இறைவா !!!!! நீயே அனைத்தும்.
இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய மதுரை சத்சங்க வாக்கு ( 22, 23 June 2025 ) - பகுதி 9
வாக்குரைத்த ஸ்தலம் :- அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் வளாகம், தியாகராசர் குடியிருப்பு, பசுமலை, மதுரை- 625 004.
ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
(இவ்தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
குருநாதர் :- அப்பனே நிச்சயமாய் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் கடை நாளும் உண்டு. இதனால் (யான்) உங்களை அங்கங்கு சந்தித்தவன்தானப்பா.
(குருநாதர் கருணையால் கர்ம வினைகள் நீக்கம்.)
இதனால் நன்மைகள்தான் நடக்கும் என்பேன் அப்பனே. குறைகள் கொள்ள வேண்டாம். குறைகள் கொள்ள வேண்டாம். மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்.
“””””தாமதம் ஆகலாமே தவிர , நிச்சயம் அனைத்தும் உண்டு அனைவருக்குமே!!!!”””””
இவ்வுலகத்தில் சண்டைகளும் சச்சரவுகளும் எதை என்று புரியாமல் கூட நிச்சயம் பலத்த அழிவுகள்.
அதனால்தான் அனைவரையுமே காக்க வேண்டும். நிச்சயம் உங்களையும் கூட காத்திடுவேன்.
நிச்சயம் தீபத்தை , நவகிரகதீபத்தை ஏற்றிக்கொண்டே வந்தால் அனைத்தும் நிச்சயம் கிடைக்கும்.
ஆனாலும் சில நேரங்களில் கூட சில பாவங்கள் அதை ஏற்ற விடாது. ஆனாலும் நிச்சயம் காசுகள் கொடுக்கின்றேன். நிச்சயம் பின் ஏற்றுங்கள் என்றால் நிச்சயம் ஏற்றிவிடுவீர்கள்.
அடியவர்கள் :- ( சிரிப்புகள் )
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ்வாறே ஆகட்டும். நீங்கள் (நவகிரகதீபம்) ஏற்றுங்கள். நிச்சயம் தானாகவே வருமப்பா.
( அடியவர்கள் கண்ணீர் விட்டு வருத்தப்பட வேண்டிய ஒரே வாக்கு இந்த வாக்குதான். பேரழிவுகளில் இருந்து உலகைக் காக்க நவகிரக தீபம் ஏற்றுங்கள் என்று எவ்வளவு சொல்லியும் பலரும் ஏற்றவில்லை. இவ்கலியுகம் ஒரு தலையாய சித்தரை , ஆதி குருவை இப்படிக் கீழ் இறங்கி வந்து வாக்குகள் செப்பும் அளவிற்கு செய்துவிட்டதே.
இதனை நன்கு உணர்ந்து நம் குருநாதரின் பிள்ளைகளான நாம் அனைவரும் நவகிரக தீபத்தை ஏற்ற வீடு வீடாகச் சென்றாவது அனைவரையும் இவ்வுலகைக் காக்க நவகிரக தீபங்களை மீண்டும் மீண்டும் பலமுறை ஏற்றச் சொல்லுவோம். )
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் :- ( சில உரையாடல்கள் )
குருநாதர் :- அப்பனே நல்விதமாக இன்னும் அப்பனே ஆசிகள். ஆசிகள் இருக்கின்ற பொழுது இன்னும் உலகம் எவ்வாறெல்லாம் ஆனாலும் அப்பனே அதைக் காக்க யாங்கள் இருக்கின்றோம். நல்விதமாகவே நீங்கள் வாழ்வீர்கள்.
************************
“””””யார் யாருக்கு எதை என்று புரிய, நிச்சயம் இவ்வருடமே இப்படித்தானப்பா இருக்கின்றது. பக்தர்களுக்கு பல சோதனைகளுக்கான காலம்!!!!””””
************************
சுவடி ஓதும் மைந்தன் :- எவ்வளவு பக்தி இருந்தாலும் சோதனைக் காலம்தான். அதனால் அமைதியாக இருங்கள் அப்பா என்று சொல்கின்றார்.
குருநாதர் :- அப்பனே நலமாக இறுதியில் வெற்றி உண்டு.
அப்பனே நிச்சயம் மனிதனின் வாழ்க்கை ஒரு போராட்டமே என்பேன்.
அப்பனே அவ்போராட்டம் நிச்சயம் ஒரு வட்டத்திற்குள்ளே போராடிக் கொண்டிருக்கின்றான் அப்பனே: ஆனாலும் அதை வெளியே இழுத்து வந்து, நிச்சயம் அதாவது வெளியே இழுத்து வந்தால்தான் பாவத்தை நீக்க முடியும் என்பேன் அப்பனே. அதனால் வெளியே இழுத்து வந்து, நிச்சயம் பாவத்தை நீக்கி , புண்ணியத்தைக் கொடுத்து , அவ்வட்டத்திற்குள் அனுப்பி விடுகின்றேன் அப்பனே.
(இந்த வாழ்க்கை வட்டம் குறித்து நன்கு புரிந்து கொள்ள , அகத்திய மாமுனிவர் வாக்கு ஒன்று இங்கு பதிவிட்டுள்ளோம். இதனை படித்து உணர்ந்து கொள்ள நன்று. இவ்வாக்கு மதுரையில் ஓர் அடியவர் இல்லத்தில், சில அடியவர்களுக்கு இரவு நேரம் உரைத்த வாக்கு. செப்டம்பர்.2023.
https://siththarkalatchi.blogspot.com/2024/02/349.html?m=0
)
குருநாதர் :- அப்பனே நலன்களாகவே இதனால் குறைகள் கொள்ள வேண்டாம் அப்பனே. நன்முறைகளாகவே நம்பி ஓடோடி வந்துவிட்டீர்கள் அப்பனே. இதனால் நிச்சயம் உங்கள் குறைகளை யான் அறிவேன் அப்பனே. நிச்சயம் அனைத்தும் கொடுப்பேன் அப்பனே. அதாவது ஒவ்வொன்றாக அனைவருக்கும் கொடுப்பேன். குறைகள் இல்லை.
ஆடி மாதம் முடியும் வரை நிச்சயம் அம்பாள் இடத்திற்குச் சென்று, நிச்சயம் அம்பாள் பாடல்களைப் பாடிட்டே வந்தாலே சில சிறப்புக்கள், சில மாற்றங்கள் ஏற்படுவது உறுதி.
நிச்சயம் இதற்குப் பலன் என்னவென்று யான் சொல்வேன். ஆனாலும் நீங்கள் பலனை எதிர்பார்க்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் பலனை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும்.
************************************************************************
ஆனி, ஆடி மாதம் - அபிராமி அந்தாதி ரகசியங்கள்.
************************************************************************
குருநாதர் :- அப்பனே ஆனி, பின் ஆடி தன்னில் கூட நிச்சயம் அபிராமி அந்தாதி ஓதுபவன் நிச்சயம் சிறப்பு மிக்கவன் என்பேன் அப்பனே. புண்ணியசாலி என்பேன்.
நிச்சயம் தீபம் ஏற்றி , பின் இவ்வாறு ஓதிட்டு வந்தாலே பாடல்கள் அனைத்தும் பாடிட்டு வந்தாலே நிச்சயம் வெற்றி தாயே. இதனை பின் நீங்கள் மட்டும் இதனை செய்துவிடலாம் என்று எண்ணிவிடாதீர்கள். மற்றவர்களைத் தூண்டி விடுங்கள். அவர்களும் பின் புண்ணியமாகின்ற பொழுது , அவ்புண்ணியம் உங்களைச் சேரும்.
இதனால் விதிவிலக்காகவே அனைத்தும். அழிவுகள்தான் பலம் என்பேன்.ஆனாலும் சிலவற்றைச் சொன்னால் பயங்கள் (உங்களுக்கு உண்டாகிவிடும்).
இதனால் பிறர் நலனை விரும்புங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- திரும்பத் திரும்ப இதுதான் வருது.
குருநாதர் :- நிச்சயம் சில சில தரித்திரங்கள் நீங்க , பின் கந்த சஷ்டியினை ஓதிக் கொண்டே வாருங்கள். நிச்சயம் குழந்தைகளுக்கு திறமைகள் வளர கந்த சஷ்டியினை ஓதிக்கொண்டே வந்தாலே நிச்சயம் அனைத்தும் மாறும். ஏற்கனவே பல உரைகளில் உரைத்திருக்கின்றேன்.
—————————————————-
( உங்கள் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் அடைய, தினமும் இல்லத்தில், கந்தப்பெருமான் முன்பு தீபம் ஏற்று அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து , கந்த சஷ்டி கவசத்தை தொடர்ந்து இடைவிடாமல் பாடிக்கொண்டே வாருங்கள். அத்துடன் ஜீவராசிகளுக்கு தினமும் குடும்பத்துடன் உணவளியுயங்கள். இது அனைத்து வழிபாடுகளுக்கும் உரித்தானது. உங்கள் குழந்தைகள் பல திறமைகள் பெற்று வாழ்வு முன்னேற்றம் அடைவது உறுதி. உங்கள் குழ்ந்தைகள் பல வெற்றிகள் அடைவார்கள். அனைவருக்கும் எடுத்துச் சொல்லிச் செய்யச் சொல்லுங்கள். உங்களுக்கு பல புண்ணியங்கள் உண்டாகும். மற்றொரு அடியவருக்கு உரைத்த வாக்கில் அதிகாலையில் 3:00 மணிக்குத் தீபம் ஏற்றி படிக்க அருளினார்கள். அவ்குழந்தையும் அவ்வாறே படித்து நல்ல மதிப்பெண் பெற்று 15ஆம் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு ஆச்சரியப்படும் அளவில் முன்னேற்றம் கண்டது என்று அடியவர்கள் அறியத் தருகின்றோம்.)
__________
குருநாதர்:- (இங்கு) திருமணம் ஆகாதவர்களுக்கு நிச்சயம் யான்தான் திருமண பாக்கியம் ஏற்படுத்த வேண்டும். ஏனென்றால் பரிகாரங்கள் செய்து செய்து அலுத்துவிட்டனர்.
அப்பனே பின்பு நோய்களைப் பற்றி. இதனைப் பற்றியும் யான் சொல்லிவிட்டேன் அப்பனே.
அப்பனே காசுகள் யானே கொடுக்கின்றேன் அப்பனே. சில பேருக்கு நிம்மதி இல்லாத வாழ்க்கை. (நிம்மதியான வாழ்க்கை) அதையும் கொடுத்து விடுகின்றேன். ஆனால் யான் சொல்லியதை நீங்கள் செய்ய வேண்டும்.
அப்பனே அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக கேட்பீர்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் அனைவருக்கும் அப்பனே எண்ணி யான் சொல்லாததை யாராவது கேட்பீர்களா?
(நடக்க இயலாத ஒரு குழந்தை) அடியவர் :- நடக்கனும்.
குருநாதர் :- தாயே நிச்சயம் அனுதினமும் ஆற்றங்கரையில் மண் அருகில் இருக்கும் இடத்திற்கு சென்று, பின் காலை முட்டி (அளவு) வரை புதைத்து சிறிது கைகளையும் பிடித்து ஆடிட்டு வா. நடக்க வை கைகளை பிடித்துக் கொண்டு.
சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )
குருநாதர் :- அனுதினமும் நிச்சயம் பொன்னாங்கன்னி என்னும் மூலிகைகளையும் எடுத்துக்கொண்டு , இவ்வாறாகவே அதிகாலையிலும் பின் மாலை வேளையிலும் நிச்சயம் மென்று தின்ற நன்று. இதைத் தன் உருவாக , மருத்துவனாக முருகன் வருவான்.
அடியவர் :- ( முருகப் பெருமான் ஆலயம் கட்டும் முயற்சியில் தடை குறித்து கேட்டபோது)
குருநாதர் :- அப்பனே அனைத்து திருத்தலங்களுக்கும், அதாவது ஆறுபடை வீடுகளுக்குச் சென்று, அப்படியே மருதமலைக்கும் சென்று, நிச்சயம் அனைத்து இடங்களிலும் கூட மண்ணை எடுத்துக்கொண்டு (கட்ட உள்ள ஆலயம்) அங்கு வை அப்பனே. நிச்சயம் அதி விரைவிலே நடைபெறும் என்பேன் அப்பனே சிறப்பாகவே.
அடியவர் :- (பல மதங்கள் தொடர்பான ஒரு கேள்வி)
குருநாதர் :- அப்பனே இல்லத்தில் கீதையையும் , குரானையும் கூட , விவிலியத்தையும் கூட வைக்கச் சொல். பின்பு இதற்குத் தகுந்தாற்போல் சொல்வேன் அப்பனே.
____________________________________________________________________
நம் அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர், தூங்கா மதுரை மாநகரில் அருளும் மகத்தான இவ்ஆலயத்தின் முகவரி :-
Google Map : https://goo.gl/maps/LurkRx2B5DbqSWqa7
____________________________________________________________________
( நம் குருநாதர், நம் அன்புத் தந்தை, கருணைக்கடல், பிரம்ம ரிஷி, அகத்திய மாமுனிவர் அருளால் 22,23 June 2025 ஆம் ஆண்டு , மதுரை மாநகரில், சுவடி ஓதும் அகத்திய மாமுனிவர் மைந்தன் திரு.ஜானகிராமன் அவர்கள் மூலம் ஜீவ நாடியில் உரைத்த அடியவர்கள் சத்சங்க கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்…... )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment