“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
எப்பொழுது மருத்துவ சிகிர்ச்சை என்று ஒன்று ஏற்படுகிறதோ, அப்பொழுதே சேர்த்த புண்ணியம் போதவில்லை, பாபம் இன்னும் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
வீண், விரயங்கள் ஏன் வருகிறது என்றால், ஒருவன் மெய்யான வழியிலே புண்ணியத்தை சேர்க்கவில்லை என்பதே பொருள். ஒருவன் கணக்கிலே இத்தனை தனத்தை பிடுங்கவேண்டும் என்று விதியிருந்தால், அத்தனை தனம் விரயமாகும். சிலர் தனத்தை இருகப் பிடித்து வைக்கிறார்களே, விதி, அவர்களிடமிருந்து தனத்தை எடுக்கிறவிதமே வேறு. கள்வர்களாலும், கொள்ளையர்களாலும், வேறு சில பகற்கொள்ளையர்களாலும், தனம் பிடுங்கப்படும்.
( இந்தப் பொது வாக்கில் இருந்து தெரிந்து செய்ய வேண்டியது - இந்த நொடியில் இருந்து தான, தர்மங்கள் இயன்றவரை செய்து புண்ணிய பலத்தை அதிகரித்தல் ஒன்றே ஆகும். )
=================================
சித்தன் அருள் - 812 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்!
===================================
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 8)
https://siththarkalatchi.blogspot.com/2023/10/208-4-9-2023-8.html?m=1
மனிதர்களுக்கு முதலில் பக்குவங்கள் ஏற்ப்படுத்தி ஏற்படுத்தி பின் வாக்குகள் ஒவ்வொரு சித்தனாக உரைப்பான் அப்பனே.
(சித்தர் பெருமான்) போகன் அறியாததா நீங்கள் அறிந்திருக்கப்போகின்றீர்கள்? அப்பனே. அப்பனே உப்பைச் சிறிது நீரில் இட்டு அருந்தினாலே அப்பனே போகனை நினைத்து போகனே வந்து சில நோயை குணப்படுத்துவானப்பா. அப்பனே தெள்ளத்தெளிவாக இருங்கள்.
தெளிவாக இல்லை என்றால் மற்றவர்கள் உன்னைச் சுலபமாக ஏமாற்றிவிட்டுச் சென்றிருப்பார்கள் அப்பனே சொல்லிவிட்டேன்.
இறைவன் ஒருபோதும் உன்னை ஏமாற்ற மாட்டான் சொல்லிவிட்டேன் அப்பனே. துன்பங்கள் கொடுப்பானே தவிர அப்பனே ஏமாற்றமாட்டான் அப்பனே சொல்லிவிட்டேன். சொல்லிவிட்டேன்.
===========================
31/12/2021 அன்று கந்தன் உரைத்த பொதுவாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம். திருச்செந்தூர் செந்தில் கோட்டம்.
போகன் (போகர் சித்தர்) என் அடிமையாக கடை நாளும் இருந்தான்.
அனைத்தும் சொல்லிவிட்டேன் போகனுக்கும்.
அவந்தன் அருள்கள் பெற்றுவிட்டால் நோய் நொடிகள் குணமாகும் என்பதை கூட மனிதனுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகின்றான்.
அவை செய்தால் இவை தன் இதை உண்டால் அவை நடக்கும் நடந்து விட்டாலும் இவைதன் இவ் மூலிகையை உட்கொண்டால் நலமாகிவிடும் என்பதெல்லாம் பொய்யான கணக்கை காட்டி வரும் வரும் காலங்களில் என்னவென்று தெரியாமலே உண்டு கொண்டிருப்பான்.
ஆனாலும் இதற்கெல்லாம் போகன் காரணமாகின்றான்.
போகனின் அருள் இருந்தால் நிச்சயம் ஏதாவது ஒன்றை ""தண்ணீர்கூட!!! உட்கொண்டால் நலம் ஆகிவிடும். போகனே என்று மனதாலே நினைத்துக்கொண்டு. இதுதானப்பா உண்மை.
( அடியவர்கள் இந்த இரண்டு வாக்கையும் பயன்படுத்திக் கொள்க )
===========================
சித்தன் அருள் - 1378 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ காளஹஸ்தி வாக்கு!- 30/7/2023 ஆடி மாத ஞாயிறு பிரதோஷம் அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு: வாக்குரைத்த ஸ்தலம் பஞ்சபூதஸ்தலங்களில் வாயுஸ்தலமான திருகாளாத்தி (காளஹஸ்தி)
( இந்த வாக்கு தொடர்பான youtube பதிவுகளைக் கீழ் காணும் பதிவில் பார்க்கவும்)
- https://youtu.be/lS41J_Nedt4 ( பாகம் 1)
- https://youtu.be/shUlQu-7-HY?si=Tnb4ypSJkiJaGl14 ( பாகம் 2 )
- https://youtu.be/k512iP06sXY?si=w4PZDBb3SPKcgubq ( முன் எச்சரிக்கை வாக்கு )
அப்பனே மனிதப் பிறவியை அப்பனே முதலில் நீக்குங்கள் அப்பனே!!!
அதற்காகத்தான் யாங்கள் வழியையும் காட்டிக் கொண்டிருக்கின்றோம்!!!! அப்பனே!!!!
அவ் வழியில் வந்தால் அப்பனே பிறவியும் நீங்கிவிடும் எதை என்றும் அறிய அறிய அனைத்தும் எங்களால் கொடுக்கப்படும் பொழுது உந்தனுக்கு!!.. உந்தனை யாரும் அசைக்க முடியாதப்பா!!!!!
சொல்லிவிட்டேன் அப்பனே!!!
எதையென்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய காலங்களில் அதாவது வரும் காலங்களில் துன்ப நிலைகள் தான் அப்பனே கிரகங்களால் அப்பனே பல பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!
""" யான் என்ன செப்புவது ?? அப்பனே!!!!!!
எதன் எதன் மூலமோ அழிவுகளும் வருமப்பா!!!!
எதை என்றும் அறியாமலே அதனால் பல பல விஷக்கிருமிகளும் தாக்குமப்பா மனிதனை!!!!
எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் வரும்பொழுது விஷக்கிருமிகள் உடம்பில் தங்கிவிடும் என்பேன் அப்பனே!!!!
ஆனால் அது எப்பொழுது பின் எவை என்று கூட செயல்படும் என்பதை கூட யாருக்கும் தெரியாது என்பேன் அப்பனே!!!
சிறிது நேரம் செயல்பட்டால் உடனே இறந்து விடுவான் மனிதன்!!!!
அப்படிப்பட்ட விஷகிருமிகள் எல்லாம் பின் வந்து கொண்டே இருக்கின்றது மனிதனை தாக்க !!!!!!.....
அப்பனே அதனால் எச்சரிக்கையாக இருங்கள்!!!அப்பனே!!!
அவை எவை என்று கூட தாக்கினாலும் அதை சரி செய்ய எவை என்றும் அறிய அறிய முடியாதப்பா மனிதனால்!!!!!
அதனால் அப்பனே இயற்கையை!!!! எதை என்று அறிய அறிய இயற்கையை விரும்புங்கள் அப்பனே!!!!
( குருநாதர் இந்த இடத்தில் இயற்கையை விரும்புங்கள் என்று சொல்வது என்னவென்றால் உணவுப் பழக்கம் முதல் அன்றாடம் நாம் வாழும் வாழ்க்கை முறையை முன்னோர்கள் எப்படி இயற்கையை பயன்படுத்தி வாழ்ந்தார்களோ அதே போல மனிதர்கள் இன்றைய காலகட்டத்தில் செயற்கையை கூடுமானவரை தவிர்த்து விட்டு இயற்கையை அனுசரித்து இயற்கை வழியாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை குருநாதர் தெளிவுபடுத்துகின்றார்)
யான் சொல்லிய ஔஷதங்களை( மூலிகை மருந்து) எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!
நன்றாகவே அனைத்தும் இருக்கும் அப்பனே!
எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய மூலிகை பற்றி கடைசியில் சொல்லப் போகின்றேன் அப்பனே!
அவ் மூலிகைகள் பார்த்தால் அப்பனே கண்களுக்கு தெரியும் அப்பனே எவை என்று கூட ஆன்மா எதை என்றும் அறிய அறிய பின் ஆன்மாக்கள் ஓடி ஒளிந்து திரிந்து கொண்டிருக்கின்றது அப்பனே!!!!
ஆனால் மனிதன் கண்களுக்கு மட்டும் தெரிவதில்லை அப்பனே எவை என்றும் அறிய அறிய அதாவது கோமாதாவிற்கு கூட அது தெரியும் அப்பனே அதாவது பைரவ வாகனங்களுக்கும் அது தெரியும்!!!
ஆனால் மனிதனுக்கு ஏன் தெரிவதில்லை?????
அப்பனே சிறிது யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!!
மனதில் எதையும் எண்ணாதே!!!
எது கிடைக்கின்றதோ அதை மென்று தின்று விட்டு எவை என்று அறிய அறிய அமைதியாக உட்கார்ந்து பார் அப்பனே!!!! இன்னும் ஞானங்கள் பொழியும் அப்பனே!!!!
அவ் மூலிகையை நிச்சயம் வரும் காலத்தில் உண்மையான பக்தனுக்கே யான் எடுத்துரைப்பேன் அப்பனே !!!
எவை என்றும் அறிய அறிய அதை அப்படி உண்ணும் பொழுது உங்கள் கண்களுக்கும் தெரியும் அவ் ஆன்மா அலைகின்றது போல்!!!!
வணக்கம் அகத்தியர் அடியவர்களே !!!!!
நம் குருநாதர் அகத்திய பெருமானின் காளகஸ்தி வாக்கில் புதுப்புது விஷக்கிருமிகள் மனிதர்களை வந்தடையும் மனிதர்களை தாக்கும்!!
இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள எச்சரிக்கையாக இருங்கள் யான் கூறிய மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள் இயற்கையை விரும்புங்கள் என்று கூறியிருந்தார்.
குருநாதர் தன்னுடைய ஜீவநாடி வாக்குகளில் மனிதர்கள் வாழும் முறையை தினமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கூறியதை இங்கே ஒரு தொகுப்பாக வெளியிடுகின்றோம் பயன்படுத்திக் கொள்க!!!!
மக்கள் அனைவரும் வாரம் ஒரு முறை எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாறு அருகம்புல் சாறு வில்வம் சாறு துளசி சாறு!!!! முருங்கை இலைகளை பச்சையாக சாறாகவோ அல்லது வேகவைத்து அதன் நீரை பருகி வர வேண்டும்.
வில்வ இலை துளசி இலை அருகம்புல் இவற்றுடன் நெல்லிக்காய் சாறு சேர்த்து அருந்தியும் வரலாம்.
அனுதினமும் திரிபலா திரிகடுகு சூரணம்.
நுரையீரல் பாதிப்பு அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள் துளசி இலையை நீரில் இட்டு அந்த நீரை குடித்து வர வேண்டும். வில்வ இலைகளையும் இவ்வாறு நீரில் இட்டு அருந்தி வரலாம்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்ய பேதி மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மாதம் ஒருமுறை கடுக்காய் எடுத்துக் கொள்ள வேண்டும் கோரைக்கிழங்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அனுதினமும் உணவில் பச்சையான கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும்.
ஆவாரம் பூவை அப்படியே பச்சையாக மென்று தின்ன வேண்டும். ஆவாரம் பூ பொடியாகவும் உண்ணலாம்.
வாழைப்பழம் தேங்காய் வெல்லம் இவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக முருங்கை இலை பொன்னாங்கண்ணிக் கீரை மணத்தக்காளி கீரை கரிசலாங்கண்ணி காசினிக்கீரை முடக்கத்தான் கீரை என தினமும் கீரை வகைகளை உட்கொள்ள வேண்டும்.
மாதுளம் பழச்சாறு அருந்த வேண்டும்.
உப்பு புளி காரம் குறைத்திடல் வேண்டும்.
சுக்கு மிளகு திப்பிலி சீரகம் இவற்றுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து பனங்கற்கண்டு அல்லது வெல்லம் இட்டு பொடியாக்கி வைத்துக் கொண்டு பாலில் அல்லது நீரில் கஷாயமாக அருந்தி வர வேண்டும் இவை சிறிதளவு குழந்தைகளுக்கும் கொடுத்து வர குழந்தைகளுக்கும் நோய்கள் நீங்கும்.
பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏலக்காய் கிராம்பு பச்சை கற்பூரம் இவற்றை சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
வேப்பிலை தளிர். கற்றாழை வாழைத்தண்டு இவற்றையும் உண்டு வரவேண்டும்.
சிறிது நடை பயிற்சி சாந்தி ஆசனம் பிராணாயாமம் தியானம் தினமும் 48 முறை தோப்புக்கரணம். என பயிற்சி முறைகளையும் தனது ஒவ்வொரு வாக்கிலும் கூறியிருக்கின்றார்.
இதை அனைவரும் கடைப்பிடித்து வர வேண்டும்!!!!!
குருநாதர் கூறிய மூலிகைகள் அதை மருந்தாக்கி அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் குருநாதர் உடைய உபதேசப்படி அவருடைய ஆசிகளுடன் மருந்தினை தயாரித்து அடியவர்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றார் திரு தனக்குமார் அவர்கள்.
இந்த மருந்துகள் கடையில் எங்கும் கிடைக்காது!!!
ஏற்கனவே திரிபலா திரிகடுகு மற்றும் இந்த 32 மூலிகை கலவைகளான இந்த மருந்தினையும் அடியவர்களுக்கு வழங்கி வருகின்றார் அதனால் அடியவர்கள் இவரை தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்
அவருடைய தொடர்பு எண் திரு தனக்குமார் ஐயா 9566825599....
அந்த மருந்து குறித்து குருநாதர் தந்த வாக்கினையும் இதோடு இணைக்கின்றோம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஜீவநாடி பொதுவாக்கு !
குருநாதர் அகத்தியபெருமான் அகத்தியர் உரைத்த மூலிகைகள் :
1. எலுமிச்சை தோல் (அல்லது பாெடி)
2. சோம்பு
3. கிராம்பு
4. பட்டை
5. சுக்கு
6. மிளகு
7. ஏலக்காய்
8. அதிமதுரம்
9. சித்தரத்தை
10. ஆடாதொடை
11. துளசி
12. மஞ்சள்
13. கடுக்காய்
14. இஞ்சி
15. கரிசலாங்கண்ணி
16. பொன்னாங்கண்ணி
17. மணத்தக்காளி
18. கோரைக்கிழங்கு
19. நித்யகல்யாணி
20. ஆவாரம் பூ (அல்லது பொடி)
21. குறுமிளகு
22. கருஞ்சீரகம்
23. செம்பருத்தி பூ
24. அவுரி இலை
25. வெற்றிலை
26. தூதுவளை
27. கற்பூரவல்லி
28. நெல்லிக்காய் பொடி
29. காசினி பொடி
30. வேம்பு பூ (வேப்பம் பூ)
அப்பனே புதிய புதிய வியாதிகள் மனிதர்களுக்கு தெரியாத அளவில் உடலில் தாக்கி அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.
புதிய புதிய கிருமிகள் உருவாகும்.
மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் ஏற்படும்.
இவற்றில் இருந்து காக்க மேற்கூறிய அனைத்தையும் சேகரித்து பொடியாக்கி, தேனில் கலந்து, லேகியம் போல செய்து காலை மாலை உட்கொண்டு வாருங்கள் நலமாகும்.
மேற்கண்ட வாக்கு அகத்திய பெருமான் உரைத்தது.
*அகத்திய மாமுனிவர் திருவடிகள் பாேற்றி!
அகத்தியரின் சீடரும் பாஷானங்கள் மூலிகைகளின் சித்தனான போகரும் மனிதர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகைகளை வாக்குகளை தந்திருந்தார்!!!
