இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 12.08.2026 அன்று அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்கு - பகுதி 3
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகள் போற்றி !!!
===========================
# அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு
===========================
அகிலத்தை ஆளக்கூடிய அகிலாண்ட தேவியே!!!, அகிலாண்ட ஈஸ்வரனே!!!
பணிந்து பரப்புகின்றேன், புசண்டனே.
( பகுதி 2 அதன் தொடர்ச்சியாக …)
===========================
# யுக யுகங்களாக மனிதனை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- இவ் பிரார்த்தனைக்கும் கூட.. ஆனால் ஒரு ஒரு மனதை கூட நன்றாக இல்லையடா, மானிடர்களே.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க கூட்டு பிரார்த்தனை (அவர்) வந்திருக்கின்றார்.
காகபுசண்ட மாமுனிவர்:- ( தனி குழு வாக்குகள் )
காகபுசண்ட மாமுனிவர்:- இதனாலே, மானிடர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இதனால் தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு— ஆனாலும், அதாவது, இதையும் யான் சொல்வேன். அறிந்தும், அதாவது, அறிவு இல்லை என்றால், நிச்சயம் பின், அதாவது, அறிந்து கொள்ள முடியாது.
***** யாங்களே விலக்கி விடுவோம். அவர்களின் விதியில் கடுமையான தோஷங்கள் இருந்தால், அறிந்தும் எங்கள் அருகிலே எதை என்று புரிய வரவிடாமல் யான் செய்வேன். *****
***** ஆனால் அகத்தியனோ, கருணையோடு வரவழைத்துக் கொண்டே இருக்கின்றான், அறிந்தும். *****
காகபுசண்ட மாமுனிவர்:- ஏனென்றால், அறிந்தும், மனிதன் இவ்வளவு அழுக்குகளை வைத்துக்கொண்டு திருந்துவானா என்று நிச்சயம் பின், அதாவது, அகத்தியன் தான் எண்ணிக்கொண்டிருக்கின்றான். ஆனால் எனக்கு நன்றாக தெரியும் மனிதனைப் பற்றி.
***** ஏனென்றால், யுக யுகங்களாக மனிதனை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். *****
***** அதாவது, திருடுவது தவிர அவனுக்கு ஒன்றுமே தெரியாது. பாவம் மனிதன். *****
சுவடி ஓதும் மைந்தன் :- பல யுகங்களாக நான் மனுஷன பார்த்துட்டேன் பா…. அகத்தியர் கூட கருணை கொண்டுவிடுவார். ஆனால் மனிதன்— பல யுகங்களாக நான் பார்த்துக்கிறேன்.
===========================
# திருடுவது என்றால் என்ன?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- மனிதன் திருடுவதற்காக— அறிந்தும், திருடுவது என்று பின் என்ன என்று கேள்வி கேட்பார்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- திருடுவது என்றால் என்ன என்று கேள்வி கேட்பார்கள்.
காகபுசண்ட மாமுனிவர்:- பின் யான் உங்களைப் பார்த்து கேட்கின்றேன்: திருடுவது என்றால் என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- திருடுவது என்றால் என்னன்னு கேட்கிறார்.
அடியவர் 4:- அய்யா பிறகு அனுமதி இல்லாம, அவனுடைய பொருளையோ, உழைப்பையோ நாம பயன்படுத்தி…
===========================
# பாவ வினைகளை திருடும் திருடன்-மனிதன்.
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- திருடுவது என்பது எதை என்று கூற, அறிய பல பாவ வினைகளை மனிதன் திருடுவதே என்பது பொருள்.
சுவடி ஓதும் மைந்தன் :- பல பாவ வினைகள் வந்து, நம்மே ஏத்துக்கறோம்ன்றாருங்க, ஐயா. வேற யாரும் ஏத்துக்கறது இல்லை, கொடுக்கறது இல்லை. இது நம்மளே தான்.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும், என்னென்ன— அறிந்தும், ஏது என்று புரிய, என்னென்ன திருடுகிறீர்கள்?
அதாவது…
***** போட்டி *****
***** பொறாமை *****
***** துரோகங்கள் *****
***** வஞ்சகங்கள் *****
இன்னும்
***** பொய் பேசுதல் *****
இன்னும் எவை என்று கூற
***** குறை கூறுதல் ***** ( பிறரை பற்றி புறம் பேசுதல் )
இவையெல்லாம் பின் நீங்கள் திருடிக் கொண்டிருக்கின்றீர்கள். புரியுதடா, மானிடா?
அடியவர் 2:- புரிகின்றது தந்தையே நிச்சயமான உண்மை.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்போ பாருங்க, ஐயா, நம்மளுக்கே தெரியாது, இவர் சொன்னதா உண்டு. எப்படி சொல்றார் பாருங்க, காகபுசண்டர் வந்து… நம்ம வந்து, வினை ஏற்படுத்தோம். நம்ம திருடினுக்கிறோம். அந்த— அதெல்லாம் வந்து திருடினுக்கிறோம். பொறாமை வந்து, நம்ம திருடுறோமாம். இப்ப பாருங்க, திருடி வச்சீங்கன்னா எவ்வளவு தண்டனை அதுக்கு வந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, சரியா சொல்லி இருக்காருங்க, ஐயா. ஒரு திருடனா, எது திருடனா, அந்த பொருள் எடுக்குறது இல்ல. அந்த ஒரு பொருள் எடுக்குறதே திருடனா, எவ்வளவு இது? எதை ?
அடியவர் 10:- பாவத்தை, அடுத்தவங்களோட பொறாமையை…..
சுவடி ஓதும் மைந்தன் :- அதை எடுத்து வச்சுட்டு இருக்கீங்க. அது ஒரு நாள் என்ன ஆகும்? வந்து,
அடியவர் 10:- தண்டனைக்கு?
சுவடி ஓதும் மைந்தன் :- தண்டனைக்கு…
அடியவர்:- அவன் (கெட்டது) வச்சிருக்கிறான். நிறைய. நம்ம அவன்கிட்ட போய் பொறாமைப்பட்டு, அவன் திருடுறதை நம்ம எடுத்துக்கிட்டோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- திருடினுக்கிறோம். நீயே திருடினுக்கிறோம் வந்து, எல்லாமே.
அடியவர் 9 :- இதைத்தான் திருவள்ளுவர் சொல்லி இருக்காருங்க, ஐயா.
"உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். ."
(திருக்குறள் - கள்ளாமை)
காகபுசண்ட மாமுனிவர்:- எதை, ஏது என்று புரிய. அழகாக சொல் விளக்கத்தை, அனைவருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதை அழகா சொல்லுப்பா, எல்லாருக்கும் விளக்கத்தை.
அடியவர் 9 :-
"உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். ."
அப்படின்னு திருவள்ளுவர் எழுதி இருக்காங்க. அதாவது, நம்ம உள்ளத்தால கூட, இன்னொருத்தரோட பொருளை, அதை எடுத்துடுவோம்டா, திருடுவோம்டான்னு நினைக்கிறது கூட, பாவத்தை சேர்க்கும் என்பது பொருளாகும்.
===========================
பிறர் சொத்தைக் கள்வத்தால் கவர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மிகப் பெரிய தீமை. திருடும் செயல் மட்டும் குற்றம் அல்ல; திருட வேண்டும் என்ற மன நினைவு கூட மனிதனை அழுக்காக்கி, தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும். பிறர் பொருளை வஞ்சித்து, சூழ்ச்சி செய்து, அவருக்குத் தெரியாமல் எடுத்து விடலாம் என்று உள்ளத்தில் நினைப்பதே தவறானது. ஆகவே, குற்றம் செய்கிற செயலுக்கு முன் மனத்தில் எழும் அந்த தீய எண்ணமே மனிதனின் நெறியை கெடுக்கும்
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- இங்கு திருடுவது எதைச் சொன்னேன் யான்?
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கு திருடுவது எதைச் சொன்னேன்னு கேட்கிறார்?
அடியவர் 5 :- அதாவது, மனிதனுடைய குணநலன்கள்.
===========================
# அகத்திய மாமுனிவரிடம் உள்ள நல் விஷயங்களை, எப்பொழுது திருடப் போகின்றீர்கள் நீங்கள்?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- அதாவது, சொன்னேனடா… எப்பொழுது பின் நல் விஷயங்களை திருடப் போகின்றீர்கள் நீங்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப என்ன சொல்றேன்னா, எப்பலாம் நீங்க நல்ல— எப்படி சொல்றது?
அடியவர் 5 :- நல்ல விஷயங்களை திருடப் போறீங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்ப நல்ல விஷயங்களை நீங்க திருடப் போறீங்க.
காகபுசண்ட மாமுனிவர்:- இது தான் பின் அகத்தியனிடமே இருக்கின்றது.
***** பின் அதையும் கூட திருட முடியவில்லையே உங்களால். *****
***** ஆனால் எப்படி வாழ்வீர்கள் நீங்கள் சொல்லுங்கள்? *****
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியனிடமே நல்ல இதெல்லாம் இருக்குதுடா.
அடியவர் :- அவங்க சொன்னதை கேட்டாலே…
சுவடி ஓதும் மைந்தன் :- அவங்க, அவங்களிடம் எப்படிடா நீங்க திருடுறது? நல்ல விஷயங்கள் எல்லாம் கேட்டு, அதை நீங்க முதல்ல திருடுங்கடா. நீங்க நல்லா ஆயிட்டீங்க வந்து. அதையே நீங்க வந்து, அதை திருடல. நல்ல விஷயங்கள், நல்ல இது வந்து—
அடியவர் :- ஐயா, அவங்களுக்கு நம்ம திருட மாட்டோம்னு தெரியும். தெரிஞ்சு சொல்றாரு. குருநாதர் சொல்றாரு இல்ல.. அதையும் கேட்க மாட்டேங்குறான்.
காகபுசண்ட மாமுனிவர்:- இப்பொழுது தெரிகின்றதா? எவை என்று அறிய மனிதன் எதை திருடுகின்றான். எதை திருடாமல் இருக்கின்றான் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்பொழுது தெரிகின்றதா? அப்ப நல்லது சொன்னா, நல்லது சொன்னா, யாரும் கேட்க மாட்டார்கள். அப்ப நல்லது சொன்னா, அதுதான் திருடுறது. நல்லது சொன்னா வந்து, "டேய், நல்லதே செய்றேடா"ன்னு சொல்றாங்க இல்ல, அதை திருடு. அதை திருடுடா முதல்லன்றாரு. ஓ, ரைட். நல்லதே செய்றேன். அதை திருடுனா நல்லது. அடுத்து என்ன சொல்றாருங்க, ஐயா?
அடியவர் 6 :- போட்டி, பொறாமை.
அடியவர் 8 :- அகத்தியர் கிட்டயே இருக்கீங்க. அவர்கிட்ட இருந்து திருடுங்கங்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி இல்ல, அப்படி இல்ல. நல்ல விஷயங்கள்—
அடியவர் 2 :- நல்ல விஷயங்கள் திருடனும்.
சுவடி ஓதும் மைந்தன் :- நல்ல விஷயங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவங்க கிட்டே இருந்து திருடுங்கடா. நிறைய சொல்லி இருக்காரு. அதை, அதை யூஸ் பன்னுங்கடா என்றார் வந்து.
===========================
# 1 + 0 = ?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- ஏது என்று புரிய. இப்பொழுது விவரமாக, அதாவது, அறிந்தும்— இதை என்று புரிய. உள்ளதே பின் ஒன்று, அதனுடனே பூஜ்யத்தை பின் கூட்டினால் என்ன?
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்று, அதனுடன் பூஜ்யம் கூட்டினால் என்ன?
அடியவர் 6:- பத்து
அடியவர் 7:- ஒன்று.
காகபுசண்ட மாமுனிவர்:- ஒருவன் சொல்கின்றான் பார், முட்டாள்தனமாக.
சுவடி ஓதும் மைந்தன் :- உங்கள தான் சொல்றாரு. பத்து என்றார் இவர் வந்து. ஒரு முட்டாளாக சொல்கிறான் பாருன்றாரு. பத்து என்றார் ஒருத்தர் இங்க இருக்கிறவர்.
===========================
# 1….0 = ?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- அப்பொழுது அறிந்தும் ஒன்றின் பின் பூஜ்யத்தை சேர்க்க எவ்வளவு?
அடியவர் 1 :- 10ங்க அய்யா .
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் மீண்டும் பூஜ்யத்தை சேர்.
அடியவர் 1 :- 100ங்க அய்யா .
காகபுசண்ட மாமுனிவர்:- மூன்றும்…
சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது, இன்னொன்னு சொல்றாரு.
அடியவர் 1 :- 1000ங்க அய்யா .
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் இப்படியே சேர்த்துக்கொண்டால், நிச்சயம் ஒன்றுக்கு பின் மதிப்பு அதிகமாகும். அதே போலத்தான், இறைவன் ஒன்றே. நிச்சயம் பல்வேறு வடிவங்களாக அறிந்தும்— எதை என்று. ஆனால் அனைத்தும் ஒருவனைப் போய் சேரும். இதனையும் இன்னும் பின் விளக்கமாக தெரிவித்தால் தான் உண்டு.
===========================
# எப்போது உங்கள் மதிப்பு கூடும் ?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- இதனால் அகத்தியன் எவை என்று அறிய. நீங்கள் எல்லாம் பூஜ்யங்கள். அதனால் அகத்தியன் ஒன்று என்று நினைத்துக்கொள்வோம். இப் பூஜ்யங்கள் பின் நிச்சயம் ஒன்றின் பக்கம் இருக்க, நிச்சயம் மதிப்பு அதிகமாகும். அதைத்தன் பின் நிச்சயம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் வீணே.
அடியவர் 5 :- சரிங்க , குருதேவா.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியுமா இங்க ?.
அடியவர் 9 :- குருநாதர் முன்னாடி நிக்கிறார்… ஒன்னா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்னா நிக்கிறாரு. ஒன்னு. அவர் தான்.
அடியவர் :- ஏன் (குருநாதர்) பின்னாடி போய் நிக்கணும்? ஒன்னு பின்னாடி போய் நின்னா தான் அதுக்குண்டான மதிப்பு வரும்…
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எல்லாம் ஜீரோ. அப்படித்தான் சொல்றாரு. அப்ப ஒன்னுக்கு பக்கத்துல நின்றோம் என்றால் , உங்களுக்கு மதிப்பு கூடும்.
அடியவர் 7 :- கூடிட்டே இருக்கும். கூடிட்டே இருக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இல்லையென்றால்?
அடியவர் 10 :- பூஜ்யம்தான்
===========================
# ஒன்று பெரியதா? பூஜ்யம் பெரியதா?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- அப்பா, அறிந்தும் உண்மைதனை இப்பொழுது சொல்லுங்கள். இங்கு ஒன்று பெரியதா? பூஜ்யம் பெரியதா?
அடியவர் 7 :- ஒன்று பெரியது.
அடியவர் 6 :- ஒன்று தான் பெரியது.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் யான் இல்லை என்று சொல்வேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- நான் ஒன்று பெரியது இல்லைன்னு சொல்லுவேன்ப்பா.
அடியவ 7 :- ஒன்றுடைய மதிப்பை கூட்டுவது பூஜ்யம். அதிக பூஜ்யமே தந்தையே.
===========================
# ஒரு சீடனின் கடமை என்ன ?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- அதனால் இப் பூஜ்யங்கள் சேர்த்து, அறிந்தும் ஒன்றுக்கு மதிப்பிட வேண்டும். இதுதான் பின் சீடனின் கடமை.
அடியவர் 7 :- சத்தியம். சத்தியம்.
அடியவர் :- ஏத்துக்கறோம்
அடியவர் 5 :- சூப்பர். சூப்பர்.
அடியவர் 6 :- புரியுது ஐயா .
அடியவர் 7 :- சத்தியம். சத்தியம்.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— அதாவது, இன்னும் சொன்னால், அறிந்தும் நீங்கள்— அதாவது, பைத்தியக்காரர்களாக போய்விடுகிறீர்கள். அதனால் பின் அகத்தியன் எவை என்று அறிய பின், நல்லதே சொல்லி வரச் சொல்லி இருக்கின்றான். அதாவது, சொல்லிவிட்டேன். அதனால்தான் இன்னும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அத்திறமை வளர்த்துக் கொண்டால், உங்களுக்கு இன்னும் பல விஷயங்கள் தெளிவுபடுத்துவேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இவ்வளவு திறமைதான்.
அடியவர் 3 :- அத்திறமையை வளர்த்துக்கொள்ள பாடுபடுகின்றோம், குருநாதா.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் பின் பாடுபடுவதற்கும் அகத்தியர் வேண்டும். அதை தெரிந்து கொள்ளுங்கள் முதலில்.
அடியவர் 3 :- குருநாதா திறமை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதை அருள வேண்டும்.
காகபுசண்ட மாமுனிவர்:- இதனால் எதை இனிமேல் திருடப் போகின்றீர்கள், கூறுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, எதை திருடப் போகிறீர்கள்?
அடியவர் 1 :- அகத்தியர்கிட்ட நல்லதை திருடனும் ஐயா .
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் இதனால் பின் மக்களுக்கு எவ்வாறு நல் சொற்களை பின் எவை என்று எடுத்துச் சொல்லுதல் என்றெல்லாம், நீங்கள் எவை என்று அறிய யோசித்து செய்யுங்கள். அதுவே உங்களுக்கு நன்மையாக முடியும்.
அடியவர் 5 :- புரியுது, குருநாதா…. புரியுது.
===========================
# ஒரு குழு சிறப்பாக நடக்க என்ன செய்ய வேண்டும் ?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- இதனால் ஒவ்வொரு— எவை என்று அறிய— இலக்கங்கள். அதாவது, இலக்கங்கள் ஆகவும், அறிந்தும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சுமையை ஏற்று நடந்திடுங்கள். அதுவே அச்சுமையை சரியாக செய்யுங்கள், போதும்.
அடியவர் 5 :- புரியுது, குருநாதா
சுவடி ஓதும் மைந்தன் :- ஒருத்தர் ஒருத்தர்?
அடியவர் 7 :- ஒரு ஒரு வேலையும் செய்யணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு ஒரு வேலை செய்யணும்.
காகபுசண்ட மாமுனிவர்:- செய்து கொண்டிருக்கும் பொழுது தடங்கள் வேண்டாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- செய்து கொண்டிருக்கும் பொழுது தடங்கள் கூடாதுன்னா?
அடியவர் 5 :- அடுத்து உங்களுக்கு— அடுத்து உங்களுக்கு இடையூறு கொடுக்கக்கூடாது.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமாம். அதுதான்.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் சரியாக உன் வேலையை பின் செய்தாலே போதுமானது. கர்மம் சேராது. இப்பொழுது சொல்லுங்கள், எதை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- உன் வேலையை நீ செஞ்சாவே போதும்.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் ஏது என்று புரிய, அவரவர் பின் சுமையை அழகாக செய்யுங்கள், போதும். அறிந்தும் குற்றம் காணாதீர்கள். குற்றம் எதற்காக காணுகின்றீர்கள்?
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா குற்றம்? அதாவது, அவரவர் வேலை அவர் செய்யுங்கள்ன்றார் வந்து. குற்றம் எதுக்காக காணுகின்றீர்கள்னு கேட்கிறார். எதுக்காகங்க, ஐயா, குற்றம் காணுகின்றீர்கள்?
அடியவர் 5 :- இந்த குறை சொல்றதை பத்தி சொல்றாங்க, ஐயா. வேற ஒன்னும் இல்ல.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான். எதுக்காக குறை சொல்றீங்கன்னு கேட்கிறார். யாராவது சொல்லுங்க, ஐயா. திருப்பி கேள்வி மட்டும் வந்துருச்சு.
அடியவர் 5 :- நகைச்சுவையாக சொல்றதுன்னா , குற்றம் கூறிக்கிட்டே இருந்தா தான் நம்மள பெரிய ஆளுன்னு நினைச்சுக்குவாங்க.
காகபுசண்ட மாமுனிவர்:- அப்பா, குறை உள்ளவன் தான் குற்றம் கூறுவானாப்பா. புரிகின்றதா?
அடியவர் 9 :- புரிகின்றது, தந்தையே
அடியவர் :- குறு குறு என்பது பொறாமையால தானே வரும்.
===========================
# பொ…..றா…….மை…….
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும் ஏது என்று அறிய பொறாமைக்கு என்ன அர்த்தம் என்று கூறுங்கள்? பொறாமை ஒன்று இருந்தால், அனைத்தும் வந்துவிடுமாம். துரோகங்கள், ஏமாற்றங்கள்— அதாவது, எதை என்று கூற பொய் சொல்லுதல்— அனைத்தும். இதனால் பொறாமை என்பது சாதாரணம் இல்லை. இதனால் அதை பிரித்து எடுக்க…
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, பொறாமை என்பது பிரித்து எடுக்கன்றார்.
அடியவர் 1 :- பொறுத்துக்கொள்ள முடியாமையா, ஐயா? பொறாமை. பொறுத்துக்கொள்ள முடியாமையா.
அடியவர் 7 :- பொறுக்க முடியாமை. பொறாமை.
அடியவர் 10 :- பொறுமை இல்லாமை.
காகபுசண்ட மாமுனிவர்:- அப்பா, ஒன்று ஒன்று கூறுங்கள், அனைவரும்.
சுவடி ஓதும் மைந்தன் :- யாராவது கூறுங்கப்பா, ஒன்று ஒன்று.
அடியவர் 3 :- பொறுத்துக்கொள்ள முடியாது. அடுத்தவங்க கிட்ட ஒரு பொருள் இருந்துச்சுன்னா, நமக்கு வயிறு எரியுது இல்ல. அதுதான்.
அடியவர் 5 :- குருதேவா, பொறாமைக்கு திருவள்ளுவர் பெருந்தகை வந்து "அழுக்காறு"ன்னு ஒரு வார்த்தை பயன்படுத்துறாங்க. அப்ப அழுக்கு ஆறுனா பாதை வழி. தவறான வழியில் செல்வது பொறாமை. எந்த தவறான வழியையும் நம்மளையும் கொண்டு போய் சேர்க்கக்கூடிய குணமே பொறாமை, அப்படின்னு எடுத்துக்கலாமா, குருதேவா?
காகபுசண்ட மாமுனிவர்:- “மை” அறிந்தும் எது என்று கூறப்பின், எரிந்து விடுவாய் அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இங்க “மை” மட்டும் எடுக்குறார் வந்து. மை, மை. குரு— குரு மை. பொறாமை. பொறா— பொறா— மை. கடைசி வார்த்தைல அந்த மை மட்டும்— மையை மட்டும் எடுத்தார். மை என்று— மை என்பது என்ன? எல்லாமே எரியுது தானே, மை. எல்லாம் கடைசில வந்து—
அடியவர் 7 :- எரிஞ்சுடுவாங்க.
காகபுசண்ட மாமுனிவர்:- எது என்று கூற இருக்கும்போதே பின் மையாகவே சென்று கொண்டிருப்பாயடா, தேவையா இது உனக்கு?
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுமா ? “மை” மட்டும் எடுக்குறார். பொறா— போ— றா— பொறாமை இருக்குல்ல. “போ” எடுக்கல, “றா” எடுக்கல. “மை” மட்டும் எடுத்துட்டார். “மை” மட்டும் எடுத்துட்டாருங்க ஐயா. மை மட்டும் அட்ட சொல்றாரு. மை என்பது என்ன? எல்லாமே எரிஞ்சு சாம்பலாக போயிடும். அதனால நீங்க வந்து அந்த மை— அது வந்து, அது— இருக்கும் போதே நீங்க மை— மைய எரியுதுங்களா?
( பல உரையாடல்கள் )
காகபுசண்ட மாமுனிவர்:- இதனால்தான் அறிந்தும் எது என்று அறிய— புத்தியை வளர்க்க கல்வியை சரியாக படியுங்கள், படியுங்கள் என்று. ஆனால் படிக்கவில்லையே.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால்தான், டேய் , ஒழுங்கா படிங்கடா, படிங்கடான்னு சின்ன வயசுலயே அப்பா அம்மா சொல்றாங்க. எங்கடா படிச்சீங்க நீங்க எல்லாம்.
காகபுசண்ட மாமுனிவர்:- ஆனால் படித்தது என்பதோ— பொறாமை, போட்டி, குறை சொல்லுதல், எவை என்று அறிய இன்னும் என்னென்னவோ.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் படித்தது என்பதோ— ஸ்கூல்ல போய் படிக்கல. என்ன படிச்சீங்க நீங்க எல்லாம்? ஏமாத்துறது, போட்டி, பொறாமை, எப்படி பேசுறது, எப்படி பேச தெரியாம இப்படி தான்.
காகபுசண்ட மாமுனிவர்:- ஆனாலும் அறிந்தும் எதை என்று கூற— பேச வைத்து தெரிந்து கொண்டு— பேச எவ்வாறு பேசுவது என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். ஆனால் சித்தனிடத்தில் அவை நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய பயன்படாது.
சுவடி ஓதும் மைந்தன் :- பேசுறத மட்டும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க. ஆனால் சித்தனிடம் செல்லாது.
காகபுசண்ட மாமுனிவர்:- அறிந்தும்— சரி, இப்படியே சொல்லிவிட்டேன். அறிந்தும்— ஏது என்று புரிய— அறிந்தும்— எவை என்று அறிய— இதனால் கேட்பீர்களோ என்ன? கேட்பாதரோ என்ன? காதுகள் இருந்தால் கேட்பீர்கள். காதுகள் இல்லை என்றால் பின் யார் எது என்று அறிய— பின் இவை என்று கூறிய பின் அறிந்தும் சென்று கொண்டே இருப்பான் பைத்தியம் போல. அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- கேட்டா கேளுங்க. கேக்கலைன்னா காது இல்லாதவன். காதும் இல்லாதவன் அவன் என்ன பண்ணிருப்பான்? ஒன்னும் தெரியாம பைத்தியம் போல சுத்தினே இருப்பான். எனக்கு என்னப்பான்னுட்டார். ஐயா, புரியுதுங்களா?
அடியவர் 5 :- கட்டாயம் கேட்பேன், குருநாதா.
அடியவர் 1 :- கேட்போம் , குருநாதா. கேட்போம் , குருநாதா.
===========================
# கொடுப்பதற்கு யாங்கள் தயார். ஆனால் …..?
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- எதை ஏது என்று புரிய — அறிந்தும் — இதைத்தன் அறிய — இன்னும் — கொடுப்பதற்கு — யாங்கள் தயார். ஆனால் பக்குவம் இல்லையே உங்களிடத்தில். பக்குவம் இல்லாமல் கொடுத்தால் நீங்கள் எதை என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- நாங்க கொடுக்க ரெடியாகுறோம்பா. வாங்குறதுக்கு தயாராக இல்லை.
காகபுசண்ட மாமுனிவர்:- நல்லது— பின் அகத்தியன்— அதாவது, நல்லது செய்யுங்கள் என்றெல்லாம் அறிந்தும் கூட. ஆனால் அதையே எது என்று அறிய.
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லது செய்யுங்கள் என்று அகத்தியரே சொன்னார். அதையே உங்களால அறிந்து கொள்ள முடியல. ஐயா (கேக்குதா) ?
அடியவர்கள் :- நான் கேக்குது , ஐயா. கேக்குது .
===========================
# பாவங்களை அடியோடு போக்கும் மகத்தான வாய்ப்பாடு…
===========================
காகபுசண்ட மாமுனிவர்:- இதனால் அறிந்தும்— பாவங்கள் எப்படி தொலையும் என்பதை எல்லாம் அறிந்தும்…
***** இதனால் பின் நல்லதையே செய்க. *****
சுவடி ஓதும் மைந்தன் :- நல்லதையே செய்ய சொல்றாருங்க, ஐயா. நாலு பேருக்கு சொல்ல சொல்றாரு வந்து. நல்லதையே செய், இப்படி இருப்பா, அப்படி இருப்பான்னு.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 12.08.2026 அன்று அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய கூட்டுப்பிரார்த்தனை குழுவினருக்கான ஞான பாடங்கள் வாக்குகள் …. தொடரும் )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.