“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
(2021ஆம் ஆண்டு உரைத்த வாக்கு)
ஆதி இறைவனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்.
பேரன்புக் குழந்தைகளே, இனி வரும் காலங்களில் ஒருவருக்கும் ஒருவர் கூட ஒத்தாசை இல்லை என்பேன். என்பேன், எதனால் இப்படி நடந்து கொண்டிருக்கிறது என பல விடயங்களில் யான் சொல்லிக் கொண்டேதான் வருகிறேன். ஆனாலும், இந்த நிலைமையை மனிதன் பார்த்தால், எதனால் என்று கூறத்தெரியாமல் இருக்கின்றான்.
ஆனால், சிறிது கவனித்துப் பார்த்தால், தன் இந்த நிலைமைக்கு தானே காரணம் என புரிந்து கொள்வான். பின், எவை என்றும், எதன் மூலம் வருகிறது என்று யோசித்தால் தெரியும்.
இனிமேலும், திருந்துவதாக மனிதன் ஒரு பொழுதும் ஒத்துக் கொள்ள மாட்டான். ஆனாலும் பிறரை சரி செய்வான்.
அப்பனே! அதர்மம் ஒரு பொழுதும் நிலைக்காது என்பேன். அதனால்தான் தர்மமும் சிறிது ஓங்கட்டும்.
ஆனாலும் இப்புவியில் யான் இருந்து என்மக்களை காத்துக்கொண்டுதான் இருக்கின்றேன். ஆனாலும், அவர்களுக்கே கூட சில சமயங்களில், தீமைகள் நடந்து விடுகின்றது. இது எதனால் என்பதை கூட யான் முன்னே பார்த்துவிட்டேன். இத்தனையும் ஒற்று சமமாக பார்க்கின்றேன்.
சனி பலம் பெற்றவன், பல வழிகளிலும். ஆனாலும், ஈசனிடம் பல வரங்களை பெற்று, சனி நியாயாதிபதியாக இருக்கின்றான். அதனால்தான், அவன்தனுக்கு அனைவரும் பயப்படுகின்றனர்.
ஆனாலும், நியாயமாக, நீதியாக நடந்து கொண்டால் பயம் இல்லை என்பேன்.
ஆனாலும், எதனை என்று கூற? ஈசனும் மனம் மகிழ்ந்து அமைதியாக இருந்து விட்டான். இத்தனையும் சனி நிர்ணயித்து, பின்னர் அனைவருக்கும் கட்டங்களை வழங்கினான்.
ஆனாலும், யான் அவன்தனை சென்று பார்த்தேன். ஈசனே என்று கூட அவனை அழைத்தேன்!
சொல்லுங்கள் அகத்தியன் என்று கூட அவன் பதில் உரைத்தான், எதனால் என்று, ஏன் இந்த நிலைமை! பின் சனியும் சொன்னான்,
அகத்தியா! எதனால் என்பதை கூட யான் அறிந்தேன்! ஆனாலும், யான் 30 வருடங்கள் பார்த்துக் கொண்டேதான் இருந்தேன் மனிதனை. ஆனாலும். மனிதர்கள் செய்யும் செயல்கள் சரி இல்லை. சரி இல்லை என்பதுபோல், ஒழுக்கம் இல்லாமல் வாழ்கின்றனர் மனிதர்கள். உள்ளத்தில் ஒன்றும், பின் புறம் கூறுவதாக ஒன்றையும் செய்து கொண்டு, ஏமாற்று வேலையையும் செய்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். அதனிலும் பின் நிர்ணயித்து, பொய் கூறுதலும், பொறாமையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. நியாயங்கள் இல்லை, தர்மங்கள் இல்லை, ஆனாலும், யான் வந்து, பார்த்துக் கொண்டேதான் இருந்தேன். ஆனாலும் எதனை என்று கூற? என்வீட்டில் (மகரம்) யான் அமர்ந்துவிட்டேன். யான் நியாயாதிபதியாகவும் இருந்து, அனைவருக்கும் அவரவர்கள் தர்மத்தை செய்வதை பார்த்துத்தான் வரங்கள் வழங்குவேன், என்பேன், என்பதைப்போல் அவன்தனும் சொல்லிவிட்டான். நிச்சயமாய், அவன்தானும் தீமையை குறைப்பதில்லை என்று கூறிவிட்டான்.
ஆனாலும் ஈசன் கூட பின் அவனிடத்தில் சென்று எதனை என்று நிர்ணயித்து, பின் சனி கூறினான்,
“(ஈசனே) நீங்கள்தான் எந்தனுக்கு வரம் தந்தீர்கள். நியாயாதிபதி எப்பொழுதும், இறங்கிவிடக் கூடாது என்று கூட. யான் என் வீட்டில் அமர்ந்து கொண்டேன். பார்க்கின்றேன் ஒரு கையும் கூட. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனாலும் யான் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனாலும், எதை எப்பொழுது செய்வது என்று, பின் ராகு, கேதுவிடம் கூட உரையாடினேன். உரையாடிவிட்டு, பின் அவர்களும் ஒத்துக் கொள்ளவில்லை. எதனால் என்று பின் பார்த்தால், அவர்களும், அவரவர் வீட்டில் அமேந்து பல கட்டங்களை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.”
இது ஈசன் கட்டளை.
இன்னொரு சூட்சுமமும் யான் உரைக்கின்றேன், பரிபூரணமாக. கேட்டுக்கொள்ளுங்கள்.
ஈசன் மீண்டும் கட்டளையிட்டான், கிரகங்களுக்கு. யான் உந்தனுக்கு கட்டளையிடுகின்றேன். பின் எப்பொழுது, எதை செய்தாலும் உடனடியாக தண்டனை கொடுத்துவிடு. இதைப்போல் பின் நிறுத்தி, நிறுத்தி வைத்தல் கூடாது. மனிதர்கள் இச்சென்மத்தில் எந்த எந்த தவறுகளை செய்கிறார்களோ, அதற்கும் தண்டனைகளை வாரி, வாரி வழங்கு, என கிரகங்களுக்கு ஈசன் கட்டளையிட்டுவிட்டான்.
அதனால், மனிதர்களே, ஒழுங்காக வாழ கற்றுக் கொள்ளுங்கள், என்பதைப்போல் இருக்கின்றது.
இனிமேலும் ஒழுக்கம் இல்லாமல் வாழக்கூடாது என்பேன்.
பின் உலகிலே ஏன் இந்நோய்கள் வருகின்றது என்று பார்த்தால், எதனையும்/எதிலுமே பொருட் படுத்தாமல், மனிதன், நான்தான், நான்தான் என்று சென்று கொண்டிருந்தான். அத்தனையும் ஈசன் தடுத்துவிட்டான். பின் இப்பொழுது கூட சொல்கின்றேன்.
பின் நீதி கிடைக்கும் வரை, சனியும் எதையும் வாரி வாரி வழங்குவான்.
இந்த நோயும் (Covid) போகும் போகும் என கூறினாலும், அவரவர் உடலில் தங்கிவிட்டது. இதனை முன்பே யாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன். இந்நோய் புதிதாக இல்லை என்பேன். எவ்வாறு என்று நிர்ணயித்துப் பார்த்தால். மனிதன் வேறு வேறு பெயர்களாக வைத்துக் கொண்டுதான் இருக்கின்றான். பின் எதனை என்று நம்புவது. ஆனாலும் இது அறுநூற்று ஆண்டுகளுக்கு வந்து கொண்டேதான் இருக்கும். இருப்பினும், கிரகங்கள் தம் சொந்த இல்லத்தில் அமர்ந்து கொண்டு இன்னும் வாரி வாரி வழங்குவார்கள் என்பேன்.
மனிதர்களே ஒழுங்காக வாழக் கற்றுக் கொள்ளுங்கள், என்பேன். அவனவன் வேலையை ஒழுங்காக செய்தால் ஒன்றும் ஆகாது என்பேன்.
இனிமேலும் எதனையும் நம்பிவிடாதீர்கள். ஏமாற்று வேலைகளை செயாதீர்கள் என்பேன். பின் தெரிந்தே செய்தால், கிரகங்கள், உடனேயே நோய்களை ஏற்படுத்தும்.
இப்பொழுதே எச்சரித்து விடுகின்றேன். யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என்பேன். அவன் பெரும் சித்தனாகக்கூட இருக்கட்டும் என்பேன். அப்பனே! இனி எதையும் தவறு செய்துவிடாதீர்கள் இனியும்.
அன்பே தெய்வம் என அன்றே கூறி சென்றுவிட்டான். இறைவனிடம் அன்பை செலுத்துங்கள். அது போதும்.
இனி வரும் காலங்களில் இன்னும் நோய்கள் வரும். அதனையும் நேர்கொள்ள மூலிகை மருந்துகளை கூறிவிட்டேன். அவைகளை உண்டு உங்களை காத்துக் கொள்ளுங்கள், என்பேன். இனிமேலும் பல சித்தர்களும் வருவார்கள் என்பேன். தர்மத்தை நிலைநாட்ட, ஜீவ காருண்யத்தையும் பிடித்துக் கொண்டால் ஒரு குறையும் வராது.
ஒன்றை மட்டும் உரைக்கின்றேன். தர்மத்தை, தர்மத்தின் பாதையில் நின்று செய்யுங்கள். உந்தனுக்கு ஒரு குறை வந்தால் கூட எந்தனிடத்தில் கேள். அதற்க்கு யாம் பதிலளிக்கிறேன்.
மனிதர்களை பார்த்தால், தர்மம் செய்து வாழ்வது போல்தான் இருக்கின்றது. ஆனாலும், என் பெயர் சொல்லி, சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையானவர்கள் யாரும் இங்கில்லை. நான் சித்தன் என்று கூறிக்கொண்டிருந்தால், சித்தர்களே அவனை அழிப்பார்கள்.
அதனால். யாங்கள் போட்ட பிச்சையில்தான், நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். அதனால் அப்பனே! எதையும், யான் செய்கின்றேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லிவிடாதீர்கள்.
அப்பனே, என்னை வைத்து பிறரை ஏமாற்றிவிடாதீர்கள். பாவம் அது என்று கற்றுக்கொள்ளுங்கள். வாழக் கற்றுக்கொள்ளுங்கள். எதனையும் கூறிவிடாமல் வாழ்வது நலம் என்பேன்.
அப்பனே, உண்மையை கூறிவிட்டேன். நல்லபடியாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள், வாழுங்கள்.
சனியின் பார்வை குறைவதும் இல்லை என்பேன். அதனால், எவை என்று கூற, சனியும் நியாயாதிபதியாக இருந்து, நீதிபதியாக, அவன் ஆட்டத்தை தொடங்குவான். நான் என்ன துரோகம் செய்துவிட்டேன், எனக்கு ஏன் வந்தது என்று கூட நீங்கள் ஆராயலாம். இஜ்ஜென்மத்தில் செய்த தவறுகளை ஆராயுங்கள். அதனால்தான் சனி தண்டனையை வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
ஆனாலும், எம்மக்களை யான் காப்பாற்றுவேன், நிச்சயமாக. மறுபடியும் வாக்கை கூறுகின்றேன் - பத்து நாட்கள் பொருத்தே.
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
No comments:
Post a Comment