“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Saturday, November 29, 2025

சித்தர்கள் ஆட்சி - 522:- அன்புடன் அகத்திய மாமுனிவர் - அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் அருளிய வளத்தி கோவில் வாக்கு! -

இறைவா நீயே அனைத்தும்.

இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.











வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!


சமீபத்தில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளத்தி எனும் கிராமத்தில்... புராதனமான முன்னொரு காலத்தில் சீரோடும் சிறப்போடும் இருந்த ஈசன் ஆலயம் சில மனிதர்களின் தவறான நடவடிக்கைகளால் பாழடைந்து ஈசன் மட்டும் கம்பீரமாக அனைத்தையும் உற்று கவனித்துக் கொண்டு இருக்கும் ஒரு... காட்டில் அமைந்திருக்கும் ஸ்தலத்தில் காகபுஜண்டர் மகரிஷி வாக்குரைத்தார். 


ஈசனை நம்பாமல் மனிதர்களை நம்பி நம்பி.. செய்த வேலைகளால் ஈசனே தடையை ஏற்படுத்தி இருப்பதையும்... சுட்டி காட்டினார். 


இந்த வாக்கினை படிக்கும் பொழுது இறைவனையும் இறைவன் ஆலயத்தையும் மாந்திரீகத்தால் கட்டுப்படுத்த முடியுமா?? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். 


ஆனால் குருநாதர் இதனைப் பற்றி சில சமயங்களில் அப்பனே இது கலியுகம் அழியும் யுகம்!!! அழியும் கலியுகத்திற்கு என சில விதிகள் உள்ளது பகலுக்கு எவ்வளவு சக்தியோ அதேபோல் இருளுக்கும் சக்தி உள்ளது நல்ல சக்தி எந்த அளவுக்கு சக்தி படைத்தது அந்த அளவிற்கு தீய சக்திக்கும் இங்கு சக்தி இருக்கின்றது ஏனென்றால் இது கலியுகம் கலியுகத்தின் விதி இப்படித்தான் இருக்கும் என்று கூறியிருக்கின்றார். 


அது மட்டுமில்லாமல் ஒருமுறை குருநாதரிடம் மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரத்தின் கீழே இருக்கும் மகாமுனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் தடைப்பட்டு கொண்டே இருந்ததை குருநாதரிடம் கேட்டதற்கு 


மக்கள் சரியில்லை என்று மீனாட்சி தேவியே அதை தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றாள் பொறுத்திருக வழியும் விட்டு விடுவாள்..


இறையருள் இருந்தால் மட்டுமே இதுவும் நடக்கும் என்று குருநாதர் தனது வாக்கில் கூறியிருந்தார். 


(சித்தன் அருள் 1066. அன்புடன் அகத்தியர் மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி ஆலய வாக்கில் கேள்வி பதிலில்) 


இறைவனை எந்த தீய சக்தியாலும் ஒன்றும் செய்ய இயலாது. 


இதை நம்பி நம்பி செல்கின்ற மனிதர்களுக்கு படிப்பினையாக பாடம் புகட்டுவதற்கு தான் இறைவனே வேண்டுமென்று சில சமயங்களில் நாடகத்தை நடத்துகின்றார். இதனையும் இவ்விடத்தில் புரிந்து கொள்க!!!


இவ்வுலகத்தின் மன்னன் ஈசனே என்பேன் அப்பனே... எப்பொழுது மறைந்திருக்க வேண்டும் எப்பொழுது எழுந்திருக்க வேண்டும் என்பதை ஈசனே தீர்மானிப்பான்... என்று குருநாதர் கூறியதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம். 


காசியில் ஞானவாபி லிங்கத்தை குறித்து கேட்டது போதும் குருநாதர் ஈசன் முடிவு செய்வான் எப்பொழுது எங்கு தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்று அதன்படி ஈசன் வெளிப்படுத்துவார்.

அனைத்து முடிவும் ஈசன் கையில் என்று கூறியிருந்தார் அதன்படி தான் இந்த ஆலயமும் சரி...


ஈசனே!!! ஒரு முடிவை எடுத்தால்தான் உண்டு சித்தர்கள் மனது வைத்தால் தான் உண்டு.


இந்த வாக்கினை படிக்கும் பொழுது இந்த உண்மைகள் அனைவருக்கும் புரியவரும்.


தற்பொழுது வாக்குகள்!!!



=========================================

# அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு 

=========================================


பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் பின் கைலாயத்தில், பின் பார்த்து, பின் அருள்கள்!!!!


பின் எவை என்று உணராமலே, பின் அவர்கள் பின் உரையாடலின்  போது,  யான் தேர்ந்தெடுத்து சொல்கின்றேன் புசண்டவன் !!!


ஏனடா??  தரித்திர மனிதனின் இவ் லீலைகள்?


 எதை எதையோ செய்து கொண்டு , மாந்திரீகத்தில்  எல்லாம் போயிட்டு,  பின் வந்து எவை என்று கூற ஈசனே  கோபித்துக் கொண்டு!!!!!!!!!!!!.


 இதனால் எவ்வாறு நடக்கும்? மேன்மை பெறும்???? 


பின் இதனையும் என்று அறிவதற்கு, பின் வாயில் எதை என்று ஆனாலும் மென்று தின்கின்றீர்களே ஏதுமில்லாமல். 


==============================================

# ஈசனை மட்டுமே குறியாக எண்ணி வாழுங்கள் 

==============================================


அவை மட்டுமில்லாமல் ஈசனை மட்டுமே குறியாக எண்ணி நிச்சயம் நடந்திருந்தால், இன்னும் இவ் தலம் மேன்மை பெற்றிருக்கும்.


 அவை மட்டுமில்லாமல் இன்னும் சிறப்புக்கள்.


அவை மட்டுமில்லாமல், பின் அனைவரும் பின் இங்கு வந்து வணங்குபவர்களுக்கு, நிச்சயம் ஆறுதல் கிடைத்திருக்கும். 


அவையெல்லாம் விட்டுவிட்டு!?!?!?!?!?!?!?!?!?!


 பின் இவ்வுலகத்தில் பெரியவன் நமச்சிவாயனே!!!!!. அவந்தனை விட்டுவிட்டு மனிதனை நோக்கிச் சென்று சென்று, எதனை? எதனையோ? பொய் கூறி, பின் அவந்தனும் அழிந்துவிட்டான்.


 இத்தலமும் பின் ஈசனுக்கு!!!! எதை என்று கோபித்துக் கொண்டு, இப்படி எல்லாம் பக்தர்களா??? என்று கூற ஈசன் அழகாகவே பின் நின்றுவிட்டான்.


இதனையும் என்றும் அறியாத பல மானிட ஜென்மங்களுக்கு எவை வந்தாலும் புரிவதில்லை.


ஏனென்றால் அப்படிப்பட்ட மனிதன் இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் கலியுகத்தில்,


 நிம்மதி ஏது? 


ஆனாலும் வரும், வரும் காலங்களில் எதை நோக்கிச் செல்கின்றான்?? என்பதை தீர்மானிக்கவே உண்டு. 


ஆனாலும் பணத்தையே குறியாகக் கொண்டு வாழ்ந்திருக்கின்றான் மனிதன். 


 பணம் என்னடா? ஏதடா? 


இவை என்று கூற பக்திகள். ஆனாலும் செலுத்தவில்லை என்பதற்கு. 


ஆனால் பின் மனிதனை நம்புவது போல் நமச்சிவாயனை இந்நேரம் நம்பி இருந்தால் அவனே ஏதாவது ஒரு வழியை ஏற்படுத்தி இருப்பான். 


 ஆனால் மனிதனை நம்பி!!!! நம்பி!!!! ஆனாலும் வருத்தங்கள் கூட கஷ்டங்கள் கூட. 


அப்பனே இவை  என்று கூற ஆனாலும் உண்டு ஏற்றங்கள். 


இதை அகத்தியன் தான் அழகாக எடுத்துச் செல்வான் என்பேன்.


 இப்பொழுது புரிந்ததா?


அதனால் நிச்சயம் சிறிது சிறிதாக சில விஷயங்கள் மர்மமான முறையில் இங்கே செய்திருக்கின்றார்கள்.


அதையெல்லாம் யாங்கள் எடுத்திட்டுத்தான் இதனை தத்துவத்தை நிச்சயமாய் கூறுவோம்.


ஏன் வளரவில்லை இத் திருத்தலம்?????


 எதனை நோக்கி பயணிக்கின்றது????


 எதனை என்று கூற?


 பின் ஈசனுக்காக கட்டுகின்றீர்களே!!!!!!!!


, ஏன்? ஈசனே எவை என்று கூற அவந்தனே செய்து முடிப்பதில்லை.?????


 ஏனென்றால் நிச்சயம் மனிதன் மனிதனை நம்புகின்றான். 


=============================================

# நமச்சிவாயா!!!!  நீயே தான் அனைத்தும்!!!! செய்து தர வேண்டும்

=============================================


நிச்சயம் 


“““நமச்சிவாயா!!!!  நீயே தான் அனைத்தும்!!!! செய்து தர வேண்டும்”””””  


என்று கூற யாராவது வேண்டிக்கொண்டீர்களா????????????? என்றால் நிச்சயம் இல்லை. சத்தியமாக இல்லை. 


=============================================

#  ஒருமுறை ஈசன் இங்கே வந்து நின்றார்…ஆனால் 

=============================================


மனிதன் மனிதனையே கொல்கின்றான்.  மனிதன் மனிதனையே ஏமாற்றுகின்றான் அவ்வாறு உலகம் போய்விட்டது!


அப்பொழுது கூட ஆனாலும் ஒருமுறை ஈசன் இங்கே வந்து நின்றான்,


அப்பொழுது கூட எதை? எதையோ? செய்து, பின் அவ்வாறு செய்தால் இவ்வாறு நடக்குமா??  இவ்வாறு செய்தால் அவ்வாறு நடக்குமா??


 ஈசன் முன்பே. 


அப்படி என்றால் இத்திருத்தலத்தை எப்படி? ஈசன் செய்து முடிப்பான்?? சொல்லுங்கள்?


இதை என்று உணர, அதனால்தான் மானிட ஜென்மங்களுக்கு சித்தர்கள் யார்? என்று தெரியாமல் போய்விட்டது.


 விளையாடிக் கொண்டே இருக்கின்றார்கள்.  எதை என்று கூற தெரியாமலே. 


பின் பொய் சொல்லி பிழைப்பும் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.


அதனால்தான், நிச்சயம் பின் எவை என்று கூற இவை போன்றே நடத்திக் கொண்டிருந்தாலும், நிச்சயம் பின் இறைவனே இல்லை என்ற நிலைமைக்கு வந்து விடுவார்கள். சித்தனே இல்லை என்ற நிலைமைக்கு மனிதர்கள் வந்து விடுவார்கள்.


=============================================

#  இறைவன், நம்பிக்கையோடு அன்பு மட்டுமே கேட்கின்றார்

=============================================


அதனால்தான் யாங்கள் மனிதர்களை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.


 உண்மையை சொல்லி , நன்மையை செய்து கொண்டே இரு !! போதுமானது.


இறைவன் ஒன்றும் கேட்கவில்லை அன்பு மட்டுமே கேட்கின்றான். அதுவும் நம்பிக்கையோடு.


அவ் நம்பிக்கை யாரிடமுமே இல்லையப்பா. 


இவை என்று உணர ஆனாலும் தனக்குள்ளே போராட்டங்கள். தனக்குள்ளே போராட்டங்கள்.


ஆனால் பின் எவை என்று கூற அவன்!?!?!?!?!?! பின் எதை என்று கூற யான் அனைத்தும் எதை என்று நன்கு உணர்வேன் எந்தனுக்கு அனைத்தும் தெரியும்!!!! என்பவனுக்கு,!!!?!?!?!?


 ஈசன் தெரியமாட்டானா????? என்ன?


 தெரிந்து கொள்ளுங்கள். 


ஆனாலும் இவை என்று கூற ஆனாலும் இவை தன் உணர உணர சக்தி மிகுந்தவன் பின் ஈசன்.


 ஆனால் பார்த்துக் கொண்டிருப்பதையே மறந்து விடுகின்றானே!!!!!


 அவந்தன் எப்படி நல்லதை சொல்ல முடியும்???????


 எண்ணிக்கொள்ளுங்கள்!!!!!


அதனால் பொய்யானவர்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!


 நிச்சயம் அதனால் கவலைப்பட தேவையில்லை!!. 

யாங்களே நிச்சயம் இத்தலத்தை உருவாக்கிச் செல்வோம்.


 இன்னும் எதை எதை என்று கூற யாங்கள் வந்துவிட்டோம்.


 நிச்சயம் யாங்கள் எதை என்று கூறாமலே, நிச்சயம் திடீரென்று வரவழைப்போம். எதனை எதை என்று கூற. 


ஆனாலும் இவற்றின் தன்மைகளில் உண்மையா? எவை என்று கூறாமலே, நிச்சயம் எதை என்று உணராமலே.


=============================

#  இறைவா நீயே அனைத்தும் 

=============================


=============================

#  இறைவா - உன்னால்தான் மட்டும் தான் முடியும்.

=============================


=============================

#  இறைவா - எங்களால் ஒன்றும் முடியாது.

=============================


ஏனென்றால் நிச்சயம் சரியாக சத்தியமாக சொல்கின்றேன். நல் முறையாகவே, நல் மனதாகவே 


““““இறைவா நீயே”””” 


““““இறைவா நீயே, ””””


““““நமச்சிவாய, ””””


““““நமச்சிவாய என்றெல்லாம் கூறி, கூறி 


““““ உன்னால்தான் மட்டும்தான் முடியும்.””””

 

““““ எங்களால் ஒன்றும் முடியாது””””


““““ யாங்கள் ஒன்றும் பொம்மைகளே என்று நிச்சயமாய்,


 ஈசனையே சரணாகதி அடைந்தால், நிச்சயம் மேன்மைகள் தான் உண்டு என்பேன். ””””


அவை விட்டுவிட்டு மனிதனிடத்தில் சென்றால்!!!!....


நிச்சயம் ஈசன் எதை என்று கூற அதனால்தான் ஈசனே சில தடங்கல்களை வைத்துள்ளான்.


அவை மட்டுமில்லாமல் எதை என்று கூறாமலே எதனை பின்பற்றி சில தீய சக்திகளும்!!!!!!!! 


எவை என்று அப்பனே . 


ஏனென்றால் இறைவனுக்கே தீங்கு செய்யும் அளவிற்கு மனிதன் உயர்ந்து விட்டான். 


ஆனால் அவையெல்லாம் எப்படி? என்பதை கூற ஆனால் இவ்வாறு செய்பவன் கடைசியில் பார்த்தால் எங்கே இருக்கின்றான் என்பதை கூற யானே அறிவேன்!!


இதை.


““““பல பல பல யுகங்களாக வாழ்ந்து வந்தவன் யான்.”””””” 


யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் இதையும் உணர.


அதனால்தான் சொல்லிவிட்டேன் உங்களுக்கு!!!!!

 என்ன தேவையோ நிச்சயம் விதவிதமாக யாங்களே வந்து செய்வோம். 


அதனால் குற்றங்கள் இல்லை!! குறைகள் இல்லை!! இறைவனே பரிபூரணம் ஆசீர்வதித்து!!! ஒருவருக்கொருவர் மனக்குழப்பங்கள் கொள்ள வேண்டாம். 


யான் பெரியவன். இவன் தன் பெரியவன். இவன் சொல்வது தவறு. அவன் சொல்வது சரி, என்றெல்லாம்!?!?!?!?!?!....


 நிச்சயமாய் ஈசன் அதி விரைவிலே ஒரு வழியும் வகுப்பான் சொல்லிவிட்டேன்.


இதை என்று உணர, ஆனாலும் மேற்சொன்னவாறு இன்னும் ஏராளமான சித்தர்கள். ஆனாலும் வலம் வந்து, யாங்களும் முன்னின்று, நிச்சயமாய் செய்வோம்.


 நிச்சயமாய் எதை எது என்று கூற, வரும் பின் விதவிதமாய் இன்னும் நல் நல் மனிதர்கள் பின் வருவார்கள், எவை என்று கூறாமலே. 


=============================

#  ஆலய திருப்பணி  - திருவண்ணாமலையில் யாசகம் ஏந்த வேண்டும்

=============================


நிச்சயம் எதனை என்று  வருத்தப்பட தேவையே இல்லை என்பதற்கு இணங்க . 


ஆனாலும் அடிக்கடி பின் நீங்கள் எதை என்று கூற ஆனாலும் பின் அண்ணாமலையை நாடிச் செல்லுங்கள்.


அங்கே எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி சுற்றி சுற்றி வருவார்கள் என்பேன்.  


அங்கு சென்றாலே சித்தர்களே மறைமுகமாக வந்து காசுகளை ஈவார்கள் என்பேன்.


இதனால் நிச்சயமாய் பன்மடங்கு உயர்வுகள் பெறுவது உறுதி என்பேன்!!!


(ஆலய திருப்பணி செய்பவர்கள் திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்ல வேண்டும் அங்கு சிவாலய பணிக்கு யாசகம் ஏந்த வேண்டும் அப்படி யாசகம் ஏந்தும் பொழுது சித்தர்களும் வந்து காசுகளை இட்டுட்டு செல்வார்கள்)


 அதை எதை என்றும் கூற ஆனாலும் பல மனிதர்கள் எதை எது என்று உணராமலே!!!!


 இன்னும் இவ்வாலயத்தின் சிறப்பு எந்தனுக்கே தெரியும் என்பேன். 


அதனால் அவைதனும் வரும் காலங்களில் நிச்சயம் யான் உரைப்பேன் சொல்லிவிட்டேன்.


அப்பனே எதை எவற்றின் முன் தோன்ற, அப்பனே எவைதன் உணர உணர எப்பொழுது எவ்வாக்குகள்? செப்ப வேண்டுமோ, அப்பொழுதுதான் யான் செப்புவேன். 


=============================

#  ஓர் உயர் பக்தி கதை - அவசியம் அனைவருக்கும் தெரியப்படுத்துக… 

=============================


எதை என்று கூற ஆனாலும் இங்கே இருக்கும் எவை என்றும் ஓர் அரசன். ஆனாலும் அவ் அரசனோ பின் நின்று நின்று ஈசா!!!! ஈசா!! என்றெல்லாம் தொழுது கொண்டிருந்தான். 


(இப்பகுதியை ஆண்ட ஒரு அரசன்  )


 ஆனாலும் அவந்தனுக்கோ பல தோல்விகள் வந்தாயிற்று. தோல்விகள் வந்தாயிற்று !!!


ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. 


ஆனாலும் ஈசனையே வணங்கிக் கொண்டிருந்தான். 


ஈசா!!!!! உன்னை விட்டால் எந்தனுக்கு வேறு வழிகள் கிடையாது.


மனிதனும் பின் ஏமாற்று. (காரர்கள்)


என்னிடம் இருக்கும் புலவர்களே என்னை ஏமாற்றி, ஏமாற்றி ஏமாற்றி. 


அதனால் யான் யாரையும் நம்புவதில்லை. 


ஈசா!! நீ என்னுடன் வந்தால் நிச்சயம், யான் பின் தைரியமாக இருப்பேன் என்று கூட.


 ஆனாலும் நிச்சயமாய் பின் அதையெல்லாம் ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான். 


மீண்டும் இவ்வரசனுக்கு சோதனைகள் கொடுப்போம் என்று எண்ணி. 


ஆனாலும் பல சோதனைகள் பல பல வழிகளிலும் இட்டு இட்டு!!, 


ஆனால் கடைசியில் அனைத்தும் இழந்த பொழுதிலும் ஈசா!!! ஈசா!!! எவை என்று கூற. 


ஆனால் எந்தனுக்கு பின் இவையெல்லாம் இழந்தது எந்தனுக்கு சந்தோஷமே.


 ஏனென்றால் உன்னை யான் இழக்கவில்லையே என்று பின் ஈசனிடம் பின் கூற, !!!


ஈசனே கண்ணீர் விட்டான். 


அப்பொழுது புரிந்து கொள்ளுங்கள் எது பக்தி என்பதை கூட? 


எது பொய்யான பக்திகள் என்று கூற?


அதனால் உண்மையான ஒருவன் எவ்வாறு?? பக்திகள் செலுத்தி!! செலுத்தி!! பின் கஷ்டங்கள் பட்டாலும் உயர்த்திடுவான் இறைவன். 


இதனால் அவ் அரசனும் ஆனாலும் இங்கேதான் வலம் வந்து சுற்றிக்கொண்டு இங்கேதான் இருந்திருந்தான் என்பது மெய். 


ஆனாலும் இதை உணர்வதற்கு ஆனாலும் அரசனை பல வழிகளிலும் கூட பின் துரத்தி விடலாம் என்று மக்களும்!! புலவர்களும். 


ஆனாலும் தன்னிடத்தில் உள்ள புலவர்களுக்கும் பல அடியாட்களுக்கும் இவ் அரசன் பலத்த பலத்த வழிகளிலும் கூட பல வழிகளில் நன்மை செய்தான்.


ஆனால் மனிதனின் புத்திகள் எப்படி ஆயிற்று? 


அவ் அரசனையே பின் நாடு கடத்த வேண்டும் என்று கூற. 


ஆனாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அவ் அரசன் ஈசனை.


ஆனாலும் பின் இங்குதான் ஒளிந்திருந்தான் அவ் அரசனும். 


ஆனாலும் பல பல வழிகளிலும் சுற்றிச் சுற்றித் திரிந்தார்கள்.  அவ் அரசனை தேடித் தேடி!!


ஆனாலும் எங்கும் சிக்கவில்லை!!


ஆனாலும் பார்த்தால் ஈசனை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தான். 


=============================

#  ஈசனாரையே மனம் கலங்க வாய்த்த மன்னன்  

=============================


ஆனாலும் பின் மனம் கலங்கினான் ஈசனே!!


  எதற்காக?? மனம் கலங்கினான் என்றால் மனிதனின் புத்திகளை பார்த்து. 


மனிதனுக்கு பின் இவ் அரசன் எவ்வாறு? பல உதவிகள் செய்திருப்பான்.


 ஆனால் மனிதனோ எதற்காக எல்லாம் இப்படி செய்கின்றான் என்று கூட ஈசனும்!!!


ஆனாலும் நிச்சயமாய் பின் பார்வதி தேவியும் எவை நின்று, பின் அன்பானவனே!!!!


இவ்வாறெல்லாம் பின் மனிதர்கள் இருக்கின்றார்களே, இவற்றிற்கெல்லாம் என்ன சொல்லப் போகின்றாய்???? 


ஆனாலும் இருப்பது ஆனாலும் ஈசன் எதை என்று கூற


பார்வதி தேவியே!!! நிச்சயமாய் இவந்தனக்கு ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். 


ஆனாலும் சரி யாம் தனே எதை என்று கூற, ஆனாலும் இவந்தனை உணராமல் நாம் தானே இவனை காட்டிவிடுவோம் எதை என்று கூற. 


அப்பொழுது கூட என்னதான் சொல்கின்றான்??? பார்ப்போமே என்று கூட. 


ஆனாலும் பார்வதி!!! இதை என்று கூற இப்பொழுதே பலமான கஷ்டங்கள் இப்படி இவனுக்கு கொடுத்துவிட்டாய். 


ஆனாலும் இனிமேலும் இவன் தாங்கிக் கொள்வானா??? உயிரை

மாய்த்து விடுவானா???


பின் அன்பானவனே இவையெல்லாம் எப்படி?? என்று கூற? 


ஆனாலும் இதற்கு சரியான வழிகள் உண்டா? என்பதற்கிணங்க ஈசன் மறைமுகமாக ஆனாலும் ஒருவனை தூதுவிட்டு பின் இங்கேதான் இருக்கின்றான். ஒளிந்து கொண்டிருக்கின்றான் என்று!!!


நிச்சயம் மற்றொரு அரசுக்கு தெரிய வந்து, பின் சிறை பிடித்தார்கள். 


அப்பொழுது எவை என்று கூற அதனால் உயிரை மாய்க்கும் பொழுது, ஆனாலும் அவர் அரசனே பின் நிச்சயமாய் மரணம் உண்டு என்பதை கூட அறிந்து கொண்டான்.


மனிதர்கள் பிடித்துவிட்டார்களே…


. ஈசனை பிடித்துக்கொண்டும் பின் இவ்வாறு எதை என்று எண்ணாமலே ஈசன் மீதும், ஆனாலும் பின் கண்ணீர் விட்டு பின் அழுதான். 


எதற்காக?? அழுதான்?? என்றால், 


ஈசா !!! உன்னை விட்டு பிரிந்து செல்கின்றேனே!!!! என்பதற்காகத்தான் மனம் வருந்தினான். 


அப்பொழுது ஈசனும் புரிந்து கொண்டான் இவ்வளவு பக்தியா!!!  என்று !!


ஆனாலும் இதை என்று ஆனாலும் அப்பொழுது கூட பின் அரசவை சேர்ந்தது. (அரச சபை)


சேர்ந்து சேர்ந்து இன்னும் எதனையும் உள்நோக்கி பின் வரவழைத்தனர் இவ் அரசனை. 


ஆனால் பல மனிதர்கள்!!!?!?!


பின் ஆனால் அரசனோ நல்லவன் என்று இறைவனுக்கு தெரியும். 


ஆனால் மனிதர்கள் ஆனால் மனிதர்களுக்கு பல பல வழிகளில் உண்மை புரிந்தவன் இவ் அரசன். 


ஆனாலும் இதை அறியாமலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லினார் அவ் அரசன் மீது. 


ஆனாலும் இதையும் என்று சபையில்.


ஆனால் ஈசனும் பார்வதி தேவியும் அமைதியாக பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.


ஆனாலும் இவை தன் உணர 


ஒருவன் சொன்னான் இவந்தன் பின் எவை என்று கூற பைத்தியக்காரன் என்று... 


இன்னொருவன் சொன்னான்!! இவந்தனக்கு இரக்கம் இல்லை என்று… 


இன்னொருவன் சொன்னான் இவன் திருடன் தான் என்று கூட.. 


இன்னொருவன் சொன்னான்!!...


ஆனால் பல பல அசிங்கமான பேச்சுக்களும். 


இதனால் பின் ஆனாலும் அவ் மன்னன் மேலே பார்த்து ஈசனே!!!!!! இவ்வாறெல்லாம் பொய் கூறுகின்றார்களே.!!!!! 


ஆனால் என் மனது உந்தனக்கே தெரியும் என்று கூட......


பலமாக நமச்சிவாயனே!!!!  என்று அழைத்தான்


ஆனாலும் அங்குள்ள சபை எதை என்று கூற!!!

(சபையில் இருந்த அனைவரும்)


=============================

# நமச்சிவாயர் பக்தனுக்கு நடந்த கொடுமை 

=============================


ஆனாலும் அனைவரும் நமச்சிவாயனா? எங்கு இருக்கின்றான்?????


அவந்தனெல்லாம் என்று கூற பலர் சிரித்தனர். 


நமச்சிவாயன் இருந்திருந்தால் உன்னை இப்படியாவது, பின் இங்கெல்லாம் இப்படியாவது மானபங்கம் படுத்தி விடுவீர்களா என்ன??? என்று கூற அனைவரும் நகைத்தார்கள். நகைத்து நகைத்து!!!!


ஆனாலும் அதற்கு நமச்சிவாயனும் பின் பொறுமையாகவே இருந்தான். 


=============================

# அன்னை பார்வதி தேவிக்கு பொங்கி எழுந்தது கோபம்.

=============================


ஆனால்!?... பார்வதி தேவிக்கு பொங்கி எழுந்தது கோபம்.


ஈசனே!!!! உம்மை எதை என்று கூற இவ்வாறு நம்பிக் கொண்டிருந்தால், பின் நான் தான் முட்டாள்!!!!


நான் நேரடியாகவே அவனைச் சென்று காப்பாற்றுவேன் என்று கூற பொங்கி எழுந்துவிட்டாள். 


ஆனாலும் பின் ஈசனே எவை எவ்வாறு என்பதை கூட பின் பொறு தேவி!! பார்ப்போம்.!!!


என்னதான் நடக்கின்றது?? என்று கூட. ஆனாலும் இன்னும் ஏராளமான பல பல இல்லங்களையும் அமைத்து தந்தான் அவ் அரசன்!!(நாட்டு மக்களுக்கு)


ஆனாலும் இதைச் சுற்றி உள்ளவர்கள் ஆனாலும் எதை என்று கூட பல மனிதர்களுக்கு நீர் நிலைகளையும் உருவாக்கினான். பல பல மனிதர்களுக்கும் எவை என்று கூற மரங்களையும் நட்டு வைத்தான். பல பல பின் கிணறுகளும் தோண்டினான் அழகாகவே. 


இவ்வாறு இருக்கும் அரசனையே எப்படி செய்துவிட்டார்கள்?? பார்!!!


ஆனாலும் இவ் அரசனோ இதை என்று கூறாமலே,  நமச்சிவாயன்  பக்தனே


ஆனாலும் இங்குள்ள அனைத்து தலங்களுக்கும் எதை என்று கூறாமலே ஆனாலும் இன்னும் சிறப்புகள் உண்டு 


ஆனாலும் ஒருவன் எதை என்று கூற இவந்தனை பின் இவ்வாறு பின் விட்டுவிட்டால் இவந்ததன் கேவலமாகவே, 


ஆனால் இவ் அரசன்?? என்னென்ன தவறுகள் செய்தான்?? என்பதையும் கூட எங்களுக்கு தெரியும் என்று கூற. 


ஆனால் புலவர்கள் கூட இப்படித்தான் சொன்னார்கள்.


ஆனாலும் மிஞ்சியது  புலவர்கள் தான் திருடர்கள். 


=============================

# அரசனே - திருடன் ஆனா  கொடுமை 

=============================


ஆனால் மனம் கலங்கியது யாம் திருடர்கள் என்று ஒத்துக் கொண்டாலும், ஆனால் நிச்சயம் நம் பழிகள் எல்லாம் இவ் அரசன் மீது போட்டு விடுவோம் என்று கூட. 


இவன் அதைச் செய்தான். அதில் இதை வைத்தான். பின் திருத்தலங்கள் எல்லாம் சென்றான். அங்கெல்லாம் பின் வீணானதை !!!


பின் மக்களிடையே  கொள்ளை அடித்தான் என்றெல்லாம் பொய். 


ஆனாலும் அவ் அரசனோ பின் எதற்கும் பின் வருந்தவில்லை!! ஈசா!!  நமச்சிவாய!!! என்றெல்லாம் தான் பின் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். 


ஆனாலும் உண்டா?? இதற்கு தீர்வுகள் இல்லை என்பதை கூட!!


இதனால் அவ் மன்னனை எதை என்று கூறாமலே இன்னும் தரித்திர பேச்சுக்களால் பேசி பேசி!!!, 


ஆனாலும் ஒருவர் கூட அவந்தனக்கு உதவிகள் செய்யவில்லை. 


ஆனால் இவ் அரசனோ அனைவருக்கும் உதவிகள் செய்திருந்தான்.


அதையும் கூட. ஆனாலும் நிச்சயம் எவை என்று கூற. இதனால் நிச்சயம் தூக்கிலிட சென்றார்கள்.


இவை என்று கூற மரண தண்டனையும் உண்டு என்பதை சொல்லிட்டு தூக்கிலிடப் போகின்றார்கள். 


தூக்கிலும் பின் இவை என்று அறிய.  


அதனால் நிச்சயம் பின் இதை என்று கூற ஆனாலும் இன்னொருவனும் (மற்ற அரசன்)


அவ் அரசனும் எதை என்று கூற, 


ஆனாலும் அரசனும் பின் இவ் அரசனை பார்த்து கடைசியில் உந்தனக்கு என்ன வேண்டும் ???என்று பின் உற்று நோக்கினான். 


