“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Monday, February 2, 2026

சித்தர்கள் ஆட்சி - 577 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 7 (அறிவியல்  வாக்கு)



நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை) 

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 

நேரலை :-  https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h59m36s


(இவ் கூட்டு பிரார்த்தனையின் 9 பகுதி வாக்குகள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 )



==================================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் விஞ்ஞான வாக்கு 

==================================================


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன். 


அப்பனே, அனைவருக்குமே அம்மையே, அனைவருக்குமே—எம்முடைய ஆசிகள். இவ்வாறாக பல சித்தர்கள் வந்து வந்து சில விஷயங்கள், சில ரகசியங்கள் சொல்கின்ற பொழுது, அதை ஏற்று பின் நல்விதமாக, நம்பிக்கையோடு, நிச்சயம் தன்னில் கூட செய்து வந்தாலே பல மாற்றங்கள் உண்டு, ஏற்றங்களும் உண்டு. 


குருநாதர் :- ஏன், எதற்கு இவ்வாறெல்லாம் பின் சித்தர்கள் வந்து வாக்குகள் செப்புகின்றார்கள் என்றால், நிச்சயம் தன்னில் கூட மனிதனால் கலியுகத்தில் நிச்சயம் தன்னில் கூட எதை எதையோ பின்பற்றி, எவை எவையோ பொய் சொல்லி, எதனை எதனையோ நம்பி, நிச்சயம் வீணாகப் போவான். 


அதனால்தான் உண்மைகளை தெரிவித்து விட்டால், தன்னைத்தானே சீர்படுத்திக் கொண்டு, வாழ்ந்து இறைவனையும் காண்பான். இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் எதை என்று அறிய கட்டாயம் நிச்சயம் தன்னில் கூட அடுத்தடுத்து என்ன அழிவுகளும் கூட. 


ஆனாலும் அவையெல்லாம் மனிதனுக்கு செப்பிக்கொண்டே இருந்தாலே பயம் தான் வரும். இதனால்தான் யாங்கள் செப்புவதில்லை. அதை முடிந்த அளவு யாங்கள் தடுப்போம். தடுப்பதற்கு நீங்களும் பலமாக நிச்சயம் தன்னில் கூட சேவைகள் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு. 


அவை மட்டுமில்லாமல் உண்மை நிலையை கடைபிடித்து, ஏற்றங்கள் கண்டு, தர்ம நிலையை பயன்படுத்தி, சரியாகவே தர்மத்தை கடைபிடித்து வந்தால், மனசாட்சியோடு வாழ்ந்து வந்தால், பின் அதாவது யாங்கள் வந்து வாக்குகள் செப்பி, நிச்சயம் தன்னில் கூட பின் பக்குவங்கள் ஏற்படுத்தி, அனைத்தையும் சரி செய்வோம் வருங்காலத்தில். இதனால் ஏன், எதற்கு, எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் அதிகாரங்கள், சேவைகள் இன்னும் எதை எது என்று அறிய. 


=======================================

# சித்தர்கள் சொல்வதை நிச்சயம் செய்தால் மட்டுமே, உங்களுக்கு பக்குவங்கள் பிறக்கும். பக்குவங்கள் பிறந்து ஞானங்கள் பிறக்கும். அவ் ஞானத்தின் வழியாகத்தான் மற்றவர்களையும் கூட நீங்கள் பிழைக்க வைக்க முடியும். 

=======================================


குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட வாக்குகள் பலவற்றையும் கூட ஆனாலும் பின் சித்தர்கள் சொல்வதை நிச்சயம் பின் செய்தால் மட்டுமே, ஏனென்றால் பின் அதை செய்தால் மட்டுமே உங்களுக்கு பக்குவங்கள் பிறக்கும். 


பக்குவங்கள் பிறந்து ஞானங்கள் பிறக்கும். அவ் ஞானத்தின் வழியாகத்தான் நிச்சயம் பின் மற்றவர்களையும் கூட நீங்கள் பிழைக்க வைக்க முடியும். 


============================================

# தனிப்பட்ட முறையில் ஏன் வாக்குகள் செப்பவில்லை ? ஏன் கூட்டுப்பிரார்தனையில் மூலம் அனைத்து வாக்குகளும் செப்புகின்றார்கள் சித்தர்கள்.

============================================


குருநாதர் :- நீங்களே செய்யவில்லை என்றால் நிச்சயம் யாங்கள் வாக்குகள் பின் அதாவது தனிப்பட்ட முறையில் வந்து செப்பியும் வீணாகப் போய்விடும். இதனால்தான் பின் நிச்சயம் யான் வந்து வாக்குகள் செப்புவதே இல்லை. இன்னும் பலவற்றை கடந்து எது என்று புரிய அனைத்தும் யாங்கள் நிச்சயம் தர தயார். 


நீங்கள் நிச்சயம் தன்னில் கூட பின் செய்ய தயாரா?? என்பது எல்லாம். 


தயாராக இருந்தால் யாங்களும் பின் கொடுப்பதற்கு தயாராகவே இருப்போம். பின் அவை மட்டுமில்லாமல் ஏனைய சித்தர்கள் நிச்சயம் பின் அவை தன் நிச்சயம் பின் உங்களால் செய்ய முடியாததற்கு காரணம் ஒரு செப்பினாலும் சோம்பேறித்தனமே என்பேன். ஏன், எதற்கு என்றெல்லாம். 


=============================================

# , கூட்டுப் பிரார்த்தனை குழு  அடியவர்களுக்கு புண்ணியங்கள் கொடுத்து,   அவர்களை பல ஆலயங்களுக்கு செல்ல வைத்து , அவர்கள் பெற்றுவந்த பிரசாதங்களை  , அனைவருக்கும் அடுத்த கூட்டுப்பிரார்தனையில் தந்து , அதன் மூலம் புண்ணியங்களை உங்களுக்கு யான் தருகின்றேன். அதன் மூலம் பிழைத்துக் கொள்ளுங்கள். 

==============================================


குருநாதர் :-  இதனால் கடும் முயற்சி எடுத்து நிச்சயம் தன்னில் கூட சரியாகும் என்ற நம்பிக்கை நிச்சயம் தன்னில் கூட இன்னும் பல வழியில் கூட நிச்சயம் உங்களை புண்ணியத்தை பெற்றுத் தர, நிச்சயம் தன் அடியாட்களை பின் அனுப்பி பின் மற்ற இடங்களுக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட சேவை எது என்று புரிய பின் செய்து அப் புண்ணியத்தையும் நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு யான் தருகின்றேன். அதன் மூலம் பிழைத்துக் கொள்ளுங்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா.



அடியவர் உரையின் சுருக்கம் :-  (கலியுகத்தின் உண்மை நிலையையும் அதிலிருந்து விடுபடும் வழியையும் சித்தர்கள் குருநாதர் வழியாக மிகத் தெளிவாக விளக்குகிறார்கள். ஏமாற்றமும், பித்தலாட்டமும், போலித்தனமும் மலிந்து கிடக்கும் இந்த யுகத்தில், மனிதர்களுக்கு உண்மை நிலையை உணர முடியாத சூழல் நிலவுகிறது. 


இந்த இருளைப் போக்கி மக்களை நல்வழிப்படுத்தவே சித்தர்கள் இறங்கி வந்து வாக்குகள் அளித்துக் கொண்டிருக்கிறார்கள். பெருகி வரும் சோதனைகளால் கடினமாகிப் போன மனித வாழ்க்கையை மாற்றியமைக்க 'கூட்டுப் பிரார்த்தனை' எனும் ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். இதில் முக்கியமான தர்மம் என்னவென்றால், நாம் பிறருக்குச் செய்யும் உதவியே நமக்கான உதவியாகத் திரும்பி வந்து வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதாகும்.

மேலும், கர்ம வினைகளாலும் சோம்பேரித்தனத்தாலும் மக்களால் புனிதத் தலங்களுக்குச் சென்று வழிபட முடியாத நிலையைக் கருத்தில் கொண்டு, சித்தர்கள் பெரும் கருணை காட்டியுள்ளனர். குருநாதரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்கள் மூலமாக பஞ்சபூதத் தலங்கள் மற்றும் அறுபடை வீடுகளுக்கு சென்று அங்கிருந்து விபூதி உள்ளிட்ட பிரசாதங்களையும் பூஜை பொருட்களையும் சேகரித்து வருகிறார்கள். 

அந்த புனிதப் பொருட்கள் உங்கள் இல்லத்திற்கே கொண்டு வரப்பட்டு, அதை வைத்து எப்படி வழிபட வேண்டும் என்ற முறையும் அடுத்த கூட்டுப் பிரார்த்தனையில் கற்றுக் கொடுக்கப்படும். இந்த வழிமுறையை பின்பற்றி ,  உங்கள் கர்ம வினைகள் நீங்கிப் புண்ணியம் உங்களுக்கு கிட்டும்.)

=========================================

# ஆதி ஈசனாரின் நெருப்பு பிழம்பு - பரம ரகசியங்கள் வாக்குகள் ஆரம்பம் …..

=========================================



குருநாதர் :- அப்பனே, அறிந்தும் அம்மையே, நிச்சயம் தன்னில் கூட இங்கு எப்படி மனிதன் பிறக்கின்றான் என்பதற்காக இப்பொழுது சொல்கின்றேன். 


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட பின் இப்பிரபஞ்சம் எவை என்று போன்று எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ஒரு நிச்சயம் பின் நெருப்பு, நிச்சயம் பிழம்பு எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். இதைத்தன் இறைவன் என்று எண்ணிக்கொள்ளுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஒரு நெருப்பு பிழம்பு எரிஞ்சு கிட்டே இருக்கும். அதுதான் இறைவன். 


===============================================

# அவ் நெருப்பினில் நிச்சயம் ஆதி ஈசன் எப்பொழுதும் ஆடிக்கொண்டே இருப்பார். அங்கிருந்து ஒளியானது நிச்சயம் உடுக்கை ஒலி. 

================================================


குருநாதர் :- எதை என்று புரிய அவ் நெருப்பினில் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஈசன் பின் எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். நிச்சயம் அங்கிருந்து ஒளியானது,  நிச்சயம் உடுக்கை ஒலி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  உடுக்கை ஒலி . அப்ப அந்த நெருப்பு பிளம்புல எப்ப பார்த்தாலும் யார் விளையாடி கொண்டு இருப்பார் ?.


அடியவர் :-  ஈசன் நடனமாடி.


சுவடி ஓதும் மைந்தன் :-   ஈசன் நடனமாடிக்கொண்டிருக்கிறார். அப்ப அது நடனமாடும் பொழுது அந்த சவுண்ட் என்ன சவுண்டாம்?


அடியவர் :-   உடுக்கை.


சுவடி ஓதும் மைந்தன் :-   உடுக்கை சவுண்டு. 


==================================

# ஈசனாரின் உடுக்கை ஒலி அனைத்து கிரகங்களுக்கும் கூட செல்லும். 

==================================



குருநாதர் :- எது என்று புரிய அவ்  உடுக்கை நிச்சயம் தன்னில் கூட அனைத்து கிரகங்களுக்கும் கூட செல்லும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அது தனி சாப்டர். ஒரு பெரிய வந்து ஒரு நெருப்பு பிழம்பு வந்து அதுக்குள்ள நடனமாடிக் கொண்டிருக்கிறார் அந்த ஒலியானது வந்து உடுக்கை சப்தமா வந்து, பிற கிரகங்களுக்கு உடுக்கை ஒலி. அந்த உடுக்கை ஒலி என்ன ஆகுது? எல்லா கிரகத்தும் போகுது. 



===================================

# நெருப்பு  பலமாக பின் எரிந்து கொண்டிருக்கும் பொழுது , உடுக்கை ஒலி பூமி பூமி மீது பட்டு பூமி வேகமாக சுழல்கின்றது. இதே போல அனைத்து கிரகங்களும்…

===================================



குருநாதர் :- எதை எப்படி? ஏன்? ஒரு நாளாவது யோசித்திருப்பீர்களா என்ன? நிச்சயம் தன்னில் கூட புவியானது, ஏன் சுற்றிக்கொண்டே இருக்கின்றது என்று? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு நாளாவது நீங்க யோசிச்சிருக்கீங்களா? உலகம் ஏன் சுற்றுது? 


குருநாதர் :- எதை என்று அறிய பின் எவை என்று புரிகின்ற பொழுது நிச்சயம் தன் இதனால்தான் அவ் நெருப்பு பலமாக பின் எரிந்து கொண்டிருக்கும் பொழுது, நிச்சயம் உடுக்கை சத்தம் கேட்டு, நிச்சயம் அவ்விடத்திலிருந்து வரும் சக்தி இதைத்தன் பின் பட்டு, இவைத்தன் பின் வேகமாக சுழல்கின்றது.


அடியவர் :-   அப்பா !!!!!!!.


சுவடி ஓதும் மைந்தன் :- பூமி சுத்துறதுக்கு காரணம் - அறிவியல்.


அடியவர் :-    பூமி மட்டும் சுத்தல. எல்லா கிரகமும்  தான்.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாம் இயக்கம். முழு இயக்கத்துக்கும் காரணம் சொல்றாங்க. ஏன் சுத்துது? சும்மா சுத்துதா ஐயா?  அந்த (உடுக்கை சத்தம்) ஒலி   வந்து படுகின்ற பொழுது சுழற்சியை உண்டு பண்ணுது.


==============================

# மூலாதாரம் - நெருப்பு பிழம்பு 

==============================


குருநாதர் :- நிச்சயம் எதை என்று புரிய அதாவது அவ் நெருப்பு பிழம்பு இல்லை என்றால் நிச்சயம் அனைத்தும் அப்படி அப்படியே நிற்கும். அவ்வளவுதான் முடிந்தது. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப அந்த நெருப்பு பிழம்பு இல்லைன்னா…. 


அடியவர் :-    இயக்கம் நின்றும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   இயக்கம் நின்னுடும். அப்ப எந்த கிரகமும்  சுத்தாது. எல்லாம் நின்னுச்சுன்னா என்ன ஆகும்? ஐயா, உயிர் வாழ மாட்டோம். அவ்வளவுதான் க்ளோஸ் ஆயிடும். ஐயா. 


==========================================

# மனித பிறப்பின் ரகசியங்கள் :- நெருப்பு  எரிந்து கொண்டே இருக்கின்றது. 

# அதில்  இருந்து சாம்பல் விழுந்து கொண்டே இருக்கும். 

# அது தான் நிச்சயம் மனிதனுடைய பிறப்பு. 

==========================================



குருநாதர் :- அறிந்தும் புரிந்தும் இவைத்தன் ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட நெருப்பு பின் எரிந்து கொண்டே இருக்கின்றது. ஆனாலும் அதில் தன் எவ்வாறு என்பது கூட சாம்பல் எதை என்று புரிய விழுந்து கொண்டே இருக்கும். அதுதான் நிச்சயம் மனிதனுடைய பிறப்பு. 


அடியவர் :-   அந்த துகள் சொன்னாங்களே, அது சாம்பல். 



சுவடி ஓதும் மைந்தன் :-  துகள். அந்த சாம்பல் துகள். சாம்பல் வந்து நெருப்பு எரியுறப்போ, அந்த சாம்பல் எல்லாம் தெறிக்கும். தெறிக்கும் இல்ல? அதுதான் மனிதனோட பிறப்பு. அய்யா புரியுதுங்களா?


அடியவர் :-   மனிதன் மட்டும்தான் எல்லாத்தையும் இல்ல.


===========================================

# வேகமாக  ஆடும்  நடராஜர் ரகசியங்கள்…..

===========================================


குருநாதர் :- எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அதாவது அது வேகமாக சுழல்கின்ற பொழுது, அதாவது ஈசன் எவ்வளவு பின் அதாவது பின் நடராசனாக ஆடும் எதை என்று கூற,  பின் ஆடுகின்றானோ, அவ்வளவு வேகத்தில் சுழல்கின்ற பொழுது அங்கெங்கு தெறிக்கும். 


===============================

# ஆதி ஈசனாரின் சாம்பல் ரகசியங்கள் - ஏன் மனிதனிடத்தில், ஜீவராசிகளிடத்தில்  ஏற்ற தாழ்வுகள் ? பணக்காரன் , ஏழை , விலங்குகள் என்று ….

===============================



குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட, ஓரிடத்தில் பிறந்தால் நிச்சயம் தன்னில் கூட, எங்கு சக்திகள் அதிகமாக இருந்ததோ, அங்கு நிச்சயம் அத்துகள்கள் அதாவது சாம்பல் விழுந்தால் பின் ஒருவன் பின் உயர்ந்து நிற்பதும்.  பின் மற்றொரு இடத்தில் நிச்சயம் அவ்வ இடத்திற்கு பூமியில் எதை என்று அறிய அறிய நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் நிச்சயம் விலங்குகளாகவும் இன்னும் ஏனைய எதை எதையோ என்று. 


அடியவர் :-   அப்பா !!!!! 


சுவடி ஓதும் மைந்தன் :-  புரியுதுங்களா? இந்த பாஸ்ட்டா சுத்திட்டு இருக்கும் பொழுது ஓரிடத்தில் ஒரு மிக்க சக்தியான இடத்துல விழுந்துடுச்சுன்னா, அவன் பெரிய ஆளு. ஐயா, புரியுதுங்களா? அவங்க வந்து பணக்காரரா நிக்கிறாங்க. அடுத்து ஒரு இடத்துல அது எங்கேயோ போய் தூரத்துல விழுந்துடுச்சுன்னா…., 


அடியவர் :-   சாதாரண மனிதன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  சாதாரண மனிதன். இன்னும் வேற எங்கனா விழுந்துடுச்சுன்னா, 


அடியவர் :-  ஜீவராசிகள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஜீவராசிகள். புரியுதுங்களா? ஐயா, அந்தந்த இடத்துக்கு சக்திக்குத் தகுந்த மாதிரி.


அடியவர் :-   பிறக்கும்போதே…..


========================================

# விண்வெளியில் இருந்தது அவ் சாம்பலானது கிரகங்களை ஊடுருவித்தான் வரும்.

========================================


குருநாதர் :-  எதை எவை என்று புரிய ஆனாலும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் ஆனாலும் பின் அதாவது அவ் சாம்பலானது நிச்சயம் தன்னில் கூட கிரகங்களை பின் நிச்சயம் தன்னில் கூட ஊடுருவித்தான் வரும். 


அடியவர் :-   பிற கிரகங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த சாம்பலானது என்ன ஆகுது? இங்க சுத்தி கொண்டு இருக்குது இல்ல? எல்லா கிரகங்களும் அதுல…. 


அடியவர் :-    உள்ளுக்குள்ள போய் வரும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   உள்ளுக்குள்ள தான் போயிட்டு ஊடுருவி வெளிவரும். 


குருநாதர் :- அதனால்தான் இறைவனை அறிந்தும் புரிந்தும் கூட பின் உள்ளில் எப்படி எப்பொழுது காண்பது என்று 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால இறைவனை எப்படி  உள்ளுக்குள் காண்பது.


===================================

#   மீண்டும் பூமியில் பிறவாமல் இருப்பதற்கு என் இயற்கை உணவு அவசியம்?

# எப்படி ஆன்மா மீண்டும் திரும்பி சென்று , நெருப்பு பிழம்பில் ஒட்டிக்கொள்ளும் ?

===================================


குருநாதர் :- (சாம்பல்) இவைத்தன் தெறிக்க,  எதை என்று புரிய, ஆனாலும் அறிந்தும் பின், அதாவது நிச்சயம் தன்னை கூட, சரியாகவே நிச்சயம், பலமாகவே பின் இயற்கை எதை என்று புரிய பல வகையான நிச்சயம் தன்னில் கூட, பின் ஏன் எதற்கு இயற்கை உணவுகளை எல்லாம் தேர்ந்தெடுத்து உண்டு, மனம் பக்குவப்படுத்தி நின்றால், நிச்சயம் தன்னில் கூட, பின் இவ் அதாவது நிச்சயம் தன்னில் சாம்பல், அவ்வவ் கிரகத்தில் நிச்சயம் பின் பதிந்துவிடும். நிச்சயம் பூமிக்கு வராது. நிச்சயம் தன்னில் கூட பின் அவ் சாம்பல் பூமிக்கு வந்துவிட்டாலே முடிந்தது வாழ்க்கை. நரகம் தான். 



சுவடி ஓதும் மைந்தன்  :-  ( இயற்கை உணவை உண்டு மனதைப் பக்குவப்படுத்தினால், நம் வினைப்பயன்கள் (சாம்பல்) மேல் உலகிலேயே தங்கிவிடும்; பூமிக்குத் திரும்பி வந்து மீண்டும் பிறந்து நரக வேதனையை அனுபவிக்க வேண்டிய அவசியம் இருக்காது. சுருக்கமாகச் சொன்னால்: இயற்கை உணவுக்கட்டுப்பாடும் மனத்தூய்மையும் உங்களை பிறவித் துன்பத்தில் இருந்து காக்கும்.)


குருநாதர் :- எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட மீண்டும் எவை என்று அறிய அறிய இச்சாம்பலானது பின் மீண்டும் அங்கேதான் செல்லும். 


சுவடி ஓதும் மைந்தன்  :-   கிரகங்களுக்கு அங்கிருந்து இறங்கிட்டு, பூமியில் பட்டு, மீதி எங்கிருந்து போதாம்? திருப்பியும் இது ஊடுருவி, திருப்பியும் எங்க ஊடுருவது?  எங்க போகணும்?. நெருப்பு பிழம்புக்கு. 



குருநாதர் :- இதனால் மனப்பக்குவத்தோடு பல வகையான இயற்கை உணவுகளை உண்டு, நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய பக்க பலமாக நிச்சயம் பின் உடம்பை பின் ரணகளம் ஆக்கினால் நிச்சயம் மீண்டும் பின் அதாவது அங்கு ஒட்டிக்கொள்ளும். அதாவது நெருப்பின் பின் அதாவது பிழம்பினில், இல்லையென்றால் மீண்டும் பின் அதாவது பின் அதற்கு அருகிலே செல்கின்ற பொழுது மீண்டும் மீண்டும் திரும்பி வந்துவிடும். 


அடியவர் :-  இயற்கை உணவு தான். இயற்கை உணவு நம்ம சரியான முறையில் , இந்த உடம்பை பாதுகாப்பது  இயற்கை உணவு. 


===================================

# ஆன்மாவை பலப்படுத்தும் சித்தர்கள் பாடல்கள். ஆன்மா என்பது சிறிய துகளே.

===================================


குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட சித்தர்களும் கூட நிச்சயம் தன்னில் கூட எவை என்று பல பல வழியில் கூட பாடல்கள். நிச்சயம் அப்பாடலை பாடினாலே. உள்ளத்தில், அதனுடைய ஆன்மா பலம் பெறும். 


குருநாதர் :- ஆன்மா என்பது நிச்சயம் தன்னுடைய பின் சிறிய துகளே.  ஆனாலும் அதை ஒரு சக்தியாக ஏற்ற வேண்டும் என்றால், நிச்சயம் இன்னும் இவைப் போன்று பாடல்கள் தேவைப்படுகின்றது. 


குருநாதர் :-  அதனால்தான் நால்வர் பெருமக்களும் இன்னும் இன்னும் சித்தர்களும் பல பாடல்களை பாடி,  அவ் ஆன்மாவுக்கு சக்திகள் ஏற்றிவிட்டால் நிச்சயம் தன்னில் கூட காந்தகம் போல் நிச்சயம் இவையும் கூட அறிந்தும் அங்கே ஒட்டிக்கொள்ளும். இதனால் நிச்சயம் பிறவி முடிந்தது. ஆனால் பின் சாதாரணம் இல்லை பிறவி முடிவது. 


அடியவர் :-   அப்பா, பெரிய பயங்கரமான ஒன்னு சொல்லி இருக்காங்க. 


சுவடி ஓதும் மைந்தன்  :-   ஐயா, புரியுதுங்களா?.


===============================================

# ஆன்மா சனி கிரகத்தில் விழுந்தால் , ஓராண்டு அல்லது  ஈராண்டு இருந்துவிட்டு நிச்சயம் மீண்டும் புவியை அடைந்துவிடும். 

===============================================


குருநாதர் :- எதை என்று புரிய இதனால் அவ் நெருப்பு பின் பிழம்பானது, நிச்சயம் அதாவது இப்படி வைத்துக் கொள்வோம். அதாவது அங்கிருந்த சாம்பலானது நிச்சயம் தன்னில் கூட சனி கிரகத்தில் நிச்சயம் தன்னில் கூட விழுந்தால் நிச்சயம் ஓராண்டோ ஈராண்டோ இருந்துவிட்டால், நிச்சயம் எது என்று புரிய பின் இருந்திட்டு நிச்சயம் மீண்டும் புவியை அடைந்துவிடும். 


குருநாதர் :- எது என்று புரிய இதனால் பின் அறிந்தும் இதற்கு தகுந்தார் போல் நிச்சயம் தன்னில் கூட அதே போன்று தான், எதை என்று அறிய, இவ்வாறு சுற்றுகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறாக பட்டு பட்டு, நிச்சயம் எங்கு ஏது, என்று அவ் ஆன்மா பலம் இழந்து விட்டால், கடைசியில் பின் பூமி வந்தடைந்து விடும். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ஐயா, புரியுதுங்களா? எப்படி சொல்லுங்க ஐயா? 


அடியவர் :-    (அந்த ஆன்மா சனி கிரகத்திலேயே இரண்டு வருஷம் மூணு வருஷம் இருந்துச்சுன்னா,  பலம் இழந்து விட்டால் அது பூமியை வந்தடைந்து விடும்)


=============================================

# நெருப்பு பிளம்பிலிருந்து, அச்சாம்பல் அதனை முதலில் ராகு கேது சனிதான் பிடித்து வைத்துக்கொள்ளும். நிச்சயம் அச் சாம்பல் அது முதலில் ராகு கேது சனி கிரகங்களை தாண்டி தான் அச் சாம்பல் பூமிக்கு வரவேண்டும்.

=============================================



குருநாதர் :- அப்பா, முதலில் கூட அவ் நெருப்பு பிளம்பிலிருந்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது ராகு கேது சனிதான் முதலில் பிடிக்கும் என்பேன் அப்பனே. அதை நிச்சயம் அதை தாண்டி தான் நிச்சயம் அச்சாம்பல் வரவேண்டும். 


============================================

# மனிதனின் விதி எழுதப்படுவது - சனி கிரகத்தில் தான் 

============================================



குருநாதர் :- நிச்சயம் இதனால்தான் விதி நிச்சயம் பின் சனி கிரகத்தில் தான் எழுதப்படுகின்றது. 


அடியவர் :-  (எல்லா பேருக்கும் விதி எழுதப்படுவது  சனி கிரகத்தில் தான்)


சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப விதி எங்க எழுதப்படுகின்றது? சனி கிரகத்துல. சனி கிரகத்துல மட்டும் தான் அது எழுதப்படுகின்றது. 


================================================

# முதலில் ஆன்மாக்கள் , கேது கிரகத்திலும் , ராகு கிரகத்திலும் பல பல கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்து , பின்னர் சனி கிரகத்தில் தங்கும் சில ஆண்டுகள். அப்போது விதி எழுதப்படுகின்றது.

================================================



குருநாதர் :- நிச்சயம் எவ்வாறு எழுதப்படுகின்றது என்றால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் இவ் ஆன்மாவுக்கள் நிச்சயம் தன்னில் கூட பின் கேதுவிலும், நிச்சயம் ராகுவிலும், நிச்சயம் தன்னில் கூட பல பல பின் பல ஆண்டுகள் கோடிக்கணக்கான ஆண்டுகள் நிச்சயம் இவ் ஆன்மா எப்படி இருந்தது என்று நிச்சயம் தன்னில் கூட, பின் இப்படிப்பட்ட ஆன்மா நிச்சயம் பின் சனி தன்னில் கூட தங்கும் சில ஆண்டுகள். அச் சில ஆண்டுகளில் விதி நிர்ணயிக்கப்படுகின்றது. 


அடியவர் :- ( நெருப்பு பிழம்பில் இருந்து , முதலில்  ராகு கேது, அதுக்கப்புறம் சனி…) 



===================================

# சனி கிரகத்தில் விதி நிர்ணயிக்கப்பட்ட உடன்,  (சாம்பல் துகள்)ஆன்மா மற்ற கிரகங்களுக்கு செல்கின்றது. விதி நன்றாக இருந்தால்  அனைத்து கிரகங்களின் தன்மையை உள்வாங்கி புவியில் பிறந்து விடுகின்றது. இதனால் அனைத்து  கிரகங்களின்  சந்தோஷங்கள் அவனுக்குப் கிடைக்கின்றது. 

===================================



குருநாதர் :- இதை எவை என்று புரிய இங்கு (விதி) நிர்ணயிக்கப்பட்டவுடன் மற்ற கிரகங்களுக்கு செல்கின்றது. நிச்சயம் தன்னில் கூட பின் விதி நன்றாக இருந்தால் பின் அனைத்து கிரகங்களின் கூட தன்மையை உள்வாங்கி நிச்சயம் தன்னில் கூட புவியில் பிறந்து விடுகின்றது. நிச்சயம் தன்னில் எதை என்று புரிய இதனால் அனைத்து கிரகங்களும் கூட எவை என்று அறிய பின் சந்தோஷங்கள் அவனுக்குப் பின் கிடைக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  எல்லா கிரகங்களுக்கும் போகுது. 


==========================================

# எல்லா கிரகத்திலும் உயிரினங்கள், ஆட்கள் வாழ்கின்றார்கள் 

==========================================


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட ஆனால் அதாவது நிச்சயம் ( …………… No Audio here… ………………….. ) கிரகங்களில் கூட உயிர், அதாவது நிச்சயம் இன்னும் கூட உயிரினங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன்  :- எல்லா கிரகத்திலும் உயிரினங்கள் இருக்கு. உயிரினங்கள் இருக்கிறது. 


குருநாதர் :- எதை என்று அறிய பின் இதை இதைத்தான் முட்டாள் என்பது 


சுவடி ஓதும் மைந்தன்  :- மனுஷனும் இருக்கிறார். அதான் முட்டாள்னா இது கூட தெரியலையேடா. இதுதானே முட்டாள்ன்றது தெரிஞ்சுக்கோன்றார். 


அடியவர் 3 :- பூமியில் மட்டும்தான் உயிர் வாழுதுன்னு நினைச்சுட்டு இருக்கிறோம். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  எல்லா கிரகத்திலும் ஆட்கள் இருக்கிறாங்க. 


குருநாதர் :- ஒரு பகுதியே. ஆனாலும் நூற்றில் ஒரு 10% என்று எடுத்துக்கொள்வோம். 


சுவடி ஓதும் மைந்தன்  :- எல்லா கிரகத்திலும் வந்து…. இங்க இருக்கிறது 10% ஆளுங்க இருக்காங்க. 


==================================

# வலுவில்லாமல் இருக்கும் ஆன்மாக்கள், பூமியில் பிறக்கும்.

=================================


குருநாதர் :- ஆனாலும் எவை என்று புரிய வலுவில்லாமல் இருந்தால் பின் அனைத்தும் தாண்டி புவி தன்னில் விழுந்துவிடும். அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது. 


சுவடி ஓதும் மைந்தன்  :- வலுவில்லாதது  தான் என்ன ஆகுது? அந்த துகள் பூமிக்கு இத்தனை கிரகங்கள் தாண்டி பூமிக்கு வந்து விழுது. பூமிக்கு வருது. அப்ப நல்ல வலு இருந்தா என்ன ஆகும்? அந்தந்த கிரகங்களிலே நின்றும். அங்கேயே நின்னுடும். 


==============================================

# அதிக வலுவுடன் இருக்கும் ஆன்மாக்கள் - சித்திர குள்ளர்கள்

==============================================


குருநாதர் :- இதைத்தான் இன்னும் சித்திர குள்ளர்கள் என்கிறார்களே. எதை என்று புரிய புரிந்து கொண்டாயா? என்ன? 


சுவடி ஓதும் மைந்தன்  :-   சித்திர குள்ளர் என்னது? 


அடியவர் :- ஓ…… 


===============================

# திருத்தலங்களில் ரகசியங்கள் 

===============================


குருநாதர் :- அதனால்தான் இன்னும் கூட பின் அதாவது இவ் ஆன்மாக்கள், இன்னும் கூட சக்திகள் பெற வேண்டும், என்று பல சித்தர்களும் பல ஞானிகளும் இன்னும் எத்தனையோ தேவர்களும், நிச்சயம் தன்னில் கூட, இங்கெல்லாம் புவி தன்னில் எல்லாம் திருத்தலங்களும் அமைத்து, அமைத்து, நிச்சயம் தன்னில் கூட பின் இவ் ஆன்மாவை திருத்தி வைத்து விடலாம் என்றெல்லாம் நிச்சயம் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆங்காங்கே நிற்கட்டும் என்று. 


சுவடி ஓதும் மைந்தன்  :- இந்த ஆன்ம துகள்கள் சக்தி ஊட்டுவதற்கு தான் இந்த எல்லா திருத்தங்களும். அதாவது நம்மை  திருப்பி நெருப்பு பிழம்பிற்கு அனுப்புறதுக்காக இவ்வளவு ஞானியர்களும்…


====================================

# ஞானிகள் எப்படி பிறக்கின்றார்கள் ?

====================================



குருநாதர் :- எதை எவை என்று புரிய அப்பொழுது ஞானிகள் எப்படி பிறக்கின்றார்கள் என்றால் நிச்சயம் பின் சரியாக அறிந்தும் புரிந்தும் ஒளி, அதாவது நிச்சயம் நெருப்பு பிழம்பானது பின் நிச்சயம் பின், அதாவது வேகமாக, திடீரென்று பின் நிச்சயம் ஈசன் படு வேகமாக ஆடுவான். அப்பொழுது ஆடுகின்ற பொழுது கிரகங்களை ஒட்டாமலே நேரடியாக நிச்சயம் புவி தன்னிற்கு சாம்பல் வரும். அவர்கள்தான் ஞானிகள் ஆகின்றார்கள். அவர்கள்தான் இவ்வுலகத்திற்கு நிச்சயம் தன்னில் கூட எடுத்துரைக்கின்றார்கள், நல்லதை செய்ய. 




அடியவர் :- சுவாய நம. அவர்கள்தான் ஈசன்ட்ட இருந்து நேரடியா வரக்கூடிய அந்த துகள். 


சுவடி ஓதும் மைந்தன்  :- ( ஞானிகள் அவங்க சாம்பல் டைரக்டா பூமிக்கு வந்துரும், கிரகங்களில் மீது படாமல். . பாஸ்ட்ல அது ஆடுச்சுன்னா என்ன ஆகும்? இந்த கிரகங்களை ஒரு பாஸ்ட்ல சுத்தும். அதுவும் ஒரு பாஸ்ட்ல சுத்தும். அப்ப என்ன ஆகுதுன்னா டைரக்டா பூமியில வந்துருது. வந்து அதுதான் ஞானிகள். ஞானிகள். இது மாதிரி திருஞானசம்பந்தர். அப்ப பூமியில வந்து …_)


அடியவர் 4 :- ( ஒரு கேள்வி கேட்க ) 


குருநாதர் :- எதை என்று புரிய? அப்பா, இன்னும் அப்பனே, நீ அமைதியாக உட்காரு. 


குருநாதர் :- எதை என்று அறிய எங்கிருந்து அனுப்புகிறார்களோ அதேபோல் அவர்கள் சேவையை செய்து, மீண்டும் அதேபோல் கிரகங்களை தொடாமல் அங்கேயே சென்று விடுவார்கள் அவர்கள். இதனால்தான் மோட்சத்தை. 


அடியவர்  :- (வியப்புடன்) அப்பா !!!! 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( பூமிக்கு வரும் ஞானிகள்  ஆன்மாக்கள் மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையிலோ அல்லது அவற்றின் பாதையிலோ சிக்காமல், மிகத் துல்லியமாகவும் நேரடியாகவும் பூமிக்கு வந்து சேருகின்றனர். மற்ற கிரகங்கள் தம் பாதையில் சுற்றிக் கொண்டிருந்தாலும், அவற்றால் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வேகத்தில் இந்தப் பயணம் அமைகிறது. பூமியில் தாம் செய்ய வேண்டிய கடமைகளையும் பணிகளையும் செம்மையாக முடித்த பிறகு, வந்த வேகத்திலேயே எவ்விதத் தடையுமின்றி மீண்டும் நேராக இறைவனிடம் அவை சென்றடைகின்றன. அதாவது மோட்சத்தை.)


அடியவர்  :-   நேரா எந்த கிரகங்களையும் டச் பண்ணாம. 




குருநாதர் :- அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள். நிச்சயம் இவ் ஆன்மாக்கள் எவை என்று அறிய அனைத்து கிரகங்களையும் தாண்டித்தான் அவ் பிழம்பை பின் அடைய வேண்டும். அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள். மோட்சம் என்பது சாதாரண விஷயமா என்று?  


அடியவர்  :-  கஷ்டம். ம் 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அப்ப 


குருநாதர் :- இதைத்தன் எவர் நிச்சயம் தன்னில் கூட கண்டுபிடிப்பது? அப்பனே, அம்மையே, 


சுவடி ஓதும் மைந்தன்  :-  இதை யார் உங்களுக்கு சொல்றது? 


அடியவர்  :-  யாரும் கிடையாது. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  யாரும் சொல்லப்பட்ட யாருமே கிடையாது. 


==============================

# வலுவிழந்த ஆன்மாக்கள் எல்லாம் புவியில் தங்கி விடுகின்றது. துன்பங்கள் வேதனையோடு வாழ்க்கை.

==============================



குருநாதர் :- இதனால் பின் நன்மைகள் எது என்று புரிய? இதனால்தான் வலுவிழந்தவை எல்லாம் பின் புவியில் தங்கி விடுகின்றது. பார்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் துன்பங்கள் வேதனையோடு மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அதனால்தான் நிச்சயம் யாங்கள் வந்து மனிதனுக்கு பக்குவங்கள் படுத்தி, சில காரியங்களை வெற்றியடைய செய்து, நிச்சயம் இறைவன் எதை என்று புரிய.


அடியவர்  :-   நாமெல்லாம் வலிமை இழந்தவர்கள் தான், இந்த பூமியில விழுந்தவங்க தான், இந்த பூமியில் வந்து விழுந்திருக்கிறோம். பிறவி எடுத்து கஷ்டப்பட்டுக்கிறோம். அப்போ இந்த வலுவை ஏத்துறதுக்கு குருநாதர் வந்து வாக்குகள் செப்பி அந்த துன்பத்திலிருந்து வெளியில கொண்டு வந்து இதுக்கு மேல நம்ம ஆன்மாவுக்கு பவரை கொடுத்து திருப்பி இறைவன்ட்ட அனுப்புகிறதுக்கு வழிவகை செய்ய இறங்கி வந்திருக்காங்க. 


குருநாதர் :- நிச்சயம் அப்பொழுது போகன் சொன்னானே, "புண்ணியம் ஏதடா, பாவங்கள் ஏதடா" என்று. 


அடியவர்  :- (ஆச்சரியத்துடன் )  அப்பா, 


அடியவர்  :-  இதுல என்ன தெரிஞ்சுக்கணும்னா, இன்னும் எங்க இருக்கு? புண்ணியம், பாவம், பாவம் இல்ல. அப்ப உங்களுக்கு என்ன பண்ணனும்? வலு இல்ல, வலுவில்லை. கீழ வந்து விழுந்துட்டோம், கீழ விழுந்துட்டோம். திருப்பி வலு ஏத்தி மேல போகணும். இதுல பாவம் எங்க இருக்கு? புண்ணியம் எங்க இருக்கு? புண்ணியம் பண்ணா மேல போகணும். 


குருநாதர் :- இங்கு பின் உயர்ந்தவன் என்ன? தாழ்ந்தவன் என்ன? பின் பணக்காரன் என்ன? ஏழை என்ன? 


சுவடி ஓதும் மைந்தன்  :- இதுல பாகுபாடு என்ன? 


அடியவர்  :-  (பாகுபாடு ஒன்னும் கிடையாது, ஒன்னுமே  கிடையாது. ஒரு இடத்துல, ஒரு சக்தியான இடத்துல, போய் விழுந்து விட்டால் , அவன் பணக்காரன். ஒரு தாழ்ந்து வேற எங்கனா போய் விழுந்து விட்டால் , அந்த சாம்பல் ஏழை, இன்னொரு இடத்தில் விழுந்தால் விலங்கு , இன்னொரு இடத்தில் மாற்றுத்திறனாளி)


சுவடி ஓதும் மைந்தன்  :- அது விழுகக்கூடிய …


அடியவர்  :-  அந்த ஒளி விழுகக்கூடிய இடம் இருக்கு பாருங்க, அந்த இடத்தை பொறுத்து தான் அந்த ஆன்மாவுடைய அந்த தன்மை வந்து மாறுது. 


சுவடி ஓதும் மைந்தன்  :- ம்…


குருநாதர் :- இதனால் பின் நிச்சயம் தன்னில் கூட அவை எங்கேயோ பிரிந்து காணப்படுகின்றது. இதனால் உயர்ந்தவர்கள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட, இறை ஆசிகள் பெறச் செய்து, மீண்டும் அவர்கள் எல்லாம் அழைத்து உயர் பெறச் செய்கின்றோம். 


அடியவர்  :-  அப்பா…..


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( நெருப்பிழம்பிலிருந்து பிரிந்து எங்கோ தள்ளப்பட்டிருக்கும் ஆன்மாக்களை, உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் கண்டறிந்து, அவர்களுக்கு இறை ஆசியைப் பெற்றுத் தருகிறார்கள். அதன் மூலம் அந்த ஆன்மாக்களை மீண்டும் தங்களோடு அழைத்துச் சென்று உயர்ந்த நிலையை அடையச் செய்கிறார்கள்.)


குருநாதர் :- அப்படி இருக்க, மனிதனால் என்ன செய்ய முடியும்? 


அடியவர்  :-  செய்யறதுக்கு ஒன்னுமே கிடையாது. 


சுவடி ஓதும் மைந்தன்  :- அப்படி இருக்க, மனிதனால் ஒன்னும் செய்ய முடியாது. வலுவிழந்தவன்.


=================================

# இறைவனே  பூமிக்கு இறங்கி, மோட்சம் பெற வைக்க , அனைவரையும் ஒன்றாக சேர்க்க இறைவனே பாடு படுகின்றார்

=================================


குருநாதர் :- இதனால்தான் மனிதனே எதை என்று அறிய, நிச்சயம் இந்த இறைவனே பாவம் தான் மனிதன் என்றெல்லாம் பூமிக்கு இறங்கி, நிச்சயம் சில மனிதர்களிலும் ஏதாவது நிச்சயம் உயர்ந்த பின், அதாவது எதை என்று அறிய மனதை மாற்றி, நிச்சயம் அதாவது தாழ்ந்த பள்ளத்தில் இன்னும் விழுகின்றதே, அவையெல்லாம் ஒன்றாக சேர்க்க, நிச்சயம் இறைவன் பாடுபடுகின்றான். 


அடியவர்  :-    அப்பா, எல்லாம் வந்த வேலையை மறந்துட்டு இங்க எல்லாம் சிக்கிக்கிட்டோம் சேத்துல. சோ, அப்படின்றப்ப, இந்த சேத்துல இருந்து நம்மளை வெளியில ஏத்தி, மேல எடுத்துட்டு போகணும். அதுக்காக இறைவன் நேரா இறங்கி வந்து உதவி செய்றாங்க. 


======================================

# அத்துகள்  முக்கோணம் போல் பூமியில் விழும்

======================================


குருநாதர் :- அப்பா, முக்கோணம் போல், நிச்சயம் பின் அத்துகள்  பின் விழும். 


அடியவர்  :- (அப்பா, அத்துகள்  பூமியில் ஒரு முக்கோண வடிவில் (Triangle) பாய்கிறது. அந்த முக்கோணத்தின் வெவ்வேறு புள்ளிகளில் வந்து விழும் ஆன்மாக்கள் அல்லது மனிதர்கள், அவர்கள் விழும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு நிலைகளை அதாவது கோடீஸ்வரர்கள், அறிஞர்கள் அல்லது குறிப்பிட்ட வாழ்வியல் சூழல் கொண்டவர்கள் அடைகிறார்கள்.) 


====================================

# ஏன் மாற்றுத்திறனாளியாக மனிதர்கள் பிறக்கிறார்கள் ?

====================================


குருநாதர் :- அப்பா, மீண்டும் தாழ்மையான பின் இடங்களில் எல்லாம் விழுகின்ற பொழுது, அவர்கள் நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட, அவ்வளவு வேகத்தில் நிச்சயம் தன்னில் கூட பின் விழுகின்ற பொழுது, எதை என்று அறிய  சின்ன சின்ன பின், அதாவது இப்பொழுது சொல்கிறார்களே, மாற்றுத் திறனாளியாக, நிச்சயம் பின் அவ்  சாம்பல் ஆகிவிடுகின்றது. இதனுடைய பின் பாவக்கணக்கா, இது புண்ணியக்கணக்கா, நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அப்பா, புரிந்து கொள்ளுங்கள் சொல்வதை. 


====================================

உயர்ந்த இடத்திலிருந்து மிகவேகமாகப் பூமிக்கு வரும் ஆன்மாக்கள், சில சமயம் எதிர்பாராத சூழலில் தாழ்வான இடங்களில் வந்து விழுகின்றன. அவ்வாறு விழும் வேகத்தில், அந்த ஆன்மாவின் ஒரு பகுதி சிதைந்து அல்லது 'சாம்பலாகி', அவர்கள் மாற்றுத்திறனாளிகளாகப் பிறக்க நேரிடுகிறது. இது முன்வினைப் பயனா (பாவமா) அல்லது புண்ணியமா என்பதைத் தாண்டி, அந்த ஆன்மப் பயணத்தின் ஒரு அங்கமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

======================================



சுவடி ஓதும் மைந்தன்  :- (மாற்றுத் திறனாளிகளாக பிறப்பதற்கு பின்னால் உள்ள ஆன்மீகக் காரணத்தை குருநாதர் விளக்குகிறார். மேலிருந்து வரும் ஆன்மத் துகள்கள், பாதையில் தடுமாறி ஆற்றல் குறைந்த தாழ்வான இடங்களில் விழும்போது, அவற்றின் 'சக்தி' குறைகிறது. அந்தச் சக்தி இழப்பினால் தான் உடலில் குறைபாடுகள் அல்லது மாற்றுத்திறன் ஏற்படுகிறது.)


குருநாதர் :- இதற்கு மனிதன் சொல்லிக் கொண்டிருப்பான், பாவத்தாலே இப்படி பிறந்திருப்பான் என்று. அவையெல்லாம் ஏற்க முடியாது. அப்பா, எங்களால் 


அடியவர்  :- தவறு. 


சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப அது மாதிரி பிறக்கும் பொழுது,  இதெல்லாம் பாவ புண்ணியத்தினால கிடையாது.


======================================

# புவி தன்னில் பிறப்பவர்கள் எல்லாம் வலு இழந்தவர்கள் தான்.

======================================


குருநாதர் :- எதை என்று புரிய அப்பா, நிச்சயம் பூலோகத்தில் எதை என்று புரிய அதாவது புவி தன்னில், நிச்சயம் பின் பிறப்பவர்கள் எல்லாம் வலு இழந்தவர்கள் தான் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ஆமா, ஆமா. ஏன்னா அந்தந்த கிரகங்கள்ல போய் நிக்கணும். அவங்க எல்லாத்தையும் தாண்டி இங்க வந்து விழுகிறோம்னா, வலு இல்லாமல் தான் இங்க வந்து விழுகிறோம்னு சொல்லிட்டாங்க. திருப்பி வலு ஏத்தி திருப்பி போகணும்.


===============================

# ஏன் கிரகங்கள் வழி விட்டால் மட்டுமே இறைவனை பார்க்க முடியும்? 

===============================


குருநாதர் :- அப்பொழுது கிரகங்களில் சிக்கிக்கொண்டு, சிக்கிக்கொண்டு, கடைசியில் எதை என்று புரிய நீங்கள் புவி தன்னிக்கு வந்திருக்கின்றீர்கள். அப்பொழுது இறைவனை பார்க்க கிரகங்கள் வழி விட்டால் மட்டுமே பார்க்க முடியும். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  (ஒவ்வொரு கிரகத்தின் ஈர்ப்பிலும் சிக்கித் தடுமாறி ஆன்மாக்கள் பூமிக்கு வந்து சேர்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு கோளாகக் கடந்து வரும்போது, தனது சுய ஆற்றலை (வலுவை) இழந்து கொண்டே வருவதால், ஆன்மா தன் உயர்நிலையை விட்டு மெல்ல மெல்லக் கீழே இறங்கி இறுதியில் பூமியில் வந்து விழுகிறது. அந்தந்த கிரகங்களில் நிலைபெற்று மீண்டும் மேல்நோக்கிச் செல்ல முடியாமல் போனதால், ஆற்றல் இழந்த நிலையில் நாம் பூமியில் சிக்கிக் கொள்கிறோம்.)


அடியவர்  3 :-  என்ன பண்ணனும்னா கிரகங்களோட நீங்க சரியா ஒத்துப்போனாதான் இறைவனை பார்க்க முடியும். 


சுவடி ஓதும் மைந்தன்  :- அப்ப இறைவனை பார்க்க கிரகங்கள் எல்லாம் வழிவிடனும்.


அடியவர்  :-  திருப்பி இது மேல கிரகங்கள்  தாண்டி போகணும்ல. அங்க விழுந்து, விழுந்து தான் இங்க வந்திருக்கிறோம். திருப்பி இவங்களை புடிச்சு, புடிச்சு தான் மேல போகணும். அதுதான் சொல்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அப்ப இந்த கிரகங்கள் எல்லாம் மட்டும்தான் திருப்பி என்ன பார்க்க முடியும்? 


அடியவர்  :- இறைவனை பார்க்க முடியும். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  இறைவனை பார்க்க முடியும். 


==========================================

# இறைவன் என்ற நெருப்பிழம்புக்கு அருகில் இருக்கும் கிரகங்கள் - ராகு, கேது, சனி 

==========================================


குருநாதர் :- எதை என்று புரிய? ஆனாலும் இவைதான் நிச்சயம் தன்னில் கூட பின்பு, பின் கடைசியில், பின் இன்னும், பின் கடந்து செல்வது. ராகு, கேது அனைத்தும் கடந்தாலும், ராகு, கேது, சனி நிச்சயம் பின், அதாவது பின் நெருப்பு பிழம்புக்கு அருகிலேயே இருப்பார்கள், நிச்சயம் இதனால்தான். 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அப்ப எல்லா கிரகத்தையும் கடந்துரலாம். ஆனால் 


அடியவர்  :-  அவங்க மூணு பேரை தாண்டி போக முடியாது. 



சுவடி ஓதும் மைந்தன்  :- இந்த மூணு பேர் தாண்டியே போக முடியாது. இதை போயிட்டு மட்டும் அடுத்து என்ன இருக்கும்? இறைவன், இறைவன் இருப்பார். பார்த்துடலாம். 


=================================================

# உண்மையை அறியாமல் , கடைசியில் பார்த்தால், இறைவன் இல்லை, இறைவன் இல்லை, இறைவன் இல்லை என்றுதான் சொல்ல போகின்றான் மனிதன் கலியுகத்தில். 

=================================================


குருநாதர் :- அப்பப்பா, இந்த உண்மையை எவரும் அறியவில்லை என்பேன் அப்பனே. இவ்வாறு பின் அறியவில்லை என்றால், அப்பனே, என்ன சொல்லியும் நிச்சயம் தன்னில் கூட கடைசியில் பார்த்தால், இறைவன் இல்லை, இறைவன் இல்லை, இறைவன் இல்லை என்றுதான் சொல்லப் போகின்றான் மனிதன் கலியுகத்தில். 


குருநாதர் :- இப்படித்தான் சொல்வான். ஏனென்றால் கலியுகத்தில் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு கஷ்டங்களை பட்டு பட்டு அவனால் தீர்க்க முடியாது. கடைசியில் பின் அங்கும் இங்கும் அலைவான். முடியாது ஒன்றும். அதனால் கடைசியில் இறைவனை இல்லை என்றுதான் சொல்லப் போகின்றான். 



அடியவர் :-  உண்மை நிலை தெரியல. அந்த உண்மை நிலையை சொல்றாங்க. ஏன் இங்க வந்து விழுந்திருக்கிறோம்? சக்தி இல்லாம வந்து விழுந்திருக்கிறோம். சக்தியை கூட்டுனாதான் இறைவனை பார்க்க முடியும். அதை விட்டுட்டு இறைவன் இல்லை. என்று  பேசிட்டு இருக்கிறோம். எதுக்காக வந்தோமோ, அதை விட்டுட்டு என்னென்னமோ பேசிட்டு இருக்கிறோம். இறைவன் இல்லைன்னு சொல்லிட்டு இருக்கிறோம். சக்தியை கூட்டணும். 


===============================================

#  ஏன் முன்னோர்கள் வழிபாடு மிக மிக அவசியம் ? 

===============================================

# அவ் நெருப்புப் பிழம்பு உமிழுகின்ற பொழுது , ஒரு கோடிக்கணக்கில் ஒரே முறையாக சாம்பலாக வரும். அவர்கள் எல்லாம் உங்கள் சொந்தக்காரர்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அவர்கள் எல்லாம் மோட்ச கதி  அடைய வைக்க வேண்டும் என்றால், அவ்வளவு சுலபமா? முன்னோர்கள் வழிபாடு அதையே நிச்சயம் செய்து செய்து, ஆன்மாக்கள் அதை வலு பெற வைத்து அனுப்புவதற்குள் உன் பாடு இங்கு நாய் பாடு அப்பா. 

===============================================



குருநாதர் :- இதனால் நிச்சயம் ஒரு தடவை பின் அது உமிழுகின்ற பொழுது ஒரு கோடிக்கணக்கில் ஒரே முறையாக சாம்பலாக வரும். நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் பின் எதை என்று அறிய. பின் அவர்கள் எல்லாம் உங்கள் சொந்தக்காரர்கள் என்று எண்ணிக்கொள்ளுங்கள். நிச்சயம் பின் அவர்கள் எல்லாம் மோட்சக்கதி  அடைய வைக்க வேண்டும் என்றால், அவ்வளவு சுலபமா? அதனால்தான் முன்னோர்கள் வழிபாடு என்று பின் அதையே நிச்சயம் பின் செய்து செய்து செப்பி செப்பி அதை பின் வலுபெற்று அங்கே அனுப்புவதற்குள் உன் பாடு இங்கு நாய் பாடு அப்பா. 



அடியவர் :-  ஆமா, ஆமா, இங்க ஒரு வழிபாடே செய்ய முடியல. நீங்க வேற… இதுல முன்னோர்கள் ஏதோ மொத்தமா வந்து விழுந்திருக்கிறீங்க. எல்லாரையும் கரை ஏத்தணும்னா எப்படிங்கயா? எப்படி ஏத்துறது ஐயா? ஐயா, முடியாத காரியம். பாவிங்கயா மனுஷன் எல்லாரும். 


குருநாதர் :- அப்பனே, பள்ளத்தில் இருப்பவனை நிச்சயம் மேடையேற்றுவது இறைவனால் மட்டுமே முடியும். இதுவே சாத்தியம். அப்பனே, இதனால் அப்பனே பொய்கள் பல உண்டு. ஆனாலும் அப்பொய்களை வைத்துக்கொண்டு என்னதான் செய்ய முடியும் அப்பா மனிதனை?. 


அடியவர் :-  ஒன்னும் பண்ண முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  அப்ப பல பொய்தான் என்னென்னமோ. 


குருநாதர் :- இதனால் பல மந்திரங்களும் கூட, தந்திரங்களும் கூட. ஏன்? எதற்கு என்றால், நிச்சயம் உன் நிலைமையை நீ அறிந்து கொள்ளத்தான் மட்டுமே தவிர, பின் நிச்சயம் பின் சாவை வெல்ல முடியாது. 


அடியவர் :-  உண்மை நிலை நமக்கு புரியனும். அதுக்கு தான் இந்த மந்திரங்கள் எல்லாம் வலு ஏத்தணும். உண்மை நிலை புரிஞ்சுக்கணும் என்பதற்கு தான் இவ்வளவு மந்திரங்கள், பாடல்கள். 


===================================================

# திருவாசகம் ஏன் மிக மிக அவசியம் - முக்தி அடைய ?

===================================================



குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் எது என்று புரிய, பின் மாணிக்கவாசகப் பெருமானும் இன்னும் கூட, இன்னும் ஏனைய பின் ஞானிகளும் கூட, பின் இப்படி எல்லாம் இருக்கின்றதடா, நிச்சயம் இவ்வாறெல்லாம் பின் நடந்து கொண்டால்தான் முக்தியும், மோட்சமும் கிடைக்கும் என்றெல்லாம். ஆனாலும் அவையும் கூட சரியாக ஓதுவதே இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  மாணிக்கவாசகப் பெருமானும், அவங்க எல்லாம் சொல்லிட்டு போயிருக்காங்க. இதையும், அதையும் சரியா செய்யறது இல்ல. 



=============================================

# யாராவது இழுத்தால் தான் பம்பரம்  சுழலும். 

# ஆனால் கிரகங்களை சுற்றுவது யார் ?

=============================================


குருநாதர் :- எது என்று அறிய அறிய. அதனால் ஒரு இழு இருந்தால் மட்டும், ஒரு இழு பின் இருந்தால் மட்டுமே, பின் அனைத்தும் சுழலும் அல்லவா? பின் இதை கூட யோசிக்கத் தெரியவில்லை. ஏன் கிரகங்கள் சுழற்சி, சுழற்சி, அதாவது சுழல் கொண்டே இருக்கின்றது என்று 


சுவடி ஓதும் மைந்தன்  :-  யாராவது யோசிச்சாங்களா? 


அடியவர் :- ம் 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (இவ்வுலகின் இயக்கம் மற்றும் சுழற்சிக்குக் காரணமான மூலவிசையை பற்றி சொல்ராங்க. பேரண்டத்தின் உச்சியில் உள்ள ஒரு மகா பெருநெருப்புப் பிழம்பே (இறைவன்) அனைத்து கோள்களையும் பொருட்களையும் இயக்கும் ஆற்றல் மையமாகத் திகழ்கிறது. அந்த நெருப்பின் அதிர்வு 'உடுக்கை ஓசை' போன்ற ஒரு தொடர் சத்தத்தை எழுப்புகிறது. ஓர் இயந்திரத்தில் எரியும் நிலக்கரி எவ்வாறு வண்டியை நகர்த்துகிறதோ, அதுபோல இந்த நெருப்பின் வெப்பமும் அதிர்வும் இவ்வுலகை இயங்க வைக்கின்றன. காற்றில்லா வெட்டவெளியில் ஒளியானது ஒலியாக மாறி, எதிரொலிக்கும்போது ஏற்படும் அதிர்வலைகள் (Vibrations), ஒரு ஸ்பீக்கரின் அதிரும் தன்மையைப் போல அனைத்துப் பொருட்களையும் தொடர்ச்சியாகச் சுழலச் செய்கின்றன.)


குருநாதர் :- அப்பனே, இதைத்தான் எவரும் கண்டுபிடிக்கவில்லை அப்பா. இந்நாள் வரை. 


அடியவர் :-  யாருக்கு ஏன் தெரியும்? இது யாருக்குமே என்னய்யா? இங்க சோத்துக்கே மனுஷன் போராடிட்டு இருக்கிறான். இதெல்லாம் எங்க யோசிக்கிறது? ஒருத்தனும் முடியாது. 


குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட பலமாக எதை செப்பித்தாலும் பலமாக உச்சரியுங்கள். உச்சரியுங்கள் என்றெல்லாம் 


அடியவர் :-  பலமா உச்சரிக்கனும். இப்ப பாட்டு படிக்கிறது எல்லாம் பலமா உச்சரிக்கணும். சப்தம், அதான் இந்த ஒலிதான் பிரபஞ்சத்தை இயக்குதுன்னு சொல்லிட்டாங்க. அப்போ இந்த சப்தம், அதுதான் நம்ம ஆன்மாவை வலுப்பேற்றும். 


===================================================

# திருவாசகம் முதலில் வைத்ததற்கு காரணம்.

=================================================== 

# திருவாசகம் பாடினால் மட்டுமே தான் ராகுவும் கேதுவும் சனியும் எளிதாக அடைய முடியும். 

===================================================

# திருவாசகம் பாடினால் மட்டுமே தான் மற்ற கிரகங்களும் சென்று அதை பின் தாக்கும். 

===================================================


குருநாதர் :- நிச்சயம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக, நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட, அதாவது ஏன் திருவாசகத்தை முதலில் வைத்தான் என்றால், நிச்சயம் தன்னில் கூட, தன்னில் கூட ராகுவும் கேதுவும் சனியும் எளிதாக அடைய முடியும். இதை பாடினால் மட்டுமே தான் மற்ற கிரகங்களும் சென்று அதை பின் தாக்கும். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-   (ராகு, கேது மற்றும் சனி ஆகிய கிரகங்களின் தாக்கத்தைக் கடந்து இறைவனை அடைவதற்கு எட்டாம் திருமுறையான திருவாசகம் ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களின் பிடியிலிருந்தும் விடுபட்டு ஆன்மீகத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல விரும்புபவர்கள், தேரையர் மற்றும் குருநாதர் வாக்குப்படி எட்டாம் திருமுறையைத் துணைக்கொள்ள வேண்டும். ராகு, கேது மற்றும் சனியின் தடைகளை வெல்லும் ஆற்றல் இதற்கு உண்டு என்பதால், இதை முறையாகப் பயில்வதன் மூலம் நேரடியாக இறைவனைத் தரிசிக்கும் நிலையை எய்த முடியும்.)


==============================================

# ஏன் அனைவரும் ஈசனையே புகழ்கின்றார்கள்?

==============================================


குருநாதர் :- இதனால்தான் அனைத்தும் எதை என்று அறிய, அனைத்தும் எவை என்று புரிய, ஈசனையே புகழ்கின்றார்கள். ஞானிகள் அனைவருமே, சித்தர்கள் அனைவருமே. 


அடியவர் :-  ஆமா, (இறைவன்) எவ்வளவு பெரிய விஞ்ஞானி! எவ்வளவு பெரிய உண்மை! எவ்வளவு பெரிய விஞ்ஞானி! அவர் 


குருநாதர் :- நிச்சயம் எவை என்று புரிய. இதனால் பின் ஒவ்வொரு உயிரும் நிச்சயம் தன்னில் கூட அங்கிருந்தே நிச்சயம் எதை என்று புரிய. இதனால் இவையெல்லாம் யாருக்கு சொந்தம்? 


அடியவர் :-   எல்லா உயிரும் எங்கிருந்து ஓடுது? எல்லாம் அங்கிருந்து நெருப்பு பிழம்பு வருது. சுத்தி எல்லாம் வருது. 


சுவடி ஓதும் மைந்தன்  :-  ( அனைவருக்கும்  இறைவன் அவர்தான் சொந்தம்.)


======================================

# மனிதனின் வாழ்க்கை ஒரு நிமிடமே 

======================================


குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எதை என்று இதிலிருந்து தான் நிச்சயம் தன்னில் கூட, அதாவது நெருப்பு பின், அதாவது பிழம்பிலிருந்து தான் அனைத்தும் விழுகின்றது. நிச்சயம் தன்னில் கூட பின் மீண்டும், பின் சில, அதாவது நிச்சயம் தன்னில் கூட பின் அவ்வாறு பூமி பின், அதாவது விழுந்து மீண்டும், பின் அதாவது அதனைப் பின் அடைவதற்கு நிச்சயம் தன்னில் கூட. அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட ஒரு நிமிடமே, ஒரு நிமிடமே மனிதன் வாழ்கின்றான். நிச்சயம்! 



சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம் :-    (காலத்தின் நுட்பமான கணக்கீட்டைப் பற்றி சொல்கின்றார்கள். பிரபஞ்சத்தின் உயர் தளத்திலிருந்து ஒரு துகள் பூமிக்கு வந்து மீண்டும் திரும்புவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் அதன் கணக்கீட்டில் ஒரு நிமிடம் மட்டுமே. ஆனால், அந்த ஒரு நிமிடம் என்பது மனிதர்களாகிய நமக்கு அறுபது முதல் எண்பது ஆண்டு கால வாழ்நாள் அல்லது பல கோடி ஆண்டுகளின் தொகுப்பாகத் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு பிறவி என்பது பிரபஞ்ச கால அளவில் ஒரு நிமிடம் போன்ற மிகச்சிறிய நிகழ்வே. ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மா இப்புவிக்கு வந்து தனது கால அளவை நிறைவு செய்தவுடன், உடனடியாகத் தனது மூல இடத்திற்கே திரும்பச் செல்கிறது.)



======================================================

# ஏன் சித்தர்கள் உடம்பை பதப்படுத்தி ஜீவ சமாதி அடைந்தனர் ? 

======================================================

# உலகம் அறியாத சித்தர்களின் ஜீவ சமாதி ரகசியங்கள் 

======================================================


குருநாதர் :- இதைத்தான் பூலோகத்திலே, பல பல சித்தர்கள் நிச்சயம் தன்னில் கூட எதை எதையோ செப்பி, நிச்சயம் அதை இங்கே தக்க வைத்து, நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது ஒரு ஒளிகள் பின், அதாவது உடம்பை பின் பக்குவப்படுத்தி நன்மை செய்யத் தொடங்கினார்கள். இதுதான். 



சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-   (மனிதனின் சராசரி வாழ்நாளான அறுபது அல்லது எழுபது ஆண்டுகள் என்பது, பிரபஞ்ச கால அளவில் ஒரு நிமிடத்திற்குச் சமமான மிகக் குறுகிய காலமாகும். சாமான்யர்கள் இந்தச் சுழற்சியில் சிக்கி விரைந்து மறைய, சித்தர்கள் மட்டும் இந்த கால தத்துவத்தின் நுட்பத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டனர். மானுடத்திற்கு உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும் என்ற நோக்கில், அவர்கள் தங்கள் மனோபலத்தால் உடலைப் பேணிப் பாதுகாத்து, காலத்தைக் கடந்து நின்றனர். இதன் விளைவாகவே, அவர்கள் 1000 முதல் 4000 ஆண்டுகள் வரை நீண்ட காலம் இவ்வுலகில் வாழ்ந்து ஆன்மீகத் தொண்டாற்ற முடிந்தது.)



======================================

# சித்தர்கள் - பல அரசர்களை ஜீவசமாதி ஆக்கி , வாழவைத்து , பலருக்கும் கற்றுக்கொடுத்தார்கள். அனைவருக்கும் கற்றுக் கொடுக்க சொன்னார்கள், இவ் உயர் புண்ணிய சேவைகளுக்காக - அதாவது ஆன்மாவை மீண்டும் அவ் நெருப்பிழம்பிடம் செல்ல வைப்பதற்க்காக.

======================================


குருநாதர் :- இதைத்தான் பல சித்தர்களும் எதை என்று புரிய, இதைத்தான் பல மன்னர்களுக்கு பின் தெரிவித்து, நீங்கள் வாழுங்கள். மனிதர்கள் எவை என்று அறிய, பின் அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  ( சித்தர்கள் தாங்கள் கண்டறிந்த வாழ்வியல் உண்மைகளையும் நீண்ட ஆயுளுக்கான நுட்பங்களையும் அக்கால மன்னர்களுக்குப் பயிற்றுவித்தனர். மனித வாழ்க்கை என்பது 60 அல்லது 70 ஆண்டுகளில் மிக விரைவாக முடிந்து விடக்கூடியது. ஆனால் முறையான பக்குவத்தையும் பயிற்சிகளையும் மேற்கொண்டால், ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகள் வரை உடலைத் தக்கவைத்து வாழ முடியும் என்பதை சித்தர்கள் , மன்னர்களுக்கு விளக்கினர். இவ்வாறு நீண்ட காலம் வாழ்வதன் மூலம், பிரபஞ்சத்தின் உண்மை நிலையைத் தாமும் உணர்ந்து, மக்களுக்கு அறநெறி சார்ந்த சேவைகளைத் தொடர்ந்து வழங்க முடியும் என்பதே சித்தர்கள்,  அரசர்களுக்கு விடுத்த வழிகாட்டுதலாகும்.)


அடியவர் :-  எவ்வளவு பெரிய விஞ்ஞானம்! எவ்வளவு பெரிய விஞ்ஞானம்! 



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் ........................................)


===========================================================

===========================================================

===========================================================




பிரபஞ்ச நெருப்பும் உடுக்கை ஒலியும்: அகத்திய மாமுனிவர் வெளிப்படுத்தும் மனித ஆன்மாவின் ரகசியங்கள்!

"நாம் ஏன் பிறந்தோம்?", "இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது?", "பூமி ஏன் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கிறது?" - இத்தகைய அடிப்படைத் தேடல்கள் ஒவ்வொரு மனித மனதிலும் எப்போதாவது ஒருமுறை தோன்றுவதுண்டு. இந்த மர்மங்களுக்கான விடைகளைத் தேடி நவீன அறிவியல் ஒருபுறமும், ஆன்மீகம் மறுபுறமும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கடந்த 2026-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற 'சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை' நிகழ்வில், அகத்திய மாமுனிவர் வழங்கிய 'விஞ்ஞான வாக்கு' (Scientific Revelation), இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் பின்னால் உள்ள நுட்பமான விசை மற்றும் மனித ஆன்மாவின் பயணம் குறித்த அதிரடியான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

--------------------------------------------------------------------------------

1. பிரபஞ்சத்தின் மையம்: ஒரு மாபெரும் இயந்திர விசை

இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஆதாரமாக ஒரு மகா ஆற்றல் மையம் உள்ளது. அகத்திய மாமுனிவர் இறைவனை ஒரு 'நெருப்புப் பிழம்பாக' (Neruppu Pizhambu) அடையாளப்படுத்துகிறார். ஒரு இயந்திரத்தின் இயக்கத்திற்கு எப்படி நிலக்கரியும் வெப்பமும் தேவையோ, அதுபோல இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் 'இயந்திர விசை' (Mechanical Force) இந்த மகா நெருப்பிலிருந்துதான் பிறக்கிறது.

இந்த நெருப்பினுள் ஆதி ஈசன் எப்போதும் நடனமாடிக் கொண்டே இருக்கிறான். அந்தத் தெய்வீக நடனத்தின் போது எழும் உடுக்கை ஒலி, வெறும் சத்தம் மட்டுமல்ல; அது ஒரு 'ஸ்பீக்கரின் அதிரும் தன்மையை' (Vibration of a Speaker) போன்றது. காற்றில்லா வெட்டவெளியில் இந்த ஒளியானது அதிர்வலைகளாக (Vibrations) மாறிப் பிரபஞ்சம் முழுவதும் பரவுகிறது.

"நிச்சயம் பின் நெருப்பு பிழம்பு எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். இதைத்தன் இறைவன் என்று எண்ணிக்கொள்ளுங்கள். அவ் நெருப்பினில் நிச்சயம் ஈசன் பின் எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். நிச்சயம் அங்கிருந்து ஒளியானது, நிச்சயம் உடுக்கை ஒலி."

--------------------------------------------------------------------------------

2. பூமி ஏன் சுழல்கிறது? - ஒலியியல் ரீதியான ஓர் உண்மை

பூமி மற்றும் பிற கிரகங்கள் ஏன் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு அகத்தியரின் விஞ்ஞான வாக்கு ஒரு நுட்பமான காரணத்தைக் கூறுகிறது. ஈசனின் உடுக்கையிலிருந்து எழும் அந்த அதிர்வலைகள் மற்ற கிரகங்களுக்குச் செல்லும்போது ஒரு உந்துசக்தியை (Force) உருவாக்குகின்றன.

அந்த உடுக்கை ஒலியின் ஆற்றல் பூமியின் மீது படும்போது, அது ஒரு சுழற்சியை (Rotation) ஏற்படுத்துகிறது. அந்தச் சக்தியினால் தான் பூமி அதிவேகமாகச் சுழல்கிறது. அந்த நெருப்புப் பிழம்பும் உடுக்கை ஒலியும் இல்லையென்றால், பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த இயக்கமும் அப்படியே நின்றுவிடும்.

மேலும், நாம் நினைப்பது போல பூமியில் மட்டும் உயிர்கள் இல்லை. பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த உயிரினங்களில் பூமி என்பது வெறும் 10% மட்டுமே. மற்ற அனைத்து கிரகங்களிலும் ஏதோ ஒரு வகையில் உயிரினங்களும் மனிதர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற வியக்கத்தக்க உண்மையை மாமுனிவர் முன்வைக்கிறார்.

--------------------------------------------------------------------------------

3. மனிதப் பிறப்பு: ஈசன் ஆடும்போது சிதறும் சாம்பல் துகள்கள்

மனித ஆன்மாக்கள் எப்படி உருவாகின்றன என்பதற்கு ஒரு விஞ்ஞான உருவகத்தை மாமுனிவர் வழங்குகிறார். ஈசன் நெருப்புப் பிழம்பிற்குள் 'நடராஜராக' அதிவேகமாக ஆடும்போது, அந்த நெருப்பிலிருந்து சிறிய துகள்கள் சிதறி விழுகின்றன. அந்தத் துகள்களே 'சாம்பல்' (Saambal). இந்தச் சாம்பல் துகள்களே மனித ஆன்மாக்கள்.

இந்த நெருப்புப் பிழம்பு ஒருமுறை உமிழும்போது கோடிக்கணக்கான துகள்கள் சாம்பலாக வெளியேறும். இவ்வாறு ஒன்றாகச் சிதறி வரும் துகள்களே உங்கள் முன்னோர்களும் (Ancestors) சொந்தக்காரர்களும் ஆவர். இந்தத் துகள்கள் பலவீனமாக இருப்பதால், அவற்றை மீண்டும் வலுவாக்கி இறைவனிடம் அனுப்பவே 'முன்னோர்கள் வழிபாடு' அவசியமாகிறது. இது வெறும் சடங்கு அல்ல, ஆன்மாவைச் சக்தியேற்றும் ஒரு அறிவியல் முறை.

"நெருப்பு எரிந்து கொண்டே இருக்கின்றது... அதில் இருந்து சாம்பல் விழுந்து கொண்டே இருக்கும். அது தான் நிச்சயம் மனிதனுடைய பிறப்பு."

--------------------------------------------------------------------------------

4. விதியை எழுதும் பிரபஞ்ச அலுவலகம்: கிரகங்களின் பயணம்

நெருப்புப் பிழம்பிலிருந்து சிதறும் ஆன்மாக்கள் பூமிக்கு வரும் வழியில் ராகு, கேது மற்றும் சனி ஆகிய கிரகங்களைக் கடந்து வர வேண்டும். இந்த ஆன்மாக்கள் ராகு மற்றும் கேது கிரகங்களில் 'பல பல கோடிக்கணக்கான ஆண்டுகள்' (Many crores of years) தங்கிப் பயணிக்கின்றன.

இதன் பிறகு சனி கிரகத்தை அடையும் ஆன்மாக்கள், அங்கு 'ஓராண்டு அல்லது ஈராண்டு' தங்குகின்றன. இந்தச் சமயத்தில்தான் ஒரு மனிதனின் 'விதி' (Destiny) எழுதப்படுகிறது. விதி நன்றாக இருந்தால், அந்த ஆன்மா மற்ற கிரகங்களின் நற்பண்புகளையும் உள்வாங்கிக் கொண்டு, அனைத்து கிரகங்களின் ஆசியுடன் பூமியில் பிறக்கும்.

--------------------------------------------------------------------------------

5. ஏன் இந்த ஏற்றத்தாழ்வுகள்? - முக்கோண விழுதல் கோட்பாடு

உலகில் ஏன் ஒருவன் கோடீஸ்வரனாகவும், மற்றொருவன் மாற்றுத்திறனாளியாகவும் பிறக்கிறான்? இதற்கு 'முக்கோண விழுதல்' என்ற தத்துவத்தை மாமுனிவர் விளக்குகிறார். நெருப்புப் பிழம்பிலிருந்து சிதறும் ஆன்மத் துகள்கள் பூமியில் விழும்போது ஒரு முக்கோண வடிவில் பாய்கின்றன.

ஆன்மா விழும் இடம் அதிக சக்தி கொண்டதாக இருந்தால் அவன் செல்வந்தனாகிறான். ஆனால், அதிவேகமாக மேலிருந்து வரும் ஆன்மா, ஆற்றல் குறைந்த பள்ளமான இடங்களில் விழும்போது அதன் ஒரு பகுதி சிதைந்து 'சாம்பலாகி' விடுகிறது.

இந்தச் சக்தி இழப்பினால் தான் (Energy loss due to impact velocity) ஒருவன் மாற்றுத்திறனாளியாகப் பிறக்கிறான். இது வெறும் 'பாவ-புண்ணிய' கணக்கு மட்டுமல்ல, ஆன்மப் பயணத்தின் வேகத்தில் ஏற்படும் ஒரு பௌதிக மாற்றம் (Physical change) ஆகும். உண்மையில், பூமியில் வந்து பிறக்கும் அனைத்து ஆன்மாக்களுமே மற்ற கிரகங்களில் நிற்க முடியாமல் கீழே விழுந்த 'வலுவிழந்த' ஆன்மாக்கள் தான்.

--------------------------------------------------------------------------------

6. காலத்தின் விசித்திரம்: மனித வாழ்வு வெறும் 'ஒரு நிமிடம்'

பிரபஞ்சக் கணக்கின்படி, ஒரு மனிதனின் 60 முதல் 80 ஆண்டுகால வாழ்க்கை என்பது இறைவனின் கடிகாரத்தில் வெறும் 'ஒரு நிமிடம்' (One Minute) மட்டுமே. அந்த மகா நெருப்பிலிருந்து ஒரு துகள் சிதறி பூமிக்கு வந்து மீண்டும் அங்கே செல்வதற்கு எடுக்கும் காலம் இவ்வளவுதான்.

சித்தர்கள் இந்த ரகசியத்தை அறிந்திருந்தார்கள். அதனால்தான் அவர்கள் இந்த 'ஒரு நிமிட' வாழ்க்கையை நீட்டிக்கத் திட்டமிட்டார்கள். அவர்கள் தங்கள் உடலைப் பதப்படுத்தி (Biochemical preservation), 1000 முதல் 4000 ஆண்டுகள் வரை நீண்ட காலம் வாழ்ந்தார்கள். இதன் மூலம் ஆன்மாவை வலிமைப்படுத்தி, மீண்டும் மூலத்தோடு இணைக்கும் காலத்தை அவர்கள் உருவாக்கிக் கொண்டார்கள்.

--------------------------------------------------------------------------------

7. மீண்டும் மூலத்திற்குத் திரும்பும் வழி: முக்தி எனும் அதிர்வு

பூமியில் பிறந்துவிட்ட ஆன்மா மீண்டும் அந்த மகா நெருப்புப் பிழம்பில் சென்று ஒட்டிக்கொள்வதே 'முக்தி'. அதற்குச் சில வழிகளைச் சித்தர்கள் பரிந்துரைக்கிறார்கள்:

  • இயற்கை உணவு மற்றும் ரணகளம்: முறையான இயற்கை உணவுகளை உண்டு உடலைப் பக்குவப்படுத்துவது அவசியம். இது ஆன்மா மீண்டும் பூமிக்குத் திரும்புவதைத் தடுத்து, மேல் உலகிலேயே தங்கும் நிலையை அளிக்கும்.
  • திருவாசகம் எனும் அதிர்வுச் சாவி: ராகு, கேது, சனி ஆகிய கிரகங்களின் ஈர்ப்பு விசை அல்லது தடையைத் தாண்டிச் செல்வது மிகக் கடினம். அந்தப் பிடியை உடைத்து கிரகங்களை 'தாக்கும்' (Attack) வல்லமை திருவாசகத்திற்கு உண்டு. திருவாசகப் பாடல்களை 'பலமாக உச்சரிக்கும்போது' (Loud chanting) ஏற்படும் அதிர்வு, ஆன்மாவை வலிமைப்படுத்தி கிரகங்களைத் தாண்டி இறைவனிடம் கொண்டு சேர்க்கும்.
  • ஞானிகளின் பிறப்பு: சாதாரண ஆன்மாக்கள் கிரகங்களில் சிக்கி வரும். ஆனால், ஈசன் மிக வேகமாக ஆடும்போது சிதறும் துகள்கள் எதிலும் சிக்காமல் 'நேரடியாக' (Direct descent) பூமியில் விழும். அவர்களே ஞானிகள். அவர்கள் தங்கள் கடமையை முடித்துவிட்டு மீண்டும் கிரகங்களின் தடையில் சிக்காமல் நேராக இறைவனை அடைவார்கள்.

--------------------------------------------------------------------------------

முடிவுரை: ஒரு புதிய பார்வை

அகத்திய மாமுனிவர் வழங்கிய இந்த விஞ்ஞான வாக்கு, நம்மைப் பற்றிய ஒரு பிரம்மாண்டமான புரிதலைத் தருகிறது. நாம் அனைவரும் தனித்தனி நபர்கள் அல்ல, மாறாக அந்த மகா நெருப்பின் சிறு துகள்கள். நாம் அனைவரும் அந்தப் பெருநெருப்பின் ஒரு பகுதியே (Ancestral clusters).

சக்தி இழந்து பூமியில் விழுந்திருக்கும் நாம், திருவாசகம் போன்ற அதிர்வுச் சாவிகளைப் பயன்படுத்தியும், முன்னோர்கள் வழிபாட்டின் மூலமும் நம் ஆன்மாவை மீண்டும் பலப்படுத்த வேண்டும்.

சிந்தனைத் தூண்டல்: பிரபஞ்சத்தின் ஒரு நிமிடம் போன்ற இந்த வாழ்க்கையில், உங்கள் ஆன்மாவை மீண்டும் அந்தப் பெருநெருப்புடன் இணைக்க நீங்கள் தயாராகிவிட்டீர்களா?


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.