பின் ஞானியர்களையும் கூட !!!

இங்கு நிச்சயம் தன்னில் கூட தண்ணீர் இருக்கின்றதே.....

(கோயில் குளம்)
 அங்கும் கூட பல ஞானியர்கள் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் ஏதாவது ஒரு முறையில் இல்லத்தை அமைத்து பல வழியில் கூட பின் ஞானத்தை பெற்றனர்.

அப்படிப்பட்ட இடங்கள் இங்கு இன்னும் ஏராளம்!!! ஏராளம் !!!

பக்கத்தில் உள்ள மலைகளில் கூட பின் இங்கும் எதை என்று எதை என்று புரிந்து கொள்ள பின் அதாவது அருணகிரிக்கு நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய முருகனை அதாவது பின் பார்க்க வேண்டும் என்றால் இங்கு நிச்சயம் பின் வந்தாலே போதுமானது.

இதனால் பல ஞானியர்கள் இங்கு வந்து முருகனை பின் கண்டிட்டு ஞானங்கள் பெற்று நிச்சயம் பல வழிகளில் கூட எதை என்று கூற  சாதித்தனர்.

இதனால் பல வழிகளில் கூட பல ஜீவ சமாதிகள் ஞானிகள் நிச்சயம் இங்கு அமர்ந்து இன்னும் தவம் செய்து கொண்டு தவம் செய்து கொண்டே இருக்கின்றார்கள். மக்களை காக்கவே!!!


இதனால்தான் இன்னும் தெரியாத பல திருத்தலங்கள் பின் இன்னும் இருக்கின்றது.

இதனால்தான் ஒவ்வொரு திருத்தலமும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தது. 

இதனால் இன்னும் தவங்கள் பின் செய்து கொண்டே நிச்சயம் தன்னில் கூட !!

==========================================
# 14. “அண்ணாமலையிலிருந்து அதாவது தீர்த்தத்தை எடுத்து வந்து, இங்கு முருகனுக்கு கொடுத்தால் நிச்சயம் மனமகிழ்வான்.”
==========================================

இதனால் பின் அண்ணாமலையிலிருந்து அதாவது தீர்த்தத்தை எடுத்து வந்து நிச்சயம் தன்னில் கூட இங்கு முருகனுக்கு கொடுத்தால் நிச்சயம் மகிழ்வான் மனமகிழ்வான்.

ஏனென்றால் இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இப்பொழுதெல்லாம் அண்ணாமலையில் கேட்டாலும் நிச்சயம் கொடுப்பதில்லை.

அதற்கு நிச்சயம் தன்னில் கூட பல பக்குவங்கள் பட வேண்டும்.
ஆனாலும் நிச்சயம் அவ்வாறு நினைத்துக் கொண்டே இருந்தால் அண்ணாமலையோன் நிச்சயம் மனித ரூபத்தில் வந்து பின் நீரையும் நிச்சயம் கொடுப்பான். 

அவை எடுத்து வந்து பின் ஆனாலும் மனிதன் பக்குவப்பட்டுள்ளானா??? என்று நிச்சயம் தன்னில் கூட!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பல தீர்த்தங்கள் இருக்கின்றது அல்லவா. (அண்ணாமலையில்)

நிச்சயம் பின் அறிந்தும் கூட அங்கு எடுத்து இங்கு அழகாக முருகனுக்கு (அபிஷேகம் ) பின் இட்டால்  பின் அருணகிரியும் நிச்சயம் மகிழ்வான்.




=========================================
# 15. “ஈசனும் மனமகிழ்ந்து, முருகனும் வரங்கள் பின் கேட்டதை கொடுத்தும் விடுவான்.” 
=========================================

ஈசனும் பின் மனமகிழ்ந்து முருகனும் வரங்கள் பின் கேட்டதை கொடுத்தும் விடுவான். 

இதுதான் நிச்சயம் இன்னும் இன்னும் இன்னும் பின் ஞானங்கள் பின் பெற்ற நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட பின் ஞானவான்கள் இங்கு பின் இன்னும் இருக்கின்றார்கள்.


இதனால்தான் இதற்கு பின் அதாவது நான்கு திசைகளிலும் கூட எவ்வளவு ??பின் அழிவுகள் எதை என்று அறிய அறிய தடுத்து நிறுத்தி!! தடுத்து நிறுத்தி!!! 


இதனால் அங்கங்கு எத்தனை? எத்தனை? ஏது என்று பல ஞானவான்கள் இருந்துதான் கொண்டிருக்கின்றார்கள். 


இதனால் மீண்டும் பின் அருணகிரி பரிபூரணமாக நிச்சயம் முருகா நீ இங்கே இரு. 


பின் யானும் அதாவது இங்கே இருக்கின்றேன். 

நீ தனியாகத்தானே வந்தாய். 

அதனால் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய என்றெல்லாம்.

ஆனாலும் பின் அதாவது அருணகிரியே!!! எனக்கு பல வேலை எப்பொழுதெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட உன்னுடன் விளையாட அதாவது எந்தனக்கு பின் சந்தர்ப்பம் கிடைக்கின்றதோ!?!? அப்பொழுதெல்லாம் இங்கு வந்து விடுகின்றேன். 


 அதனால் நீயும் இங்கு இரு என்றெல்லாம்.

அதனால் ஒரு நிச்சயம் தன்னில் கூட ஒரு அதாவது அறிந்து கூட பின் இங்கே இருக்கின்றேன் என்று நிச்சயம் சத்தியம் அறிந்தும் புரிந்தும் கூட!!!

பின் அதாவது நிச்சயம் அருணகிரியும் இங்கேதான் யான் இருப்பேன். நிச்சயம் எப்பொழுது வேண்டுமானாலும் உனக்கு சந்தோஷம் பின் அதாவது எதை என்று அறிய என்னுடன் பின் விளையாட வேண்டும் என்றால் இங்கே வந்துவிடு என்று.

இதனால் நிச்சயம் முருகன் அடிக்கடி இங்கு வந்து அருணகிரிநாதனுடன் விளையாடுவான். 


ஏன்? எதற்கு? பின் அருணகிரிநாதன் அங்கங்கு இருக்கின்றான்?? என்பதை எல்லாம் நிச்சயம் தெளிவுபடுத்துகின்றேன். 


ஒரு உடம்பை வைத்து எப்படி? இவ்வளவு என்பதை எல்லாம் நிச்சயம் தெளிவுபடுத்துகின்றேன். 


இதனால் நிச்சயம் பின் விளையாட்டிற்காகத்தான் இங்கு வருவான். விளையாடும் நேரத்தில் பின் அருள்கள் நிச்சயம் எவை என்று கேட்டால் முருகன் தந்துவிடுவான்.

 எடுத்துச் செல்!!! என்று!! 

==================================
# 16.  சஷ்டி  ரகசியங்கள் - ஞானமலை முருகன் கோவில்
==================================


எப்பொழுது? விளையாடுகிறான் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் சஷ்டி தன்னில் கூட நல்விதமாகவே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு புரிந்தும் நிலைகளுக்கெல்லாம் நிலைகள் என்றெல்லாம்!!


அவ்வாறாகவே சில சில புண்ணியங்கள் இருந்தால் தானாகவே நிச்சயம் தன்னில் கூட அவ்விளையாடும் நேரத்தில் நிச்சயம் மனிதர்களும் பின் இங்கே வந்து விடுவார்கள்.


அதனால்தான் புண்ணியங்கள் வேண்டும். புண்ணியங்கள் வேண்டும். புண்ணியங்கள் வேண்டும் என்று!!!

இறைவன் எப்பொழுது வருகின்றான் எப்பொழுது போகின்றான் என்பதை எல்லாம் யார் அறிவார்??????.

================================================
# 17. உங்கள் குழந்தைகளின் கல்வியும் ஞானமும் பெருக வேண்டுமா? அருணகிரிநாதரின் நூல்களின் மகிமை!
================================================

ஆனாலும் அருணகிரி அழகாக வருவோருக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட அருளாசிகள் குழந்தைக்கு ஞானத்தை பின் அள்ளித் தருதல் இன்னும் இன்னும் எதை என்று அறிய பின் படிப்பு தன்னில் கூட பின் எவ்வாறு?? உயர்ந்த நிலை அடைதல் இன்னும் கூட எவ்வாறெல்லாம்.

இதனால் நிச்சயம் தன்னில் கூட இங்கு வந்து நிச்சயம் அருணகிரி எழுதிய பின் பாடல்களை பாடிட்டு நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் எப்பொழுதும் அருணகிரியின் பின் அதாவது பின் புத்தகங்கள் வைத்துக்கொண்டே நிச்சயம் இருந்தால் குழந்தைகளுக்கு நிச்சயம் தன்னில் படிப்பு பின் பின் பன்மடங்கு பெருகும்.

எதை என்று அறிய இன்னும் இன்னும் ஞானங்கள்!!!


ஆனாலும் எதை என்று அறிந்தும் கூட இன்னும் பல வழிகளிலும் கூட வாக்குகள் இருக்கின்றது.

இன்னும் பல வழியில் கூட ஞானியர்கள் பின் இங்கு தவம் செய்து கொண்டே இருக்கின்றார்கள்.

இன்னும் கூட முருகன் வருவான்!! வருவான்!! பார்ப்பதற்கே!!! பின் எவை என்று கூட அருணகிரி பின் அருணகிரியிடம் விளையாடுவதற்கு என்று !!!




கவலைகள் வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட ஆசிகள் எதை என்று புரிய இன்னும் கூட வாக்கில் செப்புகின்றேன். இப்பொழுது போதும். 

ஆசிகள்! 

ஆசிகள்!! 

ஆசிகள்!!!






====================================
# 18. ஆலய முகவரி மற்றும் விவரங்கள். 
====================================




ஞானமலை முருகன் கோவில்
முருகனின் திருவடி பதிந்த திருப்புகழ் தலம்

சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவில், சோளிங்கரில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ஞானமலை முருகன் கோவில். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோவிலுக்கு செல்ல 150 படிக்கட்டுகள் உள்ளன. அருணகிரி நாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது. 

கோவில்  கருவறையில் ஞானகுஞ்சரி, ஞானவல்லி சமேத ஞானபண்டிதசுவாமி காட்சி அளிக்கிறார். ஒருமுகம், நான்கு கரங்கள், பின் இரு கரங்களில். கமண்டலம், ஜபமாலை, முன்வலக்கரத்தில் அபயமுத்திரை, முன் இடக்கரம் இடுப்பில் வைத்து, முருகப்பெருமான் நின்ற கோலத்தில், 'பிரும்மசாஸ்தா' வடிவத்தில்' காட்சி அளிக்கிறார்.


இம்மலையில் முருகப்பெருமானின் திருவடி பதிந்துள்ள புனிதமான இடம் உள்ளது.'ஞானம்' என்பதற்கு திருவடி என்றும் பொருள். எனவே, ஞானமலை என்பதை திருவடி மலை என்றும் கூறலாம்.

ஞானமலையின் வடமேற்குப் பகுதியில் வள்ளிமலையும் வடகிழக்கில் தணிகை மலையும் வடக்கில் சோழசிங்கபுரம் என்னும் சோளிங்கன் மலையும் அமைந்துள்ளன. வள்ளிமலை, தணிகைமலை, ஞானமலை, மூன்றும் ஒரு முக்கோண வடிவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் மூன்று மலைகளையும் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

இந்தக் கோயில் 206 திருப்புகழ் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மலைக் கோயிலில் முருகன் தனது வழக்கமான போர்வீரர் வடிவத்தில் காணப்படவில்லை,

மாறாக அறிவு மற்றும் இரக்கத்தை வெளிப்படுத்தும் ஆன்மீக முனிவராகக் காணப்படுகிறார். இங்கு அவரது தோற்றம் பிரம்ம சாஸ்தா வடிவத்தில் உள்ளது - படைப்பு, ஞானம் மற்றும் தவங்களைக் குறிக்கும் பிரம்மாவைப் போன்ற ஜெபமாலை மற்றும் தண்ணீர் குடத்தை வைத்திருக்கும் முருகன் சிலை.

கருவறைக்கு அருகில் சித்தர் ஞான வேளியின் ஜீவ சமாதி இருப்பது கோயிலின் ஆன்மீக காந்தத்தை அதிகரிக்கிறது.

மலை உச்சிக்கு அருகில் சித்தர் ஞான வேளியின் சமாதி இருப்பது கோயிலின் மற்றொரு சக்திவாய்ந்த அம்சமாகும், இது சாதகர்களுக்கும் துறவிகளுக்கும் ஒரு ஆன்மீக மையமாக அமைகிறது. கோயில் குளமும் அமைதியான சூழலும் ஆழ்ந்த அமைதியான அனுபவத்தை அளிக்கின்றன.

தினமும் காலையிலும் மாலையிலும் அபிஷேகங்களும் அர்ச்சனைகளும் செய்யப்படுகின்றன. செவ்வாய், வெள்ளி, கிருத்திகை போன்ற புனித நாட்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.
குரு பகவானுக்கு (வியாழன்) அர்ப்பணிக்கப்பட்ட பூஜைகளிலும், மன தெளிவு மற்றும் கல்வி வெற்றிக்காக ஆன்மீக குணப்படுத்தும் சடங்குகளிலும் பக்தர்கள் பங்கேற்கலாம்.

விஸ்வரூப தரிசனம் - காலை 5:30 மணி (அதிகாலை விழிப்பு)
கால சந்தி பூஜை - காலை 8:00 மணி (முருகனுக்கு காலை பிரசாதம்)
உச்சிகால பூஜை - மதியம் 12:00 (மதியம் வழிபாடு)

சாயரட்சை பூஜை - சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு (மாலை ஆரத்தி)
அர்த்த ஜாம பூஜை – இரவு 8:00 மணி (கோயில் மூடுவதற்கு முன் இறுதி பூஜை)

கோயில் ஒரு சிறிய மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், வசதியான காலணிகளை அணிந்து, ஏறுவதற்கு முன் அடிவாரத்தில் விட்டுவிடுவது நல்லது.

ஞானமலை, சோளிங்கருக்கு அருகில் அமைந்துள்ளது மற்றும் சாலை மற்றும் ரயில் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பெரும்பாலும் சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் கோயில் அல்லது புகழ்பெற்ற ரத்னகிரி முருகன் கோயில் போன்ற அருகிலுள்ள கோயில்களுடன் தங்கள் வருகையை இணைத்துச் செல்கின்றனர்.முக்கியமான பண்டிகைகள்

ஸ்கந்த சஷ்டி - ஐப்பசியில் (அக்டோபர்–நவம்பர்) ஆறு நாள் திருவிழாவாகும், இது முருகன் சூரபத்மனை வென்றதை நினைவுகூரும், உண்ணாவிரதம், சிறப்பு பூஜைகள் மற்றும் சூரசம்ஹாரத்துடன் கொண்டாடப்படுகிறது.
தை பூசம் - தமிழ் மாதமான தையில் (ஜன-பிப்ரவரி) கொண்டாடப்படுகிறது, பக்தர்கள் பால் குடம் (பால் பானைகள்) மற்றும் காவடி ஆகியவற்றை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக எடுத்துச் செல்கின்றனர்.

பங்குனி உத்திரம் - பங்குனியில் (மார்ச்–ஏப்ரல்), தெய்வானையுடன் முருகப்பெருமானின் தெய்வீக திருமணத்தைக் குறிக்கும் வகையில், அபிஷேகங்கள் மற்றும் ஊர்வலங்களுடன் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாகம் - வைகாசியில் (மே–ஜூன்), முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு, பிரமாண்டமான சடங்குகள் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை தீபம் - கார்த்திகையில் (நவம்பர்–டிசம்பர்), மலைக்கோயில் நூற்றுக்கணக்கான விளக்குகளால் ஒளிர்கிறது, இது முருகனை ஒளியாகவும் தெய்வீக ஞானமாகவும் குறிக்கிறது.
சித்ரா பௌர்ணமி - சித்திரையில் (ஏப்ரல்–மே) ஒரு முழு நிலவு விழா, பக்தர்கள் ஆசிர்வாதம் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொள்வார்கள்.



ஸ்ரீ ஞானமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பானவரம்
கோவிந்தச்சேரிகுப்பம், ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு 632505


கோயில் மேப்

Sri Gnanamalai Subramaniyaswamy Temple



================================================
================================================
================================================

அண்ணாமலையில் அருணகிரிநாதர் மற்றும் முருகப்பெருமானின் திருவிளையாடல்: ஒரு விளக்கக் குறிப்பு - சுருக்கம் 


இந்த ஆவணம் அண்ணாமலையில் அருணகிரிநாதருக்கும் முருகப்பெருமானுக்கும் இடையே நடந்த தெய்வீக உரையாடல்கள், திருவிளையாடல்கள் மற்றும் அதன் ஆன்மீக முக்கியத்துவத்தைத் தொகுத்து வழங்குகிறது. 

கலிதர்மத்தின் வீழ்ச்சி, மனிதர்களின் நம்பிக்கை துரோகம் மற்றும் நோய்களால் சூழப்பட்ட எதிர்காலம் குறித்த எச்சரிக்கையுடன் இந்தத் தரவுகள் தொடங்குகின்றன. அருணகிரிநாதரை 'ஞானகிரி' என்று அழைத்து முருகன் நிகழ்த்திய தேடல் விளையாட்டு, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் தலையீடு, மற்றும் இறுதியில் கலியுக மக்களின் நலனுக்காக அருணகிரிநாதர் கோரிய வரங்கள் ஆகியவை இதில் விரிவாக ஆராயப்படுகின்றன. 

இத்திருத்தலங்களில் தவம் செய்யும் ஞானியர்கள் மற்றும் அருணகிரிநாதரின் பாடல்கள் மூலம் கிடைக்கும் ஞானம் ஆகியவை மனித குலத்தின் துயர் துடைக்கும் மருந்துகளாக முன்வைக்கப்படுகின்றன.

--------------------------------------------------------------------------------

1. கலியுகத்தின் சூழலும் தர்மத்தின் நிலையும்

ஆதாரங்களின்படி, தற்போதைய கலியுகம் தர்மம் தலைகீழாக மாறியுள்ள ஒரு காலக்கட்டமாக விவரிக்கப்படுகிறது. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • நம்பிக்கைத் துரோகம்: மனிதர்கள் தங்களின் கஷ்டங்களுக்காகப் படைத்த இறைவனின் மீதே பழி போடுகிறார்கள். இது இறைவனுக்குச் செய்யப்படும் 'நம்பிக்கைத் துரோகம்' என்று குறிப்பிடப்படுகிறது.
  • தவறான எண்ணங்கள்: இறைவன் மீதான தவறான எண்ணங்கள் மனித மனதில் ஏற்படுவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
  • புதைந்துள்ள சக்திகள்: முற்கால மனிதர்கள் பிழைத்துக்கொள்வதற்காகப் புதைத்து வைத்த சக்தி மிகுந்த தர்மங்கள் மற்றும் உண்மைகள், கலியுகத்தின் உச்சத்தில் மீண்டும் வெளிப்பட்டு தர்மத்தை நிலைநாட்டும்.
  • நோய்களும் கஷ்டங்களும்: உண்மை நிலையைப் புரியாமல் மனிதன் வருங்காலத்தில் பல்வேறு நோய்களோடும் கஷ்டங்களோடும் பிணைந்து வாழ்வான். தான் செய்த தவறுகளை உணராமல் இறைவனைத் தூற்றுவது மனித இயல்பாக உள்ளது.

--------------------------------------------------------------------------------

2. அருணகிரிநாதரின் தேடலும் 'ஞானகிரி' என்ற அழைப்பும்

அருணகிரிநாதர் அண்ணாமலையில் வாய் பேச முடியாத, காதுகள் கேட்காத நிலையில் இருந்தபோது, முருகப்பெருமான் அவருடன் ஒரு தெய்வீக விளையாட்டைத் தொடங்கினார்.

அம்சம்

விவரம்

அழைப்பு

முருகன் அருணகிரிநாதரை "ஞானகிரி" என்று அழைத்து விளையாடினார்.

தேடல்

அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தேடி அருணகிரிநாதர் பர்வதமலை உட்பட பல மலைகளில் ஏறினார்.

சுற்றுப்பயணம்

அண்ணாமலையைச் சுற்றி சுமார் 150 மைல் தொலைவில் உள்ள பல்வேறு ஆலயங்கள் மற்றும் சப்த ஸ்தலங்களுக்குச் சென்று முருகனைத் தேடினார்.

உணர்தல்

இறுதியில் முருகப்பெருமான் அண்ணாமலையிலேயே இருப்பதைக் கண்டறிந்து, "விளையாட்டு போதும்" என்று அவரிடம் வேண்டினார்.

--------------------------------------------------------------------------------

3. தெய்வீகத் திருவிளையாடல்களும் அற்புதங்களும்

அருணகிரிநாதரின் பக்தியை உலகிற்கு உணர்த்தவும், கலியுகத்திற்குத் தேவையான மாற்றங்களைச் செய்யவும் சில அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன:

அதிசயக் கல்லை நகர்த்துதல்

முருகன் அருணகிரிநாதரிடம் அங்கிருந்த ஒரு பெரிய கல்லை நகர்த்தச் சொன்னார். யாராலும் அசைக்க முடியாத அந்தக் கல்லை அருணகிரிநாதர் நகர்த்தினார்.

  • நோக்கம்: கலியுகத்தில் அநியாயங்களும் அக்கிரமங்களும் நடக்கும்போது, மனித மனம் சிறிதாவது மாற வேண்டும் என்பதற்காக இந்தச் செயல் செய்யப்பட்டது.
  • விளைவு: உலகம் உள்ளவரை அந்தப் புகழும், அருணகிரிநாதரின் பெருமையும் நிலைத்து நிற்கும் என்று முருகன் அருளினார்.

சிவபெருமான் அளித்த தீர்த்தம்

ஈசன் அருணகிரிநாதரிடம் ஒரு தீர்த்தத்தை அளித்து, அதைச் சிந்தாமல் எடுத்துச் செல்லுமாறு கூறினார்.

  • சோதனை: கண்ணாம்பூச்சி ஆட்டம் போல முருகன் மறைந்து விளையாடினார்.
  • பாடல்கள் பெற்ற தலங்கள்: அருணகிரிநாதர் அந்தத் தீர்த்தத்தை ஏந்திச் செல்லும்போது நீர் சொட்டிய இடங்கள் அனைத்தும் 'பாடல் பெற்ற திருத்தலங்களாக' மாறின.
  • அன்னையின் உதவி: பார்வதி தேவி மயில் வடிவில் வந்து தட்டியபோது, தீர்த்தம் முழுமையாகக் கீழே சிந்தியது. அந்த இடமே முருகன் இருக்கும் இடமாக அடையாளம் காணப்பட்டது.

--------------------------------------------------------------------------------

4. கலியுக மக்களுக்கான மீட்பு மற்றும் வரங்கள்

அருணகிரிநாதர் தனக்காக ஏதும் கேட்காமல், கலியுக மக்களுக்காக முருகனிடம் பின்வரும் வரங்களைக் கோரினார்:

  • பாவ விமோசனம்: தீர்த்தம் சிந்திய இடங்களில் தரிசனம் செய்வோரின் பாவங்கள் தீர வேண்டும்.
  • நோய் நீக்கம்: கலியுகத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் தீராத நோய்கள் மற்றும் உடல் குறைகள் (கூன், குருடு போன்றவை) தீர வேண்டும்.
  • ஞானம் மற்றும் கல்வி: அருணகிரிநாதரின் பாடல்களைப் பாடுபவர்களுக்கும், அவரது நூல்களை வைத்திருப்பவர்களுக்கும் ஞானம் பிறக்க வேண்டும். குறிப்பாகக் குழந்தைகளுக்குப் படிப்பு பன்மடங்கு பெருக வேண்டும்.
  • உயர்ந்த நிலை: அண்ணாமலையில் தியானம் செய்வோருக்கு பன்மடங்கு உயர்வுகள் கிடைக்க வேண்டும்.

--------------------------------------------------------------------------------

5. திருத்தலங்களின் முக்கியத்துவம் மற்றும் தற்போதைய நிலை

ஆதாரங்கள் இத்திருத்தலங்களின் ஆன்மீக ஆற்றலை வலியுறுத்துகின்றன:

  • ஞானிகளின் இருப்பு: இன்றும் பல ஞானியர்கள் மற்றும் சித்தர்கள் 'ஜீவ சமாதி' நிலையில் இருந்து தவம் செய்து மக்களைக் காத்து வருகின்றனர். அவர்கள் நான்கு திசைகளிலும் இருந்து அழிவுகளைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.
  • புண்ணியம் பெறுதல்: இந்த ஆலயங்களைச் சுற்றி வருவதே ஒரு மனிதனுக்கு ஞானத்தை அளிக்கும். ஆனால், அங்கு செல்வதற்கே ஒருவருக்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
  • அருணகிரிநாதரின் நித்திய வாழ்வு: அருணகிரிநாதர் இன்றும் அண்ணாமலையில் முருகனுடன் விளையாடிக்கொண்டு இருப்பதாகக் கருதப்படுகிறது. அவர் எப்போதும் இளைஞராகவே (நித்திய இளமை) இருப்பார் என்று ஈசன் அருளியுள்ளார்.
  • வழிபாட்டு முறை: அண்ணாமலையிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது மிகுந்த பலன் தரும். பக்குவப்பட்ட மனிதர்களுக்கு அண்ணாமலையார் மனித ரூபத்தில் வந்து நீர் கொடுப்பார் என்பது நம்பிக்கையாகும்.

--------------------------------------------------------------------------------

முடிவுரை

அருணகிரிநாதரின் வாழ்க்கை வெறும் பக்தி மார்க்கம் மட்டுமல்ல, அது கலியுகத்தின் துயரங்களுக்கு மருந்தாக அமையும் ஒரு ஞான மார்க்கமாகும். அண்ணாமலையில் நிகழ்ந்த இந்தத் திருவிளையாடல்கள், இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையிலான உறவை விளக்குவதோடு, தர்மம் அழியாமல் இருக்க ஞானியர்கள் செய்யும் அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டுகின்றன. அருணகிரிநாதரின் பாடல்களை ஓதுவதும், இத்திருத்தலங்களில் தியானிப்பதும் கலியுக மனிதர்களுக்கு அமைதியையும், ஆரோக்கியத்தையும், ஞானத்தையும் வழங்கும் இறுதிப் புகலிடமாகத் திகழ்கிறது.


வணக்கம் அடியவர்களே , மிக மிக முக்கிய வாக்கு. அனைத்து வரங்களும் கிட்டும் மகத்தான வாக்கு. அனைவருக்கும் பகிரவும்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். 
சர்வம் சிவார்ப்பணம்.