“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, March 28, 2022

சித்தர்கள் ஆட்சி - 55 : அகத்திய மகரிஷி ஜீவநாடி வாக்கு

 



22/01/2022 - அகத்திய மகரிஷி அடியவர் ஒருவருக்கு வாசித்த வாக்கில் உள்ள பொது வாக்கு.

ஆதி சிவன் பொற்க்கமலங்களை பணிந்து இசைகிறேன் அகத்தியன்.  

அப்பனே காலம் அப்பனே நம் தன் கையில் இல்லை என்பேன் அப்பனே.  அப்பனே என் பக்தனாக கடைக்காலம் தன் இருந்திடு. மற்றவையெல்லாம் யான் பார்த்துக்கொள்கிறேன்.  

அப்பனே கலியுகத்தில் அநியாயங்கள் தான் மிச்சம் என்பேன் அப்பனே ஆனாலும்  சித்தர்கள் யாங்கள் அப்பனே  யுக யுகங்களாக  தோன்றி தோன்றி இப்புவிதனில் மக்களுக்கெல்லாம் அப்பனே நல்வழிப்படுத்த அப்பனே பலமுறை சேதியையும் உரைத்துக்கொண்டிருக்கிறோம்.  ஆனாலும் அப்பனே அதை மனிதன் ஏற்பதாக தெரியவில்லை அப்பனே.  

அப்பனே எவை என்று கூற ஆனாலும் என்னுடைய அருள் பெற்றவர்களே அப்பனே எவை என்று கூற இன்னும் இறைவழி இணைந்து நின்று கூற மனதில் அப்பனே மாய உலகில் அப்பனே சிக்கிக்கொண்டு அப்பனே உண்மை பொருளை எதுவென்றே அப்பனே தெரியாமல்  மாண்டு மாண்டு அப்பனே மீண்டும் மீண்டும் பிறப்புக்கள் எடுத்து கட்டங்களை சந்திக்கின்றனர்.  

ஆனாலும் அப்பனே கவலையில்லை என்னுடைய அருளாசிகள் அப்பனே, அப்பனே உன் தந்தையாக நானிருக்கின்றேன் நல்முறையாக உன் தாயவளாக லோபாமுத்திரை தேவியும் இருக்கின்றாள் 

அப்பனே போராட்டம் நிறைந்த வாழ்க்கையப்பா எவை என்று கூற அதனால் எவை என்று கூறும் அளவிற்க்கு அப்பனே என்னுடைய ஆசிகளும் இருக்க அப்பனே நிச்சயமாய் பரிசுத்தமாக அப்பனே  வரும் வரும் காலங்களில் கூட அப்பனே  எதனை என்று நிரூபிக்கும் அளவிற்கும் கூட என்னுடைய ஆசிகள் கிடைத்தாலும் கிடைத்து இவை என்று கூற அறிதல் பலம் பெற்று அப்பனே என்னையும் காண்பாய் என்பேன் 

அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே என்னை நம்பினோருக்கு நான் நிச்சயம் கடைநாளில் காட்சியளிப்பேன் அப்பனே இது ஒரு சிலருக்கு புரியும் என்பேன் 

அப்பனே என் மீது நம்பிக்கை அப்பனே உந்தனுக்கு அப்பனே உன் லோபாமுத்ரா தேவியும் எவ்வாறு என்பதை கூறும் அளவிற்கும் கூட உன் அன்னையவள் என்பேன்.  

அப்பனே கவலையில்லை அப்பனே முழுவதையும் தந்துவிட்டோம் அப்பனே வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்பேன் ஆக விதி என்பதை போல் யான் இருக்கின்றேன் எக் கவலையும்  கொள்ளவேண்டாம் 

அப்பனே இன்னொரு விடயத்தையும் சொல்கிறேன் அப்பனே இதை பொதுவாகவே சொல்கிறேன்.  

அப்பனே மனிதன் என்பவன் இவ்வுலகத்தில் பிறக்கும் பொழுது இன்பமும் துன்பமும் வந்து விடுகின்றது. ஆனாலும் அப்பனே இன்பம் இருக்கும் பொழுது இறைவனை கான கானக்கான மனம் துதிப்பதில்லை( அதாவது வணங்குவதில்லை ). ஆனாலும் துனபத்தில் வரும்பொழுது கூட அப்பனே இறைவனைக் கான்கின்றான் ( அதாவது பயத்தில் வணங்குகின்றான்). ஆனாலும் அப்பனே விதி என்பது எதுவென்று தெரிவதில்லை.

இன்பத்திலும் “இறைவா! இறைவா!!” என்று சொல்லிக்கொண்டே இருந்தால் துன்பத்தில் “ ( தன் ) கையை உயரத்திக்கான்பிப்பான் எப்பேன் இறைவன் . இதுதானப்பா உண்மை.  

அதனால் இன்பம் துன்பம் மாறி மாறி வருவது இயல்பே அதனால் அப்பனே கட்டங்கள் இல்லை என்பேன்.

அப்பனே துன்பத்திலும் உன் அருகிலே யான் இருக்கிறேன் அப்பனே கவலை இல்லை.

அப்பனே எவ்வாறு என்பதை கூட அநியாயங்கள் அக்கிரமங்கள் மிஞ்சி காணப்படுகின்றன என்பேன் ஆனாலும் நல்லோர்கள் சிலரே இருக்கின்றனர் ஆனாலும் நல்லோர்கள் பேச்சு அப்பனே நீரில்தான் போடுகிறார்கள் அப்பனே தீயவர்கள். அதனால் பலனில்லை இல்லை. 

அப்பனே யான் தானே புவியில் இறங்கிவிட்டோம். அப்பனே ஒரு சில மாற்றத்தை அப்பனே நிச்சயம் கொண்டுவருவோம்.  நல்லோர்களை ஏற்படுத்துவோம் அப்பனே நல்விதமாக சரிசெய்வோம் 

அப்பனே அப்பனே பகல் ஒன்று இருந்தால் இரவு நிச்சயம் உண்டு என்பேன் இது தானப்பா மனிதனின் வாழ்கை.  மனிதனின் வாழ்க்கை சில நொடிகளே அது எங்களுக்கு மட்டுமே புரியும் என்பேன் ஆனால்  மனிதனோ பல வருடங்களாக  வாழ்ந்துகொண்டு யான் இருக்கிறேன் என்பதற்கேற்ப தன்  வாழ்வில் என்னை வீழ்த்தமுடியாது பின் யான் தான் பல உருவாக்குவேன் என்பதை கூட மனிதன் மனதில் எண்ணி கொண்டிருக்கிறான் ஆனாலும் அப்பனே வேஷம் அப்பா. 

அப்பனே ஒன்று சொல்கிறேன் அப்பனே ஒரு யோகம் என்பது கூட ஒரு பத்து ஆண்டுகள்தான் அப்பனே. அதன்பின்னே துவங்கிவிட்டால் அப்பனே யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன். 

ஆனால் பத்து ஆண்டுகள் இறைவன் நல்லபடியாகவே கொடுப்பான். இவன்தன் என்னவென்று செய்வதறக்கு என்று. அவ் பத்து ஆண்டுகள் பல புண்ணியங்கள் செய்து வந்தால் அப்பனே அடுத்தடுத்து அப்பனே பல மடங்கு பல மடங்கு அவ் பத்து வருடம் என்பது இறைவன் முப்பது வருடங்களாக இவ் பத்து வருடங்களை விட பின் பன் மடங்கு உயர்வது கிடைக்கும் என்பேன்.  

ஆனாலும் அப்பனே பத்து வருடங்களில் ஆடி அலுத்துவிடுகின்றான் மனிதன் என்னென்னவோ செய்து. அதனால்தான் அப்பனே அடுத்தடுத்து  வரும் ஆண்டுகள் அப்பனே மனிதனுக்கு குறைகளாக உண்டு. அப்பனே இதுவும் பொதுவாகவே யான் உரைக்கின்றேன். 

அனால் அப்பனே கறை ( தீய வினைகள் ) , அப்பனே கறை யொன்றும்  எவ்வாறு என்பதையும் புரிந்துகொண்டுவிட்டால் அதை நீக்க தெரியாது மனிதனுக்கு ஆனால் அப்பனே எங்களால் முடியும் என்பேன். 

அப்பனே சொல்கின்றேன் அப்பனே கிராம்பு,  அப்பனே வெற்றிலை அப்பனே இவையென்று கூற சிறிதளவு வேப்பன் அப்பனே இவையென்று கூற சிறிதளவு பட்டை, லவங்கம், திப்பிலி முறையே என்று கூற மிக க்ஷேமம் இவற்றையெல்லாம் நல்முறையாக அரைத்து அப்பனே நீரில் பலமாக சூடேற்றி அப்பனே அடிக்கடி பின் உன்னுடன் உள்ள அனைவரையும் அருந்திவர சொல் அப்பனே நல்முறையாகவே நோய் தாக்காது என்பேன்.  இவற்றுடன் அடிக்கடி அப்பனே ஏலக்காய் நீரும் பருகி வா அப்பனே.  இத்துடன் சிறிதளவு கொத்தமல்லி போல் பின் வாசனை எவை என்று கூற அதனையும் உண்டு வர பின் அடிக்கடி சிறிதளவு கற்பூரவல்லியும் அப்பனே உண்டு வரவும் அப்பனே.  மற்றவர்களுக்கும் அப்பனே சொல்.  

அப்பனே  இனி வரும் காலங்களில் நோய் நொடிகள் அப்பனே அதிகமாக வரும் என்பேன் அப்பனே  அதனை எதிர்ப்பதற்கு இருக்கிறது எளிய வைத்திய முறை 

ஆனாலும் அதனை பயன்படுத்துவதில்லை. மக்கள்  பயன்படுத்திக்கொண்டால் பிழைத்துக்கொள்வார்கள்.

இதுதானப்பா கர்மா நிறைந்த உலகம். இதுதானப்பா கலியுகம். ஆனாலும் நல்லோர்கள் யாங்கள் இன்னும் இருப்போம் அப்பனே நல்லோர்கள் இருக்க நல்விதமாக சில விந்தைகள் காண்பித்து அருள் கொடுத்து இன்னும் பலம் பெற பாடுபடுவோம் பாடுபடுவோம்.  

அல்லாமல் சில பேருக்கு கட்டங்கள் கொடுத்தால் தான் திருந்துவார்கள்  என்பது எங்களுக்கு தெரியும் என்பேன் அதனால் சில கட்டங்கள் கொடுத்து திருத்துவோம் அப்பனே.  

எனக்கு தெரியும் அப்பனே புதிய மலராக மலர செய்வோம் இவ்வுலகத்தில் அப்பனே.   

பக்தி தலைகீழாக மாறிவிட்டது அப்பனே புண்ணிய தேசத்தில் கலியாக மாறிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது அப்பனே. நல்முறையாக  மக்களுக்கு சேவை செய்யவே அப்பனே பல வழிகள் உள்ளன அப்பனே.

அப்பனே நல்விதமாய் அப்பனே இவ்வுலகத்தில் அவரவர் எவ்வாறு விருப்பப்படியோ அவ்வாறே யான் செய்கிறேன் அதுமட்டுமல்லாமல் நீங்கள்  செய்யும் சேவைகள் இன்னும் பலமாக வேண்டும் என்பேன் அப்பனே குறைவில்லை அப்பனே தந்தையாக நானே இருக்கின்றேன் தைரியமாக இரு அப்பனே மற்ற வாக்கும் சொல்கிறேன் அடுத்த வாரத்திலும் கூட  அப்பனே இன்னும் ஒரு மண்டலம் கழித்து கேள் மகனே.


---------------------------- ( சுபம். நாடி உரை முற்றே ) ----------------------


 



No comments:

Post a Comment