“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அயோத்தியில், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு அமைகிற கோவில், 22.01.2024, திங்கட்கிழமை மதியம் பிராணாப் பிரதிஷ்டை நம் பாரத பிரதமர், ராம பக்தர்கள் முன்னிலையில் நடை பெற உள்ளது.
அகத்திய பெருமானிடம் அவர் அடியவர்கள் அன்று என்ன செய்ய வேண்டும் என நாடியில் கேட்ட பொழுது, அவர் தந்த உத்தரவை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்!
- ராமர் மிகுந்த விருப்பத்தின் பேரில், அங்கு சென்று அமர்கிறார்.
- சித்தர்களின் விருப்பமும் அது தான்.
- நவகிரகங்களின் ஆட்டத்தை அடக்க அவர் தீர்மானித்துள்ளார். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள், மற்றவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது அவர் எண்ணம்.
- ராமரின் இந்த எண்ணத்தால் ஆஞ்சநேயருக்கு மிகுந்த சந்தோஷமாம்.
- முகூர்த்த வேளைக்கு முன் ஒவ்வொரு அடியவர் வீட்டினுள்ளும் பஞ்ச தீபம்/பஞ்ச முக தீபம் ஏற்றவும். நாம் ஏற்றுகிற அக்னியானது, அயோத்தியில் எழுப்பப்படும், அக்னிஹோத்திரத்தில்/ஹோமத்தில் கலந்து பாரத தேசாத்திற்கு மிகுந்த சக்தியை உருவாக்கி பாதுகாக்கும்.
- அந்த முகூர்த்த நேரத்தில், குறைந்தது 108 முறையேனும் ராம நாமத்தை ஜெபிக்கவும்.
- அன்று மாலை அஸ்தமனத்துக்கு முன் வீட்டின் வெளியே, அதே போல் ஐந்து முக/ஐந்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். (கார்த்திகைக்கு விளக்கேற்றுவது போல்).
- அன்றைய தினம் முடிந்த வரை இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து, குழந்தைகளுக்கு, இனிப்பு கொடுக்க வேண்டும்.
- தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு அன்னம் அளிக்க வேண்டும்.
- அடியவர்கள் செய்கிற அனைத்து நல்ல விஷயங்களையும் (விளக்கேற்றுவது, அன்னம் பாலிப்பது போன்றவை) ராமர் அயோத்தியில் அமர்ந்து கொண்டு கவனித்து, அனைவரையும் ஆசீர்வதிப்பார்.
- தாங்கள் யார் என்று உணர்ந்தும், ராமரும் சீதையும், தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்களை அதன் படியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்து சென்றது, மனித குலத்துக்கே பல உயர்ந்த விஷயங்களை உணர்த்தினார்கள்.
- பாரத கண்டத்தில் 500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட காயத்தை, வருத்தத்தை யாங்கள் இறையிடம் வேண்டி மாற்றச் சொல்லி, அதன் படியே அவரும் அருள, அந்த புதிய வரலாற்றில், எம் சேய்களுக்கு, இருக்கும் இடத்திலிருந்து பங்கு பெறும் வாய்ப்பை யாங்களே உருவாக்கியுள்ளோம். வாய்ப்பை கை பற்றி கொள்க.
- சுந்தர காண்டத்தை தினமும் ஓதி வருக!
ஆசிகள்!, ஆசிகள்!, ஆசிகள்!
அனைவரும், அகத்தியப்பெருமானின் உத்தரவை உணர்ந்து, அன்றைய தினம் செயல் பட்டு, ராமபிரான், தாய் சீதையின் கனிவான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment