மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Saturday, November 11, 2023

சித்தர்கள் ஆட்சி - 226 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 5-9-2023 உரைத்த வாக்கு - பகுதி 22


 பகுதி - 22


“அனைத்தும் இறைவா நீ”


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரை அடியவர் ஒருவர் இல்லத்தில் இரண்டாம் நாள் உரைத்த வாக்கு - 05.09.2023 ( மதுரை வாக்கு - பகுதி 22) 



இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்


https://siththarkalatchi.blogspot.com/2023/11/224-4-9-2023-21.html?m=0


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் (அகத்தியன்). 


ஆனாலும் யான் நேற்றைய பொழுதிலே (முந்தைய நாள் 4.9.2023) பல உரைகளை தெரிவித்து விட்டேன். ஆனாலும் யாராவது நிச்சயம் சரியாக கேட்டீர்களா என்றால் நிச்சயம் இல்லை. அது போலத்தான் சரியான அதாவது யான் சொல்லியதை நிச்சயம் சரி முறையாக பயன்படுத்தி வந்தாலே வெற்றிகள். ஆனாலும் அதை கடை பிடிப்பதே இல்லை. ஏதோ தானே இருந்து விட்டு பின் அங்கு சென்றால் இங்கு சென்றால் நல்லது நடக்குமா என்று மனிதர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் போது நிச்சயம் அதில்தான் இன்னும் இன்னும் கர்மாக்கள். அதனால் ஒவ்வொரு மனதையும் கூட யான் ஆராய்ந்து விட்டேன். 


ஆராய்ந்து சொன்னாலும் நீங்கள் நிச்சயம் யான் சொன்னாலும் அதைத்தான் ( கர்மத்தை ) மீண்டும் நீங்கள் திரும்பத் திரும்ப கேட்பீர்கள் என்பதை கூட யான் அறிவேன். இதனால்தான் அறிவுள்ளவனாக இருந்தும் , அறிவு கெட்டவனாகவே மனிதன் வாழ்ந்து வருகின்றான். இதனால் என்ன ஒரு புரயோஜனம்?. பின் அதனால் புரயோஜனமே இல்லை. மனித வாழ்க்கை என்ன? எவை, எதை பின்பற்ற வேண்டும் என்பதை எல்லாம் தெரிவதில்லை. அதனால்தான் ஓர் நாள் இல்லை , ஓர் நாள் பின் பல கஷ்டங்கள் அனுபவித்து தீர்த்தால்தான் நிச்சயம் புரியும். 


அப்போதுதான் இறைவன் நாட்டம் கிடைக்கும். யான் சொன்னேனே நேற்றைய பொழுதில் (4.9.2023) நிச்சயம் அதை யாராவது ஒருவர் சொல்லுங்கள்?


( குருநாதரின் கேள்வி/பதில் ஆரம்பமானது. நேற்றைய பொழுதில் உரைத்தவற்றை குருநாதர் அனைவரையும் எடுத்து உரைக்க சொன்னார்கள்) 


அடியவர்:- பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு போய் விட்டு வர சொன்னார்கள்.


குருநாதர்:- இன்னும் அறிந்தும் அறிந்தும் சொன்னேன். முதலில் மனிதனாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று. ஆனாலும் சரி நிச்சயம் கேள்விகள் கேட்டு தெளிவு பெற்று ஆனாலும் மீண்டும் இதைத்தான் யான் செப்புவேன். அனைத்தும் சொல்லி விட்டேன். அதைத்தான் ( கர்மத்தை ) நீங்கள் கேள்விகளாக கேட்கப்போகின்றீர்கள். என்ன புரயோஜனம்? ஒன்றும் இல்லை. இதனால் கேளுங்கள்?


அடியவர்:- நான் எனக்காக கோட்கவில்லை. எனது உயிர் நண்பர் குடும்பம்….


குருநாதர்:- நிச்சயமாய் நீ அமைதியாக இருக்க வேண்டும். அப்படி கேட்டால் அவ் கர்மா உன்னை சாரும். உன்னை சாரந்தால் துன்பங்கள் வரும். அதை ஏற்றுக்கொள்ள தகுதியா நீ? 


அடியவர்:- மனசு கேட்கலையே…


குருநாதர்:- அதை இறைவன் பாரத்துக்கொள்வான். அவர்களை கேட்கச்

சொல் தாயே. தாயே இங்கு இருக்கின்றார்கள். இவர்களை விட்டு விட்டு அவர்களுக்கு சொன்னால் இவர்களுக்கு என்ன, அப்போது இவர்கள் அறிவாளியா அவர்கள் அறிவாளியா? அதனால் அம்மையே நோய் இருந்தால் எங்கு நோக்கி செல்கின்றார்கள் என்பதைக்கூட உந்தனுக்கு தெரியும் அம்மையே. அதனால் துன்பம் வந்தால் ஆனால் எங்கு அலைகின்றார்கள் என்பது கூட உந்தனுக்கே புரியும். ஆனாலும் அம்மையே இங்கு உள்ளவர்களை விட்டு விட்டு அங்கு சென்றாலும் கூட அவன்தனக்கு எவை என்றும் புரியாமல் கூட பின் புரியாதம்மா. நம்பவும் மாட்டார்கள் தாயே. பொறுத்திருக.  


அடியவர் :- ஐயனே, ஶ்ரீ வித்தையின் மகத்துவத்தை கூற வேண்டும். 


குருநாதர்:- அப்பனே இன்னும் சில காலங்களே அப்பனே தொடந்து செய். நிச்சயம் அரை பங்கு வந்து விட்டாய் அப்பனே. 


அடியவர்:- ( ஒரு ஆலயம் தொடர்பாக )


குருநாதர்:- அப்பனே பொறுத்திருக. அப்பனே செய்து கொண்டேதான் இருக்கின்றேன். அதனால் அங்கும் இங்கும் அலைவதை விட்டு விடு. அப்பனே சில சில செய்கையாலும் சில சில வழிகளில் கூட ( தனி வாக்குகள் ).


அடியவர்:- ( வேறு ஒரு இடத்தில் சென்று நாடி வாக்கு கேட்டுள்ளார். அது குருநாதர் வாக்குதானா என்று உறுதி படுத்த கேள்வி கேட்டார் )


குருநாதர்:- அம்மையே இதனால்தான் உந்தனுக்கு எவை என்றும் புரியாமல் கூட அங்கு சென்று இங்கு சென்று கர்மா மேலும் மேலும் கர்மா உன்னிடத்தில் தேங்கி உள்ளது. அதை யான்தான் நீக்க வேண்டும். பொறுத்திருக. 


அடியவர்:- ஐயா எப்பொழுதும் உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும். 


குருநாதர்:-  அப்பனே இதை ஏற்கனவே யான் செல்லி விட்டேன் ஏன் எதற்காக? யாராவது இவன்தனக்கு சொல்லுங்கள். 


அடியவர்:- ஆசிர்வாதங்கள் இருக்குது. அவர் பெயர் சொன்னாலே புண்ணியம். ஆசிர்வாதம் இருப்பதால் இங்கு வந்து உட்காந்து இருக்கீங்க ஐயா. 


நாடி அருளாளர்:- கேள்விகள் கேட்கலாம். 


அடியவர்:- அகஸ்தியர் தீபம் ஏற்றிக்கொண்டு இருக்கின்றோம். அதுல கர்மா வராம இருக்க என்ன செய்ய வேண்டும்?


குருநாதர்:- அப்பனே இதையும் நேற்றைய பொழுதில் சொல்லிவிட்டேன் அப்பனே. 


அடியவர்:- ( தனிபட்ட கேள்வி ) 


குருநாதர்:- ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை பின் ஏமாறுபவர்களும் இருப்பார்கள். பொறுத்திருக. 


அடியவர்:- போன முறை கொரோனா வந்து மருந்து எடுத்தும் கூட இன்னும ( அதன் தாக்கத்தில் இருந்து ) வெளிய வர முடியல. 


குருநாதர்:- அம்மையே இறைவன் இருந்தும் நம்ப முடியவில்லையே அம்மையே. 


அடியவர்:- இதை பொதுவாகத்தான் நான் கேட்கின்றேன். எல்லாருக்கும் மருந்து எடுத்து சரியாகல.


குருநாதர்:- அம்மையே நீ பார்த்தாயா? அம்மையே எவரை பாரத்தாய்? எங்கு பாரத்தாய்?


அடியவர்:- அதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து பேருமே இன்னும் முழுமையாக ……..


குருநாதர்:- அம்மையே எதற்காக? எவை என்றும் அறிய அறிய அம்மையே அனைவருக்குமே இந்நிலைதான் அம்மையே. மற்றவர்களை பற்றி சிந்தியுங்கள், உதவி செய்யுங்கள் என்றெல்லாம் பின் தன்னைப்போலே பிறரை எண்ணும் குணம் வரவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். ஆனால் அதை பின் பற்றுவதே இல்லையே. 


தாய், தந்தையரை கூட மதிக்கவில்லையே. யாருக்கு வந்திருக்கின்றது? கர்மா செய்தவர்களுக்கு மட்டும் அவை கூட. ஆனாலும் இவைஎல்லாம் ஒரு கேள்விகளே இல்லை. 


அம்மையே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் ( தனிப்பட்ட வாக்கு ) 


அடியவர்:- ( சில உரையாடல்கள் )


குருநாதர்:- கலியுகத்தில் அம்மையே மனிதன் தவறுகள் செய்து கொண்டே இருக்கின்றான். இதற்கான தட்டனைகள் அதிகப்படியாக வந்து கொண்டே இருக்கும் வரும் காலங்களில். அம்மையே பெற்றோர்கள் தன் பிள்ளையை செல்லமாக வளரத்து இப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனாலும் அதை பின் மாறிவிட்டு எதை என்று நோக்கி செல்லச்

செல்ல பின் பெற்றோர்களே காயப்படுத்துகின்றார்கள் பிள்ளைகள். ஆனாலும் இதற்க்கு தண்டனை கொடுக்கலாமா வேண்டாமா?


அடியவர்:- கொடுக்கலாம்.


குருநாதர்:- அம்மையே அது போலத்தான் இறைவனை மீறிய செயல்கள் எல்லாம் இறைவன்தான் படைத்தான் மனிதனை. அதை மீறிய செயல்களை செய்யும் பொழுதுதான் மனிதனுக்கு தண்டனைகள் கொடுத்து பக்குவப்படுத்துகின்றான். அப்பொழுது இறைவன் பின் செய்வது தவறா?


அடியவர்:- சரிதான்.


குருநாதர்:- அம்மையே அப்பொழுது நீ கேட்டாயே இப்பொழுது புரிகின்றதா? 


அடியவர்:- புரிகின்றது.


குருநாதர்:- அம்மையே இன்னும் என்ன என்ன கேட்க வேண்டும் கேள்?


மற்றொரு அடியவர்:-  பையனுக்கு உடல் நலம், மன நலம் ….


குருநாதர்:- அப்பனே ஒன்றை சொல்கின்றேன். தன் பிள்ளை தன் பிள்ளை என்று சொல்கின்றாயே இங்கு ஒருவன் அப்பனே பரமனே எதை என்று கூற இழுத்துச்செல். இவன்தனை எதை என்று புரியும் அளவிற்கும் கூட இயலாதவருக்கு உதவி செய்யச்சொல். பின் தானாகவே ( அடியவர் பையன் ) வளர்ந்துவிடும் என்று சொல். பரமனே சொல். 


( ஊரார் பிள்ளையை ஊட்டி வளரத்தால் தன் பிள்ளை தானே வளரந்து விடும் என்பதை நினைவில் கொள்க ) 


அடியவர் மதுரை பரமசிவம்:-  நம்ம ( ஶ்ரீ அகத்தியர் இறை அருள் மன்றம் செய்யும் அன்ன சேவை ) சேவையில் பங்கு பெறுங்கள். 


குருநாதர்:- அப்பனே ஒன்றை சொல்கின்றேன். சேமிப்பு கிடங்கில் சேமிப்பு பின் இருந்தால்தான் அதாவது இன்றைய அளவில் சேமிப்பு என்று அனைவருமே இட்டு இருக்கின்றீர்கள். திடீரென்று ஏதாவது வந்தால் அவ் சேமிப்பில் இருந்து சிறிது அளவு எடுத்து செலவு செய்கின்றீர்கள். இதே போலத்தான் அப்பனே புண்ணியங்கள் சேமிப்பாக வைக்க வேண்டும். ( அப்படி ) யாருமே இல்லையப்பா. அப்போது கஷ்டங்கள் வரும்போது எங்கிருந்து அப்பா யான் கொடுப்பது நீங்களே சொல்லுங்கள்?  யான் மௌனம் காத்திருக்கின்றேன். 


( வங்கியில் உள்ள சேமிப்பு கஷ்ட காலத்தில் உதவும். அதே போல விதியின் கஷ்ட காலத்தில் கடும் துன்பம் உண்டாகும். அதனை சித்தர்கள் நமது புண்ணிய கணக்கில் இருந்து எடுத்து அந்த கஷ்டங்களை போக்குவார்கள். பல பிரச்சினைகளை சரி செய்து நமக்கு துன்பங்கள் அற்ற நல் வாழ்வை வழங்குவார்கள்.  வங்கி சேமிப்பை விட புண்ணியம் சேமிப்பு அவசியம் அனைவருக்கும். எனவே 


அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!

அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!

அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!

அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!!

அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!!! 


ஓவ்வொரு நொடியும் புண்ணிய சேமிப்பை உயர்த்துங்கள்!

ஓவ்வொரு நொடியும் புண்ணிய சேமிப்பை உயர்த்துங்கள்!!

ஓவ்வொரு நொடியும் புண்ணிய சேமிப்பை உயர்த்துங்கள்!!!

ஓவ்வொரு நொடியும் புண்ணிய சேமிப்பை உயர்த்துங்கள்!!!!

ஓவ்வொரு நொடியும் புண்ணிய சேமிப்பை உயர்த்துங்கள்!!!!! )


அறிந்தும் அறிந்தும் இதனால் அங்கும் இங்கும் அலைவதை நிறுத்தி விட்டு முதலில் புண்ணியங்கள் எப்படி செய்வது என்பதைக்கூட அதை சேமித்து வைத்துக்கொண்டால் நிச்சயம் பின் எத்துன்பமும் வராது. அப்படி துன்பம் வந்து விட்டாலும் நீங்கள் எளிதில் யான் புண்ணியம் செய்திருக்கின்றேன் என்று கர்வமாக கூறலாம். யாராவது சொல்வீர்களா யான் புண்ணியம் செய்திருக்கின்றேன் என்று?  


அடியவர்கள்:- ( சில விளக்க உரையாடல்கள் ) 


குருநாதர்:- ( ஒரு அடியவரை குறிப்பிட்டு ) இப்பொழுது ( வேலையில் ) பின் அலைந்தாயே அதற்கெல்லாம் ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் இப்பொழுது அவ் கணக்கை யான் சொல்லி இருப்பேன்.  ஆனால் மற்றவர்களுக்காக அலைந்தாய் திரிந்தாய் ஒன்றும் லாபம் இல்லை. 


(நீங்கள்) எங்கு சென்றாலும் (அகத்தியன்) யான்தான் தீர்வு. !!!!!!!!!!!!!!!!!!!!!


நிச்சயம் ஆனால் அவை சொல்லலாம், இவை சொல்லலாம் இன்னும் இன்னும் அறிந்து சொல்லலாம் ஆனால் ஓரு புரோஜனம் இல்லை. ( தனிப்பட்ட வாக்கு ) 


குருநாதர்:- ( ஒரு அடியவருக்கு உரைத்த வாக்கின் சாராம்சம்  இங்கு பொது நலம் கருதி பகிர்கின்றோம் -  பரிகாரம் என்று சொல்லி குறிப்பாக பெண்கள் பிறரிடம் (மாந்திரிக-ஜோதிடர்) அனுகுவதை முற்றிலும் தவிர்கவும். சுய நோக்கத்திற்காக வசியமும் செய்ய வாய்பு உண்டு.  எனவே இறைவனை வணங்குவதே அனைத்து நலங்கள் நல்கும்) 


குருநாதர்:- ( ஓர் அடியவரை குறிப்பிட்டு ) கேள் உந்தனுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கின்றேன். 


அடியவர்:- இனி மேல் நான் எந்த மாதிரி…


குருநாதர்:-  அனுதினமும் முதலில் யான் சொல்லியவற்றை செய். அதாவது பின் அறிந்தும் அறிந்தும் வாய் பேச முடியாத ஜீவரீசிகளிடம் இருந்து தொடங்கு முதலில் சொல்கின்றேன். (அனுதினமும் எறும்புகள், பறவைகள், பைரவர்களுக்கு அன்ன சேவை செய்ய அருளினார்கள் ). 


அறிந்தும் அறிந்தும் கூற எங்கெங்கு ( நீ சென்று கேட்டாய் பல நாடி ) வாக்குகள் ஆனாலும் அவர்கள் எல்லாம் சில கர்மாக்களை நீ ஏமாந்து போவது போல் இருப்பதால் உன்னிடத்திலே விட்டு விட்டார்கள். இதனால் இன்னும் சிறிது காலம் சென்றிருந்தால் சுவடிகளும் பொய் பின் இறைவனும் பொய் என்ற நிலமைக்கு வந்திருப்பாய். இது சத்தியம். சரியான வழியில் ஆனாலும் உந்தனுக்கும் கூட அறிவுகள். இனிமேலும் சரியாக பயன்படுத்திக்கொள். உன்னிடத்திலே இறைவன் இருக்கின்றான். முருகனை நினைத்துக்கொண்டு அனுதினமும் இல்லத்திலே தீபம் ஏற்ற வா. இன்னும் முருகன் கூட வாக்குகள் தருவான் அதை பயன்படுத்திக்கொள். இன்னும் கேள்?


அடியவர்:- சரக்கரை நோய்க்கு மருந்து சொல்லுங்கள். 


குருநாதர்:- அம்மையே எதற்காக இதை கேட்டாய் நீ?


(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு பின் வரும் பதிவில் தொடரும் ………)

https://siththarkalatchi.blogspot.com/2023/11/227-5-9-2023-23.html?m=0


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!



No comments:

Post a Comment