அன்புடன் அகத்திய மாமுனிவர் - கோவையில் காகபுசண்ட மாமுனிவர் வாக்கு ( April 2024 ) - பகுதி 4
நமச்சிவாயனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் புசண்டனவன்.
இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-
சித்தர்கள் ஆட்சி - 422- கோவை - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 424- கோவை - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 425- கோவை - பகுதி 4
வாருங்கள் வாக்கின் உள் செல்வோம்.)
91. ( புண்ணியம் ) இதைச் செய்தாலே போதுமானது. அனைத்தும் கிடைக்கும். இப்பொழுது புண்ணியத்தை இறைவனாகவும் பாவித்துக் கொள்ளலாம்.
92. ( அனைத்து வினையைத் தீர்க்க ) அகத்தியனுக்கு ஒரு நொடி போதும்.
93. அகத்தியனோ மிக விளையாட்டுக்காரன். அறிவில் சிறந்தவன் இவ்வுலகத்தில் அவனைப்போன்று இல்லை. காப்பாற்றுவதில் கூட வல்லவன். அவனை நிச்சயம் மிஞ்சுவது இல்லை. உண்மைதனைக்கூட, அதாவது இறைவனையும் கூட அறிவியலையும் கூட ஒன்றாக இனைத்தவன். இதுதான் அது. அதுதான் இது என்று உலகத்தில் நிரூபித்தவன். ஆனால் அச்சுவடிகள் எல்லாம் எழுதி வைத்திருப்பான். ஆனாலும் ( சுவடிகள் ) அனைத்தும் எங்கெங்கோ சென்றுவிட்டது. அதை பயன் படுத்தி இப்பொழுது நவீன உலகம் என்றெல்லாம் ஏற்படுத்தி அதனால் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.
94. இயற்கை அழித்ததே முதல் தவறு. இயற்கைதான் இறைவன். ( கலியுகத்தில் ) தர்மம் தலை கீழாகும் போது அனைத்தும் அழியும்.
95. மனிதனாகப் பிறந்தால், உடம்பைப் பெற்றுக்கொண்டால் மனவேதனை வந்தே தீரும்.
96. ( புண்ணியங்கள் ) அதை விட்டு விட்டு பூஜைகள் செய்வது, அறிந்தும் எதை எதையோ செய்வது லாபமில்லை. நிச்சம் வாயில் மன்னைத் தின்பது போல்தான்.
97. நிச்சயம் அகத்தியன் எப்படி எல்லாம் மனிதர்களை திசை திருப்ப வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றான்.
98. நீங்கள் மட்டும் வந்து விட்டீர்கள். எங்களுக்கு நன்றாகச் செய்யவேண்டும். என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று. ஆனால் அகத்தியனே இவ்வுலகத்தையே பார்க்கக்கூடியவன்.
99. அறிந்தும் ஈசன் இட்ட கட்டளையை, பின் அதாவது பார்வதி இட்ட கட்டளையை நிச்சயம் தாய் , தந்தை இட்ட கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணியே நிச்சயம் செய்து கொண்டிருக்கின்றான். இதற்கு தகுதியானவர்கள் மனிதர்கள் நிச்சயம் தாய், தந்தையரை மதிக்கின்றீர்களா?
100. அறிந்தும் கூட ஈசனே, அறிந்தும் கூட “அப்பா, சத்தியத்தை திருப்பித் தந்துவிடுகின்றேன். வந்து விடு” என்று. ஆனால் “நிச்சயம் செய்தது செய்தது தான்” என்று அகத்தியன் பிடிவாதம்.
101. அதை மீறி மனிதன் இக்கலியுகத்தில் தாய் தந்தையருக்கு மதிப்பு கொடுக்காமல் என்னென்னவோ செய்வான். இதை நிச்சயம் அகத்தியன் பார்த்துக் கொண்டிருப்பானா என்ன? ( தாய் , தந்தையை மதிப்பதனாலேயே பல முன்னேற்றங்கள் கான இயலும். இதுவே முதல் கடமை. )
102. ( கர்மங்களை நீக்கும் ரகசியங்கள்) பல கஷ்டங்களை அறிந்தவன் , தெரிந்தவன் , அறிந்தும் உண்மைதனை உணராமல் இருந்தால் கூட ஓர் 5 அல்லது 10 நாட்களில் திருத்தலங்களில் கூட தங்கினால் அனைத்தும் ஒழிந்து போகும். ஆனால் மனிதர்கள் செய்த வினை இப்பொழுதெல்லாம் பூட்டி விடுகின்றார்கள். அவ்வளவு சக்திகள் அங்கங்கு இருக்கின்றது. ஆனால் அதை சரியாகவே மனிதன் , மனிதனே எதிரியாகின்றான் இவ்கலியுகத்தில். ( ஆலயங்களில் தங்கினாலே பல கர்மங்கள் , கஷ்டங்கள் நீங்கும். ஆனால் ஆலயங்களை பூட்டி விடுகின்றனர்.)
103. ஆனாலும் நீங்கள் அகத்தியன் சொல்லை நிச்சயம் கேட்டால் அகத்தியனே பின் ( ஆலயங்களில் தங்க ) உள்ளே அனுப்பிவிடுவான். காலத்தின் கட்டாயம்.
104. வருங்காலங்களில் அகத்தியனுடைய முதல் எண்ணம், பல எண்ணங்கள் இருந்தாலும் நிச்சயம் சில மூலிகைகளைக்கூட ஆங்காங்கு வளர்க்கவேண்டும். நிச்சயம் உங்களுக்கெல்லாம் இட்ட கட்டளை. பாவங்கள் போகும். இவ்வுலகத்தில் மற்றவர்களுக்கு நிழலாவது தரவேண்டும். அதைச் செய்யுங்கள் முதலில்.
105. நிச்சயம் இவ் ஆன்மா பின் ( இவ்வுலகை விட்டு ) பிரிகின்ற பொழுது ஐயோ சொந்த பந்தங்கள் என்றெல்லாம் , அப்பா, அம்மா என்று சொல்லி விட்டாலே அடுத்த பிறவி. அப்பொழுது என்ன சொல்ல வேண்டும்? இறைவா!!!!! என்று சொல்ல வேண்டும். அதற்குத்தான் நாங்கள் ஏங்கிக்கொண்டிருக்கின்றோம். இதனால்தான் பந்த பாசங்களை உடையுங்கள் என்று.
106. எங்கள் வாக்கை கேட்பதற்கும் தகுதி வேண்டும். ஆனால் உண்மை நிலை புரியவில்லையே!!!!!
107. உலகத்தில் பிறந்து விட்டாலோ ஒவ்வொரு பிரச்சினைகள் நீட்டிக்கொண்டே போகும். பிரச்சினைகள் தடுக்க வல்லது எது? ( பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்). அதற்கு என்ன செய்ய வேண்டும்? ( புண்ணியங்கள் செய்ய வேண்டும்). புண்ணியம் என்றால் என்ன? ( மனசாட்சிப் படி நடக்க வேண்டும்). மனசாட்சி படி யாரும் நடந்து கொள்வதில்லையே.
108. எங்கள் வழியில் வருபவர்கள் புண்ணியங்கள் செய்ய நிச்சயம் தூண்டினால் போதும். இறைவனையும் காட்டுவோம். அனைத்தும் கொடுப்போம் உங்களுக்கு.
109. தாய் தந்தை பேச்சைக் கேட்பதே இல்லை என்றாலும் அதுவும் ஒரு தீய செயல்தான் என்பதை மனதில் கொண்டு அதில் நிச்சயம் அதில் நீங்கள் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். இக்குழந்தையும் நிச்சயம் பின் ஒரு நாள் கெடும் என்பது. ( தாய், தந்தையை மதிக்காத, அவர்கள் பேச்சைக் கேட்காத குழந்தை நிச்சயம் கெடும். உங்கள் தாய், தந்தையைத் தெய்வமாக பாவித்துச் சேவை செய்தாலே புண்ணியம் மலையளவு பெருகிக்கொண்டே போகும் என்று உணர்க.)
110. ( தாய் தந்தை மீது ) சிறு வயதிலே கோபம் கொள்பவன் நிச்சயம் அனைத்தும் இழந்து விடுவான் என்று எழுதிக் கொள்ளுங்கள்.
111. தாய் , தந்தைக்கு துரோகம் செய்கின்றவர்கள், நிச்சயம் நோய்வாய்ப் படுவார்கள் என்று நீங்களே அறிந்து கொள்வதுதான்.
112. இவ்வாறு சொல்லியும் செய்யவில்லை என்றால், தான் தன் நிலைமைக்கு தானே காரணம்.