நீ திருடன்! நீ திருடன்! தான் என்று கூற. 


ஆனாலும் அவ் அரசனோ நிச்சயமா அமைதி காத்துக் கொண்டிருந்தான்.


இன்னொரு எவை என்று கூற அவ் அரசன் நிச்சயமாய் மனிதர்கள் அனைவரும் உன்னை திருடன் என்று சொல்கின்றார்களே!  நீ என்ன கூறுகின்றாய்? 


ஆனாலும் நிச்சயமாய் இவ் அரசனுக்கும் தெரிந்துவிட்டது.


நிச்சயம் யாம் ஒன்று தான் இங்கு இருக்கின்றோம். (தனியாளாக)


ஆனாலும் அனைவரும் பின் ஏற்றுக் கொள்வார்களா என்ன?  யாம் உண்மையை புரிந்து புரிந்து அடுத்தவருக்கு சொன்னாலும், பின் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.


அதனால் நிச்சயம் எதை என்று கூற மௌனம் காத்திருந்தான். 


அதனால் நிச்சயம் பின் இன்னொரு அரசனும், பின் இவன் திருடன் தான் உண்மையிலே என்று பின் முடித்துவிட்டான். (முடிவெடுத்து விட்டான்)


ஆனாலும் பின் அனைவரும் சென்றுவிட்டார்கள்.


ஆனாலும் இதை என்று அறிய அவ் அரசனும் மெதுவாக இவ் அரசனை நோக்கி, இவ்வாறு நல்லது செய்தாயே!!!!!


இப்படி எல்லாம் கடைசியில் உந்தனக்கு எப்படி வந்தது பார்த்தாயா?? 


ஆனால் நான் எதை என்று கூற ஆனாலும், யான் அனைத்தும் தீங்கு செய்து கொண்டே தான் இருக்கின்றேன்.  என்னை நம்புகின்றார்கள் பார்!!.  


அதனால்தான் மனிதர்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று கூற அவ் அரசன். 

(மற்ற அரசன்)


ஆனால் இவ்வரசனோ பின் ஆகட்டும் அப்படியே. 


யான் நல்லதுதான் செய்தேன். 


அதனால் பின் மக்கள் என்னை என்ன சொன்னாலும் இவை என்று கூற அவற்றுக்கெல்லாம் உண்மை என பொருளை புரிந்து!!! (தவறுகள் ) யான் எதுவும் செய்யவில்லை என்று கூட !!எந்தனுக்கும் தெரியும். என் ஈசனுக்கும் தெரியும். 


அவர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமே தவிர!!!


மனிதர்களுக்கு (அறிந்து கொள்வதை) பற்றி அவசியமில்லை என்று கூற. 


ஆனாலும் பின் தூக்கிலிட நேரங்கள் வந்து கொண்டே இருந்தது.


மீண்டும் சபைகள் கூடியது. 


கூடிட்டு பின் மீண்டும் அரசன் உத்தரவிட்டான். 


பின் இதை என்று கூற, ஆனால் அரசன் பல வழிகளிலும் பின் வாழ்ந்தவன் என்று தெரியாமல், அரசனையே இன்னொரு அரசன் திருடனே என்று அழைத்தான். 


அதுதான் மனதிற்கு வேதனைக்குரியது. 


“திருடா உந்தனுக்கு இன்னும் ஏதாவது ஆசைகள் உள்ளதா”???

என்று கூட (கடைசி ஆசை)


பார். அப்பொழுது மனிதனின் மனதை பார்த்தாயா? 


அதனால் அவ் அரசனும் பின் சொன்னான் யான் உண்மையை சொன்னாலும் யாரும் நம்பப் போவது இல்லை. நம்பப் போவதில்லை!!


. எனக்காக யாரும் இல்லை இங்கு.


அனைவரும் பின் ஆனாலும் யான் அனைத்தும் நல்லதையே தான் செய்தேன். 


ஆனால் இறைவனுக்கு மட்டுமே தெரியும் என்று கூட!!


இவைதன் உணர உணர இன்னும் இவந்தனக்கு, ஆனாலும் ஈசன் மீது பக்திகள் பெருக்கெடுத்து ஓடியது.


ஓடியது ஆனாலும் ஈசன் மீது இருக்கும் அன்பு இன்னும் இவந்தனக்கு ஓயவில்லை. 


ஆனால் ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது. 


நிச்சயம் ஒரே வழி நம்பிக்கைத்தான்.


என் ஈசன் வருவான்!!! என் ஈசன் வருவான்!! என்று கூட. 


ஆனால் பின் யார்? என்று கூற!!! ஆனால் என் ஈசன் என்று வருவான் என்பதை கூட பலமாக சொல்லவில்லை. 


மனதிலே நினைத்துக் கொண்டிருந்தான்.


ஆனால் ஈசன் அனைத்தும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். 


ஆனால் ஈசனுக்கு தெரிந்துவிட்டது.


ஆனால் ஈசனோ அமைதியாக இவந்தனுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும் என்று கூட நினைத்தான். 


அதனால் மீண்டும் மீண்டும் எதை என்று, ஆனாலும் இவற்றின் தன்மையை உணர்ந்து உணர்ந்து. 


ஆனாலும் நிச்சயமாய் பின் அரசனும் பின் திருடனே !!!உந்தனக்கு இன்னும் (கடைசி) அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. 


இன்னும் எதையாவது வேண்டுகின்றாயா?


என்று கேட்க, நிச்சயம் இல்லை. 


இதனால் மீண்டும் ஒரே ஒரு ஆசைதான் இருக்கின்றது. 


என் ஈசனை யான் பார்த்துட்டு ஒரே முறை வந்து விடுகின்றேன் என்று கூற. 


இதனால் ஆனாலும் நிச்சயமாய் செல்!! என்று கூற!!!

(அனுமதி)


திரும்பவும் இங்கே வந்து விட்டான். 


ஈசனை பார்த்து, ஈசா!!!! யான் எப்படி, உயிரை என்னை எடுக்கப் போகின்றார்கள்!!


ஆனாலும் உந்தனை விட்டு பிரிய முடியவில்லையே ஈசா!!!


ஆனாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.


எந்தனக்கும் ஆறுதல் சொல்ல யாருமில்லையே!!! 


யான் எப்படி செல்வது?


அதனால் இந்த உலகத்தில் அனைவரும் என்னை திருட்டு பட்டங்கள் கட்டி இப்படி ஆக்கிவிட்டார்கள். 


ஆனாலும் நீயே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாய்.


ஆனாலும் நிச்சயமாய் உன்மேல் அன்பு, எதனை என்று கூற இவ் ஆன்மா பின் இறக்கின்ற பொழுது எங்கு செல்வது?


எதை அறிவது என்று கூற தெரியாமல் போய்விடுமே? ஈசா!!!!


எவை என்று கூற, அதனால் உன்னை மறக்காமல் இருக்க ஒரு மனம் கொடு என்று கூற. 


ஆனாலும் அப்பொழுது கூட ஈசன் கண் கலங்கினான்.


இப்படிப்பட்ட பக்திகளா?? என்று. 


=============================

# ஈசன் மீது பக்தி கொண்டவர்களை, நிச்சயம் சோதிப்பான்

=============================


அப்பனே அனைவருக்கும் சொல்கின்றேன்!!! ஈசன் மீது பக்தி கொண்டவர்களை, நிச்சயம் சோதிப்பான்!!! தாங்கிக் கொள்வானா??? என்று.


அதையெல்லாம் மீறி தாங்கிக் கொண்டால், நிச்சயம் உங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பேன் அப்பனே. 


இதனால் அவந்தனக்கு மகிழ்ச்சியாக ஈசனே திரும்பவும் உன்னை பார்க்க முடிய போவதில்லை.


இதனால் யான் சென்று வருகின்றேன் என்று கூற.


ஆனாலும் பின் அரசவைக்குள் நுழைந்தான். 


பின் நன்றாகவே எந்தனுக்கு பின் இதை என்று !!...ஆனாலும் யான் திருடன் தான் ஒத்துக் கொள்கிறேன் என்று இவன் மனதே சொல்லிவிட்டது. 


ஆனால் இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் இவன் தன் திருடன் இல்லை என்று கூட. 


இதனால் மக்கள் அனைவரும் உடனடியாக இவந்தனை பின் மரண நோக்கத்தில் (தூக்கு மேடைக்கு) எடுத்துச் செல்லுங்கள், எடுத்துச் செல்லுங்கள் என்றெல்லாம் கூக்குரலிட்டார். 


ஆனாலும் பின் இறைவன் எதை என்று கூற, !!! 


=============================

# அரசனுக்காக , ஈசனே வாதாட வந்த அதிசயம் 

=============================


அதனால் பின் ஓடோடி ஒரு மனிதன் வந்தான். எங்கிருந்தோ? வந்தான். இவந்தனுக்காக யான் வாதாடுவேன் என்று கூட. 


ஆனால் வாதாடிவிட்டான்

மக்களை. எதை என்று புரிந்து பின் வாதாடினான். 


முட்டாள் மக்களே!! அனைத்தும் செய்தானே இவ் அரசன். 


ஆனாலும் இவ் அரசனை போய் இப்படி சொல்லி விட்டீர்களே!!!!!


ஆனால் மேல் நோக்கி ஒரு அரசன் உட்கார்ந்து இருக்கின்றானே அவன் தான் திருடன் என்று. 


ஆனால் (மற்ற) அரசனுக்கு வந்தது கோபம்.  


அவை மட்டுமில்லாமல் உண்மையைச் சொன்னான் புலவர்களை பற்றி எல்லாம். 


ஆனாலும் இதை என்று கூற ஆனாலும் பின் யார் ?இவன்? ஒருவன்


எதை என்று கூறாமலே, ஒருவனை இவன் இவந்தனுக்கு உத்தரவா ? 


அரசனையே மிஞ்சிய பேச்சு பேச்சுகள்.


இவந்தனை தூக்கிலிட்டு உடனே பின் தூக்கிலிடப் போகின்றேன் என்று எவை என்று கூறாமலே அரசன் கூறிவிட்டான்.


ஆனாலும் நிச்சயமாய் அனைவரும் பிடித்தார்கள். 


அவன் யார்? தெரியுமா?

ஈசன் !!!! தான் என்பேன். 


நமச்சிவாயனே !! என்று.


இதனால்தான் சொல்கின்றேன். எதை என்று கூற அப்பொழுது நிச்சயம் பின் சுய உருவம் எடுத்து பின் யான் தான் பின் ஈசன்!!!! என்று கூற,


அனைவரும் மெய் சிலிர்த்து விட்டார்கள்.


எதை என்று கூற அப்படிப்பட்டவன் ஒரு எதை என்று கூற ஒரு ஒரு சாதாரண மனிதனுக்கே இறங்கியவன் ஈசன். 


இன்னும் எதை என்று கூற அதனால் மக்கள் (கண்களை) திறந்து  திறந்து திறந்து பார்த்ததில் ஒன்றுமில்லை. (கண்களைத் திறந்து பார்த்தல் சிந்தித்துப் பார்த்தல்)


திறந்து எதை என்று கூறாமலே இன்னும் மக்கள் ஈசன் இருக்கின்றானா??  இறைவன் இருக்கின்றானா???  என்றெல்லாம் கூறி.  


அதனால் ஈசன் என் பக்தனை இவ்வாறு சோதிப்பதா என்று கூற? 


அதனால் பின் அவ் திருடன் பட்டம் கட்டினார்களே!!! அவ்   பின் அவந்தனுக்கு மிக்க மகிழ்ச்சி.


ஈசனே வந்துவிட்டாயா!!  என்னை காப்பாற்றி விட்டாயா !!


போதும்!! எனக்கு ஏதும் தேவையில்லை!! 


நீயே!!


எதை என்று கூற அதனால் நிச்சயம் பல பல மனிதர்களையும் அங்கே சுட்டிக்காட்டினான் ஈசன். 


இதனால் உண்மை நிலையை உணர்ந்தான் எவை என்று கூற மீண்டும் அத்திருடனுக்கு அரச பதவிகள் வழங்கப்பட்டது. 


=============================

# அனைத்தும் வாரி வழங்கிய ஆதி ஈசனார்.

=============================


அனைத்தும் வாரி வழங்கினான் ஈசன்.


இதனால் எதை என்று கூற  இவ் எதனை என்று கூறாமலே!!!!



தற்போது நிற்கும் இருக்கும் செஞ்சிகளையும் இதை என்றும் கூற செய்து செய்து, இங்குள்ள அனைத்தும் செய்தவன் அவ் அரசனே!!!!


(செஞ்சி கோட்டைகளை)


தீர்மானித்துக் கொள்ளுங்கள்.(யார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்)


=======================================

(செஞ்சிக்கோட்டையை கட்டியவர்கள் அதாவது காகபுஜண்டர் மகரிஷி குறிப்பிடும் மன்னன் செஞ்சியர் கோன்… அல்லது ஆனந்த கோன்.. இவ் இரு அரசர்களின் ஒருவராக இருக்கலாம்!!... செஞ்சி கோட்டை 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்ற வரலாற்று தகவலும் சான்றாக உள்ளது


பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. செஞ்சியின் இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றை கூறும் மெக்கன்சி சுவடித்தொகுப்புகளில் இது தொடர்பான பல தகவல்கள் உள்ளன.


செஞ்சி நாயக்கர்களில் குறிப்படத்தக்கவரான பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் தற்போதைய செஞ்சிக்கோட்டை வடிவமைக்கபட்டது இதன்பிறகு 17 ஆம் நூற்றாண்டில் தான் தேசிங்கு ராஜா பட்டத்திற்கு வருகின்றார்)


(வாருங்கள் மீண்டும் வாக்கின் உள் செல்வோம்.)

=======================================


உங்களுக்கு யான் (யார் என்று )சொல்லத் தேவையில்லை!!


இதனை என்று கூற அறிய அதனால் அவந்தன் இங்கேயே ஒருநாள் நிச்சயமாய் பின் அனைத்தும் செய்துவிட்டு மக்களுக்காக!!!! இங்கேயே ஒரு ஞானி போல் பின் அமர்ந்துவிட்டான். 


இன்னும் அவனுடைய சூட்சமங்கள் இங்கே காணப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.


ஞானிக்கு ஞானியாகி விட்டான்!!


இதனால் அவன் அருளால் தான் இன்னும் மிஞ்சி உள்ளது என்பேன்.


தெரிந்து கொள்ளுங்கள்.  எதை என்று !!


ஆனாலும் இனிமேலும் நிச்சயம் அகத்தியன் அருளால் படிப்படியாக இத்தலம் மேற்படும் என்பேன்!!! மேன்மைகள் பெற்று இன்னும் ஈசனும் உதவி புரிவான் என்பேன்!!


சொல்லிவிட்டேன். 


அதனால் பக்திகளைப் பற்றியும் யான் சொல்லிவிட்டேன்!!


உண்மையான பக்தி இப்படித்தான் இருக்க வேண்டுமே தவிர!!!!, பின் ஈசன் மீது ஒரு பக்தி, மனிதன் மீது ஒரு பக்தி இருக்கக் கூடாது என்பேன். 


இதனால் எவ்வாறு மிச்சம் என்பதையும் கூட சொல்லிவிட்டேன்!!


=============================

# நிச்சயம் ஈசனை வணங்கினால் கைவிடமாட்டார்!!!

=============================


நிச்சயம் ஈசனை வணங்கினால் கைவிடமாட்டான்!!!


கை விடுவது போல்  இருப்பானே!!!! தவிர கடைசியில் மீட்டுக் கொள்வான். 


இதான் அப்பனே வழி!!


இன்னும் அகத்தியன் இத்திருத்தலத்தைப் பற்றி சிறப்பான வாக்குகளையும் இன்னும் பின் எதிர்நோக்கி காத்திருக்கின்றான்.


இதனால் வரும் காலங்களில் நிச்சயம் இதை தெரிவிப்பான் அகத்தியனும் கூட. 


நிச்சயம் யாங்கள் வந்துவிட்டோம் நிச்சயம் சில சில தீவினைகளையும் அகற்றி நிச்சயமாய் மேன்மை செய்ய வைப்போம்!!


=============================

# ஈசனிடத்தில் அன்புக்குரியவராக இருங்கள்!! போதுமானது. 

=============================


அன்பு அன்பு அன்புக்குரியவர்கள் எதை எதை என்று கூற ஈசனிடத்தில் அன்புக்குரியவராக இருங்கள்!! போதுமானது. 


இன்னும் என்னென்ன நடக்கப்போகின்றது?? என்று நீங்களே பாருங்கள். 


மீண்டும் வந்து சித்தர்கள் யாங்கள் நிச்சயம் உரைப்போம். 


=======================================

# அன்புடன் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு நிறைவு 

=======================================


ஆலயம் பற்றிய விவரங்கள் 


ஆலயம் தற்பொழுது சிமெண்ட் கொட்டகையில் அமைந்துள்ளது ஆலய திருப்பணிக்காக பொதுமக்கள் குழுவாக ஒன்று சேர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றனர். 


ஆலய குறிப்பு - Google Map Link


https://share.google/hFNOoKL4DiBEAGiRt



=======================================

வாக்கு  சுருக்கம்

இந்த அறிக்கை, விழுப்புரம் மாவட்டம் வளத்தி கிராமத்தில் உள்ள பாழடைந்த சிவன் கோவிலில் காகபுஜண்ட மகரிஷி வழங்கிய தெய்வீக உரையின் முக்கிய கருப்பொருள்களையும், நுண்ணறிவுகளையும் தொகுத்து வழங்குகிறது. ஆலயத் திருப்பணி தேக்கமடைந்திருப்பதற்கான அடிப்படைக் காரணம், சிவபெருமான் மீது முழுமையான நம்பிக்கை இல்லாததே ஆகும். சம்பந்தப்பட்ட மனிதர்கள், இறைவனை விட சக மனிதர்களையும், மாந்திரீகம் போன்ற உலகியல் வழிகளையும் நம்பியதால், இறைவனே அதிருப்தியடைந்து தடைகளை ஏற்படுத்தியுள்ளார் என்பதை இந்த உரை தெளிவுபடுத்துகிறது.

இதற்கான ஒரே தீர்வு, "இறைவா, நீயே அனைத்தும் செய்ய வேண்டும்; எங்களால் ஒன்றும் முடியாது" என்ற மனநிலையுடன் முழுமையாகச் சரணடைவதே ஆகும். உண்மையான பக்தி என்பது, கடுமையான சோதனைகளின் போதும் அசைக்க முடியாத அன்பையும் நம்பிக்கையையும் கொண்டிருப்பதாகும். இதை விளக்க, தன் மக்கள் மற்றும் புலவர்களால் துரோகம் செய்யப்பட்டு, அனைத்தையும் இழந்து, மரணத்தின் விளிம்பிற்குச் சென்றபோதும், சிவன் மீது கொண்ட நம்பிக்கையை மட்டும் இழக்காத ஒரு மன்னனின் கதை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இறுதியில், சிவனே நேரில் தோன்றி அந்த மன்னனைக் காப்பாற்றி, அவனுக்கு அனைத்தையும் மீண்டும் வழங்கினார்.

தற்போது, காகபுஜண்டரும் பிற சித்தர்களும் இவ்விஷயத்தில் தலையிட்டுவிட்டதாகவும், ஆலயத்தில் உள்ள தீய சக்திகளை அகற்றி, திருப்பணிகளைத் தாங்களே முன்னின்று மேன்மையாக நடத்தி முடிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். உண்மையான பக்தி மற்றும் முழுமையான சரணாகதி மட்டுமே தெய்வீக அருளைப் பெறுவதற்கான ஒரே வழி என்பது இந்த உரையின் மையச் செய்தியாகும்.

1. அறிமுகம்: தெய்வீக உரையின் சூழல்

விழுப்புரம் மாவட்டம், வளத்தி கிராமத்தில் உள்ள ஒரு காட்டில், பழங்காலத்தில் சிறப்புடன் விளங்கி, தற்போது சிதைந்து போன ஒரு சிவன் கோவிலில் காகபுஜண்ட மகரிஷி இந்த தெய்வீக உரையை வழங்கியுள்ளார். மனிதர்களின் தவறான நடவடிக்கைகளால் ஆலயம் பாழடைந்த போதிலும், ஈசன் கம்பீரமாக அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உரையின் பின்னணியில், கலியுகத்தின் இயல்புகள் விளக்கப்பட்டுள்ளன. கலியுகத்தில், நன்மைகளின் சக்திக்கு இணையாக தீய சக்திகளுக்கும் வலிமை இருக்கும். இதுவே, தெய்வீகத் தலங்களில் கூட தீயசக்திகளின் தாக்கம் ஏற்படக் காரணமாக அமைகிறது. இதற்கு உதாரணமாக, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் "மக்கள் சரியில்லை" என்ற காரணத்திற்காக, மீனாட்சி தேவியே ஒரு கும்பாபிஷேகத்தை நிறுத்தி வைத்த நிகழ்வும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இறைவனின் நாடகத்தின் ஒரு பகுதியாகவே ഇത്തരം நிகழ்வுகள் அரங்கேறுகின்றன என்றும், எப்போது தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஈசனே தீர்மானிப்பார் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

2. மையப் பிரச்சினை: ஆலயத் திருப்பணியில் ஏற்பட்ட தடைகள்

காகபுஜண்டரின் உரை, ஆலயத் திருப்பணிகள் தடைபடுவதற்கான பல முக்கிய காரணங்களை ஆழமாக அலசுகிறது. அவை வெறும் பொருள் அல்லது மனிதவளப் பற்றாக்குறை சார்ந்தவை அல்ல, மாறாக ஆன்மீக ரீதியானவை.

  • ஈசனை விடுத்து மனிதர்களை நம்புதல்: திருப்பணியில் ஈடுபட்டவர்கள், சிவபெருமானின் சக்தியை முழுமையாக நம்புவதற்குப் பதிலாக, சக மனிதர்களின் திறமையையும், வழிகாட்டுதலையும் பெரிதும் நம்பியுள்ளனர். "மனிதனை நம்புவது போல் நமச்சிவாயனை இந்நேரம் நம்பி இருந்தால் அவனே ஏதாவது ஒரு வழியை ஏற்படுத்தி இருப்பான்," என்று காகபுஜண்டர் குறிப்பிடுகிறார். இந்த அவநம்பிக்கையே தடைகளுக்கு அடிப்படைக் காரணம்.
  • ஈசனின் அதிருப்தி: பக்தர்களின் இந்த மனப்பான்மையால் ஈசனே கோபமும் அதிருப்தியும் அடைந்துள்ளார். "இப்படி எல்லாம் பக்தர்களா?" என்று ஈசன் எண்ணும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகள் இருந்ததால், அவரே சில தடைகளை ஏற்படுத்தியுள்ளார்.
  • தவறான வழிகள் மற்றும் மாந்திரீகம்: திருப்பணியை விரைவுபடுத்தும் நோக்கில், சிலர் மாந்திரீகம் போன்ற தீய வழிகளை நாடியுள்ளனர். இது ஈசனின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது. இறைவனுக்கே தீங்கு செய்ய நினைக்கும் அளவிற்கு மனிதனின் தரம் தாழ்ந்துவிட்டதாக காகபுஜண்டர் வருந்துகிறார்.
  • கலியுகத்தின் மனித இயல்புகள்:
    • பணத்தின் மீது பற்று: மனிதர்கள் பக்தியை விட பணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். "பணத்தையே குறியாகக் கொண்டு வாழ்ந்திருக்கின்றான் மனிதன்."
    • பொய் மற்றும் ஏமாற்றுதல்: உலகில் பொய் சொல்லிப் பிழைப்பு நடத்துபவர்கள் அதிகரித்துள்ளனர்.
    • தற்பெருமை மற்றும் அகந்தை: "யான் பெரியவன், அவன் சொல்வது தவறு" போன்ற ஈகோ மற்றும் ஒருவருக்கொருவர் மனக்குழப்பங்கள் நிலவுகின்றன. இது கூட்டு முயற்சிக்குத் தடையாக உள்ளது.

3. தீர்வு: முழுமையான சரணாகதியும் உண்மையான பக்தியும்

பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அதற்கான தெளிவான தீர்வையும் காகபுஜண்டர் முன்வைக்கிறார். அந்தத் தீர்வு, செயலில் அல்ல, மனப்பான்மையில் உள்ளது.

  • முழுமையான சரணாகதி: எந்தவொரு மனித முயற்சியும் இறைவனின் துணையின்றி வெற்றி பெறாது. எனவே, பின்வரும் மனநிலையுடன் இறைவனைச் சரணடைய வேண்டும்:
    • "நமச்சிவாயா!!!! நீயே தான் அனைத்தும்!!!! செய்து தர வேண்டும்."
    • "எங்களால் ஒன்றும் முடியாது."
    • "யாங்கள் ஒன்றும் பொம்மைகளே." இப்படி முழுமையாக ஈசனிடம் தங்களை ஒப்படைத்தால், நிச்சயம் மேன்மைகள் உண்டாகும்.
  • உண்மையான பக்தியின் இலக்கணம்: இறைவன் பக்தர்களிடமிருந்து பொருளை எதிர்பார்க்கவில்லை. அவர் கேட்பதெல்லாம் இரண்டே இரண்டுதான்:
    1. அன்பு: தூய்மையான, நிபந்தனையற்ற அன்பு.
    2. நம்பிக்கை: அந்த அன்பு, அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். "இறைவன் ஒன்றும் கேட்கவில்லை அன்பு மட்டுமே கேட்கின்றான். அதுவும் நம்பிக்கையோடு."
  • தெய்வீக சோதனைகள்: ஈசன் தன் மீது பக்தி கொண்டவர்களைக் கடுமையாகச் சோதிப்பான். அவர்களின் நம்பிக்கையின் ஆழத்தையும், உறுதியையும் சோதிப்பதற்காகவே இந்தச் சோதனைகள். "ஈசன் மீது பக்தி கொண்டவர்களை, நிச்சயம் சோதிப்பான்!!! தாங்கிக் கொள்வானா??? என்று."
  • ஈசனின் இறுதி மீட்பு: சோதனைகளின் போது இறைவன் தங்களைக் கைவிட்டுவிட்டது போல் தோன்றலாம். ஆனால் அது உண்மையல்ல. "நிச்சயம் ஈசனை வணங்கினால் கைவிடமாட்டான்!!! கை விடுவது போல் இருப்பானே!!!! தவிர கடைசியில் மீட்டுக் கொள்வான்." இதுவே இறைவனின் வழி.

4. ஓர் உயர் பக்தி கதை: அரசனின் அசைக்க முடியாத நம்பிக்கை

உண்மையான பக்தியின் தன்மையை விளக்க, காகபுஜண்டர் ஒரு மன்னனின் கதையைக் கூறுகிறார். இது ஒரு சரித்திர நிகழ்வாகவும், பக்திக்கு ஒரு உவமையாகவும் அமைந்துள்ளது. (இந்த மன்னன் செஞ்சிக் கோட்டைகளைக் கட்டியவனாக இருக்கலாம் என்று குறிப்புணர்த்தப்படுகிறது.)

  • பக்திமிக்க அரசன்: அந்தப் பகுதியை ஆண்ட ஒரு மன்னன், சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தான். அவன் மக்களுக்கு நீர்நிலைகள், மரங்கள், வீடுகள் எனப் பல நன்மைகளைச் செய்தான்.
  • சோதனைகளும் துரோகமும்: இருந்தபோதிலும், அவன் பல போர்களில் தோல்வியுற்றான். அவனிடம் இருந்த புலவர்களும், மக்களுமே அவனுக்குத் துரோகம் இழைத்து, அவனை நாட்டை விட்டுத் துரத்த முயன்றனர். அவன் மீது பைத்தியக்காரன், திருடன், இரக்கமற்றவன் எனப் பல பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.
  • சரணாகதியின் உச்சம்: அனைத்தையும் இழந்த நிலையிலும், மன்னன் ஈசனை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். "ஈசா!!!!! உன்னை யான் இழக்கவில்லையே என்று பின் ஈசனிடம் பின் கூற, ஈசனே கண்ணீர் விட்டான்." மரண தண்டனை விதிக்கப்பட்டபோதும், "உன்னை விட்டு பிரிந்து செல்கின்றேனே!!!!" என்பதற்காகவே அழுதான்.
  • தெய்வீகத் தலையீடு: அரச சபையில் மன்னனை அனைவரும் ஏளனம் செய்தபோது, அன்னை பார்வதி தேவி கோபத்தில் பொங்கி எழுந்து அவனைக் காப்பாற்ற விரும்பினாள். ஆனால், ஈசன் பொறுமையாக இருந்தார். இறுதியில், தூக்கிலிடப்படும் தருவாயில், ஈசனே ஒரு சாதாரண மனிதன் வடிவில் தோன்றி, மன்னனுக்காக வாதாடினார். அவர் புலவர்களின் துரோகத்தை அம்பலப்படுத்தி, உண்மையான திருடன் யார் என்பதை வெளிப்படுத்தினார். பின்னர், தன் சுய உருவத்தைக் காட்டி அனைவருக்கும் மெய் சிலிர்க்க வைத்தார்.
  • வெகுமதி: ஈசன், அந்த மன்னனுக்கு மீண்டும் அரச பதவியையும், இழந்த அனைத்தையும் வாரி வழங்கினார். அந்த மன்னன் பிற்காலத்தில் ஒரு ஞானியாக மாறி, இன்றும் அந்தத் தலத்தில் சூட்சுமமாக உலா வருவதாக காகபுஜண்டர் குறிப்பிடுகிறார்.

5. சித்தர்களின் வாக்குறுதியும் எதிர்காலமும்

காகபுஜண்டர், ஆலயத்தின் எதிர்காலம் குறித்து உறுதியான வாக்குறுதிகளை அளிக்கிறார்.

  • சித்தர்களின் வருகை: "யாங்கள் வந்துவிட்டோம்" என்று அறிவிக்கும் காகபுஜண்டர், தாமும் பிற சித்தர்களும் ஆலயத்தில் உள்ள தீய சக்திகளை அகற்றி, திருப்பணியை நிச்சயம் செய்து முடிப்பதாக உறுதியளிக்கிறார்.
  • அகத்தியரின் பங்கு: அகத்திய மாமுனிவரும் இத்தலத்தைப் பற்றி எதிர்காலத்தில் சிறப்பான வாக்குகளை வழங்குவார் என்றும், அவர் வழிகாட்டுதல் தொடரும் என்றும் கூறப்படுகிறது.
  • திருப்பணிக்கான நடைமுறை அறிவுரை: ஆலயத் திருப்பணி செய்பவர்கள், அடிக்கடி திருவண்ணாமலைக்குச் சென்று, அங்கு சித்தர்கள் வலம் வரும் சிவாலயத்தில் திருப்பணிக்காக யாசகம் கேட்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, சித்தர்களே மறைமுகமாக வந்து நிதி உதவி செய்வார்கள். இது திருப்பணிக்கு பன்மடங்கு உயர்வைத் தரும்.
  • இறுதி அறிவுரை: ஈசன் மீது மட்டுமே பக்தி இருக்க வேண்டும்; மனிதர்கள் மீது ஒரு பக்தி, ஈசன் மீது ஒரு பக்தி என இருக்கக் கூடாது. ஒருவருக்கொருவர் குழப்பம் கொள்ளாமல், ஈசனிடத்தில் அன்புக்குரியவர்களாக இருந்தால் மட்டும் போதுமானது. ஈசன் அதிவிரைவில் ஒரு நல்ல வழியைக் காட்டுவார் என்றும், இனி என்னென்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறி காகபுஜண்டர் தன் உரையை நிறைவு செய்கிறார்.


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!