“அனைத்தும் இறைவா!!!!! நீ”
அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் ஓர் அடியவர் இல்லத்தில் உரைத்த வாக்கு 5.செப்டம்பர்.2023
ஆதி மூலனை மனதில் எண்ணிச் செப்புகின்றேன் அகத்தியன்.
அப்பனே , அம்மையே எம்முடைய ஆசிகள் நலன்களாக்க் கூடிக்கொண்டு போகும். போகும் என்பேன் ஆனாலும் சில சில வருத்தங்கள் மனக்குழப்பங்கள்…
ஆனாலும் இவை எல்லாம் வருவது இயல்பே. இவை எல்லாம் தாண்டிச் சென்றால்தான் நிச்சயம் பல வழிகளிலும் கூட உண்மை நிலைகளைக்கூட பின் அறிந்து அறிந்து அதாவது உண்மை நிலையை எளிதில் அறிந்து கொள்ளலாம்.
ஆனால் சிறிதளவாவது நிச்சயம் பின் அதாவது இறைவன் கஷ்டங்கள் கொடுக்காவிடிலும் கூட நிச்சயம் பின் உண்மை நிலையை அதாவது ஞான வழியை நிச்சயம் பின்பற்றலாகாது.
இதனால்தான் நிச்சயம் யானே இருக்கின்றேன். அதனால்தான் வாக்குகள் எப்பேர்பட்ட அதாவது எப்படி, பின் எங்குக் கொடுக்க வேண்டும் என்பவை எல்லாம் யான் உணர்ந்திருக்கின்றேன்.
அதனால்தான் எவை என்றும் அறியாமலே எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்பவை எல்லாம்.
யான் கூட எவை என்று அறிய அறிய நீங்கள் அனைவருமே ஏதாவது ஒரு விதத்தில் உண்மைகள் அதாவது புரிந்து உதவிகள் அங்கும் யான் இருந்து உங்கள் பக்கத்திலேயே கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.
இதனால் யான் உங்களுக்கு என்ன கூறுவது. நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்.
அதனால்தான் சில சில வழிகளில் கூட உண்மை நிலைகள் இன்னும் இன்னும் செல்லச் செல்ல சில வழிகளிலும் கூட சில சில கஷ்டங்களைக் கொடுத்தாகினும் நிச்சயம் எப்படி இருக்கின்றார்கள் என்பதை எல்லாம் பக்குவப்படுத்தவே யான் சில சோதனைகளும் செய்தாலும் நிச்சயம் எளிதில் அனைத்தும் கொடுத்து விடுவேன். கவலைகள் இல்லை.
ஆனாலும் விதியில் போராட்டங்களும் அறிந்தும் மாறி மாறி வருவது இயல்பு. அவை எல்லாம் நிச்சயம் மாற்றி அமைத்து , மாற்றி அமைத்துப் பக்குவப்படுத்தி அழைத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றேன்.
இதனால் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்.
ஆசிகள் என்பதைவிட எதை என்றும் பொறுத்துப் பொறுத்து அதனால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்தையும் கூட யான் அருகில் இருந்தே கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றேன்.
நிச்சயம் அதனால்தான் அறிந்தும்கூட என் பக்கத்திலேயே இருப்பவர்களைக்கூட யான் கவனித்துக்கொள்ள மாட்டேனா என்ன? பின் அவ் நம்பிக்கை உங்களுக்கு இல்லையே? கேட்டால்தான் யான் சொல்வதா?
அதனால் நிச்சயம் நீங்கள் கேட்டுப் பெறத்தேவையே இல்லை. எப்பொழுது எதைச் செப்ப வேண்டும்?. எங்கு செப்ப வேண்டும்? என்பவை எல்லாம் யான் நிச்சயம் வாக்குகளாக ஏன், எதற்காக இப்பிறவிகளெல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் அறியாமலும் வந்து விட்டீர்கள்.
இதனால் நிச்சயம் இப்பிறவியின் ரகசியத்தை எல்லாம் ஓர் நாள் உரைப்பேன். அதனால்தான் கவலைகள் இல்லை.
பின் அனைத்து குருமார்களின் ஆசிகளைக்கூட உங்களுக்குப் பெற்றுத்தந்தேதான் கொண்டிருக்கின்றேன். ஆனாலும் அறிந்தும் கூட இருப்பினும் சில சில வினைகள்.
ஆனாலும் மனிதனாகப் பிறந்து விட்டாலே சில வினைகள். ஏன், எதற்காக என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் எதோ ஒரு ரூபத்தில் மனிதனை பின் கவலைகள் கொள்ளும். ஆனாலும் அதைக்கூட யான் பார்த்திருக்கின்றேன் உங்கள் அருகில் இருந்து.
ஆனாலும் அதைக்கூட மறுகணமே நீக்கி உள்ளேன்.
( புண்ணிய வழியில் செல்லும் அடியவர்களே, பின் வரும் வாக்கு தர்ம, புண்ணிய வழியில் வெற்றி நடை போட்டு என்றும் புண்ணிய வழியில் செல்லும் அடியவர்களுக்கு என்று உணர்ந்து , நன்கு உள் வாங்கிப் படித்து உங்கள் மனக் கவலைகளை, பிறர் உங்களைப் பற்றிக் கூறும் குறைகளைத் தூக்கி வீசி எறிந்து , தைரியத்துடன் முழு வேகத்தில் புண்ணியப் பாதையில் உங்கள் பயணத்தை இன்னும் வேகமாக்கிச் சென்று மக்கள், ஜீவராசிகள் சேவையில் மகத்தான மாபெரும் வெற்றி வாகை சூடுங்கள்.)
ஆனாலும் இதனால் பின் எவர், எப்பேர்பட்டவர்கள், இன்னும் ( உங்கள் சேவைகளைக் குறை கூறும்) பேச்சுக்கள் இவை எல்லாம் (மற்ற மனிதர்களிடம் இருந்து) வந்த வண்ணம் (இருக்கும்).
ஏனென்றால் நிச்சயம் உலகத்தில் அறிந்தும் அறியாமலும் கூடப் பிறந்து விட்டு , ஆனால் எப்படி எப்படி எல்லாம் (கர்ம வழியில்) வாழ்ந்தாலும் , இப்படி எல்லாம் (தர்ம , புண்ணிய வழியில்) வாழ்ந்தாலும் மனிதனின் பேச்சுக்கள் நிச்சயம் எடுபடாது.
மனிதன் ஏதோ ஒன்றைக் குறை கூறியே சென்று கொண்டிருப்பான். இதுதான் இவ்வுலகம்.
அவை எல்லாம் நிச்சயம் சாதித்து பின் இருக்கின்றான் அகத்தியன் என்றெல்லாம் நிச்சயம் இறைவன் இருக்கின்றான் என்பவைப் பின் நம்பி பின் நம்தன் அதாவது (பிறருக்குச் சேவை என்ற) கடமையைச் சரியாகச் செய்து வந்தால் இதைத்தான் யான் செய்வேன். யார் எதைச் சொன்னாலும் ஆம் எதை என்று அறிந்து பின் இறைவன் இருக்கின்றான். எந்தனுக்கு இறைவன் பக்க பலமாகத்தான் இருக்கின்றான். நான் தர்மத்தைத்தான் கடைப்பிடிக்கிறேன். இதனால் நல்லதாகவேதான் நடக்கும் என்று யார் ஒருவன் மனதில் எண்ணி எண்ணி பின் தனக்குப் போராட்டங்கள் வந்தாலும் ( மன உறுதியுடன் விடாமல் தர்மத்தின் வழியில் ) சென்று கொண்டிருக்கிறானோ, அவனுக்கு இறைவனே வழிகள் காட்டுவான்.
தர்மத்தில் பின் வழிகளில் செல்ல செல்ல ஆனாலும் குழப்பங்களும் போராட்டங்களும் வரும். இது இயல்பே.
அவை எல்லாம் தட்டிச்சென்று பின் எவை என்று அறிய அறிய பின் அதாவது பின் ஆறு, ஆற்றிலே அதாவது நீர் சரியாகப் போய்க் கொண்டே இருக்கும். எத் தடைகள் வந்தாலும் பின் அடித்து நொறுக்கிச் செல்லும்.
அதுபோலத்தான் தர்மம் செய்யும் பொழுது பின் பல தடங்கள் , இன்னல்கள் வரும் பொழுது பின் அடித்து நொறுக்கிச் சென்றால் கடைசியில் இறைவன் பாதையில் அடைந்து விடலாம்.
இதனால் பின் தர்மம் செய்பவர்களுக்குக் கூட சில தடைகள் , தாமதங்கள் மனக்குழப்பங்கள் எவை என்றும் அறியாமலே வரும்.
இவையெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட எப்படிப் பட்டு எதை என்றும் அறிய பின் (ஆற்று) நீரைப்போலச் சென்று கொண்டிருந்தால் நிச்சயம் ஓர் நாள் இறைவனிடத்தில் சரணடைந்து பின் மோட்ச கதியை அடைந்து விடலாம்.
“””””””””இறைவனே அனைத்தையும் செய்வான்.””””””””
இதனால் எப்பொழுது பின் வாக்குகள் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் யான் சொல்வேன்.
ஆசிகள். ஆசிகள் அனைவருக்குமே!!!!!
(வாக்கின் முடிவில் அடியவர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அவ் கேள்வி பதில்களை இங்கு காண்போம். வாருங்கள் புண்ணியப் பாதையில் வெற்றி நடை போடும் அடியவர்களே!!!)
அடியவர்:- லோபாமுத்ரா அம்மையும், அகத்தியர் அய்யாவும் வாக்கு இனைந்து சொல்வது எப்போது ஐயா?
குருநாதர்:- அறிந்தும் அறிந்தும் அம்மையே என்றும் அறிய அறிய திடீர் திடீர் என்று கூற ஆனாலும் அம்மையே நிச்சயம் உண்டு. அம்மையே எதை என்றும் அறிய அறிய அம்மையே பின் நீயே அம்மையே மேற்கல்வி படிப்பதற்கு அம்மையே சிறிது சிறிதாகப் படித்துத்தான் மேற்ச்செல்கின்றாய் அம்மையே. அதுபோலத்தான் சிறுகச் சிறுகச் சொல்லி அமைய அனைத்தும் தெளிவுபடுத்துகின்றேன். பொறுத்திருக.
நாடி அருளாளர்:- கவனியுங்கள். நீங்கள் கேள்வி கேட்ட உடன், உடனே வாக்கு வருகின்றது.
(இறை அருளால் குருநாதர் ஆசியால் இவ் அடியவர் மகத்தான அன்னதான சேவையில் முழுவதும் ஈடுபட்டு உள்ளார் என்பதை இங்கு அறியத் தருகின்றோம்.)
அடியவர்:- மகா குரு, ஈசனுக்கும், பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் மேல் உள்ள அகத்தியப் பெருமான் இந்த இல்லத்தில் வந்து ( வாக்கு உரைத்தற்கு நன்றி என்று சொல்லுவதற்கு முன்பே)
குருநாதர்:- அப்பனே எதை என்று அறிய அறிய யார் மனது மனது அப்பனே எவை என்று கூற நேற்றைய பொழுதில் சொல்லிவிட்டேன் அப்பனே.
(4.9.2023 அன்று மதுரையில் உரைத்த மகிமை புகழ் மகத்தான வாக்கு. இதனையே இங்கு அகத்திய பிரம்ம ரிஷி குறிப்பிடுகின்றார்கள். இந்த மகத்தான வாக்கின் பதிவுகளைக் கீழ்க் கண்ட பதிவில் படித்து, அனைவருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். அனைத்து இனைய தளங்களிலும் பதிவிட்டு முதல் தரப் புண்ணிய சேவை செய்திடுங்கள்.
https://siththarkalatchi.blogspot.com/2023/12/265.html?m=0
Facebook, Twitter, Instagram முதலிய அனைத்து தளங்களிலும் பதிவிட்டு முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். )
இவையெல்லாம் ஒரு முறை அனைவருமே கேளுங்கள் அப்பனே.
நல்லவிதமாக அனைத்தும் அப்பனே அதிலே தெளிவு எதை என்றும் அறிய அதனால் அப்பனே எவை என்று அறிந்து அறிந்து உங்கள் கடமையை. ( கடமை = பிறருக்குச் செய்யும் சேவை)
நீங்கள் செய்து கொண்டிருந்தால் யானே உங்களிடத்தில் வந்து அப்பனே வாக்குகள் கூறுவேன் அப்பனே. இதுதான் புண்ணியம் அப்பா.
அடியவர்:- இந்தப் பிறவியில் குருநாதருடைய திருவடியிலேயே சேவை செய்யும் பாக்கியம்….
குருநாதர்:- அப்பனே கவலையை விடு. அப்பனே யான் இருக்கின்றேன் அப்பனே. யானேதான் உனை அழைத்தேன். நீ வரவில்லை. அப்பனே அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே. அப்படித்தான் அப்பா. நீங்கள் தேடி என்னை வரவில்லை அப்பனே. யான் தான் அப்பனே ஏதாவது ஒரு கஷ்டத்தை வைத்து என் இடத்தில் வைத்திருக்கிறேன் அப்பனே.
அடியவர்:- ஐயா நாங்க கஷ்டத்திலேயே இருந்து கொள்கின்றோம்.
குருநாதர்:- அப்பனே எது என்பதை அறிய அனைத்தும் அப்பனே நீக்குகின்றேன். கவலைகள் இல்லை. அப்பனே நன்மைகள் ஆசிகளப்பா.
அடியவர் 2:- ஐயா (அன்ன) சேவை செய்யும் சமையலில் எதுவும் குறை இருக்கின்றதா?
குருநாதர்:- அப்பனே இவ்வளவு நேரம் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் அப்பனே? நீங்கள் செய்யும் அனைத்திலும் எவை என்று புரியாமல் யான் அருகிலேயே இருப்பேன் அப்பனே.
(அகத்திய பிரம்ம ரிஷி ஆசிகளுடன் இவ்நாடி வாக்கு முற்றே!)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment