“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, February 4, 2026

சித்தர்கள் ஆட்சி - 580 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1


நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை) 

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 

இடம் : திருகேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை

Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99


அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம்,  இலங்கை  இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை  திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை  இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.


சித்தர்கள் ஆட்சி - 580 :- பகுதி 1 https://siththarkalatchi.blogspot.com/2026/02/580.html சித்தர்கள் ஆட்சி - 581 :- பகுதி 2 https://siththarkalatchi.blogspot.com/2026/02/581.html சித்தர்கள் ஆட்சி - 582 :- பகுதி 3 https://siththarkalatchi.blogspot.com/2026/02/582.html சித்தர்கள் ஆட்சி - 583 :- பகுதி 4 https://siththarkalatchi.blogspot.com/2026/02/583.html சித்தர்கள் ஆட்சி - 584 :- பகுதி 5 https://siththarkalatchi.blogspot.com/2026/02/584.html சித்தர்கள் ஆட்சி - 585 :- பகுதி 6 https://siththarkalatchi.blogspot.com/2026/02/585.html சித்தர்கள் ஆட்சி - 586 :- பகுதி 7 https://siththarkalatchi.blogspot.com/2026/02/586.html சித்தர்கள் ஆட்சி - 587 :- பகுதி 8 https://siththanarul.blogspot.com/2026/02/2102-8.html சித்தர்கள் ஆட்சி - 588 :- பகுதி 9 https://siththarkalatchi.blogspot.com/2026/02/588.html சித்தர்கள் ஆட்சி - 589 :- பகுதி 10 https://siththarkalatchi.blogspot.com/2026/02/589.html சித்தர்கள் ஆட்சி - 590 :- பகுதி 11 (நிறைவு பகுதி) https://siththarkalatchi.blogspot.com/2026/02/590.html


========================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

========================================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அப்பனே, அனைவருக்குமே எம் ஆசிகள். 


=============================================

# எந்த ஒரு கருத்தையும் அல்லது வாக்கையும் அதற்குரிய தகுதியான இடத்தில் சொன்னால் மட்டுமே அது நன்மையைத் தரும்.

=============================================


அப்பனே, நிச்சயம் எவ்வாக்கினை எங்கு செப்பினால் அப்பனே நலன்; அது மட்டும் இல்லாமல், அப்பனே, பின் எவ்விடத்தில் அப்பனே பின் விஷயங்கள் இருக்கின்றதோ, அவ்விடத்தில் வைத்து சொன்னால் மட்டுமே, அப்பனே, பல விஷயங்கள் புரியும் அப்பா. 


==============================================

# ஈசனாரிடம் சம்மதங்கள் வாங்கிய பின்பே வாக்குகள்.

==============================================


இதனால்தான், அப்பனே, நிச்சயம் அங்கும் இங்குமாக சென்று, அப்பனே, பல விஷயங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஈசனிடனே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பின் நிச்சயம் சம்மதங்கள். 


ஏன்? எதற்கு? அப்பனே, ஒவ்வொரு இடத்திலும், அப்பனே, ஒவ்வொரு சக்திகள். அப்பனே, இவ்வாறு அசக்திகள் இருக்கும் இடத்தில் மனிதனுக்கு, அப்பனே, சொன்னால்தான், அப்பனே, நிச்சயம் புரியும் அப்பா. 


இல்லையென்றால், தெளிவடையாமல், அப்பனே, கஷ்டங்களுக்குள்ளே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நுழைந்து, அப்பனே, எவை, எதை என்று தெரியாமல், மீண்டும் மீண்டும், அப்பனே, பின் அதாவது, பின் தன்னையும் அழிப்பான். பின் தன்னிடத்தில் உள்ள அனைவருமே அழிப்பான், அப்பனே, மனிதன். 


இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எங்கு செப்ப வேண்டுமோ, அங்கு செப்புகின்றேன், அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ("இறை வாக்குகளும் உண்மைகளும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு தனித்துவமான ஆற்றலும் அதிர்வுகளும் (Vibrations) உண்டு. ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு எல்லா விஷயங்களையும் சொன்னால் அது மனிதர்களுக்குச் சரியாகப் புரியாது அல்லது விளங்காது. எனவேதான், அந்தந்த இடத்தின் சிறப்பு மற்றும் அங்குள்ள சக்திகளுக்கு ஏற்ப செய்திகளைச் சொல்லும்போதுதான் அதன் முழுப் பயனும் மனிதனைச் சென்றடைகிறது. அதற்காகவே இடமாற்றம் செய்து, அந்தந்த இடத்திற்குரிய ரகசியங்களை அன்புடன் அகத்திய மாமுனிவர் அவர்கள்  விளக்குகிறார்.")


========================================

# மீண்டும் சுரா  கல் - ரகசியங்கள் ஆரம்பம் 

========================================


குருநாதர் :- அப்பனே, மீண்டும் எதை என்று அறிய எங்கு துவங்கினேனோ   உடனே அப்பனே நிச்சயம் அங்கிருந்தே அப்பனே சுராகல்லைப் பற்றி இப்பொழுது பேசப்போகின்றேன் அப்பனே. 


குருநாதர் :- அப்ப நிச்சயம் தன்னில் கூட பின் கடல் அப்ப நிச்சயம் தன்னில் கூட அடிமட்டத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ராகுவும் கேதுவும் பின் நிச்சயம் தன்னில் கூட பின் இருக்கின்றது என்பது அதாவது புவி எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ராகுவோ கேதுவோ எங்க இருக்குதாம்? சுராகல்லு பக்கத்துல தான் இருக்குது அந்த கிரகம் ஒன்று. ஐயா புரியுதுங்களா ஐயா? 


============================================

# கேதுவின் பிம்பம் ராகு என்று நினைப்போம்.

# ராகுவின் பிம்பம் கேது என்று நினைப்போம்.

============================================


குருநாதர் :-  அப்பனே பின் அதான் அதாவது அப்பனே எவை என்று கூட அப்பனே பின் கேதுவின் பிம்பம் ராகு என்று நினைப்போம். அப்பனே ராகுவின் பிம்பம் அப்பனே கேது என்றும் நினைத்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இதற்கு பின் எவை என்று அறிய அறிய, அதனால் கேதுவையும் பின் ராகுவாக நினைத்துக் கொள்ளலாம். ராகுவை பின் கேதுவாகவும் நினைத்துக் கொள்ளலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா? அப்ப ராகுவும் கேதுவும் ஒன்னு என்று சொல்றார் ஒன்று.


அடியவர் 2:-  பிம்பம்.


சுவடி ஓதும் மைந்தன் :- பிம்பங்கள். அப்ப கேது ஒன்று கேதுவோட பிம்பம் யாரு? 


அடியவர் 2:-  ராகு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ராகுவோட பிம்பம் 


அடியவர் 2:-  கேது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க கேது இருக்கிறார்னா, ராகுவும் இருக்கிறார் மேல. ராகு இருக்கிறார்னா கேதுவும் இருக்கிறார். அவர் பக்கத்துல, அது பிம்பம். அது இங்க ஐயா புரியுதுங்களா? கேது வந்து ராகுவாக வச்சுக்கலாம். ராகுவை கேதுவாக வச்சுக்கலாம். இப்ப புரியுதுங்களா ஐயா? 


=========================================

# கேது பூமியில் அடி நுனியில் - ராகு பூமிக்கு மேலே சமமாக நேர் பகுதியில்.

=========================================


குருநாதர் :-  இதைத்தன் அப்பா நிச்சயம் தன்னில் கூட பின் இங்கொன்றும் அறிந்தும் புரிந்தும் கூட பின் எவை என்று அறிய அப்பனே நுனி பூமியின் அப்பனே பின் நுனிப்பகுதியில் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது பின் இதற்கு சமமாக நேர்ப்பகுதியில், அப்பனே நிச்சயம் தன்னில் கூட ராகு என்று, ஆனாலும் அப்பனே சொன்னேனே கேதுவும் ராகுவும் ராகுவும் கேதுவும். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா புரியுதுங்களா? அப்ப கேது அடியில், பூமியில நுனியில இருக்குது. ராகு மேல இருக்கிறார் வந்து. அப்ப கேது.


அடியவர் :- அடியும் நுனியும்.


சுவடி ஓதும் மைந்தன் :- அடியும் முடியும். அப்ப இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்கு. பூமிக்கு மேல போயிடுச்சு எது? ராகு. ஐயா புரியுதுங்களா? 


====================================================

# ராகுவுக்கும் கேதுவுக்கும் ஒரு இடைவெளி இருக்கின்றது.

# எவ்வாறு இடைவெளி என்றால், அவை தன் ஒட்டும் பசை போன்றே உள்ளது.

====================================================


குருநாதர் :-  அப்பனே இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அப்பனே நிச்சயம் இவ்வாறாக அப்பனே பின் அதாவது ராகுவுக்கும் கேதுவுக்கும் ஒரு இடைவெளி இருக்கின்றது அப்பா. எவ்வாறு இடைவெளி என்றால் அப்பனே அவை தன் ஒட்டும் பசை போன்றே உள்ளதப்பா. இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது மனிதனுக்கு ஏன் பல வருத்தங்கள் நிச்சயம் தன்னில் கூட ஏன் இப்புவியிட்டு நிச்சயம் பின் அதாவது பின் இறைவனிடத்தில் அதாவது செல்வதில்லை. 


====================================================

# மனிதன் என்ன நினைக்கின்றானோ அவை பசைபோல் ஒட்டிக்கொண்டு , அவ் எண்ணங்களுக்கு ஏற்றவாறு மீண்டும் சக்தியை மனிதனுக்கு கொடுக்கும்.

====================================================


குருநாதர் :- ஏன் எதற்கு கஷ்டங்கள் என்றால் நிச்சயம் தன்னில் கூட ராகுவும் கேதுவும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் என்ன நினைக்கின்றானோ அவை தன் நிச்சயம் தன்னில் கூட அவ் எண்ணங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் பசைபோல் அப்பனே நிச்சயம் தன்னில் அறிந்து கூட பின் ஒட்டிக்கொண்டு அப்பனே மீண்டும் அப்பனே அவ் எண்ணங்கள் பின் நிச்சயம் தன்னில் கூட அவ் எண்ணங்களுக்கு ஏற்றவாறு மீண்டும் சக்தியை மனிதனுக்கு கொடுத்து. இதனால்தான் மனிதன் வலுவிழந்து சென்று சென்று விடுகின்றான் கடைசியில். 


================================

# தன் எண்ணங்கள், தன்னை சுடும் 

# எண்ணம் போல் வாழ்க்கை.

================================


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ("ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களுக்கு இடையே ஒரு நுட்பமான 'பசை' போன்ற ஈர்ப்பு சக்தி இருப்பதை அகத்திய மாமுனிவர் விளக்குகிறார். இந்த ரகசியப் பசை ஒரு பதிவு செய்யும் கருவி (Recorder) போலச் செயல்படுகிறது. மனிதன் எதை நினைக்கிறானோ, அந்த எண்ணங்கள் அனைத்தும் இந்த காந்தப் பசையில் ஒட்டிக்கொள்கின்றன. நாம் எண்ணும் எண்ணங்களின் தன்மைக்கு ஏற்ப, ராகுவும் கேதுவும் அந்தப் பலன்களைத் திரும்ப நம்மிடமே கொண்டு வந்து சேர்க்கிறார்கள். ஒருவன் மற்றவருக்குத் தீங்கு நினைக்கிறான் என்றால், அந்தத் தீய எண்ணமே ஒரு பதிவாக மாறி, மீண்டும் அவனையே வந்து சேரும். சுருக்கமாகச் சொன்னால், நம் எண்ணங்களே நம் விதியைத் தீர்மானிக்கும் விதையாக மாறி, ராகு-கேது மூலம் அறுவடை செய்யப்படுகின்றன.")


அடியவர் :-  கெட்டுத்தான் போவான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  திருப்பி அவனே கெட்டுப் போவான்.


அடியவர் :-  எண்ணம் போல் வாழ்க்கை.


சுவடி ஓதும் மைந்தன் :- எண்ணம் போல் வாழ்க்கை. அதுதான் சொல்றது வந்து இது வந்து தெரியல மக்களுக்கு. அப்ப அந்த பசை அங்க போயிட்டு அடிச்சு திருப்பி என்ன ஆகுது வந்து நம்மளுக்கே கொடுக்குது. அப்ப நம்ம என்ன பண்றோமோ திருப்பி கிடைக்குது. திருப்பி நம்மளுக்கு கிடைக்குது. இதுதான் வந்து இந்த ராகுவோட கேதுவுகளோட ஒரு தன்மை.


================================================

# நல்லவற்றை பயன்படுத்து. நல்லதைக் கேள்.நல்ல செயல்களை செய்.

#  நல்ல வழியில் செல். இப்படி சென்றால் நீ நன்றாகவே வாழ்வாய். 

================================================


குருநாதர் :-  இதனாலதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உயர் ஞானிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நல்ல வற்றை பின் பயன்படுத்து நல்லதைக் கேள். அப்பனே நல்ல செயல்களை செய். நல்ல வழியில் பின் செல் என்றெல்லாம் அப்பனே இப்படி சென்றால் அப்பனே நீ நன்றாகவே வாழ்வாய் அப்பனே. 


குருநாதர் :-  மனிதன் அப்பனே இவ்வுலகத்தில் நன்றாக வாழ்ந்து என்னென்ன தேவைகள் என்பதை எல்லாம் அப்பனே பூர்த்தி செய்து கொண்டு, அப்பனே, பிறப்பில்லா அப்பனே பெருவாழ்வை அப்பனே நிச்சயம் பின் சந்திக்கலாம். அப்பனே நிச்சயம் பின் வாழலாம். 


குருநாதர் :-  அப்பனே இதனால் அப்பனே இதனால்தான் அப்பனே ஞானிகளுக்கு பல விஷயங்கள் தெரிந்தது. மக்களை அப்பனே நிச்சயம் தன்னில் கூட திருத்த அவர்கள் வந்தனர். ஆனாலும் அப்பனே மக்கள் இக்கலியுகத்தில் தர்மத்தை கடைபிடிப்பதே இல்லை. இதனால்தான் அழிவுகள் பல பல நிச்சயம் தன்னில் கூட அப்பனே வந்து கொண்டே இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ("மாணிக்கவாசகர் போன்ற மகா ஞானிகள் இந்த கர்ம வினையின் ரகசியத்தை நன்கு அறிந்திருந்தனர். 'நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும், தீயதை நினைத்தால் தீயது நடக்கும்' என்ற எளிய உண்மையை அவர்கள் உலகிற்குப் போதித்தனர். மனிதர்கள் தங்கள் எண்ணங்களையும் செயல்களையும் சீர்செய்து கொண்டால், துன்பமில்லாத பெருவாழ்வு வாழ்வதோடு இறைவனைக் கண்டு மோட்சத்தையும் அடைய முடியும் என்பது ஞானிகளின் வாக்கு. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மனிதன் இந்த அடிப்படை தர்மத்தைக் கடைப்பிடிக்கத் தவறுகிறான். எப்போது தர்மம் மீறப்படுகிறதோ, அப்போதெல்லாம் மனித வாழ்வில் அழிவுகளும் துயரங்களும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.")


குருநாதர் :-  அப்பனே உண்மையை உண்மையை செப்பினாலே அப்ப நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும். அப்ப நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறாக அழிவுகள் வந்துவிட்டால் அப்பனே இறைவன் இல்லையா என்று பின் நிச்சயம் சொல்வான் அப்பா. இதனால்தான் அப்பனே 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ("அழிவு வரும்போது 'இறைவன் இருக்கிறாரா இல்லையா?' என்று மனிதர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதை உணர்ந்தே, அகத்திய மாமுனிவர் முன்கூட்டியே உண்மைகளை உரக்கச் சொல்கிறார். மக்கள் கேட்கிறார்களோ இல்லையோ, தேவையான எச்சரிக்கைகளைச் சரியான இடங்களில் பதிவு செய்துவிட வேண்டும் என்பதே அவர் நோக்கம். 


இந்தப் பதிவுகள் அனைத்தும் ஒரு இடத்தில் சேமிக்கப்படும் (Store). பின்னாளில் பேரழிவு ஏற்படும்போது, 'இறைவன் ஏன் இதைக் தடுக்கவில்லை?' என்று யாரும் குறைகூற முடியாது. 'அன்றே நான் சொன்னதை நீ கேட்டிருந்தால் பிழைத்திருக்கலாம்' என்று சுட்டிக்காட்டும் வகையில், இறைவன் தன் கடமையைச் சரியாகச் செய்துவிட்டார் என்பதை நிலைநாட்டவே இந்த வாக்குகள் முன்கூட்டியே வழங்கப்படுகின்றன.")


==============================================

# நல்லெண்ணமாக இருப்பதும் ஒரு புண்ணியமே.

============================================== 


குருநாதர் :-  அப்பனே பின் அதாவது நிச்சயம் நல்லெண்ணமாக இருப்பதும் அப்பனே ஒரு புண்ணியமே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ("மனிதர்கள் வாழ்வில் அதிகளவில் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை முந்தைய வாக்கிலேயே அகத்திய மாமுனிவர் வலியுறுத்தியுள்ளார். அந்தப் புண்ணியத்தைச் சம்பாதிப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல; ஒரு மனிதன் நல்ல எண்ணத்தோடு இருந்தாலே அதுவே அவனுக்குப் 'பெரும் புண்ணியமாக' வந்து சேரும். தூய்மையான எண்ணத்துடன், நற்செயல்களைச் செய்து, தம்மால் இயன்ற நன்மைகளை மற்றவர்களுக்குச் செய்வதே உண்மையான தர்மம். அப்படிச் செய்யும் நன்மைகள் அனைத்தும் திரண்டு பெரும் புண்ணியமாக மாறி, ஒருவனது வாழ்வை உயர்த்தும்.")


குருநாதர் :-  எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால்  அப்பனே நிச்சயம் இச்சுராக்கல்லானது. அப்பனே பின் அதாவது மேருவாகவும் எடுத்துக்கொள்ளலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :- (அந்தச் சுராகல்லின் தன்மையைப் பற்றி விளக்கும்போது, அது 'மேரு' மலையைப் போன்றது என்று அகத்திய மாமுனிவர் குறிப்பிடுகிறார். 'மேரு' என்பது நாம் வழிபாட்டில் பயன்படுத்தும் புனிதமான 'மகாமேருவை'க் குறிக்கும். மகாமேரு எப்படி ஒரு உன்னதமான சக்தியின் வடிவமாகத் திகழ்கிறதோ, அதே போன்ற ஒரு தெய்வீக வடிவத்தில்தான் இந்தக் கல்லும் அமைந்துள்ளது. குறிப்பாக, அதன் வடிவம் 'முக்கோண' வடிவில் (Sri Chakra Geometry) இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். மகாமேருவின் வடிவத்தையும், இந்தக் கல்லின் முக்கோண வடிவத்தையும் ஒன்றாகக் கருதி, அதன் புனிதத்தையும் ஆற்றலையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.)


==========================================

# பல முகமாக தோற்றம் அளிக்கும் - சுரா கல் 

==========================================


குருநாதர் :-  அப்பனே அவர் சுராக்காரன்றது. அப்ப நிச்சயம் ஒரு இடத்தில் அப்படி பார்த்தால், அப்பனே ஒரு வடிவம் மறுமுனையிலிருந்து பார்த்தால் மறு உருவம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த சுராக்கல்  ஒரு இடத்துல இருந்து பார்த்தா என்ன ஆகும்? ஒரு உருவம் கிடைக்கும். மறு இடத்திலிருந்து பார்த்தா மறு உருவம். 


====================================

# ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

====================================


குருநாதர் :-  அப்பனே இதனால்தான் அப்பனே இறைவன் ஒரே முகம் தான். அப்பா இதனால அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல்வேறு முகங்கள் எங்கெங்கு பார்க்கின்றார்களோ அதைப்போன்று அதேபோல்தான் இறைவனோ ஒரே முகம் தான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் என்பவர் ஒரே முகம் தான். ஆனால் நம்ம வந்து பார்க்கிற விதம் வேற வேற வேற வேற. ஆனால் சேர்றது எல்லாம் ஒன்னுதான். ஒன்னுதான். 


=========================================

# உண்மையை சொல்ல வந்த ஞானிகள்..ஆனால் மனிதன் அவர்களை எல்லாம்…

=========================================


குருநாதர் :-  அப்பனே இவையெல்லாம் ஞானிகள். அப்பனே இவ்வுலகத்திற்கு அப்பனே நிச்சயம் அப்பனே பின் மனிதனை திருத்த போராடினார்கள் என்பேன் . அப்பனே ஆனாலும் வந்தவர்கள் எல்லாம் பொய் என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப பல பல ஞானிகள் வந்தாங்க. உண்மை சொல்ல பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் வந்தாங்க. ஞானிகள் யாரும் தெரியுதுங்களா? பெரிய பெரிய ஆளுங்க. மாணிக்கவாசகப் பெருமான் இன்னும் நிறைய பேர், வள்ளல் பெருமான், அப்புறம் ஜீசஸ், நபிகள் நாயகம், நபிகள் நாயகம் நல்லா சொன்னார். ஆனா அவங்க பேச்சு எல்லாம் பொய்ன்னு சொல்லிட்டு என்ன பண்ணிட்டாங்க? அவங்க எல்லாம் திருப்பி அனுப்பிச்சிட்டாங்க.


குருநாதர் :-  நிச்சயம் அவர்கள் சொல்லியதையும் இன்றைய காலகட்டத்தில் கேட்கவில்லை. 


குருநாதர் :-  அப்பனே தர்மத்தை மீறி செல்கின்றனர். 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக. நிச்சயம் தன்னில் கூட தர்மத்தை மீறி சென்று பின் மீண்டும் இறைவனைக் கண்டால் நிச்சயம் எவ்வாறாக இறைவன் பின் காப்பாற்றுவான்? நிச்சயம் அதனால் நிச்சயம் தர்மத்தின் வழியே செல்வதில்லை. ஆனால் இறைவனைப் பிடித்துக் கொண்டால் நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு? ஆனால் பின் கடைசியில் ஒன்றுமே செய்யவில்லை என்று மனிதன் பின் இவ்வாறுதான் கலியுகத்தில் குறை கூறுவான். 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (காலங்காலமாகத் தோன்றிய மகா ஞானிகள் அனைவரும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய ஒரே விஷயம் 'தர்மத்தைக் கடைப்பிடியுங்கள்' என்பதுதான். ஆனால், மனிதனோ அடிப்படை தர்மத்தைப் பின்பற்றத் தவறிவிட்டு, நேராகக் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறான். தார்மீகமான வாழ்வு இல்லாமல் வெறும் வழிபாட்டை மட்டும் செய்துவிட்டு, 'எனக்கு இறைவன் எதுவுமே செய்யவில்லை' என்று கடைசியில் இறைவனையே குறை கூறுகிறான். நாம் சொல்லிலும் செயலிலும் தர்மத்தைப் போற்றி வாழ்ந்தாலே போதும்; வேறு எதையும் நாம் தேடிச் செல்ல வேண்டியதில்லை. தர்மத்தின் வழியில் நடப்பவர்களுக்கு, எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பதை இறைவன் அறிந்து அந்தந்த நேரத்தில் சரியாகச் செய்வார்.)


====================================================

# உங்களுக்கு தேவையானது தானாகவே கிடைக்கும். 

====================================================


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம் தெரிவித்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன்னைத்தானே வெல்லலாம் என்பேன் அப்பனே. பல விஷயங்கள் இருக்கின்றது அப்பா இவ்வுலகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக பல விஷயங்கள் கற்பித்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் இருந்தால், அப்பனே உங்களுக்கு தேவையானது தானாகவே கிடைக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த உலகத்தில் பல விஷயங்கள் இருக்குது. வந்து அந்த விஷயங்கள் எல்லாம் கற்றுக்கினா மட்டும்தான் நமக்கு என்ன இருக்கும்? நம்ம நாமே வென்று சில விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம். 


=============================================

# இராவணேஸ்வரர் - சுராக்கல்லை பல தேசங்களுக்கு எடுத்துச் சென்று மக்கள் திருந்தட்டும் என்று அங்கங்கு நட்டு வைத்துள்ளார். 

=============================================


குருநாதர் :-  அப்பனே இவை தன் உணர்த்த. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வழியில் கூட அப்பனே பின் இராவணன். அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல இடத்தில். அப்பனே நிச்சயம் தன்னில் கூட அச்சுராக்கலை. அப்பனே எதை என்று அறிய. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நல்விதமாகவே. அப்பனே பின் தியானங்கள் செய்து அதை எடுத்துட்டு பல தேசங்களுக்கு எடுத்துச் சென்று அப்பனே மக்கள் திருந்தட்டும் என்று நட்டான் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சுராக்கல்லை , பெரிய கல் அது.  அதனோட கல் கொஞ்சம் தியானத்துல எல்லாம் நிறைய பண்ணி என்ன பண்ணாரு? வந்து உடைச்சிருக்கு. கொஞ்சம் உடைச்சா எல்லா இடத்துலயும் கொண்டு வச்சிருக்கு. எல்லா இடத்தையும் வந்து தானே வச்சிருக்கு. எழுதி வச்சு அதுதான் வந்து சுயம்பு லிங்கம்னு சொல்லுவாங்க. வந்து சுயம்பு லிங்கம். 


அடியவர் :- ஐயா, இங்க சுராக்கல்னா என்னன்னு சொல்லிட்டு நான் சொல்லவா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லுங்க ஐயா. 


அடியவர் உரையின் சுருக்கம் :- ("அகத்திய மாமுனிவர் குறிப்பிடும் அந்த 'சுராக்கல்' என்பது, பழங்காலத்தில் ஆஸ்திரேலியா வரை பரவியிருந்த குமரிக்கண்டம் (இலெமூரியா) எனும் பெரும் நிலப்பகுதியின் ஒரு அங்கமாகும். கடல் சீற்றத்தினால் இந்த நிலப்பரப்பு மூழ்கியபோது, சிவபெருமான் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒரு மிகப்பெரிய மலையின் ஒரு பகுதி மட்டும் எஞ்சியது; அதுவே இந்தச் சுராகல். மகாமேருவின் வடிவத்தைக் கொண்ட இந்த பிரம்மாண்டமான கல், தற்போது இலங்கையின் தென்திசையிலுள்ள கடல் பகுதியில் மூழ்கிக்கிடக்கிறது. ராவணேஸ்வரன் இந்தக் கல்லிலிருந்து தான் பல பகுதிகளைப் பிரித்தெடுத்து, உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 'சுயம்பு லிங்கங்களாகப்' பிரதிஷ்டை செய்தான் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, இலங்கையிலுள்ள நகுலேஸ்வரம் ஆலயத்தில் ராவணனால் வைக்கப்பட்ட அத்தகையதொரு சுயம்பு லிங்கம் இன்றும் இருப்பதாக அகத்திய மாமுனிவர் குறிப்பிடுகிறார்.")


=============================================

# இலங்கையில்  சுராக்கல்லின்  சிறு சிறு துகள்கள்….

=============================================


குருநாதர் :-  எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், அப்பொழுது கூட அப்பனே நிச்சயம் எடுத்து வந்து அப்பனே பல திசைகளுக்கு அப்பனே பறக்கும் சக்தியை பெற்று, அப்பனே நிச்சயம் நேற்றைய பொழுதிலே, அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே காலச்சக்கரத்தை அப்பனே பின் சித்தர்கள் அவருக்கே அப்பனே சொல்லிக் கொடுத்ததினால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவற்றை பின் அறிந்து, அப்பனே பின் அதாவது ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கும் அப்பனே பின் போவான் என்பேன் அப்பனே.  


குருநாதர் :-  இதனால் அப்பனே பல இடங்களில் அப்பனே பின் அக்கல்லின் அப்பனே சிறு சிறு துகள்கள் விழுந்துள்ளதப்பா. 


குருநாதர் :-  இப்பொழுதும் கூட (திருக்கேதீஸ்வரத்தில், இலங்கையில் ) இங்குதான் அப்பனே பின் அதாவது இழுக்கின்ற பொழுது அப்பனே பின் விவரமாகவே, அதாவது விரைவாகவே, வேகமாகவே பின் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இழுக்கின்ற பொழுது, அதன் தன் அப்பனே பின் நிச்சயம் தன் அழுத்தம் தாங்காமல், அப்பனே சிதறி அப்பனே முதலிலே இங்குதான் அப்பனே சிதறி கிடைக்கின்றது என்பேன் அப்பனே. இதனால் அப்பனே அங்கங்கு அப்பனே புதைந்தெழுவது என்பேன்  அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ("ராவணேஸ்வரன் அந்தப் பெரும் சுராகல்லிலிருந்து லிங்கங்களைப் பிரித்தெடுத்தபோது ஏற்பட்ட அதிர்வுகள் சாதாரணமானவை அல்ல. ஒரு பெரும் பகுதியை உடைக்கும்போது, அதன் அழுத்தம் (Pressure) தாங்க முடியாமல் அந்தக் கல் சீறிக்கொண்டு சிதறியது. அவ்வாறு சிதறிய அந்தப் புனிதக் கல்லின் துண்டுகள், பல கிலோமீட்டர் தூரத்திற்குப் பாய்ந்து சென்று பல்வேறு இடங்களில் விழுந்தன. அப்படிச் சிதறி விழுந்த கற்கள் அதிகம் காணப்படும் இடமாக இலங்கைத் தீவு விளங்குகிறது. இந்தக் கற்கள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒரு தனித்துவமான ஆற்றல் கொண்டதாக மாறியது; இதையே அகத்திய மாமுனிவர் அந்த இடங்களின் சிறப்புகளைச் சொல்லும்போது ஒரு சான்றாகக் குறிப்பிடுகிறார்.")


குருநாதர் :-  எதை என்று புரிய. அப்பனே இவை பற்றியும் யான் எடுத்துரைக்கின்றேன். அப்பனே போக போக. அப்பனே நிச்சயம் தன்னில் இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட எவை தன் அப்பனே பின் அப்படியே. அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அங்கும் இங்கும் பொதிந்துள்ள தப்பா. இப்பொழுது நிச்சயம் தன்னில் கூட அவை தன் அப்பனே சக்தி மிக்க அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் கல்லாகவே மாறிக்கொண்டு, மாறிக்கொண்டு…. 


சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் அங்கங்க விழுந்ததுனால இன்னும் அது வந்து அந்த கல்லானது என்ன ஆகுதாம்? வந்து சக்தியோட இருக்குது. சக்தியோட இருக்குதுப்பா.


குருநாதர் :-  எதை என்று அறிய அப்பனே இதனால் அப்பனே அதையும் அப்பனே பல மக்கள் அப்பனே விற்றும் அப்பனே பின் காசுகள் ஆக்கிவிட்டனர். 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ("ராவணன் அந்தப் பெரும் சுராகல்லைப் பிரித்தெடுத்தபோது, அதன் அழுத்தம் தாங்காமல் சிதறிய துகள்கள் பல இடங்களில் விழுந்தன. 


ஒரு பாறையை வெடிவைத்துத் தகர்க்கும்போது கற்கள் எப்படி நாலாபுறமும் சிதறுமோ, அதேபோல அந்தப் புனிதக் கல்லின் துகள்களும் பல இடங்களில் விழுந்து கிடந்தன. 


அந்தப் புனிதக் கற்களின் மகிமையையும் மதிப்பையும் உணர்ந்த சில மனிதர்கள், அவற்றை ஆன்மீகப் பொக்கிஷமாகப் போற்றாமல், வெறும் பொருளாகக் கருதி விற்றுவிட்டனர். தெய்வீக ஆற்றல் கொண்ட அந்தச் சுராகல் துண்டுகளை எடுத்துச் சென்று, அவற்றை வியாபாரப் பொருளாக்கிப் பணமாக மாற்றிவிட்டார்கள் என்ற வேதனையான உண்மையை அகத்திய மாமுனிவர் இங்கே பதிவு செய்கிறார்.")



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருகேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்….. )


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.