“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Sunday, February 22, 2026

சித்தர்கள் ஆட்சி - 570 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - சபரிமலை வாக்கு!

இறைவா நீயே அனைத்தும் !! இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்!!






7/2/2026  அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 
வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னிதானம்.



ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
 
அப்பனே, நலங்கள்.

எண்ணற்ற அப்பனே பின், இன்னும் அப்பனே பின், ஐயன் பல வகையில் கூட பின் இயலாதவர்களுக்கு நன்மைகள் செய்து கொண்டே இருக்கின்றான், அப்பனே.

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல பரிசுத்த ஆன்மாக்களை, அப்பனே, இன்னும் ஏற்படுத்தி, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் நல்வழிப்படுத்தி, அப்பனே நல்விதமாக பல பல, பின் யோகங்களையும் கொடுத்து, அப்பனே, பல வழியில் கூட, பின் இயலாதவர்களுக்கு, அப்பனே, சேவை செய்ய, அப்பனே, செய்து கொண்டே இருக்கின்றான் என்பேன், அப்பனே. நலமாகவே, அப்பனே!!

================================================
அனைவரிடத்தும் அன்பு செலுத்தி சமத்துவத்தைப் பேணக் கூறும் உபதேசம்
================================================

நிச்சயம் தன்னில் கூட, பின் அன்பை ஒன்றை, அப்பனே, பின் அதாவது, அனைவரிடத்திலும், அப்பனே, பின் அன்பை செலுத்தி விட்டாலே போதுமானது.

அப்பனே, அனைவரையும் ஒன்றாக மதிக்க வேண்டும் என்பது கூட, அப்பனே, இவனுடைய, பின் தாரக மந்திரம், அப்பனே.

அனைவருக்கும் எதை என்று புரிய, அப்பனே, பின் அதாவது, தான் என்ற எண்ணம் வரக்கூடாது எப்பொழுதும் கூட.

பின்  அனைவரிடத்திலும் தனை வணங்க வேண்டும். பின் அனைவரிடத்திலும் பண்பாக பேச வேண்டும். எவரையும் நிச்சயம் தன்னில் கூட தாழ்த்தி பேசக்கூடாது. எவரையும், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் தாழ்த்தி, எதை என்று அறிய, பின் எதை எதையோ, பின் அதாவது, அனைவரும், அதாவது, மனிதர்கள் ஒன்றே. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, அனைவரையும், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பெயரையும் உச்சரிக்கக்கூடாது,
நிச்சயம் தன்னில் கூட, என்றெல்லாம், அப்பனே, இவனுடைய சிறப்புகள்.!!!

ஏன்,? எதற்கு?, பெயர்கள் எல்லாம் இப்பொழுதுதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று அறிய, அப்பனே, பின் தெரியும். பின் எப்படி?? அழைக்கின்றார்கள் என்பதை எல்லாம், பின் சரணமிட்டு, எதை என்று புரிய, அப்பனே. 



(ஐயப்ப பக்தமார்கள் மற்றவரை காணும் பொழுதோ பேசும் பொழுதோ சுவாமியே சரணம் ஐயப்பா.. என்றும் சாமி சரணம் சாமி சரணம் என்று பேசுவது.... இப்படி பகவான் நாமத்தை சொல்லி அழைப்பது மாலை அணிந்து விரதம் இருக்கும் நேரத்தில் அதாவது மண்டல காலத்தில் மட்டுமல்ல எல்லா காலகட்டங்களிலும் அனைவரையும் சமமாக பாவித்து அனைவரும் இறைவனுடைய குழந்தைகள் அனைவரும் ஒன்றே என்று இறைவன் நாமத்தை சொல்லி அழைக்க வேண்டும்)


இதனால், அப்பனே, நல்வழிப்படுத்தி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட.

================================================
குழந்தை பாக்கியம் இல்லாவிட்டாலும் இறைத்தொண்டில் திளைத்த மதுரை தம்பதியர்
================================================



இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஓர் (தம்பதியர்) அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அறிந்தும் கூட, பின் இங்கிருந்து சரியாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,  மதுரை தன்னிலே, பின் நலமாகவே வாழ்ந்துட்டு வந்தனர் அவர்கள்.

நிச்சயம் தன்னில் கூட உயர்ந்த, நிச்சயம் தன்னில் கூட, பின் உயர்ந்த, பின் செல்வாக்காக, பின் செல்வாக்காக,  இருந்து, நிச்சயம் தன்னில் கூட பல வகைகளிலும் கூட, பின் பல வகைகளிலும் கூட சேவைகள் செய்து வந்தனர், நலமாகவே. இதனால் பன்மடங்கு உயர்வுகள்.

ஆனாலும், பின் குழந்தை பாக்கியங்கள் இல்லை. 

ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், எதை என்று கூட, பின் ஐயனை, பின் விடாது, நிச்சயம் தன்னில் கூட, பின் வந்து வந்து தொழுது கொண்டே. 

ஆனாலும் மனம் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, தன் இல்லத்தவள் சொன்னாள்!!!!!!,
 
நிச்சயம் இப்படியே, பின் பல வழியிலும் சேவைகள் செய்து கொண்டிருக்கின்றோம். 

ஆனாலும் நம் தனக்கு வாரிசுகள் இல்லையே!!!! என்றெல்லாம்,!!! நிச்சயம், பின் அதாவது, தன் இல்லத்தவளும் கூட.

 இதனால் நிச்சயம் பின் ஐயன், அதாவது, நிச்சயம் ஐயன் கொடுத்தது இவ்வாழ்க்கை.

 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எவ்வளவோ கஷ்டங்கள், பின் நிச்சயம் தன்னில் எவ்வளவோ, பின் நஷ்டங்கள், எவ்வளவோ, எதை என்று புரிய. ஆனாலும் ஐயன் உயர்த்திக் கொண்டே, உயர்த்திக் கொண்டே சென்று இப்பொழுது இத்தனை, பின் நிச்சயம், பின் மனிதர்களுக்கு நாம் சேவை செய்து கொண்டிருக்கின்றோம். 

இதனால் அனைவரும் நம் குழந்தைகளே என்று நிச்சயம் எண்ணுவோம்.


இனிமேலும் நிச்சயம் தன்னில் கூட, பின் கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி, நிச்சயம் தன்னில் கூட ஐயன்தான் துணை.

இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் அனைவரையும் குழந்தையாக என்று எண்ணி நிச்சயம் அனைவருக்கும் சேவை செய்வோம்.

பின் நம்மிடத்தில் உள்ள அனைத்தும் கொடுப்போம். நமக்கு எதுவும் வேண்டாம். நிச்சயம் ஐயனே போதும். 

பின் நிச்சயம் தன்னில் என்றெல்லாம் நிச்சயம் அதாவது அறிந்தும் எதை என்று புரிய.

ஆனாலும் அறிந்தும் கூட பின் இவையெல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட ஐயன் கேட்டுக்கொண்டே இருந்தான். நலமாக.

இதனால் பின் அவந்தன் பின் அதாவது பின் அடிக்கடி இங்கு பின் வந்து கொண்டே!!!(மதுரையில் இருந்து சபரிமலைக்கு) வந்து கொண்டே அதாவது நிச்சயம் அவ் பக்தன்.
அவ் பக்தன் நிச்சயம் தன்னில் கூட இன்னும் அறிந்தும் கூட பின் எவ்வாறு என்பதை எல்லாம்!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அருள்கள் கொடுக்காமலே நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பார்த்துக் கொண்டிருந்தான் ஐயன்!!!
 என்னதான்??? பின்  செய்வான்?? இவ் பக்தன் என்று!!!!

ஆனாலும் அவ் பக்தன் நிச்சயம் ஆனாலும் மனதில் விட மனதில் திடமாக நம்பிக்கை கொண்டிருந்தான்!!

பின் அதாவது பின் ஐயனே!! உன்னை விடப்போவதில்லை எதை என்று அறிய அறிய போதும் எத்தனை? எத்தனை? ஜென்மங்கள் எடுத்தேனோ!? இத்தனை பின் ஜென்மங்களுக்கு கூட எவ்வளவு வருத்தப்பட்டேனோ!? எவ்வளவு இன்பங்களை பட்டேனோ!!? யாம் தன் அறியாது!!

 இதனால் நீயே அறிவாய்!! இதனால் நீயே போதும் !!!

அதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் பின் இல்லத்தவளுக்கு ஒரு ஆசை!!!!! குழந்தை வேண்டும் என்று!!

அறிந்தும் புரிந்தும் கூட எதை என்று அறிய!!!
இதனால் எவ்வாறு என்பதை எல்லாம் பன்மடங்கு அறிந்தும் பல வழியிலும் கூட ஆனாலும் பின் வந்து கொண்டே!!! வந்து கொண்டே!!! (சபரிமலைக்கு)

இதனால் நிச்சயம் தன்னில் கூட இன்னும் செல்வாக்கு அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட பின் பல கல்வி சாலைகளையும் கூட இன்னும் எதை என்று புரிய பல வழியிலும் கூட பின் அதாவது நிச்சயம் அதாவது மருத்துவமனைகளை கூட இலவசமாக தந்து நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும்!!!!


ஆனாலும் நிச்சயம் பின் அவள் இல்லத்தவளுக்கு  மட்டும் இன்னும் ஆசை!!!!

அறிந்தும் அதாவது நிச்சயம் தன்னில் கூட இவ்வளவு செய்கின்றீர்களே!!...... நிச்சயம் தன்னில் கூட பின் உன் பேரில் உன் போல் நிச்சயம் தன்னில் கூட பின் குழந்தை இருந்தால் நிச்சயம் பின் அவனும் செய்வான் அல்லவா!!! என்று!!!!

 நிச்சயம் பின் அதாவது பின் அதாவது இல்லத்தவளுடன் சொன்னான் அவன்!!!!
 வேண்டாம்!!!...(மழலைச் செல்வம்)
 
பின் ஐயனே!!! போதும் நிச்சயம் தன்னில் கூட!!!

=============================================
ஐயனையே தமக்குக் குழந்தையாகப் பாவித்த பக்தனின் ஆழமான நம்பிக்கை
================================================

பின் ஐயனாகவே ஐயனையே குழந்தையாக எண்ணிக்கொள்ளலாமே என்றெல்லாம்!!!! எண்ணி!!

 ஐயன் மனம் மகிழ்ந்தான்!!!!!!!!!

இப்படி (இப்படியும் பக்தியா என்று)

ஒரு நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் அழகாக நிச்சயம் எவை என்று புரிந்தும் கூட பின் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தான் அவ் பக்தன் ஐயனை காண!!!

=================================================
சபரிமலையில் பழிச்சொற்களுக்கு இடையே கண்டெடுக்கப்பட்ட தெய்வீகக் குழந்தை
================================================



ஆனாலும் அழகாக நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு குழந்தை தவழ்ந்து கொண்டிருந்தது இங்கு !!! (சபரிமலையில்)

ஆனாலும் அழுதுகொண்டு அழுதுகொண்டே நிச்சயம் தன்னில் கூட!!
 
ஆனாலும் அறிந்தும் புரிந்தும் கூட ஆனாலும் ஓடோடி அவன் வந்தான் ஓடோடி வந்தான் எதை என்று புரிய!!!

ஆனாலும் அங்கும் இங்கும் பார்த்தான் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய அங்கும் இங்கும் பார்த்தபொழுது எவரும் இல்லை!!!

ஆனாலும் குழந்தை மட்டும் அழுது கொண்டிருந்தது எதை என்று புரிய!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட மேல்நோக்கி வந்தான்! (படியேறி சன்னிதானத்திற்கு)

ஆனால் மேல்நோக்கி சில மனிதர்கள் இருந்தனர் பின் ஐயனை வணங்கிக்கொண்டு!!!!

பின் ஒரு குழந்தை இருக்கின்றது அறிந்தும் அதாவது அதையும் தூக்கிக் கொண்டே தான் வந்தான்!!!
 
இக் குழந்தையை யாருடையது என்று!!!

குழந்தை அழுதுகொண்டே!!!

பின் நிச்சயம் தன்னில் கூட.... அங்கு இருந்தவர்!!!

இது  எங்களது குழந்தை இல்லை!!! நிச்சயம் தன்னில் கூட !!
இங்கெல்லாம் அதாவது எடுத்து வரக்கூடாது என்று ஒருவன் சொன்னான்!!
 

அதாவது ஐயனிடத்தில் பின் எடுத்து வரக்கூடாது நிச்சயம் குழந்தைகளை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட !!

பின் அதாவது அழுதுகொண்டே!!! அழுதுகொண்டே!!! அதாவது இது  குழந்தை அதாவது பின் நிச்சயம் தன்னில் கூட வளர்க்க முடியாது என்று...... நிச்சயம் தன்னில் கூட!!

இன்னொருவன் கூட அதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது வெளியே செல்!!!
 
நீ ஐயனை எல்லாம் நிச்சயம் காணக்கூடாது யாரோ ஒரு குழந்தையை நீதான் திருடி வந்திருக்கின்றாய் என்றெல்லாம் பழிச்சொற்கள் பல பல வழியில் கூட!!!

இவ்வளவு நாட்கள் வந்து கொண்டே இருக்கின்றாயே நிச்சயம் தெரியாதா??? உனக்கு!!!! 

நிச்சயம் நீதான் திருடன் நிச்சயம் தன்னில் கூட இனிமேலும் ஐயனை காண வராதே!!... என்றெல்லாம்!!

இங்கு நிச்சயம் தன்னில் கூட பின் பிரார்த்தனை செய்பவர்கள் எல்லாம் பின் சொல்லிவிட்டனர்.





=================================================
மனித ரூபத்தில் வந்த இறைவனை அடையாளம் காணத் தேவையான ஆன்மீகப் பக்குவம்
================================================

ஐயப்பனே குழந்தை வடிவில்!!!!!!!!!!!!!!

ஆனாலும் எதை என்று புரிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அக்குழந்தை ஐயன் என்று யாருக்கும் தெரியவில்லை!!!!



இதனால்தான் உண்மையான பக்தி இருக்க வேண்டும்!!!
உண்மையான பக்தி நிச்சயம் தன்னில் கூட வந்தது யார்? என்று அறிய வேண்டும்!!!
இதனால்தான் பக்குவங்கள் தேவை!!

 அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட இறைவனே சில கஷ்டங்களை கொடுத்து நிச்சயம் வந்தது யான்!!!! என்று நிச்சயம் பின் அறிந்தும் புரிந்தும் கூட!!

 இதனால் நிச்சயம் இவ்வளவு பக்திகள் இவ்வளவு தான தர்மங்கள் செய்தானே நிச்சயம் இவ் பக்தனுக்கே வந்தது யார் என்று தெரியவில்லை!!!

இதனால்தான் நிச்சயம் பக்குவங்கள் தேவை!!!
 
பக்குவங்கள்  தேவை!!! 

பக்குவங்கள் தேவை!!!


நிச்சயம் அதனால்தான் பின் ஞானங்கள் பல வழிகளிலும் கூட தர்மங்கள் செய்யுங்கள் என்றெல்லாம்!!!!

அவ் தர்மத்தின் வழியே பக்குவங்கள் பெற்று நிச்சயம் தன்னில் கூட வந்தது யார்? என்று அதாவது நிச்சயம் உங்களே நீங்கள் அறிந்து மற்றவர்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்!

இதனால் பின் அதாவது அனைத்தும் அடைவதற்கு சுலபமாக இருக்கும் நிச்சயம் அதாவது நீங்கள் கேட்டுக்கொண்டே தான் இருக்கின்றீர்கள் அல்லவா!!!!

பின் அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் தானாகவே நிச்சயத்தில் நடக்கும்!!!

இதுதான் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட!!!

இதனால் பின் அதாவது குழந்தை எதை என்று அறிய நிச்சயம் எடுத்துக்கொண்டு பின் இல்லத்திற்கு வந்தான்!!!

நிச்சயம் அவன் இல்லத்தவளும் யார்? இக் குழந்தை? என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட !!

குழந்தை பின் அழுது கொண்டிருந்தது பின் யானே தூக்கி வந்துவிட்டேன்!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட யாரும்!!..... (குழந்தையை சொந்தம் கொண்டாட வில்லை) 

அதாவது அங்கெல்லாம் பின் சென்று கேட்டேன்!!! நிச்சயம் எவை என்று கூட யாரும் அதாவது அறிந்தும் புரிந்தும் யாரும் கூட பின் என் குழந்தை இல்லை என்று!!!!

ஆனாலும் தீய வார்த்தைகளால் பேசிவிட்டனர்!!!

நீதான் திருடன் என்றெல்லாம் நிச்சயம் பின்.....

பேசுபவர்கள் பேசட்டும்!!!

நிச்சயம் தன்னில் கூட !!

அதனால் பின் காட்டில் தானே நிச்சயம் பின் அதாவது பின் குழந்தை அழுது கொண்டிருந்தான் நிச்சயம் நாம்....நாம்தனே  வளர்ப்போம் என்றெல்லாம்!!!
 
அவன் இல்லத்தவளும் கூட பின் அழகாக நிச்சயம் தன்னில்!!!


============================================
மதுரை மீனாட்சித் தாயின் திருத்தலத்தில் இறைபக்தியுடன் வளர்ந்த ஐயப்பன்
=================================================

 ஆனாலும் அவந்தன் ஐயன் தான் நிச்சயம் தன்னில் எவருக்கும் தெரியாது !!

இதனால் வளர்ந்தான் நிச்சயம் தன்னில் கூட!!!
வளர்ந்து பல வழியிலும் கூட இன்னும் எதை என்று புரிய எதை என்று அறிய அதாவது பின் மீனாட்சி தாயிடம் நிச்சயம் தஞ்சம் அடைந்து அறிந்தும் புரிந்தும் கூட அங்கேயே விளையாடினான் நிச்சயம் தன்னில் கூட!!!

பல வழியிலும் கூட பின் மீனாட்சி தாயிடம் நிச்சயம் தன்னில் கூட!!!



ஆனாலும் இவள் அதாவது நிச்சயம் தன்னில் கூட அவ் இல்லத்தவளும் கூட பலமாக மீனாட்சி தாயிடம் நிச்சயம் தன்னில் கூட பின் பலமாக பின் பற்றுதல் (பக்தி) வைத்திருந்தாள்!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் எதை என்று புரிய இடையிடையே நிச்சயம் தன்னில் கூட மீனாட்சி தாயே!!!! பின் ஐயனே!!!!!! நீதான் கொடுத்தாய் பின் அதாவது யாங்கள் அதாவது பார்த்துக் கொள்கின்றோம்!!!

இனிமேலும் பின் அதாவது நீங்கள்தான் இன்னும் அதாவது எங்களுக்கு எவ்வளவு செல்வாக்கு கொடுத்தாயோ!? அதேபோல் இக்குழந்தையை நீங்கள்தான் பின் செல்வாக்கு உடையவராக மாற்ற வேண்டும் என்றெல்லாம்!! நிச்சயம் தன்னில் கூட !!

ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் தன்னில் பல வகையிலும் கூட பின் பழமுதிர் சோலையில் பிடித்தமான இடமெல்லாம் நிச்சயம் தன்னில் சென்று வருவான் ஐயன்!!!

அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது மீனாட்சி தன்னில் கூட பின் அழகாக விளையாடிக் கொண்டு நிச்சயம் தன்னில் கூட....அத் திருத்தலத்தில் கூட!!

பின் அதாவது குளத்தில் குளித்துக் கொண்டு!!! (பொற்றாமரை குளத்தில்)
 நிச்சயம் தன்னில் விளையாடிக் கொண்டே!!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் பெரியவனாகி நிச்சயம் தன்னில் கூட!!

===========================================
வளர்ப்புப் பெற்றோரின் மறைவுக்குப் பின் சொத்துக்காகச் சண்டையிட்ட மனிதர்களின் பேராசை
=================================================

ஆனாலும் நிச்சயம் தன் சில வகையிலும் கூட அறிவுகள் இதனால் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் இவர்களும் நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட அதாவது பின் உயிர் பிரிந்தது இவர்களுக்கும் கூட வயதாகி!!!


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய ஆனாலும் அனைவரும் சேர்ந்து நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எதை என்று கூற ஆனாலும் இக்குழந்தை பின் அவன்..... இவன் தந்தை காட்டிலிருந்து தான் எடுத்து வந்தான்!!!

ஆனாலும் நிச்சயம் தன்னில் பல நிலங்கள் பல இல்லங்கள் இருக்கின்றது!!


இவைகள் எல்லாம் நிச்சயம் பின் இவனுக்கு தரக்கூடாது என்று!!!
இதுதான் நிச்சயம் தன்னில் கூட மனிதனுடைய மாயை என்பேன்!!!
மனிதன் ஆசைப்படுவது நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு பின் அதாவது
நிச்சயம் எதை என்று கூட பின் நிலத்திற்கே!!!! நிச்சயம் தன்னில் பணத்திற்கே!!!! நிச்சயம் தன்னில் கூட இல்லங்களுக்கே!!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட இவனுக்கு எதுவுமே கொடுக்கக்கூடாது!!!

இதனால் நிச்சயம் தன்னில் இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் யாருக்கு பின் இல்லையோ? அவர்களுக்காக எழுதிவிடலாம் என்று!!

இன்னும் சிலர்........ நிச்சயம் அப்படி எழுதக்கூடாது நிச்சயம் நாமே வைத்துக்கொள்வோம் என்றெல்லாம் சிலர்!!
 நிச்சயம் தன்னில் கூட இவ்வாறெல்லாம்!!



ஆனாலும் ஐயன் அனைத்தும் பார்த்துக் கொண்டே இருந்தான் எதை என்று புரிய!!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட அவர்களும் கூட பின் ஐயனே!! ஐயனே!!! என்றெல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஐயப்பனே என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட சபரிமலைக்கு வருபவர்களும் கூட!!
 அவர்களும் சிலர்!!!

ஆனாலும் இப்படி நிச்சயம் தன்னில் கூட வந்தது என்று யார் என்றே தெரியவில்லை!!!!


 இதனால்தான் மக்கள் எதை என்று அறிய அறிய  திண்டாடுகின்றனர்!!!
 இறைவன் எங்கே??? என்றெல்லாம்!!!!

ஆனாலும் அதற்காகத்தான் பக்குவங்கள் பெற வேண்டும் பக்குவங்கள் பெற வேண்டும் என்றெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன்!!!

 அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பின் சில கஷ்டங்கள் கொடுத்தால்தான் பக்குவங்கள் பெற முடியும்!!!

இவ்வாறு பின் பக்குவங்கள் பெற்று ஞானங்கள் பெற்று இறைவனை பின் அழகாக காண முடியும்!!!
 

இதனால் பின் அனைவரும் சேர்ந்து எதை என்று கூற!!...
இவனை விரட்டுங்கள் இவனை விரட்டுங்கள்.... என்று !!
இன்னொருவன் கூட பின் தீய   சொல்லால் பேசுவது!!! இவ்வாறுதான் இக் கலியுகத்தில் கூட நடந்து கொண்டிருக்கின்றது!!

================================================
#கலியுகத்தில் நல்லோரைத் தூற்றும் மனிதர்களின் கீழ்த்தரமான குணமும் ஐயனின் வருத்தமும்
======================================================

பின் நல்லோர் பின் நல்லோரை பின் நல்லது செய்பவர்களை எல்லாம் நிச்சயம் இவ்வாறெல்லாம் குறைகள் கூறிக் கொண்டு நிச்சயம் தன்னில் நேரடியாக பின் எவை என்று கூற பின் கூறுவதே இல்லை மறைமுகமாக தாக்குகின்றான்!!
அவ் மறைமுகமாக பின் தாக்குபவன் மிகவும் மிகவும் கொடூரக்காரன்!!!

அவனை விட இவ்வுலகத்தில் பின் கீழ்த்தரமானவன் இல்லை !!!
அவனுக்கு என்னதான்????  வைத்திருக்கின்றான் என்று!!..(இறைவன் வைத்திருக்கும் தண்டனை)

அடுத்து அடுத்து யான் சொல்வேன் நிச்சயம் தன்னில் கூட !!


பின் எவை என்று கூட.....அவ்வாறு இல்லை என்றால் இக்கலியுகத்தில் நிச்சயம் பின் நல்லோர்கள் பின் எதை சொல்கின்றார்களோ!!!!!!.....!?!?!
 அதை கேட்காமல் நிச்சயம் அதை பின் பரிகாசமாக எண்ணி நிச்சயம் பின் குறைகள் சொல்பவனை இனிமேல் யாங்கள் விடப்போவதில்லை நிச்சயம் தன்னில் கூட!!!

பின் இங்கேயே  நிச்சயம் தன்னில்  கூட பின் ஐயனின் இடத்திலிருந்தே சொல்வேன்!!;

ஏனென்றால் நிச்சயம் தன்னில் கூட கலியுகம் இவர்களால் தான் நிச்சயம் தன்னில் கூட தலைக்கீழாக!!.....

அதாவது நிச்சயம் தன்னுடைய தர்மம் தலைகீழாக போய்க்கொண்டிருக்கின்றது !!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட ஐயனும் எதை என்று புரிய பின் பல வழியிலும் கூட எதை என்று அறிய!!

பின் அதாவது நீ காட்டுக்குள் இருந்து வந்தவன்!!! அதனால் நிச்சயம் தன்னில் அறிந்து புரிய இவர்களும் மாண்டுவிட்டனர்!!

ஆனாலும் நீ மீண்டும் காட்டுக்கே சென்றுவிடு!!! நிச்சயம் தன்னில் கூட !!
பின் எவை என்று கூற பின் உந்தனக்கு ஒன்றும் கிடைக்காது எதை என்று புரிய என்றெல்லாம்!!!

நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட !!
இவ்வாறாக பின் ஐயன் மனம் நொந்தான்!!!!!

இவ்வாறாக அன்புகள் வைத்துவிட்டு இவ்வாறாக மனிதர்கள் இவ்வாறாக இருக்கின்றார்களே என்று !!!

இதுதான் நிச்சயம் கலியுகத்தில் இப்படித்தான் பின் மனிதன் இருப்பான் நிச்சயம் தன்னில் கூட பின் மனிதனுக்கு நிச்சயம் தன்னில் கூட மனசாட்சி இருக்காது எவை என்று அறிய அறிய பொய் பேசுவது!! புறம் கூறுவது!!! நிச்சயம் இன்னும் என்னென்னவோ செய்வது!!! நிச்சயம் தரித்திரங்கள் செய்வது பாவத்தை பின் பெற்றுக் கொள்வது பின் அப் பாவத்தால் அனைவரும் பின் அதாவது தான் கூட இருக்கும் பின் அனைவருக்கும் கொடுப்பது நிச்சயம் கடைசியில் பின் நோய்களை ஏற்படுத்திக் கொள்வது !! மனிதனே நிச்சயம் தன்னில் கூட!!!

இவ்வாறுதான் இதனால் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அறிந்தும் புரிந்தும் நிச்சயம் பின் எவை என்று கூட!!!!

ஆனாலும் ஐயன் சொன்னான்!!!
 
யான் ஏன்?? செல்ல வேண்டும்??? எனக்கு நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய பின் இவ் மீனாட்சி தாய் தான் பின் நிச்சயம் என் தாயவள் அறிந்து கூட !

================================================
உலக ஆசைகளைத் துறந்து மீனாட்சி அன்னையின் கருவறையில் ஒன்றறக் கலந்த ஐயன்
======================================================




பின் அதாவது பின் எதற்கு????
 
எனக்கு பின் எதுவுமே தேவையில்லை என்று நிச்சயம் தன்னில் கூட!!
 
அவ் மீனாட்சி தாயின் பின் அதாவது (கருவறையில்) உள்ளுக்குள்ளே சென்று நிச்சயம் தன்னில் கூட பின் அங்கேயே நிச்சயம் பின் மறைந்துவிட்டான் ஐயன்!!!!






இதனால் நிச்சயம் தன்னில் கூட மீனாட்சி தாயிருக்கும் இடத்திலே பின் ஐயனும் நிச்சயம் தன்னில் கூட பின் மறைந்துவிட்டான்!!

இதனால் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய ஓடோடி மீனாட்சி தாயை நிச்சயம் தன்னில் கூட வணங்கிக் கொண்டே வருகின்றீர்களே!!!!

நிச்சயம் தன்னில் அங்குதான் பின் ஐயன் கூட இதனால் ஐயன் பின் அனைவருக்குமே சொந்தம்!!!

பின் பாகுபாடு இன்றி நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற இதனால்தான் பின் சிறப்புத்தலமாக இன்னும் திகழ்கின்றது நிச்சயம் தன்னில் கூட!!
 அனுதினமும் நிச்சயம் தன்னில் கூட பாசமாக நிச்சயம் தன்னில் கூட மீனாட்சி தாயவளை பின் அதாவது அவன் தாயவளை பார்த்துக் கொண்டே இருக்கின்றான் நிச்சயம் தன்னில் கூட!!

இதனால் தான் நிச்சயம் அன்பிற்கு நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு எதை என்று புரிய பின் ஈடே இல்லை இவ்வுலகத்தில்!!!

அதனால்தான் அன்பை செலுத்துங்கள் நிச்சயம் அவ் அன்பின் மூலம் பன்மடங்கு உயர்வு பெறுங்கள் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!!!

இன்னும் இன்னும் எதை என்று புரிய ஆனாலும் பின் மக்கள் புரிந்து கொண்டனர்!!!

பின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட வந்தது பின் இறைவனா!?!?!?!
இத்தனை  பின் இத்தனை காலம் வாழ்ந்தது இறைவனா!?!?!?!?!
 
யாங்கள் எல்லாம் இப்படி பின் ஆசைப்பட்டு விட்டோமே!! என்றெல்லாம்!!! நிச்சயம் தன்னில் கூட !!!

பின் அதாவது நிச்சயம் எவை என்று  புரிய பின் அதாவது (ஐயன்) மீண்டும் வருவதற்கு பல பல வழியிலும் கூட பல பல பூசைகள் நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூட மதுரை சுற்றி செய்தார்கள்!!!

இன்றளவும் அதை கடைபிடிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. பலமாக நிச்சயம் தன்னில் கூட!!

================================================
# கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவத்தில் ஐயப்பனின் பிரசன்னமும் சித்தரின் ஆசியும்
=======================================================




பின் வைகாசி அன்று நிச்சயம் தன்னில் கூட பின் (கள்ளழகர் ) அழகன் பின் நிச்சயம் பின் அறிந்தும் புரிந்தும் கூட பின்
 (வைகையாற்றில் இறங்கும் உற்சவம்)
இறங்குவானே!!!!...
நிச்சயம் தன்னில் கூட அப்போது கூட நிச்சயம் ஐயனும் இறங்குவான்!!!

நிச்சயம் தன்னில் கூட!!

பின் மனமாற ஐயனும் பின் நிச்சயம் தன்னில் சுற்றி வருவான் நிச்சயம் தன்னில் கூட!!!



எவை என்று புரிய இன்னும் ஞானங்கள் மனிதனுக்கு பிறக்க வேண்டும் இன்னும் ஞானத்தை நிச்சயம் பெறச் செய்து நிச்சயம் பின் தர்மங்களை செய்து செய்து நிச்சயம் பின் எவை என்று கூற நோயில்லாத வாழ்வையும் பின் கொடுத்து அனைவருக்கும் பின் நிச்சயம் தன்னில் கூட தர்மத்தின் பின் பாதையை காட்டிவிடுவோம் யாங்கள் சித்தர்கள்!!!
 
ஆசிகள் ஆசிகள் அனைவருக்குமே ஆசிகள்.



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.