பகுதி - 23
“அனைத்தும் இறைவா நீ”
அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 23 )
இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்
https://siththarkalatchi.blogspot.com/2023/11/226-5-9-2023-22.html?m=0
அடியவர்:- நிறையபேர் சர்கரை நோயால் அவதிப்படுகின்றனர்.
குருநாதர்:- அம்மையே, விதியில் என்ன உள்ளது என்பதைக்கூட ஆராய்ந்து , ஆராய்ந்து அதாவது விதியில் என்ன உள்ளதோ அது நடந்தே தீரும். ஆனால் கடைசி வாய்ப்பாக இந்நோய் இறைவன் கொடுத்து விடுகின்றான். ஆனால் இன்னும் பெரிய பெரிய அளவில் வரும்பொழுது சில புண்ணியங்கள் ஏதோ அளவு இருந்தால்தான் அம்மையே கடைசியாக இறைவன் இந்நோயை கொடுக்கின்றான். ஆனாலும் அம்மையே இதைக்கூட பின் இறைவன் கொடுக்க வில்லை என்றால் இறைவனுக்கு மரியாதை இல்லை என்பேன்.
அடியவர்:- மருத்துவமனை…….
குருநாதர்:- அம்மையே இப்போதுதான் சொன்னேன் அம்மையே.
(விளக்கம்:- மனிதன் தன் தவற்றை உணர்ந்து திருந்தி வாழ்வதற்க்கு ஒரு முன் எச்சரிக்கையாக இந்த நோயை இறைவன் கொடுக்கின்றார். இதன் பிறகும் தவற்றை உணரவில்லை என்றால்தான் மிகப்பெரிய சிக்கல்கள் உண்டாகும். இறைவன் ஏன் இந்த நோயை கொடுத்து உள்ளார் என்று சுய பரிசோதனை செய்து நல் வாழ்வு வாழ ஒரு கடைசி சந்தர்ப்பம்.)
அம்மையே ஆனாலும் அதைச்செய்யலாம் இதைச்செய்யலாம் என்றெல்லாம் ஆனாலும் அதை எங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் சொல்லிவிட்டேன் அம்மையே. அறிந்தும் அறிந்தும் கூட அம்மையே எவ்வளவு என்னென்ன எதற்காக எல்லாம் முயற்சி செய்கின்றீர்கள் அம்மையே. பக்திக்காக முயற்சி செய்யுங்கள். நிச்சயம் யாங்களே வந்து காப்பாற்றுவோம் அம்மையே.
அடியவர்:- பிற உயிர்களை கொன்று தின்று விட்டு நான் அகத்தியனுடைய சிஷ்யன் , சித்த சிஷ்யன் என்று வருகின்றார்களே….
குருநாதர்:- அப்பனே அப்படி பட்டவர்களை யான் ஏற்றுக்கொள்வதே இல்லை. ஆனாலும் பொய் சொல்லலாம். யான் அகத்தியன் சீடன் என்று எல்லாம், ஆனால் அப்பனே அவை எல்லாம் வெறும் பொய்கள் அப்பா. அப்படி பட்டவர்களுடம் சென்றாலும் கூட நீங்களும் கர்மாவை பின் சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே. அதனால்தான் நம்பிவிடாதே, யாரையும் நம்பிவிடாதே. கோடி கோடி திருடர்களப்பா. பக்திகளாக இருந்தும் பின் (அசைவம்) அதை தின்றால் அப்பனே அவன் தன் அறிந்தும் அறிந்தும் கூட நாயைவிட கீழானவன் சொல்லிவிட்டேன் அப்பனே. ஆனால் ஒருநாள் நிச்சயம் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். அம்மையே கேட்டாயே, (அசைவம்) இதை எல்லாம் சாப்பிட்டால் அம்மையே இப்பொழுது கூறினாயே ( சர்கரை நோய் ) அந்நோய் தானாகவே வந்து விடும். ஆனாலும் சில மாறுதல்களும் உண்டு. அதனை பற்றியும் செப்புகின்றேன் அம்மையே. அதனால் அதை உண்ணாதவரை ( அசைவம் சாப்பிடாதவர்களை ) என்னிடத்தில் அழைத்து வா அம்மையே. ஆனால் உத்தனுக்கு மட்டும்தான் யான் சொன்னேன். மற்றவர்களுக்கு இல்லை.
அடியவர்:- எல்லா தவறும் செய்றாங்க. அசைவம் சாப்பிடுகின்றனர்.
குருநாதர:- அம்மையே ஒன்றை சொல்கின்றேன். அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நேற்றைய பொழுதிலும் (4.9.2023) சொல்லி விட்டேன். இறைவன் மனிதனுக்கு அனைத்தும் கொடுக்க தயாராகவே இருக்கின்றான். ஆனாலும் நிச்சயம் மனிதன் பின் அதை பெற்றுக்கொண்டாலும் சரியான வழியில் உபயோகிக்கத்தெரியாமல் அழித்து விடுவான். அதனால்தான் அம்மையே இறைவன் கூட மௌனத்தை காத்துக்கொண்டிருக்கின்றான் அம்மையே அனைத்தும் , அனைத்தும் என்று.
அம்மையே இது போலத்தான் நாராயணனும் ஏமாந்தான் அம்மையே. நாராயணனை பற்றி தெரியுமா தெரியாதா?
அடியவர்:- தெரியாது
நாடி அருளாளர்:- திருப்பதி ஏழுமலையான்.
அடியவர்:- தெரியும் ஐயா.
குருநாதர்:- ( இதுவரை வெளி உலகிற்கு தெரியாத கதை ஓன்றை செப்ப ஆரம்பித்தார்கள் ) அம்மையே ஒர் முறை தவம் இருந்தார்கள். ஏன் எதற்காக என்றால் பெண்கள் அனைவருமே தவம் இருந்தார்கள் அதாவது திருமலையிலே அறிந்தும் அறிந்தும் இப்பொழுது கூட ஆனாலும் பின் எவை என்றும் பெயரிலே ஆனாலும் பின் “ நாராயணா, நீ வர வேண்டும். அப்பொழுது தான் உண்பேன்” என்றெல்லாம். ஆனாலும் நாராயணா, நாராயணா என்று பல லட்சக்கனக்கான பெண்களே பின் உண்ணாமல், உறங்காமல் நாராயணா, நாராயணா என்றெல்லாம். ஆனாலும் பொருமானோ பின் இப்படியே நம்மீது பக்தி கொண்டு இருக்கின்றார்களே, அழுகின்றார்களே என்று எண்ணி உடனே அனைத்தும் நடக்கட்டும் என்று வரத்தை கொடுத்து விட்டான். அவ் லட்சக்கணக்கில் பின் வரங்கள் ஏற்றுக்கொண்டு பின் மனிதர்களை எல்லாம் தவறான வழியில் பின் நடத்தி , பின் அனைத்தும் பின் அறிந்தும் கூட எவ்வளவு நன்மைகள் செய்யாமல் தீங்குகளாகவே செய்வித்தனர் (அனைவருக்கும்) . இதனால் பின் ஈசனுக்கும் கோபமுற்று ஆனால் ஈசனோ அறிந்தும் அறிந்தும் கூட பின் “ நாராயணனே உன்னிடத்தில் இவ்வாறு பதவிகள் ( வரங்கள் ) கொடுக்கின்றதே ஏன் தரித்திரமாக யோசிக்காமல் கொடுத்து விட்டாயே. இப்பொழுது பார் ( என்ன நடந்து கொண்டு இருக்கின்றது)” என்றெல்லாம் ஆனாலும் மயங்கினான் பின் தயங்கினான் எதற்காக என்று. இப்படி நம்பி ஏமாந்தோமே என்று (காக்கும் கடவுள் நாராயணனே ) தலை குனிந்து விட்டான். பார்த்தீர்களா? இப்பொழுது அது போலத்தான் இறைவனை நோக்கி நோக்கி பக்திகள் ஏதோ ஒரு காரணத்துக்காக சென்று சென்று வழி பட்டுக்கொண்டு இருக்கின்றான். ஆனால் பின் அதை கொடுத்து விட்டால் நீ பின் அதை வைத்து மற்றவர்களை கூட கெடுப்பாயா இல்லை அனைவருக்கும் கொடுத்து பின் நல்லவர்கள் ஆக்குவாயா? என்று யோசித்துத்தான் ( யான் கொடுப்பேன் வரங்களை ). ஆனால் நூறில் ஒரு மனிதன் கூட பின் அதற்காக ( மற்றவர்கள் நலனுக்காக ) இறைவனை வணங்குவதே இல்லை. பின் தன் சுய நலத்திற்காக வணங்கி வணங்கி அதனால்தான் இறைவன் கூட நீ அப்படியே இருப்பா என்றெல்லாம் சொல்லி ஆனாலும் தானே பக்தன் பக்தன் என்று பட்டையை தீட்டுவது, ருத்திராட்சம் அணிவது ஆனால் நீ தான் பக்தன் என்று சொல்ல வேண்டுமே தவிர ஈசன் சொல்லப்போவதில்லை ஒரு நாளும்.
அடியவர்:- வாலைத்தாய்க்கு கும்பாபிஷேகம் பன்ன வழி காட்டனும்.
குருநாதர்:- அப்பனே யான் வருகின்றேன் அப்பனே. நன்றாகவே நடக்கும்.
நாடி அருளாளர்:- எங்கு கும்பாபிஷேகம்?
அடியவர்:- கொடி மங்கலம் ஐயா பக்கத்தில…
அடியவர் 2:- இங்க இருந்து ஒரு 10 கிலோ மீட்டர் வரும்
அடியவர்:- ( ஓரு அறுவை சிகிச்சை மருத்துவர் நிபுனர், புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பவர் சார்பாக அடியவர் ஓருவர் அனுப்பிய கேள்வி)
புற்று நோய் சிகிச்சை குறித்து , புற்று நோயாளிகள் மதுரை பசுமலையில் அமைந்துள்ள அகத்திய பிரம்ம ரிஷி ஆலயத்தில் சேவை செய்தால் அவர்கள் பிணி அகலுமா?
குருநாதர்:- அப்பனே எதனால் அப்பனே எப்பொழுதெல்லாம் பிற உயிர்களை கொன்று கொன்று அதாவது (அசைவம்) இப் புவிதனில் உட்கொள்கின்றார்களோ அப்பொழுது இந்நோய் அதிகமாகும் அப்பா. இதனால் அப்பனே பிற உயிர்கள் கொல்லுதல் ஆகாதப்பா. ஏனென்றால் இதை இறைவனே கொடுப்பதப்பா. அதனால்தான் பின் யாராலும் தடுக்க முடியாதப்பா. அதனால் இறைவனே நினைத்தால் தான் அப்பனே. இதனால் கோடியில் ஒருத்தனுக்கே நலமாகும் சொல்லிவிட்டேன். இதற்கான ஏற்பாடுகள் கூட சில காலம் யாங்கள் பொருத்திருப்போம்.
அடியவர்:- ஐயா சைவமாக உள்ளவர்களுக்கு இந்த நோய் வருகின்றது.
குருநாதர்:- அப்பனே இப்பொழுதுதான் சொன்னேனே அப்பனே. அப்படி இருப்பவனை இறைவனே காப்பாற்றி விடுவான். அப்பனே இதை கூட புரிந்து கொள்ளவில்லையே.
அப்பனே இதற்க்காகவும் புற கதிர்கள் (புற ஊதாக் கதிர் / UV rays ) என்று ஒரு கதிர் இருக்கின்றதப்பா. அது அதிக அளவில் மனிதனை தாக்கும் பொழுது பல நோய்கள் வந்து விடும் அப்பா. ஏனென்றால் மனிதன் அதாவது சாதனை சாதனை என்றெல்லாம் தெரிவித்துக்கொண்டு இருக்கின்றான் அப்பனே.
அதாவது இங்கிருந்து எதை எதையோ கிரகங்களுக்கு அனுப்பும் பொழுது அவை உடைந்து அவ் கதிர்கள் பூமியை நோக்கி அதிக அளவில் வரும் பொழுதுதான் நோய்களின் (தாக்கம்) அதிகமப்பா. அதனால்தான் இனிமேலும் யாங்கள் தடுத்து விடுவோம் அப்பனே.
( விளக்கம்:- இறைவன் பூமிக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை புற ( ஊதா ) கதிர்கள் பூமியின் உள் நுழையாதபடி நம்மை காக்கும் பொருட்டு அழகாக வடிவமைத்து உள்ளார்கள். ஆனால் மனிதர்கள் நமது விஞ்ஞான வளரச்சியினால் ராக்கெட் மூலம் அந்த பாதுகாப்பு வளையம் உடைந்து ( Ozone Layer Depletion என்று இனையத்தில் தேட இந்த தகவல் நன்கு புரியும் ) புற கதிர்கள் ( UV rays from sun ) வெளியில் இருந்து பூமியின் மீது படுகின்றது. குருநாதர் வாக்கின்படி இந்த கதிர்கள்தான் புற்று நோய்க்கான மற்றும் இதர நோய்களுக்கான காரணம். )
அடியவர்:- பாகப்பிரிவினை வீட்டுல..
குருநாதர்:- அப்பனே எதற்காக உந்தனுக்கு பாக பிரிவினை?
அடியவர்:- அவுங்க கேட்கிறாங்க…
குருநாதர்:- அப்பனே இறைவன் உன்னையே கேட்கின்றான் அப்பனே. நீ கொடுத்து விடுவாயா என்ன?
அடியவர்:- …….
குருநாதர்:- அப்பனே இதனால் விதியிலே அனைவருக்குமே ( சொல்லுகின்றேன்) இவனுக்கு சொல்லவில்லை ( பொதுவாக ) , (ஆனால் உதாரணமாக ) இவன் விதியை யான் சொல்லுகின்றேன். இவன்தனை நிச்சயமாய் எவை என்றும் புரியாமல் கூட எந்தனுக்கு ஞானம்தான் வேண்டும் என்று கேட்டு வந்தவன். இவ்வுலகத்தில் அதாவது பந்த பாசங்களில் சிக்கிக்கொண்டு அதாவது காசுக்காக ஆசைப்பட்டுக்கொண்டு பின் பாகப்பிரிவினை என்று கேட்கின்றானே அப்பொழுது விதியில் இருப்பது நடக்குமா? இல்லை இவன் விரும்பியது நடக்குமா? நீங்களே சொல்லுங்கள்.
( இந்த தனிப்பட்ட பதிலை பொதுவாக அனைவரையும் குருநாதர் கேட்டதால் நாம் எல்லோரும் விதியில் இருந்து எப்படி வேறு பட்டு , ஆசைப்பட்டு கஷ்டம் அடைகின்றோம் என்று உணர குருநாதர் நமக்கு எடுத்துச் சொன்ன வாக்காக உணருங்கள். )
அடியவர் 1 :- இங்கதான் ஐயா சந்தேகமே வருது. மாயைய அறுப்பதற்க்கு அவுங்கதான் உதவி செய்யனும்.
அடியவர் 2:- விதியில் உள்ளது நடக்கும்
அடியவர் 3:- ஞானப்பாதை ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை.
அடியவர் 4:- அவுங்கதான் உதவி செய்யனும்.
குருநாதர்:- அப்பனே இதனால் இறைவன் தலங்களை நாடி நாடி சென்று அடைய வேண்டும். என் விதியை மாற்று என்று அப்பனே. அப்பொழுதுதான் என்னாலும் கூட ( மாற்ற இயலும்), யானும் சொன்னேன் இவன் தனக்கு இப்படி என்று கூட ஆனாலும் பிரம்மாவும் “அகத்திய மாமுனிவரே , இவை எல்லாம் அவனவன் ( உலகோரில் பலர்) இன்னும் சாகப்போகின்றான், இன்னும் நோய்களுக்காக ( நோய் தீர வேண்டி ) ஏங்கிக்கொண்டு இருக்கின்றான். இன்னும் பிரச்சனைகள். அதை விட்டு விட்டு இவன்தன் சொத்துக்களுக்காக ஏங்கிக்கொண்டு இருக்கின்றானே அகத்திய மாமுனிவரே, நீயும் இப்படியா என்று பிரம்மா ( என்னை கேட்டு விட்டான் ). “
( இங்கு கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் நமக்கு தெரியாமல் நாம் அனைவரும் நன்கு வாழ பிரம்மாவிடம் சண்டையிட்டு விதியை மாற்ற போராடுகின்றார்கள். ஆனால் நமது புண்ணிய பலம் இதற்க்கு தேவை என்பதை உணர்க. நாடி வாக்கு வராத பலருக்காகவும் தான் என்பதை உணர்க. இதை படிக்கும் உங்களுக்காக என்னென்ன செய்திருப்பார் என்று உணர்ந்து ஒரு 5 நிமிடம் கண்களை மூடியபடி ஆதி குருநாதனுக்கு அகத்தின் ஈசனுக்கு நன்றி சொல்லுங்கள் அடியவர்களே )
அதனால் அப்பனே அடிதடிகள் அப்பனே. ஆனால் அப்பனே இதை நிச்சயம் பிரித்தால் ஓர்வர் இறந்து விடுவார் என்பேன் அப்பனே. ஆனால் அப்பனே இறைவன் எதை என்று அறிய அறிய முன்னோர்களும் கூட எதை என்றும் புரியாமல் பின் இதை தடுப்பது சரியா? தவறா? அனைவரும் கூறுங்கள் இவனுக்கு.
( விதிப்படி, பங்கு பிரித்தால் ஓர் உயிரும் பிரியும். பிரம்ம தேவர், இறைவன், முன்னோர்கள் ஒரு உயிரை காப்பதற்க்காக இந்த பாகப்பிரிவினையை தடுக்கின்றனர். இங்கு உயிர் காக்கும் தர்மமே முதல் நிலை ஆகின்றது.)
மற்ற ஒரு அடியவர்:- சரியே
குருநாதர்:- அப்பனே அப்பொழுது சொத்து வேண்டுமா? உயிர் வேண்டுமா? நீயே தீர்மானி. அப்பனே, அதற்காகத்தான் உன்னை அதாவது வாக்குகளாக இழுத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம் மனிதர்களுக்கு. ஆனால் தக்கபடி கேள்.
அடியவர்:- …..
குருநாதர்:- அதனால் அப்பனே யாங்கள் கொடுப்பதைப் அப்பனே வாங்கிச் சென்றால் ( உந்தனுக்கு நல்லது.)
அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன்.
நாராயணனனே ( திருப்பதி ஏழுமலையான் ) எது என்று அறிய காசுகள் பார்த்து பார்த்து அலுத்து விட்டான். ஆனாலும் ஒர் ( எண்ணம் ) மனதில் தோன்றியது அவனுக்கு. ஏன் நம் தனையே பிச்சை எந்தலாமே என்று. பார்ப்போம் யாராவது பிச்சை இடுகின்றார்களா என்று. ஆனாலும் அதாவது மலையில் இருந்து ஏழு மலையிலிருந்து பின்பு வந்து விட்டு பிச்சை ஏந்தினான். அனைவரிடத்திலும் பிச்சை ஏந்தினான் யான உண்ணவில்லையே என்று ஆனால் கொடுக்கவில்லை யாருமே கொடுக்கவில்லை. அங்கே இருந்த காவலாளிகள் இங்கெல்லாம் பிச்சை எடுத்துக்கூடாது என்பது எல்லாம் பின் பெருமானுக்கே சொல்கிறார்கள். ஆனாலும் பின் ஒருவன் அங்கே பூஜை செய்கின்றானே ( மூல ஏழுமலையான் சன்னதியில் இருந்து அவ் அர்சகர் ) வெளியே வந்துவிட்டான். ஆனால் பார்ப்போம் இவன் நம் இடத்தில் ( திருப்பதி மூலவர் ஏழுமலையான் சன்னதியில் ) நாராயணா நாராயணா என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறானே , இவன் இடத்திலேயே பிச்சை இருப்போம் என்று அவனிடத்திலேயே நாராயணன் பிச்சை எந்தினான். ஆனாலும் அவனோ பின் நீ எல்லாம் உருப்படாதவன். இதை எடுத்தாலும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அதனால் நீ செத்து விடு என்று நாராயணனனே!!! ( நாரணனை பார்த்து அவன் கூறி விட்டான்). பார்த்தீர்களா? அப்பனே பக்தி என்பது கூட உள்ளத்தில் நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதைதான் இறைவன் வந்தாலும் உங்களுக்கு தெரியும் அப்பா. ஆனால் பக்தியிலே இல்லாமல் ஏதோ தான் என்று வணங்கினால் , இறைவன் ( நேரடியாக உங்களிடம் ) வந்தாலும் உங்களுக்கு புரிய போவதில்லை அப்பா. புரிய போவதில்லை அப்பா. அதனால் அப்பனே வந்தும் இறைவன் பயனில்லை அப்பா. அதனால் அப்பனே யார் யார் எங்கு இருக்க வேண்டுமோ அப்பனே அங்கு இருந்தால்தான் சிறப்பு. சொல்லிவிட்டேன் அப்பனே.
அது போலத்தான் அப்பனே உன் முன்னோர்களை அதை (பாகப்பிரிவினையை) நிறுத்தி வைத்துவிட்டார்கள் மரணம் ( ஒருவனுக்கு ) ஏற்படும் என்று. ஆனால் அப்பனே இதை புரியாமல் நீ அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாயே, பொறுத்திரு ஒரு தீர்வு அப்பனே சொல்கின்றேன்.
நாடி அருளாளர்:- புரியுதுங்களா ஐயா.
அடியவர்:- ……
குருநாதர்:- அதனால் அப்பனே பின் யாருடைய சொத்தை யார் அபகரிப்பது என்பது கூட தெரியவில்லை. அப்பனே இவ்வுலகம் அப்பனே இறைவனுடையது. அனைத்து இடமும் இறைவனுக்கு சொந்தமானது. ஆனால் மனிதனோ என்னுடையது என்னுடையது என்று கூற அப்பனே ஆனால் உயிரே சொந்தமில்லை அப்பா. உடம்பும் கூட சொந்தம் இல்லையப்பா. ஆனால் மண் சொந்தமென்று அப்பனே ஏங்கிக்கொண்டு கடைசியில் அப்பனே இறந்து விடுகிறான். நாளை அப்பனே யாரோ ஒருவன் எடுத்துக்கொண்டு கர்மத்தை செய்யும் பொது அப்பனே மீண்டும் அவ்வான்மா கூட சென்றடைந்ததே மீண்டும் பிறப்பெடுத்து அப்பனே கஷ்டங்கள்படும் அப்பனே. இதனால் மண் ஆசை அப்பனே பெரிதளவு அப்பனே முத்திக்கு வழிவகுக்காதப்பா சொல்லிட்டேன்.
அடியவர்:- விதியே கர்மாவை மாற்றுமா? நாங்க ஜெனனம் ஆகும்போது எங்கள் (விதியை) நிர்னயம் செய்கின்றீர்கள். அகஸ்தியர் என்ன சொல்கின்றார் என்றால் நீ எல்லாம் ஆசைப்படுற, நீ எல்லாம் அப்படி இருக்க, ஆனா ஆசை படுவதற்குதானே பூலோகத்துக்கு அனுப்பி இருக்கீங்க?
குருநாதர்:- அப்பனே ஆசைப்படுவதற்கா அப்பனே? (ஆசை) படு ஆனால் தேவை இல்லாததை எல்லாம் பட்டால் அப்பனே இறைவன் எப்படி அப்பா கொடுப்பான்? தேவை இல்லாத எல்லாம் பட்டால் நீயும் கேட்கலாம் தேவை இல்லாதது அது தேவை இல்லாது என்று எல்லாம் அப்பனே ஏற்கனவே அப்பனே கருமாவத்தில் எதை என்றும் அறிந்தும் அறிந்ததும் தான் அப்பனே நீயும் வந்திருக்கிறாய் இவ் உலகத்திற்கு அனுபவித்து அனுபவித்துச் செல்ல. மீண்டும் மீண்டும் ஆசைகளில் நுழைந்து விட்டால் அப்பனே நேற்றைய பொழுதிலே யான் சொல்லிவிட்டேன் அப்பனே கர்மாவை பற்றி அதைக் கேட்டாயா நீ?
அடியவர்:- இல்ல ஆனால் கர்மா குறித்து ஏற்கனவே நான் புரிஞ்சுருச்சு, இந்த ஆசைகளையும். நான் ஒரு ஆசைப்படுகின்றேன் என்றால் அதை உருவாக்குவது அவர்தானே?
குருநாதர்:- அப்பனே அப்படி என்று யார் சொன்னது?
அடியவர்:- நானே சொல்ரேன்.
குருநாதர்:- சரி அப்பா நீ ஆசைப்படுகிறாய் அப்பனே. உன் குடும்பத்தையே நீ காக்க முடியவில்லையே அப்பனே. பின் எப்படியப்பா?
அடியவர்:- காக்க முடியவில்லை என்றால் அது என் விதிதானே?
குருநாதர்:- அப்பனே தெரிகின்றதா அப்பா விதி என்று கூற. அப்பொழுது அனைவருமே வாக்குகள் நீ கூட வந்து கேட்கிறாய் அப்பனே . அப்பொழுது எப்படி அப்பா மாற்ற முடியும்? அப்பனே என்ன எழுதியதோ அது நடந்தே தீரும் என்பேன் அப்பனே. ஆனால் எங்களால் மட்டும் தான் மாற்ற முடியும். அப்பனே ( விதி மாற்றம் ) அதற்கும் ஆசைகளே படக்கூடாது என்பேன் அப்பனே. ஆசைகள் அப்பனே பல புத்தகங்கள் கூட எழுதி விட்டார்கள் அப்பனே ஆனால் ஆசை எது என்று அறிய அறிய நேற்றைய பொழுதில் கூட சொல்லிவிட்டேன்.
ஆசைகள் பட பட ( மூளையில் உள்ள ஆசை எனும் ) செல்களில் பலூன் போல் நல்லவிதமாகவே காற்று போல் விரிந்து அது உடைந்தால் அப்பனே யாராலும் காப்பாற்ற முடியாது அப்பா. அதனால் ஆசைப்படுவதே அப்பனே (திரு) மூலன் கூற்றை ( திரு மந்திரம் ) படித்தாயா? என்ன அப்பனே. ஆசை அறுமின் ( ஆசைகளை அறுத்து எறியுங்கள்) அப்பனே ஈசன் ஆயினும் ஆசை அறுமின் என்று அப்போது நீ அறிவாளியா இல்லையென்றால் அப்பனே (திரு) மூலன் அறிவாளியா அப்பனே?
( அரும் தவம் இயற்றி சித்தர் திருமூலர் திரு வாய் மலர்ந்து அருளிய திருமூலர் பாடல்.
ஆசை அறுமின்கள் ! ஆசை அறுமின்கள் !
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் !
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் !
ஆசை விட விட ஆனந்தம் ஆமே !
- திருமந்திரம் 2615
)
அப்பொழுது கேட்பதற்க்கு நீ தான் அறிவாளி பின் மூலன் புத்தி கெட்டவன் என்று சொல்லிவிட்டாயே அப்பனே. இதுதான் யான் ஏற்றுக்கொள்ள வேண்டும் அப்பனே. மீண்டும் சொல்கின்றேன். (திரு) மூலன் கூற்றைப்படி. அப்பனே இதை ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள் அப்பனே. அப்பனே நீ அறிவாயாக இருந்து கொள். அப்பனே (திரு) மூலன் முட்டாளாகவே இருக்கட்டும் அப்பனே.
(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)
https://siththarkalatchi.blogspot.com/2023/11/228-5-9-2023-24.html?m=0
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!
No comments:
Post a Comment