மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Friday, January 12, 2024

சித்தர்கள் ஆட்சி - 293 : அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - “ஏன் இறைவன் மனிதனுக்குத் துன்பங்கள் தருகின்றார்?”


 

“இறைவா!!! அனைத்தும் நீ”


உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 


அப்பனே இன்னும் இன்னும் அநியாயங்கள் நடக்குமப்பா!! இக்கலியுகத்தில் அப்பனே.


அப்பனே சபரிநாதன்  கூட கோபப்பட்டு விட்டால் அப்பனே அடித்து நொறுக்கி விடுவானப்பா!!!! 

கலியுகத்தில் அப்பனே இதை நீங்கள் நிச்சயம் பார்க்கலாம் என்பேன் அப்பனே!!!!

அதாவது இவ் சபரி தன்னிலே இருந்து யான் கூறுகின்றேன் அப்பனே!!!! 

அப்பனே ஆனாலும் தெய்வங்கள் உண்மையில்லை என்றெல்லாம் சொல்கின்றான் அப்பனே.

ஆனாலும் அப்பனே உண்மை உள்ளவை எதை என்று அறிய அறிய அப்பனே பக்குவங்கள் துன்பங்கள் பட்டால் தான் தெரியுமப்பா!!!

துன்பங்கள் படாமல் ஒன்றும் தெரியாதப்பா!!!

அதனால் துன்பங்கள் கொடுத்து கொடுத்து அப்பனே பக்குவங்களையே ஏற்படுத்துகின்றான் அப்பனே இறைவன். 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!


No comments:

Post a Comment