அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 6
நாள் : 04/2/2026 (புதன்கிழமை )
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.
இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.
சித்தர்கள் ஆட்சி - 560 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 1 https://siththarkalatchi.blogspot.com/2026/02/560.html சித்தர்கள் ஆட்சி - 561 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 2 https://siththarkalatchi.blogspot.com/2026/02/561.html சித்தர்கள் ஆட்சி - 562 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 3 https://siththarkalatchi.blogspot.com/2026/02/562.html சித்தர்கள் ஆட்சி - 563 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 4 https://siththarkalatchi.blogspot.com/2026/02/563.html சித்தர்கள் ஆட்சி - 564 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 5 https://siththarkalatchi.blogspot.com/2026/02/564.html சித்தர்கள் ஆட்சி - 565 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 6 https://siththarkalatchi.blogspot.com/2026/02/565.html சித்தர்கள் ஆட்சி - 566 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 7 https://siththarkalatchi.blogspot.com/2026/02/566.html சித்தர்கள் ஆட்சி - 567 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 8 https://siththarkalatchi.blogspot.com/2026/02/567.html சித்தர்கள் ஆட்சி - 568 :-இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 9 https://siththarkalatchi.blogspot.com/2026/02/568.html
====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
====================================
ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 6)
===================================================
# குழந்தை முருகனாக வந்த ஈசன் நினைத்தார் - இவ்வளவு பாசம் வைத்திருக்கின்றான் இராவணன் அவன் தாய் மீது
===================================================
குருநாதர் :- அறிந்தும் எதை என்று கூட இதனால் பின் இவ்வளவு பாசம் நிச்சயம் தன்னில் கூட தாய் வைத்திருக்கின்றானே. அதனால் இவன் என்னை சுமந்து குழந்தை போல் வந்ததை நிச்சயம் தன்னில் கூட, பின் ஆனந்தமே என்று பின் அதாவது ஈசன் நினைத்தான். பின் (அகத்தியன்) எனக்கு கேட்டது.
அடியவர் :- ( ஆச்சரியத்தில் ) ஓ !!!!
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்கள் :- ("தன் தாயின் மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கவனா இவன்!" அப்படின்னு சொல்லி, இராவணன் தன்னைச் சுமந்து வந்ததை நினைச்சு ஈசன் ரொம்ப ஆனந்தப்படுறாரு. அங்க ஒரு ரகசியம் இருக்கு, அதாவது இராவணன் தான் முருகப்பெருமானை அப்படிக் கடத்திட்டு வந்து அங்க வச்சாருன்னு ஒரு பேச்சு இருக்கு. ஆனா, இராவணன் தூக்கிட்டு வந்தது ஈசனைத்தான்! இது அகத்தியருக்கு தெரிஞ்சு போச்சு. உடனே ஈசன் அகத்தியர்கிட்ட, "எப்பா, இதைக் காட்டிக் கொடுத்துடாத! தாய் மீது இவ்வளவு பற்று கொண்ட ஒருத்தன் என்னைத் தூக்கிட்டு வந்திருக்கானே, இதை நீ ஈசன்கிட்டயே (தன்னைப் பற்றியே) சொல்லிடாத, நான் இதை ஒரு திருவிளையாடலா எடுத்துக்கிறேன்" அப்படின்னு சொல்றாரு. )
===============================================
# ஈசனே அனைத்தும். இந்த கதிர்காமத்தில் இருப்பது ஈசனா? அல்லது முருகனா? என்று சந்தேகமே எப்பொழுதும்.
===============================================
குருநாதர் :- எதை என்று அறிய அனைத்தும் யானே என்று. இன்னும் கூட இந்த கதிர்காமத்தில் பின் ஈசனா பின் முருகனா என்று சந்தேகமே எப்பொழுதும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் கூட கதிர்காமத்துல முருகன் இருக்கிறாரா? ஈசன் இருக்கிறாரா ?இன்னும் சந்தேகம்தான்.
=====================================
# கதிர்காமம் - முருகன் மற்றும் ஈசன் ஆலயம்.
# முருகனா வழிபட்டாலும் ஈசன் தான்.
# ஈசனை வழிபட்டாலும் முருகன் தான்
=====================================
குருநாதர் :- அதனால்தான் எதை என்று கூட எதையும் புரிந்து கொள்ளாமலே நிச்சயம் தன்னில் கூட இருவரும் ஒருவரே என்று எதையாவது எண்ணிக்கொண்டு நிச்சயம் தன்னில் கூட பாடுங்கள் என்று
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முருகரா? ஈசனா? யாருன்னு தெரியல. அப்ப நீ எது வேணாலும் நினைச்சுக்கோ. அங்க முருகனா வழிபட்டாலும் ஈசன்தான். ஈசனை வழிபட்டாலும் முருகன் தான். போதும்பா
=============================================
# அன்பு குருநாதரை தவிர வேறு யாரால் இவ் ரகசியங்களை சொல்ல முடியும் ?
=============================================
குருநாதர் :- அப்பனே இவ் ரகசியங்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் யார் சொல்வது உலகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
==============================================
# முட்டாள் மனிதன் பொய்யை சொல்லி சொல்லி , மக்களை திசை திருப்பி, அவை செய், இவை செய், பரிகாரங்கள் செய் என்றெல்லாம் சொல்லி மனிதனை முட்டாளாக்கி விடுவான். இச் சோம்பேறித்தனம் தான் மனித அழிவுக்கு காரணமாக போகின்றது.
==============================================
குருநாதர் :- மூடன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, சொல்வதை சொல்லி சொல்லி மக்களை திசை திருப்பி, அப்பனே நிச்சயம் அவை செய், இவை செய், பரிகாரங்கள் செய் என்றெல்லாம் அப்பனே செப்பி செப்பி, மனிதனை முட்டாளாக்கி விடுவான் சோம்பேறி ஆக்கி விடுவான் என்பேன் அப்பனே. இதுதான் அப்பனே பயன்படுத்த போகின்றான் நிச்சயம் இச் சோம்பேறித்தனம் தான் மனித அழிவுக்கு காரணமாக போகின்றது.
சுவடி ஓதும் மைந்தன் :- (சக்தி என்ன சொல்றாங்கன்னா, மனுஷங்களுக்கு உண்மை நிலை தெரியாம, பொய்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி, "அதுக்கு இந்தப் பரிகாரம் பண்ணு, இதுக்கு அந்தப் பரிகாரம் பண்ணு"ன்னு வழிகாட்டினா, மனுஷன் நிஜமாவே சோம்பேறி ஆயிடுவான். "பரிகாரம் பண்ணிட்டா எல்லாம் சரியாயிடும்"னு அவன் நம்பும் போது தான் அழிவுகளே ஆரம்பிக்கும். அப்போ அந்த அழிவுன்னா என்ன? அந்தப் புதுமையான விஷயங்களை இந்த உலகத்துல யார் சொல்லுவா அப்படின்னு கேட்கும்போது, "நாங்கதான் அந்தப் புதுமையான உண்மைகளைச் சொல்லுவோம்" என்று சொல்றார்.)
===============================================
# நீங்கள் இவ் உண்மைகளை தெரிந்து கொண்டாலே , உங்களுக்கு சக்திகள் உண்டாகும்.
===============================================
குருநாதர் :- அப்பனே இவையெல்லாம் அப்பனே தெரிந்து கொண்டாலும் அப்பனே. நிச்சயம் சக்திகள் பின் மனிதர்களுத்தானப்பா.
===============================================
# இராவணேஸ்வரர் தான் தாயின் அருளாலே , ஈசனையும் அவரின் அருளையும் பெற்றார்.
===============================================
குருநாதர் :- அதனால்தான் அப்பனே நிச்சயம் இராவணனுடைய நிச்சயம் தாய் எவ்வளவு உயர்ந்தவள் என்று. இதனால் அப்பனே இராவணனுக்கும் பின் அவள் தாயாலே, நிச்சயம் ஈசனையும் தெளிந்தான்.
குருநாதர் :- அப்பா அறிந்தும் எதை என்று கூட இராவணனுடைய தாய் நிச்சயம் தன்னில் கூட அப்பனே எத்தனை குழந்தைகள்?
குருநாதர் :- அப்பப்பா அறிந்தும் எதை என்று கூட அவை பின் இளவரசி நிச்சயம் தன்னில் கூட எங்கெங்கோ பின் வாழ்ந்தவள். ஆனாலும் அப்பனே நிச்சயம் இப்படியும் கூட அப்பனை எடுத்துக்கொள்ளலாம் நிச்சயம் தன்னில் கூட.
================================================
# உலகின் பல ஞானிகளின் தாய் - ஆச்சரியமூட்டும் உண்மை
================================================
குருநாதர் :- அத் தாய், நிச்சயம் புத்னுடைய நிச்சயம் தன்னில் கூட, பின் இயேசுவுடைய, நபிகள் நாயகம் உடைய நிச்சயம் தன்னில் கூட.
அடியவர் :- (ஆச்சரியத்தில்) ஓ….. எல்லாருக்கும் தாயா இருந்திருக்காங்க.இராவணன் மட்டும் அவங்க தாய் இல்ல. புத்தருக்கும் தாயா இருந்திருக்காங்க……
=================================================
# உலகின் ஆணி வேர் “தாய் பாசம்” - இந்த உண்மைகளை அழித்து விட்டார்கள்.
=================================================
குருநாதர் :- ஆனாலும் இவர்கள் எல்லாம் பின் வளர்த்தார் எதை என்று கூறிய நிச்சயம் பின் ஒரு தாய் நிச்சயம் உண்மை உள்ளவளாக, உயர்ந்தவளகத்தானே இருப்பாளே. ஆனாலும் யாரும் சிந்திக்கவே இல்லை. எழுதி வைத்தோம். ஆனாலும் அழித்து விட்டார்கள்.
==================================================
# “தாய் பாசம்” - இந்த உண்மைகளை தெரிந்து கொண்டால் மனிதனுக்கு சக்திகள் பலங்கள் ஏற்படும். நற்பண்புகள் அதிகமாகும். தாய் தந்தையர் மதித்தால் நிச்சயம் வளர்ந்து விடுவான் மனிதன் என்று நிச்சயம் அழித்து விட்டார்கள்.
==================================================
குருநாதர் :- அவையெல்லாம் தெரிந்து கொண்டால் மனிதனுக்கு சக்திகள் பலங்கள், அழிவு மாறிட்டு, நற்பண்புகள் நிச்சயம் அதிகமாயிற்று, நிச்சயம் தாய் தந்தையர் மதித்தால் நிச்சயம் தன்னில் கூட பின் வளர்ந்து விடுவான் என்று நிச்சயம் அழித்து விட்டார்கள்.
அடியவர் :- ஓ அச்சா.. அச்சா.. அச்சா..
சுவடி ஓதும் மைந்தன் :- ( ஒருத்தன் தன் தாயோட பாசத்தைப் புரிஞ்சுகிட்டு, அன்னையை மதிக்க ஆரம்பிச்சுட்டான்னா, அவன் நிச்சயமா நல்லவனாகிப் பெரிய ஆளா முளைச்சு வந்துடுவான். ஆனா, இந்த விஷயம் மட்டும் மனுஷனுக்குத் தெரிஞ்சுட்டா அவன் ரொம்பப் பலசாலி ஆயிடுவான்னு பயந்து, அந்த ரகசியமான சக்திகள் எல்லாத்தையும் வேணும்னே அழிச்சுட்டாங்க. அந்த உண்மைகள் வெளிய வராம இருக்கணும்னு எல்லாத்தையும் மொத்தமா அழிச்சு முடிச்சுட்டாங்க. )
அடியவர் :- இராவணனோட தாய் பற்றிய ரகசியங்கள் அழிச்சிட்டாங்க…
=================================================
# ரகசியங்கள் :- “முன்னோர்கள் வழிபாடு அவசியம் செய்யுங்கள்”
=================================================
குருநாதர் :- நிச்சயம் அதனால்தான் நிச்சயம் தாயும் தந்தையும், பின் இறந்து விட்டாலும், அவர்கள் நினைப்பதற்காக, நிச்சயம் தன்னில் கூட, முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள் செய்யுங்கள் என்று.
அடியவர் :- ஓ…. அப்ப…. இதுக்கு தான் முன்னோர்கள்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப முன்னோர்கள் வழிபாடு எதுக்கு ஐயா? இந்த மாதிரி நினைக்க, அவங்களை நினைக்க, இது மாதிரி வந்து அவங்க இறந்துவிட்டா கூட
==========================================================
# முன்னோர்கள் வழிபாடு கொண்டு வந்தவனே இராவணன் தான் அப்பா
==========================================================
குருநாதர் :- அப்பனே முன்னோர்கள் வழிபாடு கொண்டு வந்தவனே இராவணன் தான் அப்பா
சுவடி ஓதும் மைந்தன் :- (முன்னோர்கள் வழிபாட்டை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தது யாருன்னா, அது இராவணன் தான்! "அம்மா இறந்து போயிட்டா கூட, அவங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செஞ்சுட்டே இருக்கணும், அவங்களை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருக்கணும்" அப்படின்னு அந்தச் சேவையை ஒரு வழிபாடாகவே மாத்துனாரு. அதனாலதான் சொல்றோம், இந்த முன்னோர்கள் வழிபாட்டு முறையை முதன்முதல்ல கொண்டு வந்ததே இராவணன் தான், இராவணன் தான்! )
==================================================
# இராவணேஸ்வரர் எங்கெங்கு சென்றாரோ , அங்கெல்லாம் முன்னோர்கள் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. - ராமேஸ்வரம் , காசி, இன்னும் பல இடங்களில்
=================================================
குருநாதர் :- அப்பனே இப்பொழுது இதையும் இப்பொழுது தெரிவிப்பேன். இராவணன் பின் எங்கெங்கு சென்றாரோ அங்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட முன்னோர்கள் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
அடியவர் :- அதான் ராமேஸ்வரம் நம்ம அங்க போய் பண்றோம்
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இராவணன் எங்கெங்கு சென்றாரோ, அங்க முன்னோர்கள் வழிபாடு.
அடியவர் :- (ஓ, அதுதான் மெயினான விஷயமா? இராவணன் காசி உட்பட எல்லா இடத்துக்கும் போயிருக்காரு. ராமேஸ்வரத்துல நம்ம முன்னோர்கள் வழிபாடு பண்றோமே, அதுக்கு வழியை உண்டாக்குனதே இவர்தான்! "எல்லாரும் ராமேஸ்வரம் போங்க, அங்க போய் திதி கொடுங்க"ன்னு இன்னைக்கு வரைக்கும் சொல்றாங்க, ஆனா அதுக்கு உண்மையான காரணம் யாருக்கும் தெரியல. இப்பதான் புரியுது பாருங்க, முன்னோர்கள் வழிபாட்டு முறையை ராமேஸ்வரத்துல நிலைநாட்டி வச்சதே இராவணன் தான்னு!)
================================================
# அதி ரகசியம் - “உங்கள் தாய் தந்தையர் இறந்து போயிட்டா கூட, நீ அவங்களை மறக்கவே கூடாது; அவங்களை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருக்கணும்”
================================================
அடியவர் :- ( அப்ப ஏன் முன்னோர்கள் வழிபாடுன்னு ஐயா கேக்குறாரு. அதுக்கும் அவரே பதில் சொல்றாரு... முன்னோர்கள் வழிபாடுன்னா என்னன்னா, உன் தாய் தந்தையர் இறந்து போயிட்டா கூட, நீ அவங்களை மறக்கவே கூடாது; அவங்களை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருக்கணும்" அப்படின்னு அந்த ரகசியத்தைச் சொல்றாரு. அவங்க போனதுக்கு அப்புறமும் அவங்களை மதிக்கணும்ங்கிறதுக்காகத்தான் இந்த வழிபாட்டை இராவணன் கொண்டு வந்திருக்காரு.)
====================================================
# எப்பொழுதும் உங்கள் தாய் தந்தையை நினைத்து கொண்டே இருந்தாலே , நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று இருந்தே அப்படி நினைக்க ஆரம்பியுங்கள். நல்லதே நாடாகும்.
====================================================
குருநாதர் :- இவ்வாறு நிச்சயம் நினைத்துக் கொண்டே இருந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறுமடா முட்டாள் மனிதனே.
சுவடி ஓதும் மைந்தன் :- (அகத்தியர் என்ன சொல்றாருன்னா, "மனுஷன் ஒரு முட்டாள், முட்டாள்" அப்படின்னு திட்டுறாரு. ஏன்னா, மனுஷனுக்கு அந்த ரகசியம் புரிய மாட்டேங்குது. "தாய் தந்தை இறந்து போயிட்டா கூட, அவங்களை மறக்காம மனசுல நினைச்சுக்கிட்டே இருந்தோம்னா, நாம என்ன நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும், நினைச்சது கண்டிப்பா கிடைக்கும்" அப்படின்னு அகத்தியர் அந்த உண்மையைச் சொல்றாரு. அவங்களை வழிபட வழிபட, நாம கேட்குறது எல்லாம் நமக்கு வந்து சேரும்னு அவர் விளக்குறாரு.)
=======================================
# நினைப்பது பின் கிடைக்கவில்லை என்றால் முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள்
=======================================
குருநாதர் :- இதனால்தான் நிச்சயம் பின் நினைப்பது பின் கிடைக்கவில்லை என்றால், முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள் என்றே வந்தது.
சுவடி ஓதும் மைந்தன் :- ( "அப்ப நான் நினைச்சது ஒண்ணுமே நடக்கலையே, அதுக்கு என்ன பண்ணனும்?" அப்படின்னு கேக்குறப்போ, அதுக்கு பதிலா, "முதல்ல உன் அம்மா அப்பாவை நினைடா!" அப்படின்னு சொல்றாங்க. ஏன்னா, நம்ம பெத்த அம்மா அப்பாவை மனசார நினைச்சாலே போதும், நாம என்ன நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும், நினைச்சது கண்டிப்பா கைக்கூடும். இதனாலதான் "முன்னோர்கள் வழிபாடு" அப்படிங்கிற ஒரு முக்கியமான விஷயமே உருவாச்சு. அந்தப் பழைய நினைப்பும் நன்றியும்தான் நாம நினைக்கிற காரியத்தை நடத்திக் கொடுக்கும். )
===========================================
# இராவணேஸ்வரன் அன்னை , ஈசனை தன் குல தெய்வமாக நினைத்து வாழ்ந்து வந்தார்கள்.
===========================================
குருநாதர் :- இதை தன் நிச்சயம் தன்னில் கூட, அதாவது குலதெய்வமாக நிச்சயம் தன்னில் கூட, பின் ஈசனே நினைத்திருந்தாள், அவன் (இராவணன்) அன்னை.
===========================================
# முன்னோர்களை நினைத்தால் , குலதெய்வமே உதவி செய்யும்
===========================================
குருநாதர் :- அதனால் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் தாய் தந்தையரின் நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட எவை என்று புரிய நிச்சயம் வணங்குவதற்கு, குலதெய்வம் கூட உதவிகள் செய்யும்.
அடியவர் :- ஓ ஏன் புரியுதுங்களா? இது முன்னோர்களை நோக்கி கரெக்டா நீங்க உங்களோட வழிபாடுகள் எல்லாம் செஞ்சீங்கன்னா, குலதெய்வம் உதவி செய்யும்.
சுவடி ஓதும் மைந்தன் :- ( யாரு தன் அம்மாவையும் அப்பாவையும் மனசார வணங்குறாங்களோ, அவங்களுக்கு அந்தப் பெரியவங்களோட ஆசிர்வாதம் நிறைய கிடைக்கும், நிறைய கிடைக்கும்! இப்ப ராவணனோட அம்மா யாரு? அவங்க ஒரு பெரிய சிவபக்தை. அப்போ ராவணன் தன் அம்மாவை வணங்குனா அவருக்கு என்ன கிடைக்கும்? சிவபெருமானோட அருளே நேரடியா கிடைக்கும்! அதனாலதான் சொல்றோம், அம்மா இறந்து போயிட்டா கூட அவங்களை வணங்குனா என்ன ஆகும்னா, அந்த அம்மா எந்தத் தெய்வத்தை வணங்குனாங்களோ, அந்தத் தெய்வத்தோட ஆற்றலே நமக்கு வந்து சேரும். அந்தத் தெய்வ ஆற்றல் நமக்குக் கிடைக்கும் பாருங்க, அதுதான் குலதெய்வத்தோட அருள்! புரியுதுங்களா? )
================================================
# முன்னோர்கள் வழிபாடு என்பது - “தாய் தந்தையர் உன் பாசம் செலுத்திக் கொண்டே இரு என்று உடம்பில் இருக்கும் வரை.”
================================================
குருநாதர் :- இதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய முன்னோர்கள் வழிபாடு முன்னோர்கள் வழிபாடு. இப்பொழுது புரிகின்றதா? அது முன்னோர்கள் வழிபாடு இப்படியும் சொல்லலாம். பின் தாய் தந்தையர் உன் பாசம் செலுத்திக் கொண்டே இரு என்று உடம்பில் இருக்கும் வரை.
சுவடி ஓதும் மைந்தன் :- ( உயிர் இந்த உடம்புல இருக்குற வரைக்கும், அதாவது நம்ம உடம்புல உயிர் இருக்குற வரைக்கும் அந்தத் தாய் தந்தையர் பாசம் நமக்குள்ள இருக்கணும். அவங்க உயிரோட இருந்தாலும் சரி, இல்ல அவங்க இறந்து போயிட்டா கூட சரி, அவங்களை நம்ம எப்பவும் விடாம நினைச்சுக்கிட்டே இருக்கணும். அப்படி நினைச்சுக்கிட்டே இருந்தாதான் அந்தப் பாசமும் சக்தியும் நம்மைக் காக்கும்னு ராவணன் அந்த உண்மையைச் சொல்றாரு. )
===============================================
# உங்களையே நீங்கள் வெல்லுங்கள் முதலில்.
# பின்புதான் அனைத்தும் வெல்ல முடியும்.
===============================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் எதை என்று கூட பின் பாசத்தோடு நிச்சயம் எவ்வாறு எவ்வாறு படைத்தாயோ, இன்னும் இன்னும் பின் எவை என்று ஒரு ரகசியங்கள் சொல்கின்றேன். அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் உங்களையே நீங்கள் வெல்லுங்கள் முதலில். பின்புதான் அனைத்தும் வெல்ல முடியும்.
===============================================
# உங்களையே நீங்கள் வெல்ல முடியவில்லை என்றால், எப்படி அனைத்தும் எவ்வாறு நீங்கள் வெல்ல முடியும்?
===============================================
குருநாதர் :- பின் உங்களையே நீங்கள் வெல்ல முடியவில்லை என்றால் பின் அனைத்தும் எவ்வாறு அப்பா வெல்ல முடியும்?
சுவடி ஓதும் மைந்தன் :- ( முதல்ல இந்த உண்மைகளை எல்லாம் நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா, நம்மளையே நாம வென்றிடலாம். அப்படி நம்மள நாம வென்றிட்டா, அடுத்து எதை வேணும்னாலும் நீங்க வெல்லலாம்! ஆனா, உங்களையே உங்களால வெல்ல முடியலன்னா, இந்த உலகத்துல எதையுமே வெல்ல முடியாது. "அடுத்து அது எப்படிப்பா வெல்ல முடியும்?" அப்படின்னு ஒரு கேள்வி வருது பாருங்க, அதுதான் இங்க இருக்குற பெரிய சூட்சுமமே! )
குருநாதர் :- அப்படி வென்றிட்டாலும் அவை தன் பக்குவங்கள் நிச்சயம் பின் உங்களுக்கு எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- ( உங்களை நீங்களே வென்றிட்டீங்கன்னா, எதையும் கொடுத்தாலும் , உங்களால அதைத் தக்க வச்சுக்க முடியும்" அப்படின்னு சொல்றாரு. உங்களை நீங்க வெல்லாம, கடவுளே வந்து உங்களுக்கு ஒரு தொழிலோ இல்ல வேற எதையோ கொடுத்தாலும், உங்களால அதை நிலைநிறுத்திக்க முடியாது; அது கைநழுவிப் போயிடும், போயிடும்ங்கிறாரு. அப்போ எதையும் தக்க வச்சுக்கணும்னா, முதல்ல தன்னைத்தானே வெல்லணும். "நாம யாரு, ஏது?" அப்படின்னு நம்மள நாம புரிஞ்சுக்கிட்டு வெல்லணும்ங்கிறதுதான் இங்க இருக்குற பெரிய விஷயம்! )
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் முதலில் இராவணன் தன்னைத்தான் வென்றான் அப்பனே. பக்திக்குள் புகுந்து எதை என்று கூட தவங்கள் செய்து தியானங்கள் செய்து அப்பனே.
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல இராவணன் தன்னைத்தானே வென்று, எல்லாமே செய்தார்…
=======================================
# இன்னும் ரகசியங்கள் செப்புகின்றேன்.
=======================================
குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இன்னும் ரகசியங்கள் செப்புகின்றேன். பின் மந்திரங்கள் செப்புவேன் அனைத்தும் சொல்லித் தருகின்றேன். ஆனாலும் எதை என்று கூறிய பின் அதற்காகவாவது, நிச்சயம் நீங்கள் எவை என்று கூறப்பின் பின் காத்திருக்கவேண்டும். மாதங்கள் ஆகவே.
சுவடி ஓதும் மைந்தன் :- ("எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன், உண்மையிலேயே எல்லா ரகசியத்தையும் சொல்லிக் கொடுக்கிறேன், இன்னும் நிறைய மந்திரங்களையும் சொல்லிக் கொடுக்கிறேன். ஆனா, இதையெல்லாம் கத்துக்கணும்னா நீங்க மாதக்கணக்குல காத்துட்டு இருக்கணும். முதல்ல நான் எதைச் சொல்றேனோ, அதைச் சரியாத் தெரிஞ்சுக்கணும்; அதுதான் முக்கியம்!" அப்படின்னு ஒரு பெரிய பொறுமையையும் தேடலையும் பத்தி இங்கே தெளிவாச் சொல்றாங்க. அந்த மந்திரங்களும் உண்மைகளும் கைவரனும்னா, முதல்ல நாம எதை நோக்கிப் போறோம்ன்ற அந்த ஆரம்பப் பாடத்தைத் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டு நிதானமா இருக்கணும்னு ராவணனோட அந்த வழிமுறை சொல்லுது. )
குருநாதர் :- அப்பனே இன்னும் ரகசியங்கள் அப்பனே பின் சிவபுராணத்தை பற்றி பாடு அப்பனே. பின்பு எடுத்துரைப்பேன்.
அடியவர் :- இராவணன் அம்மாவோட பேர் என்ன? “கைகேசி” யா ?
குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட வைத்துக்கொள்ளுங்கள். அப்பனே வெவ்வேறு நாமம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. வெவ்வேறு சமயத்தில் என்ன செய்வாய் ?
சுவடி ஓதும் மைந்தன் :- ("நீ வேணும்னா அந்த ரகசியத்தை வச்சுக்கோ, இல்லாமலும் போ... ஆனா ஒண்ணு, வெவ்வேறு சமயத்துல, வெவ்வேறு மரபுகள்ல அந்த 'அம்மா' பத்தி வேற வேற பேர்லதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க")
குருநாதர் :- அப்பனே இதை நீ பின் பிரித்து பொருள் தருவாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- ("இதை வந்து நீ தனியாப் பிரிக்கணும்" அப்படின்னு ராவணன் சொல்றாரு. ஏன்னா, இப்ப அந்தப் பேர்கள் எல்லாம் சொன்னோம்ல, அந்த ஒவ்வொரு பேரையும் தனித்தனியாப் பிரிச்சுப் பார்த்து, அதுக்குள்ள இருக்கிற பொருளை ஆழமாப் புரிஞ்சுக்கிட்டாத்தான் உனக்கு உண்மையான ரகசியம் புரியும்னு விளக்குறாரு. )
குருநாதர் :- அப்பனே இன்னும் ஒரு ரகசியம் இதைப்பற்றி தெளிவு படுத்துகின்றேன். பின் மூளையை குழப்பு நீ.
சுவடி ஓதும் மைந்தன் :- ("அப்ப இதெல்லாம் எப்படி இருக்குதுன்னா, எந்தெந்த மதத்துல பார்த்தாலும் அந்தப் பேர்லயே எல்லாம் வந்துடுமாம்! எல்லா சமயத்துலயும் அந்தப் பேரு மட்டும் வேற வேற மாதிரி மாறி மாறி வரும். அதனால நீயே குழப்பிக்கோ, ஆனா அடுத்து நான் இன்னும் ஒரு பெரிய விஷயம் சொல்றேன்பா" அப்படின்னு சொல்றாரு. எல்லா மதத்துலயும் அந்த பெயர்தான் வேற வேற பேர்ல சுத்திச் சுத்திச் வருது என்று சொல்றாங்க)
குருநாதர் :- அப்பனே பின் சிவபுராணத்தை பாடுங்கள் பின்பு நிச்சயம் உரைக்கின்றேன்
( அடியவர்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்தனர்….. )
(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் தொடரும்……)
ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.