“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, January 25, 2024

சித்தர்கள் ஆட்சி - 316 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “பொது வாக்கு - தை அம்மாவாசை முன்னோர்கள் வழிபாடு”

 




“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


24/1/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு


ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!


அப்பனே நலன்கள் நலன்களாக!!! இன்னும் எம்முடைய ஆசிகள்!!!!

அப்பனே எவை என்று கூற யான் ஏற்கனவே உரைத்திட்டேன்!!!! அப்பனே மனிதன் இக்கலியுகத்தில் வாழத் தெரியாமல் வாழ்ந்து கஷ்டங்கள் பட்டு பட்டு எதற்காக பிறந்தோம் எதற்காக இக்கஷ்டங்கள் என்பதை உணராமலே அப்பனே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!!!அப்பனே


அப்பனே இவையன்றி கூட சித்தர்கள் யாங்கள் ஒவ்வொரு வாக்கியத்திலும் அப்பனே எப்படி எல்லாம் வாழ்ந்தால் இத் துன்பங்கள் நீங்கி கலியுகத்தில் வாழ முடியும் என்பதை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே வருகின்றோம் அப்பனே!!! அறிந்தும் அறிந்தும்!!!


ஆனால் அப்பனே மனிதன் இவை தன் உணராமல் தன் நலத்திற்காகவே வாழ்ந்து துன்பத்தில் சிக்கி தவிக்கின்றான்!!!!அப்பனே


அப்பனே யான் ஏற்கனவே உரைத்திட்டேன்!!!!! இவ் ஆன்மா என்பதே அணுக்கள் அப்பா!!!!


புரட்டாசி திங்களில் மேலிருந்து விழும் ஆத்மாக்கள் (முன்னோர்கள்) அதாவது  அணுக்கள் விழும்.

அதனை காந்தகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இறைவனிடத்தில் ஒட்ட வைக்க வேண்டும்.

அப்பனே மேலிருந்து விழும் அணுக்களானது ஐப்பசி திங்களில் புனித நதிகளில் நீராடி  அப்பனே இவ்வாறு நீராடும் பொழுது இவ் அணுக்கள் எல்லாம் மீண்டும் மேலே செல்லுமப்பா!!!!!

கார்த்திகை திங்களில் அப்பனே கந்தனவன் மீண்டும் ஆன்மாக்களை அதாவது அப்பனே முக்தி பெறாமல் எவை என்று கூற பல்வேறு ஆசைகளோடு அலையும் ஆன்மாக்களை அப்பனே செவ்வாய் கிரகத்திலிருந்து கந்தன் மேலே அனுப்பி வைப்பான்.

அப்பனே ஆனாலும் மார்கழி திங்களில் இவ்ஆன்மாக்களுக்கு ஒரு தீர்ப்பு வருமப்பா!!! 

இங்கே ஆன்மாக்களை அணுக்கள் என்றே யான் குறிப்பிடுவேன் அப்பனே!!!

இவ் ஆன்மாக்களுக்கு அப்பனே அதாவது அணுக்களுக்கு முக்தி கிடைக்குமா?? மோட்ச கதி உண்டா ??என்பதை எல்லாம் அப்பனே.

அவ் ஆன்மாக்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்பவே தீர்ப்புகள் கிடைக்கும் என்பேன் அப்பனே!!!

அப்பனே ஆனாலும் எவ் ஆத்மாக்கள் புண்ணியம் செய்து இருக்கின்றதோ அவையெல்லாம் அப்பனே மீண்டும் மேலே காந்தகத்தில் ஒட்டிக் கொள்ளும்  அப்பா!!!!

அப்பனே எதையென்று கூற அப்பனே புண்ணியம் இல்லாத ஆத்மாக்கள் மீண்டும் கீழே வந்து அலைந்து திரியுமப்பா!!!!!

அவ் ஆன்மாக்கள் எல்லாம் அப்பனே ஐயோ !! ஐயோ !! என்றெல்லாம் அப்பனே தம்தன் உறவுகள் சொந்த பந்தங்கள் எங்கே என்றெல்லாம் அலைந்து திரியுமப்பா நிம்மதி இல்லாமல் இருக்குமப்பா!!!!

அப்பனே அதாவது ஆன்மாக்களை அப்பனே அணுக்களை ஒரு பிண்டமாகவே பிடித்து இறைவனிடத்தில் சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!

(இதை பற்றி நம் குருநாதர் அகத்திய பெருமான் மானசா தேவி ஆலய வாக்கில் தெளிவாக கூறியிருக்கின்றார்..சித்தன் அருள் 1533)


இவ் தை திங்களில்   இவ் அணுக்களை எல்லாம் அதாவது இவ் ஆன்மாக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது, அவைகளை ஒன்றிணைத்து ஒரு பிண்டம் போலவே செய்து அப்பனே நல்விதமாகவே செய்திடல் வேண்டும் என்பேன்.

இவ் ஆன்மாக்கள் ராமேஸ்வரம் காசி கயா அப்பனே இன்னும் இன்னும் அப்பனே நதிக்கரைகளில் எல்லாம் அப்பனே அமைதியின்றி அலைந்து திரிந்து கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் அப்பனே!!!!


இவ் மாதத்தில் வரும் அப்பனே தை அமாவாசை என்கின்றார்களே அப்பனே இவ் நாட்கள் வரை அப்பனே அனைவரும் இவ் இடங்களுக்கெல்லாம். சென்று அப்பனே இவையன்றி கூட அப்பனே தம் தன் முன்னோர்களை நினைத்து எள் கலந்த சோற்றினை அப்பனே பிண்டமாக வைத்து அப்பனே அவர்களை வணங்கி முன்னோர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே!!!


அப்படி செய்தால் தான் அப்பனே ஆன்மாக்களும் மேலே சென்று முக்தியை பெறுமப்பா!!!!

இதை அனைவரும் நிச்சயம் செய்ய  வேண்டும் என்பேன் அப்பனே!!!!

அப்பனே அங்கு செல்ல இயலாதவர்கள் தாம் தன் வசிக்கும் அருகில் அப்பனே இருக்கும் நதிக்கரை ஓரங்களில் திருத்தலங்களில் எல்லாம் அப்பனே சென்று முன்னோர்களை நினைத்து ஆன்மாக்களை அப்பனே இறைவனிடத்தில் வேண்டிக்கொண்டு நல்விதமாக ஒரு  லட்டு  போல் அப்பனே( எள் கலந்த சோறு உருண்டை) இவ்வாறு செய்கின்ற பொழுது அப்பனே ஆன்மாக்களும் முக்தியை நோக்கி செல்லும் அப்பா!!!

இவ்வாறு செய்துகொண்டு அப்பனே முடிந்தவரை இயலாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் அன்னத்தை ஈய வேண்டும் என்பேன் அப்பனே!!! இதனை செய்து விட்டு அப்பனே அமைதியாக உட்கார்ந்து இறைவனை நினைத்துக் கொண்டு!!!! இறைவா !! எம் முன்னோர்களுக்கு நல்விதமாக முக்தியையும் மோட்சத்தையும் கொடு என்றெல்லாம் வேண்டிக்கொண்டு அப்பனே !!!! 


இவ்வாறு செய்யாவிடில் அப்பனே அவ் ஆன்மாக்கள் எல்லாம்!!!!.....??

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!

மனிதனுக்கு ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்றெல்லாம் அப்பனே யோசிப்பதே இல்லை அப்பனே

இவ்வாறு ஆன்மாக்கள் அலைந்து திரிந்து கஷ்டங்கள் பட்டுப்பட்டு வருத்தத்துடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தால் அப்பனே அவர்களுடைய சந்ததிகளுக்கும் பெரும் கஷ்டங்கள் வரும் அப்பா!!!! இவையெல்லாம் மனிதர்களுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே இவ் கஷ்டங்களை எல்லாம் அப்பனே மனிதனுக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் அப்பனே யான் கூறியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே.


அவ் ஆன்மாக்கள் எல்லாம் வருத்தங்களோடு அலைந்து திரிந்து கொண்டிருந்தால் மனிதர்களுக்கு குடும்பத்தில் கஷ்டம் இல்லத்தில் சண்டை சச்சரவுகள் இல்ல தாளுடன் மன வேறுபாடு பிள்ளைகளுடன் அப்பனே மனக்குழப்பங்கள் இவையெல்லாம் வந்து கொண்டே இருக்கும் அப்பா!!!!

இவ் ஆன்மாக்களுக்கு நல்முறையாக இவ் தைத்திங்களிலே இவ்வாறு வணங்கி வழிபட்டாலே அவை தன் மகிழ்ந்து வாழ்த்தி விட்டு செல்லுமப்பா இதனால் அப்பனே கஷ்டங்கள் குறையுமப்பா!!!!!

அப்பனே ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே அவ்ஆன்மாக்கள் வருத்தப்பட்டால் அப்பனே அப்பொழுது உங்கள்  வாழ்க்கையிலும் வருத்தங்கள் வரும் அப்பா!!!!

ஆன்மாக்களை சமநிலைப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே அவ் ஆன்மாக்கள் எல்லாம் மீண்டும் இறைவனிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

இல்லை என்றால் அப்பனே பெருமளவு கஷ்டங்கள் வரும் அப்பனே!!!!!

இதை என் பக்தர்கள் அனைவரும் வரும் நாட்களில் நிச்சயம் செய்து கொண்டு வர வேண்டும் அப்பனே!!!

யாங்கள் கூறியதை நீங்கள் கேட்டு உணர்ந்து அப்பனே செய்து கொண்டு வந்தால் தான் அப்பனே யாங்களும் உங்களுக்கு வாக்குகள் தர முடியும் அப்பனே!! உங்களை கஷ்டங்களிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே மீண்டும் கூறுகின்றேன் அப்பனே இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே அப்படி செய்தால் தான் என்னுடைய வாக்குகளும் கிட்டும் அப்பனே என்னால் மாற்றத்தையும் தர முடியும் என்பேன் அப்பனே!!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!!!


இதை அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டும் அப்பனே!!!!

அமாவாசை வரை நிச்சயம் இதை அனைவரும் செய்திட வேண்டும் அப்பனே அமாவாசைக்கு பிறகு தான் அப்பனே எந்தன் வாக்குகள் அனைவருக்கும் கிட்டும் என்பேன் அப்பனே

சித்தர்கள் யாங்கள் மனிதர்களை திருத்தி நல்வழிப்படுத்தி இக்கலியுகத்தில் கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவதற்கு அப்பனே பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே!!!

யாங்கள் திருத்துவோம் அப்பனே அப்படி மனிதன் கேட்காவிடில் அடித்து திருத்துவோம் அப்பனே!!!

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள் அப்பனே!!!!!

(வணக்கம் அகத்தியர் அடியவர்களே குருநாதர் அகத்திய பெருமான் இன்றிலிருந்து அடியவர்கள் அனைவரும் அவரவர் முன்னோர்களை நினைத்து இந்த தை மாதத்தில் அமாவாசை வரையிலான நாட்கள் வரை... ஆற்றங்கரையில் இருக்கும் இந்த திருத்தலங்களில் அதாவது தாமிரபரணி காவேரி வைகை கங்கை நர்மதா தபதி என புனித நதிகள் ஓடும் திருத்தலங்களில்.... அதாவது காசி ராமேஸ்வரம் கூடுதுறை பவானி திருச்சி திருநெல்வேலி என அவரவர் இருக்கும் இடங்களுக்கு அருகே இருக்கும் கோயில்கள் படித்துறைகளில் சென்று முன்னோர்களுக்கு அவர்கள் ஆத்மா முக்தியை பெற பித்ரு தர்ப்பணங்கள் செய்து இறைவனை நினைத்து வேண்டிக்கொண்டு இயலாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் தொடர்ந்து அன்னதானம் இவை எல்லாம் செய்து வர வேண்டும் என்று கூறி இருக்கின்றார் அதன் பிறகு குருநாதர் அயோத்தியில் வாக்குகள் உரைப்பேன் என்று கூறி இருக்கின்றார் அதுவரை அடியவர்கள் அனைவரும் இதை கடைபிடித்து வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment