“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
6-August-2021 அன்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த வாக்கு:-
ஆதி ஈசன் பொற்பாதங்களை வணங்கி அகத்தியன் உரைக்கின்றேன் நல் முறையாக அனைவருக்கும் என் ஆசிகள்!
இந்த உலகம் இப்பொழுது அதர்மத்தை நோக்கித்தான் செல்லுகின்றது. அதர்மம் மிகுந்து விட்டது. அப்பனே நல்முறையாக ஈசனும் அதர்மத்தை அழித்து விட இன்னும் பல பரீட்சைகள் செய்வான் என்பேன்.
இனி நல்லவர்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ முடியும் என்பேன். தவறான பாதையில் செல்பவர்கள் அழிந்து போவார்கள் என்பேன்.
என் பக்தர்களுக்காக பிரம்மாவிடம் அதிகம் சண்டையிடுவது நான்தான். பிரம்மாவும், நல்முறையாக மனிதர்களுக்கு, அகத்தியா ஏன் இப்படி என்று கேட்க என்னையே வணங்கி விட்டார்கள் என்ன செய்வது! பாசம் அவர்கள் என்மீது காட்டும் பக்தியையும் அன்பையும் திரும்பவும் அவர்களுக்கு நான் காட்டுகிறேன். என் பக்தர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்று அவனை அடிக்கடி தொந்தரவு செய்கின்றேன்.
அப்பன்களே நல் முறையாக வாழுங்கள்!இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
நான் திரும்ப திரும்ப அதையே தான் கூறிக் கொண்டு வந்திருக்கின்றேன்.
நல் முறையாக திரிபலா, திரிகடுகு சூரணம், தினமும் அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதைத் திரும்பத் திரும்ப உரைத்துக்கொண்டே வந்திருக்கின்றேன் நிச்சயம் என் பக்தர்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன்.
நான் இப்பொழுதும் பூமியில்தான் வலம் வந்து கொண்டு இருக்கின்றேன். என்னுடைய பக்தர்களை ஒவ்வொருவரையும் பார்த்து நல்லது செய்து கொண்டே வந்து இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் புண்ணியரே!
பல பிறவிகளில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே என் பெயரை உச்சரிக்க முடியும் என்னை வணங்கவும் முடியும்.
இப்பொழுது உலகமே இருளில் இருந்தாலும் நிச்சயம் நல்ல மாற்றங்கள் உண்டு என்பேன். தர்மம் செழித்து மேலோங்கும் பொழுது அனைவரும் நன்றாக வாழலாம் என்பேன்.
அதர்ம செயல்கள் அதிகமாக அதிகமாக இறைவனின் சோதனைகளும் அதிகமாகும் என்பேன்.
சில மனிதர்கள், மனிதர்களின் ஆசையைத் தீர்க்க அதைச் செய்கிறேன், இதைச் செய்து தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். அவர்களெல்லாம் ஏமாற்றுக்காரர்கள். என்னுடைய அருள் இல்லாமல் சித்தர்களுடைய அருள் இல்லாமல் அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பேன். அவர்களை நம்பி நீங்கள் ஏமாற கூடாது என்பேன்.
இறைவனை நம்புங்கள், எங்களை நம்புங்கள். எங்களை நம்புபவர்களுக்கு நாளும் கோளும் எதுவும் செய்யாது என்பேன். நல்ல விதமாக வாழுங்கள் என் அப்பன்களே! என்னுடைய நல்முறையாக ஆசிகள்! மீண்டும் வந்து வாக்கு உரைக்கின்றேன்!
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment