“அனைத்தும் இறைவா நீ”
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 26 )
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/11/229-5-9-2023-25.html?m=0
குருநாதர்:- அப்பனே இதனால்தான் அப்பா வந்தது வினை அப்பனே. அதனால் சில காரியங்கள் கூட செய்தாய் என்பேன் அப்பனே விதியில் இல்லாத்தைக் கூட அப்பனே எவை என்று புரியாமல் கூட பிற ___________( சில தனிப்பட்ட கர்மாக்கள் எடுத்து உரைத்தார்கள் ) என்ன லாபம் அப்பனே.
அப்பனே அதை வைத்துக்கொண்டு எதை எதையோ ஆனாலும் அப்பனே பொறுத்து இருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே விதியைக் கூட அப்பனே பின் உன்னை ஆட்கொண்டானே ( ஏசுநாதன் ) அவனே அப்படியே விட்டுவிடுவான் பொறுத்தாக வேண்டும் நீ. ஆனாலும் எதற்கும் பயப்பட தேவையில்லை. நன்முறைகளாகவே பயம் என்பது உன் உள்ளத்தில் அப்பனே பயம் , தவறு செய்துவிட்டோமே என்று அனைவருக்குமே அப்படித்தான் பயம் அதனால் அப்பனே அழகாகவே அப்பனே உந்தனை பின் பக்குவப்படுத்தும் திறன் ஏசுநாதன் அவன் கைகளிலே இருக்கின்றது.
அடியவர்:- நான் அகத்தியர்….
குருநாதர்:- அப்பனே இது நாள் வரை அதாவது இதுவரை அப்பனே என்ன நீ எதைப் பிடித்தாலும் அப்பனே சரியாக புடி. அப்பனே பின் அதாவது உண்மையாக வாழ். அப்பனே அனைத்து தெய்வங்களும் ஒன்றி வரும். ஆனாலும் தெய்வங்களும் கூட ஏற்கனவே அப்பனை ஒன்றே குலம் ஒருவனே தேவன் இவையெல்லாம் யான் எடுத்துரைக்கின்றன். அதனால் அப்பனே பின் கருணை உள்ளவனாக , எதற்கும் ( யாருக்கும், எந்த ஒரு ஜீவராசிகளுக்கும் ) தீங்கு செய்யாதவனாக , நன்மை ( மட்டுமே ) மற்றவர்களுக்கு ( செய்பவனாக ) அப்னே இவ்வாறாக இருந்தாலே அப்பனே நீ எதனை ( எந்த தெய்வத்தை ) வணங்கினாலும் அப்பனே குற்றங்கள் இல்லை.
( இந்த வாக்கு மதங்களை கடந்த சித்த வாக்கு என்பதை உள் வாங்கவும் )
அடியவர்:- அந்த வேலை செய்ய பிடிக்கவில்லை…
குருநாதர்- அப்பனே இப்பொழுதுதான் சொன்னேன் அப்பனே பின் ( ஏசுநாதன் உன்னை ) ஆட்கொண்டு, அப்பனே உன் பாதையில் நீ செல் பார்த்துக்கொள்வோம்.
அடியவர்:- சரிங்க ஐயா. இப்ப சும்மா தியானத்தில் உட்கார்ந்தோம்னா ஏதோ சம்திங்…
குருநாதர்:- அப்பனே தியானத்தில் எப்படி உட்கார வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பது எல்லாம் தெரியாமல் செய்தாலும் கூட அது தியானமே இல்லையப்பா. இது நாள் வரை நீ செய்தது தியானமே இல்லையப்பா.
அடியவர்:- ( தியானத்தில்) சில எண்ணங்கள் மாறி வருது….
குருநாதர்:- அப்பனே எண்ணங்கள் எதனால் வருகிறது?. இதனால் நிச்சயம் அப்பனே இன்னும் இன்னும் உன்னுடைய விதி கூட இறைவன் சோதித்தது. ஆனாலும் எவை பின் எவை பின் வருவதாக இருந்தாலும் ஆனாலும் அளவுக்கு தகுந்தாற்போல் சில வழிகள் நீ பொறுத்தே ஆக வேண்டும் அப்பனே மாற்றம் அடையும்.
நாடி அருளாளர்:- கொஞ்சம் பொறுத்து இருங்க ஐயா. தானாகவே மாற்றம் வரும்.
அடியவர்:- இல்ல என்ன சொல்ரது, (இங்கு) guidance பன்றேன்னு சொன்னாங்க வர்ரேனாங்க..
குருநாதர்:- அப்பனே இவனை ( இந்ந நாடி கேட்க இங்கு ) அழைத்தவன் யார்? இவன் தனக்கு சொன்னவன் யார்? வரச்சொல்.
நாடி அருளாளர்:- ( இந்த அடியவரை அழைத்த அடியவரை அகத்தியப்பெருமான் பாதத்தின் ( நாடியின் ) முன்வர அழைத்து அமரச்சொன்னார்கள். அதன்பின்….)
குருநாதர்:- அப்பனே இது நாள் வரை யான் பல கருத்துக்களை இவன்தனக்கு அதாவது அனைவருக்குமே சொல்லி இருக்கின்றேன். அதை இவன் இடத்தில் சொன்னாயா இல்லையா? நீ.
அடியவர் :- சொன்னோம் ஐயா.
குருநாதர்:- அப்பனே நீயே கேளு அவன் இடத்தில் அதை எல்லாம் ஏன் பின்பற்ற வில்லை என்று?
அழைத்து வந்த அடியவர்:- ( கேள்வி கேட்டார் )
குருநாதர்:- அதனால் அப்பனே சில மனிதர்கள் தன் மீது குறைகள் வைத்துக் கொண்டு பின் இறைவனை நிந்தித்தால் என்ன லாபம்? அப்பனே பின் எழுந்து நில்.
அடியவரை அழைத்து வந்த அடியவர்:- ( எழுந்து நின்றார்கள்)
குருநாதர்:- அப்பனே சில சில வழிகளை கூட அப்பனே அவனதனக்கு எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடு முதலில்.
(குருநாதர் கேள்வி கேட்ட அடியவரை அழைத்து வந்த அடியவரை சில அறிவுரைகள் சொல்ல சொன்னார்கள். அனைவரும் கவணிக்கவும் - ஒருவனுக்கு எப்படி வாழ வேண்டும் என்று ஏதாவதை நல்லது சொல்லி கற்றுக்கொடுத்தால் அதுவே முதல் உயர் நிலை புண்ணியம். இங்கு முதன் முதலில் நமது காலத்தில் இந்த அற்ப்புத நிகழ்வு அகத்திய பிரம்ம ரிஷி முன் ( நாடியின் முன்னே நேரடிப்பார்வையில் ) நடந்து உள்ளது என்பதை அடியவர்கள் உணர்க. முதல் வகையான புண்ணியம் அதன் அரங்கேற்றம் அழைத்து வந்த அடியவர் உரைக்க அங்கு ஆரம்பமானது….)
அழைத்து வந்த அடியவர்:- ஐயா இறைவனே கதி என்று சரணாகதியாக இருக்கனும். எதையும் ( இறைவனிடம் / வாழ்க்கையில் ) எதிர்ப்பார்க்க கூடாது. குருவே நமக்கு திருவருளை கூட்டி ( பெற்று ) கொடுப்பார்கள்.
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவன் பார்த்துக்கொள்வார் என்ற சரணாகதியில சிவார்பணம் என்ற தத்துவத்திலேயே எல்லாம் இறைவன் நம்மை வழி நடத்துகின்றார் என்று நமக்குள் இருந்து எண்ணமாகவும், சொல்லாகவும் செயலாகவும், 22,000 நாடி நரம்புகளில் இருந்து ரத்தங்களிலும், சதைகளிலும் எல்லாமே அந்த இறைவனே , குருவே நின்று (நம்மை) வழிநடத்துகின்றார்கள் என்ற பாதையில் நம்ம பயணிக்கனும்.
( இப்போது அங்கு உள்ள அடியவர்கள் அனைவருக்கும் இந்த உரை சென்று அடைந்ததால் , உரைத்த இந்த அடியவருக்கு உண்டானது - மிக உயர் வகை முதல் நிலை புண்ணியம் என்பதை உணருங்கள் அடியவர்களே. ஏழை எளியோருக்கு இந்த உலகில் நல்லது சொல்லி அவர்கள் நன்கு தர்ம வாழ்க்கை வாழ கற்றுக்கொடுங்கள். முதல் தர உயர் நிலை புண்ணியங்கள் பெறுங்கள். இது குறித்து குருநாதர் முன்பு உரைத்த வாக்கு:- ஏழை எளியோர்கள் அப்பனே அவர்களுக்கு சேவை செய்வது பெரும் புண்ணியமப்பா. )
குருநாதர்:- அப்பறம் எது என்று அறிய என்னைக் கேட்பதை போல் அவனிடத்தில் நீ கேள்.
( இங்கு குருநாதர் - கேள்வி கேட்ட அடியவர் , இவரை அழைத்து வந்த அடியவரிடம் கேள்வி கேட்க உத்தரவு இட்டார். இதனிடையில் எப்படி கேள்விகள் கேட்க வேண்டும் என்று மற்றவரு புதிய அடியவர் எடுத்து உரைக்க, உடனே குருநாதர் இந்த புதிய அடியவரை நோக்கி பின்வருமாறு உரைத்தார்கள் )
குருநாதர்:- அப்பனே பின்னே திரும்பு. பின் அவன் கேட்கவில்லை அவன்.அவனையே ( புதிய அடியவரை கேள்வி கேட்ட ) இவன் தனக்கு எடுத்துரைக்க சொல்.
( இந்த புதிய அடியவரை முன்னர் கேள்வி கேட்ட ஏசுநாதரின் முன்நாள் சீடருக்கு எடுத்து உரைக்க ஆனை இட்டார்கள்)
புதிய அடியவர்:- ( ஏசுநாதரின் பூர்வ ஜென்ம சீடருக்கு உரைக்க ஆரம்பித்தார் ) குருநாதர் சொன்னதுதான். முன்னொரு வாக்கில் சொல்லி இருக்காங்க. குருநாதர் ஒரு ஆறு ஏழு செய்லகளை செய்யசொல்லி இருக்கின்றார். அவை…
1. அதிகாலை 3 மணிக்கு எழுந்து தியானம் செய்ய வேண்டும். சரிங்களா. அமைதியாக உட்காருங்க. தியானம் தானாக வந்து விடும். நம்மளுடைய ஆன்மா நமக்குள்ள அமைதிய கொண்டு வந்துடும். தினமும் 3 மணிக்கு. குருநாதர் சொன்னதுதான். அதுக்கு அப்புறம்
2. காலையில பசு மாட்டுக்கு அகத்திக்கீரை வாங்கி கொடுத்திடுங்கள். வாரத்துக்கு ஒரு முறை உங்க கையால கொடுங்க
3. இரவு படுக்கும்போது இறைவனுடைய நாமத்தை உச்சரிச்சிகிட்டு, பாட்டு படிச்சுகிட்டு உறங்குங்க.
4. உங்களால இயன்ற அளவுக்கு பிற உயிர்களுக்கு நன்மை செய்யுங்க. நன்மை செய்யாவிடிலும் தீமை செய்யாதீங்க.
இதை எல்லாம் நீங்க செஞ்சுகிட்டு வந்தாலே தானாகவே எல்லாம் சரி ஆகிவிடும். இது எல்லாம் குருநாதர் சொன்னது.
முன்பு கேள்வி கேட்ட அடியவர்:- பணி மாற்றம் வருமா?
குருநாதர்:- அப்பனே இதையும் அவனிடத்தில் ( புதிய அடியவரிடம் ) கேள்.
புதிய அடியவர்:- இதெல்லாம் நீங்க செய்ய செய்ய தானாகவே ( பணி மாற்றம் ) நடக்கும். நீங்க எதுவுமே கேட்க தேவை இல்லை.
கேள்வி கேட்ட அடியவர்:- இல்ல இது எல்லாம் வந்து ….( இந்த அடியவர் கேட்ட கேள்வி ஒலி பதிவு போதிய சத்தம்ஆக இல்லாததால் தட்டச்சு செய்ய இயலவில்லை )
புதிய அடியவர்:- அப்டின்னா இன்னும் ( புண்ணியம் ) பத்தவில்லை. என்ன சொல்கின்றேன் என்றால் நாம செய்கின்ற தான தர்மங்கள் ( அதன் மூலம் நினைத்த காரியம் ) நடக்கவில்லை என்றால் இன்னும் கர்மா வலிமையாக உள்ளது. இன்னும் தான தர்மங்களை அதிகப்படுத்தனும். அப்படி என்றால்தான். அப்படி என்றால்தான் புண்ணியம் சேரும். நீங்க நினைப்பது நடக்கும்.
கேள்வி கேட்ட அடியவர்:- கர்ம காரியங்களில் அதிக ஈடுபடும்போது புண்ணியங்ஙள் அதிகமாகும், எல்லாமே நடக்க ஆரம்பிக்கும். .( இந்த அடியவர் கேட்ட கேள்வி ஒலி பதிவு போதிய சத்தம் ஆக இல்லாததால் தட்டச்சு செய்ய இயலவில்லை )
குருநாதர்:- அப்பனே இவன் தனக்கும் ஒரு மந்திரத்தை கொடுத்தேன். அதை அப்பனே சொல்லி கொடு.
( சில உரையாடல்கள்)
கேள்வி கேட்ட அடியவர்:- இப்ப சொல்லாம்னு எடுத்தேங்க ஐயா ( ஆனால் மந்திரம் சொல்ல ஆரம்பிக்க வில்லை)
குருநாதர்:- அப்பனே இதுபோலத்தான் அப்பனே உண்மையை சொன்னால் யாரும் ஒத்துக் கொள்வதே இல்லை அப்பனே ஆனால் பொய் சொன்னால் ஓடி ஓடி ஏமாந்து விடுவார்கள். அங்க ஏமாந்து ட்டு அப்பனே ஏமாந்து விட்டோமே அனைத்தும் பொயே என்று அதனால் உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள்.
சித்தன் பேச்சை பின் யாருமே கேட்பதில்லை. அப்படி கேட்காவிடில் யான் எப்படி ( நாடி வாக்கு உரைக்க ) வருவேன் அப்பா?
(சில அடியவர் உரையாடல்கள். இந்த அடியவர் மந்திரம் சொல்கின்றேன் என்று சொன்ன உடன்)
குருநாதர்:- அப்பனே கூறு. எத்தனை முறை என்று?
அடியவர்கள்:- ஒரு நாளைக்கு எத்தனை முறை ஜெபிக்கின்றீர்கள்?
கேள்வி கேட்ட அடியவர்:- ( ஒரு பதில் )
குருநாதர்:-அப்பறம் எதை என்று அறிய அப்பனே போய் பார் அப்பனே உடனடியாக நாளையில் இருந்து. பார்ப்போம்.
கேள்வி கேட்ட அடியவர்:- (……)
குருநாதர்:- அப்பனே எது என்று அறிய இல்லையப்பா.
நாடி அருளாளர்:- தினமும்…
கேள்வி கேட்ட அடியவர்:- சொல்கின்றேன்…
குருநாதர்:- அப்பனே நிச்சயம் இல்லையப்பா.அப்பனே சொல் அனைவரிடத்திலும்.
கேள்வி கேட்ட அடியவர்:- ( குருநாதர் உரைத்த மந்திரத்தை அங்கு உள்ள அனைவர்முன் உரைத்தார்)
குருநாதர்:- அப்பனே இது சரியா?
கேள்வி கேட்ட அடியவர்:- ( குருநாதர் உரைத்த மந்திரத்தை இரண்டாம் முறையாக அங்கு உள்ள அனைவர்முன் உரைத்தார்)
குருநாதர்:- அப்பனே சரியாகவே சொல்லிக்கொண்டு வா அப்பனே. நிச்சயம் உயர்வுகள் ஏற்படும் என்பேன் அப்பனே.
கேள்வி கேட்ட அடியவர்:- உயர்வுகள் ஏற்படுமா?
நாடி அருளாளர்:- ஏற்படும் ஐயா
குருநாதர்:- அப்பனே இன்னும் இன்னும் என்னென்ன மந்திரங்கள் அப்பனே. எதையுமே பின்பற்றவில்லை. முதலிலேயே இவன் தனக்கு யான் சொன்னேன். இதை கூட பின்பற்றவில்லை.
கேள்வி கேட்ட அடியவர்:- வாய்ப்பு கிடைக்கலைங்க.
குருநாதர்:- அப்பனே அதனால் யான் சொல்லியதை சரியாக கடைப்பிடிக்காவிடில் அப்பனே எப்படி அப்பா மீண்டும் வந்து (வாக்கு) சொல்லுவது? அப்பனே உன் விதியை கூட மாற்ற வேண்டும். எங்களால் மாற்ற இயலும் ஆனால் யாங்கள் சொல்வதை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் தான் மாற்ற முடியுமே தவிர பின் யாங்கள் எத்தனையோ வகை வேலைகள் அப்பா எங்களுக்கு.
மனிதர்களை பல மனிதர்களை பக்குவப்படுத்த. அது தெரியாமலே அது சிலருக்கே கிடைத்துள்ளது என்றால் அப்பனே புண்ணியம் தான் அதைக் கூட சரியாக பயன்படுத்தவில்லை என்றால் என்ன என்றால் அப்படியே இன்றைய சூழலில் அப்பனே காசுக்காக மனிதன் எதை எதையோ செய்து கொண்டிருக்கிறான், அதை செய்கிறேன் இதை சரி படுத்துகிறது. இவ் மந்திரத்தைச் சொன்னால் அவை நடக்கும் என்றெல்லாம். அப்பனே எங்கள் அருள் இருந்தால் தான் அனைத்தும் நடக்கும் அப்பா இல்லை என்றால் ஒன்றும் நடக்காது அப்பா. கருமம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும் கடைசியில் அப்பனே விதியில் இல்லாத்தை கூட. அவன் விதியில் என்ன உள்ளதே என்று கூற கஷ்டங்கள். அதைக்கூட உன்னிடத்தில் பாதி அளவு கொடுத்து விடுவான் அப்பனே. சேர்ந்து அனுபவிக்க வேண்டியதுதான் கடைசியில் அப்பனே சொல்லிவிட்டேன்.
கேள்வி கேட்ட அடியவர்:- _______
குருநாதர்:- அப்பனே அதனால் நல்வாழ்க்கை உண்டு. நீயேதான் கெடுத்துக்கொண்டாய் உந்தனை. அப்பனே இங்கு விதியா? மதியா? அப்பனே விதி கூட நிச்சயம் மதியால் ஜெயிக்க முடியும் அப்பனே. மதியினால் ஜெயிக்க உனக்கு நிச்சயம் வாய்ப்புகள் கொடுத்தால் , அது சரியாகவே பயன்படுத்திக் கொள்ளவில்லை நீ.
புதிய அடியவர்:- நீங்கதானே கேட்டீங்க..
கேள்வி கேட்ட அடியவர்:- இப்போ எனக்கு எதுவும் வேண்டாம் ஐயா.
குருநாதர்:- அப்பனே இப்பொழுதுதான் கேட்டாயே எந்தனுக்கு பணி வேண்டும் என்று (கேள்வி கேட்ட) அப்பனே. ( புதிய) அப்பனே பளார் என்று ( கேள்வி கேட்ட அவனை) அறை.
கேள்வி கேட்ட அடியவர்:- இப்ப எனக்கு பணிகள் ஒரு விசயம் கிடையாதுங்கயா
குருநாதர்:- அப்பனே எதுவுமே வேண்டும் வேண்டாம் என்று முதலிலேயே சொல்லி இருந்தால் இத்துன்பத்திற்கு அப்பனே ஆளாக முடியாது அப்பா. அதனால் அப்பனே எது என்று புரியாமல் கூட அப்பனே திருமணம் வேண்டும் வேண்டும் என்று எல்லாம் பின் சித்தனாக கூட அதனால் அப்ப னே முதலில் அமைதியாக பொறுத்து இரு. தியானங்கள் செய் போதுமானது அப்பனே. யாங்கள் உனக்கு எப்படி வாழ்க்கை தரமுடியும் என்பதைக்கூட யாங்கள் தருகிறோம். அப்பனே மனம் அப்படியே அலைபாயுது அப்பா. அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்போதே பிரம்மன் எழுதி வைத்து விட்டான் அப்பனே இளவரசனாக இருந்து அப்பனே ( பூர்வ ஜென்ம கர்மா அதன் விளக்கம் ____________________ _______ ______ ) அப்படி இருப்பினும் ஏசுநாதன் கருணை கொண்டு உன்னை மாற்ற எண்ணினான். ஆனாலும் அப்பனே.
அவ் ஆன்மா ( பழைய அதே கர்மத்தை ) நோக்கித்தான் சென்று அடைந்தது. யான் மாற்றுகின்றேன் பொறுத்திருக்க.
( சில கடுமையான பூர்ம ஜென்ம கர்மங்கள் இந்த அடியவரை பின் தொடர்கின்றது. மனித ரூபத்தில் பழி தீர்க்க பிறந்து உள்ளது என்று விரிவாக எடுத்து உரைத்தார்கள். )
அதில் இருந்து முதலில் காத்துக்கொள். யாங்கள் காப்போம்.
அடியவர்கள்:- ( நீன்ட அமைதி இந்த பூர்வ ஜென்ம கர்ம சூட்சுமங்களை கேட்டு )
ஒரு அம்மை அடியவர்:- முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
குருநாதர்:- அப்பனே ஒன்றும் செய்ய தேவையில்லை. இதற்கு காரணம் எந்த மாதிரி அப்பனே இப்போது தான் சொன்னேன். ( சில பரிகார விளக்கங்கள்) யானே முடிவெடுத்து அப்பனே தெரிந்து கொள், யாங்கள் தான் மாற்ற முடியும் சொல்லிவிட்டன பொறுத்திருக.
கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா மாந்தீரீகம்…? ( அதன் பாதிப்பா)
குருநாதர்:- அப்பனே அவை எல்லாம் ( சித்தர்கள் ) எங்கள் இடத்தில் வேலை செய்யாத அப்பா. சித்தர்களை நம்பு.
கேள்வி கேட்ட அடியவர்:- ஐயாவேட திருவடிகள் கிடைக்குமா?
குருநாதர்:- அப்பறம் இதுவும் முட்டாள்தனமாகவே அப்பனே கேள்வி இருக்கின்றது. அஎன்னோட ஆசிகள் இல்லாமலா ( நீ இங்கு வந்தாய்) நேற்றைய தெரிவித்து விட்டேன். ( மதுரை அடியவர் பரமசிவம் ) பரமனே சொல்?
மதுரை அடியவர் பரமசிவம்:- ( இந்த மதுரை அடியவர் இல்லத்தில் குருநாதர் ஆட்கொண்டு வந்து இந்த நீண்ட பலமான நாடி வாக்குகள் பலவற்றை உலகோர் அறிய உரைத்தார்கள் என்று அடியவர்கள் அறிய தருகின்றோம்)
அகத்திய பிரம்ம ரிஷி அருள் இல்லாமல் யாரும் ( நாடி வாக்கு கேட்க) இங்க வர முடியாது. அதனால் குருநாதர யாருக்கு ஆசீர்வாதம் கொடுத்தாரோ அவர்கள் மட்டும் இங்கு வரமுடியும். அடுத்த நாடி ஆசிர்வாதம் ( நாடி வாக்குகள் ) வேண்டும் என்றால் பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் பஞ்ச பூத ஸ்தலத்திற்கு போய்விட்டு வரச்சொன்னாங்க.
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)
https://siththarkalatchi.blogspot.com/2023/11/231-5-9-2023-27.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!ச
No comments:
Post a Comment