மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Tuesday, November 14, 2023

சித்தர்கள் ஆட்சி - 229 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 5-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 25


பகுதி - 25


“அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 25 )


இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்

https://siththarkalatchi.blogspot.com/2023/11/228-5-9-2023-24.html?m=0

குருநாதர்:- அம்மையே எது என்று அறிய அம்மையே பற்று எதுனுடைய அறிய அறிய அம்மையே பின் எதைப் பற்றிக் கொள்ள வேண்டும் முதலில் அம்மையே?


அடியவர்:- பற்றற்றவன் திருவடியை


குருநாதர்:- அம்மையே  யார் பற்றற்றவன்?


அடியவர்:- இறைவன்


குருநாதர்:- தெரிகின்றதா? ஆனாலும் இதில் அர்த்தமும் உள்ளது. இறைவன் எவை என்றும் அறிய திருவாசகம் இன்னும் எதை எதையோ இன்னும் இதிகாசங்கள் அதில் இருக்கும் சரியான வழியெல்லாம் எடுத்துக் கொண்டு பின் (இதன் வழியில் நீங்கள் ) நடந்தால் அது தான் பற்று. இல்லை என்றால் அமையே வெற்று.


அடியவர்:-  சித்தன் அருள் வலைதளத்தில் இருக்கக்கூடிய எல்லா விசயங்களையும் மக்களுக்கு எடுத்து உரைக்கலாமா? 


குருநாதர்:- அப்பனே இவ்வளவு நேரம் அதனால்தான் மனிதனை அறிவு கெட்டவன் என்று கூற அப்பனேஅதை  மக்களுக்காகவே அதாவது சேவை செய்வதற்காகவே அப்பனே யான்

தீர்மானித்தது அப்பா. இவ்வளவு முட்டாள் இருப்பதை எங்கப்பா? அதனால் அவ் அம்மையும் கூட எப்படி இருக்கிறான் முட்டாள் என்று கூட அப்பனே திட்டுவாள். 


( சித்தன் அருள் வலை தளத்தில் உள்ள செய்திகளை அனைவருக்கும் வகுப்பு போல அனைவருக்கும் எடுத்து உரைக்கலாம். அது சேவைக்காகவே குருநாதரால் உண்டாக்கப்பட்ட வலை தளம் ) 



அடியவர்:- கோவிலில் கொங்கணர் வைக்கலாமா? 


குருநாதர்:- அப்பனே இதையும் நேற்றைய பொழுது சொல்லி விட்டேன். அதாவது சித்தர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கிறார்கள் அப்பனே. அதனால் எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் ஆத்மார்த்தமாக அப்பனே. அதனால் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே. எங்களுக்கு கூட ஆசைகள் இல்லை அப்பனே. மனதில் ( இறைவனை/சித்தர்களை ) வையுங்கள் என்று கூட நேற்றைய பொழுதுலே சொல்லி விட்டேன். ஆனாலும் அப்பனே தாராளமாக வைக்கலாம்.


ஆனால் அப்படி எது என்று அறிய அங்கு கொங்கணனே இருக்கின்றான் என்பேன் அப்பனே, வை என்று தெரியாமல் தான் கேட்கிறேன் அப்பனே. 


அடியவர்கள்:- ( சில உரையாடல்கள் )


அடியவர்:- ( அம்மை ஒருவர்) ஆனா இப்ப உருவ வழிபாடுக்கும் உத்தரவு வந்திருக்கு.


குருநாதர்:- அம்மையே சில 

வற்றுக்கு மட்டுமே உண்டு. அம்மையே சிலவற்றுக்கு இல்லை.அம்மையே சிலைகளுக்கும் உயிர் உள்ளது. ஆனாலும்  எப்படி உயிர் இருக்கும் கூடு விட்டு கூடு பாயும் வித்தை  இதனால் சில தளங்களில் கூட இன்றளவும் நடந்து கொண்டிருக்கின்றது தாயே சிலைகள் மூலமே. அதை தொட்டால் பாவம் கரைந்து விடும். ஆனாலும் நீங்கள் அதற்கு தகுதியானவராக இருந்தால் நானே சொல்வேன் வருங்காலத்தில். அம்மையே அப்பொழுதெல்லாம் மக்களுக்கு நல்லது செய்ய சித்தர்கள் அப்படியே கல் ரூபமாகவே இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று விடுவார்கள் அம்ம்மையே. இதனை பற்றியும் விவரமாக குறிப்பிடுகின்றேன். எங்கெங்கெல்லாம் அப்படியே நிற்கின்றது அருவமாக என்று அம்மையே ஆனால் அங்கு தொட்டால் வினைகளும் நீங்கும்.


மோட்சம் கிட்டும் தாயே. இதனால் சாதாரணமில்லை திருத்தலங்களை. தன்னிடம் உள்ள ஆசையை அறுத்து அறுத்து அம்மையே எவையென்று பின்பற்றி பின்பற்றி அம்மையே (இது எல்லாம்) தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான் மனிதன். அது தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தாலே அம்மையே ஒன்றும் லாபம் இல்லை. அதனால்தான் நாங்களே சில கஷ்டங்களை மனிதனுக்கு வைத்து வைத்து எதை என்றும் புரியும் அளவிற்கு கூட அழைத்துச் சென்று கொண்டே இருக்கின்றோம். அம்மையே கவலையை விடு.


அடியவர்:- பால் ஆலயம் செய்கிறோம் சொல்லி என்னமோ பண்றாங்கயா. அப்ப அந்த சிலைக்கு வந்து ஒன்னும் இல்ல மகிமை அந்த இதெல்லாம் இல்ல அப்டின்றாங்க. ஆனா நம்மள தொட்டு போய்  கும்பிட சொல்றாங்க. ஆனா அப்படித் தொடுரப்போ ஒரு ஈர்ப்பு இருக்கேன்னு அந்த சிலையில…


குருநாதர்:- அம்மையே இதை இப்பொழுது தான் சொன்னேன்.


அடியவர்:- இல்ல அவங்க சொல்றாங்க. பாலாலயம் பண்ணினாங்க. அதை ( சிலைக்கு உயிர் கொடுத்ததை) எடுத்துட்டோம் அப்டின்னு  சொல்றாங்க?


குருநாதர்:- அம்மையே எப்படியம்மா எடுக்க முடியும். இவையெல்லாம் அம்மையே ஒரு மனிதனின் உயிரை எடுக்கச் சொல்லு பார்ப்போம்.


அடியவர்:- அம்மா, பாலாலயம் பண்ணலாம். அத எடுக்க முடியாதம்மா.


கேள்வி கேட்ட அடியவர்:- அத பஅவங்க அப்படி சொல்ராங்க வழக்கம் எடுகின்றேன்னு…


அடியவர் 2:- (சிலைக்கு கொடுத்த உயிரை ) எடுக்க முடியாதம்மா


அடியவர் 3:- எடுக்க முடியாது



அடியவர்:- பாலாலயம் அப்டின்றது, அதுக்கு அபிஷேகம் பன்றாங்க இல்ல …அது கிடையாது


( பல அடியவர் உரையடல்கள்…) 


அடியவர்:- ( ஒரு ஆலயத்தில் கட்டுமான பணி குறித்து அங்கு ) அகஸ்தியர் வந்தாச்சா?


குருநாதர்:- அப்பனே யான் அங்கே சொன்னேனே அகத்தியன் வாக்கு வாக்குத்தான் அப்பனே. 


அடியவர்:- பணி வேகமாக நடக்குது…


குருநாதர்:- அப்பனே இனிமேல் அதாவது அப்பனே வேகமாக உனக்கு வயது ஏற்றலாமா என்ன அப்பனே? 


அடியவர்கள்:- ( சிரிப்பு அலை ) 


அடியவர்:- ஏத்திடுங்க …


குருநாதர்:- அப்பனே ஆனால் உன்னை நம்பி இதை குடும்பத்தோடு வந்து கேட்டால் அப்பனே யான் சொல்லுவேன் அப்பனே. தனியாக வந்து கேட்டு இருக்கின்றாயே?.


அடியவர்கள்:- ( சிரிப்பு அலை ) 


அடியவர்:- அது கரக்ட்தான் (சரிதான்)


குருநாதர்:- அப்பனே அப்படி நீ சொல்லலாம் அப்பனே. உங்கள் இல்லத்திலிருந்து கேட்டால் அப்பனே சொல்லுவார்கள் அப்பனே.


அடியவர்:- சாமி நான் யார் என கேட்டால் அது அதுவாக இருக்கின்றது… 



குருநாதர்:- அப்பனே நிறைய நீ தனி என்று அப்பனே ஒரு 20 வருடத்திற்கு முன்பு ( திருமணத்திற்கு முன்பு ) சொல்லியிருந்தால் அப்பனே யான் ஏற்றுக்கொள்வேன்.


அடியவர்:- 20 வருசத்துக்கு முன் இல்ல, இதுக்கு பிறகும்..


குருநாதர்:- அப்பனே உன்னை நம்பிக் கொண்டிருப்பவர்களை நீ காப்பாற்றமாட்டாயா என்ன, நீ தனியாள் என்று சொல்லிவிட்டாய் அப்பனே. அப்பனே, தனியாக பிரித்து விடட்டுமா உன்னை?


அடியவர்:- ரொம்ப நல்லது. ( சில விரக்தி பதில்கள்) 


குருநாதர்:- அப்பனே வாய் ஏதாவது பேசலாம் அப்பனே.ஆனால் இருக்க முடியாது அப்பா.


அடியவர்:- இல்ல ஜீவாத்மாகிட்ட ( கடவுள்/அகத்துயர் இடம்)  நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ( சில தனிப்பட்ட வருத்தங்கள்/விரக்திகள் உரையாடல்கள் …) 



குருநாதர்:- அப்பனே நம்பாமல் ஊர் சுற்றுவாயா? பார்ப்போம். அப்பனே இல்லத்துக்கு செல்லாமல் இரு அப்பொழுது புரியும் உன் நாட்டம் என்னவென்று அப்பனே எதை என்றும் அறிய அறிய.



அடியவர்:- ( இந்த பிறவி ) கர்மாவ தொட்டு தொட்டு , ஒருத்தன் நான் இல்லர யோகி என்று சொல்கின்றான். ஒருத்தன் நான் கர்ம யோகி என்று சொல்கின்றான்.,,


குருநாதர்:- அப்பனே (அடியவர் குறிப்பிட்ட) அவன் பொய்கள் அப்பா. நீ கூட சொல்லிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே.  மற்றவர் நம்ப போவதில்லை. இதனால்தான் அறிவு கெட்டவனாக இருக்கின்றான் மனிதன். அதனால்தான் சில கஷ்டங்களை கொடுத்து கொடுத்து உண்மை நிலையை உணருங்கள் என்று கூற அப்பனே  எப்படி அப்பா ஒரு மனிதன் கர்ம ஞானியாக ஆகலாம் என்று , சித்தனாக ஆகலாம்  என்று அப்பனே. சிந்தன் என்றால் அப்பனே  பறக்கச்சொல் பார்ப்போம். 


கர்மா என்றால் கர்மா வீரன் என்கின்றானே அப்பனே எதையும் அவனால் அதாவது கருமா எது என்று கூற அப்பனே வென்றவன் தான் என்பேன் அப்பனே. முதலில் நீ சொன்னாய் அல்லவா அவனிடத்தில் எடுத்து சென்று என் கர்மாவை நீக்கு என்று சொல் பார்ப்போம்.


அடியவர்:- அவருக்கு தெரியலையே… ( கர்மாவை நீக்க ) 


குருநாதர்:- அப்பனே அப்போது கேட்க கூடாது என்பேன்.


அடியவர்:- சாமி நாங்க யார்கிட்டயும் கேட்க முடியாது. ஏன் என்றால் நாங்கள் மனிதர்கள் ..எல்லாம் ஆசை….


குருநாதர்:-  அப்பனே அதனால் இப்பொழுது புரிகின்றதா? மனிதன் அப்பனை தெய்வமும் ஆக முடியாது.


அப்பனே வித்வான் ஆகவும் ஆக முடியாது. அப்படி ஒன்றும் ஆக முடியாது அப்பா. அப்பனே பின் ( ஏதாவது இருந்தால் ) ஒரு மாதம் கழித்து  உருப்படி இல்லாமல் சென்றவனுக்கு அப்பனே இன்னும் கர்மா வீரனாம் இன்னும் எதை எதையோ வித்வானாம் இன்னும் அப்பனே எவை எவை பட்டம் அப்பா. அப்பனே கீழே விழுந்தால் தூக்கக்கூட ஆள் இல்லையப்பா.


அடியவர்:- ……….


குருநாதர்:- அப்பனே அதனால் இறைவன் கஷ்டங்கள் கொடுப்பது சரியா தவறா? 


அடியவர்:- சரி


குருநாதர்:- அப்பனே புரிந்து கொண்டாய் அல்லவா? நிச்சயம் அனைவருக்குமே கஷ்டங்கள் கொடுத்துத்தான் வரும் காலங்களில் அழிப்பான் இறைவன்.


அடியவர்:- ( ஒரு பாழடைந்த சிவன் ஆலயம் அதனை புதுப்பிப்பது குறித்த கேள்வி) 


குருநாதர்:- அப்பனே நீங்கள் விரும்பினாலும் அப்பனே இதை க்கூட சொல்லிவிட்டேன் அப்பனே. சிறிது காலத்தில் இறைவனே விரும்புவான் அப்பனே. ஈசனை தன்னை யார் யார் மூலம் எதை செய்ய வேண்டும் என்று அமைத்துக் கொள்வான் அப்பனே. அதி விரைவிலேயே யானும் வருகின்றேன் அங்கு. 


அடியவர்:- ( தனிப்பட்ட கேள்வி ) 


குருநாதர்:- அப்பனே _____________


அடியவர்:- நான் கேட்ட குடும்பத்துக்கு ஐயா வோட ஆசிர்வாதம்


குருநாதர்:- அம்மையே  ஆனாலும் அனைவருமே அங்கு சென்று இங்கு சென்று பொய்கள் கூடும் இடத்தில் தான் அம்மையே காசுகள் கொடுத்து ஏமாற்றுகிறார்கள். ஆனால் உண்மை சொன்னால் பொய் என்று சொல்வார்கள் நம்ப மாட்டார்கள்.  அதனால் தாயே சொல்ல வில்லை தாயே ஆசிகள். 


அடியவர்:- நான் அந்த பையனுக்கு இதய அறுவை சிகிச்சை நடக்க போகுது



குருநாதர்:- அம்தையே எது என்பதை அறிய அம்மையே என்னுடைய ஆசிகள் என்று சொல்லிவிட்டேன்.


அடியவர்:- Rheumatoid arthritis ( முடக்கு வாதம்) அதுக்கு மருந்து சொல்லுங்க. 


குருநாதர்:- அப்பனே எவன் என்று அறிய இவை எல்லாம் சில காலங்கள் பொறுத்தே யான் சொல்லுவேன்.


அடியவர்:- ஐயா எனக்கு வாக்கு வேண்டும்.


குருநாதர்:- அப்பனே இவன் வாழ்க்கை பற்றி எது என்றும் அறிய அறிய ஆனால் பிரம்மா இவன் வாழ்க்கையே ஏதும் இவன் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கர்மா என்று எழுதி வைத்து விட்டான். ஆனால் அதை மீறி என்ன என்ன செய்தான் என்பதை க்கூட. ஆனால் அப்பனே புரிகின்றதா? அப்பனே.



நாடி அருளாளர்:- ( அடியவர்கள் உரையாடல்கள் இந்த பதில் குறித்து விவாதித்தனர் )


அடியவர்:- அதையும் மீறி அவர் செஞ்சாருன்னா அது விதி தானே. விதியில எழுதி இருக்கு ஆனால் விதிய தாண்டி செய்ராரு?


குருநாதர்:- அப்பனே இல்லை அப்பா. இது தான் சூட்சுமம். இவன் விதியில் அப்பனே ஒன்றைச் சொல்கிறேன். ஆனால் அப்பனே இவன் விதியில் என்ன உள்ளது என்பதைக்கூட. ஆனாலும் அப்பனே ஏசுநாதன் இருக்கிறானே அவனுடைய சீடன்தானப்பா அப்பா இவன். ஆனாலும் ஏசு நாதனே இவனுக்கு பல கஷ்டத்தை கொடுத்தான். அப்பனே ஆனாலும் கஷ்டத்தைப் பொறுக்க கொள்ளாமல் அப்பனே வந்து விட்டான் அங்கிருந்து. ஆனால் அப்பனே பிடுங்கிக் கொண்டது அனைத்தும் அப்பனே. இப்பொழுது புரிகின்றதா அப்பனே இறைவனும் சோதனை செய்வான் அப்பனே பின். அப்பனே எது என்று அறிய இதிலிருந்து புரிகிறதா? அப்பனே விதி கூட அவை தன் இருந்தாலும் அப்பனே இவன் எதற்கு சரியானவன் என்று இறைவன் தேர்ந்தெடுத்து அப்பனே மாற்றும் தகுதி கூட இறைவனுடத்தில் இருக்கின்றது. 

அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன் அப்பனே. தேர்வை அப்பனே நிச்சயம் ஒரு மாணவன் எழுதுகின்றான். ஆனாலும் அப்பனே ஒரு ஆசிரியன் விருப்பப்பட்டால் இவனுக்கு நன்றாக அதாவது தோராயமாக இன்னும் அதிகளவு கொடுத்துவிடுவோம். இன்னும் குறைத்து விடுவோம் என்று அப்பனே  ( மாணவனின் மதிப்பெண் ) யார் கையில் இருக்கின்றது அப்பனே? ஆசிரியர் நினைத்தால் அப்பனே எதை வேண்டுமானாலும் செய்யலாம் அப்பனே. அதே போலத்தான் விதியை எழுதியவன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அப்பனே.அப்பனே புரிகின்றதா? அப்பனே அதனால் உன் விதியில் அப்பனே எது என்று மாறிய பின் அதாவது ஏதும் புரிகின்றதா யான் சொன்னேன். ஆனால் இதை ஏசுநாதன் சரியாக உன்னை கெட்டியாக அனைத்தும் கொடுக்க வேண்டும் என்று எண்ணி அப்பனே சில சோதனை செய்தான் அப்பனே. ஆனால் அதில் வெற்றி பெறவில்லை அப்பா நீ. 


நாடி அருளாளர்:- அப்போ ஒரு காலத்துல ஏசுநாதனுடனேயே இருந்து இருக்கீங்க நீங்க. ஐயா இது சத்தியம். 


அடியவர்:- சரிங்கய்யா.


குருநாதர்:- அப்பனே இதனால் அங்கும் இங்கும் எதை என்று அறியாமலேயே பணம் சேர்ப்பதற்கு அப்பனே ஆனாலும் ஏசு நாதனுக்கே கோபம் வந்துவிட்டது அப்பா.


அடியவர்:- விதிக்கு மாற்று ஒன்று இருந்தால் அது இறைவன் தான். 



அடியவர்:- அதனால் எழுதியவருக்கு எதை வேண்டுமானாலும் செய்ய தெரியும்.


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/11/230-5-9-2023-26.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!



 



No comments:

Post a Comment