“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, January 18, 2024

சித்தர்கள் ஆட்சி - 306 : அகத்திய பிரம்ம ரிஷி வழியில் முதல் தரப் புண்ணியம் எப்படிச் செய்ய வேண்டும்?


 


👆👆👆👆👆👆👆👆

“அனைத்தும் இறைவா!!!!! நீ”

*அகத்திய பிரம்ம ரிஷி பாதம் காப்பு*


குரு வார அன்ன சேவைப் பதிவு 18-1-2024 வியாழக்கிழமை


மதுரை பசுமலையில் அருள் அமுதம் பொழியும் ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி ஆலயத்தில் வியாழக்கிழமை குரு வார அன்ன சேவை மதுரை ஶ்ரீ அகஸ்தியர் இறையருள் மன்றத்தின் மூலம் இன்று திருவாசகம் சிவபுராணம் பாடல் படித்து அடியவர்களுக்கு வாழும் வழிகள் சொல்லி முதல் தரப் புண்ணியத்துடன் இனிதே நிறைவேறியது.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:-

(1) அன்னதானம் +

(2) திருவாசகம் சிவபுராணம் +

(3) மக்களுக்கு வாழ நல் வழி சொல்லுதல்.

(இந்த 3ஆம் செய்திதான் உயர்தரப் புண்ணியம் பெற்றுத்தரும் என்பதை நன்கு உணரவும். இப்படித்தான் இறைவன் எழுதி வைத்து உள்ளார் என்பதை உணரவும்)

இப்படிச் செய்தால் மட்டுமே , மீண்டும் சொல்கின்றோம், இப்படிச் செய்தால் மட்டுமே , மீண்டும் மீண்டும் சொல்கின்றோம் இப்படிச் செய்தால் மட்டுமே , 

முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

ஓவ்வொரு குருவாரம் வியாழக்கிழமை அன்று மதுரை பசுமலையில் அமைந்துள்ள அகத்திய பிரம்ம ரிஷி ஆலயத்தில் அன்ன சேவை மாலை 6:30 மணிக்கு நடை பெற உள்ளது. இந்த அன்ன சேவையை செய்ய விரும்புவர்கள் மதுரை ஸ்ரீ அகத்தியர் இறையருள் மன்றத்தைத்   தொடர்பு கொள்ள வேண்டும்.

Mobile:- +91-9842170513


உங்கள் பார்வைக்கு இன்றைய அன்ன சேவை தொகுப்பு. 👇





👆 அகத்திய பிரம்ம ரிஷி காட்டிய வழியில் இன்று திருவாசகம் சிவபுராணம் பாடலுடன் அன்ன சேவை.



👆 அகத்திய பிரம்ம ரிஷி வழியில் முதல் தர புண்ணியம். அன்ன சேவை செய்யும் பொழது மக்களுக்கு நல்வழி காட்டிச் சொல்லுதல். 


👉அசைவம் தவிர்கவும். 

👉வாயில்லா ஜீவராசிகளுக்கு தினம் சேவை செய்.

👉பிற உயிருக்கு நன்மை செய்யுங்கள். 

👉இறைவனை சரண் புகு. 

👉மந்திரம் சொல். ( சிவாய நம)


இந்த அன்ன சேவைக்குக் கொடை அளித்து முதல் தரப் புண்ணியம் பெற்ற நல் உள்ளங்கள், அவர்கள் இல்லத்தவர்கள், அவர்களின் குலம் தழைத்து ஓங்கி ஓங்கி வானுயர்ந்து

வாழ்க வளமுடன்! 

வாழ்க வளமுடன் !! 

வாழ்க வளமுடன்!!!

இதுபோல் மேலும் மேலும் உயர் தரப் புண்ணியம் செய்ய அவர்களை வேண்டுகின்றோம்!!!!!!!!!


இந்த உயர் தர முதல் வகைப் புண்ணியம் தரும் அன்ன சேவையில் ஈடுபட்ட அகத்திய பிரம்ம ரிஷி அடியவர்கள் , அன்னம் தயாரிக்க உதவிய அன்பர்கள், உணவுப் பொருள்கள் வழங்கிய அன்பர்கள் அவர்கள் குலம்

வாழ்க வளமுடன்! 

வாழ்க வளமுடன் !! 

வாழ்க வளமுடன்!!!


நீங்கள் செய்யும் தர்மம் / புண்ணியம் 

குறித்த உங்களை ஊக்குவிக்கும் நல் வாக்குகள்:- 


இறைக்கின்ற கிணறே சுரக்கும். கொடுக்கின்ற வாழ்வே சிறக்கும். 

 மகிழ்வித்து மகிழ். 

குருநாதர் அகத்தீசன் வாக்குகள்:- 


  • இன்பத்திலும் தாழ்வான மனது இல்லாமல் நல்ல எண்ணங்களுடன் புண்ணியங்களை செய்தால் துன்பக் காலத்தில் இன்பமாகவே மாறிவிடும். 


  • எங்களிடத்தில் வருபவர்களை அப்பனே புண்ணியங்கள் செய்ய வைப்போம். அவ்புண்ணியத்தின் மூலம் அப்பனே வாழ்க்கையை கடந்து கடந்து மேன்மையான நிலைகளைபெறுவீர்கள்.


  • புண்ணியம் தான் வாழ்க்கையை பாதுகாக்கும் என்பேன்.


  • புண்ணியத்தை சேர்த்துக் கொண்டால் இறைவனாலயே ஒன்றும் செய்ய இயலாது.


  • உண்மையான பக்தியும் அன்பும் தான தர்மங்களும் புண்ணியங்களும் செய்துகொண்டிருந்தால்அவர்கள் இறைவனை தேடி எங்களைத் தேடி வர அவசியமில்லை யாங்களே அவர்களைத் தேடிச்செல்வோம்.


  • நீங்கள் நேர்மையான வழியில் நடந்து கொண்டு புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டால் அவ்புண்ணியத்தை யாராலும் (இறைவனால் கூட ) தடுக்க முடியாது


  • மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின்தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலைவகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே. 


பிருகு மஹரிஷி வாக்கு:- 


என் மகள் லட்சுமியின் அருள் இருந்தால் மட்டும் போதுமானது நீங்கள் பணத்தைத் தேடி தேடி ஓடிஓடி போக தேவையில்லை. வரும் என்பேன் உங்களை தேடி.அதுவும் பல புண்ணியங்கள் செய்திருக்க வேண்டும் இங்கு வருவதற்கும்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


No comments:

Post a Comment