மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, March 15, 2024

சித்தர்கள் ஆட்சி - 367 : அகத்தியர் அடியவர்களுக்கு…கோடை கால சேவை பதிவு

 இறைவா!!!!! அனைத்தும் நீ



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

கோடை காலம் தொடங்கி விட்டது சூரியனும் சுட்டெரிக்க தொடங்கி விட்டார்!!!

குருநாதர் உத்தரவுப்படி அதாவது என் பக்தர்கள் சகல ஜீவராசிகளின் மனம் குளிரும்படியும் அனைவரும் நீர் மோர் மூலிகை நீர் வழங்குதல் வேண்டும் என உத்தரவு கொடுத்துள்ளார்.

மனிதர்களுக்கு தாகம் எடுத்தால் ஏதாவது ஒரு கடையில் சென்று கேட்டால் வீட்டிற்கு சென்று கேட்டால் நீர் வழங்கி விடுவார்கள் ஆனால் வன பிராணிகளுக்கும் தெருவில் வாழும் பைரவர்களுக்கும் நீர் கிடைப்பது அரிதாக உள்ளது.

முடிந்தவரை பிளாஸ்டிக் தவிர்த்து மண்சட்டி மண் பானையில் பறவைகள் பைரவர்கள் வானர சேனைகள் முதலிய விலங்குகளுக்கு முடிந்தவரை நீர் தானம் செய்வோம்.

அகத்தியர் பக்தர்கள் முடிந்தவரை ஒரு குழுவாக சேர்ந்து மனிதர்களுக்கு எப்படி ஒவ்வொரு ஆலய வாசலிலும் வரும் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குகின்றோமோ அதே போல.... அருகில் இருக்கும் வன பகுதி மற்றும் தெருவில் ஒரு ஓரமாக மரத்தடியில் நீரையும் உணவையும் கனிந்த பழங்களையும் வழங்குவோம்!!!!

இயற்கையும் இறைவனும் ஒன்றே என்பது நம் வாழ வைக்கும் தெய்வம் அகத்தியர் பெருமான் வாக்கு.


இங்கு இயற்கையை மனிதன் பாழ் படுத்திக் கொண்டே வருகின்றான்!!!

ஆனால் இயற்கையை சமநிலைப்படுத்தி விதை பரவல் முதல் கொண்டு மழை வருவதற்கும் மரங்கள் வளர்ப்பதற்கும் மனிதனைத் தவிர மற்ற அனைத்து ஜீவராசிகளும் இயற்கையைப் பேணி இயற்கையை சார்ந்து வாழ்ந்து வருகின்றன.

மனிதன் நினைப்பதை விட இயற்கையை சமநிலை செய்வது மற்ற ஜீவராசிகள் தான்

அதனால் மற்ற ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரமான உணவு மற்றும் நீரை நம்மால் முடிந்த வரை வழங்குவோம்.

வேலூரைச் சேர்ந்த அகத்தியர் அடியவர்கள் இளைஞர் குழு குருநாதர் அகத்தியர் உத்தரவுப்படி அருகில் இருக்கும் திருப்பத்தூர் ஜவ்வாது மலை பிரதேசங்களில் ஒரு டிராக்டர் வாடகைக்கு எடுத்து வனப்பகுதிகளில் நீர் தொட்டி அமைத்து நீரையும் பழக்கடைகளில் சென்று நன்கு கனிந்த பழங்களை மொத்தமாக வாங்கி அதாவது ஒரு குழுவாக இணைந்து ஆளுக்கு சிறிது சிறிதாக நிதி உதவி இட்டு பங்களிப்பாக செய்து வனப்பிராணிகளுக்கு வழங்கி வருகின்றார்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

இதேபோன்று இவர்கள் செய்யும் செயலை முன்னிறுத்தி அகத்தியர் அடியவர்கள் முடிந்தவரை விடுமுறை நாட்களில் ஆவது ஒன்று கூடி அருகில் இருக்கும் வனப்பகுதிகள் புறநகர் பகுதிகளில் இந்த சேவையை   செய்து வருவோம் 

அனைவருடைய வாழ்க்கையும் பணியும் சூழலும் கருத்தில் கொண்டு தன்னால் தனியாக செய்ய முடிந்ததை செய்யவும் குழுவாக இணைந்து விடுமுறை நாட்களில் செய்யவும் நாம் முடிவுகள் எடுப்போம்.

அப்பன் அகத்தியன் மனதில் இப்படிப்பட்ட புண்ணிய காரியங்கள் செய்தால் தான் இடம் பிடிக்க முடியும்.

நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து இந்த சேவையை திறன் பட செய்து நம் அப்பன் குருநாதர் அகத்தியர் பெருமானின் பேரருளை பெறுவோம்


நன்றி் 🙏


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment