“இறைவா !!!!! நீயே அனைத்தும்” இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா !!!!! நீயே அனைத்தும்!!!!"
"இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்"

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-


1.தர்மம் செய்வேன்
2.அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன்.
3.போட்டி, பொறாமைகள் நீக்குவேன்
4.அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன்
5.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன்
6.அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன்
7.அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்.
8.பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
9.பிறருக்காக உழைக்க வேண்டும்
10.பிற ஜீவராசிகளும் ( உயிரினங்களும் ) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும்.
11.அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே

( அடியவர்களே. இந்த மகிமை புகழ் அகத்திய மாமுனிவர் அருளிய உறுதிமொழி வாக்கினை சிரம்மேல் ஒவ்வொரு நொடியும் ஏந்தி, பிரம்மாவின் முன்பு தலை நிமிர்ந்து நமக்காக விதியை மாற்றஉத்தரவிடும் வண்ணம் அனைவருக்கும் உலகில் உள்ள 700 கோடி மக்களுக்குச்சென்று அடையும்வண்ணம் எடுத்துச் சொல்லுங்கள். )

மற்றவர்களைப்பற்றி எண்ணிப்பார் அப்பனே. மற்றவர்களை எண்ணி எண்ணி, தான் கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்று யார் ஒருவன் நினைக்கின்றானோ அவனிடத்தில் இறைவன் பிச்சை ஏந்துவான் அப்பா. பிச்சை ஏந்துவான் அப்பனே. என் பக்தர்களுக்கு இது தெரிய நிச்சயம் வேண்டும் அப்பனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) அன்னதானம் + (2) திருவாசகம் சிவபுராணம் + (3) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, தானங்கள் செய்க, அப்பனே, உன்னால் இயன்றவரை தானங்கள் செய்க. அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அப்பனே, அதுவே கோடி புண்ணியமாகும்.”


Thursday, February 1, 2024

சித்தர்கள் ஆட்சி - 323 : ஈரேழு உலகத்தையும் ஆளும் நமசிவாயன் ஆதி ஈசன் ராமேஸ்வரத்தில் உரைத்த வாக்கு (2021)


 “இறைவா!!! அனைத்தும் நீ”


ஈரேழு உலகத்தையும் ஆளும் நமசிவாயன் ஆதி ஈசன் ராமேஸ்வரத்தில் உரைத்த வாக்கு (2021)

நமச்சிவாயம் யான் இயம்புகின்றேன். 

பின் பின் மறைமுகமான பல இன்னல்களும் இவ்வுலகத்தில் வரும் என்பேன். மனிதரிடையே புத்தி நிரந்தரமாக நின்று விட்டது. அதனால் ஒரு சோதனை கொடுக்கலாம் என்றேன். நீங்களே பார்த்து விட்டீர்கள். 

யானும் வருடங்களாக இங்கு இருந்து இருந்து, பின் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். அவரவர் இஷ்டத்துக்கு ஏற்ப பணத்தைத்தான் மதிக்கின்றனர். ஆனாலும் நேரடியாக யான் வந்து நின்றாலும் அவன்தான் என்னையும் கண்டுகொள்வதே இல்லை.  இதற்குப் பெயர்தான் பக்தியா?

பக்தி செலுத்த கோபங்கள், தாபங்கள் விலக்க வேண்டும். என்றால்தான் என்னை அடையலாம்.

யான் நல்முறையாய் செய்வேன் என்று உணர்ந்து அகத்தியனும் பூமியில் சுற்றிக் கொண்டிருக்கின்றான், என்பேன். 

ஆனாலும் அகத்தியனை வழிபடு என்று சொல்லியெல்லாம், பொய், பித்தலாட்டங்கள். யான் ஏற்கனவே அகத்தியனுக்கு சொல்லிவிட்டேன். 

ஆனால் அகத்தியனோ, பார்ப்போம், என் பக்தர்கள் மெய்யானவர்கள், இவ்வுலகில் உண்டு என்றான். 

ஆனாலும் ஒவ்வொரு இடத்திலும் பார்த்தால், "ஐயோ" என்கிற நிலைமை அவன்தனுக்கு தோன்றுகின்றது. 

சிவனே!!! அப்பனே!!! என்றெல்லாம் என்னை பூ உலகிலிருந்து அழைக்கின்றான். ஆனாலும் பார்ப்போம் என்றுதான் உலா வந்து கொண்டிருக்கின்றான், அகத்தியனும். 

ஆனாலும், எவை என்றும், எதனை என்றும், மனிதனே, தன் இனத்தை, கீழ்ப்படுத்துவான் என்பேன். மனிதனின் புத்திகள் மாறும் இனி மேலும். ஆனாலும் ஒழுங்காக செயல்படமாட்டான். மனிதரும் இவை, எவை என்று தெரியாமல் வாழ்வார்கள். 

இதனை கண்டு யான் எத்தனை நாட்கள் பொறுத்திருப்பது. என் இடத்திலே வந்து கூட சில கேள்விகள் கேட்கின்றனர். ஆனாலும் ஒருவர் கூட என்னை வேண்டும் என்று கேட்பதில்லை. ஒரு இல்லோன் கூட இங்கு வந்து நிம்மதியாக வழிபட அனுமதிப்பதில்லை. 

அன்பை அன்றி வேறு ஒன்றை யாங்கள் எதிர் பார்ப்பதில்லை.

அப்பனே, இவ்வுலகில் உண்மையான பக்தியை விட பொய்யான பக்தியே நிலவுகின்றது. இத்தனையும் யான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். எவை என்று கூற, நிச்சயம் தண்டனை உண்டு என்பேன். 

இப்பிறவியிலேயே செய்த தவறுகளுக்கு தண்டனையை இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும் என்று விதி. யான் கட்டளை இட்டுவிட்டேன் நவகிரகங்களுக்கு. நவகிரகங்கள் விடாது என்பேன். ஒவ்வொருவரும் மனசாட்சிப்படி நடக்க நடக்க நன்மைகள் விளையும். தவறு செய்தால், அவன்தனுக்கு அப்பொழுதே தண்டனையை யானே கொடுப்பேன் என்றேன்.

பல கோடி ஞானியர்களும் திரிந்து கொண்டுதான் இருக்கின்றனர் இங்கே. இங்கு நிச்சயமாய் சித்தர்கள் ஆட்சி வரும். இங்கேயே பல ஞானியர்களும் தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இதனையும் (ராமேஸ்வரம்) பிடித்தமான ஸ்தலம் என்பதால், யானே தான் அமைத்துக் கொண்டேன். இதன் சரித்திரத்தை யாரும் சரியாக கணிக்கவில்லை என்பேன். 

எப்பொழுது ராமனும் சீதையும் இங்கு வருவார்கள் என்பதும் எந்தனுக்கு தெரியும். சித்திரை மாதத்தில் ராமனும், சீதையும் வந்து வணங்கி, பின் நல்முறையாய், இங்கே உறைவார்கள். ராமனுக்கு விடிவுகாலம் இங்கிருந்துதான் ஏற்பட்டது என்பேன்.

எமது ஆசிகள் அனைவருக்கும் உண்டு!

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

No comments:

Post a Comment