“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, July 24, 2025

சித்தர்கள் ஆட்சி - 469 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 3 (இவ்வுலகை வெல்லும் சித்த ரகசியங்கள்)

                                         இறைவா நீயே அனைத்தும்.  

                                இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய  மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 3 (இவ்வுலகை வெல்லும் சித்த ரகசியங்கள்) 

வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:- 

1.சித்தர்கள் ஆட்சி - 467 - பகுதி 1
2.சித்தர்கள் ஆட்சி - 468 - பகுதி 2
3.சித்தர்கள் ஆட்சி - 469 - பகுதி 3 )

குருநாதர் :-  அப்பனே மழை வருகின்ற பொழுது ஏன் குடையைப் பிடிக்கின்றீர்கள் அப்பனே? 

அடியவர்கள் :- மழையில் நனையாமல் , protection , நம்மைக் காத்துக்கொள்ள..

குருநாதர் :- அப்பனே நிச்சயம் நனையலாமே? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் நனைஞ்சுகிட்டு போகலாமே? கேட்கின்றார் அகத்தியர். ஏன் குடையைப் பிடிக்கின்றீர்கள்? 

அடியவர்கள் :- உடல் நலன் சரியில்லாமல் போய்விடும். குளிர்ச்சி அதிகமாகிவிடும். 

குருநாதர் :- நிச்சயம் இவையெல்லாம் பின் மனிதனின் அதாவது புத்தி கெட்ட மனிதனின் கூட,  மூடை.  நிச்சயத் பின் எப்பொழுதாவது மழை தண்ணீரை பின் அருந்தியிருக்கின்றீர்களா நீங்கள்? அப்பனே பின் இதன் தத்துவம் என்ன? 

அடியவர்கள் :- பரிபூரண அருள்.  மழையில் எப்படி நனைகின்றோமோ அதே மாதிரி கஷ்டப்படும்போது அனுபவிக்கனும். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் பல வழிகளிலும் கூட ஏன் எதற்கு எவை என்றும் புரிந்தும் , புரியாமல் இருக்கின்றான் மனிதன். 

அடியவர் :- ஏன்?

குருநாதர் :- அப்பனே அதைத்தெரியாமல் நிச்சயம் இருப்பதற்குக் காரணங்கள் பல பல என்பேன் அப்பனே. நிச்சயம் அதைத் தெளிவு பெறவே சித்தர்கள் யாங்கள் அப்பனே. 

அதனால் நரகத்திலிருந்து வெளியே வாருங்கள்.  இதனால்தான் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் தன்னில் கூட மனிதனைப் பக்குவப்படுத்தி , நிச்சயம் பின் அவ்நரகத்தை எதிர்த்து நிச்சயம் சொர்கத்திற்கு நீங்களே வரவேண்டும் என்பதற்காகப் பல பக்குவங்கள் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றோம். 

அப்பனே எவ்விலங்காவது நிச்சயம் பின் உதவியை நாடுகின்றதா? 

அடியவர்கள் :- இல்லைங்க ஐயா

குருநாதர் :- ஒன்றும் நடக்கவில்லை என்று ஏதாவது பரிகாரம் தேடுகின்றதா?

அடியவர்கள் :- இல்லைங்க. 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஏனப்பா? 

அடியவர்கள் :- அதுக்கு தேவை இல்லை. அது குரூப்பா வாழுது. 

குருநாதர் :- நிச்சயம் அவற்றுக்குச் சக்திகள் பல கோடி. நிச்சயம் அறிந்தும் கூட இறைவன் தன்னைத் தானே பாதுகாக்கும் அளவிற்குக் கொடுத்திருக்கின்றான். மனிதனுக்கும் கொடுத்திருக்கின்றான். ஆனால் மனிதன் அதை சரியாக உபயோகப்படுத்த நிச்சயம் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- அதை பயன்படுத்திக் கொண்டால் மனிதனுக்குக் கஷ்டம் வராது என்று சொல்கின்றார். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட முதலில் தாய் சொல்லை, பின் தந்தை சொல்லைத் தட்டக்கூடாது என்கின்றார்கள் அப்பனே. யாராவது இருக்கின்றீர்களா அப்படி? அப்பனே அப்படித் தட்டிவிட்டால் , கடைசியில் உங்களுக்கும் பிள்ளைகள் பிறக்கும். அவர்கள் தட்டிவிடுவார்கள் அப்பனே. இதுதான் தண்டனை. 

அறிந்தும் அப்பனே, அம்மையே அனைத்திற்கும் ஒவ்வொரு வினைகளும் வந்து கொண்டேதான் இருக்கின்றது. 

அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே என்னென்ன ஏது எவை என்று புரிய அப்பனே. அப்பனே மீண்டும் செப்புகின்றேன். அனைத்தும் கம்பியில்தானப்பா உடம்பில். ( கம்பி என்பது நரம்புகள் இங்கு ). 

அப்பனே நீங்கள் செய்யும் தவறுக்கு அப்பனே இக் கலியுகத்திலே ஒரு ஒரு நரம்பையும் கூட (இறைவன்) மூடி வைத்துவிடுவான். இதனால் நோய்கள் தொற்றிக் கொள்ளும். 

அப்பனே இதனால் அப்பனே மனிதன் என்பவன் இயந்திரமப்பா. அப்பனே ஏன் பழுதாகின்றது அப்பனே இயந்திரம்? சொல்லுங்கள் அப்பனே? அனைவருமே. ஏனென்றால் அப்பனே நிச்சயம் பின் அதாவது உங்கள் அனைவருக்குமே யான் ஆசிகள் தந்துவிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே. ஆனால் தெளிவு பெறுங்கள் அப்பனே. 

அப்பனே தன் பிள்ளைகள் அப்பனே முதல் வகுப்பில் இருக்க வேண்டும் அப்பனே. அதைத்தான் யான் விரும்புகின்றேன். 

அப்பனே ஏன் அப்பனே (இயந்திர உடம்பு) பழுதாகின்றது சொல்? 

அடியவர்கள் :- தேவைக்கு அதிகமாக பயன்படுத்தினால்…தவறு செய்தால்…

குருநாதர் :- அப்பனே அனைவருக்கும் சொல்கின்றேன் அப்பனே. அப்பனே கண்கள் , அப்பனே நிச்சயம் நல்லதையே படிக்கவேண்டும் என்பேன் அப்பனே.அதாவது இராமாயணம், இன்னும் மகாபாரதம் அப்பனே இன்னும் நால்வர்கள் ( அருளாளர் பெருமான்கள் - அப்பர் , சுந்தரர் , திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ) எழுதி , நிச்சயம் அதையெல்லாம் அப்பனே எடுத்துச் செல்லல் நன்று என்பேன். அப்படியெல்லாம் பயன்படாததை எதை என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன் :- கண்கள் நல்லதையே படிக்க வேண்டும். 

குருநாதர் :- அறிந்தும், புரிந்தும் எதை என்று அறிய உடம்பில் , அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் காதுகளில் வலி எதை என்று புரிய. அதாவது இறைவன் அனைவருக்குமே தந்தை ஆகின்றான். இறைவனைப் பற்றி கேளாத காதுகள் நிச்சயம் பின் பழுதடைந்து விடுகின்றது. 

அப்பனே அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட அதாவது பேசத் தெரியாமல் பேசுதல் அப்பனே. அதாவது என்னென்ன பேச வேண்டும் என்று மற்றவர்களிடத்திலும் யோசித்துப் பேச வேண்டும். அப்படி பேசாவிடில் அப்பனே வயிற்று உபாதைகள் வந்துவிடும். 

தாயே நிச்சயம் தன்னில் கூட இதைப் பற்றி பல ஞானிகள் உரைத்து விட்டனர். இதனால் நிச்சயம் அனைத்தும் சாதிக்க வேண்டுமென்றால் அமைதி மட்டுமே. 

நல்முறைகளாகவே இதனால் இக்கலியுகத்தில் நிச்சயம் தண்டனைகள் அதிகம். மனிதனால் நிச்சயம் நிம்மதியாக வாழ முடியாது. நிம்மதியாகவும் பின் நிம்மதியாகவும் நிச்சயம் உணவருந்தவும் முடியாது.

நிச்சயம் அனைவருமே இறைவனின் குழந்தைகள்தான். ஒருவனை விட்டுவிட்டு ஒருவனுக்கு மட்டும் அனைத்தும் கொடுப்பானா என்ன? நீங்களே கூறுங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் :- ( சில உரையாடல்கள் )

குருநாதர் :- இதனால் ஏன் ஒருவனுக்குத் துன்பம்? ஏன் ஒருவனுக்கு இன்பம் சொல்லுங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்பதான் உங்க point வருது. சொல்லுங்கள்? 

அடியவர் :- அவங்கவங்க பாவ, புண்ணியங்கள். 

குருநாதர் :- தாயே இங்கு பாவ, புண்ணியத்தை யான் பேசவில்லை. 

அடியவர் :- அவங்க அவங்க பக்குவ நிலையை பொருத்து…

குருநாதர் :- அப்பனே நிச்சயம் இதைப் பற்றியும் யான் பேசவில்லை. 

அடியவர் 1 :- தான் உயரனும் என்று அடுத்தவங்களை கெடுக்கின்றாங்கல்ல…அதனால..

குருநாதர் :- தாயே யான் கேட்டதை மீண்டும் அனைவரிடத்திலும் கேள். 

அடியவர்கள் :- ( சில உரையாடல்கள் ) 

அடியவர் :- எண்ணங்கள்தான். 

குருநாதர் :- நிச்சயம் இப்பொழுது அவையும் இல்லை. நிச்சயம் தாயே அனைவரிடத்திலும் கேள். 

அடியவர் 1  :- இன்பம் துன்பம் எதனால் வருது ஒரு மனிதனுக்கு. 

அடியவர் :- ஊழ் வினையினால வருது. Past karma. 

குருநாதர் :- அப்பா, இதையெல்லாம்  கதைவிட்டுக் கொண்டிருக்காதே!!

அடியவர்கள் :- (சிரிப்புக்கள்)

சுவடி ஓதும் மைந்தன் :- இதையே சொல்லி சொல்லி.. இதை வேண்டாமப்பா என்று சொல்லிவிட்டார். 

அடியவர் 1 :- (சில உரையாடல்கள் - இறைவன் சன்னதியில் எல்லோரும் ஒன்றுதான்.)

குருநாதர் :- தாயே , யான் சொல்லியது என்ன? சரியாக கேள்வியை கவனிக்க நன்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா , என்ன சொன்னார்? ….. இன்பம், துன்பம் ஏன் வருகின்றது. 

அடியவர்கள் :- (பல உரையாடல்கள்)

குருநாதர் :- நிச்சயம் யோசியுங்கள். மூளைக்கு வேலை தாருங்கள். 

அடியவர் 3 :- மற்றவர்களுக்கு நன்மை நினைத்தால்,  நமக்கு இன்பம் வரும். 

குருநாதர் :- நிச்சயம் பின் அவ்வாறு நினைத்துத்தான் பார்!!!!

சுவடி ஓதும் மைந்தன் :- இது வேற chapter. அவர் ஏதோ புதுசா (பாடம்) எடுக்கின்றார். 

அடியவர் :- எண்ணங்கள்தான் அவர்களுக்கு இன்பம், வேதனை. 

குருநாதர் :- அப்பப்பா! யான் சொல்லியதை மீண்டும் சொல்லக் கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் :- இது chapterஏ வேற. 

அடியவர் :- ஐயாவே சொல்லனும். 

குருநாதர் :- அப்பப்பா.. ஒரு பெரிய வேலைக்குச் செல்கின்றாய் அப்பனே. ஒரு கேள்வியைக் கேட்கின்றான். அப்பொழுது தெரியாது என்று சொல்லுவாயா என்ன? அப்பா. 

அடியவர்கள் :- ( பல பல பல  உரையாடல்கள் ) 

குருநாதர் :- தாயே அனைவருக்குமே எடுத்துரைக்கின்றேன். நிச்சயம் அனைவரும் மூளையைக் கசக்குங்கள். இன்பம் , துன்பம் அவைதன் நிச்சயம் மனிதனுக்கு இவை இரண்டுமே இல்லையே.

தாயே இன்பமும் இல்லை மனிதனுக்கு, பின் துன்பமும் இல்லை. அதாவது நீங்கள் துன்பம் என்று நினைத்தால் அது துன்பமா?  இன்பம் என்று நினைத்தால் அது இன்பமா? என்ன மனிதனின் விளையாட்டு!!!

எதை என்றும் புரிய இதற்குச் சரியான விளக்கங்கள் (சொல்லுங்கள்). 

அடியவர் :- நடுநிலை மட்டுமே சாத்தியம். 

குருநாதர் :- அப்பா, நடித்தும் முடித்தும் , அப்பப்பா வாயில் வந்ததெல்லாம் உளரக்கூடாது. 

அடியவர்கள் :- ( பல பல உரையாடல்கள் )

குருநாதர் :- தாயே நிச்சயம் (பூமி) இது நரகம். அனைவரும் சற்று யோசிக்க நன்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- நரகம் என்று சொல்லிவிட்டார். இந்த துன்பம் இன்பம் வார்த்தையை யார் எடுத்திட்டு வந்தது? 

அடியவர்கள் :- மனிதர்கள். 

குருநாதர் :- இப்படி வாழ்ந்தால் இன்பம். இப்படி இருந்தால் துன்பம் என்று மனிதன் எடுத்து வந்ததுதான் இன்பம் துன்பம் என்ற வார்த்தை. நிச்சயம் தன்னில் கூட இன்பத்திற்கும், துன்பத்திற்கும் என்ன வேறுபாடு தாயே? 

அடியவர் :- இன்பமாக இருக்கும் போது சாமி பக்கத்தில் இருக்க மாட்டார். துன்பமாக இருக்கும் போது பக்கத்தில் இருப்பார். 

குருநாதர் :- தாயே யான் சொல்லியதை மீண்டும் சொல்கின்றாய். 

மதுரை அடியவர்  :- இன்பம் என்பது நம்முடைய மனதுக்கு ஏற்புடையதாக இருக்குது. துன்பம் என்பது  ஏற்புடையதாக இல்லை. அது கொஞ்சம் துன்ப உணர்வு ஏற்படுவதால் , அதை தாங்கக் கூட (முடியவில்லை). 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இதுவும் சரியானதுதான். நிச்சயம் அனைத்தும் இன்பமாகவே ஏற்றுக்கொள்ளும் தகுதி எவனுக்கு இருக்கின்றதோ அவன் இவ்வுலகத்தை வெல்வான். 

___________________________________________________________________________________

நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :- 

Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7

( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால்  22,23 June 2025 ஆம் ஆண்டு ,  மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... ) 

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment