“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, February 14, 2026

சித்தர்கள் ஆட்சி - 560 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 1

 இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள்  - பகுதி 1


நாள் : 04/2/2026 (புதன்கிழமை ) 

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 

இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.




இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


சித்தர்கள் ஆட்சி - 560 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 1 https://siththarkalatchi.blogspot.com/2026/02/560.html சித்தர்கள் ஆட்சி - 561 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 2 https://siththarkalatchi.blogspot.com/2026/02/561.html சித்தர்கள் ஆட்சி - 562 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 3 https://siththarkalatchi.blogspot.com/2026/02/562.html சித்தர்கள் ஆட்சி - 563 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 4 https://siththarkalatchi.blogspot.com/2026/02/563.html சித்தர்கள் ஆட்சி - 564 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 5 https://siththarkalatchi.blogspot.com/2026/02/564.html சித்தர்கள் ஆட்சி - 565 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 6 https://siththarkalatchi.blogspot.com/2026/02/565.html சித்தர்கள் ஆட்சி - 566 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 7 https://siththarkalatchi.blogspot.com/2026/02/566.html சித்தர்கள் ஆட்சி - 567 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 8 https://siththarkalatchi.blogspot.com/2026/02/567.html சித்தர்கள் ஆட்சி - 568 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 9 https://siththarkalatchi.blogspot.com/2026/02/568.html


====================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

====================================



ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 


==============================

# இராவணேஸ்வரர் ரகசியங்கள்

==============================



இராவணனின் ரகசியங்கள் சொல்லப் போகின்றேன்.  ஏன், எதற்கு என்றெல்லாம். 


ஏன் இராவணனின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் நிச்சயம் தன்னில் கூட?. 


பல ஞானியர்களின் ரகசியத்தை தெரிந்து கொண்டால், அவ் ஆற்றல் நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு பிறந்து இன்னும் பல வழிகளில் கூட சாதிப்பான். 


அதனால்தான் மீண்டும் பல ஞானிகளின் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது எவ்வாறு வாழ்ந்தார்கள் என்றெல்லாம் நிச்சயம் தெரிந்து கொண்டால், அவருடைய சக்தியும் கூட மனிதனுக்கு நிச்சயம் தன்னில் கூட வரும். அவ்வாறு வருவதால், நிச்சயம் வாழ்க்கையில் பன்மடங்கு உயர்வுகள் பெறலாம். 


அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட ஏன், எதற்கு, நிச்சயம் தெரியாத பொருளை எல்லாம் அறிந்து எவை என்று புரிய என்ன செய்யப் போகின்றார்கள் என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட, தெரிந்து கொண்டே ஆகவேண்டும். 


================================

# நல் நினைவு போல,  நல் நிகழ்வுகள் வாழ்வில் நடக்கும். 

# ஞானியர்களை வாழ்க்கையை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள் 

================================


குருநாதர் :- நிச்சயம் எப்பொழுதும் ஒரு தீய செயலைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால், நிச்சயம் தன்னில் கூட தீயவைத்தான் நடக்கும். 


அதேபோலத்தான் நல்லதை நிச்சயம் தன்னில் கூட சொன்னால், பின் நல், பின் எதை என்று அறிய அறிய  பல ரகசியங்கள் சொன்னால், அவை பற்றியே சிந்தனைகள் வருகின்ற பொழுது, அவை தன்னின் ஆற்றல் மனிதனுக்கு கிடைத்து, நிச்சயம் வெற்றிகள். 


====================================

# இராவணேஸ்வரர் சம்மதத்துடனே,  இராவணேஸ்வரர்  ரகசியங்கள்.

====================================


குருநாதர் :- இதனால், நிச்சயம் தன்னில் கூட ஏன் இங்கு, எதற்காக, நிச்சயம் எவரும், எதை என்று பொறுத்தே , நிச்சயம் தன்னில் கூட ஏன், பின் அதாவது இராவணன் ரகசியத்தை நிச்சயம் தன்னில் கூட அவனுடைய பின் சம்மதத்துடனே சொன்னால்தான், நிச்சயம் தன்னில் கூட. 


அதனால்தான் நிச்சயம் இங்கு அறிந்தும், புரிந்தும், நிச்சயம் இராவணனின் யான் பல நிச்சயம் அதிசயங்களை சொல்லப் போகின்றேன். நல்விதமாக, அப்பனே, இதனால் சம்மதத்துடனே நல்விதமாக, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட குழந்தையை நினைத்து அழகாக ஒரு பாடலைப் பாடு. முதலில் அனைவரும் கேட்கட்டும், பின்பு உரைக்கின்றேன்.


பாடகர் :- ( பின் வரும் பாடலை பாடினார்கள் )

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? 

கொங்கு மணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை? 

தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை? 

தேவாதி தேவன் எல்லாம் தேடி வரும் மருதமலை. ஆஹா, மருதமலை, மருதமலை. முருகா, மருதமலை மாமணியே முருகையா, மருதமலை மாமணியே முருகையா.


====================================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு.

# இராவணேஸ்வரர்  ரகசியங்கள் குறித்த வாக்கு ஆரம்பம்.

====================================


குருநாதர் :-  அப்பனே, அறிந்தும் பல உண்மைகள் எதை என்று கூற. அப்பனே, இப்பொழுது எடுத்திருக்கப் போகின்றேன், அப்பனே. இன்னும், அப்பனே, உண்மைகள். அப்பனே, எதை என்று... அப்பனே, அதாவது, கல்லைப் பற்றி பேசினேன். 


அப்பனே. ஆனாலும் எதற்கு பயன்படுவது, எதற்காக என்றெல்லாம் அப்பனே சொல்லவில்லை. 


=====================================

# சுரா கல் பல இடங்களில் உள்ளது - மனிதர்களுக்கு தெரியாமல் ….

=====================================



குருநாதர் :-  ஆனாலும் அப்பனே, சொல்லும் காலம் அப்பனே, வந்தடைந்து கொண்டே, வந்தடைந்து கொண்டே. 


அப்பனே, இதன் மூலம் எதை என்று அறிய, அப்பனே, பல வழியில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அக்கல்லானது, அப்பனே, பல விதத்திலும் அப்பனே பின் நிச்சயம் தங்கி நிற்கின்றதப்பா. 


==========================================

# எங்கெல்லாம் உலகில் சுராக்கள் உள்ளதோ அங்கெல்லாம்  சென்று வணங்கினால் நிச்சயம் பலங்கள் ஏற்படுவது உறுதி. பக்திக்குள் நன்முறையாகவே பல வெற்றிகளை நிச்சயம் பெறலாம்.

==========================================



குருநாதர் :- அங்கெல்லாம் சென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பலங்கள் ஏற்படுவது உறுதியப்பா. இவ்வாறு பலங்கள் ஏற்பட்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் பக்திக்குள், அப்பனே, நிச்சயம், அப்பனே பின் எதை, எதை என்று புரிய, அப்பனே, பக்திக்குள் நன்முறையாகவே, அப்பனே, வந்து, அப்பனே, பல வெற்றிகளை, அப்பனே, நிச்சயம் பெறலாம் என்பதை எல்லாம் அப்பனே. 


========================================

# இராவணேஸ்வரரின் தொலைநோக்கு பார்வை 

========================================



குருநாதர் :- இதனால்தான், அப்பனே, நிச்சயம் அப்பனே, இவ்வதேசம், அப்பனே, நிச்சயம் வருங்காலத்தில், அதாவது, நிச்சயம் தன்னில் கூட பின் அழியும் என்பவை எல்லாம் அப்பனே பின் இராவணனுக்கு தெரிந்தது. 


இதனால், அப்பனே, நிச்சயம் அக்கல்லை எப்படியாவது நிச்சயம் தன்னில் கூட பின், அதாவது, இவ்வதேசத்தை பல வழியில் கூட, அப்பனே, காப்பாற்றினான் இராவணன். 


ஆனாலும், அப்பனே, இவை தன் ஒரு குறிப்பிட்ட கால அளவில் அழியும் என்பதையும் தெரியும். ஆனாலும் உண்மையான மனிதர்களுக்கு அக்கல்லைப் பற்றி தெளிந்து ஞானம் அடைந்து நிச்சயம் தன்னில் கூட இவ்வதேசத்தை எல்லாம் காக்கலாம் என்று. 


=======================================

# சுரா கல் ரகசியம் அறிந்து பல சமய குறவர்கள் இலங்கை வந்தடைந்தார்கள்.

=======================================


குருநாதர் :- இதனால், அப்பனே பின்... இதனால், அப்பனே, அனைவரும் பல ஞானிகள், அப்பனே, பல சமய குறவர்கள், அப்பனே, நிச்சயம், நிச்சயம் எதை என்று கூற, இதை தெரிந்து கொண்டு, அப்பனே, இவ்வதேசத்தை வந்தடைந்தார்கள் என்பேன் அப்பனே. 


இதனால், அப்பனே, பல வழியில் கூட அவர்களும் நிச்சயம் தன்னில் கூட சேவைகள் செய்தனர் என்பேன் அப்பனே. அவர்களும் பல பல வழியில் கூட புதைத்து வைத்துள்ளனர் என்பேன் அப்பனே. நிச்சயம் அக்கல்லை நன்முறைகளாகவே அவை தன் எங்கெங்கு உள்ளது என்பவை எல்லாம் அப்பனே. 


இதனால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. இதனால், அப்பனே, இதனை இப்பொழுது, அப்பனே, எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே. 


==========================================

# இறை ரகசியங்கள் :- யார் ஒருவன் தாய் மீது பெரிய பாசங்கள் கொண்டுள்ளானோ அவன் தன் அனைத்திலும் வெல்வான்.

==========================================


குருநாதர் :-  இராவணனுடைய, அப்பனே, தாயைப் பற்றி, அப்பனே. இராவணனின், அப்பனே, பின் தாய் மீது மிகவும் பற்றுக் கொண்டான் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று அறிய, அப்பனே.  பின் தாய் மீது அவ்வளவு பாசங்கள். 


ஏனென்றால் பின் யார் ஒருவன் தாய் மீது பெரிய பாசங்கள் நிச்சயம் பின் கொண்டுள்ளானோ அவன் தன் அனைத்திலும் வெல்வான். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 


==============================================

# இராவணேஸ்வரர் - தாய் பாச ரகசியங்களை அறிந்து கொண்டார்.

=============================================



=============================================

#  தாயை யார் ஒருவன் மதிக்கின்றானோ அவன் இவ்வுலகத்தில் பேசப்படுவான். 

#  நிச்சயம் அவனுக்கு பல சக்திகள் ஏற்படும். 

=============================================


குருநாதர் :-  இதனால், அப்பனே, இதை நன்கு தெரிந்து கொண்டான். அப்பனே, இராவணன் நிச்சயம் தன்னில் கூட.  தாயை யார் ஒருவன் மதிக்கின்றானோ அவன் இவ்வுலகத்தில் பேசப்படுவான். பின் நிச்சயம் பல சக்திகள் ஏற்படும். 


அத்தகுதி... அத்சக்திகளுக்கு  பிறகுதான் பல திருத்தலங்களை  பின் அடைந்தாலும் நிச்சயம் தன்னில் கூட அருளும் கிட்டும் என்பவை எல்லாம் நிச்சயம் தெளிந்து கொண்டான். 


இதனால் நிச்சயம் பல வழிகளில் கூட தாய்க்கு சேவை செய்து செய்து நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது தாய் என்ன சொல்கின்றதோ அதையே கேட்டான். நிச்சயம் தன்னில் கூட. 


=============================================

# வணக்கத்திற்கு உரிய இராவணேஸ்வரர் அவர்கள், தன் தாயை, பெண்களை  போற்றிப் போற்றி பல பாடல்களை பாடியுள்ளார்கள்.

=============================================



குருநாதர் :-  இதனால் பின் தாயை போற்றிப் போற்றி பாடினான் பல பாடல்களை. 


அதாவது பெண்களை பின் போற்றி பாடல்களை எல்லாம் பாடினான். ஆனாலும் அவை தன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் தன்னில் கூட. 


அவ் சுவடிகள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது இதன் நிச்சயம் தன்னில் கூட இத்திருத்தலத்திற்கு எதிரே இன்னும் கூட எவை என்று அறிய பின் அதாவது பின் நந்தியங்கள் நிச்சயம் தன்னில் கூட புதைத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 


இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் அச்சுரா கல்லின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எதை என்று கூற பின் அதாவது அழகாக எடுத்து வந்து செய்யப்பட்டவை என்பேன். 


=========================================

(நந்தியங்கள் என்பது நந்தி சிலைகள்... அந்த சிலைகள் சுரா கல்லில் செய்யப்பட்டவை அவை புதைந்து உள்ளது)

=========================================


=========================================

# மனிதனின் எண்ணங்களை அப்படியே எதிரொலிக்கும் சுராக்கள் ரகசியங்கள்.

========================================= 


குருநாதர் :-  கலியுகத்தில் நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அறிந்தும் அவை தன் நிச்சயம் மனிதன் மாற மாற நிச்சயம் இன்னும் பின் அழிதன்னிலே சென்று கொண்டிருந்தது. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவை தன் எப்படி மனிதன் நினைக்கின்றானோ அப்படியே எதிரொளிக்கக் கூடியவை. 


இதனால்தான் நன்கு உணர்ந்தான் இராவணன். 


நன்விதமாக மனிதன் என்ன நினைக்கின்றானோ அதற்கு தகுந்தார் போலே நிச்சயம் தன்னில் கூட. 


ஆனால் இப்பொழுதெல்லாம் நிச்சயம் மனிதன் தீயவையாகவே நினைத்துச் செல்கின்றான். அக்கல்லும் பின் தீயவையாகவே செய்கின்றது. 


ஆனாலும் அதற்கும் இவ்வதேசத்தில் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இன்னும் அடியில். ஆனாலும் சிறிது மேலே தூக்கினால் நிச்சயம் தன்னில் கூட, வருவோர்கள் எல்லாம் கஷ்டத்தில் தான் மிதந்து நிச்சயம் தன்னில் கூட,  அதனால்தான் எது என்று புரிய. 


பின் ஆனாலும் ஒவ்வொரு வருடமும் பின் சிறிது எவை என்று எறும்பின் அளவு நிச்சயம் மேலே வருகின்றது. 


எதை என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட மனிதர்கள் தீயவையாக நினைத்தால் தீயவையாகவே நிச்சயம் நடக்கும். நல்லவையாகவே நினைத்தால் நல்லவையாகவே நடக்கும். 


==========================================

# அக்கல்லானது மேலே வந்து விட்டால் சிறப்புக்கள் 

==========================================



குருநாதர் :-   ஆனாலும் அக்கல்லானது ஒரு நிச்சயம் தன்னில் கூட பின் ஒரு பகுதிக்குள் தான் நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் அதன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட மேலே வந்துவிட்டால் சிறப்புகள். 


இதனால்தான் அச்சிறப்புகள் பற்றி இங்கு பேச வந்தேன். 


நிச்சயம் அவை எல்லைக்குள் நிச்சயம் தாண்டப் போகின்றது என்பேன்  அப்பனே. அதனால் முன்பே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்பேன் அப்பனே. 


நிச்சயம் மக்கள், அப்பனே, பல விதத்திலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சிந்திக்க மாட்டார்கள், அப்பா. நிச்சயம் தன்னில் கூட. 


உண்மை நிலையை, அப்பனே, புரிந்து கொள்ள மாட்டான், அப்பா. 


===========================================

# குருநாதர் ஆதியிலிருந்து உண்மைகளை உரைக்கப் போகின்றார்.

===========================================


குருநாதர் :-   இதனால்தான், அப்பனே, முதலிலிருந்து வருகின்றோம், அப்பனே. பல அதிசயங்களை மனிதனுக்கு உரைக்கப் போகின்றேன் என்போம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய. 


====================================

# சித்தர்கள் உரைக்கும் வாக்குகளை பொய்யாக்கினால் அவன் பொய்யாக மாறிவிடுவான். 

====================================


குருநாதர் :-   அப்பனே, பின் அவை தன் நிச்சயம் பின் பொய்யாக்கினால் அவன் பொய்யாக மாறிவிடுவான்.


====================================

# சித்தர்கள் உரைக்கும் வாக்குகளை உண்மையாக்கினால், அவன் தன் உண்மையாக உண்மையான ஞானி ஆவான். 

====================================




குருநாதர் :-   உண்மையாக்கினால் அவன் தன் உண்மையாக உண்மையான ஞானி ஆவான் என்பேன்  அப்பனே. 


இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதற்கும் நிச்சயம், அப்பனே, பின் உடம்பில் சக்திகள் வேண்டும் என்பேன்  அப்பனே. 


அவ்வாறு சக்திகள் இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தெரிந்து கொள்ளவும் முடியாது, அறிந்து கொள்ளவும் முடியாது, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்து கொண்டும், அப்பனே, ஞானங்களும் பெற முடியாது அப்பா. 


இதனால், அப்பனே, கலியுகம், அப்பனே, அழியுகம் என்பவை எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம், அப்பனே. 


============================================

# கலியுகத்தில் அழிவை தடுக்க, சித்தர்கள் உரைக்கும் உண்மைகள் தெரிந்து கொண்டே ஆகவேண்டும்

============================================


குருநாதர் :-  இதனால், அப்பனே, அழிவை தடுக்கவே, அப்பனே, உண்மைகள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும், அப்பனே.  


பல ஞானிகளின் உண்மைகளை தெரிந்து கொண்டால், அப்பனே, நிச்சயம். 


அப்பனே, ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? அப்படியே விட்டுவிட்டு நிச்சயம் சென்று விட்டால் என்ன என்றெல்லாம் நீங்களும் கேட்பீர்கள் என்பேன்  அப்பனே. 


===========================================

# ஞானிகள் பற்றி தெரிந்து கொண்டால் , அவ் ஞானிகள் ஆற்றல் உங்களுக்கும் சேரும். தேசப்பற்று வரும். மக்களை காப்பாற்றும் சக்தி  உங்களுக்கும் பிறக்கும்.

===========================================


குருநாதர் :-   அவ் ஞானிகள், அப்பனே, தேசத்திற்காக பாடுபட்டார்கள் என்பேன்  அப்பனே. அவர்கள் பற்றி எல்லாம் சொல்கின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவ்வாற்றல், அப்பனே, உங்களுக்கும் சேரும் என்பேன்  அப்பனே. தேசப்பற்று வரும் என்பேன்  அப்பனே. 


மக்களை காப்பாற்றும் நிச்சயம் தன்னில் கூட சக்தி உங்களுக்கும் பிறக்கும் என்பேன்  அப்பனே. 


============================================

# சித்தர்களின் அறிவு நிலை - அதி மிக உயர் நிலை ஆகும். 

# மனிதர்களால் உணரவே  இயலாது.

============================================


குருநாதர் :- அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள், யாங்கள் முட்டாள்கள் இல்லை என்பேன்  அப்பனே. 


மனிதன் முட்டாளாகவே திரிகின்றான் என்பேன்  அப்பனே. 


இதனால், அப்பனே, தீயவை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் தெரிந்து கொண்டு, அப்பனே, அதற்கு ஏற்றார் போலே நடந்து தேசத்தை அழித்திடுவான் என்பேன்  அப்பனே. 


ஆனால் உண்மை நிலையிலே பல ஞானியர்களை நிச்சயம், அப்பனே, பின் எவ்வாறு என்பதை எல்லாம் அவர்கள் சக்தியை இன்னும், அப்பனே, ஆங்காங்கு இறந்து நிச்சயம் தன்னில் கூட.  


=======================================

# பல ஞானிகளின் விஷ்ணு சக்கர சக்தியை - நாம் எப்படி அடைவது?

=======================================



குருநாதர் :- அவ் சக்திகள் நிச்சயம், அப்பனே, பின் எதை என்று புரிய, அப்பனே. அதாவது விஷ்ணுவானவன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சக்கரத்தை ஏந்தி எதை என்று இருக்கின்றானே, அச்சக்கரத்தின் நிச்சயம் தன்னில் கூட, சக்திகள் இன்னும் கூட பின், அதாவது பின் உயிர் பிரிந்தாலும், உடம்பு போனாலும், நிச்சயம் தன்னில் கூட அச்சக்கரம் இன்னும் இன்னும் திரிந்து கொண்டே தான் இருக்கின்றது. அங்கே புதைந்த இடத்தில் கூட. 


இதனால் அவ்  சக்திகள் (உங்களுக்கு) வரவேண்டும் அல்லவா? 


============================================

# பரம ரகசியம் - அடியவர்கள் அவசியம் இதனை நன்கு பயன்படுத்தி கொள்க.

============================================

# பல இடங்களில் உங்களால் இயன்ற அளவு , முடிந்தவரையில் ஞானிகளை பற்றி பேசுங்கள். நேரில் எடுத்துரையுங்கள்.

============================================

# அவ் ஞானிகளின் அளவிட இயலாத  சக்திகள் உங்களுக்கு வந்து சேரும்.

============================================

# உங்களுக்கு மாற்றங்கள் உண்டாவது உறுதி. 

============================================



குருநாதர் :- அதனால்தான் அவ் ஞானிகளை நிச்சயம், அவ் ஞானிகளை பின் சக்திகளை, அதாவது நிச்சயம் தெரிந்து கொண்டால், நிச்சயம் தன்னில் கூட அச்சக்கரத்திற்கும் உயிர் நிச்சயம் தன்னில் கூட அவை தன் எவ் ஞானியில் பின் உடம்பில் வாழ்ந்ததோ, நிச்சயம் தன்னில் கூட பின் அவ் ஞானி எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட பின் யார் பின் பேசுகின்றார்களோ, நிச்சயம் அச்சக்கரத்தின் பின் சக்தி நிச்சயம் மனிதனுக்கு விழுகின்ற பொழுது பல மாற்றங்கள் ஏற்படுவது உறுதி, அப்பா. 


========================================

# வணக்கத்திற்கு உரிய இராவணேஸ்வரர் அன்னை அவர்கள் ,  சாதாரணமானவர்கள் இல்லை. 

========================================

# அவ் வணக்கத்திற்கு உரிய அன்னையின் சிவபக்தி ,  நிச்சயம் இராவணேஸ்வரர்  சிவ பக்தியை விட மிக அதிக சிவபக்தி ஆகும். 

========================================



குருநாதர் :-இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் ஏன் எதற்கு இங்கு சொல்ல வந்தேன் என்றால், இராவணனும் தாயும் கூட சாதாரணமானவர்கள் இல்லை, 


நிச்சயம் சிவபக்தியில் நிச்சயம் இராவணனை விட பின் நிச்சயம் தன்னில் கூட அதிக சிவபக்தி. 


அதனால்தான் இராவணனுடைய பின், அதாவது பின் அன்னையைப் பற்றி யாருக்காவது தெரியுமா என்றால், யாருக்கும் தெரியாது. அப்படியே அழிந்துவிட்டது. நிச்சயம் தன்னில் கூட. 


உலகத்தில் பெரும் சிவபக்தியாக, நிச்சயம் தன்னில் கூட இருந்தால், அவள் நிச்சயம் தன்னில் கூட. 


பின் தன் மகன் நிச்சயம் உலகத்தை ஆள வேண்டும் என்று ஈசனையே நினைத்து, நினைத்து, நினைத்து, நினைத்து, நிச்சயம் பெற்றாள்  பிள்ளையைக் கூட அதைப்பற்றித்தான் இங்கு சொல்ல வந்திருக்கின்றேன். 


நிச்சயம் பின் அவளைப் பற்றி தெரிந்து கொண்டால் இன்னும் கூட, எவை என்று அறிய பின் சிறப்புகள் நிச்சயம் தன்னில் கூட இயங்கிக் கொண்டிருக்கின்றாள், நிச்சயம் தன் மகன் எவ்வாறெல்லாம் பின் வாழ்ந்தான் எது என்று புரிய, எது என்று அறிய என்றெல்லாம் நிச்சயம் பின் அத்தாயைப் பற்றி நான் இப்பொழுது எடுத்துரைக்கப் போகின்றேன். 


அதனுள்ளே நிச்சயம் தன்னில் கூட பின் நன்மைக்காக நிச்சயம் ஒருமுறை பின், அதாவது சிவபுராணத்தை, அதாவது ஓதி வாருங்கள் சொல்கின்றேன். 



சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (பாருங்க, நாம ஏன் ஞானிகளைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு புரியுதுங்களா? அவங்க இறைவனையே நினைச்சு தன் உடம்பை ஒரு பெரிய சக்தி நிலையமா மாத்தி வச்சிருக்காங்க. 


அவங்க உயிர் போனாலும், உடம்பு மறைஞ்சாலும், அந்த 'மூலாதாரச் சக்கரம்' அழியாம அப்படியே இருக்கும். 


நாம அவங்களை பத்தி பேசும்போதோ இல்ல நினைக்கும்போதோ, அந்தச் சக்கரத்துல இருக்கிற அபாரமான ஆற்றல் நமக்குள்ளேயும் இறங்கும். 


அந்தச் சக்தி நமக்குக் கிடைக்கும்போது, அவங்க எப்படி உண்மையான பக்தியோட இறைவனை அடைஞ்சாங்களோ, அதே மாதிரி நமக்கும் நல்ல தெளிவும், ஞானமும் பிறக்கும். அப்படி ஒரு தெளிவு கிடைச்சா, அந்த மகான்கள் எப்படித் தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்தாங்களோ, அதே மாதிரி நாமளும் நாலு பேருக்கு நல்லது செய்யணும்ன்ற எண்ணம் வரும். 


அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், ராவணனை விட அவங்க அம்மா பெரிய சக்தி வாய்ந்தவங்கன்றது யாருக்குமே தெரியல. அதனாலதான் அவங்களை பத்தி இங்க சொல்லப்போறோம். சிவபுராணம் படிங்க இப்போ…)



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.