113. ஏன், எதற்கு, எதை என்று புரியாமல் இருந்தாலும், புரிந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அனைத்தும் கிடைக்கும். தர்மம் பின் தழைத்தோங்கட்டும் இவ்வுலகத்தில் அகத்தியனின் அருளால்.
114. இனிமேல் அகத்தியனிடம் எதற்காக நீங்கள் வருவீர்கள்? முதலில் பின் அகத்தியன் வாக்குகள் சொல்ல வேண்டும். அகத்தியன் அனைவருக்குமே வாக்குகள் சொல்ல வேண்டும். புண்ணியத்தைப் பெருக்கி இன்னும் அனைத்து குறைகளும் நீக்க வேண்டும் என்றால் பின் நீங்கள் அனைவருமே தர்மத்தைக் காக்க வேண்டும். தர்மத்தை நீங்கள் காத்தால் இச்சுவடி அவரவர் இல்லத்தில் வந்து , பின் முடிந்தால் நீங்களே படித்துக் கொள்ளலாம்.
115. அப்பனே சித்தர்களைப் பற்றி இவ்வுலகத்தில் தெரியாதப்பா. வருங்காலத்தில் தெரியுமப்பா பன்மடங்கு. சித்தனை அறிவதற்கும் , சித்தன் போக்கில் வருவதற்கும் புண்ணியம் அவசியம்.
116. சித்தன் வழியில் வந்து விட்டால் பேராதரவுடன் நிச்சயம் மோட்ச கதியை அடையலாம். யாங்களே சொர்கத்திற்கு அழைத்துச் செல்வோம். இல்லையென்றால் இங்கிருந்து ஆன்மா செல்லும் பொழுது, பின் அரக்கர்கள் அடித்து நொறுக்குச் சென்று கொண்டிருப்பார்கள். நிச்சயம் இவ்ஆன்மா பிரியும் பொழுது, கைகூப்பி நிச்சயம் இறைவனிடத்தில் பதில் சொல்லத்தான் வேண்டும். அதனால் இப்பொழுதே சொல்லி விடுகின்றேன் அனைத்தும்.
117. நரகத்தில் உள்ள மனிதர்கள் வேடமிடுவார்கள் வரும் காலங்களில். சொர்கத்தில் இருப்பவர்கள் பின் ( தன்னை ) வெளிக்காட்ட மாட்டார்கள். நரகத்தில் இருப்பவர்கள் புதுப்புது விசயத்தை அவை செய்தால் இவை நடக்கும், இப்படியே பின் பற்றுங்கள் என்றெல்லாம் வசப்பேற்றி ( வாழ்வார்கள் ) ஆனால் தர்ம நிலையை கற்பிக்க மாட்டார்கள் யாரும்.
118. தர்மத்தைக் கடைபிடிப்பது, தாய் தந்தையை மதிப்பது, பிள்ளைகள் அதாவது பெற்றோர்களை மதிப்பது, இறைவனை நாடுதல், அனைத்தும் இறைவனின் செயலே, அனைத்தும் இறைவன் கொடுப்பான், நம்பிக்கை, பின் எதையும் எதிர் பாராமல் வணங்குதல் - இதுதான் நிச்சயம் தர்மம்.
119. பிறருக்கு உதவி செய்தல், அனைவரும் நன்றாக இருக்க வேண்டிக்கொள்வது, பல பல அதாவது நிச்சயம் உயிர்களைக் காப்பது, பல வழிகளில் கூட நன்மைகள் செய்வது, நிச்சயம் வருங்காலங்களில் நிழல் தருவது போல் மரங்களை அமைப்பது.
120. ( ஏன் மரங்கள் அவசியம் அனைவரும் நட வேண்டும்?) நீங்கள் செய்த அதாவது ஒருவன் மரம் வளர்கின்றான் சிறு வயதில் இருந்து. நிச்சயம் அதுதன் அவ்வாறு வளர்ந்தால் நீங்களும் அதைப் போலவே வளர்வீர்கள் சொல்லிவிட்டேன். சில கர்மாக்களைக் கூட அது ஏற்றுக்கொள்ளும். ஆனாலும் மனிதனுக்குத் தெரிவதில்லையே. ( இது தெரியாமல் மனிதனோ) மீண்டும் மீண்டும் சொல்லி ஏமாற்றுகின்றான். புதிதாக ஒன்றும் சொல்வதே இல்லை மனிதன்.
( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால், April 2024 கோவையில் காகபுசண்ட மாமுனிவர் உரைத்த கேள்வி, பதில் வாக்குகள் தொடரும்….)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment