“இறைவா!!! அனைத்தும் நீ”
3/10/2021 அன்று திருமூலர் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : கங்கை கரை. காசி.
உலகையாளும் சிற்றம்பலனை பணிந்து வாக்குகள் உரைக்கின்றேன். மூலனவன். (திருமூலர்).
நல் முறையாக அனு கிரகங்கள் மனிதர்களுக்கு வந்து கொண்டே இருக்கின்றது. ஆனாலும் மனிதன் அதை ஒழுங்காக பயன்படுத்த தெரிந்திருக்கவில்லை. தெரிந்து கொண்டால் பின் அனைத்தும் நீங்கள் மனதில் நினைத்தவாறே நடக்கும் நடக்கும் என்பேன்.
இதனால் யாங்களும் பல பல மனிதர்களை எவ்வாறு வரவேண்டும் என்று எண்ணி முறையான பணி தன்னில் செலுத்தி அவர்களையும் மாற்றுத்திறன் ஆக வளர்க்க முயற்சி செய்கின்றோம்.
ஆனால் மனிதனோ தீய எண்ணங்களால் தீயவை நினைத்து அழிந்து விடுகின்றான். எதனால்? மனிதன் போக்கைப் பார்த்தால் சரி இல்லாததாக தோன்றுகின்றது.
இதனால் பின் யாங்களும் உரைத்துக்கொண்டே வந்து கொண்டே இருக்கின்றோம். இவ்வுலகத்தில் யாரும் யார் மீது பின் குறைசொல்ல இனிமேலும் மனிதன் இறைவன் மேலேயே குறை சொல்லுவான் அது தவறு என்பேன்.
நிச்சயம் தான் தான் செய்த பாவத்திற்கு தான்தான் தண்டனையை அனுபவிக்க வேண்டுமே தவிர இறைவன் மேல் குற்றம் சொல்வதற்கு மனிதர்களுக்கு தகுதி இல்லை என்பேன்.
இதனால் இன்னும் பல மாற்றங்கள் நிகழ போகின்றது. வரும் காலங்களில் இதனால் மனிதன் யுத்தத்தில் எவ்வாறு இருக்கின்றானோ அவ்வாறே பல கஷ்டங்கள் நடந்தேறும் இதனையும் தடுப்பதற்கு சித்தர்கள் முயற்சிகள் செய்து கொண்டே வந்து கொண்டிருக்கின்றோம்.
கலியின் வேகம் ஆண்டுகளாக ஆக ஆக கலியின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பக்தர்களுக்கு எவை கூற?
பக்தர்களுக்கு பக்தர்களே விரோதம் ஆவார்கள்.
பக்தர்களுக்கு பக்தர்களே யான் தான் பெரியவன் நீ சிறியவன் என்ற போட்டிகள் இனிமேலும் வரும்.
வேண்டாம் மனிதனே! அறிவுகள் பலமாக படைத்திருக்கின்றான் இறைவன்.
ஆனால் யான் மனிதனை அறிவுள்ள முட்டாள் என்றுதான் உரைப்பேன்.
ஏனென்றால் எதையுமே தெரிந்து கொள்ளாமல் பிறக்கின்றான் மனிதன் பின் எதனையுமே தெரிந்துகொள்ளாமல் இறந்து போகின்றான் மனிதன். என்ன லாபம்??
இதனிடையே சிலகாலம் போராட்டங்கள் சிலகாலம் எவை எவையோ நினைத்து ஆனாலும் இதனின்றி எவ்வாறு நீ எதன் மூலம் மிகப் பற்று வைக்கின்றாயோ அதன் மூலமே அழிவு என்பது தெரியாமல் போய்விட்டது.
ஏன்? நமச்சிவாயம்!
உரைத்ததை நன் முறையாகவே நன் முறையாகவே பயன்படுத்துபவர் எவர்?? எவர் என்பேன்.
ஏன்? இறைவனே மனிதனிடம் மனிதனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றான்.
எதனால்??
பலபல ஞானியர்களையும் இறைவன் உருவாக்கினான் ஆனால் ஆனாலும் மனிதன் திருந்தப் போவதாகவே இல்லை .இல்லை.
ஏன்?
இயேசுவும் நல் முறைகளாக நபிகள் நாயகமும் தன் தன் இனத்தோரை இப்படி மனிதர்கள் பின் யாங்கள் சொல்லாததை எல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்களே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் கலியின் வேகம் கலியவே வென்று விடுவதாக உள்ளது.
இதனால் மானிட ஜென்மங்களே திருந்திக் கொள்வது நன்று என்பேன்.
புத்தனே வந்தாலும் மனிதன் பின் எவ்வாறு பல பல உண்மைகளை சொல்லிவிட்டு சென்றுவிட்டான் ஆனால் அவனுக்கு எதிராகவே போராட்டங்களாம்!
மனிதன் திருந்துவதாக இல்லை திருந்துவதாக இல்லை இப்படியே சென்று கொண்டிருந்தால் நிச்சயம் இன்னும் கஷ்டங்களை இறைவன் ஏற்படுத்துவான் என்பேன்.
அதனால் மனித ஜென்மங்களே திருந்துங்கள் நீங்கள் சரியாக நடந்து கொண்டால் இறைவனை உன்னிடத்தில் வந்து அனைத்தும் செய்வான். பின் நீ சரியாக நடந்தது கொள்ளவில்லை என்றாலும் நீ இறைவனை தேடியும் ஒரு பிரயோஜனமும் இல்லை.
அன்பு மக்களே கேளுங்கள் இனிமேலும் உறங்கிக் கொண்டிருக்க வேண்டாம் என்பேன்.
விழித்துக் கொள்ளுங்கள் விழித்துக் கொண்டால் தான் நன் முறையாக நன்முறை களாகவே நீங்களும் உங்கள் சந்ததிகளையும் நல் முறைகளாக வலம் வருவார்கள் இவ்வுலகத்தில்.
அதை விட்டுவிட்டு பின் மனதை பின் எவையெவை மீதோ செலுத்திக் கொண்டே இருந்தால் போதாது வாழ்க்கை.
பிறப்புக்கள் தோன்றித் தோன்றி கஷ்டங்கள் பட்டு பட்டு கடைசியில் பின் பைத்தியக்காரன் ஆகவே போய்விடுவான்.
யான் பல மனிதர்களை பலப்பல மனிதர்களை இவை மூலம் பார்த்துக் கொண்டே தான் வந்திருக்கின்றேன் இக்கலியுகத்திலும்.
யான் முன்பே சொன்னேன் என் நூல்களையும்(திருமூலர் திருமந்திரம்) படிப்பதால் மாற்றங்கள் உண்டாகும் என்பேன்.
ஆனாலும் அதையும் அழித்து விடுகின்றான் மனிதன் வேண்டாம் முட்டாள் மனிதனே.
மனிதனே இனிமேலும் கேளுங்கள் யான் சொல்வதையும் நன் முறைகளாக கவனித்து என்னுடைய நூலையும் ( திருமந்திரம் ) சிறிது ஆராயுங்கள். அதில் எவ்வாறு எழுதி இருப்பதைப் பற்றியும் யான் விளக்கமாக பின் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு வருடமாக நினைத்து நினைத்து உலகத்தில் மனிதன் இப்படி வாழ்ந்து கொண்டு இருக்கின்றானே என்று எண்ணி தான் யானும் படைத்திருக்கின்றேன்.
இதனால் மக்களே பின்வரும் காலங்களில் அநியாயங்களை மனிதனே ஏற்படுத்துவான். இதற்கு நீங்கள் காரணம் ஆகாதீர்கள்.
காரணம் ஆகாதீர்கள் இறைவன் மீது குற்றம் சொல்லாதிருங்கள்.
சொல்லுங்கள் இனிமேலும் நாங்கள் நல் முறைகளாக வாழ்வோம் நல்லெண்ணத்தோடு வாழ்வேன்.
பின் பொய் கூறாமை பின் நன்மைகள் தன்னைப்போலவே பிறரையும் எண்ணுவேன். அனைவரும் ஒருவரே அனைவரும் என் சொந்தங்களே என்று நினைத்து நினைத்தால் மட்டுமே விடிவெள்ளி உண்டு என்பேன் .
விடிவெள்ளி உண்டு என்பேன் இதனால் யானும் சொல்கின்றேன் மறைமுகமாகவே.
மறைமுகமாகவே உரைக்கின்றேன் இனிமேலும் கெடுதல்கள் எதன் மூலம் மனிதன் செய்கின்றானோ அதன் மூலமே அழிவுகள் நிச்சயம் உண்டு உண்டு இதனால் பல மாற்றங்கள் புவி உலகில் உண்டு இதனால் இறைவனும் சற்று மௌனம் சாதித்தால் நீங்கள் நிச்சயமாய் அழிவுகளில் ஏற்பட்டு விடுவீர்கள்.
யான் சொல்கின்றேன் இனி மேலும் நீங்கள் தவறான பாதையில் செல்கின்றது நிச்சயம் என்றால் யாங்களும் கஷ்டங்களை நிச்சயம் நிறைய அள்ளி தருவோம் இதுவும் நிச்சயம் என்பேன்.
நோய்களையும் ஏற்படுத்துவோம் என்பேன்.
ஆனாலும் இதனையும் மனிதன் உணர தான் கடமையை செய்துவர எத்துன்பமும் வருவதில்லை மனிதனுக்கு. தன் துன்பத்தை நிச்சயம் இறைவன் துடைப்பான் என்பேன்.
அதை விட்டுவிட்டு மனிதனே ஒழுங்காக வாழ கற்றுக்கொள். இனிமேலாவது பிழைத்துக் கொள்.
ஏன்? நீயும் இருக்கின்றாய். மனைவியும் இருக்கின்றாள். ஏன் உன் பிள்ளைகளை பற்றியும் நினைத்துப் பார். சிறிதாவது நினைத்துப்பார் அப்பொழுது தெரியும் நீ தான் கர்மம் சேர்த்துக் கொண்டு இருக்கின்றாயே?
இன்னும் உன் பிள்ளைகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் கர்மத்தை சேர்த்து வைக்க வைக்கின்றாயா?
தெரிந்து கொள் வேண்டாம் இனிமேலும் நல் பாதையில் செல்க.
என்னுடைய நூல்களையும் நல் முறைகளாக ஓதுக.
அனைவர் இல்லத்திலும் ராமனின் கதை ராமாயணம் என்கின்றார்களே அதையும் வைத்துக்கொள்ளுங்கள் .கீதையையும் வைத்துக் கொள்ளுங்கள். வைத்துக்கொள்ள வைத்துக்கொள்ள நன்றே.
அதன் மூலம் ஒவ்வொரு விஷயத்திலும் இறைவன் நல் முறைகள் ஆகவே சொல்லி வந்து கொண்டே இருக்கின்றான்.
இதனையும் பின் தாழ்வானதாக மனிதன் நினைத்தும் இன்னும் மயங்கி பின் கலியுகத்தில் மாய உலகத்தை நோக்கி தான் மனிதன் செல்கின்றான் .
அதனை யாவது யாங்கள் நிச்சயம் நிச்சயமாய் தடுப்போம் தடுப்போம் இவையன்றி கூட இனிமேலும் ஞானங்கள் நல் முறைகளாக நல் மனதாய் பிறப்பதற்கு ஒன்றே வழி கஷ்டங்கள் தான்.
கஷ்டங்கள் கொடுத்தால்தான் மனிதன் இனிமேலும் திருந்துவான்.
ஆனாலும் இறைவனை சொல்லி இறைவன் பெயரைச் சொல்லி பின் பொய் பேசி புறம் கூறி பின் அவனவன் வாழ்வதற்கு அவன் பணத்தை சேமித்து கொண்டிருக்கின்றான்.
பணத்தை சேமித்ததை விட அதனோடு கர்மாக்களையும் சேர்த்துக் கொள்கிறான் என்பதை அவனுக்கு தெரியவில்லை இதனால்தான் அறிவுள்ள முட்டாளே என்கின்றேன் மனிதனை.
இதனால் நல் முறைகளாக முதலில் நீ பிழைத்துக் கொள் பிழைத்துக் கொள் பின் இறைவன் நல் முறைகள் ஆகவே மனிதனை படைத்தான் எப்படி?
அப்படியே அவனுக்குத் தெரியும் மனிதர்களை காப்பாற்றுவதற்கு.
ஆனால் இவையன்றி நீயும் பிழைப்பதற்காக வே அதைச் செய் இதைச் செய் இவையெல்லாம் கூறிக்கொண்டே வந்துகொண்டிருந்தால் நீயும் கர்மத்தை சேர்த்துக் கொள்வாய் பின் உன் நிழலில் வருவோர் அனைவரையும் கர்மத்தின் பாதைக்கு எடுத்துச் செல்வாய்.
அதனால் இறைவனை நம்புங்கள் இறைவனை நம்புங்கள் இறைவனுக்கு நல் முறையாய் பின் இறைவனை தேடி அலையுங்கள். ஆனாலும் இறைவனின் ரூபம் எங்கு உள்ளது? என்பதைக் கூட மனிதன் காணவில்லை.
பல பெரியோர்கள் உரைத்தும் விட்டனர்.
இறைவனை எங்கு வணங்குகின்றார்களோ அங்கு வருவான் நல் மனதாக இருந்தால் மட்டுமே.
இதனால் விதிவிலக்கும் உண்டு என்பேன்.
பின் வெளிச்சத்திற்கு வாருங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் மட்டுமே பிழைத்துக் கொள்வீர்கள் இனிமேலும்.
கர்ம பூமியில்
கர்மா மனிதனை சுமந்து கொண்டிருக்கின்றதா??
இல்லை
மனிதன் கர்மாவை சுமந்து கொண்டிருக்கின்றானா??
என்பதைக்கூட சந்தேகத்திலேயே திகழ்கின்றது .
மனிதன் யோசிக்க.
புத்திகள் செயலாக்குக.
அறிவுகள் மேம்படுக.
அறிவுகள் கொடுத்தான் இறைவன். அவ்அறிவை ஒழுங்காக பயன்படுத்தியதே இல்லை மனிதன் இதனை பல சித்தர்களும் பல பல வண்ணங்களில் எடுத்துரைக்கின்றோம் .
ஏன்? அகத்தியனும் மனிதன் திருந்துவான்! திருந்துவான்! என்று
பூவுலகில் நிச்சயமாய் நின்ற பொழுதும் கூட பின் திரிந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் உட்கார்ந்து கொண்டு யோசிக்கிறான்! அகத்தியனும்.
இவ்வளவு மனிதன் கீழ்தரமாக உள்ளானே! என்று.
அகத்தியன் எப்பொழுதோ புவி உலகத்தில் வந்து இறங்கி விட்டான்.
மனிதனை நோக்கி பார்த்தால்! ஆ!!?? இவ்வாறா? மனிதன் இருக்கின்றான்! பொய் வேடமா! போடுகின்றான்! இவையெல்லாம் எண்ணும் பொழுது!
அகத்தியனுக்கே மனம் பொறுக்கவில்லை அதனால்தான் அகத்தியனும் பின் தலைகுனிந்து உட்கார்ந்து விட்டான்.ஓர் இடத்தில். பின் அவை எவ்வாறு என்பதை நிமிர்ந்து பார்த்தால் குற்றாலத்திலே இப்பொழுது கூட தங்கி இருக்கின்றான்.
அகத்தியன் என்பேன்.
இதனையும் நன்குணர்ந்து இனிமேலும் பைத்தியக்காரனாக திரியாதே மனிதனே எச்சரிக்கின்றேன் யானும் கூட இதனால் தான் உணர்ந்து உணர்ந்து யான் பல நூல்களை படைத்தேன். அதில் மனிதன் பல நூல்களை அழித்து விட்டான் .
அவ் நூல்களின் வழியாக சொல்லியதை யானும் மக்களுக்கு இனிமேலும் உரைப்பேன். அழிந்ததை இனிமேலும்.
ஆனாலும் மனிதர்கள் யாங்கள் எழுதியதை நல் முறைகளாக உண்மையானதை கலியுகத்தில் எப்படி நடக்கின்றது யார் காப்பார்கள் என்பதையெல்லாம் மனிதன் தெரிந்துகொண்டு பின் மனிதன் மனிதனே அழிய வேண்டும் என்று எண்ணி அதனையும் அழித்துவிட்டார்கள் பைத்தியக்கார மனிதர்கள்.
பைத்தியக்கார மனிதர்களே இனியும் திருந்துங்கள் வேண்டாம் வேண்டாம் என்பேன் எதனையும் நினைத்து.
இறைவனின் பலமே இங்கு அதிகமாகக் கூடிக்கொண்டிருக்கின்றது .
இதனால் மனிதனே யான் தான் இறைவன்
யான் தான் இறைவன் யான் குரு என்றெல்லாம் மனிதன் இனிமேலும் தன்னைத்தானே போற்றி கொள்வான்.
அது பொய் அதுதான் பொய் அங்கேதான் கர்மம் ஆரம்பிக்கின்றது.
யான் தெரியாமல் கூறுகின்றேன் கூறுகின்றேன் இவையே என்று யான் முருகனை பார்ப்பேன்
யான் ஈசனை பார்ப்பேன் .
யான் அகத்தியனை பார்ப்பேன் யான் சித்தனை பார்ப்பேன்.
யான் ஏன் எதனை எதனையோ என்று யான் இறைவனை நேசித்த தோடு பார்ப்பேன் என்று ஆனால் இதனை எல்லாம் எதற்காக என்று தெரியுமா??
பணம் சம்பாதிப்பதற்கே!
பணம் சம்பாதிப்பதோடு மட்டும் நின்று விடாமல் மனிதன் தன்னைத்தானே இழந்து கொண்டு.!
மனிதா இப்பொழுது தெரியாது நீ செய்யும் செயல்கள்.
தெரிந்து கொள்!
மகனே மகளே என்று கூட அகத்தியன் அன்பாக உரைத்துக் கொண்டிருக்கின்றான்.
அப்பொழுது கூட அகத்தியனா? அகத்தியனா??
போனால் போகட்டும் எந்தனுக்கு பணம்தான் மூலாதாரம் என்று கூட சென்று கொண்டிருக்கின்றான் மனிதன்.
என்ன லாபம்??
லாபமில்லை கோடிகோடி மனிதர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் இவ்வுலகத்தில் பிறக்கின்றான் திருமணம் செய்கின்றான் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்கின்றான் கடைசியில் பார்த்தால் இறைவா பயமாக இருக்கின்றது என்று கதறுகிறான்.
முதலிலேயே நீ இறைவனை பிடித்துக்கொண்டால் இறைவனே அனைத்தும் தருவான் எடுத்துக்கொள் என்று.
இதனால் பயம் ஒன்றும் இல்லை ஆனாலும் மனிதனின் நிலைமையைப் பார்த்தால் தவறுகள் இனிமேலும்.
ஒருமுறையும் இனிமேலும் விளக்குகின்றேன் ஒருவர் இருவர் தனியாக சென்று தவறு செய்தாலே அது கர்மா நிலைக்கு சமம் ஆகின்றது தெரிந்து கொள்ளுங்கள் எதனை என்று கூட.
எதனை என்றும் நிற்கும் பொழுதும் கூட பலமுறையும் இனிமேலும் வருவார்கள் இன்னும் பொய்யர்கள் திருடர்கள்.
திருடர்கள் இவர்களும் எப்படி.? கண்டுபிடிப்பது? என்பது கூட!
ஈசனின் மறு வாக்கும் நல் முறைகளாக
இங்கேயே தன் காசிதனிலே (காசியில்) உரைப்பான் என்பேன். நல் முறைகளாக மக்களுக்கு.
ஈசன் அமைதியாக இனிமேலும் நடந்து கொண்டிருந்தால் உலகம் பொய்யாக கூடிவிடும். பின் ஆற்றில் அடித்துக்கொண்டே போய்விடும் இதனால் இன்னும் பல கஷ்டங்கள் பலப்பல மறைமுகமாகவே வரும்.
இதனால் ஈசன் நிச்சயமாய் காப்பாற்றுவான் .
அவனுக்கு யாங்கள் எல்லாம் எத்தனை என்றும் கூற முற்படும் பொழுது எங்களுக்கும் தெரிவித்தான்!
சித்தர்களே நீங்கள் மனிதரை காப்பாற்றுங்கள் என்று.
ஆனால் மனிதனை போய் பார்த்தால் எங்களை பின் (சித்தர்கள்) கீழ்தரமாக எண்ணி எங்கள் பெயரைச் சொல்லி நடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இது தகுமா??
என்று கூட சித்தர்கள் இல்லாமல் இல்லை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். பயம் வேண்டும் இனிமேலும் தவறு செய்யாதீர்கள் இறைவன் இருக்கின்றான் இறைவன் தண்டிப்பான் என்று கூட நினைக்க வேண்டும் நிச்சயமாக தண்டிப்பான் என்பேன் .பின் எதனை என்றும் கூட.
இவை போலும் இப்பொழுதும் கூட தண்டித்து கொண்டே தான் இருக்கின்றான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக பிரச்சினைகளை ஏற்படுத்தி கொண்டுதான் வந்திருக்கின்றோம் நாங்கள் .
அதனால் மக்களே நீங்கள் ஒன்றும் ஞானிகள் இல்லை
ஆனால் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் நிச்சயம் பின் விடிவெள்ளி என்பேன்.
விடிவெள்ளி உண்டு என்பேன் இனிமேலும் பின் ஏமாறாதீர்கள் ஏமாந்து விடாதீர்கள் பின் இரவிலேயே மீந்து விடாதீர்கள். பகலுக்கும் வாருங்கள். பகலுக்கும் வாருங்கள்.
இதனால் தான் அகத்தியன் அகத்தியன் என்று கூட இனிமேலும் அகத்தியனை பார்த்தால் என் பெயர் அகத்தியன் இப்படியெல்லாம் கூட மனிதர்கள் பொய்யான மனிதர்கள் பெயர் வைத்து திரிந்து கொண்டு இருக்கின்றார்கள்.
ஏன் ஏன் பல கோடி வருடங்களாக பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் இவ்வாறே அகத்தியன் என்ற பெயரை சொல்லி சொல்லி ஏமாற்றி ஏமாற்றி பெயரை மாற்றிக்கொண்டு இப்பொழுது அகத்தியன் பல அகத்தியன் என்று கூட பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் பின்
பகலுக்கு ஒருவனே சூரியன்.
இரவுக்கு ஒருவனே சந்திரன்.
உலகத்திற்கு ஒருவனே அகத்தியன்.
மானிடா தெரிந்துகொள் ஏன் பித்தலாட்டங்கள்??
பிழைப்பதற்கு வேறு வேலை இல்லையா?? உந்தனுக்கு??
வேண்டாம் இனிமேலும் நல்வழிப்படுத்த மனிதனுக்கு மனிதன் முயற்சிகள் செய்ய வேண்டும்
இவ்வாறு செய்க.
இவ்வாறு திருத்தலங்களுக்கு சென்று வாருங்கள் அங்கே நன்மையை செய்யுங்கள்.
சில மனிதர்களுக்கும் பின் இயலாதவர்களுக்கும் இருக்கும் உன்னிடத்தில் இருந்து நல் முறைகள் ஆகவே கொடுங்கள்.
இயலாதவனுக்கும் இல்லாதவருக்கும். நல் முறைகளாக.
பலகோடி எவ்வாறு என்பதையும் கூட ஜென்மங்கள் எடுத்தாலும் மனிதன் திருந்த போவதாக இல்லை ஏன்?
நல் மனதாக தூய உள்ளம் ஆக இருந்து விட்டால் ஏன் இறைவனைத் தேடி நீ அலையத் தேவையில்லை இறைவனே உன்னை தேடி வந்து நோக்குவான்.
இதனால் எங்கெங்கு சென்று எங்கெங்கெல்லாம் கர்மங்களை அழிக்க வேண்டும் என்பதைக் கூட அவனே உன் கையைப் பிடித்து இழுத்து அழைத்துச் செல்வான்.
அதை விட்டு விட்டு பின் பிழைப்பதற்காகவே பின் இறைவனை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தால்
நிச்சயம் கர்மாக்கள் உண்டு உண்டு உண்டு .
இதனால் பிறவிகள் உண்டு உண்டு உண்டு.
மனிதனே யான் தான் பெரியவன் என்று நினைத்து விடாதே
யாங்களும் சித்தர்களும் இதன் மூலம் நன்கு உணர்ந்து தெரிந்து கொண்டே தான் இருக்கின்றோம் மறைமுகமாகவே.
யாங்கள் வந்துவிட்டால் யான் மூலன் (திருமூலர்) என்று சொன்னாலும்
ஓ !மூலனா??? என்று கீழேயும் மேலேயும் பார்ப்பார்கள் அதனால் தான் மறைமுகமாக மறைமுகமாக ஆனாலும் அகத்தியனும் இப்புவி உலகத்தில் வந்து பார்த்து திருந்துவானா? என்றான் .
என்றெல்லாம் எதை எதையோ சொல்லிக்கொண்டு ஆனால் அகத்தியனுக்கே! பின் இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்களே! மனிதர்கள் என்று பின் தலை குனிந்து உட்கார்ந்து விட்டான்.
மக்களே இனியும் உங்களிடமே இருக்கின்றது தகுதியானவை அனைத்தும் கூட.
இதனால் சிறு பிள்ளை யிலிருந்து ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஈசனாரும் சொன்னார் என்பேன்.
அதனால் சிறு பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தாருங்கள் இப்போதுகூட இப்போதிலிருந்தே கொடுத்தால்தான் இனிமேலும் உலகம் அழியாது என்பேன்.
அழியாது என்பேன் ஆனாலும்
இனிமேலும் இவ்வாறு உண்மைகளை சித்தர்களும் படையெடுப்பார்கள் மனிதர்களை நல்வழிப்படுத்த. இன்னும் ஆனாலும். இதனை அன்றி கூட
கலியுகத்தில் முதலில் ஆபத்தாக வருபவை நோய்களே என்பேன்.
இதுதான் கலி யுகத்தின் ஆரம்பம் என்பேன்.
புரிந்துகொள்ளுங்கள் இறைவனை நாடுங்கள்.
அமைதியாக மௌனத்தை கடைபிடியுங்கள்.
ஏன் என் இறைவனே இறைவனே வணங்குவதற்கும் போட்டி பொறாமைகள். புத்திகெட்ட மனிதனே திருந்துங்கள்.
அனைவருக்கும் இறைவன் ஒன்றே என்பேன்.
பொறாமைக்காரர்களைஙயானே நிச்சயம் தண்டிப்பேன் .
பின் அகத்தியனை வணங்கிக்கொண்டு ஏன்? மூலனை வணங்கிக்கொண்டு! ஏன்? போகனை (போகர்) வணங்கிக்கொண்டு! ஏன் பல பல சித்தர்களை வணங்கி கொண்டு யான்தான் பெரியவன் யான்தான் பெரியவன் என்றெல்லாம் திரிந்து விடுகின்றீர்கள்.
பின் பொறாமைக்காரர்களே மனிதர்களை பொறாமைக்காரர்களே என்றுதான் யான் அழைப்பேன் . திரும்பவும்.
மனிதன் முட்டாளே யூகித்துக் கொள் பொறாமை வேண்டாம் பொறாமை வேண்டாம்.
மனிதனடா நீ உன்னால் என்ன செய்ய முடியும்?? என்ன செய்ய இயலும்?
பொறாமை படுவதைத் தவிர!
பொறாமை உன்னை அழித்து விடும் என்பதை கூட உந்தனுக்கு தெரியாத வண்ணமாக நிகழ்கின்றது .
வேண்டாம் பின் சித்தர்களை தூண்டினால் நிச்சயம் அடி பலமாக இருக்கும் என்பேன்.
சொல்லி விடுகின்றேன் எச்சரிக்கின்றேன் எச்சரிக்கையாக சொல்லி விடுகின்றேன் காசி தன்னிலே!
இனிமேலும் நீங்கள் இவ்வாறு போட்டி பொறாமைகள் கொண்டு யான்தான் பெரியவன் யான்தான் பெரியவன் என்று கூறிக்கொண்டே இருந்தால் நிச்சயம் அதி விரைவிலேயே அழிவுகள் உண்டு மனிதனே.
அதனால் உந்தன் நாக்கே உந்தனக்கு பகையாகி விடும் என்பேன்.
அதனால் அனைத்தும் பெரியவர்களே! என்ற எண்ணத்திற்கு அனைவரும் வரவேண்டும்.
தன் போல மற்றவரை எண்ண வேண்டும் எண்ண வேண்டும் என்பேன்.
பொறாமைக்கார மனிதனே! தேவையா? இது?
யான் காறியும் துப்புவேன்! இனிமேலும் மனிதனை.
ஏன் ?இறைவன் இல்லாததையும் கூட ஏன்? சித்தர்கள் மறைமுகமாக இருப்பதை எண்ணி இவ்வாறு பல வாக்குகளை யான் சொல்லிக் கொண்டு இருந்தால் சித்தர்களுக்கா? தெரிய போகிறது? இறைவனுக்கா? தெரியப்போகிறது?
என்றெல்லாம் பொய் பேசி புறம் கூறி நல்லோர் போல் நடித்து நன்றி கெட்ட மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் எங்கள் பெயரை சொல்லி.
ஆனாலும் இனிமேலும் இவ்வாறே பிழைத்துக்கொண்டிருந்தால் வரும் காலங்களில் அதி விரைவிலேயே இறைவனும் பொய் சித்தனும் பொய் என்ற நிலைமைக்கு வந்து விடுவார்கள் என்பேன்.
அதனால் பொய்யான பக்தியை காண்பிக்கவே வேண்டாம் என்பேன்.
ஒன்று நீ திருந்து இல்லையென்றால் அமைதியாக உட்கார்ந்து விடு.
இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே.
பொய்கள் எல்லாம் கூறி இவன் ஞானி போல் நடிப்பான் என்பேன்.
தான் தான் ஞானி தான் தான் சித்தன் தான் எண்ணுவதெல்லாம் சிறப்பு என்றெல்லாம் கூட மக்களை மயக்கி கடைசியில் பார்த்தால் அவன் கர்மா அவனை விட்டு விடாது.
பல நோய்களுக்கு ஆட்பட்டு பின் மறைந்து விடுகின்றான்.
ஆனால் அவனுடைய கர்மா பின் அவந்தனை அனுபவித்துவிட்டு இவன் பெயரை எவ்வாறு இவன் தன் யார் யார் மக்களுக்குச் சொன்னார்களோ இக் கர்மம் அவர்களுக்கும் சேர அவந்தனும் அழிந்து போவான் என்பேன்.
இதனால் கடைசியில் இறைவா இறைவா என்று வருவது நியாயமா?
அதனால் மனிதன் திருந்தி கொண்டால் மட்டுமே உண்டு என்பேன்.
இனிமேலும் பின் சபதத்தை ஏற்க வேண்டும் .
தன்னைப்போலவே பிறரை எண்ண வேண்டும்.
யான் தான் பெரியவன் என்று எண்ணக்கூடாது. என்பேன்.
யான் தான் சிவனின் மகன் யான் தான் அகத்தியன் மகன் யான் தான் சித்தர்களின் மகன் என்றெல்லாம் பொய் கூறி திரிந்துவிடக் கூடாது.
நீங்கள் அவ்வாறு சொன்னாலும் யாங்கள் ஏற்றுக் கொள்வதுமில்லை ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.
பின் அவ்வாறே சொல்லுங்கள் ஏன்?
உந்தனுக்கு கஷ்டங்கள் வருகின்றது?? அகத்தியன் பிள்ளை என்றால் ஏன்? உந்தனுக்கு கஷ்டம் வருகின்றது??
எண்ணிப்பார் மனிதனே முட்டாள் மனிதனே அறிவுள்ள முட்டாள் மனிதனே
எண்ணிப் பார்.காறித் துப்புவேன் இவை போன்று செயல்பட்டால். காறித் துப்புவேன் இவை போன்றும் கூட முறைகளாக செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள்.
வேண்டாம். அடுத்த வாக்கும் கூட இக் காசி தனிலே நிச்சயமாய் ஓர் முறை ஈசனும் உரைப்பான்.
இன்னொருமுறை பதிகம் பாடி துதித்து நல் முறைகள் ஆகவே.
என்று கூட சொன்னாலும் மனிதனுக்கு வெட்கமில்லை வெட்கம் இல்லை என்பேன்.
போட்டி பொறாமைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன்.
என்ன ?லாபம்? என்ன? லாபம்?
மனிதன் இவ்வாறே செய்து கொண்டு இருந்தால் வீணாகவே போய்விடுவான் ஏன்?
இவன் மட்டும் வீணாக போவதில்லை அவனைச் சுற்றி இருப்பவர்களும் வீணாக போய் விடுமாறு செய்து விடுகின்றான்.
ஏனிந்த? மறைமுகமான போராட்டங்கள் போராட்டங்கள்.
வந்தோமா இறைவனை வணங்கினோமா இவ்வுலகத்தில் இருந்து சென்று விட்டோமா என்று இல்லாமல் மனிதன் பொய் கணக்கு போட்டுக் கொண்டு இருக்கின்றான்.
மனிதனே தவறு நீ எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் பொய் கணக்கு.
இறைவன் எண்ணும் எண்ணங்கள்தான் மெய்க்கணக்கு.
இனிமேலும் திருந்துவதாக நீங்கள் இல்லை என்றால் நிச்சயம் யாங்களே தண்டிப்போம் கஷ்டங்களைக் கொடுப்போம் கொடுப்போம் கொடுப்போம்
அப்போதாவது நீங்கள் திருந்துவதற்கான வழிகள் உண்டா? என்று உண்டு .
நல் முறை தீயமுறை இவையெல்லாம் எவ்வாறு வருகின்றது என்பதெல்லாம் மனிதன் மனிதன் உணர்ந்து கொண்டு நன்றாக செயல்பட்டாலே இனியும் விடிவு காலம் பிறக்கும் பிறக்கும் .
அடுத்த திங்களும் (மாதமும்) நமச்சிவாயம் உரைப்பான்.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment