“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, February 10, 2024

சித்தர்கள் ஆட்சி - 355 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - 22/8/2021 ஆவணி அவிட்டம் பௌர்ணமி அன்று குருநாதர் அகத்தியர் திருவண்ணாமலை திருத்தலத்தைப்பற்றி உரைத்த பொது வாக்கு .உரைத்த இடம். அம்மணி அம்மாள் ஜீவசமாதி. திருவண்ணாமலை.

 



“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


22/8/2021 ஆவணி அவிட்டம் பௌர்ணமி அன்று குருநாதர்  அகத்தியர் திருவண்ணாமலை திருத்தலத்தைப்பற்றி உரைத்த பொது வாக்கு 

உரைத்த இடம். அம்மணி அம்மாள் ஜீவசமாதி. திருவண்ணாமலை.

ஆதி அண்ணாமலையை மனதில் துதித்து செப்புகின்றேன் அகத்தியன்!

அப்பனே நல் முறையாக, நல் முறைகள் ஆகவே இவ்விடத்தில் பலப்பல புண்ணியங்கள்.  நல்முறைகள் ஆகவே செய்தவன் தான் அண்ணாமலையை கிரிவலம் வர முடியும் நல் முறைகள் ஆகவே.

நல் முறைகள் ஆகவே அண்ணாமலை வலம் வருவது அதி சிறப்பு என்பேன். என்பேன் இதனையும் எவை எங்கு என்றும் கூறாமல் நல் முறைகளாக இறைவனை வணங்காவிடினும் நல் முறையாக வலம்வந்து வணங்கி வந்தால் பல பல சித்தர்கள் பல பல எண்ணிலடங்கா கோடி பின் ஞானிகளும் வலம் வருவார்கள் என்பேன். 

அப்பொழுது நல் முறைகள் ஆகவே வலம் வரும் பொழுது அவர்கள் தம் உராய்வின் போது (அருரூபமாக உரசி செல்வார்கள்) சில கர்மாக்களை எடுத்துச் செல்வார்கள் என்பேன் இதுதானப்பா  திருவண்ணாமலை என்கின்ற திருத்தலத்தின் சிறப்பு என்பேன்.

ஆனால் இதையோ தவிர்த்துவிட்டு மனிதர்கள் பின் நல் முறை ஆகவே சுற்றிவந்தால் பின் அதுவும் இதுவும் அனைத்தும் நடக்கும் என்றே யோசிக்கிறார்கள் ஆனாலும் அதுவே தவறு என்பேன்.

கர்மா நீங்கி நல் முறைகளாக முக்தி பெறுவதற்கு சரியான  ஸ்தலம் இதுவே என்பேன்.

நல் முறைகளாக குழப்பங்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது நிச்சயமாய் இவனை(சிவனை) அண்ணாமலையில் சரண் அடைந்து விட்டால் இவன் தன் குறைகளை வைக்க மாட்டான் என்பேன்.

ஆனாலும் மனதில் எதையும் நினைக்கக் கூடாது என்பேன். அவை வேண்டும் இவை வேண்டும் என்று.

நல் முறை களாகவே வலம் வந்தாலே போதும் கர்மாக்கள் தொலையும்.

கர்மாக்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் புண்ணியங்கள் பெருகும் பொழுது அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

நிறைவேறும் என்பேன் நல் முறைகள் ஆகவே, ஏன் யாங்களும் சித்தர்களும் சித்தர்களின் பரிபூரண பின் மனிதர்களும் அன்பைப் பெற்று பின் அன்பின் பின் பெற்று தொடர்வதாலே முன் செய்த கர்ம வினை ஒருவனுக்கு நீங்க வேண்டும் என்றால் அண்ணாமலையே சிறப்பு ஸ்தலம் என்பேன். மற்றவையெல்லாம் பின்னே என்பேன்.

இதனால்தான் அண்ணாமலையின் ஒரு சிறப்பு உண்டு என்பேன் உண்டு என்பேன் அவன் மலையை மலையில் இன்னும் பல கோடி சித்தர்கள் தவம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

ஆனாலும் இதன் தவத்தை இப்பொழுதும் கூட மனிதர்கள் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் சித்தர்களோ ஞானிகளோ நல் முறைகள் ஆகவே பொறுமை காத்து இருக்கின்றார்கள்.

ஆனாலும் இவையே என்று போகப்போக பின் இதனையே இப்படியே மனிதர்கள் செய்துகொண்டிருந்தால், செய்து கொண்டிருந்தாராயின் பின் எவை என்று கூறாமலேயே பின் கோபம்.

நல் முறைகளாக பின் கர்மத்தையும் எவ்வாறு சுமந்து நின்றாயோ எதனாலே பல புண்ணியங்கள் பெருகும் ஆனாலும் எதை எதை என்று நினைக்கும் மனது மனிதனின் கீழ்த்தரமான எண்ணங்களை கவனித்து சித்தர்கள் இனிமேலும் நிச்சயமாய் தண்டனைகள் கொடுப்பார்கள் என்பேன்.

இதனையும் நன்கு உணர குறைகள் இல்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே அம்மணி, நல் முறைகள் ஆகவே இங்கும் இப்பொழுதும் கூட அமர்ந்து கொண்டு இருக்கின்றாள் என்பேன். ஆனாலும் இவள் தன் இடத்தில் விசேஷங்கள் எவை என்னவென்று அவளிடத்தில் இப்பொழுது கூட உரைத்துக் கொண்டிருக்கிறேன் நல் முறைகள் ஆகவே.

உலகத்தில் வாழும் மனிதர்கள் பல பேர்  பல எண்ணங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் ஆனாலும் அந்த எண்ணங்கள் முற்று பெற்றது என்பேன்.

முற்றுப் பெற்றது என்பேன் என்பதற்கு இணங்க யோசித்து செய்தால் மனிதர்கள் மனிதர்களும் பல காரியங்கள் செய்ய பல மந்திரங்கள் உச்சரித்து பல பல விளைவுகளை ஏற்படுத்தி துன்பம் பெறப் போகிறான் என்பது உறுதி.

நல் முறையாக நல்லெண்ணத்தோடு மந்திரமும் ஜபத்தால் தான் அதன் பலன் பலம் பல மடங்கு ஆகும் என்பேன்.

அதனை தவிர்த்து பின் அவை வேண்டும் இவை வேண்டும் என்று என்றெல்லாம் மந்திரங்கள் கூறி கொண்டு இருந்தால் பின் மனிதனுக்கு அழிவுகள்.

அழிவுகள் எதனால் வருகின்றது என்பதையும் கூட மனிதன் எவ்வாறு என்பதும்கூட அனைத்தும் செய்துவிட்டு பின் கொலையும் செய்துவிட்டு பின்பு எவ்வாறு என்பதும்கூட சிறு சிறு உயிரினங்களையும் கொன்று குவித்து நல் முறைகளாக இறைவனை வணங்கினால் நியாயமா? இவையெல்லாம் செய்துவிட்டு இறைவனை வணங்கினால் போதுமா?

ஆனாலும் இறைவன் ஏற்க மாட்டான் என்பேன் இப்பொழுது புரிந்து கொள்ளுங்கள்.

புரிந்துகொள்ளுங்கள் நல்லெண்ணத்தோடு பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எண்ணினாலே போதுமானது. இறைவன்   தனக்கு செய்வான். இறைவன் அனைத்தும் செய்வான் என்பேன்.

அப்படியிருக்க எனக்கு பணம் வேண்டும் பொருள் வேண்டும் புகழ் வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் பொழுது பின் அவற்றில் ஒன்றைக் கூட நிச்சயமாய் இறைவன் தரமாட்டான் என்பேன்.

ஆனாலும் இதைத்தான் கேட்கின்றார்கள் இப்பொழுதும் கூட இப்பொழுதும் கூட நல் முறைகள் ஆகவே இத்திருத்தலத்தில் கூட பல பேர்கள் இனிமேல் எவை என்று கூற ஒருவன் தன் ஒருவன் அழியவேண்டும் எவை என்று கூற என் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் எந்தனுக்கு பொருள்கள் பல சேர வேண்டும் அனைத்தும் சுகமாக வாழ வேண்டும் என்றெல்லாம் இறைவனிடம் கேட்கின்றார்கள்.

ஆனாலும் இவையெல்லாம் இறைவன் நிச்சயம் தரமாட்டான் என்பேன் புரிந்துகொள்ளுங்கள் அப்பனே.

நல் முறைகள் ஆகவே இவ்வுலகத்தில் இவ்வுலகத்திற்கும் நல்  முறையாகவே இனி வரும் காலங்களில் கூட தீங்குகள் தான் நடைபெறும் என்பேன்.

அந்த தீங்குகளை தடுக்க மனிதர்களே முயற்சிகள் செய்ய வேண்டும் என்பேன்.

ஆனாலும் மனதில் எவ்வாறு என்பதும்கூட அழுக்குகள் வைத்துக்கொண்டு மனிதன் நல்லவனாகவே திரிகின்றான் முட்டாளே.

முட்டாள் மனிதர்களே அனைவரும் திருந்துங்கள்.

அனைத்தும் எவ்வாறு என்பதையும் கூட கூறி விளக்கும் அளவிற்கு கூட இப்பொழுது சொல்கின்றேன்.

அனைத்தும் செய்துவிட்டு இறைவா! இறைவா! என்றெல்லாம் தேடினால் கிடைப்பானா?? இறைவன்???

நிச்சயமாய் கண்ணில் பட மாட்டான்.

கண் படமாட்டான், தென் படமாட்டான் இதற்கும் விரிவான சூட்சுமங்கள் உண்டு என்பேன்.

ஆனாலும் எவை எவை என்று மனிதன் மனிதனுக்கு உள்ளேயே பின்  மனது ஒரு குரங்காக கொண்டு இரு குரங்குகள் சேர்ந்து கொண்டு உலகத்தையே அழித்து வருகின்றது.

உலகத்தை அழிக்க மனிதனே ஆயுதம் என்பேன்.

எவை என்று கூற அனைத்திற்கும் மேலானது மனித பிறவி என்பார்கள் ஆனாலும் யாங்கள்(சித்தர்கள்) சொல்வோம்

அனைத்திற்கும் கீழானவை மனிதப்பிறவி என்போம்.

இவையெல்லாம் எவ்வாறு என்பதையும் கூட மனிதனின் நிலையை பார்த்தால் அதர்மம் ஓங்கி நிற்கின்றது வரும் காலங்களிலும் அதர்மங்கள் ஓங்கி நிற்கும்.

ஆனாலும் சித்தர்கள் யாங்கள் நிச்சயமாய் விடமாட்டோம்.

மனிதர்கள் நாங்கள் தான் சித்தர்கள் நாங்கள்தான் தெய்வங்கள் என்றெல்லாம் கூறி ஆனாலும் மனிதர்களை இவ்வாறு முட்டாள்கள் ஆக்குகின்றார்கள்.

ஆனால் சித்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றோம் ஒவ்வொருவரையும் பலமாக தண்டிப்போம்.

இப்பொழுதே எச்சரிக்கின்றேன். எச்சரிக்கை விடுத்து விடுத்து இதுவரை மனிதர்கள் திருந்தவில்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவை எவை என்று கூற இப்பொழுது உரைக்கின்றேன் எவ்வாறு பல மனிதர்கள் இறைவனிடத்திலே இருந்து  பின் கஷ்டங்கள் வருகின்றது என்பதையும் கூட யோசிப்பான் என்பேன் இறைவனை வணங்க வணங்க சோதனைகள் அதிகம் என்பேன் .

ஆனாலும் முட்டாள் மனிதனே நீ என்ன செய்தாய்? என்பதை உணர்ந்து பார்.

அப்பொழுது கேள் இறைவனை இறைவனிடத்தில்.

ஒன்றை மட்டும் சொல்கின்றேன் மனதைத் தொட்டு பார்த்து மனசாட்சிக்கு எதிராக பேசாமல் நான் நல்லவன் என்று கூறிவிட்டால். இறைவனிடம் நீ சண்டை இடலாம் என்பேன்.

அண்ணாமலையிலே அண்ணாமலையிடத்திலே பின் பல பல செய்கைகளால் அப்பனே அவன்தனையும்  திட்டி தீர்க்கலாம் என்பேன். அப்பனே!

ஆனாலும் யோசித்து கொள்ளுங்கள்.

அப்பனே இவை தன் எவ்வாறு என்பதை குறைதீர்க்க தப்புக்கள் செய்து அப்பனே அனைத்தும் தீர்த்துவிடு என்றே வலம் வருகின்றார்கள் பல மனிதர்கள்.

பல மனிதர்கள் பெண்ணின் மீது மோகம், பலப்பல மனிதர்களுக்கு புகழின் மீது மோகம், பல மனிதர்களுக்கு பணத்தின் மீது மோகம், இவை என்று கூறி விடாமல் இதனையும் மோகத்திலேயே வலம் வருகின்றார்கள்.

சிலருக்கு விளையாட்டாக சிலருக்கு பொழுதுபோக்காக இவை எல்லாம் விட்டு விடுவானா?? ஈசன்??.

இதனைத்தான் ஈசனை எவ்வாறு என்பதையும் கூட சிறிது உணர்ந்தால் கூட எவரையும் அனுமதிக்க மாட்டான் பின் ஈசனே.

அப்பனே பக்தி என்கின்றான் ஆனால் வெளியில் ஏமாற்றி வருகின்றான் அப்பனே எவை எவை என்று சொல்ல இன்னும் கூட பல பல மனிதர்கள் வருவார்கள் என்பேன்.

வருவார்கள் என்பேன் பின் எதற்காக என்பேன் திருடர்களே என்பேன்.

மனிதர்களை யாங்கள் திருடர்கள் என்று தான் சொல்வோம்.

இவை என்றும் கூறி விடாமல் அப்பனே நல் முறைகள் ஆகவே மனிதன் ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் நன்மைகள் செய்து கொண்டே வாழ்ந்தால்  அவன் நல் முறைகள் ஆகவே இக்கடலை பிறவிக் கடலை தாண்டி விடலாம் 

ஆனாலும் ஒழுக்கங்கள் எங்கே?? தானங்கள் எங்கே? தர்மங்கள் எங்கே?

முட்டாள் மனிதர்களே!

பின் மாறிப்போனான் மனிதன் மாறிப்போனான் மனிதன் என்பேன்.

ஆனாலும் இறைவனும் மாறித்தான் போகப் போகிறான் அப்பொழுது தெரியும் ஆனாலும் இப்பொழுதுகூட கஷ்டங்கள் ஒவ்வொருவரையும் பின் முட்டாள்கள் என்று கூட சித்தர்கள் மனிதர்களுக்கு எவ்வாறு என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனாலும் யானும் நல் முறைகள் ஆகவே இப்புவியுலகில் திரிந்து கொண்டிருக்கின்றேன்.

என்னையும் பல கோடி சித்தர்கள் அகத்தியா அகத்தியா மனிதர்களுக்கு பின் நன்மைகள் செய்து விடாதே மோசமானவர்கள் மனிதர்கள் உன்னையே வைத்து பொருள் சம்பாதித்து உன்னையே ஏமாற்றி பின் அகத்தியனே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

அப்பனே இன்றும் சித்தர்கள் கூட என்னிடத்தில் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் என்னால் முடியும் என்னால் முடியும் என்று கூட யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

ஆனாலும் மனிதனை பார்த்தால் மோசம் போய்விடுகின்றது.

நல் முறைகள் ஆகவே இவை என்று விளக்கத்திற்கு கேட்க இவை என்றும் எவை எவை என்று பொருள் சம்பாதிப்பதற்கே மனிதன் பிறக்கின்றான்.

பொருள் சம்பாதிப்பதற்காக வா??

ஆனால் நீ சம்பாதித்துவிடலாம் என்பேன் ஆனாலும் அதை அழித்துவிடும் சக்திகள் எங்கள் இடத்தில் உள்ளது என்பேன்.

பொருளுக்கு, புகழுக்கு, இவைகளுக்கு எல்லாம் அலைந்து திரிந்து சேர்த்துக்கொண்டால் இந்த வினாடியில் எவை என்று கூட சில நாள் கழித்து அப்பணத்தை இப்போதுதே உரைத்து விடுகின்றேன்  ஓர் நாளில் காலி செய்து விடுவோம் என்பேன்.

எச்சரிக்கையாக இருங்கள் மனிதர்களே.

எவரையும் ஏமாற்றி பிழைக்க வேண்டாம் என்பேன். 

அப்பனே முதலில் நீ திருந்து. 

நீ திருந்து பின் உன் இல்லத்தை திருந்த வை. இல்லத்தை திருத்து பின் ஓர் உருவாக்கு ஒரு கூட்டத்தை. அவர்களையும் திருத்து பின் உருவாக்கி. 

பின் அடி பலமாக விழுந்தால் தான் இனிமேலும் மனிதர்கள் திருந்துவான் என்பேன். பின் எவை என்று கூற அமைதியாகச் சொன்னால் திருந்தவே மாட்டான் என்பேன் மனிதன்.

எவை என்று கூற பின் பக்தி பக்தி என்று சொல்லி பின் எவ்வாறு என்பதையும் கூட  சக்திகள் எவ்வாறு என்பதையும் கூட நிச்சயமாய் சித்தர்கள் இனிமேலும் நல் முறைகள் ஆகவே இவ்வுலகத்தில் வந்து ஆட்சி செய்து பலமாக அடி கொடுத்து எவ்வாறு என்பதையும் கூட பின் கிருஷ்ணனும் சொல்லி இருக்கின்றான் தர்மம் தாழும் போது வருவேன் என்று அவனும் நிச்சயமாய் வருவான் என்பேன்.

இதனால்தான் எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகள் புரிய நல்லது நடக்கும் இல்லையெனில் அனைவருக்கும் கஷ்ட காலங்களே. 

கஷ்ட காலங்கள் என்பேன் இனிமேல் அனைவருக்கும் எதனை எதனை மூலமும் இறைவன் சோதிப்பான் என்பேன்.

முதலில் பணத்தை எடுப்பான் என்பேன்.

ஏனென்றால் அதில்தான் பல மனிதர்கள் எவ்வாறு என்பதையும் கூட .

ஆனாலும் சில பிரச்சினைகளை உருவாக்குவான் என்பேன் ஆனாலும் பின்  எங்களிடத்தில் பணம் வேண்டும் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்பேன்.

ஏன்? எதனால்? என்பதையும் கூட முக்கியப் புள்ளியாக ஈசனே பணத்தின் மீதுதான் அனைவருக்கும் மோகம் என்பது தெரிந்துவிட்டது. இதனால் ஒவ்வொருவரிடத்திலும் பணத்தின் நல் முறைகள் ஆகவே நல் முறைகளாக விளக்கும் அளவிற்கு கூட அவர்களிடத்தில் இருந்து பணத்தை ஈட்டுவான். (ஈசன் எடுத்துக்கொள்வார்) 

பின் கஷ்டங்கள் ஏற்படும் பின் திருடன் ஆவான் மனிதன். திருடி திருடி சேர்த்துவைத்து சேர்த்து வைப்பதே இவனுடைய வேலை மனிதனுக்கு.

நல் முறைகள் ஆகவே இதனால்தான் மனதாக வைத்து கொண்டு இறைவனை வணங்கி வணங்கினால் போதுமானது.

இறைவா பூமியில் படைத்தாய் படைத்தாய் என்பதைக்கூட இறைவனின் செயல் இறைவனின் செயல் மனிதா நீ இப்புவி உலகத்திற்கு வரும்பொழுது உன்னுடைய எண்ணங்கள் எதன்மீதும்  போகவில்லை அப்போது இறைவனே துணை இருக்கின்றான்.

ஆனாலும் நீ வளர வளர உன் மீது உள்ள நம்பிக்கையே போய்விட்டது இறைவனுக்கு என்பேன்.

ஏனென்றால் வளர வளர கெட்ட புத்திகள் கெட்ட செய்கைகள் இன்னும் கெட்ட கெட்ட இன்னும் எவ்வாறு யான் சொல்வது? இனிமேலும் நடக்கும்.

பின் ஒவ்வொருவரையும் எச்சரிக்கின்றேன் ஒவ்வொருவரும் நல்  முறைகள் ஆகவே இனிமேலும் வரும் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும். இறைவனை நல் முறையாக இளம் வயதிலேயே பிடிக்க வேண்டுமென்று.

பின் அனைவரிடத்திலும் கூற பின்பு படிப்புகள் இவ்வுலகத்தில் முக்கியமில்லை.

படிப்பிற்கு வரும் காலம் வரும் காலங்களில் பின் முக்கியத்தவம் கிடைக்காது தர மாட்டாது என்பேன்.

ஏனென்றால் படிப்பே ஒரு வியாபாரம் ஆகிவிட்டது என்பேன் படிப்பு எவ்வாறு என்பதையும் கூட பின்  கேட்கும்போது சந்தோசத்திற்காக வே படிப்பு இருக்காது என்பேன்.

அப்படி சந்தோசமாக படிப்பதற்கு சென்றால் உந்தனுக்கு வேலையும் கிட்டாது. தொழிலும் கிட்டாது. பின் எவ்வாறு என்பதையும் கூட சுய தொழிலும் கிட்டாது பின் நீ திரிந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

ஆனால் இறைவனை மனதால் எண்ணி கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு முன்னேறி வா இறைவன் அனைத்தும் தருவான் என்பேன்.

அப்பனே சொல்கின்றேன் சிறுவயதில் எவ்வாறு என்பதையும் கூட நல் முறையாகவே இறைவனையே தாய் தந்தையராக ஏற்றுக்கொண்டு நல் முறைகள் ஆகவே வணங்கி வந்தால் எத்துன்பமும் வராது என்பேன் .

வராது என்பேன் இதனுள் சூட்சமங்கள் இன்னும் பல உண்டு என்பேன்.

மனிதர்களுக்கு எவை என்று கூற இன்னும் பல விஷயங்களைச் சொல்லி         நல்வழிப்படுத்துவோம்.

ஆனாலும் திருந்தாவிட்டால் பின் நிச்சயம் நோய்கள் உருவாக்குவோம் என்பேன் நல் முறைகள் ஆகவே.

பின் இறைவனிடத்தில் பிரார்த்தனைகள் செய்யும் பொழுதும் நல் முறைகளாக செய்யுங்கள் என்பேன் போட்டி பொறாமைகள் வேண்டாம் என்பேன்.


ஆனாலும் நிச்சயமாய் யாங்கள் நடத்துவோம் ஆட்சி.

ஆட்சி எங்களுடையதே என்போம்.


பாருங்கள் இனிமேலும் அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பன் கந்தன் அடுத்த வாக்கில் உரைப்பான் நல் முறைகள் ஆகவே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.

——-

அம்மணி அம்மாள் என்பவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண் சித்தராவார். இவர் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில் கோபுரத்தினை கட்டிய பெருமை உடையவர். இவருடைய ஜீவ சமாதி திருவண்ணாமலை ஈசான்ய லிங்க கோயிலின் எதிரே அமைந்துள்ளது. 


இவர் திருவண்ணாமலை அருகேயுள்ள சென்ன சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தவர். திருவண்ணாமலை அருணாச்சலேசுவர் கோயிலின் வடக்குக் கோபுரம் பாதி மட்டுமே கட்டப்பட்ட நிலையைக் கண்டு, அதனைக் கட்ட எண்ணம் கொண்டார். இதற்காகப் பக்தர்கள், செல்வந்தர்களின் உதவியை நாடி கோபுரத்தினைக் கட்டி முடித்தார். அதனால் திருவண்ணாமலையின் வடக்குக் கோபுரம் அம்மணியம்மாள் கோபுரம் என்றே அழைக்கப்படுகின்றது 

————-


BRIEF TRANSLATION OF NAADI READING:-


THIS NAADI READING WAS BLESSED BY GURU AGASTHIYA AT THIRUVANNAMALAI, TAMILNADU.


"ONLY, WHO HAS DONE A LOT OF DHANA & DHARMA, AND EARNED PUNNIYA CAN GET THE CHANCE TO DO GIRIVALAM AT THIRUVANNAMALAI.


ONE NEED NOT HVE DARSHAN OF LORD BUT A GIRIVALAM WILL SUFFICE, BECAUSE A LOT OF SIDDHAS WILL GO FOR PRADAKSHINA/GIRIVALAM AND ONE GET THE CHANCE TO BE WITH THEM. YES, WHILE DOING GIRIVALAM, SIDDHARS WILL BRUSH AND PASS HUMAN BEINGS AND TAKE AWAY THEIR KARMA. (KARMA PARIVARTHANAM). THIS IS THE MOST IMPORTANT ASPECT OF THIRUVANNAMALAI GIRIVALAM. NOT MUCH PEOPLE KNOW ABOUT THIS.


BUT NOW A DAYS, PEOPLE SEEM TO DO GIRIVALAM WITH AN OBJECTIVE OF MATERILISTIC WANTS. THAT IS A WRONG APPOACH. ONE SHOULD LOSE ALL KARMA HERE AND ATTAIN MUKTHI HERE. ANYONE SURRENDERS TO ANNAMALAI WILL BE BLESSED WITH EVERYTHING FOR MUKTHI AND THERE WILL NOT BE ANY SCARCITY IN LIFE.


DEDICATE YOURSELF TO THE GOD, CENTRALISE THE MIND AND GO FOR GIRI PRADAKSHINAM, THAT WILL SUFFICE.


THIRUVANNAMALAI IS THE BEST PLACE TO WIPE OF ALL POORVA JENMA KARMAA.


CRORES OF SIDDHAS ARE SITTING ON TAPAS IN ANNAMALAI. HUMANS ARE SPOILING THEIR TAPAS BY INTERFERING IN THIER SILENCE/LONLYNESS. SINCE SIDDHAS PRESERVE PATIENCE NOT MUCH BAD THINGS ARE HAPPENING.


IF ONLY ONE CHANT MANTRAS WITH GOOD INTENTION, IT WILL FETCH ITS FRUITS. JUST GOOD THOUGHT, GOOD CAUSE WILL MAKE THE GOOD BLESS HUMAN BEINGS WITH ABUNDANCE. TO HAVE THAT ONE HAS TO ABSTAIN FROM KILLING ANY JEEVAATMAA IN THIS WORLD.


LIVE WITH A PURIFIED MIND.


MAN IS BEHAVING IN SUCH A WAY THAT, HUMAN BIRTH IS THE LEAST JENMA IN THIS WORLD. LOOKING AT THE WAY HE IS, IT IS SURE THAT ADHARMAA WILL PREVAIL IN THIS WORLD AND HUMANS WILL BE THE CAUSE OF DESTRUCTION OF THIS WORLD, IN THE YEARS TO COME.


EVENTHOUGH, WE HAVE GIVEN A LOT OF WARNING, MAN HAS NOT CHANGED HIMSELF. IF THIS SITUATION CONTINUES, SIDDHARS WILL CERTAINLY GET DOWN AND PUNISH HUMANS.


CHECK YOUR CONSCIENCE AND IF YOU ARE GOOD, YOU CAN STOP GOD AND ARGUE/FIGHT WITH HIM. THIS IS THE TRUTH. 


I AM ALSO ROAMING AROUND THE EARTH. EVERY SIDDHA SAYS "AGASTHIYAA! PLS DON'T PROTECT THESE HUMANS. THEY WILL CHEAT YOU. THEY WILL DITCH YOU. BUT I (AGASTHIYA) USED TO TELL THAT MY KIDS/DEVOTEES WILL NEVER DO THAT AND I STILL HAVE HOPE THAT THEY WILL CHANGE".


WE ARE GOING TO RULE THIS WORLD. GOVERNANCE IS OUR ADMIN. SO CHANGE TO BE A GOOD HUMAN BEING.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment