“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, March 5, 2024

சித்தர்கள் ஆட்சி - 359 : அகத்திய பிரம்ம ரிஷி அவசர உத்தரவு வாக்கு - (4-3-2024) - உடன் படித்து, பகிர்ந்து, செயல் படுத்த வேண்டுகின்றோம்.



























“இறைவா!!! அனைத்தும் நீ”

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!

குருநாதர் அகத்தியர் பெருமான் சமீபத்தில் கொடுத்த ஒரு அவசர உத்தரவு

சித்தன் அருள் வலைத்தளத்தில் பதிவுகள் வெகு விரைவில் வரும் அதனால் அடியவர்கள் யாரும் கவலைகள் கொள்ள வேண்டாம்!!!

குருநாதர் கூறிய வாக்குகள்:-

அப்பனே உலகம் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!!!

ஈசனுடைய கட்டளைப்படி கிரகங்கள் செயல்பட தொடங்கி இருக்கின்றன!!!

சனீஸ்வரன் இதனைப் பற்றி யான் ஏற்கனவே உரைத்து விட்டேன் சனியவன் அவந்தன் சொந்த இல்லத்தில் அதாவது கும்பத்தில் மகரத்திலும் இருப்பதால் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்த போகின்றான்.

போட்டி பொறாமைகளை விட்டு ஒழித்து வாழ்க்கையில் நேர்மையுடன் யார் ஒருவர் நடந்து கொள்கின்றார்களோ இயலாதவர்களுக்கு நன்மைகளை செய்து வருகின்றார்களோ அவர்களை சனியவன் ஒன்றும் செய்ய மாட்டான்

யார் ஒருவர் நீதி நேர்மையை கடைப்பிடித்து வாழ்கின்றார்களோ அவர்களுக்கு மட்டும்தான் கருணை காட்டுவான் சனியவன்!!!

ஈசன் கட்டளைப்படி சூரியனும் மக்களை நெருங்கி விட்டான் இனி சூரியனும் மனிதர்களை சுட்டு தண்டிக்க தயாராக இருக்கின்றான்!!

மனிதர்கள் செய்யும் தவறினால் இவ்வுலகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!!!

சனியவனையும் சூரியனையும் குளிர்விப்பதற்கு அப்பனே இந்த உலகத்தில் வாழும் சகல ஜீவராசிகளுக்கும் நீர் தானம் செய்ய வேண்டும் வாயில்லா பிராணிகளுக்கு நீர் மற்றும் உணவு அளித்திடல் வேண்டும்!!! 

இயலாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்தல் வேண்டும்!!!

மனிதர்கள் செய்யும் தவறினால் கோடை காலத்தில் மற்ற ஜீவராசிகளும் பாதிக்கப்படுகின்றன அவர்களுக்குள் இருக்கும் ஆத்மாவினை குளிர்விக்க வேண்டும் அப்பனே. அவைகளும் மனமகிழ்ந்து வாழ்வதற்கு அவைகளுக்கு நீர் மற்றும் உணவு பழங்கள் போன்றவை தர்மம் செய்திடல் வேண்டும்!!

ஜீவராசிகள் மனமகிழ்ந்து தான தர்மம் செய்த உங்களை வாழ்த்தும் பொழுது உங்களுடைய கர்மா பெருமளவு குறையும் அப்பா!!!!

அனைவரும் இதை பின்பற்ற வேண்டும் அப்பனே.

என் பேச்சைக் கேட்டு என் பக்தர்கள் நீர்மோர் வழங்கினார்கள் அப்பனே யானும் வாங்கி குடித்தேன் அப்பனே அனைவருக்கும் நல்லாசிகள் தந்திருந்தேன் அப்பனே இவ்வாண்டும் அதே போல என் பக்தர்கள் அனைவரும் அனைவருக்கும் நீர் மோர் மூலிகை நீர் அன்னம் தான தர்மங்கள் செய்ய வேண்டும்!!!

இப்படி செய்யும் பொழுது சனியவனும் சூரியனும் குளிர்ந்து அனைவருக்கும் நன்மைகளையே செய்வான்!!!!

அனைவருக்கும் கஷ்டங்கள் தான் அப்பனே கஷ்டங்களுக்கு காரணம் மனிதர்கள் செய்யும் கர்மாக்கள் தான் அப்பனே.

மனிதர்கள் பெருமளவு கர்மா தனை சேர்த்து வைத்திருக்கின்றார்கள் அப்பனே!!!! மனிதர்கள் செய்யும் கர்மாக்கள் அதிகரிக்க அதிகரிக்க சனியவன் அவரவர் கர்மவினைக்கு ஏற்ப தண்டிக்க தொடங்கி விட்டான் அப்பனே!!!!

நீங்கள் எள்ளளவாவது புண்ணியம் செய்திருந்தால் தான் யானும் உங்களை மீட்டெடுக்க முடியும் அப்பனே!!!

நீங்கள் புண்ணியம் செய்திருந்தால் மட்டும் தான் யானும் நல்வாக்குகள் தந்து உங்களை வழிநடத்த முடியும் அப்பனே.

அதனால் அப்பனே யார் ஒருவர் என் பேச்சைக் கேட்டு வருகின்றார்களோ அவர்களுக்கு கஷ்டங்கள் இருந்து காப்பாற்றி விதியையும் மாற்றி கொடுப்பேன் அப்பனே!!!

உங்களுடைய புண்ணிய கணக்கில் சேமிப்பு அதிகமாக இருக்க வேண்டும் அப்பனே அப்படி இருந்தால் தான் இந்த கஷ்டங்களில் இருந்து தப்பிக்க முடியும் அப்பனே!!!

அதனால் தான தர்மங்கள் செய்து புண்ணியத்தை பெருக்கிக் கொள்ளுங்கள் அப்பனே

புண்ணியங்கள் உங்களிடம் இருந்தால் யானே உன்னை தேடி வருவேன் அப்பனே

அதனால் அப்பனே என் பேச்சைக் கேட்டு சித்தர்கள் யாங்கள் சொல்லும் வழியில் வந்தால் இந்த உலகத்தை அழிவிலிருந்து யாங்கள் காப்பாற்றுவோம் அப்பனே!!

அனைவருக்கும் நல்லாசிகள் ஆசிகள் அப்பனே!!!!



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!



No comments:

Post a Comment