“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, March 15, 2024

சித்தர்கள் ஆட்சி - 367 : அகத்தியர் அடியவர்களுக்கு…கோடை கால சேவை பதிவு

 இறைவா!!!!! அனைத்தும் நீ



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

கோடை காலம் தொடங்கி விட்டது சூரியனும் சுட்டெரிக்க தொடங்கி விட்டார்!!!

குருநாதர் உத்தரவுப்படி அதாவது என் பக்தர்கள் சகல ஜீவராசிகளின் மனம் குளிரும்படியும் அனைவரும் நீர் மோர் மூலிகை நீர் வழங்குதல் வேண்டும் என உத்தரவு கொடுத்துள்ளார்.

மனிதர்களுக்கு தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு கடையில் சென்று கேட்டால் வீட்டிற்கு சென்று கேட்டால் நீர் வழங்கி விடுவார்கள் ஆனால் வன பிராணிகளுக்கும் தெருவில் வாழும் பைரவர்களுக்கும் நீர் கிடைப்பது அரிதாக உள்ளது.

முடிந்தவரை பிளாஸ்டிக் தவிர்த்து மண்சட்டி மண் பானையில் பறவைகள் பைரவர்கள் வானர சேனைகள் முதலிய விலங்குகளுக்கு முடிந்தவரை நீர் தானம் செய்வோம்.

அகத்தியர் பக்தர்கள் முடிந்தவரை ஒரு குழுவாக சேர்ந்து மனிதர்களுக்கு எப்படி ஒவ்வொரு ஆலய வாசலிலும் வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குகின்றோமோ அதே போல.... அருகில் இருக்கும் வன பகுதி மற்றும் தெருவில் ஒரு ஓரமாக மரத்தடியில் நீரையும் உணவையும் கனிந்த பழங்களையும் வழங்குவோம்!!!!

இயற்கையும் இறைவனும் ஒன்றே என்பது நம் வாழ வைக்கும் தெய்வம் அகத்தியர் பெருமான் வாக்கு.


இங்கு இயற்கையை மனிதன் பாழ் படுத்திக் கொண்டே வருகின்றான்!!!

ஆனால் இயற்கையை சமநிலைப்படுத்தி விதை பரவல் முதல் கொண்டு மழை வருவதற்கும் மரங்கள் வளர்ப்பதற்கும் மனிதனைத் தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளும் இயற்கையைப் பேணி இயற்கையை சார்ந்து வாழ்ந்து வருகின்றன.

மனிதன் நினைப்பதை விட இயற்கையை சமநிலை செய்வது மற்ற ஜீவராசிகள் தான்

அதனால் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரமான உணவு மற்றும் நீரை நம்மால் முடிந்த வரை வழங்குவோம்.

வேலூரைச் சேர்ந்த அகத்தியர் அடியவர்கள் இளைஞர் குழு குருநாதர் அகத்தியர் உத்தரவுப்படி அருகில் இருக்கும் திருப்பத்தூர் ஜவ்வாது மலை பிரதேசங்களில் ஒரு டிராக்டர் வாடகைக்கு எடுத்து வனப்பகுதிகளில் நீர் தொட்டி அமைத்து நீரையும் பழக்கடைகளில் சென்று நன்கு கனிந்த பழங்களை மொத்தமாக வாங்கி அதாவது ஒரு குழுவாக இணைந்து ஆளுக்கு சிறிது சிறிதாக நிதி உதவி இட்டு பங்களிப்பாக செய்து வனப்பிராணிகளுக்கு வழங்கி வருகின்றார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

இதேபோன்று இவர்கள் செய்யும் செயலை முன்னிறுத்தி அகத்தியர் அடியவர்கள் முடிந்தவரை விடுமுறை நாட்களில் ஆவது ஒன்று கூடி அருகில் இருக்கும் வனப்பகுதிகள் புறநகர் பகுதிகளில் இந்த சேவையை   செய்து வருவோம் 

அனைவருடைய வாழ்க்கையும் பணியும் சூழலும் கருத்தில் கொண்டு தன்னால் தனியாக செய்ய முடிந்ததை செய்யவும் குழுவாக இணைந்து விடுமுறை நாட்களில் செய்யவும் நாம் முடிவுகள் எடுப்போம்.

அப்பன் அகத்தியன் மனதில் இப்படிப்பட்ட புண்ணிய காரியங்கள் செய்தால் தான் இடம் பிடிக்க முடியும்.

நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து இந்த சேவையை திறன் பட செய்து நம் அப்பன் குருநாதர் அகத்தியர் பெருமானின் பேரருளை பெறுவோம்


நன்றி் 🙏


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment