“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, November 30, 2023

சித்தர்கள் ஆட்சி - 243 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - கோவையில் உரைத்த வாக்கு - பகுதி 3


 பகுதி - 3


“அனைத்தும் இறைவா நீ”


குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி கோவையில் வாசித்த பொது நாடி வாக்கு -  ( பகுதி 3 ) 


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/11/242-2.html?m=0


(அடியவர்கள் கவனத்திற்கு :- இந்த பதிவில் உள்ள வாக்குகளை நீங்கள் நாடி வாக்கு படித்த இடத்தில் இருந்து கேட்பதைப்போன்று கற்பனை செய்து உள்வாங்க நன்கு உண்மைகள் புரியும். இந்த வாக்கில் குருநாதர் இரு அடியவர்கள் இடையே ஒரு பணப்பரிவர்த்தனை செய்ய வைத்து அதன் மூலம் கர்மா எப்படி எல்லாம் மனிதனை ஆட்டுவிக்கின்றது என்று மிக எளிமையாக அனைவருக்கும் உரைத்தார்கள். வாருங்கள் அன்பு அடியவர்களே, கருணைக்கடல் குருநாதர் பொதிகை வேந்தரின் ஞான அமுத ரசம் அதனை மகிழ்ச்சியுடன் இனைந்து அருந்துவோம்…. பிறருக்கும்  ஞான அமுதம் அதனைப் பகிர்வோம்…) 


குருநாதர்:- அப்பனே தானம் என்றால் என்ன?


அடியவர் 7:- எதையும் எதிர் பார்க்காமல் கொடுப்பது தானம். 


குருநாதர்:- இல்லை அப்பா. யாராவது ஒருத்தரைச் சொல்லச் சொல் அப்பனே.


அடியவர்:- தானம் என்பது ஒருவர் தேவை அறிந்து , அவர் கேட்காமல் நாமே கொடுப்பது. 


அடியவர்:- நமது புண்ணிய பலன் அப்படியே இருக்கின்றது. அதனை அடுத்தவர்களுக்குக் கொடுப்பது


குருநாதர்:- அப்பனே இன்னும் கேள்.


அடியவர் :- வலது கை கொடுப்பது , இடது கைக்குக் கூட தெரியக்கூடாது.


குருநாதர்:- அப்பனே இன்னும் கேள்.


அடியவர்:- ஐயா கேட்கின்றார். தானம் என்றால் என்ன. சொல்லுங்கள்?


அடியவர் :- கேட்காமல் கொடுப்பது…


குருநாதர்:- அப்பனே எவருக்குமே தெரியாது என்பேன் அப்பனே. இருந்தாலும் கேள். யான் கடைசியில் சொல்லி விடுகிறேன். 


அடியவர்:- பொருள் இல்லாதவர்களுக்குக் கொடுக்கின்றோம். அது ஒரு தானம். 


குருநாதர்:- அப்பனே இறைவன் கொடுக்க மாட்டானா என்ன?  உயிரையே பிச்சையாக கொடுக்கின்றவனுக்கு,  பார்த்துக்கொள்ளத் தெரியாதா என்ன?


அடியவர்:- வேற யாராவது கேளுங்கள்?


அடியவர் :- பசிக்கு அன்னம் தருவது.


குருநாதர்:- அப்பனே படைத்தவனுக்கு தெரியும் அப்பனே.


அடியவர்:- நமக்கு அதிகமாக இருப்பதைக் கொடுப்பதே தானம்.


குருநாதர்:- அப்பனே என்ன படித்திருக்கின்றாய் அப்பனே?


அடியவர் :- 10th. 


குருநாதர்:- அப்பனே எத்தனையோ பேர்கள் மேற்படிப்பிற்குச் செல்லாமல் இருக்கிறார்களே அவர்களுக்கு  உதவலாமே?  உன்னால் ஏன் உதவ முடியவில்லை? இதிலிருந்தே தெரிகிறதா அப்பனே? படைத்தவனுக்குத் தெரியும்.


( கருணைக்கடல் , குருநாதர் ஈசன் அகத்தில் வாழும் ஈசன் இதுவரை கலியுகம் அறியாத தானம் என்பதன் உண்மைப்பொருளை விளக்க ஆரம்பித்தார்கள். அடியவர்கள் இதனை மனதில் நன்கு உள் வாங்கவும்… படித்த உடன் உங்கள் மனம் கடும் ஆட்டம் காணுவதை உணருங்கள். ) 


குருநாதர்:- அப்பனே எனக்கு எதுவுமே தேவையில்லை. இறைவா!!!! என்று இறைவனிடத்தில் அனைத்தும் விட்டு வைத்தால் இறைவனே நிச்சயம் அனைத்தும் ஒருவனுக்குக் கொடுப்பான். 


இறைவா எந்தனுக்கு கொடுத்து விட்டாயே இப் பொருள் எல்லாம் மாயை, அனைவருக்கும் யான் கொடுத்து விடுகின்றேன் என்று நிச்சயம் எவனொருவன் கொடுத்துவிடுகின்றானோ அதுதான் அப்பா தானம். அதனால் எவருமே செய்வதில்லை இப்படி.


அதனால்தான் பின் மனிதன் என்ன தானங்கள் , தர்மங்கள் செய்தாலும் கீழ் நோக்கியே போய்க் கொண்டிருக்கின்றான்.  அப்பனே இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம். 


அப்பனே புரிகின்றதா? அப்பனே தானம், தர்மம் என்று.  அப்பனே ஆனாலும் அனைவருமே இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் அப்பனே.  தானம் செய்கிறோம். தர்மம் செய்கின்றோம் என்று எல்லாம் அப்பனே. ஆனாலும் நிச்சயம் அப்பனே ஏராளமான  கதைகளும் உண்டு. அவற்றை எல்லாம் வரும் வாக்கில் சொல்கிறேன். அப்போது புரிந்து விடும் அப்பனே.


குருநாதர்:- அப்பனே தர்மம் என்ன செய்யும்?


அடியவர் 7:- தர்மம் தலை காக்கும். 


குருநாதர்:- அப்பனே கொடுத்தாய் அல்லவா? அதற்கு எடுத்துக்காட்டாக அனைவருக்கும் ஒரு பாடத்தை எடு. 


( இந்த அடியவர் (7)  கையில் இருந்து cell phoneஐ ஒருவருக்குக் கொடுத்தார் முன்பு என்பதை நினைவில் கொள்க. இந்த அடியவர் மூலம் கருணைக்கடல் ஒரு மகத்தான பாடத்தை உலகோருக்கு எடுத்து உள்ளார். ) 


cell phone கொடுத்த அடியவர் 7:- தர்மம் செய்யும்போது கொடுத்துவிட்டு உடனே மறந்துவிடுங்கள்.  அதை யாரும் மனதில் வைத்து நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று குருநாதர் சொல்கின்றார். 


குருநாதர்:- அப்பனே இதற்கு யாராவது அப்பனே எதை என்று கூற இவனையே கேட்கலாம். 


( அங்கு உள்ள அனைவரையும் இந்த அடியவரிடம் எதிர் வாதாட அருளினார்கள் குருநாதர்) 


அடியவர்-பித்தன்:- குருநாதர் அதுவா சொன்னார்கள்? அதைச் சொல்ல வில்லையே. குருநாதர் தானம் என்று என்ன சொல்கின்றார்? இங்கு இருக்கக் கூடிய பொருட்கள் அனைத்தும் மாயை. மாயை  எனக்கு எதுவுமே வேண்டாம். இறைவா!!!!!நீ ஒருவனே எனக்கு போதும் என்று இருப்பதை அனைத்தும் கொடுக்கின்றானோ அதுவே உண்மையான தானம்.


குருநாதர்:-  அப்பனே பித்தன் போல் சொல்கின்றானே அவனை வரச்சொல். 


( அடியவர் பித்தன் வந்து அமர்ந்தார் நாடியின் முன்னே. குருநாதர் அப்படி அழைத்ததால் இனி நாமும் அடியவர்-பித்தன் என்றே இவரை இங்கு குறிப்பிடுகின்றோம்.  இந்த அடியவர் ஞானம் உயர்ந்த நிலை என்று மனதில் இருத்துக. இதே அடியவர் முன்பு வெளிவந்த மதுரை வாக்கில் பல இடங்களில் பல நல்ல தகவல்களை மக்களுக்குப் புரியும் வகையில் அளித்து இருந்தார் என்பதை அடியவர்கள் இங்கு அறியத் தருகின்றோம். ) 


அடியவர்-பித்தன் :- குருநாதா!!!!


குருநாதர்:- அப்பனே ஒரு 10 ரூபாயைக் கொடு என்று அவனைக் கேள்? 


அடியவர் 7:- 10 ரூபாய் கொடுங்கள். 


அடியவர்-பித்தன்:- ( கேட்ட 10 ரூபாய்க்கு மேல் தன் கையில் உள்ள பணம் அனைத்தையும் கொடுத்தார் )


குருநாதர்:- அப்பனே நீ எவ்வளவு கேட்டாய் அவன்தனை?  அவன் ஏன் அனைத்தும் கொடுத்து விட்டான் என்று கேள்?


அடியவர் 7:- என் உங்களிடம் இருந்த எல்லா பணத்தையும் என்னிடம் கொடுத்தீர்கள்?


அடியவர்-பித்தன்:- ஏன் என்றால் ஐயா அதுதான் சொன்னார். குருநாதர் சொன்ன வாரத்தையுடைய அர்த்தம் அதுதான். 


குருநாதர்:- அப்பனே இவன் தன் ( அடியவர்-பித்தன்) இப்படிக் கொடுத்தான். மற்றவர்களுக்குச் சொல்லி இருந்தால் அப்பனே 10 ரூபாய்தான் நிச்சயம் கொடுத்திருப்பார்கள் அப்பனே.ஏன் கொடுத்தாய் என்பதை நீ (அடியவர் 7) நிச்சயம் கேள்? 


அடியவர் 7:- ஏன் (உங்கள் பணம்) மொத்தத்தையும் கொடுத்தீர்கள்?


அடியவர்-பித்தன்:- ஏன் என்றால் தானம், தர்மம் நமக்காகச் செய்ய வில்லை. பிறருக்காகச் செய்கின்றோம். 

அதில் வரக்கூடிய பலனையும் பிறருக்காக அர்ப்பணம் செய்யும்போது பிற உயிர்களும் , எல்லா ஜீவராசிகளையும் இன்புற்று வாழும். 


குருநாதர்:- ( ரூபாய் அனைத்தையும் வாங்கிய அடியவரைப் பார்த்து ) அப்பனே உன்னிடத்தில் இருக்கும் 10 ரூபாயை அப்பனே மீண்டும் அவனிடத்தில் (அடியவர்-பித்தன்) அப்பனே பின் அதனுடன் சேர்த்துக் கொடு.


அடியவர் 7:- ( அடியவர்-பித்தன் கொடுத்த பணத்துடன் சேர்த்து மீண்டும் அடியவர் 7 வைத்திருந்த அனைத்து பணத்தையும் அடியவர்-பித்தனிடம் கொடுத்தார்) 


குருநாதர்:- அப்பனே உன்னை யான் எதைக் கொடுக்கச் சொன்னேன்? 


அடியவர் 7:- அவர் கொடுத்த பணத்துடன் பத்து ரூபாயை சேர்த்து கொடுக்கச் சொன்னீர்கள். 


குருநாதர்:- அப்பனே ஏன் (உனது பணம்) அனைத்தையும் கொடுத்தாய்? 


அடியவர் 7:- இப்போது தான் சாமி இவர் (அடியவர்-பித்தன்) சொன்னார் தானம் குறித்து. அதனால் நானும் அனைத்தையும் கொடுத்தேன்.


அடியவர்கள் :- (சிரிப்பு)


குருநாதர்:- அப்பனே அவனிடத்தில் இருந்து  10 ரூபாயை வாங்கு.


அடியவர் 7:- ( பித்தன் அடியவரிடம் இருந்து 10 ரூபாயைக் கேட்டு வாங்கினார்) 


குருநாதர்:- அப்பனே இதிலிருந்து புரிகின்றதை உன் மனது அப்பனே பணத்தை நோக்கியே இருக்கிறது என்பேன் அப்பனே. 


( தானமாக்க் கொடுத்த பணத்தைக் கேட்டுப் பெற்றார். அதையே இங்கு குருநாதர் குறிப்பிடுகின்றார். தானம் கொடுத்த பணத்தை திரும்ப நான் மீண்டும் கேட்டு வாங்க மாட்டேன் என்று சொல்வதற்குப் பதிலாக,  குருநாதர் சொன்னார் என்பதற்காக்க் கேட்டு வாங்கிவிட்டார் இந்த அடியவர். இங்கு இரண்டு விதிகள்

1. குரு சொல்லைத் தட்டாதே

2. தானமாக்க் கொடுத்த பணத்தை திரும்ப வாங்காதே ( மனதில் கூட).

இந்த இரண்டு விதியில் இரண்டாவது விதியை பின்பற்றாமல் முதல் விதியை பின்பற்றி விட்டார். அதனால் உங்கள் மனது பணத்தை நோக்கியே இருக்கின்றது என்று எடுத்து விளக்கினார்கள்.) 


குருநாதர்:- அப்பனே இப்படி இருக்க அப்பனே  இறைவனும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான் அப்பனே உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி எண்ணி.  ஆனாலும் அப்பனே  நிச்சயம் (பணம்) வரும் அப்பா.


அடியவர்-பித்தன்:- பணத்தின் பின்னாடி ஓடாதே. குருநாதர் ஐயாவுடைய வாக்கும் அதுதான். பணம் உன்னைத்தேடி வரும். 


( அடியவர்-பித்தனுக்கும் தானாகப் பணம் வரும் என்று உணர்க) 


குருநாதர்:- அப்பனே அதில் இருந்து அப்பனே ஒன்றை எடுத்து அவனிடத்தில் கொடு.


( அடியவர்-பித்தனிடம் இருந்து ஏதாவது ஒரு பணத்தை அடியவருக்குக் கொடுக்க வேண்டும். அப்படியே செய்தார் அடியவர்-பித்தன்.) 



குருநாதர்:- அப்பனே நிச்சயம் பணங்களும் வரும் அப்பா. அப்பனே நீயும் கொடுப்பாய் அப்பா. ( இருவருக்கும் ஆசி அருளினார்கள் கருணைக்கடல்) 


அப்பனே (அடியவர்-பித்தன்) இப்பொழுது அவன் (அடியவர்) இடத்தில் பெற்றுக்கொண்டாயோ அதை அவனிடத்திலே கொடுத்துவிடு.  உன்னிடம் என்ன இருந்ததோ அதை நீயே எடுத்துக்கொள்.


அடியவர் 7:- எனக்கு எவ்வளவு பணம் அவருக்குக் கொடுத்தேன் என்று தெரியாது சாமி. 


(அடியவர்கள் சிரிப்பு)


குருநாதர்:- அப்பனே இது போலத்தான் அப்பனே இறைவன் அனைவருக்கும் ( பொருள் பலத்தை அளவுக்கு அதிகமாக ) கொடுத்து விட்டால் அப்பனே மதிமயங்கி (கர்மாவில்) போய்விடுவான் அப்பனே. அதனால்தான் இறைவன் கூட யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று எண்ணி,  எதைக் கொடுத்தால் நன்று என்று எண்ணி எண்ணிக் கொடுக்கின்றான் அப்பனே. போதுமா அப்பனே இதன் விளக்கம்? 


அடியவர் 7:- போதும் சாமி.


குருநாதர்:- அதனால் அப்பனே இப்படி இருக்கின்றார்களே? அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிவிட்டார்களே , அப்பனே யாமன் கீழ்தனை நோக்கி இருக்கின்றோமே என்றால்  அப்பனே ( என்று எண்ணுவது) இவை எல்லாம் வீணப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே.  யார் யாருக்கு என்னென்ன தரவேண்டுமோ இறைவன் நிச்சயம் தருவான். இதன் மூலம் தெரிகின்றதா அப்பனே.  கேள்? 


( நாடி அருளாளர் அருமையான விளக்கம் இங்கு அனைவருக்கும் அளித்தார்கள்)


குருநாதர்:- ஆனாலும் அப்பனே அதை வைத்துக் கொண்டு அனைவருக்குமே என்ன செய்யலாம் கூறு?


அடியவர் 7:- எல்லாருக்கும் அன்னதானம் செய்து விடுகின்றேன்.


குருநாதர்:- அப்பனே எப்படி அப்பா செய்ய முடியும்? 


நாடி அருளாளர்:- முடியாது என்று சொல்கின்றார் குருநாதர். 


அடியவர் 7:- நீங்களே சொல்லுங்கள் சாமி.


குருநாதர்:- அப்பனே இதுதான் அறிவில்லாதவன் அப்பனே. அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பனே அதே போலத்தான் இறைபலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். 


அப்பனே யான் (உதவி) செய்வேன் இங்கு இருக்கிறார்களே அவர்களிடத்தில்  வாங்கிக் கொண்டு அவர்களுக்கே செய்கின்றேன் என்று இதே போலத்தான் அப்பனே கர்மம் அவனிடத்தில் இருந்து கொண்டு அவனையே ஆட்டிப்படைக்கிறது. யாருக்கும் தெரியவில்லை அப்பனே. 


( தன் பொருளைப் பிறருக்குக் கொடுத்தால் மட்டுமே கர்மம் தொலையும். பிறர் பொருள் சேர்க்கச் சேர்க்க, கர்மம் சேரும். கர்மத்தை குறைக்க ஒரே வழி பொருள் உதவி/தர்மம்)


அடியவர்-பித்தன்:- chanceஏ இல்லை… !!!!!!!!!!!!!!!!!

( கருணைக்கடலின் உயர் ஞான வாக்கைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்!!!) 


குருநாதர்:- அப்பனே நீ எதை (கையில்) வைத்திருக்கின்றாய்?


அடியவர்-பித்தன்:- (பணத்தைக் காட்டி) கர்மாவை வைத்திருக்கின்றேன். 


அடியவர் 7:- கர்மாவை


குருநாதர்:- அப்பனே யாராவது சொல்லச்சொல் இது கர்மா என்று? 


நாடி அருளாளர்:- உங்கள் கையில் உள்ளது  (பணம் ) கர்மா என்று இங்கு உள்ள யாராவது சொல்லச்சொல்லுங்கள்?


அடியவர் 7 :- (என் கையில் உள்ள பணம்) இது கர்மாவா? 


அங்கு உள்ள அனைத்து அடியவர்கள் :- அது கர்மா இல்லை ( ஏன் என்றால் அது வெறும் பணம் ) 


குருநாதர்:- அப்பனே (பொருள்/பணம்) இதை பலமாக்க் கொடுத்து விட்டால் அப்பனே நீ அனைத்திற்கும் அடிமையாகி விடுவாய் அப்பனே. அதனால் தான் இறைவன்  சிறிதளவே (பொருள்/பணம்) கொடுக்கின்றான் அப்பனே. இது தவறா?


அடியவர் 7:- தவறில்லை. 


அடியவர்-பித்தன்:- குருநாதர் சொல்ல வருவது என்னவென்றால். நமக்கு என்ன தேவையோ அவர்களுக்குத் தெரியும். அவற்றை எல்லாம் கொடுக்கின்றார்கள். அதாவது நமது  சிந்தனைகளுக்கு ஏற்ற மாதிரி அனைத்தையும் கொடுக்கின்றார்கள்.  உங்கள்

சிந்தனையை, இறை பலத்தை பெரியதாக்கி விட்டீர்கள் என்றால் அதற்கு ஏற்ற அளவு அவர்கள் கொடுப்பார்கள். நிறைய கொடுப்பார்கள்.


குருநாதர்:- அப்பனே பொருத்திரு. விதியில் கூட பல மாற்றங்கள். ஆனாலும் பொருத்திருந்தால் மாற்றுகின்றேன்.

அப்பனே எதை எதிர் பார்க்கின்றாய் என்பதை யான் அறிவேன். 

( அடியவர் 7- தனிப்பட்ட வாக்குகள் முடித்த பின் மீண்டும் பொது வாக்கு ஆரம்பமானது ) 


குருநாதர்:- அப்பனே அனைத்தும் எண்ணும்போது எவ்வளவு? 


(அடியவர் 7 -  வைத்திருந்த பணத்தை எண்ணச் சொல்லி கருணைக்கடல் உத்தரவு இட்டார்கள்) 


நாடி அருளாளர்:- ஐயா , நீங்கள் உங்கள் பணத்தை எண்ணி எவ்வளவு என்று சொல்லுங்கள். 


அடியவர் 7:- 2980 ரூபாய் இருக்கின்றது. 


குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் சொல் இதனை. 


அடியவர் 7:- (உரத்த குரலில்) 2980 ரூபாய் இருக்கின்றது. 


குருநாதர்:- அப்பனே முதலில் ஒன்றை ஒன்றாக வேறுபடுத்து.


அடியவர்-பித்தன்:- 500 ரூபாய் தனியாக, 200 ரூபாய் தனியாக ….அப்புறம் 10 ரூபாயாகப் பிரியுங்கள்


நாடி அருளாளர்:- ஐயா அது இல்லை. ஒவ்வொரு எண்ணாக்க் கூறுங்கள்.


அடியவர் 7 :- 2…..9……8……0


குருநாதர்:- அப்பனே சந்திரனை (2) பலப்படுத்து. 


நாடி அருளாளர் :- ஐயா உங்களுக்கு இந்த எண்களை வைத்தே சொல்கின்றார். 2 - சந்திரனை பலப்படுத்து. ஐயா அடுத்து என்ன எண்?


அடியவர் 7 :- 2க்கு அடுத்து 9


குருநாதர்:- (9) தோடங்களப்பா. (தோஷங்கள்) இதனால் அவன் (முருகன்) தலத்திற்கும் சென்று வருதல். 


நாடி அருளாளர்:- அடுத்து …


அடியவர் 7:- 8


குருநாதர்:- அப்பனே இவன்தனும் கஷ்டங்கள் கொடுத்திட்டானப்பா. 


அடியவரில் ஒருவன் :- சனி தேவன் (8) 


குருநாதர் :- அப்பனே அனைத்தும் அப்பனே கூடுதல்…


நாடி அருளாளர்:- கூடுதல் என்றால் …இந்த பணத்தின் கூட்டுத்தொகை எவ்வளவு?


அடியவர் 7:- 2+9+8+0 = 19 


அடியவர்-பித்தன் :- கூட்டினால் 19 வருகிறது. இதை (1+9) இரண்டையும் கூட்டினால் 10 வரும். 


குருநாதர்:- அப்பனே அதனால் (10) தச அவதாரங்கள் எடுத்தவனை வணங்கிக்கொண்டே இரு. பின் பணங்கள் குவியும் என்பேன்.


அடியவர்-பித்தன்:- பெருமாளை வணங்கச்சொல்கின்றார்.  தசாவதாரம் எடுத்தவர் பெருமாள். 


குருநாதர்:- அப்பனே இதற்குத்தான் நீ ஏங்கிக்கொண்டு இருக்கின்றாய் அப்பனே. 


நாடி அருளாளர்:- உங்களை வைத்து (உலகோர்) அனைவருக்கும் அருமையான பாடம் எடுத்த பின்பு நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு மட்டும் என்ன தேவையோ அதனை மிக அழகாக எடுத்து உரைத்துவிட்டார்கள். 


குருநாதர்:- அப்பனே ஆனால் , உன் விதியில்  _____________ என்று கூட யான்தான் எழுத வேண்டும்.


( அடியவர்கள் கவனிக்கவும் :- கருணைக்கடல் குருநாதரால் விதியை எழுத/உருவாக்க/மாற்ற/அழிக்க இயலும். ஆனாலும் அவர்கள் பிரம்ம தேவன் மூலமாகவே அனைத்தும் செய்து வருகின்றார்கள் என்பதை பல வாக்குகளில் நாம் உணர்ந்த ஒன்றே…குருவே சரணம்!!!) 


நாடி அருளாளர்:- ஐயா (அடியவர் 7) சற்று பொறுத்திருங்கள். பிரம்மா இந்த விதியை எழுத மறந்துவிட்டார். குருநாதர் எழுதிய உடன் அனைத்தும் சரியாகும். கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். 


குருநாதர்:- அப்பனே இதைத் தெரியாமல் அப்பனே பரிகாரங்களாம் அப்பனே. அப்பனே விதியில் என்ன உள்ளது என்பதைத் தெரியாமல் அப்பனே பரிகாரம்

 செய்பவன் அதை விட முட்டாள் இல்லை. அதனால்தான் இறைவன் கூட சிரிக்கின்றான். 


முட்டாளே அறிந்தும் அறிந்தும் உன் விதியில் என்ன இருக்கின்றது என்று தெரியாமலே சுற்றுகின்றாயே, உந்தனுக்கு எது கொடுத்தாலும் வீண் என்று (இறைவன்) விட்டு விடுகின்றான் அப்பனே. பின்பு யான் பரிகாரங்கள் செய்தேனே, பரிகாரங்கள் செய்தேனே என்று அலைந்து கொண்டிருப்பான் மனிதன். மனிதனுடைய புத்தியே இப்படித்தானப்பா. அதனால் விதியை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அப்பனே புண்ணியங்கள் செய்ய வேண்டும் அப்பனே. 


( கருணைக்கடல் அடுத்த ஒரு மிக முக்கிய மகத்தான பாடம் எடுக்க ஆரம்பித்தார்கள்) 


குருநாதர்:- அப்பனே, புண்ணியம் என்றால் என்ன? 


(கோவையில் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும்…...) 

https://siththarkalatchi.blogspot.com/2023/12/244-4.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!




Wednesday, November 29, 2023

சித்தர்கள் ஆட்சி - 242 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - கோவையில் உரைத்த வாக்கு - பகுதி 2


 

பகுதி - 2


“அனைத்தும் இறைவா நீ”


குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி கோவையில் வாசித்த பொது நாடி வாக்கு -  ( பகுதி 2 ) 


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/11/241-1.html?m=0




குருநாதர்:- அப்பனே , நீ இறக்கக்கூடியவன். இவ் (இறை) நம்பிக்கை உன்னைக் காப்பாற்றி விட்டது. 


அப்பனே பின் கஷ்டத்திலும் இறை 

வன் இருக்கின்றான். இதற்கு பதில் அளி அனைவருக்குமே.


அடியவர் 4:- கஷ்டம் என்பதை நினைப்பவருக்குத்தான் கஷ்டம். இல்லையா? கஷ்டம் என்பது இல்லை என்பது , இறை நம்பிக்கை மட்டும் வைத்துக்கொண்டீர்கள் என்றால் கஷ்டம் என்பது உங்கள் வாழ்க்கையில் இல்லாமல் போய்விடும். எப்படி நல்லது , தெய்வீகம் , சந்தோசம் எப்படி என்றால் கஷ்டம் என்பதை பிரிக்கின்றீர்களோ அதை வைத்துத்தான். இறை நம்பிக்கை ஒன்றை மட்டும் உங்கள் மனதில் என்றும் நிலை நிறுத்துங்கள். 


( அடியவர்கள் நன்கு அடுத்து வரும் வாக்கை 3 முறை உள் வாங்கவும். இறைவன் நம்பிக்கையை அடுத்தவருக்கு  ஊட்டினாலே , சந்தோசத்தை இறைவன் உங்களுக்கு ஊட்டுவார் - உங்கள் கஷ்டங்களைப் போக்கி. இறைவன் நம்பிக்கை ஊட்டுவதே மகத்தான மாபெரும் தர்மம். இனி அடியவர்கள் இறை நம்பிக்கையை , இந்த அடியவர் ஊட்டியது போல உங்கள் சுற்றத்தாருக்கு ஊட்டுங்கள். இறை அருளால் உங்கள் கஷ்டங்கள் நீங்கி சந்தோசமாக வாழுங்கள்.) 


குருநாதர்:- அப்பனே  நிச்சயம் அப்பனே உன் கஷ்டம் போய்விடும் அப்பனே. உன் கஷ்டத்தை பற்றி எடுத்துரை.


அடியவர் 4:- ( இவ்வுலகத்திற்கு ) நாம் எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டு போக முடியாது. எல்லாமே மாயை தான். எதுக்காக தேவையில்லாத

ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படி இருக்கவேண்டும்? தேவை இல்லை. எல்லாமே இறைவன். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அவர் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். அதனால தான் நீங்கள் இங்கு வந்து உள்ளீர்கள். அதுவும் உங்களுக்கு உணர வைப்பதற்கே இந்த மாதிரி (நாடி வாக்கு வாசிப்பு நிகழ்வு ). 



குருநாதர் :- அப்பனே இன்னொரு விடயத்தையும் சொல்கின்றேன் அப்பனே. 

சனி ( சனீஸ்வரர் தேவன் ) அவனின் அப்பனே குற்றங்கள் என்ன? அப்பனே பெருமைகள் என்ன? (என்று) அனைவருக்கும் உணர்(த்துக).  


அடியவர் 4:- நமது மனசுக்கு துரோகமாக எதைச் செய்தாலும் அது குற்றம்தான்.

பெருமை என்பது நீங்கள் நினைப்பது அல்ல. மற்றவர்கள் உங்களைப் பற்றி பெருமைப்படவேண்டும். நீங்கள் உங்களைப் பற்றி பெருமைப்படக்கூடாது. 


குருநாதர்:- அப்பனே சனி ( சனீஸ்வரர் தேவன் ) அவன் உந்தனுக்கு என்ன என்ன தந்தான் என்று அனைவருக்கும் எடுத்துரை.


அடியவர் 4:- எல்லாமே நாம் பிறந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை அவர் கொடுத்ததுதான். நாம எதுவும் சம்பாதிக்கவில்லை.  எல்லாம் அவர் கொடுத்த பிச்சைதான். 

( அடியவர்கள்,  இந்த அடியவர் மேல் உரைத்த வாக்கை நன்கு உள் வாங்கவும். பல பொருள் விளங்கும் உங்களுக்கு.)


குருநாதர்:- அப்பனே என்னிடத்தில் கேட்பதை தவிர நீ என்ன கேள்விகள் கேட்கிறாய் என்பதைக் கூட அனைவருக்கும் அப்படியே நின்று கேள்?



அடியவர் 4:- நீ என்ன காரணத்துக்காக வந்து இருக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் (கருணைக்கடல் குருநாதர்) ஐயாவுக்குத் தெரியும். ஆனால்

நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அதை உங்களிடம் இருந்து முதலில் ஆரம்பியுங்கள். எது கிடைத்தால் நல்லா இருக்குமோ , எது உங்களுக்கு நல்லா இருக்கும் என்று சந்தோஷப்படுகின்றீர்களோ அதை உங்ககிட்டதான் இருந்து முதலில் ஆரம்பியுங்கள்.


குருநாதர்:- அப்பனே நீ எதைக் கேட்கவந்தாய் அப்பனே? (அதை) அனைவரிடத்திலும் கேள்?



அடியவர் 4:- நான் , இறை நம்பிக்கை மட்டும்தான் வேற எதுவும் இல்ல. அவர் ஏதாவது செய்வார் என்ற ஒரே நம்பிக்கையில்தான் இங்கு வந்திருக்கின்றேன். வந்த கொண்டு இருக்கின்றேன். இந்த ஒரு நம்பிக்கையில்தான் வந்திருக்கின்றேன். 


குருநாதர்:- அப்பனே இதை அனைவருமே உணரவேண்டும். பொருள் வேண்டும், இன்னும் சிலர் திருமணங்கள் வேண்டும். இன்னும் சிலர் எதை எதையோ.. ஆனாலும் இறைவன் எப்பொழுது எதைக் கொடுக்கிறானோ,  அதை யார் ஒருவன் சரியாக பெற்றுக்கொள்கிறானோ , அவன்தனக்கு எதை என்று அறியாமல் அதனால் முதலில் இறை அருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ் இறை அருளை எப்படிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் சொல்கின்றேன். அப்பனே இறை அருளை பெறுவது எப்படி என்று அனைவருக்கும் உணர்த்தி வை? 



அடியவர் 4:- நாம் இந்த பூமியில் வந்து இருக்கின்றோம் என்பதை முதலில் யோசியுங்கள். எப்படி இருந்தார்கள், எப்படி இருந்து இருப்போம், எப்படி இருக்கப்போகின்றோம் என்பதையும் யோசியுங்கள். எது மாதிரி இருக்கக்கூடாது என்றும் யோசியுங்கள். நீங்கள் செய்த அனைத்தையும் reverseல்  யோசியுங்கள்.  எல்லாமே correctஆக இருக்கும்.



குருநாதர்:- அப்பனே இதனால் இனிமேலும் நிச்சயம் ஈசனை நினைத்து அப்பனே நல்விதமாக ஏதாவது சில செய்திகளை அனைவருக்கும் கூறு?


அடியவர் 4:-  முதலில் நம்மை நாம் உணரவேண்டும். நாம் யார்?  நம் உயிர் என்ன? இந்த பூமி, பிரபஞ்சம் என்ன? என்பதை உணருங்கள். எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்துங்கள். எல்லா உயிர்களிடத்தும் தெய்வ நம்பிக்கையுடன் அன்பைச் செலுத்துங்கள். 


அந்த தெய்வமே (ஈசனே) உங்கள் மூலமாக எல்லோரையும் பார்க்கலாம். 


குருநாதர் :- ( ஒரு பொது இறைவன் பெயர் சொல்லி அழைத்தார்கள்) _____ நாமத்தைக் கொண்டவன் எழுந்து நில்.


( அந்த பெயர் கொண்ட அடியவர்களும் எழுந்து நின்றார் ) 


குருநாதர்:- அப்படியே முதலில் சிறுவனைப் பார்த்துக் கேள்.  உந்தனுக்கு என்ன தேவை என்று?


அடியவர் 5:- பரிபூரண ( குருநாதர் ) ஐயாவின் அருள்


அடியவர் 4:- (கருணைக்கடல் பதில் உரைக்கும் முன்னே இந்த அடியவர் உரைத்தது ) அது கிடைத்துவிட்டது. 


குருநாதர்:- அப்பனே சொல்லிவிட்டானே!!!



அடியவர் 4:- உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?


அடியவர் 5:- அடுத்தது நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும்


அடியவர் 4:- ஆரம்பித்து விடுங்கள். இப்பவே. 


குருநாதர்:- அப்பனே, சொல்லிவிட்டான் அப்பனே. 


அடியவர் 5:- எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்.


அடியவர் 4:- நல் வாழ்க்கை கிடைத்து உள்ளது. நல் வாழ்க்கை கிடைத்ததனால் இங்கு நாடி கேட்க வந்து உள்ளீர்கள்.


குருநாதர்:- அப்பனே இதனால்தான் அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு பக்குவங்கள் பிறந்தால் தான் அப்பனே ஒருவனால் (அடியவர் 4) இப்பொழுது இப்படி நிச்சயம் பின் செய்திகளைப் பரப்ப முடியும். அதனால் இவன் என்ன கஷ்டங்கள் பட்டு இருந்தால் இப்படிச் சொல்லுவான் என்று  நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.


நாடி அருளாளர் :- ( கருணைக்கடல் ஏன் இந்த அடியவரை #4 தேர்வு செய்து இங்கு பேச வைத்தார்கள் என்று அனைவருக்கும் எடுத்து உரைத்தார்கள். அதாவது கஷ்டங்கள் பட்டு பட்டு பட்டு அடிபட்டு நொந்து போய் வந்ததால், அவர் மாறி பக்குவப்பட்டு இருக்கிறார். அதனால் மட்டுமே இந்த போல் இங்கு வந்து சொல்ல முடியும் என்று உரைத்தார்கள்) 


(ஒரு சிலர் ஒரு தெய்வத்தைத் தொடர்ந்து வழிபட்டுக்கொண்டே வருவார்கள். இறை சில சோதனை வைக்கும். அப்போது அவர்கள் வேறு சில தெய்வ வழிபாட்டிற்கு மாறி விடுவர். அனைத்து தெய்வங்களை வணங்குவது தவறில்லை. ஏனெனில் ஒருவனே தெய்வம். ஆனால் அருள் தரக்கூடிய வழிபாட்டை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதற்கு பின்வரும் வாக்கு ஒரு  உதாரணம்.) 


குருநாதர்:- அப்பனே அதனால் கேள்?


அடியவர் 5:- போன மாதம் பைரவரை சாமி கும்பிட்டு வந்தேன். 


குருநாதர்:- அப்பனே நிச்சயமாய் ஒரு வேலைக்கு செல்கிறாய் அப்பனே. மூன்று மாதங்கள் வேலை செய்கின்றாய் அப்பனே. சம்பளமும் கொடுக்கிறார்கள் அப்பனே. நின்று விடுகின்றாய் அப்பனே. என்ன கிடைக்கும்?


அடியவர் 4:- வேலை செய்யும் முறை தான். நிலையான எண்ணம் உங்களிடம் இல்லை. உழைக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. இதற்கு அடுத்து அடுத்து உடனே போகின்றீர்கள். முதலில் எந்த இடத்தில் இருக்கின்றீர்களோ அதில் strongஆக இருங்கள். 


அடியவர் 5:- சரி ஐயா. 


நாடி அருளாளர்:- இந்த (பைரவர்) தீபத்தை நீங்கள் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே வர வேண்டும். குருநாதர் என்ன அறிவுரை கூறினார்கள்?


அடியவர் 5:- மூன்று மாதம் தொடர்ந்து பைரவர் சாமி கும்பிடச்சொன்னார்கள். இரண்டு மாதம் நிறைவு அடைந்தது. 

இப்போது விட்டு விட்டு இடையில் கொஞ்சம் விட்டு வேற பக்கம் பெருமாள் கோயில் போய்விட்டு வந்திருக்கின்றேன். 


நாடி அருளாளர்:- ஐயா இப்பொழுது உங்களுக்கு புரிந்ததா? அதனால் தான் சொல்கின்றார் குருநாதர். 

( மேலும் தெளிவாக எடுத்து உரைத்து விளக்கினார்கள் ) 


குருநாதர்:- அப்பனே இன்னும் கேள்.


அடியவர் 5:- ___________


குருநாதர்:- அப்பனே அனைத்தும் இருக்குதப்பா. நிச்சயம் தொடர்ந்து நிச்சயம் பைரவனை வணங்கிக் கொண்டே வந்தால் அப்பனே வெற்றிகள்.  அப்பனே அதனால் தான் புரியும்படி யான் சொன்னேன்.


குருநாதர்:- அப்பனே ஆனாலும் மனிதனின் மனது அப்படியே மாறிவிடும். மாறி விடாதே அப்பனே.  அவன் நாமத்தை பின் என்னவென்று நிச்சயம் கேள்?


அடியவர் 5:-உங்கள் பெயர்?


அடியவர் 4:- (தனது பெயர் உரைத்தார் - பெருமாள் நாமம் ) 


குருநாதர் :- அப்பனே யாரென்று தெரிகிறதா ?


அடியவர் 5:- பெருமாள். 


குருநாதர்:- அப்பனே நிச்சயம் வணங்கியதற்கும் , இவன் (பெருமாள்) நாமம் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கூறு?


அடியவர் 4:- நீங்க வணங்கி இருக்கின்றீர்கள் இதுவரைக்கும். நீங்க வணங்கினதற்கும் , என் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றார் குருநாதர்? 


அடியவர் 5:- ( மனதில் நல் சிந்தனை ஓட்டம் ) 



குருநாதர்:- அப்பனே அதுபோலத்தான் அப்பனே உன் வாயால் பெருமாள் என்று சொன்னாய்  புரிகின்றதா? 


அடியவர் 5:- ஆமாம்


குருநாதர்:-  ஆனாலும் அப்படியே இவனுடைய நாமம் என்ன சொன்னான்?  


அடியவர் 5:- ( அடியவரின் பெருமாள் பெயர் உரைத்தார் ) 


குருநாதர்:- அப்பனே வித்தியாசம் என்ன?


அடியவர் 4:- எல்லாம் ஒன்றுதான். 


அடியவர் 6:- நீங்கள் பெருமாள் ( பைரவர் கோவில் போகாமல் பெருமாள் கோவிலுக்குச் சென்று ) வணங்கினீர்கள். இங்கு பெருமாள் ( பெருமாள் நாமம் கொண்ட அடியவர் #4  ) பதில் சொல்கின்றார். 


குருநாதர்:- அப்பனே அதனால்தான் எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லிவிட்டார்கள் அப்பனே. நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகுவாய் என்று கூட ஏற்கனவே முன்னோர்கள் உரைத்து விட்டார்கள் அப்பனே. 


அதனால் தான் அப்பனே ஏதாவது மயக்கத்தில் சென்றால் அது போலவே ஆகிவிடுவாய்.


அப்பனே எதாவது தொழிலுக்குச் சென்றாலும் அதன் மூலமே பல கஷ்டங்கள் பட்டு உயர்ந்து விடலாம். 


அப்பனே ஒருவன் எது ஆக நினைக்கின்றானோ அப்பனே அனைவருக்குமே ஒன்று சொல்கின்றேன். 


அப்பனே இறைவன் யார் யாருக்கு எதைத் தர வேண்டுமென்று நிச்சயம் யோசித்துக் கொண்டே இருக்கின்றான். அதனால் நீங்கள் மனதில் என்ன எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களோ அதையே கொடுக்கிறான் அப்பனே. இதில் யாருக்காவது சந்தேகம் என்றால் நிச்சயம் எழுந்து நில்.  கேளுங்கள்.



அடியவர் 4:- மனம் போல் மாங்கல்யம் என்று சொல்கின்றார்கள். உங்கள் எண்ணம்தான் செயலாக வருகின்றது என்று குருநாதர் சொல்கின்றார்கள். உங்கள் எண்ணங்களை நல்லபடியாக வைத்துக்கொண்டு நல்லது மட்டும் நினையுங்கள்.  உங்களுக்கு எல்லாமே நல்லது நடக்கும். தேவை இல்லாதது உங்கள் தலையில் ( மனதில் ) ஏன் வைத்துக்கொள்கின்றீர்கள் என்று கேட்கின்றார் குருநாதர். 


அடியவர் 7:-  நிறைய தர்ம காரியங்கள் செய்ய வேண்டும். எல்லோருக்கும் எல்லாமே நல்லது நடக்கனும்.



குருநாதர்:- அப்பனே இப்படி இருந்தால் எப்படியப்பா திருமணம் நடக்கும்?


அடியவர்கள் :- ( சிரிப்பு அலை ) 


அடியவர் 7:- சாமி, தர்மம் செய்தால் தான் ஒவ்வொன்றாக நல்லது நடக்கும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? அதனால்தான் இப்படி நினைத்தேன்.


குருநாதர்:- அப்பனே இதன் முன்னே என்ன செய்தாய்?


அடியவர் 7:- சாமி, இதற்கு முன்னர் தினமும் சாப்பிடும்போது , ஆட்டுக்கு கீரை பின் காக்காய்குச் சாப்பாடு வைப்பேன். 


குருநாதர்:- பின்பு என்ன செய்தாய்?


அடியவர் 7:- நீங்க சொல்வதைச் செய்கின்றேன் சாமி. 


குருநாதர்:- அப்பனே அதனால் தான் அப்பனே யான் சொல்லியதைச் செய்து கொண்டே இருக்கின்றாய். அதனால் அப்பனே சொல்,  தைரியமாக. 


அடியவர் 7:- பழனிக்கு போகச்சொன்னீர்கள். போய் வந்தேன். 


குருநாதர்:- அப்பனே உந்தனை பால் அருந்து என்று யான் சொன்னால் நீ அருந்திவிடுகின்றாய். ஆனால் எதற்காக அருந்துகின்றாய் என்று உனக்குத் தெரிகிறதா இல்லையா?


அடியவர் 7:- அந்த சக்தி நீங்கதான் சாமி கொடுக்கவேண்டும். 


குருநாதர்:- அப்பனே இதற்கு நிச்சயம் பதிலளி? 


அடியவர் 7:- சாமி, ( பால் குடித்தால் ) உடம்பு நல்லா இருக்கும். பழனி முருகனை வணங்கிவந்ததால் நம்மை தர்மம் செய்ய வைப்பார். ஊக்கமும் இருக்கும். 


( இதனிடையில் மயில் ஒன்று கூவியது ) 


குருநாதர்:- அப்பனே (முருகன்) ஆசிகள் கொடுத்து விட்டான். அப்படியே நீதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் அப்பனே  இப்பொழுது என்ன ஏது என்று கூற எதிர்பார்த்தாய்.


நாடி அருளாளர்:- ( மயில் கூவியதை எடுத்துக் கூறினார்கள் இந்த அடியவருக்கு. இதுவே கந்த வடிவேலன் ஆசி ) 


அடியவர் 7:- அதை நீங்கதான் உணர்த்தவேண்டும் சாமி…



குருநாதர்:- அப்பனே எப்படி எப்படியோ மனது செல்கின்றது அப்பா உனது. அதனால் மனதைக் கட்டுப்படுத்தி  அப்பனே தியானங்கள் செய் முதலில்.  அப்படியே அப்பொழுதுதான் அப்படியே உண்மை நிலை என்ன வென்று தெரியும் அப்பனே. ( சில தனிப்பட்ட அதி சூட்சும வாக்கு ) அப்பனே அதனால் ( அதிகாலையில் ) தியானங்கள் செய். பல உண்மைகள் புரியும் அப்பனே. நிச்சயம் பொருள்கள் சேரும்.


அடியவர் 7:- தியானம் செய்ய நீங்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும். 



குருநாதர்:- அப்பனே இப்போது தான் சொன்னேன் அப்பனே. முருகனே உனக்கு ஆசிர்வாதங்கள் கொடுத்து விட்டான்.  அப்பனே உன்னால் செய்ய முடியவில்லையே அப்பனே.  


( இனிமேல் வரும் வாக்குகள் நம் அனைவருக்கும் மகத்தான தான தர்ம பாடங்கள். இதனை வாசிக்கும் அடியவர்கள் மிகவும் கொடுத்து வைத்த புண்ணியவான்கள், பாக்கியசாலிகள். இந்த அண்டங்களின் ஒட்டு மொத்த தர்மமே குருநாதர் அகத்தீசர். அவ் தர்மமே இப்புவியில் இறங்கி தர்மத்தை நமக்காக பாடம் எடுத்து உரைத்த அதிசயம் இந்த வாக்குகள். வாருங்கள் மகத்தான வாக்கின் உள் செல்வோம்.) 


குருநாதர்:- அப்பனே தர்மம் என்பது என்ன?  தானம் என்பது என்ன?


அடியவர் 7:- கேட்டுக் கொடுத்தால் தர்மம். கேட்பதற்கு முன்னால் கொடுத்தால் தானம். 


( இப்போது குருநாதர் தர்மத்தை குறித்த அனுபவம் உணரும் மிக எளிய பாடத்தை அனைவருக்கும் எடுக்க ஆரம்பித்தார்கள். இங்கு வரும் அடியவர் 7 , நீங்கள் என்று வைத்துக்கொண்டு வாக்கினை நன்கு உள் வாங்குங்கள். மகத்தான புரிதல் உண்டு.) 


குருநாதர்:- அப்பனே உன் கையில் என்ன இருக்கிறது? 


அடியவர் 7:- ( அடியவர் கையில் cell phone இருந்தது) 


குருநாதர்:- அப்பனே அதை மற்றவனிடத்தில் கொடுத்துவிடு அப்பனே.


அடியவர் 7:- ( பக்கத்தில் உள்ளவரிடம் கொடுத்து விட்டார் ) 


குருநாதர்:- இப்பொழுது  அவன் தனக்கே சொந்தமாக்கி விடலாமா என்ன?


அடியவர்கள்:- ( சிரிப்பு அலை ) 


அடியவர் 7:- phone தானே..


குருநாதர்:- அப்பனே ஆனால் மனதில் குறு குறு என்று ( தவிக்கும் ) இருக்கும் என்பேன் அப்பனே.  


அடியவர்கள்:- ( பலத்த சிரிப்பு அலை ) 


குருநாதர்:- இதுதான் அப்பா,  பல பேர்கள் கொடுக்கிறார்கள் அப்பனே. ஆனால் மனதில் சரியில்லாமல் ( சந்தோசம் இல்லாமல் ) கொடுக்கிறார்கள் அப்பனே. இதனால் இப்படிச் செய்தால் அப்படியே தர்மம் ஆகாது அப்பா.


நாடி அருளாளர் :- ( அகத்தியர் மைந்தன், அருமையான முழு விளக்கம் அளித்தார்கள் அனைவருக்கும். அதாவது ஒரு பொருளை / உதவியைச் செய்துவிட்டால் மகிழ்ச்சி அடைந்து அதனை நாம் உடனே மறந்துவிடவேண்டும்.  ) 


குருநாதர்:- அப்பனே இப்படித்தான் பின் செய்து கொண்டிருக்கின்றார்கள் எண்ணி எண்ணி. அதனால் எப்படியப்பா தர்மக் கணக்கில் சேரும். தரித்திரங்கள் தான் மிச்சம். 


நாடி அருளாளர் :- என்ன உதவி செய்தாலும் , எதையும் எதிர் பார்க்காமல் செய்ய வேண்டும். 



குருநாதர்:- அப்பனே வாங்கிக்கொள் அப்பனே. 


அடியவர் 7:- ( cell phone அதனைக் கொடுத்தவரிடம் இருந்து மீண்டும் வாங்கிக்கொண்டார் ) 


அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு ) 


குருநாதர்:- அப்பனே மீண்டும் கர்மா இப்படித்தான் வரும் அப்பா. 


அடியவர் 6:-  :- cell phone வந்த மாதிரி கர்மா வரும்.


நாடி அருளாளர்:-  செய்ததை நினைத்தாலே கர்மா வரும். 


( கருணைக்கடல் அடுத்து தானம் குறித்த பாடம் எடுக்க ஆரம்பித்தார்கள்) 


குருநாதர்:- அப்பனே தானம் என்றால் என்ன?


அடியவர் 7:- எதையும் எதிர் பார்க்காமல் கொடுப்பது தானம். 


குருநாதர்:- இல்லை அப்பா. யாராவது ஒருத்தரை சொல்லச் சொல் அப்பனே.



(கோவையில் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும்…...) 

https://siththarkalatchi.blogspot.com/2023/11/243-3.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!






Monday, November 27, 2023

சித்தர்கள் ஆட்சி - 241 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - கோவையில் உரைத்த வாக்கு - பகுதி 1


 

பகுதி - 1 


“அனைத்தும் இறைவா நீ”


குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி கோவையில் வாசித்த பொது நாடி வாக்கு -  ( பகுதி 1 ) 



அடியவர்:- போன பிறவியில் எனக்கு காட்சி கொடுத்து என்ன கட்டி அணைத்துக்கொண்டதும் , இந்த பிறவியில் முருகனே வந்து என்னை அனைத்துக்கொள்வான் என்று சொன்னீர்கள் இல்லையா அகத்தீசப்பா போன முறை , அதுதான் அகத்தீசப்பா ஞாபகத்திற்கு வந்தது. 


நாடி அருளாளர்:- இப்போ அந்த பக்கம் என்ன தெரியுது என்று குருநாதர் கேட்கின்றார். 


அடியவர்:- அகத்தீசப்பா, வீடு , மரங்கள், ஆகாயம் இது எல்லாம் தெரிகின்றது அகத்தீசப்பா. 


குருநாதர்:- அம்மையே மனிதர்கள் தெரிகின்றார்களா? இல்லை என்பேன் அம்மையே. 


அடியவர்:- ஆமாம் அகத்தீசப்பா. 


குருநாதர்:- அம்மையே ஒன்றுமே இல்லை அம்மையே. மரங்கள் அது அது தன் வேலையைச் செய்கிறது அல்லவா? அதே போலத்தான் மனிதன் தன் வேலையை சரியாகச் செய்வதில்லை அம்மையே. அதனால்தான் இறைவன் கஷ்டத்தை ஏற்படுத்துகின்றான். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வந்தாலே நிச்சயம் வெற்றிகள் தாயே. 


அம்மையே அப்பொழுது எதை என்றும் அறியாத நிலையிலும் கூட ஏன் (திருச்) செந்தூரை நோக்கி அம்மையே நீ பார்த்தது ஒன்றும் இல்லை வாழ்க்கை கூட இதுபோலத்தான் இருக்கின்றது. அது தவறு செய்து செய்து , கர்மங்களை மனிதன் சம்பாதித்துக்கொண்டு அதனாலே மீண்டும் மீண்டும் தோல்வியில் விழுகின்றான் தாயே.  


இப்படி ஒன்றுமே இல்லாமல் இருந்தால் அனைத்தும் இறைவன் காரணம் , இறைவன் காரணம். அனைத்தும் இறைவனாக விளங்குகின்றான் அனைத்துக்கும் என்றெல்லாம் நிச்சயம் மனதில் நிறுத்திக் கொண்டாலே அம்மையே தோல்விகள் ஏது அம்மா? 


அடியவர்:- (அழுது கொண்டே) சரி. அகத்தீசப்பா. 


குருநாதர்:- அம்மையே ஏன் அழுதாய் என்று கூற வேண்டும்.


அடியவர்:- அப்பா முருகன் மேல் கொண்ட அன்பு அப்பா. திருச்செந்தூர்….


குருநாதர்:- அப்பொழுது யான் உந்தனுக்காக வந்து வாக்குகள் செப்புகின்றேனே , எந்தன் மீது  அன்பு இல்லையா?


அடியவர்:- அகத்தீசப்பா!!!! சிவ சிவா. அப்பா உங்களுக்கு தெரியும் இல்ல அகத்தீசப்பா..நான் தினமும் உங்களுடன் பேசுவது….


குருநாதர்:- (அம்மையே நீ எம்முடன் அன்பாக பேசுவது ) அவை தன் எந்தனுக்கு தெரியாதா என்ன?



அடியவர்:- என்னுடைய அன்பு என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று திருவண்ணாமலையில் நீங்க சொன்னிங்க இல்லையா? 



குருநாதர்:- அம்மையே  நிச்சயம் ஒன்று இதற்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும்.



அடியவர்:- அகத்தீசப்பா. உங்கள் திருவடி மட்டும் போதும்.  எனக்கு எதுவுமே வேண்டாம்.


குருநாதர்:- அம்மையே ( ஓர் அடியவரை அழைத்து )  அவனை வரச் சொல்.


அடியவர் 1:- ( முன்னே வந்தார் ) 


குருநாதர்:- அப்பனே அப்பனே எங்கும் இருக்கிறான் இறைவன். அப்பனே எங்கும் காட்சியளிக்கின்றான் இறைவன். அப்பனே அப்படி இருக்க நீ எதற்காக இங்கு வந்தாய் கூற வேண்டும்.?



அடியவர் 1:- ஐயா குருநாதர் வாக்கு கேட்கவேண்டும்.


குருநாதர்:- அப்பனே நீ அங்கிருந்தே கேட்டிருக்கலாமே?



அடியவர் 1:- நிச்சயம் கேட்டிருக்கலாம். இருந்தாலும் நேராக பார்க்கக்கூடிய வாய்ப்பு…குருநாதரோடு travel செய்ய வாய்ப்பு


குருநாதர்:- யான் அங்கேயே இருக்கின்றேனே அப்பனே.


அடியவர் 1:- நிச்சயம்.


குருநாதர்:- அப்பனே இதனால் உன் இல்லத்தவளை வரச்சொல்.


(அடியவர் துணைவி அருகே வந்து நின்றார். அமரவில்லை.) 


அடியவர் 2:- எனது ஊரில் பாம்புகள் தெரிய ஆரம்பித்தது. வீட்டின் உள்ளே எனக்கு ஐந்து தலை பாம்பே தெரிந்தது. இது எனக்கு புரியவில்லை. இது எல்லாம் எதன் அறிகுறி? 


குருநாதர்:-  (அவர் கணவரைப் பார்த்து) அப்பனே கிரகங்கள் ராகு கேது அப்பனே புரிந்து கொண்டாயா?


( இந்த இடத்தில் ஒரு சூட்சும வாக்கை உரைத்து அம்மையை உடன் செய்ய வைத்தார் கருணைக்கடல். இந்த அடியவர் ஜோதிட தசா புத்தியை உரைக்க ( கர்மா ) , அதை உடன் அவர் இல்லத்தரசியை வைத்தே போக்கினார்கள் என்பதே உண்மை. கருணைக்கடல் செய்த கர்ம நீக்கம் அங்கேயே நடந்தது. ) 


அடியவர்கள் கவணத்திற்கு :- ஜோதிடம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயங்களை பேசினாலும் கர்மா உண்டு. அந்தப்பக்கமே போகாமல் , தலை வைக்காமல் இருப்பதே கர்மங்களை சேர்க்காமல் இருக்க ஒரு எளிய வழி. ஜோதிடம் வேண்டவே வேண்டாம் அடியவர்களே. இறைவன் பாதத்தை சிக்கென பிடியுங்கள். குருநாதர் வழியில் நடக்க அனைத்தும் நன்மையாகும்.


( இந்த அம்மைக்கு  நடக்க இருந்த கொடும் நிகழ்வை  விவரித்தார் கருணைக்கடல்.  )  


ஆலால் அம்மையே ஈசன் உன்னை விட்டுவிடவில்லை. 


அடியவர் 2:- ஆனால் எனக்கு அதன் சத்தம் நன்கு கேட்டது. கனவில் பலமுறை பார்த்து உள்ளேன். நேரில் ஐந்து தலை ( அரவம் ) பார்த்தேன். 


குருநாதர்:- அம்மையே  ஆனாலும் அனைத்தும் மாறிவிடும் என்பேன் அம்மையே. 


அப்பனே அம்மையே யான் ஏற்கனவே சொன்னேன். இத்தனை நாட்கள் ஏன் செல்ல வில்லை நடைப்பயணம்?.


அடியவர் 2:- தெரியவில்லை ஐயா. 


குருநாதர்:- அம்மையே பின் யான்

கூட தெரியவில்லை என்று சொல்லி விட்டு இருந்தால் எப்படி அம்மையே?



குருநாதர்:- அம்மையே பின் யீன் தெரிகின்றேனா? இல்லையா?


அடியவர் 1:- அகத்தியர் உன் கண்ணுக்குத் தெரிகின்றாரா? இல்லையா? 


அடியவர் 2:- மனசு அளவுக்கு தெரிகிறது. அவர் வந்தால், போனால் தெரிகிறது. 


குருநாதர்:- அம்மையே இப்பொழுது தெரிகின்றேனா இல்லையா?


அடியவர் 2:- ஆமாம்


குருநாதர்:- அம்மையே அப்போது தெரியவில்லை என்று ஏன் சொன்னாய்?


அடியவர் 2:- எனக்குப் புரியவில்லை first.


குருநாதர்:- அம்மையே அதனால் நிச்சயம் இவன்தன் வில்லன் என்றால் இவன் தனக்கு மேலே இருக்கின்றாய் நீ அம்மையே. அதனால் தான் இவன் உட்கார்ந்திருக்கிறான் நீ நின்று கொண்டிருக்கிறாய் அம்மையே இதற்கு பதில் தெளிவாக கூற வேண்டும் நீ.


( சில அடியவர்களை இல்லறத்தில் ஈடுபடுத்தி அவர்களை ஒரு நல் வாழ்வு வாழ அவர்கள் இல்லத்தரசிகளுக்கு பலம் அதிகம் கொடுத்து விடுவார் இறைவன். இந்த சூட்சும நிகழ்வு பல இல்லங்களில் நடந்து கொண்டே உள்ளது இறைவன் அருளால். அதாவது இல்லத்தில் கணவனை விட மனைவிக்கு பலம் அதிகமாக , கணவன் ஒரு திறமையாளனாக இருந்தும் - வெளியில் புலி, வீட்டில் எலி - அடங்கி வாழும் நிலை உண்டு. அதன் மகத்தான காரணத்தை குருநாதர் எடுத்து உரைத்தார்கள்) 



குருநாதர்:- அம்மையே  இதற்கும் காரணம் உண்டு அம்மையே. நீ இல்லை என்றால் இவன் பைத்தியனாக ( ஞான வழியில் ) திரிந்து இருப்பான். உண்மையா இல்லையா என்று அவனைப் பார்த்துக் கேள்.


அடியவர் 1:- உண்மைதான்.


குருநாதர்:- அதனால்தான் அப்பனே நீ கீழே உட்கார்ந்து இருக்கிறாய் அவள் தன் மேலே இருக்கின்றாள் ( நிற்கின்றாய்). அப்பனே புரிகின்றதா? அப்பனே அவள் இல்லை என்றால் எங்கெங்கோ சென்று அப்பனே ருத்ராட்சத்தை அணிந்து பின் ஐயோ!! அது இது என்றெல்லாம் ( கூறி )  பின் பாடங்கள் , எந்தனுக்கு  ஞானம் வந்து விட்டது , அனைவரும் அதைச்செய்கின்றேன், இதைச்செய்கின்றேன் என்றெல்லாம் தெருத்தெருவாக ஓடி இருப்பாய். இதனால்தான் அப்பனே யான் சொல்லி விட்டேன். 


அப்பனே பல பேர்களும் கூட அப்பனே அதனால் நிச்சயம் பின் தட்டிக்கேட்க அளவுக்கு ஒருவள் இருந்தால்தான் அப்பனே அனைத்தும் அடங்கும்மப்பா. 



அதனால் இவள்தனுக்கு  நீ அடங்கியே ஆக வேண்டும் அப்பனே . ஊருக்கு அடங்காவிடிலும் இவள் தனக்கு அடங்கி இரு அப்பனே. அனைத்தும் புரியும் என்பேன். 



இதனால் அம்மையே அனைத்தும் கிடைக்கும் கிடைக்கும்.  நான் சொல்லியது அம்மையே நிச்சயம் நடை பயணத்தை நிச்சயம் மேற்கொள்.  அனைத்தும் மாறும்.  அதனால் எக் குறைகளும் இல்லை. நல் நேரங்கள் தான் அம்மையே. ஆனாலும் சில சில புண்ணியத்தால் அம்மையே ( கடுமையான கண்டங்களில் இருந்து ) நீ தப்பித்து விட்டாய் அம்மையே.



அம்மையே மீண்டும் சொல்கின்றேன் அம்மையே. இவன்தன் இறைவன் இறைவன் என்று பைத்தியனாகிவிடுவான். அதனால்  அடிக்கடி தலையில் கொட்டிக் கொண்டே இரு. 



அதனால் நிச்சயம் எதையோ சொல்லி ஆனாலும் நீ நம்பவில்லை தாயே அதுவே போதுமானது என்பேன். அதுவும் இறைவன் செயலே. 


இதனால் அம்மையே எக்குறைகளும் கொள்ளத்தேவை தேவை. உன் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை யான் தந்துவிடுகின்றேன். 


அப்பனே கவலை இல்லை. ஒன்று 

என்று தெரியாமல் கூட ஒன்று என்று ஒருவளை கேட்டேன் அவளை வரச்சொல்.

( முதலில் வாக்கு கேட்ட அடியவரை அழைத்தார்கள் கருணைக்கடல்) 


அடியவர்:- அகத்தீசப்பா. லோபா அம்மா. 


குருநாதர்:- அம்மையே யான் என்ன கேட்டேன் அம்மையே. அதை நிச்சயம் ( என்னுடன்  ) வாதாடு. 


அடியவர்:- அப்பா, என்னுடைய சிற்றறிவுக்கு எட்டவில்லை அகத்தீசப்பா. 


குருநாதர்:- அப்பனே எது எந்த கீழிருந்து மேல் இருக்கிறாளே முதலில் உன் மனைவியைக் கேள்.


அடியவர் 1:- நீ கவனித்தாயா? ஒன்று என்று குருநாதர் உரைத்த வாக்கினை…


அடியவர் 2:- கேட்கவில்லை கடைசியில்


அடியவர் :- அகத்தீசப்பா உங்கள் திருவடி மட்டும் போதும் என்று நான் கேட்டேன் அகத்தீசப்பா. நீங்க ஒன்று மட்டும் கேட்டீர்கள்,  அகத்தீசப்பா. 


அடியவர் 2:- அந்த ஒன்று மட்டும் போதுமா என்று குருநாதர் கேட்கின்றார்கள். 


அடியவர் 1:- குருநாதர் அதற்கு முன் திருச்செந்தூரில் முருகனைப் பார்த்து அழுதீர்கள் என்று சொன்னபோது, குருநாதர் என்னைப் பார்க்கவில்லையா (அன்புடன்) என்று கேட்டார் இல்லையா?


அடியவர் :- ஆமாங்கய்யா


அடியவர் 1:- அப்போதுதான் சொல்கின்றார் ஒன்று என்று. அதாவது அவர் ( திருச்செந்தூர் முருகன் ) வேறு இல்லை நான் ( அகத்தியன் ) வேறு இல்லை என்று…


குருநாதர்:- அம்மையே இறைவன் ஒருவனே. அனைவருக்கும் இதை யாங்கள் உணர்த்தினோம்.  இன்னும் உணரவைக்கப் போகிறோம்.  அப்போது நம்பி விடுவான் (மனிதன்).  அம்மையே நீ சொன்னாயே அனைவருக்கும்  பின் தான தர்மங்கள் செய்யவேண்டும் என்று (எண்ணுகின்றாயே) , உன் பக்கத்தில் இருக்கின்றாளே அவன் பின் மூதேவியாகவா இருக்கின்றாள்?. அவள் தனக்கு தேநீர் கொடு உன் கைகளால்.

(அடியவரை தேநீர் கொடுக்கச்சொன்னார்கள்  கருணைக்கடல்) 


குருநாதர்:- அம்மையே, அப்பனே இதனால் நல்ஙிதமாகவே இன்னும் வாக்குகள் சிறக்க பொருத்திருக.


அடியவர் 1:- குருநாதா!!!!!!!!!!


நாடி அருளாளர் :- ஐயா யாராவது 

விருச்சிக ராசி, மகர ராசி, கும்ப ராசி அதன்பின் மேஷம் யாரும் இருக்கின்றீர்களா? 


( அங்கு உள்ள பலர் தனது ராசியை தெரியப்படுத்தினர். அவர்கள் அனைவரையும் நாடி அருளாளர் முன்னே வந்து அமரச்சொன்னார்கள். இந்த ராசியினர் வருவார்கள் என்று முன்பே நாடி அருளாளருக்குத் தெரியப்படுத்தி விடுவார் கருணைக்கடல். )  



குருநாதர்:- அதன் முன்னே எதை என்று கூற குருவானவன், முதலில் வில் அம்பு…


நாடி அருளாளர்:- தனுசு ராசி யாரும் இங்கு வந்து உள்ளீர்களா?


( தனுசு ராசி அடியவர்கள் முன்னே அமர்ந்தனர்) 



குருநாதர்:- அப்பனே இதனால்  சில பக்குவங்கள் நிச்சயம் அப்பனே அனைத்தும் இழந்தாலும் ஆனால் இருக்கின்றது அப்பனே இதற்கு பதில் அளி. 


அடியவர் 4:- இறை நம்பிக்கை நம்பிக்கை மட்டும் தான்.


குருநாதர்:- அப்பனே இதை அனைவருக்குமே சொல்.  எழுந்து நில்.


அடியவர் 4:- இறை நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் . யாரும் கவலைப்படாதீர்கள். அது ஒன்று மட்டுமே உங்கள் எல்லாரையும் காப்பாற்றும்.



குருநாதர்:- அப்பனே , நீ இறக்கக்கூடியவன். இவ் (இறை) நம்பிக்கை உன்னை காப்பாற்றி விட்டது. அப்பனே பின் கஷ்டத்திலும் இறைவன் இருக்கின்றான். இதற்கு பதில் அளி அனைவருக்குமே.


(கோவையில் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும்…...) 


https://siththarkalatchi.blogspot.com/2023/11/242-2.html?m=0

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!




Sunday, November 26, 2023

சித்தர்கள் ஆட்சி - 240 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 5-9-2023 உரைத்த வாக்கு - நிறைவுப் பகுதி 36


 

பகுதி - 36 ( நிறைவு பகுதி ) 


“அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - நிறைவு பகுதி 36 )



இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/11/239-5-9-2023-35.html?m=0


அடியவர் :- ( குருநாதர் என்ன வேண்டும் என்று இந்த சிறுவன் அடியவர் அதற்கு வீடு வேண்டும் என்று கேட்க , அதற்குப் பின் வருமாறு உரைத்த வாக்கு - பொது வாக்காக அடியவர்கள் ஏற்றுக் கொண்டு குழந்தைகளை வளர்க்க நலம் உண்டாகும்) 



குருநாதர்:-  அப்பனே இவன் இப்படி எல்லாம் கேட்கிறானே, இதிலிருந்தே தெரிகிறது அப்பனே இவன் லட்சணத்தை அப்பனே. இவன் சரியாக அப்படியே முதலில் நன்றாக ஓத வேண்டும், இன்னும் மேற் கல்விகள் கற்க வேண்டும்,  பின் அதன் பின்பே அனைத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கேட்க வில்லையே அப்பனே. எப்படி வளர்த்துள்ளார்கள் பார் என்பேன் அப்பனே. இப்படியெல்லாம் வளர்த்தார்கள் தான் அப்பனே பின் துன்பப்படுகின்றார்கள் பெற்றோர்கள் கூட. 

அதனால் அப்பனே என்ன வேண்டும் என்று நீ கேட்க வேண்டும். யான் அப்பனே நீ இறைவனை நினைத்து , அனுதினமும் தீபம் ஏற்றி , அவன் அதாவது கந்த சஷ்டி பாடலை பாடிக்கொண்டே வா அப்பனே. நீ என்ன கேட்டிருந்தால் அப்பனே யான் இன்னும் நன்றாக ஓதுதல்  வேண்டும் , இன்னும் மேற்கல்வி அறிய நல்ல அறிவு பின் இறைவா தர வேண்டும்,  அதனை பயன்படுத்து பின் தாய் தந்தையருக்கு அனைத்தும் நன்றாகச் செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் மக்களுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும் என்று தான் அப்பனே  இறைவன் இடத்தில் அப்பனே வேண்ட வேண்டும் அப்பனே. இப்படி வேண்டினால் தானாகவே உன் பெற்றோர்களுக்கு அனைத்தும் கொடுத்து விடுவார்கள் அப்பனே. தெரிந்துகொள் அப்பனே. 


தெரியாது அப்பனே உன் அம்மையும் இப்படித்தான் வாழ வேண்டும், இறைவனை எப்படி வணங்க வேண்டும்? என்று எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்த வாக்கில் கூறுகின்றேன் அப்பனே. தெரியாமல் பின் அப்பனே அதாவது சில சில வழிகளில் கூட பிள்ளைகள்  எப்படி வளர வேண்டும் என்பதைக் கூட அப்பனே தாய் தந்தையருக்குத் தெரியாமல் வளர்த்து விடுகின்றார்கள். இதனால் தான் குறைகள் அப்பா. அதனால் அப்பனே சொல் அவள் அதாவது ( உன் ) பெற்றவள்தனக்கு இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று அப்பனே சொல்லிக்கொடு. 


அடியவர் 1: அடுத்த பிறவி எடுக்ககூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டும். 


குருநாதர்:- அம்மையே இறைவனையே நினைத்துக் கொள். எதையும் மனதில் நினைக்க கூடாது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன். அப்பனையும் அம்மையும் மனதில் நினைத்துக்கொள். கவலைகள் இல்லை.


அடியவர் 2:- செய்வினை கோளாறுகள் நிறைய உள்ளது ஐயா. 


குருநாதர்:- அப்பனே வாராகி தேவியின் தலத்திற்கு சென்று கொண்டே வா அப்பனே. 


அடியவர் 3: ( இந்த அடியவர் தனது வாழக்கை நிலை குறித்து கேட்ட கேள்வி. அதன் பதில் பொது பதிலாக அனைவருக்கும்) 



குருநாதர்:- அப்பனே நேற்றைய பொழுதிலே சொல்லிவிட்டேன். இறைவன் அதாவது விதியில் எப்போது இருக்கின்றதோ அப்பொழுதுதான் நடக்கும் என்பேன் அப்பனே.  அதன் முன்பே போராடினாலும் அப்பனே சண்டைகள் போட்டாலும் அப்பனே நடக்காது அப்பா. சொல்லி விட்டேன். அதற்கு அதாவது விதியில் எப்பொழுது பின் எவ்வயதில் ,  அப்பனே பின் என் நேரத்தில் நடக்கும் என்பதை கூட ( அறிந்து கொள்வதற்கு ) சில புண்ணியங்களாவது  தேவைப்படுகிறது அப்பனே. புண்ணியங்களை செய்யச்சொல் அடுத்த வருடம் யான் சொல்லுகின்றேன். வரச்சொல். 


அடியவர் 4:- ( இதனிடையில் அங்கு ஓர் இளமங்கைக்கு அனைவர் இருக்கும் இடத்தில் வரும் பொழுது எப்படி பாரம்பரிய உடை உடுத்தவேண்டும் என்று அறிவுரை அளித்தார்கள்.) 


குருநாதர்:- அம்மையே பக்குவம் இல்லாமல் எதை செய்தாலும் தோல்வியில் முடிந்து விடும். அம்மையே தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திரிக்கச்சொல்.


அடியவர் 5:- ( சில தனிப்பட்ட கேள்வி. அதன் பதிலில் மலைக்க வைக்கும் பொது ரகசியம்.)


குருநாதர்:- ( இந்த அடியவரின் பிரச்சினைகளை எடுத்து உரைத்தார். அதில் உலகம் அறியாத அக்தீசனின் இறை வல்லமை செயல் ஒன்றை எடுத்து உரைத்தார்கள்.


ஒரு செல்லானது அம்மையே கண்களில் இருக்க வேண்டும். அது மூளையில் வந்து அமர்ந்து விட்டதம்மா. யான் மீண்டும் அமர்த்துகின்றேன். அப்பொழுதுதான் உந்தனுக்கு மனக்குழப்பங்கள் என்பதே வராது. அதை முதலில் யான் சீர்படுத்தி அனைத்தும் தருகின்றேன். ஆனால் நீ பேசக்கூடாது. வாய் திறக்கக்கூடாது. சொல்லிவிட்டேன் அம்மையே. ( அவர்கள் பெற்றோரை பாரத்து பேசாமல் இருக்க கடும் உத்தரவு ஒன்று வழங்கினார்கள் ). 


( அடியவர்கள் கவனிக்கவும்:- தமது உடம்பில் பல தொல்லைகள் நமது கர்மாவினால், அணுக்களின் நகர்வுகளால் நடக்கின்றது. இதனை சரி செய்யும் இறை வல்லமை அகத்திய பிரம்ம ரிஷிக்கே உண்டு என்பதை உணர்க. இது போன்ற பல இறை வல்லமைகள் உள்ள ஆதி குருவின் வழி நடக்க, அவர் நாடி வாக்கினை படிக்கும்  நீங்கள்  புண்ணியவான்களே. இது போல குருநாதர் பலருக்கும் , பல கோடானு கோடி உயிர்களுக்கும் அருளுகின்றார் என்பதை உணர்ந்து அவர் பாதம் நன்றியுடன் பணிந்து அவர் கூறிய தர்ம வழியில் நடந்து முக்தி பெறுங்கள். ) 



அடியவர் 6:- ( தொழில் ஏற்ற தாழ்வு குறித்த கேள்வி. அதன் பதில் பொது பதிலாக அருளினார்கள்.)



குருநாதர்:- அப்பனே இவை எல்லாம் வரும் போகும் என்பேன் அப்பனே. இறைவன் கொடுப்பதை அவனே எடுத்துக்கொள்வான் என்பேன் அப்பனே. அனைவருக்குமே இது உண்டு அப்பனே. கல்வி கொடுத்தாலும் கடைசியில் எடுக்கத்தான் போகின்றான். தொழில் கொடுத்தாலும் கடைசியில் எடுக்கத்தான் போகின்றான். இறைவன்  எதை கொடுத்தாலும்  அது இறைவனுக்கு சொந்தம் அப்பா. இவை எல்லாம் ஏற்ற தாழ்வுகள் வரும். இவை எல்லாம் யார் ஒருவன் சரியாக சுமந்து செல்கின்றானோ அவன்தான் வெற்றியாளன் என்பேன் அப்பனே. 

அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று யார் இருந்துவிடுகின்றானோ அவன்தான் மனிதன் அப்பனே. இதை அனைவரும் உணர்க அப்பனே.

நிச்சயம் தொழில் என்றால் பிரச்சினை வரும் என்பேன் அப்பனே. அதே போல் திருமணம் அதாவது கணவன் மனைவிமார்களுக்கும் பிரச்சினை வரும் அப்பா. பிரச்சினை இல்லாமல் யாரும் இல்லையப்பா. இவை எல்லாம் ஒரு கேள்விகளே இல்லை அப்பனே. 


ஞானத்தை பற்றி கேட்கச்சொல் , விதியினை சொல்லிவிடுகின்றேன் அப்பனே. 3 மாதங்கள் ஈசன் தலத்திற்கு சென்றுவரச்சொல் அப்பனே அனைத்தும் சொல்லி விடுகின்றேன்.


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு நிறைவு பெற்றது.) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!