“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Tuesday, December 31, 2024

சித்தர்கள் ஆட்சி - 418 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 21

இறைவா !!!!! நீயே அனைத்தும்.

இறைவா!!!!! நீ நன்றாக இருக்கவேண்டும். 


அன்புடன் அகத்திய மாமுனிவர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 21

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தர்கள் ஆட்சி -  379 - பகுதி 1
சித்தர்கள் ஆட்சி -  381 - பகுதி 2
சித்தர்கள் ஆட்சி -  382 - பகுதி 3
சித்தர்கள் ஆட்சி -  383 - பகுதி 4 
சித்தர்கள் ஆட்சி -  389 - பகுதி 5
சித்தர்கள் ஆட்சி -  390 - பகுதி 6
சித்தர்கள் ஆட்சி -  391 - பகுதி 7
சித்தர்கள் ஆட்சி -  392 - பகுதி 8
சித்தர்கள் ஆட்சி -  393 - பகுதி 9
சித்தர்கள் ஆட்சி -  398 - பகுதி 10
சித்தர்கள் ஆட்சி -  400 - பகுதி 11
சித்தர்கள் ஆட்சி -  401 - பகுதி 12
சித்தர்கள் ஆட்சி -  402 - பகுதி 13
சித்தர்கள் ஆட்சி -  403 - பகுதி 14
சித்தர்கள் ஆட்சி -  404 - பகுதி 15
சித்தர்கள் ஆட்சி -  408 - பகுதி 16
சித்தர்கள் ஆட்சி -  414 - பகுதி 17
சித்தர்கள் ஆட்சி -  415 - பகுதி 18
சித்தர்கள் ஆட்சி -  416 - பகுதி 19
சித்தர்கள் ஆட்சி -  417 - பகுதி 20
சித்தர்கள் ஆட்சி -  418 - பகுதி 21

( மிக வேகமாக தனி வாக்குகள் தொடர்ந்தது. இவ்வளவு வாக்குகள் எடுத்துரைத்தும்,  பல அடியவர்கள் சுய நலமாக உடல் நலக் கேள்விகளை மீண்டும் கேட்க ஆரம்பித்தனர்)

நம் குருநாதர் :- அம்மையே ஏற்கனவே சொல்லிவிட்டேன் அம்மையே. யாருமே புரிந்து கொள்ளவில்லை. மீண்டும் மாயையில்… ( சுய நலமாக கேட்கின்றீர்கள்.) யாராவது ஒருவன் , யாராவது ஒருவள் கேட்கின்றார்களா என்ன? பின் அப்பா அனைத்தும் நீயே செய் என்று. 

ஆனாலும் கால் வலி, கைவலி, தொடை வலி, இடுப்பு வலி, தலை வலி, கண்கள் வலி   எவை என்று அறிய அறிய அம்மையே இவையெல்லாம் யான் கொடுப்பதில்லை. நிச்சயம் (இவையெல்லாம்)  அப்படித்தான் இருக்கும். யானே மாற்றினால்தான் உண்டு. விதியின் பாதையில்தான் நீங்கள் என்னென்ன தவறுகள் செய்திருப்பதை  எல்லாம் யான் எடுத்துக் கூறுவேன் ஒவ்வொன்றாக. பின் வரிசையில் நில்லுங்கள் ஏன் எதற்கு என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா வேண்டாம் அம்மா. எல்லாவற்றையும் சொல்லிவிடுவார்.

அடியவர் :- ஐயா ஒரு சிறப்புப் பள்ளி ஆரம்பிக்க ஆசை. 

நம் குருநாதர் :- அப்பனே ஆரம்பி.

அடியவர் :- ஐயாவோட ஆசீர்வாதம்.

நம் குருநாதர் :- அப்பனே நற்செயல்கள் செய்தால் யானே வந்து முன் நிற்பேனப்பா. இவை சொல்லிவிட்டேன் அப்பனே. 

அடியவர் :- ( மதுரை அடியவரைக் குறிப்பிட்டு, அந்த )  ஐயா தொழுநோய் பாதிக்கப்பட்டவருக்குக் கைங்கரியம் செய்கின்றார் என்று ( சில வருடங்களுக்கு முன் சித்தன் அருள் வலை தளத்தில் ) படித்தேன். ( அது போல் அடியேனும் செய்ய என்று கேட்கும் முன்னர் குருநாதர் அனைவருக்கும் பொது வாக்கு ஒன்றை உரைத்தார்கள்.) 

நம் குருநாதர் :- அம்மையே, அனைவருக்கும் சொல். முதலில் தானங்கள் செய்யச் சொல். நீர் தானங்கள் ஓர் மாதம் அல்லது ஈர் மாதம் வரை. பின்பு அனைவருக்குமே செப்புகின்றேன் அவரவர் விதியை. அனைவரிடத்தில் எடுத்துரை. 

சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.

அடியவர் :- ( உரைக்க ஆரம்பித்தார் ) 

நம் குருநாதர் :- அம்மையே அது மட்டும் இல்லாமல் அது போல் கொடுத்தால், அவரவர் விருப்பப்படி யானே செய்வேன் அனைவருக்குமே அம்மையே. கேட்டுவிடாதீர்கள் எதனை என்று சொல். 

அடியவர் :- ( உரைத்தார் ) ஐயா ஏதும் சுவாமியிடம் கேட்காதீர்கள். தர்மங்கள் செய்து புண்ணியங்கள் சேர்த்து வையுங்கள். ஏதும் உங்கள் கணக்கில் புண்ணியங்கள் இருந்தால்தான் சாமி செய்வாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

( தனி வாக்குகள் ஆரம்பம் ஆனது. அதில் உள்ள பொது வாக்கைக் காண்போம் இங்கு )

அடியவர் :- ( புண்ணியச் சேவையை,  பிறர் புரிந்து கொள்ளவில்லை என்று எடுத்து உரைத்தார். அதற்கு..) 

நம் குருநாதர் :- அம்மையே தன் கடமையை யார் ஒருவன் சரியாகச் செய்கின்றானோ இறைவன் பக்கத்திலேயே நிற்பான் அம்மையே. இப்பொழுதுதான் சொன்னேன் அம்மையே. சில தான தர்மங்கள் அதாவது நேர்வழியில் செல்கின்ற பொழுது பல உபத்திரங்கள் கூட, சில கஷ்டங்கள் வரும் என்று. 

யார் ஒருவன் சரியாகச் செய்கின்றானோ யான் என் கடமையைச் சரியாகச் செய்வேன் என்று , அவன்தன் அருகில் இறைவன் இருப்பான் அப்பா. இவள் மறந்து விட்டாளா என்ன? 

============

( வணக்கம் அடியவர்களே, புண்ணியங்கள் செய்பவர்கள் எதற்கும் தயங்காமல் ஆற்று நீர் போல ஓடி, ஓடி புண்ணியங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். புண்ணியம் செய்பவர்கள் மனம் கலங்காமல் புண்ணியப் பாதையில் செல்க. புண்ணியம் செய்பவர்கள் பின் வரும் திரைப்பாடலை நன்கு மனதில் நிறுத்தி உங்கள் சேவைகளைத் தொடருங்கள். 


வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும்

வையகம் இதுதானடா …..

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்.

வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்.

இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்.

இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்.

============

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

அடியவர் :- இறைப் பணியில் போகும் பொழுது , ஆன்மீக வழியில், நம் குடும்ப உறுப்பினர்களும் நம் உடன் இனைந்து வர வேண்டும். 

நம் குருநாதர் :- வர முடியாதம்மா. புண்ணியங்கள் இருந்தால்தான் அம்மையே. அடி கொடுத்தால்தான் திருந்துவார்கள் அம்மையே. நீ விட்டுவிடு. உன் கடமையைச் நீ செய். அவ்வளவுதான். இதனால்தான் சொல்லிவிட்டேன் அம்மையே. தூங்கிக் கொண்டிருந்தாயா என்ன? ஆன்மாவும் தனித் தனி என்று.

( இந்த வாக்கை மூன்று முறை படிக்கவும். அடியவர்கள் செய்யும் ஆன்மீக வழியில் அவர்கள் குடும்பம் புண்ணியம் இருந்தால்தான் வர இயலும். இல்லத்தில் இருந்து கொண்டே, அமைதியாகத்   தொடருங்கள்,  உங்கள் ஆன்மாவின் ஆன்மீக பயணத்தை.) 

அடியவர் 6 :- ( விளக்கம் அளித்தார்கள். ஒவ்வொரு ஆன்மாவும் தனித் தனி. ஆன்மாவுக்கு சொந்த பந்தங்கள் கிடையாது என்று. ஒவ்வொரு ஆன்மாவும் போராடி, போராடி இறைவனை அடைய வேண்டும். ) 

அடியவர் :- ( பத்து வருடங்களாக மத்திய அரசின் அதி உயர் நிர்வாக பதவிக்கு படித்துவருகின்றார். ஏதாவது ஒரு தடை. ஏன் முடியவில்லை என்று கேட்டதற்கு கருணைக்கடல் உரைத்த பொது வாக்கு )

நம் குருநாதர் :- அப்பனே, அம்மையே முயன்றால் முடியாதது இவ்வுலகத்தில் உண்டா?. அனைவரும் கூறுங்கள்?

சுவடி ஓதும் மைந்தன் :- முடியும் அம்மா. 

பிற அடியவர்கள் :- முயற்சியை அதிகப்படுத்துங்கள். 

அடியவர் :- ( அன்ன சேவைக்கு ஆசிகள் கேட்ட பொழுது ) 

நம் குருநாதர் :- அப்பனே அனைவருக்கும் சொல்கின்றேன் அப்பனே. முயற்சி எடுத்துக்கொண்டே வரவேண்டும் அப்பனே. சிறிய முயற்சிதான் பெரிய அளவில் நிற்கும் என்பேன் அப்பனே. நல்லதைச் செய்தால் எப்போதும் என் ஆசிகள் இருக்கும் அப்பா. தீயவை செய்தால் அங்கேயே  அழித்துவிடுவேன் யானே வந்து. 

அடியவர் :- ( வீடு கட்டுவதில் உள்ள சிரமங்கள் குறித்துக் கேட்ட பொழுது)

நம் குருநாதர் :- முயற்சி செய்தால் அனைத்தும் வெற்றியாகும் என்பேன் அப்பனே. அப்பனே பழமொழியும் சொல்லி இருக்கின்றார்கள். வீட்டைக் கட்டிப்பார் என்று. தெரியாமல் போய் விட்டதா இவந்தனக்கு? 


( நம் குருநாதர் கருணைக்கடல் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அருளால் March 2024 மதுரையில் நடந்த கேள்வி,பதில் வாக்குகள் தொடரும்….)


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


சர்வம் சிவார்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment