“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, March 4, 2024

சித்தர்கள் ஆட்சி - 358 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - 29/8/2021 அன்று வணக்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆபத்சகாயேஸ்வரர்(உற்றுற கேட்கும் ஈஸ்வரன்) ஆலயத்தைப்பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.



























 “இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


29/8/2021 அன்று வணக்கம்பாடி அகிலாண்டேஸ்வரி சமேத ஆபத்சகாயேஸ்வரர்(உற்றுற கேட்கும் ஈஸ்வரன்) ஆலயத்தைப்பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு. 


உலகை ஆளும் ஆதி மகேஸ்வரனை மனதில் எண்ணி வாக்குகள் உரைக்கின்றேன் அகத்தியன்.


இத்தலத்தில் பல பல பெருமைகள் பின் நல் முறைகள் ஆகவும் பூசலான் (பூசலார் நாயனார்) என்கின்ற ஞானியும் இங்கு வந்து நல் முறையாகவே பின்பற்றி பின் அனைத்தும் செய்வித்தான். மக்கள் கூட்டம் அலைமோதியது என்பேன்.

பின் நன்றாகவே வாழ்ந்து வந்தநிலையில் பலப்பல கர்மாக்களும் நீக்கி வந்தான் இவ் ஈசன்.

ஆனாலும் இதனையும் முன்னோக்கி பின் சில சில தீய மனிதர்களாலும் எவை என்று கூற இதனையும் போக வேண்டும் என்று எண்ணி சில சில மனிதர்கள் இதனையும் அழித்துவிட்டார்கள் கண் காணாமல் எவை என்றும் கூட.

ஆனாலும் ஈசன் இங்கு மறைந்து இருக்கின்றான். முழுவதும் பலப்பல சிலைகளும் காத்துக் கொண்டிருக்கின்றது மேல் எழும்ப.

இன்னும் மர்மங்கள் சொல்லப்போனால் பின் நல் முறைகள் ஆகவே இதனடியில் நாக தேவதைகள் இன்னும் பல உண்டு என்பேன்.

அப்பனே எவை என்றும் இங்கிருந்து நல் முறைகள் ஆகவே இப்பொழுதும் கூட மேற்கு நோக்கி பார்த்தால் பலபல பலபல வடிவமுள்ள ஈசன் நல் முறைகள் ஆகவே பின் மண்ணுக்கடியில் மறைக்கப்பட்டு கீழ்நோக்கி அமர்ந்து இருக்கின்றான் அது விரைவிலேயே அனைத்தும் மேலே எழும்பும் என்பேன்.

பல கோடி மக்கள் நல் முறைகள் ஆகவே இங்கு வந்து அனைவரும் குறை தீர்த்து சென்றுகொண்டிருந்தனர். 

ஆனாலும் ஓர் இப்பொழுதும் கூட இவை என்று கூற ஆங்கிலேயர் என்று சொல்கின்றார்களே அவர்களும் இங்கு வந்து எதனை என்றும் கூற பரிசுத்தமான இதயங்களை கொன்றார்கள் மக்களை அழித்தார்கள். பல பேர் இங்கு மடிந்து விட்டனர்.

இதனையும் நிமித்தம் காட்டி பின் அனைவரும் எவ்வாறு என்பதையும் கூட முழுமுதற்கடவுளான விநாயகப் பெருமானின் அருளாசி பெற்றவர்கள் அவர்களுக்கு அந்தக் கொடுமை நடந்தது  எப்பொழுது என்றால் பின் அதுவும் விநாயகர் சதுர்த்தி என்கிறார்களே அந்நேரத்தில்.

அப்பனே நல் முறைகள் ஆகவே பின் நல் முறைகள் ஆகவே எவை எவை என்று கூற விநாயகப் பெருமானும் பின் நல் முறைகள் ஆகவே தற்போது வரும் நிலைகள் இன்னும் மேலோங்க செய்வான் என்பேன். அவனுடைய நாளிலிருந்து(விநாயகர் சதுர்த்தி முதல்). நல் முறைகள் ஆகவே இன்னும் பல ஆத்மாக்கள் இங்கு வலம் வந்து தான் கொண்டிருக்கின்றன.

இங்கு நிச்சயம் அவ் ஆன்மாக்கள் சபதம் இறைவனை வேண்டி நின்றன எவ்வாறு என்பதைக் கூட யான் இப்போது உரைக்கின்றேன்.

இங்கு வருபவர்கள் நல் முறைகள் ஆகவே யாங்கள் ஆசீர்வதித்து பின் எங்களுக்கு   அழிவில்லாத ஆன்மாக்கள் ஆகவே இங்கு பறக்கச் செய்ய வேண்டும் என்பதைக்கூட ஈசனிடம் அவர்களும் முறையிட ஈசனும் அப்படியே நடக்கட்டும் என்று சொல்ல அவர்களும் இங்கு வலம் வந்து தான் கொண்டிருக்கின்றார்கள். இதனால் மனப் பிரச்சினைகள் மனப் போராட்டங்கள் இவையெல்லாம் இருந்தால் இங்கு நல் முறையாக தங்கிச் தங்கி சென்றால் பின் அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்க அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

கலியுகத்தில் ஆனாலும் ஈசன் எவ்வாறு என்பதைக்கூட இவ் நல் விதமான ஆன்மாக்களும் ஈசனிடம் கேட்க இறைவா போதும் ஆனாலும் இதை சுற்றியுள்ள பகுதிகளில் அநியாயங்கள் அக்கிரமங்கள் இனிமேலும் மேலோங்கும் மேலும் இதனால் நிச்சயம் நீ எழ வேண்டும் என்பதைக்கூட நல் முறைகள் ஆகவே அவ் ஆன்மாக்கள் முறையிட்டனர் அவர்களை தேவதைகள் என்று கூட  சொல்லலாம்.

அப்பனே இவ்வாறு என்று உணர்ந்து நிச்சயம் கூடி நினைக்கும்பொழுது ஈசன் தான் இங்கு நல் முறைகள் ஆகவே எழுந்தருளினான் என்பேன் இதனால் அவன் வேலையை தன் நலமாக அவன் நிச்சயம் பார்த்துக்கொள்வான் என்பேன் இனிமேலும்.

இவ்வாலயத்தைப் பற்றி இதன் முன்னே இதன் பின்னே விரிவாக எடுத்துரைக்கின்றன வரும் காலங்களில் .

இன்னும் சில ஆண்டுகளில் புகழ் ஓங்கும் என்பேன் ஓங்கும் என்பேன்.

அனைவரும் இங்கு வந்து வழிபட வழிபட சில சில வினைகள் மாறும் வினைகள் மாறும்பொழுது ராகு கேதுக்களின் தோஷங்களும் மறையும் என்பேன்.

ஏனென்றால் எவ்வாறு என்பதை கூட ஈசனும் ஈசனையும் நல் முறைகள் ஆகவே பல வருடங்களாகவே நாகராஜன் காத்துக்  கொண்டிருக்கின்றான். இப்பொழுதும் கூட இங்கு அவன் அலைந்துகொண்டு இருக்கின்றான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே அனைத்தும் நடக்க நல் முறைகள் ஆகவே சந்தோசம் அடைவீர்கள் என்பேன்.

அப்பனே அனைத்தும் இங்கு பொய் என்பேன் இறையே மெய் என்பேன் இறை சக்திகள் மிகவும் பலம் வாய்ந்தது என்பேன் அப்பனே அதைவிட உலகத்தில் சொந்தங்கள் வேறு ஏது.

நல் முறைகளாக எவை என்று கூற குறிப்பிட்ட அளவிற்கு நின்ற பொழுதும் கூட அப்பனே ஈசன் வருவான் இன்னொரு விஷயத்தையும் கூறுகின்றேன் அப்பனே.

இவ் அம்பாள் இடத்தில் உரைத்துக் கொண்டிருக்கிறேன். அம்பாள் இப்போது உறங்கவில்லை கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றாள் என்பேன்.

நல் முறைகள் ஆகவே நல் முறைகள் ஆகவே மேன்மை நிலை இவ் குடில் பெறும் என்பேன். அப்பனை ஆனாலும் எவ்வாறு என்பதை நினைத்துப் பார்க்கும் அளவிற்கு யாங்களும் எவ்வாறு என்று நிமிர்ந்து ஈசனும் எவ்வாறு என்று உணர்ந்து பார்த்தால் ஈசனே அமைத்துக் கொள்வான் என்பேன் நல் முறைகள் ஆகவே.


இன்னும் அப்பனே எவ்வாறு என்று நீண்டுகொண்டே போனால் இதன் இங்கிருந்து சரியான நேர் பாதையில் 60 கிலோ மீட்டர்களில் பல கோடி லிங்கங்கள் அமைந்துள்ளது என்பேன்.

நேராக கிழக்கு திசை என்பேன்(காஞ்சிபுரம்)

இவை எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள் என்பேன் எவ்வாறு என்பதையும் கூட பின் ஆனாலும் எவ்வாறு என்பதையும் கூட ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்று பல மனிதர்கள் வந்து வாழ கற்றுக் கொண்டுதான் சென்று இருந்தனர் இதனை சில தீயவர்கள் மறைமுகமாக எதிர்த்து இதனை அழித்துவிட்டால் அனைத்தும் நம் வசம் வந்துவிடும் என்று அனைத்தையும் அழித்து விட்டனர் ஆனாலும் இதுபோல் செல்லலாகாது என்பேன்.

அனைத்தும் எழுந்து நிற்கும் .

ஈசனை அனைவரையும் அழிப்பான் என்பேன்.

ஈசனின் விளையாடல் திருவிளையாடல் இன்னும் மக்களுக்கு புரியவில்லை என்பேன். ஆடினான் ஆட்டம். ஆனாலும் திருந்தவில்லை மனிதர்கள்.

அப்பனே இதைவிட சிறப்பு என்னவென்றால் அப்பனே இங்கு எவ்வாறு என்பதையும் கூட நிலை நிறுத்தும் பொழுது அப்பனே நீரிலே பல பலப்பல ஆலயங்களும்  மிதந்துள்ளன என்பேன்.

ஆனாலும் அப்பனே எவை என்று கூற ஆனாலும் அனைத்தையும் இடித்துத் தள்ளினார்கள் என்பேன்.

அப்பனே எவை என்றும் எதனை என்றும் கூறும்பொழுது அப்பனே இங்கேயும் அலை கடலாக இருந்தது ஒரு காலத்தில்.

அப்பனே நலமாக நலமாக சித்தி முக்தி கிடைக்கும் என்பேன் நல்ல முறையாக இங்கு.

நல் முறையாக வேண்டியதை இங்கு நல் முறையாகவே நிச்சயமாய் ஈசனும் தந்து முன்னோர்களும் காணச் செய்வார்கள் என்பேன்.

ஆனாலும் இங்கு வந்த நல் முறைகளாக வணங்கிச் சென்று இங்கு ஒரு கோமாதாவை வைத்து அமைக்க வேண்டும் என்பேன் கோமாதாவிற்கு நல் முறைகள் ஆகவே பல தானியங்கள் கொடுத்து நல் முறையாக செய்ய அப்பனே அவ்வாறு செய்யும் நபர்களுக்கு நிச்சயம் வெற்றி என்பதே உண்மை.

நல் முறைகள் ஆகவே இதுவும் வரும் என்பேன் நல் மனிதர்கள் இதனையும் செய்து கொடுப்பார்கள் என்பேன்.

காணக்கிடைக்காத அற்புதங்களும் இங்கே புதைந்து உள்ளது என்பேன் அதன் சூட்சுமத்தையும் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன்.

இத்திருத்தலம் ஓங்கும் என்பேன் சிறப்பு பெறும் என்பேன். எதனால் என்பதையும் கூட விஜயராகவன் என்ற அரசனும் இங்கு வந்து வழிபட்டு சென்றுதான் போய் இருக்கின்றான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே பூசலான்(பூசலார்நாயனார்)வள்ளல் பெருமானும் (வள்ளலார்) இங்கு நல் முறைகளாக வந்து வணங்கி சென்றிருக்கின்றார்கள் என்பேன்.

இவர்கள் தவிர யானும் இங்கே வந்தேனப்பா (அகத்தியர்). 

அதனால்தான் யான்  இப்போது இங்கு வந்து வாக்குகள் இப்பொழுது உரைத்துக் கொண்டிருக்கிறேன் அப்பனே.

அப்பனே  நல் முறைகள் ஆகவே  இவ்வாறு இருக்க பாலமுருகன் என்கின்ற அடிகளானும் (பாலமுருகன் சித்த சுவாமிகள்) இங்கு நல் முறையாக ஜீவ சமாதியும் அடைந்திருக்கின்றான்.  என்பேன்.

அப்பனே இது தான் சூட்சமம் மனிதனுக்கு தெரியாத பல விஷயங்கள் இங்கு உண்டு என்பேன் இதனைத்தான் எவ்வாறு என்பதையும் கூட அமைத்திருக்கும் ஆலயத்தின் கருவறை அடியிலேயே அவன் ஜீவசமாதியும் அமைந்திருக்கின்றது என்பேன்.

அப்பனே இதனால் சிறப்பு பெற்ற சக்திகள் இத்தலத்திற்கு உண்டு என்பேன்.

அப்பனே இதனால் நன்மைகள் பெருகப்பெருக அப்பனே அனைவரும் இவ்வாறு வழிபட்டுச் சென்றால் அப்பனே நல் முறைகளாக மனிதனுக்கு எவ்வித ஆசைகளும் வளராது என்பேன்.

முன்னோர்கள் ஆசீர்வாதத்தால் அப்பனே நல் முறையாக நல் முறைகள் ஆகவே அனைத்தும் நடக்கும் என்பேன் முன்னேறலாம்.அவர்கள் அனைத்தும் செய்வார்கள் என்பேன் இத் தலத்திற்கு வருபவர்களுக்கு முறைகள் ஆகவே.

பல சித்தர்கள் எவ்வாறு என்பதையும் பல நிமித்தம் காட்டி இனிமேலும் பல திருத்தலங்கள் திருத்தலங்களை உருவாக்குவார்கள் என்பேன் ஏனென்றால் மனிதனை நம்பி நம்பி எவ்வாறு என்று போன போக்கிலே புதுப்பித்து எவ்வாறு என்பதையும் கூட மனிதர்களின் நிலைமையை யான் சொல்வதற்கு இல்லை.

அதனால்தான் சித்தர் ஆட்சி சித்தர் பூமி என்பதெல்லாம் இனிமேலும் நடக்கும் பொழுது அப்பனே அனைத்தும் எழும்  என்பேன். யாங்களும் நல் முறைகள் ஆகவே துணை புரிந்து அனைவராலும் அனைவரும் நல் முறைகள் ஆகவே வாழ்ந்து பின் இறையருள் சேர வேண்டும் என்பதே சித்தர்களின் கொள்கை என்பேன். 

இதனால் நாங்களே நிச்சயம் பல திருத்தலங்களுக்கு சென்று நல் முறைகளாக யார்? யார்? எதன் மூலம்? எதனை மூலம்? என்பதையும் கூட நியமித்து அத் திருத்தலத்தை உருவாக்கும் பொழுது அங்கு வருபவர்கள் நல் முறைகள் ஆகவே சில கர்மாக்களையும் நீக்குவார்கள் இதனால்தான் எங்களால் இவையெல்லாம் நடக்கும் என்பதே உண்மை.


இது தவிர எவ்வாறு என்பதையும் கூட அதைச் செய்து தருகின்றோம் இதைச் செய்து தருகின்றோம் என்பதை நம்புவது எல்லாம் வீண். நடக்கவும் நடக்காது அதைச் செய்தாலும் பின் நேர் வினையாக இருந்து எதிர்வினை ஆகவும் எதிர்வினையாக இருந்து நேர் வினையாகவும் இருக்கும்பொழுது ஆனால் அதன் வழியே கஷ்டங்கள் ஆக வந்துவிடும்.

இறைவனின் சக்திகள் பலம் ஆவதற்கு நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு நின்று காத்தருளும் அளவிற்கு ஈசனும் பாலகுமாரன் முருகனும் இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே இங்கு அமைத்தல் வேண்டும் என்பேன் அப்பனே.

அப்பனே பூசலார் உருவாக்கிய ஸ்தலம் இது அப்பனே அவனுக்கு  வேலையே எவ்வாறு என்பதை கூட இதைத்தான் இதனைச் சுற்றி வட்டாரங்களில் உள்ள பல ஆலயங்கள் அவனால் உருவாக்கப்பட்டவை என்பேன். அதனால்தான் யான் சொன்னேன் மனதில் உள்ள காரியங்கள் எண்ணிக்கொண்டு ஈசனையும் எவ்வாறு என்பதையும் எண்ணிக்கொண்டு மனதில் எண்ணிக் கொண்டிருந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பேன். இதுதான் இத்தலத்தின் சிறப்பு ஆகும்.

அப்பனே இக் கர்மா பூமியில் இன்னும் பழைய பழைய எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலைகள் இருக்கின்றன இப்புவியில். அவையெல்லாம் எழும்பும் பொழுது நல் முறையாகவே இறைவனை பார்ப்போம் என்பேன் இதனால் மக்களே நல் முறையாக கலியுகத்தில் கலியுகத்திலும் வாழ்வார்கள் என்பேன்.

கலியுகத்தில் இனிமேலும் மனிதர்கள் வாழ்வதற்கு கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் போய்க்கொண்டே இருக்கும் அவை எல்லாம் மாற்றுவதற்கே இன்னும் பல சக்தி மிகுந்த திருத்தலங்கள் இப்புவியின் அடியில் அழிந்து விட்டது அதையெல்லாம் நல் முறைகள் ஆகவே ஈசனே வருவான் வர வைப்பான் என்பேன்.

எவ்வாறு என்பதையும் கூட அதை யாங்களே(சித்தர்கள்) சொல்லிக் கொண்டு வருவோம் என்பேன் இதனால் அப்பனே பேரருள் கிட்டி இறைவனின் நல்லாசிகள் பெற்று அப்பனே நல் முறைகளாக வாழுங்கள் என்பேன்.

வாழுங்கள் என்பேன் இறை என்று கூற அப்பனே அதனால்தான் இனிமேலும் அனைவருக்கும் கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கும் வந்துகொண்டே இருக்கும் ஆனாலும் இதனை நிறுத்த வல்லவன் ஈசன். நிறுத்த வல்லவன் ஈசன் என்பதெல்லாம் யாங்கள் நல் முறைகள் ஆகவே சக்திகள் இருக்கும் தலத்தை பற்றியும் அடிக்கடி உரைத்துக் கொண்டே இருக்கின்றோம் அங்கு சென்று நலம் பெறுக என்பேன். இதுதான் அப்பனே விதி.

அப்பனே எவை எவை என்று கூறும்பொழுது கூட அப்பனே மக்கள் எவ்வாறு மிகுந்திருந்த பொழுது போது கடல் எவ்வாறு என்பதை  கூட உள்ளே புகுந்த பொழுது செல்வங்கள் அழிந்து விட்டது பலப்பல உண்மைகள் பொக்கிஷங்களும் அழிந்துவிட்டது இங்கே இவையெல்லாம் புதைக்கப்பட்டுள்ளது என்பேன்.

இவையன்றி அப்பனே நல் முறைகளாக இத்  திருத்தலமும் நல் முறையாக எழும்பும் என்பது விதியப்பா.

அப்பனே நல் முறைகளாக கவலை இல்லை என்பேன் அப்பனே அதிவிரைவிலேயே  அனைத்தும் நினைத்தவாறு நடக்கும் என்பேன்.

ஈசனும் நல் முறைகள் ஆகவே இங்கு ஒரு வாரம் நல் முறைகள் ஆகவே தங்கிச் செல்வான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே ஆசிகள் பின்பு என் அப்பனே நல் முறைகள் ஆகவே இன்னொரு சூட்சுமத்தையும் சொல்கின்றேன் இத் தலத்தைப் பற்றி அப்பனே முறைகளாகவே பின் எவ்வாறு என்பதையும் கூட கிரகங்களால் கோச்சாரத்தால் பின் அடிபட்டவர்கள் இங்கு நல் முறைகள் ஆகவே இங்கு தங்கிச் சென்றால் பின் கிரகங்களாலும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே இத்தலத்தின் சிறப்பை பற்றியும் எடுத்துரைத்து விட்டேன்.

அப்பனே நல் முறைகள் ஆகவே இன்று இருக்கும் நிலையை எவ்வாறு என்று பார்க்கும் பொழுது அப்பனே நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்பதை உண்மை நிலையை புரிந்து என்னுடைய ஆசீர்வாதங்கள் என்பேன்.

ஆசீர்வாதங்கள் என்பேன் இன்னும் சொல்கின்றேன் அப்பனே நல் முறைகள் ஆகவே அதி விரைவிலேயே இதன் செயல்கள் தொடங்கும் என்பேன் இதனால் கவலைகள் இல்லை என்பேன்.

ஆபத்சகாயேஸ்வரர் என்பதே மெய் உற்றுற கேட்கும் ஈஸ்வரனும் இவன் நாமமே. இதுவும் மெய்யே இதிலேயே அர்த்தமுள்ளது யோசித்துக் கொள்ளுங்கள் அகிலாண்டேஸ்வரி என்பதும் ஞானபிரசுராம்பிகை என்பதும் மெய்யே என்பேன் இதைத்தான் பெயராக சூட்ட வேண்டும் என்பேன்.

அப்பனே நல் முறையாக அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள் மீண்டும் வந்து வேறொரு சக்தி வாய்ந்த தலத்தைப் பற்றி வாக்குகள் உரைக்கின்றேன் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

ஆலய முகவரி 

ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஞானபிரசுராம்பிகை உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் உற்றுற கேட்கும் ஈஸ்வரர் கோயில், 

வணக்கம்பாடி கிராமம். ஆரணி சாலை. 

திமிரி பேருராட்சி. 

ஆற்காடு வட்டம் .

ராணிப்பேட்டை மாவட்டம்.


Google map :-

https://maps.app.goo.gl/VDD6cGwCsB6x2q319?g_st=ic

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment