“இறைவா நீயே அனைத்தும். இறைவா! நீ நன்றாக இருக்க வேண்டும்.

"இறைவா நீயே அனைத்தும்!. இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்" ஈரேழு உலகத்தையும் காத்து அருளக்கூடிய அன்னை ஶ்ரீ உண்ணாமலை அம்மை உடனுறை தந்தை அண்ணாமலையார் பொற்கமலத்தை பணிந்து, அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளை பணிந்து இந்த தளத்தில் பதிவினை வெளியிடுகின்றோம்.

உலகின் ஆதி குரு, மாமுனிவர், குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளிய தினசரி அனைவரும் அதிகாலையில் எடுக்க வேண்டிய உறுதிமொழி. :-

1. தர்மம் செய்வேன் 2. அனைத்திடத்திலும் பின் அன்பாக அதாவது அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் 4. அனைத்தும் எந்தனுக்கே சொந்தம் என்று பின் உயிர்ப் பலியும் இடமாட்டேன் 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் 6. அப்படிக் கொன்றாலும், நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் 7. அவை மட்டும் இல்லாமல், தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும் 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் 9. பிறருக்காக உழைக்க வேண்டும் 10. பிற ஜீவராசிகளும் (உயிரினங்களும்) பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில் அனைவரும் நினைக்க வேண்டும் 11. அப்படி நினைத்தால் அகத்தியன் வந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பான் என்று சொல்மகனே.


அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முதல் தரப் புண்ணியம் பெறும் ஒரே வழி:- (1) திருவாசகம் சிவபுராணம் + (2) மக்கள் வாழ , நல் வழிகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல் + அதன் பின் (3) அன்னதானம், மற்றும் இதர தான தர்மங்கள். இப்படிச் செய்தால் மட்டுமே , முதல்தரப் புண்ணியம் உண்டாகும் என்று குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி உரைத்துள்ளார்கள். இதனைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றும் அனைவருக்கும் கூறி உள்ளார்கள். இதுபோல் அனைவரும் செய்து முதல் தரப் புண்ணியம் பெற்றுக் கொள்ளுங்கள். இறை அருளுடன் வளமாக வாழுங்கள். வாழ்க வளமுடன்!!!!!!!!!

siththarkalatchi - Moving text


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு :- “அப்பனே, அனுதினமும், என் பக்தர்கள், ஒரு உயிருக்காவது உணவளியுங்கள். அது போதும். அதுவே கோடி புண்ணியமாகும்.”


Wednesday, April 8, 2026

சித்தர்கள் ஆட்சி - 614 :- அன்புடன் அகத்திய மாமுனிவர் - ஆதி இராமாயண காவியம் - அன்னை சீதா தேவியின் தந்தை இராவணேஸ்வரர் காவியம் - பகுதி 6

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.


அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 6


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத,  மாபெரும் சிவ பக்தர்,  மகிமை புகழ், அன்னை சீதா தேவியின் தந்தை இராவணேஸ்வரர்  காவியம்……


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால், கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும், உலகம் அறியாத,   மகிமை புகழ், இராமாயண காவியம்…….


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  25.03.2026 அன்று  நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த  வாக்கு. 


நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை

நாள் :-  29-3-2026 (ஞாயிற்றுக்கிழமை)  

நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.

இடம் :-  ஆதிகோணேஸ்வரர் ஆலயம், தம்பலகாமம், திருகோணமலை.

Tampalakamam-Kinniyai Rd, 31100, Sri Lanka


கூகிள் மேப் லிங்க் (google map link) :- 

https://maps.app.goo.gl/StG8m11LrXK8f7pz6


(இவ் தொடர் வாக்கின் இதர பகுதிகள் 

சித்தர்கள் ஆட்சி - 609 :-  பகுதி 1
சித்தர்கள் ஆட்சி - 610 :-  பகுதி 2
சித்தர்கள் ஆட்சி - 611 :-  பகுதி 3
சித்தர்கள் ஆட்சி - 612 :-  பகுதி 4
சித்தர்கள் ஆட்சி - 613 :-  பகுதி 5
சித்தர்கள் ஆட்சி - 614  :-  பகுதி 6
சித்தர்கள் ஆட்சி - 615 :-  பகுதி 7
சித்தர்கள் ஆட்சி - 616 :-  பகுதி 8
சித்தர்கள் ஆட்சி - 617 :-  பகுதி 9

)

===========================

#  அன்புடன்  அகத்திய  மாமுனிவர்  வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன். 


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவரின் ஆதி இராமாயண காவியம் - பகுதி 6

===========================


===========================

# ஸ்ரீ ராமரிடம் பேசிவிட்டு , மீண்டும் அன்னை சீதையிடம் சென்ற அனுமான்.

===========================



குருநாதர் :-   எது என்று அறிய நிச்சயம் தன்னில் எவை என்று புரிய. பின் அழகாக அதாவது தாயே !!!! பின் சீதா !!!! எவை என்று அறிய, நிச்சயம் பின் என் மீது உட்கார்ந்து கொள். நிச்சயம் யான்  உன்னை அழைத்துச் செல்கின்றேன் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  தாயே நீ,  ஸ்ரீ ராமரை பார்க்கணும்  இல்ல….. அப்ப என்ன சொல்றாரு? என் மீது வந்து அமர்ந்து அம்மா. தாயே , என் மீது அமர்ந்துகோ. நான் போய் உன்னை அங்க ராமர் கிட்ட சேர்த்துறேன். ராமர் கையில சேர்த்துறேன்னு சொல்லிட்டாரு யாரு? 


அடியவர் :- அனுமான் 


சுவடி ஓதும் மைந்தன் :- அனுமான் 


குருநாதர் :-   எதை எவை என்று அறிய ( அன்னை சீதா தேவி அனுமான் மேல் ) உட்காருகின்ற பொழுது, பின் இராவணன் பார்த்துவிட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  உட்காரும் பொழுது? 


அடியவர் :- இராவணன் பார்த்துட்டார்  


சுவடி ஓதும் மைந்தன் :- இராவணன் பார்த்துட்டார் 


குருநாதர் :-   எதை என்று கூற. ஏவினான் அம்பை. எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் நிச்சயம் (அனுமான்) தப்பித்து தப்பித்து ஓட்டம் பிடித்தது. 


சுவடி ஓதும் மைந்தன் :- அனுமான் என்ன பண்ணாரு?  அம்பு பட்டு… என்னது? 


அடியவர் :- தீப்பந்தத்தை ஏத்தினார் 


சுவடி ஓதும் மைந்தன் :- அம்பை ஏத்தினார் வந்து…. ஃபர்ஸ்ட்ல அம்பை ஏத்தினார்…அதை கொல்றதுக்கு… அப்ப என்ன பண்ணாரு அதை வந்து… ?


அடியவர் :- (அனுமான் தப்பித்து ) பல்டி அடிச்சு ஓடுறாரு… 


சுவடி ஓதும் மைந்தன் :- பல்டி அடிச்சு… பல்டி அடிச்சு.. என்ன பண்ணுச்சு? 


அடியவர் :- (அனுமான் தப்பித்து) ஓடுறாரு 


சுவடி ஓதும் மைந்தன் :- ஓடுறாரு 


(இதனிடையில் அங்கு ஆஞ்சநேயர் வாக்கு உரைக்கும் இடத்தில் தாவி தாவி விளையாட்டு..அடியவர்களின் கவனம் அங்கு ஆஞ்சநேயர் மீது சென்றதால்  )


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னங்க  ஐயா? 


அடியவர் :- ஆஞ்சநேயர் வந்து வந்து….. ( நம்ம எல்லோரையும் ) பார்த்துட்டு, பார்த்துட்டு  போறாரு… 


சுவடி ஓதும் மைந்தன் :-  (ஆச்சரியம்) ஓ!!!!! …பார்த்துட்டு போறாரா? ( சிரிப்பு ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   பல்டி அடிச்சு, பல்டி அடிச்சு அது… அது என்ன ஆச்சுன்னா, அது ஓடுறாரு…ஆனால்  முடியல…. 


குருநாதர் :-   எதை என்று அறிய எவை என்று புரிய மீண்டும் பின் அதாவது பின் (அன்னை சீதையை அங்கேயே) விட்டுவிட்டு ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட.  பின் ஆனாலும் பின் வந்தது யார் என்று நிச்சயம் தன்னில் கூட, அதாவது மறைமுகமாகவே, மறைத்து வைத்துவிட்டான் ஈசன். 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆனா நம்ம வந்து வந்தது அந்த அனுமானாகத்தான் இருக்கணும்.  இராவணனுக்கு  அனுமானாகத்தான்  தெரியணும். ஈசன் தான் வந்தது  என்று தெரியக்கூடாது இராவணனுக்கு என்று மறைத்து விட்டார். 


குருநாதர் :-   ஏன் எதற்கு இவையெல்லாம் என்றால், நிச்சயம் இப்படி இருந்தால்தான் கலியுகத்தில் வாழ முடியும் என்பது ஒரு காவியமே. இன்னும் இதைத்தன் பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய இன்னும் பின் வரும் காலத்தில், அனைத்தும் மாற்றி, பின் கலியுகத்தில் தர்மத்தை நிலை நாட்டுவோம் யாங்கள் சித்தர்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் என்ன சொல்றாங்க? எல்லாம் பொய்யா போயிடுச்சுப்பா. அதனால எல்லாம் பொய்யா போனதுனாலதான், தர்மம் தலைகீழாக  போயிடுச்சு. அதனால மீண்டும் உண்மையெல்லாம் நாங்க சொல்லி, 


அடியவர் :-  தர்மத்தை நிலைநாட்டுவோம். 


சுவடி ஓதும் மைந்தன் :- தர்மத்தை நிலைநாட்டுவோம். இதெல்லாம் பொய்யா செஞ்சு வச்சுட்டாங்க. மீண்டும் நாங்க என்ன பண்ணுவோம்? 


அடியவர் :- தர்மத்தை நிலைநாட்டுவோம் 


சுவடி ஓதும் மைந்தன் :-   தர்மத்தை நிலைநாட்டுவோம்… உண்மையை சொல்லி என்றார்.


குருநாதர் :-   ஒன்று எப்பொழுது பொய்யாக போகின்றதோ பின் இறைவனுடைய பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட. பின் அதாவது இறைவனுடைய பின் அனைத்தும் கூட, அப்பொழுது மனிதனும் பொய்யாகவே விடுவான். அதுபோலத்தான் கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   எப்பொழுது இறைவன் வந்து இதெல்லாம் பொய்யான இதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்களோ,  அப்ப என்ன ஆச்சு… மனிதனும்? 


அடியவர் :- பொய் ஆயிட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பொய் ஆயிட்டான். எல்லாம் பொய்யோடு பிணைந்து தான் வாழ்ந்துட்டு இருப்பான். ஏமாத்தனும்னும் எல்லாம் தான் பண்ணிட்டு திரிஞ்சிட்டு இருப்பான்…. 


குருநாதர் :- இதனாலதான் இறைவனுடைய காவியமே பொய்யாகிவிட்டது. அப்பொழுது மனிதனின் வார்த்தை உண்மையாகுமா என்ன? யோசியுங்கள் நீங்களே? 


சுவடி ஓதும் மைந்தன் :- அங்க இறைவனுடைய பொய் ஆயிடுச்சு. அப்ப மனிதன் எப்படிப்பா உண்மையா இருப்பான்.


===========================

# எப்போது  தர்மம் தலை கீழாக போனது?
===========================



குருநாதர் :-   எப்பொழுது இவ் ராமனின்,  பின் ராவணனின் நிச்சயம் தன்னில் கூட பின் பொய்யாக போனதே, அப்பொழுதே தர்மம் கீழாக போனது. அப்பொழுது இருந்து இன்னும் தலை நிமிரவே இல்லை இவ்வுலகத்தில் தர்மம். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதை எப்ப பொய்யாக்கினாங்களோ அப்பொழுது இருந்து என்ன ஆச்சு?  தர்மம் தலை கீழா போச்சு. இன்னும் தலை நிமிரவே இல்லையப்பா. 


குருநாதர் :-  ஆனாலும் எங்கெங்கு ஏது என்று அறிய தலை நிமிர்த்துவோம் எது என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனாலும் நாங்கள் தலையை நிமிர்த்துவோம் 


குருநாதர் :- ஏது என்று அறிய அப்பொழுது இருந்து இத்தேசமும் கூட பின் நிச்சயம் தன்னில் கூட,  பின் உயர்ந்து கொண்டே போல்… உயர்ந்து கொண்டு…. மீண்டும் தாழ்வு அடைந்து விடுகின்றது 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பொழுது இருந்து,  இந்த இந்த இந்த தேசம் என்ன ஆகுது?  


அடியவர் :- உயர்ந்து திரும்ப தாழ்வு அடைகிறது 


சுவடி ஓதும் மைந்தன் :-  உயர்ந்து தாழ்வு அடைகிறது… (சற்று நேரம்
கழித்து)


சுவடி ஓதும் மைந்தன் :-  உயர்ந்து தாழ்வு அடைகிறது. 


குருநாதர் :-   ஆனாலும் உண்மை நிலை, மக்கள் நிச்சயம் தன்னில் கூட. பின் இவ்வாறாக நிச்சயம் உண்மை நிலையை பின் தெரிவிக்க, பல ஞானிகள் பின் இத்தேசத்திற்கு படையெடுத்தார்கள். ஆனாலும் யாரையும் பின் எவை என்று அறிய ,  மக்கள் நம்ப முடிய முடியாதது போல், எவை என்று கூற எவை என்று அறிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால இந்த உண்மையை…. ஒரு பெண்ணால… ஆட்சி செய்யணும்னு சொல்லிட்டு…. இந்த உண்மையை சொல்ல …பல ஞானிகள் வந்து இந்த தேசத்துக்கு வந்து ,  உரைக்க வந்தார்கள். ஆனால் என்ன ஆச்சு?  அவங்களை அடிச்சு துரத்திட்டாங்க. 


குருநாதர் :-   பின் வந்தான் இயேசு. அடித்தார்கள். வந்தான் புத்தன். அடித்தார்கள் எதை என்று அறிய. ஆனாலும் பின் வந்தான்  நபிகள் நாயகமும். அடித்தார்கள். ஆனால் மனிதன் என்னவோ அவர்கள் சென்று விட்ட பிறகு, பக்தர் போல் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள் அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் வந்தாங்க உண்மை சொல்றதுக்கு. யார் யார் வந்தாங்க? எல்லாரும் வந்தாங்க. அவங்க எல்லாம் அடிச்சு துரத்திட்டு, கடைசில என்ன பண்ணி நிக்கிறாங்க வந்து? 


அடியவர் :-  பக்தர்கள் போல  நடிக்கிறாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :- நடிக்கிறாங்க. அவங்க இவங்க… அந்த இதுன்னு சொல்லிட்டு…. நடிச்சு நிக்கிறாங்களேப்பா. என்னப்பா நியாயம்ன்றாரு? 


அடியவர் :-  ஐயா ஒரு சந்தேகம்.  நீங்க இயேசு வந்தார். புத்தர் வந்தார் என்று சொல்றீங்க.  அப்ப இது வந்து உலகத்துக்கே பொதுவான ஒரு பெண் ஆட்சி செய்யணுமா? இல்ல இலங்கையே ஒரு பெண் ஆட்சி செய்யணுமா?


சுவடி ஓதும் மைந்தன் :-  ( மீண்டும் கேள்வியை சொல்ல சொன்னார் )  என்னதுங்க அய்யா ?


அடியவர் :-   இப்ப இதுல இயேசு புத்தர் எல்லாம் வந்தாருன்னு சொல்றதுனால, இது பொதுவா உலகத்தையே ஒரு பெண் ஆட்சி செய்யணுமா? இல்லாட்டி இலங்கையை மட்டும் ஒரு பெண் ஆட்சி செய்யணுமா ?


குருநாதர் :-   எதை என்று புரிய அப்பனே இதைப்பற்றி இன்னும் ரகசியங்கள் இருக்கின்றது. அப்பனே பின் பொறுத்திருந்தால் அனைத்தும் சொல்வேன். முதலில் அப்பனே பின் சொல்லிவிட்டால், மீண்டும் மனிதன் குழப்பிக் கொள்வான். அங்கு இங்கு, ஏது எவ்வாறு என்பதை எல்லாம் குழப்பிக்கொண்டு, அவை எவை என்றெல்லாம் நிச்சயம் தன்னில் ஒரு மனிதன் பின் குழப்பதற்கே, மனிதர்கள் இருக்கின்றார்களாப்பா இங்கு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இந்த உண்மையை வந்து இப்ப வேண்டாம். எல்லாத்தையும் சொல்லி, அப்புறம்தான் நான் கடைசில இது சொல்லுவேன். இப்ப சொன்னா என்ன பண்ணுவாங்களாம்?  வந்து 


அடியவர் :- இந்த தேசத்துக்கு அந்த தேசத்துக்குன்னு சொல்லி ( சண்டையை மூட்டிருவாங்க )


சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லி இது பண்ணிடுவாங்க. அதனால வந்து முதல்ல வந்து உண்மை எல்லாத்தையும் சொல்றேன். அப்புறம் நான் கடைசியா சொல்றேன்ப்பான்றாரு… 


குருநாதர் :-  இதனால் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட. ஆனாலும் பின் இராவணன் எது என்று கூற ஈசனை பற்றியே நினைக்கவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பாசப்பற்றால ஈசனை பற்றியே நினைக்காமல் போயிட்டாரு 



குருநாதர் :-  அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இக்கலியுகத்தில் அப்பனே மனிதன் பின் அதாவது அனைத்திலும் அப்பனே பின் நிச்சயம் நாட்டங்கள் செலுத்தி, அப்பனே இறைவனை ஒன்றை இருப்பதையே மறந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. அனைத்தும் பொய் என்று உணர்ந்த பின்புதான் இறைவா என்று ஓடி வருகின்றான் என்பேன் அப்பனே. தெரிந்து கொள்ளுங்கள். அதனையும் இதனையும் சமநிலைப்படுத்துகின்றேன் இப்பொழுது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றாராம் மனுஷனும் இதே மாதிரிதான்… 


அடியவர் :- அதாவது இராவணேஸ்வரன் எப்படி மகள்  மேல் உள்ள பாசத்துல ஈசனை மறந்தாரோ, அதே மாதிரி கலியுகத்துல, மக்களும் பாசம்னு ஒரு விஷயத்தினாலே,  கடவுளை மறந்து விடுகின்றார்கள்.  


குருநாதர் :-  அப்பனே இதுவும் ராவணனுடைய செயலே நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால் இதுவும் அவனிடத்தில் வணங்கியது எப்பொழுது என்னை பாசத்தில் இருந்து பின் பாசத்தில் பின் அதாவது நுழைத்து விட்டாயோ, அப்பொழுதே உன்னை மறந்துவிட்டேன் இதனால் நிச்சயம் எவை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதுவும் ராவணனுடைய வந்து ஒரு இதுதான்டா எப்பொழுது நீ வந்து என்னை வந்து… 


அடியவர் :- ( சிரிப்பாக ) எப்படி இருந்த நீ,  இப்படி ஆயிட்ட !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வந்து நீ இப்படி ஆயிட்டேன். உன்னை நினைக்காததுல போயிட்டேன்னு சொல்றாரு…. 



குருநாதர் :-  எதை எவை என்று புரிய ஆனாலும் எது என்று அறிய பின் இராவணன் எது என்று ஈசனின் பின் ஒரு சிறிய துகள்எப்பொழுதும் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற. பின் அதாவது இராவணனின் பின் இதயத்தில் இருந்தது. சொல்லிக்கொண்டே இருந்தது. இதையும் அதாவது ஒவ்வொரு பின் மனிதனிடத்திலும் நிச்சயம் தன்னில் கூட ஒரு துகள்எப்பொழுதும் இறைவன் நினைத்துக் கொண்டே இருக்கின்றது. வா பின் அவையெல்லாம் பொய். அவையெல்லாம் பொய் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றது. ஆனால் மனிதனுக்கு அது தெரிவதே இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்னது? எல்லார் இடத்திலும் ஒரு துகள்இருக்குது. வந்து யாருடைய துகள்


சுவடி ஓதும் மைந்தன் :-   ஈசனுடைய துகள்.  அப்ப டேய்… வந்துடு போவாதடா… ஆசைப்படாதடா…. வேணாடா…. இது தப்புதான்னு சொல்லிட்டு…. சொல்லினே இருக்குமாம் 


அடியவர் :- இதயத்துல இருந்து சொல்லிட்டு இருக்கு …


சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லினே இருக்குமாம். ஆனால் என்ன பண்றது.. யாரும் கேக்குறது இல்ல.


குருநாதர் :-  அப்பனே இது ஏது எவை என்று அறிய அப்பனே அனைத்தும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. நல்லதற்காகவே அப்பனே எவை என்று கூற, பின் அதாவது நிச்சயம் பின் எவை என்றது “ராம” அப்பனே பின் பின் அணையும். அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அணையாது.


சுவடி ஓதும் மைந்தன் :-  அணையும், அணையாது. அப்படின்னா எல்லாம் தெரிஞ்சுக்கலாம். ராமாயணம் இராவணன் பற்றி எல்லாம் தெரிஞ்சுக்கலாம். ஆனால் இந்த காவியம் எப்பவுமே மாறாதது. அணையாதது. ஐயா புரியுதுங்களா இதுக்கு?  எப்படி அர்த்தம்னு சொல்லிட்டு? 


அடியவர் :- ராமாயணம் என்னைக்கும் மாறாது. 


சுவடி ஓதும் மைந்தன் :-   என்னைக்கும் மாறாதது. 


குருநாதர் :-  ஆனாலும் இடையிடையே வந்து, பின் இவ்வாறு தான் பின் பெண் மீது பின் மோகங்கள் கொண்டு, மாற்றி அமைத்து விட்டனர். அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது இராவணனின் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தையே அவனால் காக்க முடியும். ஆனால் பாசத்தைக் காட்டி நிச்சயம் தன்னில் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இராவணன் இந்த உலகத்தையே ஆட்சி செய்ய முடியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் கடைசில என்ன பண்றது? 


அடியவர் :-  பாசம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாசத்தால ?


அடியவர் :- திசை திரும்பிட்டார் 


சுவடி ஓதும் மைந்தன் :-  திசை திரும்பிட்டாரு.


===========================

# எப்போது ஒரு இல்லம் செழிக்கும்…..????
===========================




குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இதே போலத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய அறிய பெண்கள் பின் சரியாக பின் கவனம் குறையாமல் பின் இருந்தால் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் அக்குடும்பம் செழிக்கும் என்பேன் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப பெண்கள் கூட, சரியான வந்து, கவனக் குறையாமல், கரெக்டா இருந்தாருன்னா, அந்த குடும்பம் என்ன ஆகும் ? செழிப்பா இருக்கும் என்றார் வந்து…


குருநாதர் :-  எது என்று மீண்டும் எது என்று அறிய ஆனாலும் அனுமானே எது என்று புரிய.  இதனால் எவ்வாறு என்றெல்லாம் அலைந்து. எது என்று புரிய நிச்சயம் பின் எவை என்று அறிய அதாவது பின் மீண்டும் எவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் யோசிக்க எவை என்று அனுமானம் கூட. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஓரிடத்தில் தனியா என்ன பண்ணாரு அனுமான்? எவ்வாறு சீதையை திருப்பி எடுத்துட்டு போலாம் ராமன் கிட்டன்னு சொல்லிட்டு அனுமான் வந்து யோசித்து நின்றாரு. ஓகேங்களா. 


குருநாதர் :-  கண்களாலே எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் இராவணன் 


சுவடி ஓதும் மைந்தன் :-  கண்களாலே  என்ன பண்ண முடியும் கண்களாலே வந்து பார்க்க முடியும் இராவணனுக்கு அந்த சக்தி இருக்குது.


குருநாதர் :-  ஆனாலும் அனுமானும் பின் இராவணனுக்கு அனைத்து சக்திகளும் நிச்சயம் இருக்கின்றது. அதாவது அனைத்து சக்திகளும் கூட நிச்சயம் தன்னில் கூட ஈசன் கொடுத்தான் அல்லவா? 



சுவடி ஓதும் மைந்தன் :-  இராவணனுக்கு எல்லா சக்திகளும் யார் கொடுத்தது? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் கொடுத்தது. 



சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அனுமான் என்ன யோசிக்கிறாரு? இராவணேஸ்வரர்  அவரை  வெல்ல முடியுமா என்ற ஒரு கேள்வி வந்துருச்சு…. ஈசனுக்கே வந்து என்ன பண்றது வந்து 


அடியவர் :-  டவுட் வந்துருச்சு…. 


சுவடி ஓதும் மைந்தன் :- டவுட் வந்து இவனை வெல்ல முடியுமா?  இவனை இது பண்ண முடியுமான்னு சொல்லிட்டு என்ன ஆச்சு? ஈசனுக்கே?


அடியவர் :- சந்தேகம் வந்துருச்சு… 


சுவடி ஓதும் மைந்தன் :- சந்தேகம் வந்துருச்சு 


குருநாதர் :-  மீண்டும் எதை என்று அறிய, பின் அதாவது ராமனிடம் சென்றான் எதை என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் என்ன பண்ணாரு? 


அடியவர் :-  ட்ரை பண்றாரு 


சுவடி ஓதும் மைந்தன் :- ட்ரை பண்றாரு. எப்படி பண்றது எது பண்றதுன்னு சொல்லிட்டு வந்து… ட்ரை பண்றாரு வந்து 


குருநாதர் :-  இப்படியே நிச்சயம் தன்னில் கூட, இதனால் எவை என்று அறிய, ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, பின் ஈசன் கொடுத்த வரம் அதுபோல். இராவணன் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, பின் இராவணேஸ்வரனை  யாராலும் பின் வெல்லக்கூடாது என்பதே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் கொடுத்த வரம் என்ன தெரியுமா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  யாராலும் இராவணனுடைய வெல்ல முடியாது ஐயா. புரியுதுங்களா ஐயா? 


அடியவர் :- புரியுது புரியுது 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப யாராலும் இராவணேஸ்வரனை வெல்ல முடியாது. 




குருநாதர் :-  இக்கலியுகத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். 


குருநாதர் :- வாழ்ந்தவனைத்தான் நான் இப்பொழுது பின் பேசுகின்றேன் 


சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில் கூட  யார் வாழ்ந்திருக்கிறார்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  இராவணேசன் வாழ்ந்திருக்கிறார். அப்ப ஏன் அவரை பற்றி பேசுகின்றேன். இப்பொழுதும் வாழ்ந்து தான் கொண்டிருக்கிறார்.


குருநாதர் :-  எது என்று புரிய, வாழ்க்கை பின் கடைசியில் இராவணேஸ்வரன் எங்கு? ராமன் எங்கு? யாருக்காவது தெரியுமா பின் யாங்கள் சொல்வோம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடைசில  இராவணன் எங்க போனாரு?  


அடியவர் :-  யாருக்கும் தெரியாது 


சுவடி ஓதும் மைந்தன் :-  ராமன் எங்க போனாரு? யாருக்காவது தெரியுமா? எங்களுக்கு தெரியும் என்றார் அகத்தியர் வந்து.


===========================

# ஏன் சுந்தர காண்டம் அவசியம் அனைவரும் தினமும் ஓத வேண்டும் - அதாவது இவ் உண்மை நிலையை அறிந்து.?
===========================


குருநாதர் :- அப்பனே இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட, இவை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது லங்கையில்…. 


குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சீதா பற்றி, நிச்சயம் தன்னில் கூட 


குருநாதர் :-   அதாவது சுந்தரகாண்டம் அப்பனே பின் ஓதுகின்ற பொழுது, அப்பனே சனீஸ்வரன் கூட வந்து அப்பனே நிச்சயம் தன்னில் பிடிக்க மாட்டானப்பா. அதனால்தான் சுந்தரகாண்டத்தை ஓதுங்கள்… ஓதுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றோம். உண்மை நிலையை அறிந்து. 


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப சுந்தரகாண்டத்தில் என்ன வரும்? 


அடியவர் :- சனீஸ்வரன் கூட பிடிக்க மாட்டார் 


சுவடி ஓதும் மைந்தன் :- சனீஸ்வரன் கூட பிடிக்க மாட்டார். ஏன் பிடிக்க மாட்டாரு? இராவணேஸ்வரனை யாரும் வெல்ல முடியாது. எந்த கிரகங்களும்? 


அடியவர் :- பிடிக்க முடியாது 


சுவடி ஓதும் மைந்தன் :- பிடிக்க முடியாது, அதே மாதிரி அனுமான் யாரு?


அடியவர் :- சிவபெருமான். 


சுவடி ஓதும் மைந்தன் :- சிவபெருமான். ஐயா புரியுதுங்களா? அப்ப என்ன ஆச்சு?  யாராலும் சனி தேவன்,  பிடிச்சா வந்து கிரகங்களால் அவர்களால் பாதிக்கப்பட்டிருந்தா என்ன படிக்கணும்? 


அடியவர் :-  சுந்தரகாண்டம். 


சுவடி ஓதும் மைந்தன் :- சுந்தரகாண்டம் படிச்சோம்னா…. சனீஸ்வரன் கிரகங்களால தொந்தரவு ஏதும் வராது 


குருநாதர் :-  அறிந்தும் பல பல மந்திரங்களையும் கூட பின் எழுதி வைத்திருக்கின்றான் நிச்சயம் தன்னில் கூட பின் இராவணனனே.  அதுவும் இத்தேசத்திலே காணப்படுகின்றது 


சுவடி ஓதும் மைந்தன் :-  பல பல மந்திரங்களோடு தெரிஞ்சு வச்சிருந்தார் அது என்ன, எங்க இருக்குதாம்? இந்த தேசத்தில் தான் இருக்குது. பல மூலிகைகள் பற்றியும் தெரிந்து வைத்திருந்தார்.


குருநாதர் :-  அனைத்தும் ராவணனுடைய சொந்த பந்தங்கள் இத்தேசத்தில் தான் இருக்கின்றது எல்லாமே 


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா எங்க இருக்குது ஐயா? ஓரிடத்தில் வந்து இருக்கின்றது 


குருநாதர் :-  நிச்சயம் அவன் கால்கள் எத்தனை எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட , மைல் தொலைவு இருக்கும் தெரியுமா? 


சுவடி ஓதும் மைந்தன் :- அவருடைய காலு…. சும்மா எல்லாம் அவர் இல்ல ஐயா.  இராவணேஸ்வரன் கால் வந்து இங்கிருந்து ….நம்ம மாதிரி எல்லாம் இல்ல அவர் கால். இங்க நீட்டினார் என்றல்  ஒரு மைல்  தொல்லை இருக்குன்னு தெரியுமான்றாரு. 1 km, 2 km தான் இருக்கலாம் 


அடியவர் :-  கூட அன்னைக்கே சொல்லிட்டாரு 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா 


===========================

# அனுமான் மீது தீ வைத்த கதை…
===========================




குருநாதர் :-  இதைத்தன் அறிவித்து மீண்டும் எது என்று அறிய ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அதாவது பின் ஏன் எதற்கு இவ் அனுமான் அதாவது பின் எவை என்று கூட பின் வரவேண்டும் என்பதெல்லாம் யோசித்தான். 


குருநாதர் :-  பின்பு நிச்சயம் தன்னை கூட அதாவது அழகாக பின் எது என்று அறிய நிச்சயம் அனைவரையும் அழைத்து நிச்சயம் எது என்று அறிய பின் அதாவது நெருப்பினை அவ் அனுமான் மீது நிச்சயம் ஏவி விட்டனர். அவ் அனுமான் எது என்று புரிய அனைத்து இடத்திலும் பரவிச் சென்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது தெரியும் எல்லாருக்கும். வந்து ஏன்னா வந்து என்ன பண்ணிட்டாரு?  எல்லா சீடர்களும் ஹனுமானுக்கு நெருப்பு வைத்தார்கள்….. 


===========================

# இராவணேஸ்வரர் , ஹனுமான் மீது வைத்த தீயை அணைத்து விட்டார்.
===========================


குருநாதர் :- எது என்று புரிய மீண்டும் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, இராவணனனே,  பின் மனமுவந்து நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட நிற்கட்டும் என்று. பின் அனைத்தும் நின்றுவிட்டது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  மீண்டும் அடடா… இந்த தேசம் அழிஞ்சு போய் நிக்குது  என்று திருப்பியும் இராவணன் என்ன பண்ணாரு ஐயா? நெருப்பை என்ன பண்ணிட்டாரு?  அணைச்சிட்டார். 


===========================

# மீண்டும் ஸ்ரீ ராமரிடம் வந்த ஆஞ்சநேயர்…. 

===========================


குருநாதர் :-  இதை ஏது என்று அறிய இவ்வாறாக மீண்டும் அறிந்து கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எதை என்று புரிய அதாவது எவை என்று அறிகின்ற பொழுது கூட நிச்சயம் மீண்டும் அதாவது பின் அனுமானும், பின் ராமனுக்கு நிச்சயம் தன்னில் கூட வந்து, பின் நிச்சயம் தன்னில் கூட, இராவணனை வெல்ல முடியாது நிச்சயம் தன்னில் எது என்று புரிய. 


சுவடி ஓதும் மைந்தன் :- அனுமன் என்ன சொல்லிட்டாரு கடைசில வந்து? அவனை வெல்ல, எல்லாம் உன்னால முடியாதுப்பா. யார் அவர்? ஈசன்னா அவர் வந்து 


குருநாதர் :-  ஏது என்று புரிய மீண்டும் அதாவது பல வழியில் கூட பின் ஞானிகளையும் கூட, சித்தர்களையும் கூட பின் பின் எவை என்று கூட பின் அதாவது ராமன் பின் சென்றான். பின் அவன் அவர்களிடத்தில் எல்லாம் நிச்சயம். ஆனாலும் பின் எதை என்று கூட (ஞானியர்களுக்கும், சித்தர்களுக்கும் ) அனைவருக்கும் தெரிந்தது பின் வந்தவர் பின் அதாவது ஈசன் தான் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :-  பல இடங்கள்ல சித்தர்கள் எல்லாம் சொல்றாரு யாரு ராமர் வந்து ஒரு ஐடியா கேக்குறதுக்காக. ஆனாலும் என்ன பண்றாரு வந்து… ஐயா ..


அடியவர் :- ஈசன் தானே வந்திருக்கிறது 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் தான் வந்து வந்திருக்கிறது. யாரு ஸ்ரீராமர் இவருக்கு உதவி பண்ண வந்திருக்கிறது? ஈசனே அனுமானாக வந்திருக்கிறார். ஆனா என்ன பண்றாரு? அவங்க எல்லாம் வந்து அய்யா புரியுதுங்களா இது வந்து?  அய்யா  கொஞ்சம் சொல்லுங்க எனக்கு ஒரு… 


அடியவர் :-  ஈசன் தானே வந்திருக்காரு ராமர் கிட்ட  ஆஞ்சநேயரா. ஆனா ராமருக்கு வந்து அது தட்டி கேட்க முடியல. அவருக்கு அந்த சொல்றது 


அடியவர் 1 :- உடனே வெல்ல முடியாதுன்னு தெரிஞ்சிருச்சு. ஈசனாலே வெல்ல முடியாது 


சுவடி ஓதும் மைந்தன் :- ரைட் ரைட் எல்லாம் வந்து எல்லா சித்தர்கள் வந்து என்ன பண்றாங்க வந்து சொல்றாங்க சொல்றாங்க 


குருநாதர் :-  எதை என்று புரிய எவை என்று அறிய இன்னும் கூட பல எவை என்று கடைசியில் பின் உபதேசங்களை கூட யானும் சொல்லிக் கொடுத்தேன் நிச்சயம். 


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியரும் சொல்றாரு. நானும் உபதேசங்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தேன். யாரு கட்டுறதுக்கு? ஐயா இராவணனை வெல்லதற்கு. 


===========================

# ஈசனைப் போல் கருணை வாய்ந்தவன் இங்கு இல்லையப்பா உலகத்தில் என்பேன் அப்பனே,

===========================


குருநாதர் :-  அப்பனே இதுபோலத்தான் அப்பனே பின் ஈசனிடம் அப்பனே அன்பு காட்டினால், அப்பனே அனைத்தும் தன் சீடர்களுக்காக கொடுத்து விடுவான் வரங்களை சொல்லிவிட்டேன் அப்பனே. 


குருநாதர் :-  ஈசனைப் போல் கருணை வாய்ந்தவன் இங்கு இல்லையப்பா உலகத்தில் என்பேன் அப்பனே. அதனால்தான் ஈசனைப் பற்றி அனைத்தும் புகழ்த்தான் பாடுகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாத்தையும் வரங்களை அவர் கொடுத்துட்டாரு. ஆனா ஈசனாலே கடைசில வெல்ல முடியல அதேபோலத்தான் ஈசன் மேல கருணை நம்ம வச்சுட்டோம்னா அவர் இறங்கி வந்துருவார். அவர் இறங்கி வந்து நம்மளுக்காக என்ன வேணாலும் செய்வாரு 




குருநாதர் :-  ஆனால் ஈசனையே இல்லத்தில் வைக்கக்கூடாது என்று. அப்பா இது என்ன நியாயம்???? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஈசனை வந்து எங்க வைக்கக்கூடாதாம்? 


அடியவர் :- வீட்ல வைக்கக்கூடாது


சுவடி ஓதும் மைந்தன் :- வீட்ல வைக்கக்கூடாதாம் இது என்ன நியாயம்பா? 


குருநாதர் :-  இராவணன் எதை என்று அறிய, பின் அப்பொழுது ஈசன் யார் இங்கு?  


சுவடி ஓதும் மைந்தன் :-  இராவணன்  அப்படி சொல்றாங்க இல்ல. அப்ப ஈசனை வந்து வீட்ல வைக்கக்கூடாது. அப்ப ஈசன் யார்? ஏன் வைக்கக்கூடாது? 


===========================

# ஆதி ஈசனை இல்லத்தில் வைத்தால், தினமும் அன்புடன் வழிபட்டால்  அனைத்தும் கிடைக்கும். 

===========================


குருநாதர் :-   ஏனென்றால் அப்பனே பின் நிச்சயம் தன்னில் காப்பவனப்பா ஈசன் அப்பனே ஆனாலும் எதையும் மறைத்து பின் ஈசன் இல்லத்திற்கு வந்துவிட்டால் அனைத்தும் கொடுத்து கொடுத்து விடுவான் என்று நிச்சயம் அனைத்தும் மாற்றி எழுதிவிட்டார்கள் என்பேன் அப்பனே. 


குருநாதர் :-  அதுதான் இப்பொழுதும் அப்பனே நடந்து கொண்டே இருக்கின்றது உண்மையை அப்பனே பொய்யாக்கி பொய்யை உண்மையாக்கி விட்டார் இவ்வுலகத்தில், கலியுகத்தில்.


அடியவர் :- ஈசனை இல்லத்தில் வழிபட்டால், எல்லாம் கிடைத்துவிடும். இதனால் அப்படி யாருக்கும் எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக….. நீங்கள்  சிவனை வீட்ல வச்சு கூப்பிடாதன்னு சொல்லிட்டாங்க…. 


குருநாதர் :- அப்பனே இன்னும் அப்பனே உபதேசங்களை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே. இப்பொழுது அனைவரும் நன்றாக இருக்க, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே மனமகிழ்ந்து அப்பனே சிவபுராணத்தை ஓதுங்கள்…. 



சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் நல்லா இருக்கணும் ஐயா. எல்லாரும், ஒவ்வொருத்தரும் நல்லா இருக்கணும்னு நினைத்து, சிவபுராணம் பாடுங்கள் அய்யா…..


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  25.03.2026 அன்று  நடைபெற்ற இலங்கை கூட்டுப்பிரார்த்தனை, ஆதி கோணேஸ்வரதில் உரைத்த  ஆதி இராமாயண காவிய வாக்குகள் தொடரும் …..) 



ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.