“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Friday, February 6, 2026

சித்தர்கள் ஆட்சி - 588 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9


நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை) 

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 

இடம் : திருக்கேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை

Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99


அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம்,  இலங்கை  இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை  திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை  இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.


சித்தர்கள் ஆட்சி - 580 :- பகுதி 1 https://siththarkalatchi.blogspot.com/2026/02/580.html சித்தர்கள் ஆட்சி - 581 :- பகுதி 2 https://siththarkalatchi.blogspot.com/2026/02/581.html சித்தர்கள் ஆட்சி - 582 :- பகுதி 3 https://siththarkalatchi.blogspot.com/2026/02/582.html சித்தர்கள் ஆட்சி - 583 :- பகுதி 4 https://siththarkalatchi.blogspot.com/2026/02/583.html சித்தர்கள் ஆட்சி - 584 :- பகுதி 5 https://siththarkalatchi.blogspot.com/2026/02/584.html சித்தர்கள் ஆட்சி - 585 :- பகுதி 6 https://siththarkalatchi.blogspot.com/2026/02/585.html சித்தர்கள் ஆட்சி - 586 :- பகுதி 7 https://siththarkalatchi.blogspot.com/2026/02/586.html சித்தர்கள் ஆட்சி - 587 :- பகுதி 8 https://siththanarul.blogspot.com/2026/02/2102-8.html சித்தர்கள் ஆட்சி - 588 :- பகுதி 9 https://siththarkalatchi.blogspot.com/2026/02/588.html சித்தர்கள் ஆட்சி - 589 :- பகுதி 10 https://siththarkalatchi.blogspot.com/2026/02/589.html சித்தர்கள் ஆட்சி - 590 :- பகுதி 11 (நிறைவு பகுதி) https://siththarkalatchi.blogspot.com/2026/02/590.html

========================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

========================================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9)



குருநாதர் :-  அப்பனே உண்மையை தெரியாமல் அப்பனே நிச்சயம் இப்பொழுது சொன்னாலும் அப்பனே பின் அவையே தீங்காக மாறிவிடும் 


சுவடி ஓதும் மைந்தன் :- (பல உண்மைகள் தெளிவாக உங்களுக்கு நான் தெரிவிக்காம,  இப்ப நான்  உங்களுக்கு நான் சொல்லிட்டேன்னா அது என்ன ஆகுமாம் ? தப்பா போயிடுமாம் )


===========================================

# யந்திரங்கள் காசுக்காக செய்து , பலவினைகளில் சிக்கிக் கொண்டவர்கள் பலர்.

===========================================


குருநாதர் :-  அப்பனே பல மனிதர்கள் இவை காசிற்காக அப்பனே பின் நிச்சயம் தன்னில் செய்து பலவினைகளில் சிக்கிக் கொண்டவர்கள் தான் உண்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("இந்த மாதிரி நிறைய மனுஷங்களை நான் பார்த்திருக்கேன்ப்பா... எதையாவது பண்ணி வினையை விலைக்கு வாங்கிட்டு, அப்புறம் தெரியாம சிக்கல்ல மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க!")


================================

# இறைவன் என்ற மின்சாரம் எப்படி தொட வேண்டும் என்று சித்தர்களிடம் பாடம் படித்து , அவர்கள் வழிகாட்டுதலுடன் , இறைவன் என்ற  மின்சாரத்தை தொட வேண்டும். 

=================================


குருநாதர் :-  அப்பனே இதனால்தான் அப்பனே பின் இறைவன் இருக்கின்றான். ஆனால் எப்படி ஏது இறைவனைப் பின் அடைய வேண்டும் என்பதெல்லாம் தெரியவில்லை. அப்பனே நிச்சயம் அப்பனே பின் மின்சாரம், அப்பனே பின் பாய்ந்து, எவை என்று அப்பனே, பின் அதில் நீ கையை விடு என்றால், அப்பனே உடனடியாக வைத்து விடுவாயா என்ன அப்பனே? இதுபோல்தான் இறைவன் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("கரண்ட் கம்பியில போய் வேணும்னே கையை வைப்பீங்களா? மாட்டீங்கல்ல, யோசிப்பீங்கதானே? அதே மாதிரிதான் இறைவனும். முறையா எப்படி அணுகணுமோ அப்படி அணுகுனாத்தான் அந்தத் தெய்வம் நல்லது செய்யும். தெரியாமப் போய் கை வச்சா கரண்ட் எப்படிச் சுடுமோ, அப்படி வாழ்க்கை மொத்தமா முடிஞ்சு போயிடும் ஐயா!")


=====================================

# திருக்கேதீஸ்வரத்தில் சனி தேவன் மற்றும் கேது தேவன் கதிர்வீச்சுகள் அதிகம்.

=====================================


அடியவர் :- (கிரகங்களை பற்றி ஒரு கேள்வி)


குருநாதர் :-   அப்பனே நிச்சயம் இதைப் பற்றியும் விவரமாக குறிப்பிடுகின்றேன் அப்பனே. எங்கெங்கு எதை செப்ப வேண்டுமோ, ஏன் பின் இங்கு அப்பனே இதைப்பற்றி கிரகங்களைப் பற்றி செப்புகின்றேன் என்றால் அப்பனே இங்கு பின் கதிர்வீச்சுக்கள் அதிகம் அப்பா.


சுவடி ஓதும் மைந்தன் :- (அதுக்கு நான் பின்னாடி சொல்லுவேன் . ஏன் இங்க வந்து இதைப் பத்திச் சொல்றேன்னு கேக்குறீங்களா? ஏன்னா, இந்த இடத்துலதான் சனி பகவானுக்கும் கேது பகவானுக்கும் உரிய அந்தப் பவர் (கதிர்வீச்சு) ரொம்ப அதிகமா இருக்கு.")


குருநாதர் :-   அப்பனே நிச்சயம் தன்னில் கூட எது என்று, அப்பனே பின் சனியவனும் அப்பனே  நிச்சயம் தன்னில், இங்கு அப்பனே பின் கதிர்வீச்சுக்கள் அதிகமாகத்தான். 


சுவடி ஓதும் மைந்தன் :- சனி பகவான் கதிர்வீச்சுக்கள் (இந்த திருத்தலத்தில்) அதிகம். 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட எது என்று எப்பொழுதும் பின் கேதுவின் அப்பனே தாக்கமும் எது என்று அப்பனே பின் அதாவது முட்டிக்கொண்டே இருக்கும் பின் சனியவனை.


சுவடி ஓதும் மைந்தன் :- ("அதனோட வைப்ரேஷன் ரொம்ப அதிகமா இருக்கும். சனி பகவானும் கேதுவும் ஒன்னோட ஒன்னு மோதிக்கிட்டே (Clash/Crush) இருப்பாங்க. அந்தத் தாக்கம் எப்போதும் டச் பண்ணிக்கிட்டே இருக்குற மாதிரி இருக்கும்.")


=================================

# விஞ்ஞானம் ஒருபகுதியை கண்டுபிடித்து , மற்றொரு பகுதியை கண்டுபிடிப்பதே இல்லை.

==================================


குருநாதர் :-  அப்பனே எவை விஞ்ஞானம் எவை எவை என்று புரிய, அப்பனே பின் விஞ்ஞானமும், அப்பனே எதற்கு ஏது என்று, அப்பனே ஒரு மூலையை கண்டுபிடித்து விடுகின்றான். மற்றொரு மூலையை கண்டுபிடிப்பதே இல்லையே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( "விஞ்ஞானம் கூட ஒரு கட்டத்துல நின்னுடுதுங்க ஐயா. அவங்க ஒரு பக்கத்தை , ஒரு பகுதியை மட்டும்தான் பார்க்குறாங்க. ஆனா, அந்த மறுபக்கத்துல என்ன இருக்குன்னு அவங்க கவனிக்குறதே இல்லப்பா!")


=============================================

# மனிதனின் சக்தி பெரும் சக்தி, விஞ்ஞானத்தின்  அடுத்த பக்கத்தில் தோல்வி அடைந்து விடுகின்றது. 

=============================================


குருநாதர் :-   ஏனென்றால் அடுத்த பக்கம் நிச்சயம் தன்னில் கூட எவை என்று மனிதனின் சக்தி பெரும் சக்தி நிச்சயம் பின் எவை என்று தோல்வி அடைந்து விடுகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("ஐயா, ஒண்ணுமே இல்லாத வெற்றிடத்துக்கு (Space) சேட்டிலைட் அனுப்பினாதான் அது வேலை செய்யும், வெற்றியும் கிடைக்கும். ஆனா, ஏற்கனவே எல்லாம் நிறைஞ்சு இருக்குற இடத்துக்குள்ள அதை அனுப்புனா, அது வேலை செய்யாது... கண்டிப்பா தோத்துதான் போகும். இது புரியுதுங்களா ஐயா?")


குருநாதர் :-   அப்பொழுது ஏன் எதற்கு தோல்வி அடைகின்றது என்பது யாரும் நிச்சயம் தன்னில் கூட 


சுவடி ஓதும் மைந்தன் :- ("ஏன் அது தோத்துப் போச்சுன்னு யாராவது யோசிச்சுப் பார்த்தாங்களா? கிடையாது! ஐயா, சேட்டிலைட் எப்பவுமே ஒண்ணுமே இல்லாத வெட்டவெளிக்குத்தான் போகும். ஆனா ஏகப்பட்ட பவர் (Energy/Radiation) இருக்குற இடத்துக்குள்ள அது போகாது, அங்க அதால வேலை செய்ய முடியாது!")


=======================================

# சித்தர்கள் கண்டுபிடித்த - கிரக மற்றும் நட்சத்திர இயக்கங்கள் ரகசியங்களை தெரிந்து கொண்டு - நோய்களை வென்று , துன்பமில்லா பெருவாழ்வையும் வாழலாம். ஆயுளும் நீட்டித்துக் கொள்ளலாம் 

=======================================


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு சக்திகள் எல்லாம் அப்பனே நிச்சயம் யாங்கள் கண்டுபிடித்துள்ளோம் அப்பனே. இன்னும் அப்பனே பின் அதாவது எவ்வாறு இயக்கங்கள், நட்சத்திரங்கள் இயக்கங்கள், என்பவை எல்லாம் தெரிந்து கொண்டு, அப்பனே பின் நோய்களை நீங்களே வெல்லலாம். துன்பம் இல்லாமல் பெருவாழ்வையும் வாழலாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("அதனாலதான் சொல்றேன், நான் சொல்லிக் கொடுக்குற இந்த விஷயங்களை எல்லாம் நீங்க சரியா புரிஞ்சுக்கிட்டுப் பின்பற்றினாலே போதும்... எந்த நோயும் உங்களை அண்டாது, நீங்க ஆரோக்கியமா இருக்கலாம்!")


குருநாதர் :-  அப்பனே இன்னும் அப்பனே பின் ஆயுளும் நீட்டித்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


===========================================

# வயது ஆக ஆக ஏன் உடம்பு பழுதாகிறது ?

===========================================


குருநாதர் :-  அப்பனே பின் வயது ஆக ஆக அப்பனே எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் ஏன் உடம்பு பழுதாகின்றது? யாராவது யோசித்தீர்களா என்னப்பா? அப்பனே ஆனால் பின் வயது ஆகிக்கொண்டே தான் போகின்றது என்பதுதான் நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("ஆனா, வயசாக வயசாக ஏன் நம்ம உடம்பு இப்படித் தளர்ந்து போகுதுன்னு என்னைக்காவது யோசிச்சிருக்கீங்களா? யாருமே அதைப்பத்தி யோசிக்கிறது இல்லை!")


====================================

# அனைத்து கிரகங்களின் உயிர் அணுக்கள் உடம்பில் இருக்கின்றது

====================================


குருநாதர் :-   அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அனைத்து கிரகங்களின் கூட அப்பனே நிச்சயம் தன்னில், சில சில உயிர்கள், அப்பனே பின் உடம்பில் இருக்கின்றது என்பேன் அப்பனே. 


=================================================

# சிறு வயதில் எங்கெங்கோ  சென்று  விளையாடுகிறான்.

# வயது ஆக ஆக  சோம்பேறித்தனம் 

=================================================


குருநாதர் :-  சிறு வயதில் அப்பனே நிச்சயம் தன்னில் நன்கு குதித்து அப்பனே, பின் எதை என்று அப்பனே பின் எங்கெங்கோ சென்று அப்பனே விளையாடுகிறான் என்பேன் அப்பனே. ஆனால் போகப்போக அப்பனே பின் சோம்பேறித்தனம் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்ப நம்ம யோகாசனம் நிறைய பண்ணனும்ப்பா! சின்ன வயசுல ஓடுறோம், குதிக்கிறோம், எகிறுறோம்னு உடம்பு செம ஆக்டிவா இருக்கு. ஆனா வயசாக ஆக மனுஷனுக்குள்ள சோம்பேறித்தனம் வந்துடுது. அந்தச் சோம்பேறித்தனத்தால என்ன ஆகுது தெரியுமா?")


குருநாதர் :-   அப்பனே நினைப்புகளும் மாறுகின்றது. அதாவது எண்ணங்களும் மாறுகின்றது என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா என்ன ஆகுது முதல்ல எண்ணங்களும் மாறுகின்றது 


குருநாதர் :-   இதனால் அப்பனே பின் உடம்பும் மாறுகின்றது, 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன ஆகுது உடம்பும் மாறுகின்றது 


======================================

# சிறு வயதில் உள்ள எண்ணங்கள் போலே இருந்தால் , என்றும் இளமையாக ….

======================================


குருநாதர் :-  அப்பனே சிறு அப்பனே வயதில் அப்பனே எவ்வாறு அப்பனே எண்ணம் இருக்கின்றதோ அவ்வாறே எண்ணத்தை வை பார்ப்போம். உனக்கு வயதாகின்றதா என்று பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ("சின்ன வயசுல இருந்த அதே துடிப்பும், அதே எண்ணமும் உங்களுக்குள்ள அப்படியே இருந்துச்சுன்னா... அப்புறம் எப்படி உங்களுக்கு வயசாகுறதுன்னு நானும் பார்க்குறேன்! அதாவது, மனசு இளமையா இருந்தா உடம்புக்கு வயசாவதே தெரியாது.")


==============================

# முதுமையாவதின் ரகசியம் 

==============================


குருநாதர் :-  அப்பனே மனிதனுக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் ஆசைகள். அப்பனே பேராசைகள் இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இருக்கின்ற பொழுது, அப்பனே வயது நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று உடம்பு இப்படி ஆகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( "ஏன் உடம்பு இப்படி மாறுதுன்னு நினைக்கிறீங்க? மனுஷன் வளர வளர அவனோட ஆசைகளும் மத்த எண்ணங்களும் வளர்ந்துகிட்டே போகுது. அதனாலதான் உடம்பும் தளர்ந்து போகுது. நீங்க எப்பவும் இளமையா இருக்கணும்னா, முதல்ல இந்த ஆசைகளைக் கட்டுப்படுத்தணும். ஆசையே இல்லாம இருந்தா, நீங்க எப்பவும் இளமையாவே இருக்கலாம்!")


குருநாதர் :-   ஆனாலும் மனிதன் இதை ஏற்கப் போவதும் இல்லை 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் மனுஷன் சொன்னாலும் இது வந்து ஏற்கப் போவதில்லை 


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பின் பொய் என்று சொல்லிவிடுவான். ஏனென்றால் பொய்யான இருப்பவன் தான் பொய் என்று சொல்வான். உண்மையாக இருப்பவன் உண்மை என்றுதான் சொல்வான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( "எல்லா உண்மைகளையும் எடுத்துச் சொன்னா, அதைப் பொய்ன்னுதான் சொல்லுவாங்க. ஏன்னா, அவங்களே ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ்றதுனாலதான் அவங்களுக்கு உண்மை கசக்குது. ஆனா, ஒரு உண்மை ஞானி மட்டும்தான் உண்மையை உணர்ந்து அதை 'உண்மை'ன்னு ஏத்துக்குவாரு!" )


===========================================

# அனைத்தும் இறைவனால் தான் நடக்கின்றது 

===========================================


குருநாதர் :-  நிச்சயம் உண்மை ஞானி அனைத்தும் இறைவனால் தான் நடக்கின்ற பொழுது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும். இறைவனை மீறி ஒன்று நடப்பதில்லை என்று உணர்ந்து கொள்வான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( "ஒரு உண்மையான ஞானி, ஒரு பரிசுத்தமான மனுஷன் என்ன பண்ணுவாரு தெரியுமா? 'எப்பா, இங்க நடக்குறது எல்லாமே அந்த இறைவன் அருளால்தான் நடக்குது. எல்லாமே அவனுடைய செயல்தான்'னு முழுசா நம்பி, அமைதியா இருப்பாரு!" )


குருநாதர் :-  ஆனால் பொய்யானவன் நிச்சயம் தன்னில், அவை பொய், இவை பொய் என்று, நிச்சயம் தன்னில் கூட, பின் இறைவனைப் பற்றி இவன் உணராதவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ("அப்ப பொய்யானவன் என்ன பண்ணுவான் தெரியுமா ஐயா? எதைச் சொன்னாலும் 'அது பொய், இது பொய்'னு சொல்லிக்கிட்டே இருப்பான். ஆனா ஒரு உண்மையான ஞானி என்ன நினைப்பாருன்னா, 'எல்லாமே இறைவன்தான்ப்பா... அவனோட அருள் இல்லாம இங்க எதுவுமே நடக்காது'ன்னு தெளிவா இருப்பாரு. ஆனா இந்த அரைகுறை மனுஷன் இருக்கானே...")


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று அறிய இப் பொய் மனது, பொய் தான் சொல்லும் பின் நிச்சயம் தன்னில் கூட. பின் உண்மை மனது உண்மைத்தான் சொல்லும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனசு பொய்யா இருந்தா என்ன ஆகும்?  பொய்ன்னு தான் சொல்லுவீங்க. வந்து உண்மை மனசு இருந்தா இருந்தா என்ன ஆகும்? உண்மை  தான் சொல்லுவீங்க.


குருநாதர் :-  அப்பனே இதற்கும் ஞானங்கள் பெற்றாக வேண்டும் என்பேன் அப்பனே 


சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த உண்மையான மனசு வளர்றதுக்கு அதுக்கும் ஞானம் பெற்றிருந்தால் மட்டும்தான் உண்டு 


=================================================

# அன்பு சித்தன் இயேசுநாதர்   - “துன்பப்படுவோன் மிகவும் பாக்கியவான்.”

=================================================


குருநாதர் :-   அப்பனே நிச்சயம் அவ் ஞானம் எவ்வாறு தருவது என்றால், அப்பனே துன்பம். துன்பப்படுவோன் மிகவும் பாக்கியவான், இவைத்தன் அப்பனே யான் சொல்லவில்லை அப்பனே. எதை என்று புரிய அப்பனே பின் இயேசு சொல்லிவிட்டான் 


சுவடி ஓதும் மைந்தன் :- ("இதை நான் மட்டும் சொல்லலப்பா... அன்னைக்கே இயேசு பெருமான் சொல்லிட்டுப் போயிட்டாரு, 'துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள்'னு. கஷ்டப்படுறவங்க தான் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவங்கன்னு அவரே அன்னைக்குத் தெளிவாச் சொல்லிட்டாரே!")


=========================================

# அனைவருமே ஒன்றே என்று நிரூபிக்க வேண்டும். 

# அப்பொழுதுதான் இவ்வுலகம் எல்லாம் திருந்தும்.

=========================================



குருநாதர் :-  எதை என்று புரிய அப்பனே அதனாலதான் அப்பனே பின் அனைவருமே ஒன்றே என்று நிரூபிக்க வேண்டும் அப்பொழுதுதான் இவ்வுலகம் திருந்தும் எல்லாம்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஒரே ஆள், ஒரே ஆள் அப்பதான் உலகம் திருந்தும் இந்த உலகம் திருந்தும் 


=======================================

# மதத்தை பற்றி மட்டுமே சொல்லுபவன் துரோகி 

=======================================


குருநாதர் :-  அப்பனே எதை என்று புரிய, அப்பனே இதனால் அப்பனே, பல தேசங்கள் அப்பனே எவை என்று புரிய, அப்பனே பல வழிகளில் கூட, அப்பனே பின் எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, மனிதன் அப்பனே பின் மதத்தைப் பற்றியே சொல்கின்றான் அப்பனே அவன் தன் அப்படி சொல்லுவோன் மிக மிக துரோகி என்பேன் அப்பனே. 


குருநாதர் :-  அப்பனே அவன் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவன் ஒன்று தயாரிக்கின்றான் நீ அதில் வாழ்வதில்லையா அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- (“ஒருவன் கஷ்டப்பட்டு ஒரு பொருளைத் தயாரிக்கிறான், நீ அதை வாங்கிப் பயன்படுத்தித் தானே வாழ்ற? ஆனா, அவன் பொருளை மட்டும் வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டு, அவனை மட்டும் 'மதம்' சொல்லி ஒதுக்குறீயே... அங்கேயே மனுஷன் பொய்யாயிடுறான். அங்க எங்கப்பா நியாயம் இருக்கு?" )


===================================

# இறைவன் வாக்கு - ஒருவனுக்கொருவன் அன்பு கூறுங்கள். அன்பே தெய்வம்.

===================================


குருநாதர் :-  இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் பிரித்துக் கொண்டது தான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே பின் அதாவது இறைவனே சொல்கின்றான், ஒருவனுக்கொருவன் அன்பு கூறுங்கள் என்று. அன்பே தெய்வம் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("அன்பே சிவம்! அந்த ஈசன் என்ன சொல்றார் தெரியுமா? 'எல்லாரும் ஒண்ணுன்னு மட்டும் நீ நினை... அப்படி நீ நினைச்சா, அடுத்த நிமிஷமே நான் யாருன்னு என்னோட சுயரூபத்தை உனக்குக் காட்டுறேன்'னு சொல்றாருப்பா!"


===========================

# வேதங்கள் புகழும் - ஈசன் 

==========================


குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட ஈசனும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறத்தான். நிச்சயம் பின் ஏனென்றால் நிச்சயம் அனைத்து தெய்வங்களும் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு வாகனம் எதை என்று அறிய ஒவ்வொரு உயிரையும் குறிக்கின்றது அல்லவா நிச்சயம் தன்னில் கூட? உயிர்கள் எல்லாம் எடுக்க கூடாது என்பது. இதனால்தான் வேதங்களும் ஈசனை புகழ் நிச்சயம் தன்னில் கூட பின் புகழ்கின்றது. 



சுவடி ஓதும் மைந்தன் :- ("ஈசனை ஏன் எல்லாரும் இவ்வளவு புகழுறாங்கன்னு தெரியுமா? அவர் ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வாகனத்தை வச்சதே, அந்த உயிரினங்களை நாம கொல்லக்கூடாதுங்கிறதுக்காகத்தான்! அதனாலதான் வேதங்களும், முனிவர்களும், ஈசனையே துதிக்கிறார்கள். முருகனுக்குச் சேவலைக் கொடுத்தாரு—அது அரக்கன் என்று  தெரிஞ்சும் அதைக் கொல்லாம தன் கூடவே வச்சுக்கக் கொடுத்தாரு. மாட்டைத் தான் எடுத்துக்கிட்டாரு. இப்படி ஒவ்வொரு உயிரையும் அவர் பாதுகாத்தாருப்பா!")


குருநாதர் :-  அப்பனே மனிதன் முதலில் சிந்திக்க வேண்டும். இதுநாள் வரை சிந்திக்கவே இல்லை என்பேன் அப்பனே. 


=======================================

#  சிரஞ்சீவியாக வாழும் சித்தர்கள் வாக்குகள் ரகசியங்கள்.

# ஏன் சுவடி ஓதும் மைந்தனை பல ஆலயங்களுக்கு செல்ல வைத்து, வாக்குகள் அனைவருக்கும் உரைக்கப்படுகிறது ?

# அதிலும் குறிப்பாக ஆலயங்களில் ஏன் ? 

=======================================


குருநாதர் :- அப்பனே ஏன் எதற்காக இங்கு வாக்குகள் சொல்கின்றேன் என்று தெரியுமா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  எதனால் நான் இங்கு வாக்கு சொல்றேன்னு தெரியுமா? 


அடியவர்கள் :- எல்லோருடைய நன்மைக்காக …


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட நன்மைக்காகவும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இங்கு தெரிவித்தால், அப்பனே ஈசனிடத்திலே எது என்று கூட இங்கு சக்திகள் அதிகம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  அனைத்தும் எவை என்று கிரகங்களுக்கும் செல்லும் என்பேன் அப்பனே. மனிதன் அப்பனே பின் பயன்படுத்தி எவை என்று கூற , அழியாது என்பேன் அப்பனே. வரும் சந்ததிகளுக்கு அப்பனே பின் நிச்சயம் தன்னில் சொல்லுகின்ற பொழுது, அப்பனே ஒழுங்காக வாழ்வான் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("நிஜத்தைச் சொல்லப்போனா, சக்தி வாய்ந்த இடங்களில் நாம ஒரு வாக்கினைச் சொல்லும்போது அந்த வாக்கு ஈசனுக்கும் போய்ச் சேரும், எல்லா கிரகங்களுக்கும் போய்ச் சேரும். அது சும்மா பேச்சு இல்லப்பா, அது ஒரு 'சக்தி வாக்கு'! அதனாலதான் நாம விடுற அந்த வார்த்தை என்னைக்குமே அழியாது, அப்படியே பிரபஞ்சத்துல நிலைச்சு நிக்கும்!")


============================================

# ஏன் ஞானிகள் - அவர்கள் பதிகங்களை , பாடல்களை - சக்தி மிக்க தலங்களில் எழுதினார்கள் ? 

============================================


குருநாதர் :- இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வாக்குகள் பல புத்தகங்களை அப்பன் நிச்சயம் தன்னில் கூட பின் எங்கெங்கு அப்பனே பின் ஞானம் பெற்று எழுதினார் எவை என்பதை அப்பனே ஞானிகள் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("அதனாலதான் கவனிச்சீங்களா, பெரியவங்க சும்மா எதையும் எழுதறது இல்லை. எந்த இடத்துல அந்த 'வைப்ரேஷன்' (ஆற்றல்) அதிகமா இருக்கோ, அங்க உக்காந்து எழுதினா அது காலத்துக்கும் வரலாற்றில் நிலைச்சு நிக்கும்னு அவங்களுக்குத் தெரியும். அதனாலதான் ஞானிகள் எல்லாம் கோவில்கள்லயும், பாடல் பெற்ற தலங்கள்லயும் போய்த் தவம் இருந்து எழுதினாங்க. அந்த இடத்தோட சக்தியும் அவங்க எழுத்தும் ஒண்ணு சேரும்போதுதான் அது காலத்தை வெல்லுது!")


========================================

# திருமூலர் சித்தர் , திருமந்திரத்தை  எங்கு எழுதினார்?

========================================


குருநாதர் :- அப்பனே யாருக்காவது தெரியுமா? அப்பனே திருமூலன் அப்ப நிச்சயம் தன்னில் திருமந்திரத்தை எங்கு எழுதினான் என்று? 


குருநாதர் :-  அப்ப நிச்சயம் தன்னில் கூட அவனே வந்து செப்புவான் என்பேன் அப்பனே எப்படி பின் எழுதினான் என்று 


=========================================

# அகத்தியன் யான் , இந்த வாக்கை எங்கேயாவது தெரிவித்திருக்கலாமே? 

# அகத்தியன் யான் ஏன் இங்கு வந்து தெரிவிக்க வேண்டும்?

=========================================


குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்ப நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்பதை அப்ப நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எங்கே இவ்வாக்கை தெரிவித்திருக்கலாமே? 


சுவடி ஓதும் மைந்தன் :- நான் இங்க சொல்றது எங்கேயோ சொல்லிட்டு எங்கேயோ சொல்லிட்டு போயிடலாமே? ஏன் இங்க வந்து சொல்றேன்? 


குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய, அப்பனே பின் பின் சொல்லும் இடத்தில், அப்பனே நிச்சயம் எங்கு அடித்தால் நன்று, என்பது சித்தருக்கு தெரியும் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- எங்கு அடித்தால்… 


குருநாதர் :- அப்பனே பின் மருத்துவனிடம் செல்கின்றாய் அப்பனே. பின் உடம்பு சரியில்லை என்று சரியில்லை என்று சொல்கின்றாய் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே சரியாக அப்பனே, பின் பின் அவுஷதங்களை கொடுத்தால் மட்டும் சரியாகும் தலைவலிக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட. கால் வலி மருந்து கொடுத்தால் சரியாகும் என்னப்பா? அது எங்களுக்கு மட்டுமே புரியும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ("இப்ப ஒரு டாக்டர்கிட்ட போறீங்க... தலைவலிக்கு மருந்து கேட்டா, தலைக்கான மருந்து கொடுத்தாத்தானே சரியாகும்? அதை விட்டுட்டு, காலுக்கான மருந்து கொடுத்தா அப்புறம் என்ன ஆகும்? நோய் எப்படித் தீரும்?")


============================================

# எங்கு வாக்குகள் சொன்னால் நிச்சயம் பலிக்கும் என்பவை எல்லாம் நிச்சயம் அவனுடைய ஜாதகத்தை பொறுத்தே இருக்கின்றது.

=============================================


குருநாதர் :-  அப்பனே இதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது மனிதன் கூட எங்கு வாக்குகள் சொன்னால் நிச்சயம் பலிக்கும் என்பவை எல்லாம் நிச்சயம் அவனுடைய ஜாதகத்தை பொறுத்தே இருக்கின்றது என்பேன் அப்பனே. 


================================================

# தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் - பாவம் 

================================================


குருநாதர் :-  இதனால் இன்றளவும் கூட அப்ப நிச்சயம் தன்னில் கூட வளர்ந்து அப்பனே எதை என்று புரிய அப்பனே, பிளந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் தொலைக்காட்சியில் சொல்லிக் கொண்டிருக்கிறது என்பேன் அப்பனே. அதெல்லாம் பாவம்தான் என்பேன் அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்ப மனுஷன் எங்க நின்னு சொன்னா அவனோட வாக்கு பலிதமாகும்னு கேக்குறீங்களா ஐயா? இப்ப டிவில சொல்றதெல்லாம் வெறும் சத்தம், அதெல்லாம் பொய்... அதையெல்லாம் ஏத்துக்கவே முடியாதுன்னு அவர் சொல்றாரு. ஏன்னா, அந்த இறைவன் ஒரு பெரிய சக்தி, அவர் முன்னாடி நின்னு உண்மையான இடத்துல சொல்ற வாக்குக்குத்தான் மதிப்பு!")


குருநாதர் :- அப்பனே பின் காசுக்காக, எவை என்பதை, அப்பனே பிழைப்பிற்காகவே அனைத்தும். 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே பிழைப்பிற்காக, காசுக்காக. 


குருநாதர் :- நிச்சயம் பிழைக்கட்டும் என்று இறைவன் விட்டு விடுகின்றானே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அதையும் கூட என்ன பண்றாரு பிழைக்கட்டும் என்று பிழைக்கட்டும் என்று விட்டு விடுகின்றார் 


குருநாதர் :-  ஆனாலும்  நிச்சயம் தன்னில் கூட எல்லை மீறி போவதனால் தான் மட்டுமே இறைவன் தண்டிக்கின்றான் 


சுவடி ஓதும் மைந்தன் :-  பிழைச்சுக்கோ ஆனா அதையே வந்து நம்ம வந்து எல்லை மீறி போகும்போது என்ன பண்றாரு கண்டிக்கிறார் கண்டிக்கிறார் 


குருநாதர் :- அப்பனே உங்களுக்கும் சொல்லித் தருகின்றேன் அப்பனே. வருங்காலத்தில் நீங்களும் எதை என்று அறிய, அப்பனே நிச்சயம் கவலைகள் வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ("உங்களுக்கும் நான் சொல்லித்தரேன்... இந்த உண்மைகளை எல்லாம் எப்படிச் சொல்லணும், மக்கள் இதை எப்படி எடுத்துட்டுப் போனா அவங்களுக்கு நல்லதுன்னு எல்லாத்தையும் நான் உங்களுக்குக் கத்துக் கொடுக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி, நீங்க கொஞ்சம் பொறுமையா இருக்கணும்ப்பா!")


குருநாதர் :-  அப்பனே வெற்றியை காண்பதற்கு பொறுமையாக இருந்தால்தான் என்பேன் அப்பனே நிச்சயம். அப்பனே பின் ஆத்திரப்பட்டால் என்ன ஆகும்? 


சுவடி ஓதும் மைந்தன் :- வெற்றியை காண்பதற்கு என்ன பண்ணனும்? பொறுமை பொறுமை மிக மிக அவசியம். ஆத்திரப்பட்டால் என்ன ஆகும்?


============================== 

# செயற்கை கோள்  - உதாரணம் 

==============================


குருநாதர் :- அப்ப நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே இதனால் அப்பனே, பின் மனிதன் அப்பனே, அதாவது ஒரு செயற்கைக்கோளுக்கு, அப்பனே பின் என்னென்ன தேவை என்று, அப்பனே பின் சரியாக செய்து, அப்பனே பின் மேலே விட்டால்தான் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("ஒரு செயற்கைக்கோள் விண்ணுக்குச் சீறிப் பாயணும்னா அதுக்கு என்னென்ன தேவைன்னு பாருங்க... அதுல இருக்குற ஒவ்வொரு சின்ன போல்ட்டும், நெட்டும் கூட கரெக்டா, துல்லியமா பொருத்தப்படணும். அப்படி எல்லாம் சரியா அமைஞ்சா மட்டும்தான், அந்தச் செயற்கைக்கோள் எவ்விதத் தடையுமில்லாம வெற்றிகரமா விண்ணை நோக்கிச் சீறிப் பாயும்!")


குருநாதர் :- அப்பனே அதேபோலத்தான் மனிதனுக்கு கூட, அவ்வாறு இட்டால் மட்டுமே, மனிதன் ஞானம் பெறுவான். அனைத்தும் அப்பனே பின், பின்பு அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூ,ட அவனை ஆசிகள் கொடுத்து அப்பனே பின். 


சுவடி ஓதும் மைந்தன் :- ("அந்தச் செயற்கைக்கோள் மாதிரிதான் மனுஷனும்! ஒரு மனுஷன் அடுத்த லெவலுக்குப் போகணும்னா, அவனுக்கு என்னென்ன தேவையோ (நல்ல எண்ணம், அறிவு, ஒழுக்கம்) அதையெல்லாம் சரியான முறையில அவன்கிட்ட சேர்த்தாகணும். அப்படி எல்லாம் சரியா அமைஞ்சா மட்டும்தான் மனுஷன் முன்னேறிப் போவாரு. இல்லையென்றால், அங்கேயே தேங்கி நிக்க வேண்டியதுதான்ப்பா!")


====================================

# இறைவனே தான் இறைவன் என்று சொல்வதில்லை.

====================================

====================================

# இறைவனே தான் இறைவன் என்று சொல்வதில்லை.

====================================

====================================

# இறைவனே தான் இறைவன் என்று சொல்வதில்லை.

====================================


குருநாதர் :-  அப்பனே இதனால் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய அப்பனே, இதனால் அப்பனே நிச்சயம், இறைவனே அப்பனே பின் யான் இறைவன் என்று சொல்வதில்லை. ஆனால் மனிதன் வருங்காலத்தில் சொல்வான் அப்பா. கலியுகத்தில் சொல்வான் அப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("இறைவனே தன்னைப் பார்த்து 'நான் தான் இறைவன்'னு எங்கேயுமே சொன்னது கிடையாது. ஆனா இங்க பாருங்க... ஒரு மனுஷன் வந்து, 'நான்தான் இறைவன்'னு சொல்லிட்டு அலையுறான்.” )


குருநாதர் :- பின் யான் சொல்லுவது தான் நடக்கும் என்றும் சொல்லப் போகின்றான் 


சுவடி ஓதும் மைந்தன் :- நான் சொல்றது தான் நடக்கும் 


அடியவர் :- இப்பவே சொல்றாங்க சார் 


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் அவனுக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே பின் இறைவனின் அப்பனே, பின் நிச்சயம் பண்பு புரியாதப்பா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அவர்கள் எல்லாம் இறைவனுக்கு பண்பு வந்து புரியாது 


====================================

# பொறுத்துக் கொள்பவனே இறைவன். 

====================================


குருநாதர் :-  அப்பனே இறைவன் மிகப்பெரியவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. எதை என்று புரிய அப்பனே பின் கலியுகத்தில் யான் தான், மனிதன், என்று சொல்வான் என்று, அப்பனே நிச்சயம் தன்னில் இறைவன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கின்றான். பொறுத்துக் கொள்பவனே இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :- யாரு? பொறுத்துக் கொள்பவன் தான் யாரு? இறைவன். மனுஷன் என்ன தவறு செஞ்சாலும் என்ன பண்ணுவாரு இறைவன் பொறுத்துக் கொள்வார் 


குருநாதர் :- நிச்சயம் படைத்துவிட்டோமே என்று இப்படிப்பட்டவனை 


============================================

இறைவனின் பெருங்கருணையும், பரிதாபமும்

============================================


குருநாதர் :- ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் ஏன் பொறுத்துக் கொள்வான் நிச்சயம் அவனவன் செய்த தண்டனைகள் அவனையே கொல்லும் என்பது இறைவனுக்கு தெரியும். இதுவும் இறைவன் கொடுத்ததே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("இறைவன் ஏன் பொறுத்துக்குறாரு, ஏன் நமக்காகக் கஷ்டப்படுறாருன்னு தெரியுமா? 'அடடா, நீ பண்ணுற செயலே உன்னை அழிச்சிடுமே, நீ கஷ்டப்படப் போறியே'னு நினைச்சு அவர் வருத்தப்படுறாரு. ஏன்னா, இந்த உடம்பையும் உயிரையும் உனக்குக் கொடுத்ததே அந்த இறைவன்தானே! 'உனக்கு எல்லாத்தையும் கொடுத்தேனேடா, ஆனா நீ அதைச் சரியா பயன்படுத்திக்காம தப்பான வழியில போயிட்டு இருக்கியே'னு உன்னைப் பார்த்து அவர் பரிதாபப்படுறாரு. அவர் உன் மேல வச்சிருக்க அந்தப் பாசத்தாலயும் அருளாலயும் மட்டும்தான் உன் தப்பை எல்லாம் பொறுத்துக்கிட்டு நிக்கிறாருப்பா!")


குருநாதர் :- இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனைப் பற்றி உணராதவனே, யான் இறைவன் என்று சொல்வான் அப்பனே. இறைவனைப் பற்றி உணர்ந்தவன் சிரித்துக் கொண்டே இருப்பான், எதைச் சொன்னாலும் அப்பா நிச்சயம் தன்னில் கூட. அடித்தாலும் அடி வாங்கிக் கொள்வான். 


=============================

# இலங்கைக்கு வந்த ஏசுநாதர் 

=============================


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இயேசு அப்பனே முதலில் வந்தான் அப்பா இங்கு நிச்சயம் அவன் மீது காரியம் துப்பினார்கள். இவன் எதை என்று புரிய எதற்காக வந்தான் இவன் பொய்யனே என்று சொன்னார்கள். 


குருநாதர் :- அப்பனே அடித்தார்கள் செருப்பாலும் அடித்தார்கள் அப்பா. 


குருநாதர் :-  ஆனால் இன்றைய அப்பனின் நிலையை  பார் அப்பனே. பின் நிச்சயம் தலை குனிந்து வணங்குகின்றார்கள் 


=============================

# இலங்கைக்கு வந்த புத்தர் 

=============================


குருநாதர் :-  அப்பனே திட்டி தீர்த்தார்கள் புத்தனை அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய அப்பனே எப்படி எப்படியோ ஆனால் இன்று.


=============================

# இலங்கைக்கு வந்த நால்வர் 

============================= 


குருநாதர் :-  அப்பனே நால்வர் பெருமக்கள் வந்தார்களப்பா நிச்சயம் பின் உதவக்காரர்கள் என்றார்களப்பா ஆனாலும் அப்பனே இன்று 


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே உண்மையானவற்றிற்கு இவ்வுலகத்தில் மதிப்பே இல்லையப்பா 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன்னா முதல்ல உண்மையானவர்களுக்கு வந்து இந்த உலகத்துல மதிப்பில்லை மதிப்பில்லை 


குருநாதர் :- அப்பனே பொய்யானவற்றை பரப்பிப் பார் அப்பனே. பின் அங்கு சென்றால் காசுகள் பின் கொட்டோ என்று கொட்டும் என்று 


அடியவர் :- மதிப்பு இருக்கும். 


சுவடி ஓதும் மைந்தன் :- மதிப்பு இருக்கும் பொய்யானவற்றை நீ சொல்லிப் பார். 


குருநாதர் :- ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் இவ்வாறாக செய்யக்கூடாது என்பதெல்லாம், அப்பனே இன்னும் ஞானங்கள் பிறக்க வழிகளை யான் சொல்வேன். இன்னும் மூலிகைகள் காட்டுவேன் அப்பனே. இன்னும் இன்னும் அப்பனே மனிதனுக்கு தெரியட்டும் அப்பனே. வெல்லட்டும் என்பேன் அப்பனே. பின் மனிதனின் அப்பனே ஆனாலும் சுத்தமாக மனிதன் பெற்றிருக்க வேண்டும் மனிதன். அதனால்தான் அப்பனே இத்தனை வாக்குகள் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அப்பனே நலமாக அப்பனே இன்னும் எதை என்று அறிய அப்பனே சொல்லி சொல்ற அப்பனே புரியும் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- (". நம்ம மனசு அது எப்போ சுத்தமாகுதோ, அப்போதான் அந்த இறைவன் நமக்குத் தர வேண்டியதைக் கொடுப்பாரு!) 


==========================================

# அதை தா , இதை தா என்று இறைவனை கேட்பது மாபெரும் தவறு.

==========================================


குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அப்பனே பின் இறைவனை அப்பனே பின் கேட்பதும் தவறு என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவன் கிட்ட வந்து அதைத்தா இதைத்தா என்பது வந்து கேட்பதும் தப்பு தப்பு. 


====================================

# கேட்காமலேயே அனைத்தும்  கொடுக்கும் இறைவன்.

# "இறைவா , நீ மட்டும் போதும்" - இதுவே உண்மையான பக்குவம்

# வேண்டும் என்று கேட்டால் , பக்குவம் இல்லை என்று இறைவன் நினைத்துக் கொள்வார்.

====================================


குருநாதர் :- அப்பனே படைத்தவன் அவன் அப்பனே பிள்ளைக்கு என்ன தர வேண்டுமோ அதை நிச்சயம் அவன் யோசித்து வைத்திருப்பான் என்பேன் அப்பனே. அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட நீங்கள் பின் கேட்பீர்கள் என்றால், அப்பனே நீ பக்குவம் இல்லாதவன் என்று எண்ணிக் கொள்வான் இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :- ("இப்போ ஒரு அப்பா தன் பிள்ளைக்கு என்ன வேணுமோ அதைச் சரியாச் செய்வாரு. ஆனா நீங்க போயி அது வேணும் இது வேணும்னு கேட்டுக்கிட்டே இருந்தீங்கன்னா, 'இவன் இன்னும் பக்குவம் அடையல'ன்னு சொல்லி, அந்தப் பக்குவம் வர்றதுக்காக உங்களை இன்னும் கொஞ்சம் கஷ்டத்துல தள்ளி விடுவாரு. அந்தத் துரத்தி விடுறது கூட ஒரு பாசம் தான்! நீங்க கஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு கடைசியில நொந்து போய், 'எப்பா, எனக்கு வேற எதுவுமே வேணாம்... நீ மட்டும் போதும்ப்பா'ன்னு எப்போ மனசாரச் சொல்றீங்களோ, அப்போதான் அந்த இறைவன் உங்களுக்கு எல்லாத்தையும் அள்ளிக் கொடுப்பாரு!")


==========================================

# எப்பொழுது எதையும் வேண்டாம் என்று சொல்கின்றோமோ,  அப்பொழுதுதான் இறைவன் அனைத்தும் கொடுப்பார்.

==========================================


குருநாதர் :- அப்பனே எப்பொழுது எதையும் வேண்டாம் என்று சொல்கின்றாயோ அப்பொழுதுதான் இறைவன் கொடுப்பான் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- எப்பொழுதுதான் உண்மையான வாழ்க்கை? எப்பா எனக்கு எதுவும் வேணாம்டா. எப்பா அன்னைக்கு எப்ப நீங்க சொல்றீங்களோ அப்ப என்ன பண்ணுவாரு?


அடியவர் :- அப்பதான் கொடுப்பார் 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்பதான் இறைவன் அனைத்தும் கொடுப்பார்


=========================================

# இறைவனிடம் கொடு கொடு என்றால் அப்பனே நிச்சயம் கஷ்டத்தை தான் கொடுப்பார்.

=========================================


குருநாதர் :-  அப்பனே கொடு கொடு என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் கஷ்டத்தை தான் கொடுப்பான் அப்பனே சொல்லிவிட்டேன் ஏனென்றால் அனுபவம் வேண்டும் அல்லவா 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ அதை கொடு இதை கொடுன்னு சொன்னா என்ன பண்ணுவாரு? கொடுப்பாரு அதோட கஷ்டத்தையும் கொடுப்பார் ஐயா புரியுதுங்களா ஐயா?


===========================================

# சித்தர்களின் அரவணைப்பும், எதிர்வரும் மாற்றங்களும்.

===========================================


குருநாதர் :-  அப்பனே நல் மனதாக, இதனால் அப்பனே எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூ,ட நல் முறையாக அப்பனே நிச்சயம் பின் உலகத்திற்காக அப்பன் நிச்சயம் யாங்கள் போராட்டமாக, அப்பன் நிச்சயம் தன் மனிதர்களை காக்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  உலகத்தை சித்தர்கள் காக்க இன்னும் இருக்கிறாங்க வந்து மறையவில்லை 


குருநாதர் :- அப்பனே யாங்கள் காத்துக் கொள்வோம் என்பேன் அப்பனே வருங்காலத்தில் அப்பனே பல அழிவுகள் இருக்கின்றது என்பேன் அப்பனே யாங்கள் காத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் என்போம் அப்பனே 


சுவடி ஓதும் மைந்தன் :- ("இன்னும் முன்னாடி போகப் போகப் பல அழிவுகள் வர்றதுக்கு வாய்ப்பு இருக்குப்பா. ஆனா, சித்தர்கள் நாங்க அதையெல்லாம் பார்த்துட்டு சும்மா இல்ல, காத்துக்கிட்டு தான் இருக்கோம். எவ்வளவுதான் அழிவுகள் வந்தாலும், மக்கள் அழியக்கூடாதுன்னு சித்தர்கள் அவங்களை அரணாய் நின்னு காப்பாத்திக்கிட்டு தான் இருக்காங்க. அழிவுங்கிறது ஒரு பக்கம் இருந்தாலும், எங்களைக் நம்பி வர்றவங்களை நாங்க கைவிடாம காப்போம்ன்றது தான் நிஜம்!")


குருநாதர் :- அப்பனே வருங்காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட உங்களையும் காப்பாற்ற யாங்கள் வழிவகுப்போம் என்போம் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :- ("முதல்ல உங்களை நீங்க காப்பாத்திக்கப் பழகிக்கணும்ப்பா. உங்களுக்குள்ள ஒரு தெளிவும் பலமும் இருந்தாதானே உங்களால மத்தவங்களைக் காப்பாத்த முடியும்? நீங்களே தடுமாறிட்டு இருந்தா எப்படி மத்தவங்களுக்கு உதவ முடியும்? அதனால, உங்களை நீங்க எப்படித் தற்காத்துக்கணும், எப்படிச் சரியான பாதையில போகணும்ங்கிற அந்த வழியை நாங்க உங்களுக்குக் கத்துக் கொடுக்கிறோம். அதைச் சரியா கத்துக்கிட்டா, நீங்க நல்லா இருக்கிறது மட்டும் இல்லாம, ஊருக்கே வழிகாட்டலாம்!")


=============================================

# தவறில்லாப் பாதைக்குத் தேவையான துணைக்கருவிகள்

=============================================


குருநாதர் :- அப்பனே அவ்வழிகளையும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட வழியை காண்பித்துக் விடுகின்றோம் அப்பனே. அங்கு சென்று அப்பனே பின் அவ்வழியில் சரியில்லை என்றால் அப்பன் நிச்சயம் தன்னில் கூட நீங்கள் வருந்துவீர்கள் அல்லவா அதனால்தான் அவ்வழியில் செல்வதற்கும் அப்பனே பின் சில உபகரணங்கள் யான் தருகின்றேன் அப்பனே கவலையில் பட வேண்டாம் 


சுவடி ஓதும் மைந்தன் :- ("ஒருத்தர் வழியைக் காமிச்சுட்டா மட்டும் நீங்க டக்குன்னு அந்த இடத்துக்குப் போயிட முடியுமா? அந்தப் பாதையில எத்தனையோ மேடு பள்ளம், தடைகள் இருக்கும். அப்போ அங்க போய் மாட்டிக்கிட்டு, 'அடடா! இந்த வழியில வந்து இப்படி ஆகிப்போச்சே'ன்னு நீங்க வருத்தப்படக்கூடாது பாத்தீங்களா? அதனாலதான், அந்த வழியில நீங்க சரியா நடக்குறதுக்கு 'உபாயங்கள்' மற்றும் 'உபகரணங்கள்' தேவை. 'இதை வச்சுக்கோ, அதைத் துணையா எடுத்துக்கோ'ன்னு எதைக் கொடுத்தா உங்க பயணம் நல்லா இருக்குமோ, அதை எல்லாம் கொடுத்துதான் உங்களை நாங்க வழிநடத்துவோம்!")


=======================================

# கேது பகவான் நினைத்து, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று சிவபுராணத்தை பாடுங்கள். 

=======================================


குருநாதர் :-  அப்பனே நன்மைகளாகவே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நிச்சயம் கேது பகவான் நினைத்து பின் அனைவரும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அப்பனே பின் சிவபுராணத்தை பாடுங்கள் மீண்டும் வாக்குகள் செப்புவேன் அப்பனே ஆசிகள் 


சுவடி ஓதும் மைந்தன் :- ( "மனசுல கேது பகவானை நல்லா நினைச்சுக்கோங்க... இந்த தேசத்துல இருக்குற எல்லாரும் நல்லா இருக்கணும், இந்த உலக மக்கள் எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு வேண்டிக்கோங்க. முக்கியமா, எல்லாருக்கும் 'நல்ல எண்ணங்களை கொடுங்கப்பா'ன்னு கேது பகவான்கிட்ட உருக்கமா கேட்டுக்கோங்க. ஏன்னா, நல்ல எண்ணம் இருந்தாலே மத்ததெல்லாம் தானா நடக்கும்!" )



================================================

# கேது பகவான் சாபத்தை பெற்ற போது, திருக்கேதீஸ்வரம் இங்கு வந்து , ஈசனாரை தரிசனம் செய்து , அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், உலக நன்மைக்காக  என்று சிவபுராணம் பாடி வேண்டினார்.

================================================



குருநாதர் :-  நிச்சயம் ஏன் சொன்னேன் என்றால் அப்பன் நிச்சயம் தன்னில் கூட கேது பகவான் நிச்சயம் தன்னில் சாபத்தை பின் பெற்றபொழுது நிச்சயம் இங்கு (திருக்கேதீஸ்வரம்) அவ்வாறுத்தான் வணங்கினான் என் சாபத்தை நீக்குக என்று நிச்சயம் 


==========================================

# உலக நன்மைக்கான சிவபுராணப் பிரார்த்தனை மீண்டும் ஆரம்பம்….

==========================================


சுவடி ஓதும் மைந்தன் :-  ("கேது பகவான் எப்படித் திருக்கேதீஸ்வரத்துல வந்து, 'ஈசனே, என்கிட்ட தங்கியிருக்கிற அழுக்கையும் சாபத்தையும் நீக்கி என்னைச் சுத்தப்படுத்து'ன்னு முறையிட்டாரோ, அதே மாதிரி நாமளும் இன்னைக்கு வேண்டிக்கணும். 'எங்க சாபத்தை மட்டும் இல்லாம, உலகத்துல இருக்கிற மத்தவங்க சாபத்தையும் போக்குங்க... நாலு பேர் நல்லா வாழட்டும், இந்த உலகம் சுபிட்சமா இருக்கட்டும்'னு இறைவன் கிட்ட மன்றாடணும். அதனால, எல்லாரும் நல்லா இருக்கணும்ங்கிற எண்ணத்தோட இப்போ சிவபுராணத்தைப் பாடுங்க. நீங்க பாடி முடிச்சதும், நான் மீண்டும் வந்து உங்களுக்கான வாக்குகளைச் சொல்றேன்!")


அடியவர்கள் :- திருச்சிற்றம்பலம். திருச்சிற்றம்பலம்.


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்….. )


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.