“இறைவா!!! அனைத்தும் நீ”
உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:-
அடியவர்:- நிறையப் பேர் மனசுக்கு வருத்தப்படுவது போல் செய்கின்றனர். மனசுக்குக் கஷ்டமாக உள்ளது. ( இந்த அடியவர் முழுமையாகப் புண்ணியச் சேவையில் குரு வழியில் செயல்படுபவர். )
குருநாதர்:- அம்மையே இதனால்தான் யான் சொன்னேன். அம்மையே இது கலியுகம் என்பேன். விசித்திரமானது தான். ஆனாலும் இங்கு யானே இருக்கின்றபொழுது, ( உங்களைக் குறை சொல்லும்) அவர்கள் எல்லாம் எதை என்று கூற என் காலடியில்தான் இருக்கின்றார்கள். எந்தனுக்குத் தெரியும் எப்படி அவர்களை எதை என்று அறிய , எங்கு எவை என்று அறிய அறிய பின் எதை என்று அறியாமலே பின்..
ஆனாலும் உயர்வான இடத்திற்குச் சென்று அடையும் போது உயர்வானவர்களே நல் மனதுடையவர்களே நம்மிடையே வருவார்கள். ஆனாலும் தாழ்வான எதை என்று அறிய அறிய இடத்திற்குச் செல்லும் பொழுது அவர்களே மனக்குழப்பத்தை ஏற்படுத்தி அவர்களே தாழ்வானவற்குப் போய்விடுவார்கள். இதுதான் ரகசியம் என்பேன்.
( குருநாதர் அடியவர்களே, உங்கள் புண்ணியச்சேவைக்கு இந்த வாக்கு மிக்க தைரியமூட்டும் வாக்கு. குருநாதர் பாதங்களில் உங்கள் மனக்கவலையை விட்டு உங்கள் புண்ணியச் சேவையைத் தொடருங்கள். உங்கள் உதவிக்குப் பல கோடி பேர், ஜீவராசிகள் காத்துள்ளனர். உதவிகளை விதைத்துக்கொண்டே செல்லுங்கள். அனைத்தும் குருநாதர், சித்தர்கள் அழகாக அமைத்துத் தருவார்கள். கவலை வேண்டாம். வாழ்க உங்கள் சேவை. )
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment