மதுரை அகத்திய மஹரிஷி ஆலயம் முகவரி

திருவாசகம் - உரை

அகத்திய பிரம்ம ரிஷி அருளிய , முதல் தர புண்ணியம் உங்களுக்கு பெற்றுத்தர உதவும் நாடி வாக்குகள்.

Wednesday, November 8, 2023

சித்தர்கள் ஆட்சி - 221 : அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு


 உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 

குருநாதர்:- அப்பனே எதை என்று அறிய அறிய ஏன் நிற்கிறாய் இப்பொழுது?


அடியவர்:- நிம்மதியை தேடி ..


குருநாதர்:- அப்பனே அவ் நிம்மதி யாருக்கு இல்லை அப்பா இங்கு அப்பனே நீ யாரேனும் கேட்டுப்பார் இவ்உலகத்தில் எனக்கு நிம்மதி இல்லை என்று சொல்லுவார்கள். அப்படி எவ்ளோ கொடுத்தாலும் அப்பனே மனிதனுக்கு போதாது அப்பா போதாது.அப்பனே அதனால் முதலிலேயே வந்துவிட்டாய் அப்பனே. ஆசிகள்.

அப்பனே உந்தனுக்கு கீழே உள்ளவர்களை யோசி. அவர்களுக்கு ஏதாவது உதவி செய். அப்பனே தானாகவே நீ முன் வந்து விடுவாய் அப்பனே.

( பொது விளக்கம்:- )

வாழ்க்கையில் நமக்கு மேல் உள்ள சிலரை நினைத்து வருத்தத்துடன் வாழ்வது ஒரு வகை. இங்கு பேராசை தலை விரித்து ஆடும்.

உங்களுக்கு கீழே உள்ள கோடானு கோடி மனிதர்களை நினைக்க மனம் அமைதி கொள்ளும். லட்சுமி தேவி உங்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள்

எதுவாகினும் நீங்களே உங்கள் மனதின் முதலாளி.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை அகத்திய பிரம்ம ரிஷி திருவடிகளில் சமர்ப்பணம்!!!



No comments:

Post a Comment