இன்னும் போகர் சித்த பெருமானும் அவருடைய பங்கிற்கு மனிதர்கள் வரும் புது புது வியாதிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள மூலிகை மருந்துகளை தனது வாக்கில் கூறியிருந்தார் அவர் கூறிய மூலிகை மருந்துகள்
ஒரு முக்கியமான விஷயம் குருநாதர் அகத்தியர் பெருமானும் போகர் சித்தரும் உரைத்த மருந்துகள் புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே அவர்களை போய் சேரும் அதற்கான தகுதிகளை அவர்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வேண்டும் எந்த ஒரு உயிரையும் வதைத்து உண்ணுதல் கூடாது அசைவ உணவுகளை தவிர்த்திட வேண்டும் என்று வாக்குகளில் கூறி இருக்கின்றார்கள் அதனால் இதனை முழுமையாக ஏற்று கடைப்பிடித்து வர வேண்டும்.
ஒருபுறம் குருநாதர் கூறிய மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பொழுது மறுபுறம் உயிரைக் கொண்டு சமைத்து சாப்பிடும் கர்மத்தினால் நோய்கள் அதிகரிக்குமே தவிர குறையாது இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்!!!
போகர் பெருமான் வாக்கு
இன்னும் வரும் காலங்களில் பலவிதமான நோய்கள் வரும் என்ன விதமான நோய் என்று தெரியாமலே போகும் அதற்கு போகன் ஆகிய மருந்துகள் உரைக்கின்றேன்.
அதன் பயன்படுத்தி நோயின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
- கீழாநெல்லி
- அக்கரகாரம்
- மாசிக்காய்
- ஜாதிபத்திரி
இவற்றை நெய்யில் இட்டு ஐந்து கடுகளவு தினமும் உண்ண வேண்டும்.
- மலை நெருஞ்சி இலை
- முருங்கை இலை
- துளசி இலை
- புதினா இலை
- கறிவேப்பிலை
- காட்டுக் கொடித்தோடை
- குப்பைமேனி இலை
- கண்டங்கத்திரி இலை
- வில்வ இலை
இவற்றை இடித்து பொடித்து பனை வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வேண்டும்.
வாரம் ஒருமுறை மிளகு வெள்ளைப்பூண்டு உண்ண வேண்டும்.
இன்னும் ஏராளமான மூலிகைகளை என்னால் உரைக்க முடியும் அவற்றைப் பயன்படுத்த குருமந்திரம் தேவை ஆனால் அந்த குரு மந்திரம் சொல்லி விட்டால் மனிதன் அதை பயன்படுத்தி காசு ஈட்டுவான்.
பொருள் சம்பாதிப்பதற்கு இதனை தவறான வழியில் பயன்படுத்துவான்.
இதனை தயார் செய்து வைத்திருந்தால் அவருக்கு குரு மந்திரம் தந்து உபதேசம் செய்வேன்.
இப்பொழுது குரு மந்திரம் கூறி விட்டால் அதனை பயன்படுத்தி மனிதன் காசாக்குவான்.
இவற்றை நல்ல முறையில் அகத்தியர் பக்தர்கள் தயாரித்தால் அவர்களுக்கு குரு மந்திரம் உபதேசம் செய்வேன். இந்த மருந்துகளை சேகரித்து பயன்படுத்துவதற்கும் குருவின் திருவருள் தேவை குருவின் அருள் இல்லாமல் இதனை செய்ய முடியாது நல் முறையாக செய்பவர்களுக்கு என்னுடைய குரு மந்திர உபதேசம் கொடுப்பேன்.
மனிதர்களை நீங்கள் நேர்வழியில் நடப்பதுதான் உங்களுக்கு பலன் தரும் . மாயையில் சிக்கி தவறு மேல் தவறு செய்யும் மனிதர்களுக்கு இனிவரும் காலம் கஷ்ட காலம் தான்.
மீண்டும் வந்து சில மூலிகைகளை உரைக்கின்றேன்.
என்று வாக்குகள் தந்திருந்தார்.
இதனால் வரும் அவர்கள் உயிர் வாழ பரிந்துரைத்த மூலிகைகளை எடுத்துக்கொண்டு நல் பக்தியும் நல் புண்ணியங்களும் செய்து ஜீவகாருண்யத்தை கடைபிடித்து அவர்கள் அருளால் நம்மை காப்பாற்றிக் கொள்வோம்!!!!
குருநாதர் கூறிய மூலிகைகள் அதை மருந்தாக்கி அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் குருநாதர் உடைய உபதேசப்படி அவருடைய ஆசிகளுடன் மருந்தினை தயாரித்து அடியவர்களுக்கு வழங்கிக் கொண்டு வருகின்றார் திரு தனக்குமார் அவர்கள்.
இந்த மருந்துகள் கடையில் எங்கும் கிடைக்காது!!!
ஏற்கனவே திரிபலா திரிகடுகு மற்றும் இந்த 32 மூலிகை கலவைகளான இந்த மருந்தினையும் அடியவர்களுக்கு வழங்கி வருகின்றார் அதனால் அடியவர்கள் இவரை தொடர்பு கொண்டு மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த மருந்துகளை பயன்படுத்தி ஏராளமான அடியவர்களுடைய நோய்கள் தீர்ந்து உள்ளது குருநாதருடைய அனுகிரகம் இருந்தால் மட்டுமே இந்த மருந்து அவர்களை போய் சேரும் இதை தன்னுடைய வாக்கிலும் குருநாதர் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய தொடர்பு எண் திரு தனக்குமார் ஐயா ஈரோடு.
தொடர்பு எண் :9566825599.
குருநாதர் அகத்திய பெருமான் மூலிகை மருந்துகளை அதிகாலையில் அதாவது வெறும் வயிற்றில் காலை நேரத்தில் எடுத்துக் கொள்வது முழுமையான பலனை தரும் என்று கூறி இருக்கின்றார் அதன்படி எந்த ஒரு மூலிகை மருந்தாயினும் சரி காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சாலச் சிறந்தது நன்றி.
============================
நல் முறையாக எவ்வாறு என்பதையும் கூட வரும் காலங்களில் அப்பனை நல் முறையாக இயற்கையான உணவுகளை உட்கொள்ளுங்கள் அப்பனே அதிகமாக.
அப்பனே நல் முறையாக நிச்சயம் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே நல் முறையாக எங்கள் மூலிகையான கடுக்காயை நிச்சயம் மறக்காதீர்கள் அப்பனே. ஒரு மாதத்திற்கு ஐந்து முறையாவது உட்கொள்ளுங்கள்
அப்பனே நல் முறையாக அடிக்கடி கிராம்பையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் அப்பனே.
அப்பனை நல் முறையாக இதனைத்தான் யான் சொல்லிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றேன் நல்ல முறையாக திரிபலா திரிகடுகம் மூலிகைகளை மறக்காமல் நிச்சயம் எடுத்து வாருங்கள். இவற்றில் உள்ளவை எதையும் உங்களை தாக்க விடாது என்பேன்.
நல் முறைகளாக எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலை பெற்று இவற்றையும் கூட முருங்கை எனும் நல் மூலிகையை நிமித்தம் காட்டி நல் மூலிகைகளான பொன்னாங்கண்ணி மூலிகை மணத்தக்காளி எனும் மூலிகையையும் பின் பின் எவ்வாறு என்பதையும் கூட ஆவாரம்பூ நல் முறைகளாக எடுத்துக்கொள்ள அது விரைவிலேயே மாற்றங்கள் வரும் என்பேன்.
===============================
அப்பன்களே நல் முறையாக வாழுங்கள்!இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் திரும்ப திரும்ப அதையே தான் கூறிக் கொண்டு வந்திருக்கின்றேன்.
நல் முறையாக திரிபலா, திரிகடுகு சூரணம், தினமும் அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதைத் திரும்பத் திரும்ப உரைத்துக்கொண்டே வந்திருக்கின்றேன் நிச்சயம் என் பக்தர்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன்.
================================
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment